• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕24

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
அதர்ஷன் ஒரு வித உற்சாகமான மனநிலையில் அலுவலகத்திற்கு வந்தவன் அனைவரையும் வாட்டி விட்டான்..இவன் சாதரனமான மனநிலையில் இருந்தாளே அனைவரும் இவன் வேகத்திற்கு இனங்க வேலை செய்ய தடுமாறுவார்கள்..இதில் அதைவிட வேகமாக செய்தால் அவர்களும் என்னதான் செய்வார்கள் முழி பிதுங்கி தான் நின்றனர்..


காலை அஞ்சலியை அனைத்து நா இருக்கேன் என ஆறுதல் கூறிய போது தெரியும் என்று அவள் கூறிய ஒற்றை வார்த்தையில் இவன் சிறகு இல்லாமல் பறந்தான் என்றாள் அது மிகையாகாது..அவள் தன் மேல் நம்பிக்கை கொண்டு இருகிறாள் என்ற விசயமே அவனுக்கு மேய் சிலிர்த்தது..இதழ் நிரம்பிய புன்னகை தன்னால் வந்து ஒட்டிக்கொன்டது..


இப்போதே தன் அம்முவை காண வேண்டும் என்ற ஆவலும் வந்தது..வசியகாரிடி நீ என செல்லமாக கொஞ்சி கொண்டான் மனதிற்குள்...


வீருக்கு ஆச்சிரியம் தான் நேற்று இரவு நடந்த சம்பவத்திற்கு அதர்ஷன் என்ன நிலையில் வருவான் என அவன் மனம் பதைபதைக்க அவனோ அதற்கு முற்றிலும் மாறாக மகிழ்ச்சியாக வந்தது திருப்தி அழித்தது..ஆனால் எதுவும் கேட்டு கொள்ளவில்லை..


அதர்ஷன் இன்னும் வீட்டில் பாதுகாப்பை கூட்டி இருந்தான் ஏனெனில் இது அவன் அம்முவின் விசயம் ஆயிற்றே‌‌..தேவா வீரிடமும் அஞ்சலியை பற்றி கூறி இருந்தான்..


இருவருக்கும் மனம் கனத்து போனதொடு அவனை கொல்லும் வெறி வந்தது..தங்களின் தங்கையை அந்த தோற்றத்தில் நினைக்கையிலே கசந்தது இருவருக்கும்...


********
அஞ்சனா சில பைல்களை சரிபார்த்து கொண்டு இருந்தாள் இன்று காலை ஆரம்பித்தது ஆனால் இன்னும் முடிந்த பாடுதான் இல்லை விட்டால் தலையில் உள்ள முடி அனைத்தும் இன்றே கொட்டி விடும் போல் இருந்தது..இப்போது காபி குடித்தால் சிறிது தலைவலி குறையும் என்று நினைத்தவள் நகரப்போக சரியாக மாட்டி கொன்டால் தேவாவிடம்..


ஐயோ இவன் வேற வரானே என முனுமுனுக்க அதற்குள் அவன் அவளை நெருங்கி இருந்தான்..மிஸ் அஞ்சனா எங்க போரிங்க உங்க ஒர்க் முடிக்காம என கறாராக வினவ..
சார் அது அது இதோ முடிச்சுருரேன்
என கூற..ம்ம் சீக்கிரம் இன்னும் 2 ஹவர்ஸ் தான் இருக்கு என கூறி சென்று விட்டான்..


இந்த ஜனநாயக நாடுல காபி குடிக்க கூட உரிமை இல்லாம போச்சு என தன்னை நொந்து கொண்டு வேலையை பார்க்க தொடங்கினாள்..


தேவாவும் இது முக்கியமான பைல் என்பதால் அடிக்கடி வந்து பார்த்து கொண்டான்..ஒருவழியாக முடித்து விட்டால்..சார் என அனுமதி பெற்று உள்நுழைந்தவள் சார் எல்லாம் முடிச்சிட்டு நா கிளம்பட்டுமா என கின்டர் கார்டன் குழந்தைப் போல் வினவ..ம்ம் அது சரி நீங்க கிளம்புங்க என கூறியதும் தான் அவளுக்கு முச்சே வந்தது..அப்பாடா விட்டா இன்னைக்கு ஃபுல்லா வேலை வாங்குவான் போல என முனுமுனுத்து கொண்டே செல்ல..அவளின் சிறு பிள்ளை தனமான பேச்சில் அவன் இதழ் சிறிதாக விரிந்தது..


மாலை ஏழு மணியை தொட்ட போது அனைத்தும் தம்தம் கூட்டில் அடைந்து கொள்ள மக்களும் காலை இருந்த புத்துணர்வை விட அதிக புத்துணர்வுடன் தங்களின் இருப்பிடத்தை அடையும் நேரம் அது..


அதர்ஷனும் கிளம்பிவிட்டான் தேவா மற்றும் வீருடன் வீட்டிற்கு..இவன் உள்நுழைய அஞ்சலி சஞ்சனாவுடன் விளையாடி கொண்டு இருந்தவள் அவனை நிமிந்து பார்த்து சிறு புன்னகை புரிய அவனும் சிரித்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்..


சிறிது நேரம் கடக்க சாந்தி அனைவரையும் சாப்பிட அழைக்க அவர்களும் உணவு மெஜையில் ஆஜராகி விட்டனர்...


தேவா வழக்கம் போல் அஞ்சலிக்கு ஊட்டி விட இங்கே ஒருவனுக்கு பெட்ரோல் இல்லாமலேயே வயிறு எரிந்தது...பார்வையால் அஞ்சலியை பொசுக்க அதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை அது வேறு எரிச்சலை கிளப்ப அப்படியே எழுந்துவிட்டான் மேஜையில் இருந்து..


அவனை பொருத்த வறை அவன் மட்டுமே அஞ்சலிக்கு அனைத்துமாக இருக்க வேண்டும் யாரும் அவர்கள் கோட்டுக்குள் வருவதை அவன் விரும்பவில்லை..எப்போதும் தனக்கு பிடித்த பொம்மையை அனைத்து கொள்ளும் சிறுவன் போல் வைத்து கொள்ள நினைக்கிறான்..ஆனால் அவனின் தவிப்பை தான் பாவை அவள் புரிந்து கொள்ளவில்லை போலும்..‌‌.


சாந்தி தம்பி என்னாச்சு என வினவ..இல்ல எனக்கு பசிக்கல பால் மட்டும் என் ரூம்ல தந்துருங்க போதும் என செல்ல அப்போதும் அஞ்சலி பார்கிராளா என திரும்பி பார்க்க அவள் குழந்தையிடம் விளையாடுவதில் முனைப்பாக இருக்க..சம்மந்தமே இல்லாமல் அந்த குழந்தை மேல் பொறாமை வேறு எட்டி பார்த்தது..


ஒவ்வொருவராக நகர தேவா வீர் மட்டுமே எஞ்சி இருந்தனர்..‌‌‌.ஏன்டா தேவை இல்லாமல் எல்லாரையும் வம்பு இழுக்குற என வினவ‌‌..அவன் எதை பற்றி கேட்கிறான் என தெரிந்தே நா என்ன பன்னேன் என எதுவுமே தெரியாதது போல் கேட்க்க..நடிக்காதடா...விடுடா விடுடா என கூற‌..நீ என்னைக்கு அண்ணா கிட்ட மொத்து வாங்க போரியோ தெரியல என சென்று வி்ட்டான்..


அஞ்சலி இந்த பால அதர்ஷன் தம்பிகிட்ட கொடுத்துரியா..பாப்பாக்கு தூக்கம் வருது தூங்க வைக்கனும் பீளிஸ் என கேட்க்க..இதுக்கு எதுக்கு பீளிஸ் நா கொடுக்குறேன் என அதர்ஷன் அறை வரை கொண்டு வந்தவளுக்கு..அறைக்குள் செல்ல தயக்கமாக இருந்தது..


பால் தான கொடுத்துட்டு போயிர்லாம் என மெதுவாக உள்ளே எட்டி பார்க்க அவன் எங்கும் இருப்பதுப்போல் தெரியவில்லை என அடி மேல் அடி எடுத்து வைத்து அவன் அறைக்குள் நூழைய பால்கனியில் அதர்ஷன் நின்று இருப்பது தெரிய..அவனை நெருங்கும் முன் அவன் திரும்பி அவளை இடையோடு இழுத்து அனைத்து இருந்தான்..அவள் உள்ளே நூழையும் போதே கண்டு கொண்டவன் அவள் தன்னை நெருங்கும் முன் இழுத்து அனைத்திருந்தான்..ஐயோ பாவம் பால் தான் பரிதாபமாக எல்லாம் கீழே சிந்தி இருந்தது..அவள் கணப்பொழுதில் நடந்தது எதுவும் புரியாமல் அவள் கண்களை படபடக்க விட..


மெதுவாக அவள் கன்னத்தில் தன் முச்சு காற்று மோதும் அளவிற்கு நெருங்கி நின்று மீசை முடி செவி மடலை ஒரச அவன் எதுக்கு உனக்கு ஊட்டனும் என கேட்டு வைக்க..அவள் தான் இன்னும் ஒன்னும் புரியாமல் விழித்தாள்...


சொல்லு என கூறி லேசாக கன்னத்தை கடித்து வைக்க.. அவன் தீண்டலில் உயிருள்ள பொம்மைப் போல் விழித்து அது அது என வாயில் இருந்து வார்த்தைக்கு பதில் காற்றே வந்தது..இப்படி நெருங்கி நின்று கொண்டு பேசு என்றால் அவளும் என்னதான் செய்வாள்..அவளை சற்று விலக்கி ம்ம் சொல்லு என கூற..கைல அடிப் பட்டு இருக்குல அதான் என கூற..இனிமேல் அவன் உனக்கு ஊட்ட கூடாது..ஏன் என்று கேள்வி தொக்கிய விழிகளால் அவனை நோக்க..அது அப்படித்தான் என கூறினான்..


தொடரும்....
 
  • Love
Reactions: Kameswari