• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕30

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
பூக்களின் புடைசூழ தென்றலின் காற்றையும் துனையாக கொண்டு வாசம் பரப்பிய பூக்களின் மத்தியல் செழித்திருந்த புவி அண்ணை நந்தவனமாக உரு மாறிய இடத்தில் இதழில் செழித்த சிரிப்போடு அழுத்தி பதித்தாலும் புவி நோகாத பிஞ்சு பாதங்களை பூமி மேல் மெல்ல உரசி அந்த இடத்தை சுற்றி கொண்டு ஒடி திரிந்தவளின் இடையோடு கை நுழைத்து அவளின் ஓட்டத்தை தடை செய்ததை அடுத்து தன் ஒட்டத்தை தடுத்த கரங்களின் சொந்தகாரனை முகம் திருப்பி அதே சிரிப்போடு எதிர் கொண்டவள் கண்களோ இதழோடு விரிந்து இன்னும் மின்னி சிரிப்பதாய்...

அவளின் முக மலர்ச்சிக்கு குறையாத மலர்ச்சியோடு மிளிர்ந்தவனின் கண்கள் காட்டிய குறும்பில் மூக்கை சுருக்கி வெட்க பாவம் காட்டியவள் பாஷை இன்றி மௌன மொழியில் விழி வழி அவனிடம் பேசி நின்றவளின் மொழி புரிந்து இதழில் கசிந்த குறுநகையோடு பார்த்திருந்தவனின் முக வடிவை தன் கைகளால் பற்றி அவனை நெருங்கும் முன் தன் கையில் பிசுபிசுத்த ஏதோ ஒன்றை இமை சுருக்கி பார்த்தவளின் சுருங்கிய இமை அதிர்ச்சியில் விரந்து பயத்தை அப்படமாக காட்டியது...

தன் விரலில் படிந்த இரத்த திட்டுகளை திகிலோடு பார்த்ததை அடுத்து அவன் முகத்தில் பார்வையை பதிக்க அவனோ கண்களில் மின்னிய மோகன சிரிப்பு மங்கி வலியில் இமை சொருகி தன் முன் பீதியாக நின்றவளை கண்டு சிரிக்க முயன்று தோற்றவனாக கீழே சரிய தொடங்கிய நேரம் நந்தவனமாக தோற்றமளித்த இடம் இடுகாடாக மாறி பூமியை பிளந்து அதன் வழியே நீண்ட கரம் ஒன்று அதர்ஷனை இழுத்து கொள்ள முயல்வதை பார்த்தவள் ஆது என வீலென்று அந்த இடம் அதிர கத்திய நோடி இனிமை முற்றிலுமாக தொலைந்திருப்பதாய்...

அவள் வீல்லென்ற சத்ததில் அவள் பக்கம் படுத்திருந்த அதர்ஷன் அடித்து பிரண்டு எழுந்த அஞ்சலி என அவளை உலுக்கி அவளை கனவில் இருந்து நிதர்சனத்திற்கு இழுத்து வந்தான்...

அறையை நிறைத்திருந்த ஏசி காற்றுக்கு பனியாது உடல்‌ வியர்க்க நிதர்சனம் பிடிப்பட்ட போதும் கனவின் தாக்கத்தில் ஆ..ஆது இர..இரத்தம் முக..முகம எல்லாம் என அவசர அவசரமாக ஒன்றும் பாதியுமாக வார்த்தைகளை பிரசவித்து கைகளால் அவன் முகம் கழுத்து மார்பு என பதட்டமாக தொட்டு தீண்டியவளின் கரத்தை இறுக பற்றி அஞ்சலி ஒன்னும் இல்லை காம் டவும் என்றவனின் வார்த்தையை கிறகித்து கொள்ள முடியாத அளவிற்கு பயம் மூளை மீது படலமாக படர்ந்திருந்தது...

அஞ்சலி ஒன்னும் இல்லடி என குரல் உயர்த்தி கத்திய பின் தான் சற்று நிதானம் அடைய தொடங்கியவளை இழுத்து அனைத்து கனவு கண்டியா என மெல்லி குரலை கேட்டதை அடுத்து அவனை முடிந்த மட்டும் தன்னில் இறுக்கி கொண்டவள் பதில் அளிக்காது போனாலும் புரிந்தது அவனுக்கு...

நேற்று கனவாக தொன்றிய காட்ச்சியையே ஜீரனித்து கொள்ள முடியாது நெஞ்ச தொலையிடுவது போல் அரித்து கொண்டிருக்க அது தொற்ற வைக்கும் கலக்கத்தில் பற்றாகுறை கண்டு நிறைவு செய்வதாக வந்த இன்றைய கனவு மனதை மீச்சம் இன்றி கலக்கத்தில் மூழ்கடித்தது...

தன்னை இறுக்கி கொண்டு தலையை தன் மார்பில் அழுந்த பதித்து இருந்தவளின் தலை வருடி ஒன்னும் இல்லடா என மூச்சுக்கு முந்நூறு அதே வார்த்தை கூறி அவளை சற்று சமன் நிலைக்கு இழுத்து வந்தவனின் மார்பில் இருந்து விலகி கலக்கதோடு அவன் முகம் பார்த்தவள்...

என்ன விட்டு நீங்க எப்பவும் போய்ட மாட்டிங்க தானா என்ற கேள்வியோடு தன்னை பார்த்தவளை கண்டு லேசாக இதழ் வளைத்து நா எங்கடி போறேன் உன் பக்கதுலயே தான் இருப்பேன் போதுமா என்றவனின் பதிலை கேட்ட பின்பும் கூட தலை அசைத்தாளே தவிரித்து முகத்தில் அப்பி கிடந்த பயம் தீர்ந்த பாடியில்லை...

அம்மு என்ன பாரு நீ என்ன கனவு கண்டனு எனக்கு தெரியாது ஆனால் பிராமிஸ் அந்த கணவுல வந்த மாதிரி எதுவும் நடக்காது டிரஸ்ட் மீ என்றவனை பார்த்து...

பயமா இருக்கு ஆது நேத்து இன்னைக்குனு ஒரு மாதிரி கனவு வந்துச்சு என்றவளின் இதழ் மேல் விரல் வைத்து மேலும் அவளின் பேச்சை தடை செய்தவன் என்ன நம்புற தான...

என்றவனின் கேள்விக்கு ஆம் என்பதாக தலை அசைத்தவளை இழுத்து தன் மடியில் போட்டு கொண்டவன் அப்போ எதையும் நினைக்காமல் நிம்மதியா தூங்கு நா எங்கயும் போகல என்றவனை அப்பி கொண்டு படுத்தவளுக்கு அதற்கு பின் தூக்கம் தொலை தூரம் தான்..

அவளின் தூக்கத்தினோடு அதர்ஷனின் தூக்கத்தையும் ஆடி ஆப்பராக பறித்து கொண்ட கலக்கம் அது மட்டுமே இப்போது இருவரின் நெஞ்சில் சர்வாதிகாரம் புரிவதாய்..

மற்ற உறவுகளை போல் இவனையும் இழந்து விட கூடாது என அவனை இறுக்கி கொண்டவளின் பயமே அதர்ஷனின் மனதில் பயத்தை தொற்றுவிக்க‌ போதுமானதாக இருந்தது...கனவிற்கே இத்தனை ஆடம் காணும் இவளில் சின்னஞ்சிறு இதயம் தனக்கு தவறுதலாக‌ ஏதோ நடக்கும் பட்சத்தில்‌ தாங்குவாளா என்ற என்னம் அவன் தூக்கத்தை அடித்து விரட்டி சுய பட்சாதாபத்தில் ஈடுப்படுத்தியது...

காலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விடிந்து அன்றைய நாள் தொடங்கியிருந்தது...

எல்லோரும் அலுவலகத்தில் தம்தம் வேலையில் ஈடுப்பட்டிருக்க அப்போது வழக்க செயலாக வீர் அஞ்சலிக்கு அன்றையை வேலையை பட்டியலிட்டு கொடுத்து கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கனவனித்த ஒரு ஜோடி கண்கள் அவன் தலையின் விசைக்கு சுழன்று பயனித்த விழிகளில் நிறைந்து கிடந்த ஏக்கமோ சுவாரசியமோ ஏதோ ஒன்று வீரின் இதயத்திற்குள் குறுகுறுப்புட்டி நிமிர செய்த நேரம் அந்த ஒரு ஜோடி கண்கள் அவன் பார்வையில் சிக்காது மாயமாகியது....

அன்று அன்னிய பார்வையோடு அஞ்சலியை விலக்கி நிறுத்திய பின் அவள் அப்பாவித்தனமாக முகத்தை வைத்து கொண்டு தன் கண் பார்க்க வலம் வருவதை கண்டும் காணமலும் இருந்து கொண்டாளும் கொஞ்சம் அவளின் பாவம் போலான பாவம் அவளை கரைத்தது என்பதே உன்மை..

அன்று அதர்ஷன் கொடுத்த நம்பிக்கையில் அஞ்சனாவை கரைக்கவே பாவமான முஞ்சியை தத்தெடுத்து கொண்டு அஞ்சனாவை சுற்றி வந்ததின் தாக்கமாக ஒரு கட்டத்தில் கோபம் இலகி போனாலும் உடனே சேர்ந்துப்போம் வா என கை குலுக்கி கொள்ளாது கெத்தாக சுற்றியவள் இறுதியாக அவளை பளார் என அறைந்து இனி எதுவும் மறைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் கூடி கொண்டதில் அஞ்சலிக்கு ஏகபோக குஷி...

இருவரும் பழைய படி நெருங்கி பின் சரலமாக தான் அதர்ஷன் வீட்டிற்கு வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாது அஞ்சானாவிடம் ஒப்பித்தவளுக்கு தன் மொத்த கதையையும் கூறி முடிக்க நேரம் போதவில்லை என்பதே குறையாக இருந்தது...


காலையில் இருந்து படபடப்பாக வலம் வந்த தேவாவிற்கு இதயத்திற்குள் பெரிய பிரளயமே வெடிப்பதாக இதயம் அதர அமர்ந்திருந்தவனுக்கு அதர்ஷனிடம் தான் அறிந்து கொண்ட செய்தியை கூறும் முன்பே விட்டால் புலோகத்தை விட்டு சொர்கலோகத்து தாவி விடுபவன் போல் இருந்தவனுக்கு வியர்த்து கொட்டியது...

அவனின் தவிப்பை முன்மே கண்டிருந்த அதர்ஷன் என்ன ஏது என கேட்காமல் போனாலும் அவனின் படபடப்பிற்கான காரணத்தை அறிந்தே வைத்திருந்தான்..

கூறி தானே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அதர்ஷன் முன் போய் நின்றவனுக்கு நாக்கு வேறு நேரம் புரியாது மேல் அன்னத்தில் ஒட்டி கொண்டதில் பேச்சு வராது நின்றவனை உறுத்து பார்த்தவன் என்னாச்சு தேவா சீக்கிரம் சொல்லு என அவசர படுத்தியவனிடம் பட்டென விஷயத்தை போட்டு உடைக்கும் தைரியம் இன்றி முழித்தவன் கூற வந்த விஷயத்தை அதர்ஷனே கூறி முடித்து சரி தானே என கேட்டு வைத்ததில் பாவம் பிஞ்சு இதயம் படைத்த தேவாவின் இதயம் பஞ்சு மூட்டை போல் டம் என வெடித்து போனது...

துருதுருப்பாக எல்லொருக்கும் அசால்டாக ஷாக் கொடுத்து கூலாக செல்பவனின் நிலை இன்று அதர்ஷனை கூறியதை கேட்டு எதிர்பதமாக போனது...

பின் ஒருவழியாக அதிர்ச்சியில் இருந்து மீண்டவன் அண்ணா இதுனால நம்ம அஞ்சுக்கு தான பிரச்சனை என்றவனின் கேள்வியில் அவனை பார்த்து...

பல்லை பிடுங்குன பாம்பு தேவா அவன் அவனால என்ன பிரச்சனை வந்துற போகுது என சாகவாசமாக கூறியவனை பார்த்து...

அண்ணா நீங்களே அஞ்சலிய சுத்தி இருக்க பிரச்சனைய பெருக்குறிங்களோனு தோனுது அவன் பல் பிடுங்குன பாம்பா இருந்தாலும் பாம்பு தான அதுவும் இல்லாம அவன் ஒரு சைகோ அண்ணா... அஞ்சலிக்கு இதுனால எதாவது ஆச்சுனா என்ன பண்ணுறது என்று அவன் கேள்வியோடு முடித்திருக்க...

அவன் கடைசி வாக்கியத்தில் சீறி எழுந்த அதர்ஷன் தேவா போதும் நிறுத்து உன்ன விட அஞ்சலி எனக்கு ரொம்ப முக்கியம் அது உனக்கே கூட தெரியும் அதுனால பாத்து பேசு கண்டிப்பா என்னோட அம்முவுக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன் என அத்தோடு அப்பேச்சை கத்தரித்தவன்.. நீ போய் வேலைய பாரு என தேவாவையும் அனுப்பி வைத்திருந்தான்...


கடைசியாக தேவா முன் நிறுத்திய கேள்வியே அவன் காதில் ரீங்காரம் இட்டு மூலையை குடைந்தது.. ஒருவேலை அஞ்சலிக்கு எதாவது ஆச்சுனா என்று அவன் கேட்டப்படி ஏதாவது என்றால் என நினைக்கவே யாரோ துடிக்கதுடிக்க உயிரை வெளியே உருவி எடுப்பதை போல் துடித்து போனான்..

தலை வலி வாட்டி எடுக்க அப்படியே கதிரையில் பின்பக்கமாக தலை சாய்த்து அடுத்த வேலையில் கவனம் செலுத்த மறந்து கண் மூடி அமர்ந்து கொண்டான்...

அன்நேரம் ஏதோ ஓர் பைலை தூக்கி கொண்டு அவன் அறைக்குள் நுழைந்த அஞ்சலி அவன் தலை சாய்த்து கதிரையில் கண் மூடி கிடப்பதை கண்டு பைலை மெஜையில் வைத்துவிட்டு மெல்ல அவனை நெருங்கி சுருங்கிய அவன் இமையை வருடி விட்டு இதமாக தலை பிடித்துவிட தொடங்கினாள்...

அவள் சபரிஸத்தில் சுகமாக சிலிர்த்து எழுந்தவனுக்கு முகத்தில் படர்ந்த குழப்ப ரேகையை தாண்டி மலர்ந்து போனான்...

மனதிற்கு இதம் வேண்டி அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டு கழுத்தில் முகம் புதைந்து கொள்ள..

அதில் கூசி சிவந்தவள் விடுங்க ஆது யாராவது வந்துற போறாங்க என்றவளை மேலும் இறுக்கி கொண்டு..கொஞ்ச நேரம் அம்மு பீளிஸ் என்ற பின் நகராது இருந்தவளை செல்லமாக கூச வைத்ததவனின் சீண்டலில் கரைய மனம் துடித்தாலும் இருக்கும் இடம் பெண்மை விழித்து கொள்ள செய்ததில் தன் கழுத்தோரம் சாய்ந்து இருந்தவனை விலக்க முயன்று தோன்றவளாக டேய் பொருக்கி எழுந்திரிடா என கூறியதை கேட்டு...

பட்டென அவள் தோளில் இருந்து விலகி யாருடி பொருக்கி என்றவன் அப்போதும் சில்மிஷத்தை நிறுத்தாது வாய் கூடி போச்சுடி உன்னக்கு இருடி உன் வாய குறைக்குறேன் என அவள் இதழ் நோக்கி குனிந்த நேரம் அவள் திரும்பியதில் இதழ்கள் அவள் கழுத்தில் அழுத்தமாக விழுந்திருக்க அங்கே கடித்து வைத்தவனின் தலை நகற்த்த முயன்றபடி சாரி ஆது பொருக்கி சொல்லமாட்டேன் என குழுங்கி சிரித்தவளை பாவம் பார்த்து விட்டிருந்தான்...

இவர்கள் இங்கே சரித்து மகிழ்ந்திருக்க அங்கே ஒரு புயல் பெண் உருவில் உருவெடுத்து இவர்களுக்கு இடையில் மையம் கொள்ள காத்திருந்தது...


தொடரும்....
 
Last edited:
  • Love
Reactions: Kameswari