• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕20

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
தோட்டத்து வழிய மிதந்து பால்கனி பகுதியை ஊடுருவிய தென்றல் காற்று பூக்களின் மனத்தை அள்ளி வந்ததோடு புத்துணர்ச்சியான ஏகாந்த காற்றால் அவன் மனதை குளிர்வித்த காற்று அவன் தேகத்தை தழுவ தவறியதில் கோஹினூர் வைரக்கற்களாக முகத்தில் வியர்வை பளபளக்க பளு தூக்கி தின்னிய மார்பின் நிரம்புகள் புடைக்க தூக்கி இறக்கி பயிற்சி முடித்தவன் பால்கனி தண்டில் சாய்ந்து தன் முகம் கழுத்தில் துளிர்த்த வியர்வையை துண்டால் முகத்தை மூடி நெற்றியில் இருந்து ஒற்றி எடுத்தப்படி கன்னத்தில் வழிந்ததோடிய வியர்வையை துடைக்க துண்டை இறக்கிய சமயம் பார்வை எதர்ச்சியாக ஏதிர்திசை தோட்டத்தில் பதிந்து மீல வழியற்று நிலைத்து அவனுக்கு சதி செய்வதாய்...

காலின் கட்டவிரலை தழுவியது போதாது என தரையை முத்தமிடும் அளவிற்கு நீண்டு இருந்த லாங் ஸ்கர்ட் மற்றும் அடர் நீல நிறம் டாப்பில் வெள்ளை பூக்களை சிதறவிட்டார் போல் அங்காங்கே அச்சடிக்கப்பட்ட பூக்கள் போட்ட டாப்பை அனிந்து மொத்த மூடியை கொன்டையாக பின் தலையில் அடக்கிய போதும் அதில் அடங்காமல் போன ஒரிரு முடி கற்றைகள் அவள் கன்னத்தில் ஊஞ்சல் ஆடியதை கூட துள்ளியமாக தொலைவில் இருந்து கண்டு கொண்டவனுக்கு அவள் கன்னகதுப்பில் ஒட்டி உறவாடிய மூடியை விலக்கி முத்தமிட இதழ்கள் குறுகுறுத்ததை தொடர்ந்து தொன்றிய அவஸ்தையில் எச்சிலை தொண்டைக்குள் கூட்டி கூட்டி விழுங்கி நா வறண்டு போனது பாவம்...

இங்கே ஒருவனே தன்னை அறியாது இம்சை செய்வதை உணராது வான் நோக்கி நின்று தேன் சிந்தும் அதரம் அசைய ஏதோ‌ தெரிந்தவர்களிடம்‌ பேசுவதை போல் பாவனை காட்டி திவிரமாக பேசி நின்றவளின் முனுமுனுத்த இதழை கிள்ளி தன் வாய்க்குள் போட்டு கொள்ளும் ஆசை எழுந்ததில் கேட்ட பையனாடா நீ என தன் தலை தட்டி தன்னை திட்டி கொண்ட போதும் பார்வை விலகும் உத்தேசம் இன்றி தூரம் நின்றவளை ஒட்டி உறவாடியது...

தாய் மடிக்காக மனம் ஏங்கி தவிக்கும் நேரம் வானின் குவிந்திருக்கும் மேகமூட்டம் காட்டும் தோற்றத்தை தன் தாயாக பாவித்து அவள் பேசுவது வழக்கம் தான் என்ற போதும் தோழியிடம் தன் காதல் பித்தை பிதற்றும் பக்குவபாடாத பருவ மங்கை போல் இதோ இது போல் உளறி நிற்பது புதிது...இங்கே அவள் அசையும் விரலின் நுனியில் பளபளத்த நகங்களை துல்லியமாக உள்வாங்கி பித்தம் ஏறி மூச்சடைத்து நின்று இருந்தான் அதர்ஷன்....

நிலை மாறாது நின்று இருந்தவள் ஏதோ ஒர் உந்துதலில் குனிந்து பார்க்க சஞ்கனா தான் அவள் ஸ்கர்டை தன் பிஞ்சு கரங்களால் இழுத்து அஞ்சு தூக்கு என கை நீட்டியதை பார்த்து என் பட்டு குட்டி எழுந்து என்ன தேடி வந்துச்சா...அஞ்சுவ தேடுனிங்கலா டி என பட்டு என தன் மூக்கால் குழந்தையில் குட்டி முந்திரி மூக்கை உரசி தன் மார்பில் சாய்த்து கொள்ள அதுவோ மெத்தையில் சரிவர முடித்திறாத தூக்கத்தை அவள் நெஞ்சில் தொடர்ந்தது...

அவள் நெஞ்சில் தன் குட்டி கன்னம் நசுங்க வாய் பிளந்து எச்சில் செய்து உறங்கும் அச்சிறு குழந்தை போல் அவள் மார்பு சூட்டில் மடங்கி சுருண்டு கொள்ள இங்கே ஒர் வளர்ந்த குழந்தை ஏக்கம் கொண்டு நிற்பதை உணராது தன் நெஞ்சில் பதுங்கி இருந்த பொம்மை குட்டியை தாலாட்டியிருந்தாள் அவள்..

குழந்தைகிட்ட போய் பொறாமை படுற பைத்தியகார என துருத்தி கொண்டு கேள்வி எழுப்பிய மனசாட்சியை சமாளிக்க தெரியாது பல்லித்து காட்டி கொஞ்சமா என கூறி கொண்டவன் அவளிடம் இருந்து எதிர்பார்ப்பது தான் என்ன இத்தனை நேரம் அவளின் சிறு அசைவிற்கும் பித்தம் கொண்டு பார்வையால் களீபரம் செய்து அள்ளி விழுங்கியவன் இப்பொழுது அதற்கு துளியும் சம்மந்தம் அற்று ஏவுகணையாக மோகத்தில் வெடித்ததற்கு எதிர்மாறாக இதோ குழந்தையாக அவள் உடல் சுடு வேண்டி நிற்பது காதலில் சேருமோ...

காதலில் கட்டவிழும் மோகமும் அடக்கம் என்றால் அதர்ஷன் அவளிடம் எதிர்பார்க்கு அனைத்தையும் இனைத்து வரும் புள்ளியும் 1000 சதம் காதல் தவிர்த்து வேறு என்னவாக இருக்க கூடும்...


பார்லரில் அடுக்கு அடுக்காக வேவி பிளோ ஸ்டைலில் திருத்தப்பட்ட தன் முடி கற்றைகளை நீவி விட்டு முன்னுக்கு பாதியும் பின்னுக்கு பாதியுமாக பிரித்து சரியவிட்டபடி அதிகாரமாக ஏய் கமலா ஜூஸ் எடுத்துட்டு வா என தங்கள் வீட்டில் பணிபுரியும் பெண்னிடம் கட்டளையிட அந்த பெண்மனியும் அவள் குரலின் விசைக்கேற்ப்ப சுழன்று வந்து அவள் தேவை முடித்து நகர்ந்தவளை அர்ப்ப பார்வை பார்த்து அவள் நகமும் தீண்டாது நாசுக்காக அவரிடம் இருந்து பழரசத்தில் வாங்கி தன் ஏதிரில் அமர்ந்து இருந்த செல்வாவை உன்றி பார்த்து பழரசம் மொத்ததையும் உறிஞ்சி விழுங்கி கொண்டு இருந்தாள் நீலிமா....

நெருப்பை கக்கும் ட்ராகன் போல் தகித்து அமர்ந்து இருந்தவனிடம் பழரசத்தை உறிஞ்சி காலி குவளையை தூரம் வைத்து விட்டு ஏதோ இப்போழுது தான் அவனை கவனிப்பதாய் ஹய் பேபி நீ எப்போ வந்த ஒய் டிட் யு லுக் சோ ஸ்ட்ரெஸ்ட் என பரிவை காட்டி விஷயத்தை பிடுங்க குழைந்தாள் அவள்....

தன் தலை முடியை இரு கரங்களால் இழுத்து பிடித்து கொண்டு எல்லாம் அதர்ஷன் தான் மாம்..ஐ கான்ட் டோழரேட் என பற்களை நறநறவென கடித்து தன் ஆத்திரத்தை மட்டுபடுத்தி கொள்ள முயன்று தோற்றவனாக ஆஆ அவன் மூலைக்குள் குடைந்து கிட்டே இருக்கான் என கத்தியவனின் தோள் தட்டி....

நம்ம பிளான் எல்லாம் சரியா தான போகுது அப்பறம் என்ன பீ காம்

இப்பிடியே சொல்லிட்டு இருங்க நம்ம கூட சீக்கிரம் நடு தெருவுக்கு வந்துருலாம் அப்பறம் தான் நமக்கு கை தொழில் இருக்குல என உள்ளங்கையை குவித்து அசைத்து காட்டியவன் பிச்சை எடுப்போம் ஒன்னும் அவசரம் என ஆத்திரத்தில் கொதித்தவனை கத்தாத ராகவ் என அடக்கிய நீலிமா...

அவசரம் படாதே அப்படி எதுவும் நடக்காது நாம மெதுவா தான் காய் நகர்தனும் என அவள் யோசனையில் ஆழ்ந்து போக அவனோ ச்சே என்னமோ பண்ணுங்க என சலித்து எழுந்தவன் தன் அறை புகுந்து இருந்தான்...


இரவு வீட்டிற்குள் நுழைந்த அதர்ஷனது விழிகள் வீட்டின் முலை முடுகுகலையும் விடாது பரபரத்து அலசியவனின் முகத்தில் தேடிய போது இருந்த வெளிச்சம் குன்றி கூம்பி போனது எதிர்பார்த்து ஏதோ ஒன்று கிடைக்காமல் போன ஏமாற்றத்தில்...ஒரு நொடியில் தன்னை சுதாரித்து மீட்டவன் தன் அறையிலுள் நுழைந்து இருந்தான் முகத்தில் பாவம் குன்றியவனாக...

அறையில் சரண்புகுந்து கொண்டவன் உடை கூட மாற்ற தோன்றாது அப்படியே கட்டிலில் சரிந்தவனின் நினைவு காலை நடந்த நிகழ்வை சுகமாக அசைப்போட்டு கொண்டது...

தோட்டத்து பக்கம் தன் நெஞ்சை மஞ்சமாக்கி உறங்கிய குட்டி பொம்மையின் தலை வருடியபடி தன் பக்கத்தில் அமைத்து இருந்த கல்மேடையில் அமர்ந்ததை தொடர்ந்து அங்கே வந்த சாந்தி ஒர் பெருமூச்சுவிட்டு இவ இங்க வந்துடாளா நா அங்க தேடிகிட்டு இருந்தேன் பல் தேய்க்கனும்னு சொன்னதுக்கு இங்க வந்து விட்ட தூக்கத்த தூங்குது வாலு சரி கொடு அஞ்சலி நா அவளை பிரெஷ் அப் பண்ணி கொண்டு வரேன் என பிள்ளையை வாங்க வர...

அக்கா கொஞ்ச நேரம் அவ என்கிட்டயே இருந்து தூங்கட்டுமே நானே அவ எழுந்ததும் சுத்தம் பண்ணி பாத்துக்குறேன் என கேட்டவளிடம்...

இல்ல அஞ்சலி உனக்கு வேற கையில அடி பட்டு இருக்குல கொடு நா பாத்துக்குறேன் என்றதற்கு அக்கா பீளிஸ் என முகம் சுருங்க கெஞ்சியவளிடம் மறுக்க தோன்றாது சரி பாத்துக்கோ என கூறி அவள் அங்கிருந்த நகர்ந்திருந்தாள்...அப்போதும் விலகா பார்வையுடன் அவர்களையே ஏதோ சீட்டின் முனையில் அமர்ந்து பார்க்கும் திரில்லர் படம் போல் சுவாரஸ்யமாக தொலைவில் இருந்து பார்த்து நின்ற அதர்ஷன் தன் தொலைபேசி சத்தம் எழுப்பி தன் இருப்பை உணர்த்தியதில் மாய வலையில் இருந்து விடுப்பட்டவன் போல் கொஞ்சம் பாத்தா போதும் அப்படியே மயக்கிறுவா ராட்ச்சசி என்ற முனுமுனுப்போடு தன் தலை தட்டி கொண்டு தன் அன்றாட வேலையை தொடர சென்றான்...

சாந்தியிடம் கூறியதை போல் சிறிது நேரம் கழித்து எழுந்து கொண்ட சஞ்சு பாப்பாவை சுத்தம் செய்து விட்டு அவளோடு டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்ண போன நேரம் தன் ஏதிரில் மோகன சிரிப்பு சிந்தி வந்து நின்றவனை கண்டு சலையாக சமைந்திருந்தாள் அவள்...


அதர்ஷனை பார்த்தும் சுற்றம் மறந்தவளாக ஏதோ பிறவி பலனை கண் முன் கண்டு விட்ட திருப்தி அடைந்ததை போல் மெய் மறந்து நின்றவளின் முன் சட்டையின் கை பகுதியை மடித்துவிட்டப்படி தந்தும் மோகன புன்னகையுடன் அவளை நெருங்கியவன் மெல்ல யாரும் கவனிக்காத சமயம் குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு சுயத்திற்கு மீட்டு வந்தவன் அதிர்ச்சி போச்சா என புருவம் ஏற்றி இறக்க...

அவளோ நானம் கொண்டு தலை கவிழ்த்தியதை கண்டு மீண்டும் முத்தமிட குறுகுறுத்த இதழை அடக்கும் வழி தெரியாது இதழை அதற்கான இடத்தில் சேர்த்து விடும் நோக்கில் நெருங்கி வந்த நேரம் தம்பி சாப்பிடலையா என கேட்டு நின்ற சாந்தியை பார்த்து சற்று தடுமாறி இல்ல எனக்கு மீட்டிங் டைம் ஆச்சு நா கிளம்புறேன் என கூறி முன் சென்றவன் யாரும் அறியாத நேரம் அவள் இடையை கிள்ளி துள்ள விட்டு நகர்ந்தான் கள்ளனவன்.....


இதை நினைத்து இனிமையில் தவழ்ந்தவன் அவளை உடனே பார்க்க வேண்டும் என மனம் நிலை கொள்ளாது பார்க்க வேண்டும் அடம் பிடித்து நின்றதில் அதற்கு இசைந்தவனாக அவள் அறைக்கு வந்தவன் எப்போதும் போல் தாளிடப்படாமல் சாற்றி இருந்த அறையை தயக்கம் இன்றி திறந்து உள் நுழைந்தவன் அவள் கோலம் கண்டு இனிமை நீங்கி மனதால் சிதைந்தான் அவன்....

சாளரம் வழி பார்வையை திக்கற்று பதித்து இதழ் நடுங்க கண்களின் தடுப்பு அற்று கொட்டிய நீரை துடைக்க கூட தொன்றாது நின்றவள் பின் மெதுவாக சென்று அம்மு என தோள் தொட்டு உலுக்கியும் நிலை மாறாது நின்றவளை இறுக அனைத்து கன்னம் தட்டி இங்க பாருடி அம்மு என்னடி ஆச்சு பீளிஸ் பாருமா என கன்னம் சிவக்க தட்டி சுயம் மீட்டு வர முயன்றவனின் கரங்களில் மயங்கி சரிந்து இருந்தாள் பாவையவள்‌‌‌....



தொடரும்.......
 
Last edited:
  • Love
Reactions: Kameswari