• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕17

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
49
87
18
Madurai
நாட்கள் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஒடியதில் அஞ்சலி இங்கே அழைத்து வரப்பட்டு இல்லை இல்லை கடத்தி வரப்பட்டு ஒரு மாதம் கழிந்து இருந்தது...

கோழியை அமுக்கி தூக்கி செல்வது போல் ஏன் இரவோடு இரவாக தான் கடத்தப்பட்டோம் என்ற சாரம்சத்தின் விடையேல்லாம் தெரிந்து இருக்கவில்லை அவளுக்கு..குறைந்தபட்சம் அதன் சாயலை நெருங்கம் பேச்சு வந்தால் தானே சாராம்சத்தில் பதிலை பெறமுடியும் இங்கே யாவரும் அந்த நிகழ்வை மறந்தவர்கள் போல் வாயை திறக்கவில்லையே..ஏதோ அழுத்தமான காரணம் பொதிந்து இருக்கும் என்று சாட்சி இன்றி நம்பியவளும் பதிலுக்கு ஆரவம் காட்டியதாக தெரியவில்ல..‌

அவளுக்குள் தோன்றிய அதர்ஷனின் எண்ணங்கள் அவளை அறியாது இருதயத்தில் சிதறி விழுந்த நேசவிதையில் நீருற்றி காதலின் அடித்தளமாக நம்பிகையை தொற்றுவித்ததோ இல்லையேல் தன்னை கடத்தியவன் என்ற அடையலாத்தில் சுருண்டு இருப்பவானாக அவளுக்கு தோற்றமளிக்கும் அவன் மேல் நம்பிக்கை துளிர்க்க வாய்ப்பு குறைவு தானே...

அவன் வாய் திறந்து சொல்லாத மறைக்கும் விடைக்கு அழுத்தமான காரணம் இருக்கும் என்ற பெண் மனம் கூறியதில் பெண் மனதில் இருந்து பிரிந்து எழுந்த பெண்ணியம் பேசும் மனம் ஓஓ காதலா என நகையாடியதில் திடுக்கிட்டவள் நம்பிக்கை மட்டும் தானே வேறு காதலின் அறிகுறிகள் ஏதுவும் ஊடுருவி சுடாது போனால் இது வெறும் ஈர்ப்பு தானே என்று ஆசுவாச வார்த்தைகளோடு தலை தட்டி அடக்கினாள் பெண்ணியம் பேசும் மனதை...

ஆனால் அடுத்து அடுத்து தனக்குள் நிகழும் மாற்றம் எல்லாம் வாரிவிடும் தன் பெண்ணியம் மனதிற்கு தோதாக போனது...

திடிரென அயல் நாட்டு பூமி மண் அவனை அலுவல் காரணத்தால் கால் பதிக்க வற்புறுத்தியதில் அயல் நாடு மறந்து இருந்தான் அதர்ஷன் வர்மா...

இத்தனை நாள் அவனின் கண் பார்வையில் விலகி இருந்த மனம் அவன் கண் பார்வை விலகியதில் மனம் நெருங்கி அவன் கடையோர விழிப்பார்வையாவது வேண்டும் என்று சண்டி தனம் செய்தது பெண் மனது..அன்று வலுக்கட்டாயமாக தன்னை அனைத்த கரங்களை தயவுதாட்சன்யம் இன்று விலக்கி ஒடியதற்கு இப்போது கவலை கொண்டு அன்று தன்னை இறுக்கிய கரங்களை
இன்று பசை போட்டு ஒட்டி கொள்ளும் உத்தேசம் தான் காதலின் அரிச்சுவடோ அல்லது ஏற்கனவே இனகம் கொண்டு விட்டது என்ற அறிகுறியோ...

தன்னையறியாது பொறுக்கி ரொம்ப பண்ணுறான் என தனக்குள் முனுமுனுத்து கொண்டவள் காதல் மயக்கத்தில் இருந்து களைந்தாள் இல்லை...

ஏதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி கண்களால் பயமுறுத்தும் ஆளுமை மிக்க கம்பீர தொழில் அதிபனுக்கு அவள் இட்ட செல்ல பெயர் பொறுக்கி...

பால்கனி உட்புறம் தொங்கி கொண்டு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கண்களை நேராக அங்கிருந்து பார்த்தாள் தெரியும் மெயின் கேட் பக்கம் வாடகை விட்டவளாக வெறித்து கொண்டு இருந்தவளின் டாப்பை சிறு கைகள் இழுத்ததில் சற்று சுயம் உணர்ந்து ஒர் இரு கனங்கள் பார்வை அங்கிருந்து திருப்பி பிள்ளை மீது பதித்தி இதழ் விரிய சிரித்து சஞ்சு குட்டி இங்க என்ன பண்ணுது என கேட்டு மடியில் தூக்கி வைத்து சேர்ந்தார் போல் பத்து வினாடிகள் பார்க்க தவறிய இடத்தில் பார்க்க தவறிய நேரத்தில் வந்திருப்பானோ என தேடி இல்லை என்ற ஏமாற்றத்தில் முகம் சுருக்கி பிள்ளையை துணை சேர்தது மீண்டும் அதே வேலையை தொடர்ந்தாள்...

பிள்ளையும் அவள் மார்பில் அழகாக சாய்ந்து அவளுக்கு ஏய்துவாக வெளி புறத்தை பார்த்தவாறு அமர்ந்து இருந்தது..

இவ்வாறே அன்றைய நாள் சுகமான ஏக்கத்தோடு கழிந்திருந்தது அஞ்சலிக்கு...

நேற்று அடித்த போதை உச்சியில் நிலைக்கொண்டு இருக்க கண்ணை முழுதாக பிரிக்காமல் விழித்தெழுந்து கட்டிலில் சாய்ந்து தலை முடியை கைகளால் இழுத்து பிடித்து அமர்ந்து இருந்தவனின் போதை மொத்ததையும் வடிய வைக்கவே வந்தது அந்த போன் கால்...

அழைப்பை ஏற்று காதில் வைத்ததை தொடர்ந்து போதை இறங்கிறுச்சா துரைக்கு என கேட்ட தாஸ் தன் பற்களை கடித்து சீக்கிரம் நம்ம ஹோட்டலுக்கு வா என கடுகடுத்து அவனை பேச அனுமதிக்காது பொறிந்தவர் அழைப்பை துண்டித்து இருந்தார்...

அவனின் கடுகடு வார்த்தையிலேயே ஏதோ சரி இல்லை என உணர்ந்தவன் போதை மொத்தமும் தெளிய அப்படியே எழுந்து திடுதிடுவேன படியில் இருந்து இறங்கி வந்தவன் ஏதிரில் நின்ற தன் அடியாளை பார்த்து வண்டிய எடு சீக்கிரம் என கத்திவிட்டு அவசர அவசரமாக அவன் மாமன் அழைத்த இடத்திற்கு வந்து சேர்ந்து இருந்தான்...

விஸ்தாஷி என்ற பெரிய தங்க நிற எழுத்துக்கள் ஒளிர்ந்த பலகை தாங்கிய ஹோட்டலினுள் செல்ல போனவன் தடுத்து நிறுத்தப்பட்டான் டிரக் டிடெக்டிவ் ஆபிசர்ஸால்...

சார் இது என்னோட ஹோட்டல் தான் என தன் லைஸ்ஸனஸை எடுத்து காட்டியதை தொடர்ந்து சேக் செய்து உள் அனுப்பட்டான் செல்வராகவ்...

அறை மணி நேரம் தொடர்ந்த ஆராய்ச்சியில் பென்ட்ரி ரூமில் இருந்து கொத்து கொத்தாக குக்கேனை கண்டெடுத்தவர்கள் எந்த வித கேள்விகளும் இன்றி எழுதி வாங்கி தாஸ் மற்றும் செல்வா எவ்வளவு கூறியும் காதில் வாங்காது சீல் வைத்து சென்று இருந்தனர் அது மேலும் பெரும் சரவாக செல்வாவுக்கு அமைந்ததில் இன்னும் இன்னும் அதர்ஷன் மேல் வன்மத்தில் தகித்தான்...

பெரிய அந்தஸ்தில் இருப்பவனின் குட்டு இனையத்தில் காட்டு தீயாக பரவியதை ஒருவன் வேறு நாட்டில் உட்கார்ந்து கொண்டு உச் கொட்டி வருத்தப்பட்டான்..பாவம் இத்தனை சுவாரசியமான செய்தி காணும் நேரத்தில் கைகளில் பார்ப்கான் இல்லை எங்கிற வருத்ததில் வந்த உச் சத்தம் பலமாக வெளிப்பட்டது அதர்ஷனிடம் இருந்து...

செல்வா அவமானத்தில் முகம் கருத்து நின்று இருந்த சமயம் மேலும் கூனி குறுக வைப்பதாய் அவனை சப்பென்று அறைந்த தாஸ் கொதி நிலையின் உச்சியில் சரமாரியாக திட்ட தொடங்கினார்...

டேய் என்ன ம** நீ பிஸ்னஸ் பன்னுற இதுக்கு காரனமானவன இன்னும் என்ன தூக்கி வச்சு கொஞ்சிகிட்டு இருக்கிய என அவனிடம் பாய்ந்தவர் உனக்கு ஒரு மண்ணும் தெரியலேனா வாய மூடிட்டு போய் முலைல உக்காரு அத விட்டுட்டு எனக்கும் பிஸ்னஸ் தெரியும்னு உள் நுழைச்சு அடத்த களச்ச கண்டந்துண்டமா வெட்டி களச்சு போட்டுருவேன் என ஆள் காட்டி விரலை அவனை நோக்கி உயர்த்தி சீறியவன் போ இங்க இருந்து என கத்தியதை தொடர்ந்து வெளியே வந்து காரில் அமர்ந்தவன் ஆஆஆ என கார் ஸிட்டில் குத்தி கழுத்து நிரம்பு புடைக்க அதர்ஷாஆஆஆ என கத்தியவனுக்கு இரத்த அழுத்தம் எகிறி முளை சிதறு அளவுக்கு வெறி...

ஒரேடியாக குற்றி கொன்றால் கூட இத்தனை அழுத்தம் இருந்திருக்காது செல்வாவுக்கு...ஆட்டம் பாம் வைத்து மொத்தமாக தகர்த்து எறிவது ஒரு வகை என்றால் சிறு சிறு மைக்ரோ வெடி குண்டுகளை வைத்து அதன் பலத்தை அளித்து சிறிது சிறிதாக மணல் கோபுரம் போல் சரிய வைப்பது இன்னோரு வகை..இதில் அதர்ஷன் இரண்டாம் வகை இனிக்க இனிக்க கொன்று மறுபடி எப்படி பிரண்டாலும் ஏழ முடியாத அளவுக்கு செய்வது தான் அவன் ஸ்டைல்..

நேராக ஹோட்டலில் இருந்து ஒர் காபி ஷாப்பிற்குள் நுழைந்த செல்வா புவி அன்னை நோக பாதங்களை தரையில் அழுந்த பதித்து உள் நுழைந்தவன் வந்த வேகத்தில் தன்னை ஏதிர் கொண்டு தேவா கன்னத்தில் இடியை இறக்கி இருந்தான் அவன்...

அவன் அறைந்ததில் சற்று தடுமாறினாலும் சட்டென சுதாரித்து நேராக நின்றவன் அவனை சலைக்காது பார்த்து

சந்தேக படுறிங்கலா பாஸ்

மீண்டும் கை ஓங்கி கொண்டு வந்தவன் பின் சுற்றம் உணர்ந்து கையை இறக்கி அப்பறம் எப்பிடி டா அவனுக்கு நம்மளோட பிளென் தெரியும்..

அதான் பாஸ் தெரியல அவனோட ரெஸ்டாரண்ட்ல தான் வெச்சோம் ஆனா எப்பிடி இங்க வந்துச்சு தெரியலை... இதுல அங்க சர்ச் பண்ணவுங்க ரெஸ்டாரண்ட்க்கு நல்லா ரிவியூ வேற கொடுத்து இருக்காங்க திவிரமாக கூறியவனை தொடர்ந்து...

ம்ம் இது எல்லாம் வக்கனையா பேசு என கடுகடுத்தவன்..பின் வாயை குவித்து பெருமூச்சை இழுத்து விட்டவன் அதையாவது சரியா பண்ணி இல்லையா என கேட்க..அது பக்கா என அவன் கூறியவுடன் மேலும் சில நேரம் பேசியவர்கள் அவர்அவர் வழிகளில் நகர்ந்தனர்..

என்ன அடி என செல்வா அறைந்த கன்னத்தை தேய்த்து கொண்டு ஹோட்டலை விட்டு வெளிவந்தான் தேவா...

அப்போழுது அவன் ஏதிரில் ஒடி வந்த ஒருத்தி தேவாவை கவனியாது அவன் மீது மொத அவன் மீதே சரிய..அவள் வந்து மொதியதில் சற்று தடுமாறினாலும் பின் சுதாரித்து நின்றவன் கீழே சரிய போனவள் இடையில் கைவிட்டு தாங்கியிருந்தான்...

கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் அவன் தன்னை தாங்கி இருப்பது கூட தெரியாமல் இமை மூடி நின்றவளை சுயம் அழைக்க கீழே விடுவது போல் கையை சற்று தளர்த்தி சிறிதாக கீழே சரிந்ததும் மீண்டும் கேட்டியாக பிடித்து கொண்டதில் விழி திறந்து சுயம் உணர்ந்து பட்டென விலகி இருந்தாள் அஞ்சனா...

சாரி சார் தெரியாம என அவனிடம் கோரியவளுக்கு தலை அசைத்தவன் நீங்க இங்க என்ன பண்றீங்க என அதர்ஷன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என்று தெரிந்த பட்சத்தில் அவன் கேள்வி கேட்க...இல்ல பர்ஸ்னல் என கூறியதற்கு ஒகே பைன் பாத்து போங்க என கூறி அந்த இடம் விட்டு அகன்று இருந்தான் அவன்...

அதர்ஷனின் அலுவலகத்தில் தான் அஞ்சனா வேலை பார்ப்பதால் ஆப்பிஸ்ல் அதர்ஷனுக்கு பாதுகாப்பாக எப்போதும் அவன் உடன் இருக்கும் தேவாவை அவள் பார்த்து இருக்கிறாள்...

அதுவும் இல்லாமல் தேவா மீது இவளுக்கு ஓர் ஈர்ப்பும் கூட உண்டு..அதற்காக வழிய சென்று இழைந்து சிரித்து பேசாவிட்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக அங்காங்கே சுற்றி திரியும் இந்த துருதுரு கண்ணனை கோப்பியராக ரசித்தது உண்டு அவ்வலவே...

தொடரும்....
 
Last edited:
  • Love
Reactions: Kameswari