• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕24

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
வர்ண ஜாலங்கள் கொண்டு சிதறும் மத்தாப்பாய் நெஞ்சில் சிதறி‌ நிரப்பி நின்ற மகிழ்ச்சியில் கால் தரையில் நிலை கொள்ளாத சிறகு முளைத்த சின்னஞ்சிறு பறவை பறக்க குறுகுறுப்பதை போல் சந்தோஷத்தில் துள்ளி திரிந்தவனுக்கு பறந்து சென்று பறவைகளுக்கு தன் குஷியை பகிர முடியவில்லையே என்ற பச்சை பிள்ளை தனமான ஏக்கம் அவனுகே அதிகப்படியாக தான் தொன்றியதோ தலையை தட்டி கொண்டு சற்று பிதற்றலுக்கு விடுப்பு விட்டு வேலையில் கண் பதித்தான் அதர்ஷன் வர்மா..

சந்தோஷத்தில் விட்டால் பிய்த்து கொண்டு பறக்கும் ராக்கேட் போல் திக்கு முக்காடி போனவின் போதைக்கு ஊருகாய் ஆகி போனார்கள் அவன் கன்பேனியில் பனிபுரிவோர்...

சாதாரன நேரத்திலேயே அவனைவரையும் பரபரப்பில் நிறுத்தி கொள்வதில் அவனுக்கு இடு கொடுக்க முடியாமல் தினறி மயக்கமே வந்தாலும் கூட அனைத்து வேலையையும் பக்காவாக முடித்து விட்டு தெளிவாக வீடு போய் மயக்கம் கொள்பவர்கள்.. இப்போது இவனின் ராட்ச்ச வேகத்தில் இன்னும் நொந்து நூடல்ஸாக போன கதை...

அடுத்து என்ன அடுத்து என்ன என பூதம் போல் வேலையை பார்த்தவன் அவனைவரையும் பூதம் ஆக்கும் முனைப்போடு தன்னோடு கட்டி இழுத்ததில் எலாஸ்டிக் போன கயிறாக எல்லொரும் தொங்கி போன நிலையில் பாவம் வீர் என்ற பச்சிளம் பிள்ளையும் ஒரவஞ்சனை இன்றி மாட்டி கொண்டது தான் பரிதாபம்...

மாலை ஏழு மணியை தாண்டி ஒரு நிமிடம் கூட நில்லாது இதுக்கு மேல முடியாதுடா சாமி என எல்லொரும் தங்கள் வேலை முடித்து அவன் டேபிலில் சப்மிட்டு செய்து விட்டு சீட்டாக பறந்து விட்டிருந்ததில் காலியாக காட்சி அளித்த ஆப்பிஸில் இன்னும் அந்த இடத்தை விட்டு நகரும் சிந்தனை இன்றி அமர்ந்து இருந்தவனின் இதழில் இன்னும் காயாத தளிர் புன்னகை நிலைகொண்டு அவனின் வசீகரத்தை கூட்டுவதாய்..

கோகுல கண்ணாய் இதழுக்குள் விரிந்த புன்னகையில் கன்னம் குழிய அமர்ந்து இருந்தவனின் நெஞ்சம் விரும்பியே தேன் குடத்தில் விழுந்த வண்டாக காலை நடந்த நிகழ்வையே நினைத்து நினைத்து தித்திப்பை தக்கவைத்து கொள்வதாய்...

குழந்தை போல் அவனிடம் ஒன்றி புருவ சுருக்கங்கள் இன்றி விரிந்த இதழுமாய் அவன் மார்பில் சுருண்டு இருந்தவளின் முகபாவத்திலேயே தன்னிடம் எத்துனை பாதுகாப்பை உணர்கிறாள் என கண்டு கொண்டு கர்வம் கொண்ட ஆண்மை அவளது அடுத்த வார்த்தையில் கரவம் மெருகேறி காதல் பெருகி சந்தோஷத்தில் நெஞ்சடைக்காத குறை தான்...

தன்னில் சுருண்டு அத்தனை நேரம் நிம்மதியாக உறங்கியவள் விழிப்பு தட்டியதும் அலை அலையாக நேற்றின் நியாபகம் வந்து மூளையை தண்டியதில் முகம் சுணங்க அவன் மார்பில் உரிமையாக தலையை அழுத்தி கொண்டவளை இறு கரங்களுக்குள் இதமாக அரவனைத்து ஒன்னும் இல்லடா நா இருக்கேன் என கூறி அவள் தலையில் நாடியை அழுத்தி முதுகை வருடி கொடுத்து முழுமையாக அவளை அறுதல் படுத்தும் முன் தொடர்வண்டி பெட்டியாக அவன் கூறிய வார்த்தைக்கு கொஞ்சமும் இடைவெளி இன்று தெரியும் என்ற ஒற்றை வார்த்தையில் கர்வம் கொண்ட ஆண்மை இன்னும் மெருகேற்றி அவன் இதழில் நீங்காத புன்னகை ஒன்றை தேக்கியிருந்தாள் பாவையவள்...

பக்கம் பக்கமாக ஒத்திகை பார்த்து கொண்டு சொல்லும் பெரிய பெரிய வசனங்களை விட வள்ளுவரின் குரலாய் இரு வரிகளில் அடங்கி போகும் வார்த்தை எல்லாவற்றையும் உணர்த்தி விடுவதை மறுக்க முடியதே...

இங்கும் பெரும் பெரும் வார்த்தைகளும் நீண்ட விளக்கமும் பெரிய வசனங்களும் தேவையற்று போனது துளிர் விட்டு அடி ஆழத்தில் வேர்களை விரித்து கொண்டிருக்கும் காதலின் அறிகுறியோ..

எத்தனை நேரம்‌ அதே நிலையில் தனியாக சிரித்தபடி அமர்ந்து இருந்தானோ அனிவகுத்து நின்ற இனிய நினைவுகள் அலை அலையாக தழும்பி வந்து நெஞ்சம் என்னும் கரையை முட்டியதோடு தன்னவளின் சிரித்த முகத்தின் சாயலையும் இழுத்து கொண்டு வந்ததில் தான் சுயம் பெற்று தெளிந்தான் அவன்...

தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தவனின் பார்வை தன்னிசையாக கை கடிகாரத்தில் பதிந்ததில் என்னது மணி ஒன்பதா என வாய்விட்டே அதிர்ந்தவன் வசியகாரி டி நீ நேரம் போனதே தெரியல இரு வந்து உன்ன வச்சுக்குறேன் என இடபக்க நெஞ்சை வருடி செல்லமாக அவளை வைதவன் அடுத்து மளமளவென வீட்டிற்கு கிளம்பியவன் கட்டிய மனைவியை போல் சாஷ்டாங்கமாக கனவன் வந்தால் தான் அடுத்த காரியம் என்பது போல் அவனுக்காக வீட்டிற்கு செல்லாது காத்து கிடந்த வீரையும் இழுத்து கொண்டு நகர்ந்து இருந்தான் அவன்..

நேற்று அஞ்சலியின் அறையில் கேட்ட வினோத சத்தம் ஏதோ விபரிதம் என்று உணர்த்திய பிறகும் அஞ்சலியை தங்களின் குட்டி தங்கையாய் பார்க்கும் இரு அண்ணன்மாரகளுக்கும் இருப்பு கொள்ளுமா வேகமாக ஒடி அவளின் அறைக்கு முன் நின்று இருந்தனர் தேவ் மற்றும் வீர்...

முகம் வெளிறி அதர்ஷனை இறுக அனைத்து கண்ணீர் விட்டளின் கோலம் இவ்விருவரின் உயிரையும் உருக்கி இருந்த போதும் அதர்ஷனை விட்டு அவளை பிரித்து அமர்த்தி ஆறுதல் படுத்த விளையமல் தூரம் நின்று பார்த்தவர்கள் இனியும் அதர்ஷன் பார்த்து கொள்வான் என அங்கிருந்து நகர்ந்த போதும் அவளின் கலைந்த தலையும் சிரிப்பு வறண்டு இரத்தம் சுண்டிய முகமும் கண்ணில் விழுந்த சீயக்காய் போல் நெஞ்சை உறுத்தி விஷயத்தை அறிய முடியாமல் கலங்கி போனது..

அதர்ஷன் வாய் திறக்காமல் தாங்களாக போய் விஷயம் என்வென்று ஆராய சங்கோஜமோ அல்லாது நாகரிகம் கருதி விலகி நின்றார்களோ ஏதோ அவர்களை தடுத்து நிறுத்தியதில் முக்கியம் எனில் அவனே கூறுவான் என விட்டுவிட்ட போதும் நெஞ்சை அழுத்தும் பாரம் அவன் கூறிய பிறகு தான் கெட்டதிலும் சிறு நல்லது என்ற நிம்மதியோடு பாரம் தளர்ந்தது...

எல்லாம் அறிந்த கொண்ட பின் தங்களில் தங்கையை அந்த கோலத்தில் வைத்து யோசித்ததற்கே மனம் கசந்து அந்த யோசனை தவிர்த்தவர்களுக்கு சம்மந்தபட்டவனை கொன்று போடும் அளவுக்கு கோவம் வந்தாலும் அடக்கி ஆழ வேண்டிய சூழல் அவர்களை அடக்கியது...

********
தன் முன் குவிந்து கிடந்த பைல்களை திருத்தி அமைப்பதும் பின் வீரிடம் அதை சரி பார்க்க கொடுத்து முகம் தொங்கி வருவதுமாக இருந்தவளுக்கு தலை முடியை பிய்த்து கொள்ளளாம் என்னும் அளவிற்கு இரத்தம் அழுத்தம் எகிறி போனது...

இன்னும் எத்தனை முறை என்ற யோசனையே அவள் தலையை கழுத்தெழும்பு அற்று ஸ்பிரங் வைத்தார் போல் சுழற்றியது...

இதுக்கு மேல் முடியாது இனிமேல் வேலையை தொடர புத்துணர்ச்சியாக ஒரு கப் கஃபியாவது வேண்டும் என்று நினைத்தவள்..ஜெராக்ஸ் மிஷின் பக்கம் நின்ற தேவாவை ஹொலோ என அழைத்து ஒரு கஃபி கொண்டு வாங்க என்றதற்கு அவளை முறைத்தவன் மேம் இதோட அஞ்சாவது கஃபி என்னால போய் போய் எடுத்துட்டு வந்து தர முடியாது உங்களுக்கு வேணும்னா போய் எடுத்துக்கொங்க என சுல்லென கத்திவிட்டு நகர்ந்தவனை பார்த்தவள்...


இந்த ஜனநாயக நாட்டுல காபி குடிக்க கூடவா உரிமை இல்லாம போச்சு நா அப்பிடி என்ன கேட்டுடேன் ஒரு தம்மாதுண்டு கப் கஃபி அதுக்கு கத்திட்டு போறான் நா என்ன போய் கஃபி எடுத்துக்க மாட்டேன்னா சொன்னேன் இப்போ எழுந்தா அவரு வர்க் டைம்ல ஏன் வர்க் பண்ணாம கெண்டின் போறிங்கனு பொறிஞ்சு தள்ளுவரு சரினு இவன் கிட்ட கேட்டா ரொம்ப பண்ணுறான் என முனுமுனுத்து கொண்டவள் ஐயோ மம்மி கஃபி என புலம்பி கொண்ட போதும் வேலை முடித்த பின் குடித்து கொள்ளளாம் என்ற முடிவுடன் வேலையை தொடர்ந்து இருந்தாள்..


கஃபிகாகவே வேகவேகமாக அதே நேரம் திருத்தமாகவும் வேலையை முடித்து வீர் முன் வைத்தவள் கிட்டதட்ட அயர்ந்தும் கூடவே திரும்பவும் திருத்தம் கூறி அனுப்பி வைப்பானோ என்ற சின்ன படபடப்புடன் பள்ளி மானவி போல் நின்றவளை அதற்கு மேல் இழுத்தடிக்காமல் ஓகே பைன் யூ மே லீவ் என்ற அவன் வார்த்தையை தொடர்ந்து முக பிரகாசிக்க வெளி வந்தவள் முதலில் போய் நின்ற இடம் கென்டின் தான்...

ஆடர் செய்த கஃபி வந்ததும் கஃபி கப்பை பதமாக கைகளில் அள்ளி எடுத்து இதழில் வைத்து மிடரு உறிந்து சுகமாக கண் முடி திறந்தவள் முன் கஃபி கப்பை ஏந்தியபடி நின்ற தேவாவை கண்டு இதழ் சுழத்தி நாடியை தோள்பட்டையில் இடித்து கொண்டு நகர்ந்தவளின் செயல் அவன் இதழை தாராளமாக விரிய செய்தது..


ஆபிஸ்ஸில் இருந்து கிளம்பியவன் நேராக வீட்டிற்கு வரும் வழியில் அவனின் பொருமையை வெகுவாக சோதித்த சிக்னல் கம்பியால் திரண்ட நின்ற டிராப்பிக்கை கண்டு உயிற்று நிமிர்ந்து நின்ற சிக்னலை வஞ்சித்த முதல் ஆள் இவனாக தான் இருக்க கூடும் போலும்...

அத்தனை பரபரப்பாக வீடு வந்து சேர்ந்தவன் சுற்றிலும் தன்னவளை தேடி கடைசியில் சஞ்னா உடன் அவளும் சிறு பிள்ளையாய் உருவெடுத்ததை போல் அந்த சிரியவளுடன் விளையாடி கொண்டு இருந்தவளை கண்டு கொண்டவன் மெல்ல இதழ் விரித்து கண்களால் அவளை தொலைத்ததின் குறுகுறுப்பில் திருமப்பியவள் திரும்பிய வேகத்தில் முகத்தை அவனுக்கு காட்டாது முன்பக்கம் திருப்பி அசட்டு சிரிப்பை சிந்தியவளுக்கு காலை அவன் மார்பில் தலையை அழுத்திய நியாபம் அலையாக நெஞ்சை முட்டியதில் வந்த நானம் இது...

முன்பக்கம் முகத்தை திருப்பி சிரித்தவளின் சிரிப்பை பார்க்காமல் தவறவிட்டாலும் மனதை தெற்றி கொள்ளும் அளவுக்கு பக்குவபடாதவன் வேகமாக படிகளின் பக்கம் அவள் முன் பக்கம் தெரிய போய் சென்றவன் அவளை திருப்பி பார்த்து அவளின் சிரித்த முகத்தை உள்வாங்கி நெஞ்சுக்குள் நிரிப்பயப்படி படி ஏறி அவன் அறைக்கு சென்று மறைந்திருந்தான் கள்ளன் அவன்...


எல்லொரும் வீட்டில் இருந்தாள் கூடி அமர்ந்து சாப்பிடுவது வழக்கம் என்பதால் அன்றையை தினத்தையும் தவறவிடாது அனைவரும் ஒன்றாக உணவு உன்ன உணவு மெஜை பக்கம் கூடியிருந்தனர்..

அஞ்சலி கையில் காயம் இன்னும் கூட ஆறாமல் இருந்ததில் சாந்திக்கு துனையாக பரிமாற வந்ததை தடுத்த சாந்தி அவளையும் சாப்பிட அமர்த்தி நீயும் சாப்பிடு இப்பிடி கை வச்சுகிட்டு நீ வேலை பாக்க வேண்டாம் என கண்டிப்பாக கூறி எல்லொருக்கும் சாப்பாடு பரிமாறியிருந்தாள் அவள்...

அஞ்சலிக்கு கையில் அடிப்பட்ட நாள் முதல் அவளுக்கு உணவு ஊட்ட தொடங்கிய தேவா இப்போது கையில் இன்னும் காயம் சரிவர ஆறாத போதும் தானே ஸ்பூன் முலம் அள்ளி எடுத்து சாப்பிடும் அளவிற்கு பிரச்சனை இல்லை என்றாலும் பழக்கத்தை வழக்கமாக்கி அவனே ஊட்டி கொண்டு இருந்தான் அந்த பாசமிகு பாசமலர்..

பழக்கம் வழக்கமாகி போனது மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால்‌ அதர்ஷனுக்கு கொஞ்சம் இல்லை இல்லை லோடு கணக்கில் பொறாமை தான்...

வயிறு தந்துரி அடுப்பாக எரிந்து மூக்கின் வழி உஷ்னமூச்சை விட்டு கொண்டு அஞ்சலியை முறைத்து கொண்டு அமர்ந்து இருப்பதையும் அறியாமல் சமத்து பிள்ளையாக அவன் ஊட்டி கொடுத்த உணவை சாப்பிட்டவளை இன்னும் முறைத்து தள்ளியவனுக்கும் அவர்களின் இடையே உள்ள உறவு முறையும் தெரியும் அவர்களின்‌ எல்லா செயலும் விரசம் இல்லாது பாசத்தின் வெளிப்பாடு என்றும் தெரியும் இருந்தாலும் என் அம்முக்கு அவன் எப்படி ஊட்டலாம் ஏன் நா கொடுக்க மாட்டேன்னா அவளும் என்கிட்ட கேட்கவே இல்லை என்ற சின்ன பிள்ளை தானமான கோவம் கம்பிர தொழில் அதிபனில் இருந்து பிரிந்த இந்த குழந்தை அஞ்சலியிடம் உரிமை கேட்டு உருண்டு பிரண்டு அழுகாத குறை...

தன் பிள்ளை கையில் இருக்கும் போது வேறு சின்ன பிள்ளையை கண்டாள் ஆசையாக அள்ளி எடுத்து கொஞ்சும் தாயின் சுபாவத்தை குழந்தை புரிந்து கொள்ளாது நீங்க எப்படி மா என்னை விடுத்து அந்த பாப்பாவ கொஞ்சலாம் என்ற பொறாமை ததும்பும் கோவம் தன் தாயிடம் தனக்கு உள்ள உரிமையின் சாயல் ஏனில் அதிரஷனின் கோவமும் இந்த வகைறாவில் சேரும் தானே...

இவனின் கோவம் மற்றவர்களுக்கு சிரிப்பை வரவளைத்தாலும் அது அப்பட்மாக தாயின் அரவனைப்பிற்கு ஏங்கும் அவனில் இருக்கும் சிறுவனின் செயல் என்பதை பெண்ணவள் உணராது இருப்பது இன்னும் அவனின் ஏக்கத்தை கூட்டுவதாய்...

இன்னும் கூட தன் பக்கம் பார்வையை திருப்பாது தேவாவிடம் ஏதோ பேசியப்படி அவன் ஊட்டு உணவை மென்று முழுங்கும் வரை கூட பொறுமை இன்றி வாயில் அதக்கி கொண்டு கதை பேசியபடி உணவை முழுங்கியவளை அனல் தெறிக்க பார்த்தவன் பட்டென மெஜையில் இருந்து ஏழுந்திருந்தான் அவன்...

பட்டென எழுந்து நின்றவன் சாந்தியிடம் எனக்கு சாப்பாடு போதும் பசிக்கல பால் மட்டும் என் ரூம்ல வந்து கொடுத்துருங்க என அப்போதும் சத்தமாக கூறி அவள் கவனைத்தை திருப்ப முயன்று தொற்றவன்‌ அவன் அறைக்கு சென்று மறைந்திருந்தான்...

அவன் சென்ற பின் அவன் நகர்ந்த திசையை பார்த்தவளுக்கு இத்தனை நேரம் அவன் தன் கவனத்தை ஈர்க்க செய்த விஷயம் எல்லாம் மனக்கண்ணில் தொன்றி இன்னும் பெண்ணவளை நானி சிவக்க செய்ததது...

எல்லொரும் நகரந்த பின் மெஜையில் எஞ்சி இருந்த தேவா அவனுக்கு நேரே அமர்ந்து இருந்த வீர் ஏன்டா தேவை இல்லாம அண்ணாவ வம்பு இழுக்குற என கேட்டவனை தொடர்ந்து நா என்னடா பண்ணேன் என் தங்கச்சிக்கு சாப்பாடு ஊட்டி விட்டது என்ன அவ்வளவு பெரிய குத்தமா என ஒன்றுமே தெரியாதவன் போல் கண்களில் குறும்பு பளபளக்க ஏதிர் கேள்வி கேட்டவனை உருவம் உயர்த்தி பார்த்த வீர் ஆமா ஆமா உனக்கு உன்னுமே தெரியாதுல நடிக்காதடா என்றதற்கு விஷமமாக சிரித்தவன் பாத்துக்கலாம்டா என கூறி நகர்ந்தவனை கண்டு
நீ என்னைக்கு அண்ணா கிட்ட மொத்து வாங்க போரியோ தெரியலடி என முன் சென்று கொண்டு இருப்பவனின் பின் பலமாக குரல் கொடுத்தவனும் சாப்பிட்டு முடித்த பின் தன் அறையில் சென்று அடைந்து கொண்டான்...


சஞ்சனா அம்மா அம்மா என தூக்கத்திற்காக நத்த தொடங்கியதில் பாப்பாக்கு தூக்கம் வருதா தூங்க போகலாமா என குழந்தையிடம் பேச்சு கொடுத்தபடி அதர்ஷனுக்கு பால் காய்ச்சி கொண்டு இருக்கும் வரை கூட பொறுமை இல்லாது அம்மா தூக்கு என அவள் இடுப்பில் ஏறி தோள் சாந்து தூங்க பரபரத்த பிள்ளையை சமாளிக்க முடியாது ஒரு நிமிஷம் தங்கம் இதோ அம்மா வந்துடேன் என்ற சாமாதானம் எல்லாம் அதனிடம் எடுபடாமல் அம்மா என்று அனத்திய குழந்தையை தூக்கி கொண்டு பாலை அதர்ஷனிடம் கொடுக்க சென்ற நேரம் தன் அறைக்கு சென்று கொண்டிருந்த அஞ்சலியை பிடித்து இந்த பால அதர்ஷன் தம்பிகிட்ட கொடுக்குறியா பாப்பா தூக்கத்தக்கு அனத்துறா தூங்க வைக்கனும் நீ போறியா உனக்கு உன்னும் சிரமம் இல்லையே என குழந்தையை சாமளிக்க முடியாமல் இடுப்போடு பிடித்து கொண்டு கெஞ்சியவரிடம் இருந்து குவலையை வாங்கி கொண்டவள் ஒன்னும் சிரமம் இல்ல அக்கா நா கொடுத்தறேன் என கூறியதும் திருப்தியாக உணர்ந்தவள் குழந்தையோடு தன் வசிக்கும் அவுட் ஹவுஸ்‌ பக்கம் நகர்ந்து இருந்தாள் சாந்தி..

வீரமா சாந்தியிடம் இருந்து குவலையை வாங்கி இதோ அவன் அறை வரையும் கூட வந்தாயிற்று ஆனால் உள்ளே செல்ல ஏதோ ஒன்று தடுத்ததில் தயங்கி நின்றவளுக்கு இப்படியே ஒடி கூட போயிராலாமா என்ற யோசனையோடு நின்றவள் பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் பாலை டேபில் வச்சுட்டு ஒடிரலாம் என் திடமாக உள் நுழைந்தவளினுள் இன்னும் கூட படபடப்பு நீங்கிய பாடுயில்லை..

அவளும் என்னதான் செய்வாள் அவன் கொக்கி போட்டு இழுக்கும் காந்த கண்கள் விஷமமாக மனதில் ஊடுறுவி சொல்லும் செய்தி சிறியவளை இனிதாக அதிர வைப்பதினால் பெண்மை தயக்கம் கொள்ளுவதாய்...

பூனை நடையிட்டு மெல்ல அறையினுள் நுழைந்தவள் சத்தமில்லாமல் டெபிலில் குவலையை வைத்து விட்டு குடுகுடுவென ஒட எட்டு வைத்த நேரம் தன் முன் சற்று இடைவெளி விட்டு வந்து நின்றவனை கண்டு பட்டென தலை குனிந்து கொண்டு அறை கதவை நோக்கி ஒட துவங்கியவளின் இடையில் தன் நீண்ட கரம் நுழைத்து கிடுக்குபுடி போட்டு ஒர் சுழற்று சுழற்றி தன் நெஞ்சோடு சாய்த்து நிறுத்தியவன்...

அவள் காதோரம் குனிந்து தன் இதழ் அவள் செவியை ஒரச நீ இங்க ஏன் வந்த என கேட்டவனின் இதழ் தன் சேவியை ஒரசியதிலேயே குலைந்து நின்றவள் அவன் பிடிக்கு ஏற்றவாறு மன்பட்டமாக வளைந்து கிறங்கி நின்றவளை கண்டு சிரித்தவன் அவள் காதில் ஊதி மேலும் அவளை கிறக்கியதில் பேச மறந்து நின்றவளிடம் பதில் தேவையில்லை தான் இருந்தும் அவளை சீண்டி பார்க்க உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பு..

அவள் மடலை வலிக்க கடித்து நீ இங்க ஏன் வந்த என கேட்டவனின் செல்ல கடியில் லேசாக கிறக்கம் விலக ப..பா..பால் என டெபிலை கை காட்டிய வார்த்தையை முடிக்க திணறியவளை உருவம் உயர்த்தியவன் ஊட்டி விடு என இடையை இறுக்கி பெண்ணவளை இன்னும் இன்னும் தன்னோடு நெருக்கி கொண்டவனிடம் குலைந்து மலங்க மலங்க விழித்தவள் கேள்வியே புரியாமல் வெறுமென தலையாட்டி வைத்தவள் அறையை விட்டு ஒடுவதுலயே குறியாக இருந்தாள்...

லேசாக அவள் கன்னத்தை கடித்து‌ இதழில் பார்வை பதித்து சம்மந்தமே இல்லாமல் தீடிரென இனி தேவ் உனக்கு ஊட்ட கூடாது புரியுதா என தன் மூச்சு காற்றை அவள் கன்னங்களில் பௌடர் போல் பூசி சிவக்க செய்து வினோதமாக மிரட்டியதில் ஒன்னும் விளங்காமல் உயிருள்ள பொம்மையாக விழித்து ஏன் என்று கேள்வி தொக்கிய விழிகளால் அவனை பாரத்து தலை அசைத்தவளில் விழி மொழியை புரிந்து கொணடவன் அது அப்படித்தான் என அவள் இதழ்களை கவ்வியிருந்தான்...கடைசியாக இக்காட்சசிக்கு தொடக்க புள்ளியாக அமைந்த பால் குவலை கேட்பாரற்று ஆறி போய் டெபிலில் பரிதாபமாக பல்லிலித்தது...


தொடரும்....
 
Last edited:
  • Love
Reactions: Kameswari