• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕40

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
83
89
18
Madurai
வாழ்வே சூனியமாகியதை போல் எங்கோ வெறிக்க அமர்ந்திருந்தவனின் சட்டை முழுவதும் இரத்ததில் சலவை செய்தது போல் இரத்த நிறம் கொண்டிருந்தது...

கண்ணீர் கண்களை தாண்டி கன்னதில் கோடிழுத்து நனைப்பதை உணர்ந்தாலும் துடைக்காது அப்படியே நிலை மாறாது அமர்ந்திருந்தவனின் கண் முன் அன்று நிகழ்ந்த நிகழ்வு காட்ச்சியாக விரிந்து போனது....

அவள் கழுத்தோரம் சரிந்திருந்தவன் மெல்ல இதழ் குவித்து அவள் காதில் ஊதி தன் மூச்சுகாற்றால் கோலமிட்டப்படி ஐ லவ் யூ அம்மு என தலை கோதும் மெல்லிய காற்றாய் வார்த்தையை உதிர்த்த போதும் அந்த வார்த்தையில் தென்பட்ட அழுத்தத்தில் சிலிர்த்து எழுந்திருந்தாள் பெண்ணவள்...

அவன் கூறியதற்கு இதழில் தவழும் மலர்ந்த சிரிப்போடு வேறுமென தலை அசைத்து கேட்டு கொண்டவளின் காதிற்கு மிக நெருக்கத்தில் தன் இதழ் பொருத்தி கொஞ்சம் ஹை பிட்ச்சில் ஐ லவ் யூ டி என கிட்டதட்ட அவன் கத்தியதில் காதை மூடி கொண்டவள் ஏன் கத்துரிங்க எனக்கு காது கேட்கும் என்றவளை கண்டு செல்லமாக முறைத்து தள்ளினான்...

அப்போ திருப்பி சொல்லுடி என்றவனை பார்த்து இப்போதும் சிரித்து வைத்தாளே அன்றி பதிலுக்கு ஐ லவ் யூ என கூறியிருக்கவில்லை... அதில் அவள் கழுத்தோரம் நறுக்கு என கடித்து வைத்து சின்ன பிள்ளை போல் வீஞ்சி கொண்டு திரும்பி படுத்து கொண்டவனின் காதிற்கு பக்கத்தில் நெருங்கி ஹஸ்கி வாய்ஸில் மாமா மாமா இங்க பாருங்க என்றவளின் அழைப்பு உள்ளுக்குள் கூடை பூவை கழ்த்தியதை போல் ஆனந்தம் கொண்டளும் இன்னும் வீஞ்சி கொண்டே படுத்திருந்தவனின் காதிற்குள் ஐ என அவள் எதையோ சொல்லி முடிக்கும் முன் பட்டென திரும்பி படுத்து கொண்டு தன் பக்கவாட்டில் கிடந்தவளின் இடையினோடு கை விட்டு தூக்கி தன் மேல் போட்டு கொண்டவன் ம்ம் சொல்லு ஐ என ஆர்வமாக கேட்டவனிடம்...

அதுவா ஐ வான்ட் டூ சிலீப் என்று கூறியதில் சின்ன பிள்ளை ஆசை ஆசையாக பொத்தி பாதுகாத்த பலூன் போல் அவன் முகம் புஸ் என தொங்கி போனது...

ஒரு கட்டத்திற்கு மேல் அவளிடம் கெஞ்சலில் இறங்கியவன் என் தங்க கட்டி தான நீ என் செல்லம் தான நீ சொல்லுமா என அவள் கீழ் உதட்டை நெருக்கி பிடித்து கொண்டு பீளிஸ் என கண்களால் கெஞ்சியவனின் செயலை சொட்டு விடாது வாரி தன் மனப்பெட்டகத்திற்குள் சேர்த்து வைத்தவள் தன் இதழை நெருக்கிய அவன் வரலை கடித்து வைத்ததில் ஆஆ..என வலியில் கை உதரி கொண்டு போடி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் நானும் இனிமேல் உனக்கு சொல்ல மாட்டேன் என்றவன் அவள் இதழில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு குப்பற படுத்து கொண்டவனை கண்டு சிரித்திருந்தாள் அஞ்சலி...

பல உச்சங்களை தொட்ட தொழில் அதிபன் அவளின் வாய் வழியே ஐ லவ் யூ என்ற வார்த்தையை கேட்க பெரிய சைஸ் குழந்தையாக சினுங்கியதை பார்த்து மனதோடு கர்வம் கொண்டு சிரித்தவள் அவன் மேல் படுத்து கொண்டதில் அவளை தோள்பட்டையை அசைத்து தள்ளிவிட்டவன் நீதான் சொல்ல மாட்டேனு சொல்லிடேல போ என அதிகமாக முறிக்கி கொண்டவனின் வார்த்தைகளும் ஷேட்டைகளும் அவள் நீளமாக விளக்கிய வார்த்தையில் அடங்கி போனது...

என் லவ்வ செயல்ல மொத்தமா காமிச்சுட்ட அப்பறம் எதுக்கு வாய் வார்த்தையா சொல்லனும் ஆது ஒரு மூன்று வார்த்தைக்குள் என்னோட மொத்த காதலும் அடங்குதுனா அது நா செத்த அப்பறமா தான இருக்க முடியும் ஆது.. அப்போ என் உயிர் முழுசும் லவ்ங்கற வடிவம் கொண்டு என் ஆது உயிருக்குள் அடங்கிடும் என்றவளை ஒரு வினாடி திகைத்து பார்த்தவன் பின் நேராக படுத்து கொண்டு அவளை தன் மேல் கிடத்தி இறுக்கி கொண்டவன் அவள் வாய் வழியே இப்படி ஓர் வளக்கத்தை எதிர்பாராததால் அவள் விளக்கம் அவன் நெஞ்சுக்குள் ஏதோ ஓர் நெருடலை கிடத்தி பயத்தை தொற்றுவித்தது....

கண்களில் வழிந்த கண்ணீர் கன்னத்தையும் தாண்டி சட்டை காலரை நனைத்திருக்க அப்போதும் நிலை மாறாத அப்படியே அமர்ந்தவனின் செவியில் அப்போ என் உயிர் முழுசும் லவ்ங்கற வடிவம் கொண்டு என் ஆது உயிருக்குள் அடங்கிடும் என்ற வார்த்தை எதிரொலித்ததோடு அந்த விளக்கத்தின் அர்த்ததையும் ஆழமாக புரிய வைத்திருந்தது அவனுக்கு...


தன் கரங்களில் அடங்கி கொண்ட பெண்ணவளின் வயிற்றில் நேஹா கத்தியை இறக்கிய உடன் ரத்தம் கோப்பளிக்க வெளியேறியதில் வலியில் ஆஆ என இனஸ்வரத்தில் முனங்கி வயிற்றை அழுந்த பிடித்து கொண்டு அவன் கரங்களில் கடைசியாக அவனை பார்த்து விட வேண்டும் முனைப்போடு கடிணப்பட்டு தன் கைகளால் அவன் முகத்தை வருடி ஏதோ கூற வந்தவள் ஆ என வார்த்தைக்கு பின் எதுவும் கூற முடியாமல் அவன் கரங்களில் தலை தொங்க சரிந்திருந்தாள் அஞ்சலி...

முதல் சந்திப்பின் போதும் இப்படி தானே பூவி குவியலாய் தன் கரங்களில் சரிந்திருந்தாள் என நினைக்கையில் நெஞ்சம் ரணப்பட்டு போனவன் அதன் பின் தன்னை சமாளித்து கொண்டு அவளை மருத்துவமனை தூக்கி வந்து அனுமதித்தது எல்லாம் தனி கதை...


அவளை எமர்ஜென்சி வார்டில் அனுமதித்து விட்டு அவளின் பின்னோடே செல்ல எத்தனித்தவனை கட்டுப்படுத்தி அவனை வெளியேற்ற அங்கிருந்த செவிலியர் தான் படாத பாடு பட்டு போயினர்...


டாக்டரும் நர்சும் ஆஞ்சலியை அனுமதித்த அறையில் இருந்து வருவதும் போவதுமாக இருக்க மறுபக்கம் அதர்ஷனோ எங்கையோ பார்வையை வெறிக்க விட்டு சிலையாக சமைந்திருந்தான் அவன்...


இடிந்து போய் அமர்ந்து இருந்தவனை மெல்ல நெருங்கி இருந்த வீர் அவன் தோளை லெசாக உலுக்கி அண்ணா என்று அழைத்ததில் சுயம் பெற்று திடுக்கிட்டு பார்த்தவனின் தோள் தட்டி ஒன்னும் இல்லை பதராதிங்க அண்ணா என அவன் கரங்களை பற்றி அழுத்தி அவனை சற்று சமாதானம்‌ செய்து அடுத்து அவன்‌ வந்த விஷத்தை கூற தொடங்கினான்...

அண்ணா தேவா கண் முழிச்சுட்டான் அவனுக்கு ஒன்னும் இல்லை என கூறியதற்கு வேறுமென தலை அசைத்து கேட்டு கொண்டவனிடம் மேலும் தொடர்ச்சியாக ஆனா கால்ல நல்ல அடிப்பட்டதுனால எப்பையும் போல எழுந்து நடக்க மட்டும் ஒன் ஆர் டூ மன்த்ஸ் ஆகும்னு சொல்லிருக்காங்க என கூறியதற்கும் பெரிதாக ஏதிர்வினை ஆற்றாமல் சரி என மட்டும் பதில் அளித்தவன்‌ பின் சரி நீ போய் அவன் கூட இரு நா இங்க இருக்கேன் என கூறியவனிடம்...

அஞ்சனா வந்து இருந்தவுங்க இப்போ அவன் பக்கத்துல தான் இருக்காங்க அதுனால நா இங்கையே இருக்கேன் என கூறியதற்கும் மறுப்பின்றி தலை அசைத்தவன் பழைய நிலையில் வேருன்றி போனான்...

முகத்தில் வேதனையும் சோகமும் அப்பி கிடக்க குற்ற உணர்ச்சியில் நத்தையாக தனக்குள் சுருண்டு கொண்ட தேவாவை அவனுக்கு நேர் எதிர் இருக்கையில் அவனின் முக சுனக்கத்தை கவனித்தபடி அமர்ந்திருந்த அஞ்சனாவிற்கும் அஞ்சலி இப்பிடியோரு நிலையில் கிடப்பது வருத்ததை தொற்றுவித்தோடு அதற்கு துபமாக தேவாவின் முக பாவமும் அவளுக்குள் ஏதையோ உருகுலைக்கும் உணர்வை ஏற்படுத்தியது...

எப்போது குறும்பு கொப்பளிக்கும் கண்களோடு துருதுரு செல்ல கண்ணனாக வழய வருபவனின் இப்போதைய வாடிய முக பாவத்தை காண சகிக்காதவள் அவனை மெல்ல நெருங்கி சார் எல்லாம் சாரியா போய்ரும் தெம்பா இருங்க...இப்போ இடிஞ்சு போயிருக்க அதர்ஷன் சாருக்கு நீங்களும் வீர் சாரும் தான் ஆறுதல் அப்படி இருக்கும் போது நீங்களே இப்படி இருந்தா அவருக்கு யார் ஆறுதல் சொல்லுறது அப்பறம் அஞ்சலி முழிச்சு வரும் வரைக்கும் பாத்துக்குறது என கூறியவளை ஒரிரு நொடி நிமிர்ந்து பார்த்தவன் பின் எந்த ஒரு பதிலும் இன்றி அவள் இடை பற்றி இழுத்து தன் பக்கம் நிறுத்தி கொண்டு தன் தலையை அவள் வயிற்றில் அழுத்தி கொண்டவன் மறு நொடி கதறி இருந்தான்...

அவ நிலைமைக்கு நான் தான காரணம் அண்ணா அப்போவே சொன்னாங்க அஞ்சலிய மைப்படுத்தி எதுவும் பண்ண வேண்டாம்னு நான் தான் கேட்கலை எங்க இப்போ விட்டா அடுத்த அவுங்களுக்கான பதிலடிய கொடுக்கவே முடியாம போயிருமோனு நினைச்ச நான் அஞ்சலிய பத்தி யோசிக்க தவறனது தப்பு தான் அஞ்சனா அப்போ என்ன அண்ணானு கூப்பிட்ட பொண்ண நா ஏமாத்துன மாதிரி தான அர்த்தம் என அவன் தலையை அவள் வயிற்றில் முட்டி அழுததில் தன்னால் அவள் கரங்கள் அவன் தலைக்கு தாவி கோதி ஆறுதல் படுத்த தொடங்கியது...

அவன் தலையை கோதியபடி ஒன்னும் ஆகாது அஞ்சலி கண்டிப்பா சீக்கிரமே முழிச்சுப்பா நீங்க கலங்காதிங்க என கூறியவளிடம் இன்னும் ஒன்றி கொண்டவன் குழந்தையாக தேம்பியபடி நெத்து அழகா பூ மாதிரி சிரிச்ச பொண்ணு இன்னைக்கு உயிர் பிழைப்பாளானு தெரியலை என்றவனை தன்னாள் முடிந்த மட்டும் ஆறுதல் கூறி அமைதி படுத்தி அவனை மெத்தையில் சாய்த்து உறங்க வைத்தவள் அவன் அருகிலேயே அவன் கரங்களை தன் கங்களுக்குள் அதக்கியபடி அமர்ந்து கொண்டாள்...

அஞ்சலிக்கு இது பாதகமாக முடியும் என முன்மே அறிந்திருந்தாள் இன்னும் கவனமாகவே செயல்பட்டிருப்பான் தேவா...ஆனால் இங்கு அவன் நினைத்ததில் இருந்து நடந்து முடிந்த விஷயம் வரை அனைத்தும் தலை கீழாய் போனதில் மானசீகமாக உடைந்து போனான் தேவா...

அதர்ஷனின் கருப்பு பக்கங்களுக்கு சொந்தகாரியான நீலிமா மேல் கொலை காண்டில் சுற்றியவன் அவளை கவிழ்த்து விடும் நோக்கில் தக்க நேரத்திற்காக காத்திருந்தான்...

சரியாக அன்னேரம் செல்வாவின் வஞ்சக பார்வையை அதர்ஷன் பக்கம் நீலிமா திருப்பி விட்டது தேவாவிற்கு சாதகமாக போக செல்வாவின் கூட்டத்திற்குள்‌ நேக்காக புகுந்து அவனுக்கு நேராகவே நின்று ஆட்டத்தை களைத்தவன் அவனோடு சேர்த்து நீலிமா மற்றும் அவள் தம்பியையும் கூட்டாக கவிழ்த்தி தரை மட்டமாக்கும் முயற்ச்சியில் களம் இறங்கியவன் செல்வாவிற்கு சாதமாக செயலாற்றுவதை போல் கொஞ்ச கொஞ்சமாக சரித்திருந்தான் தேவா...


அதர்ஷனுக்கும் தேவாவின் மனதில் ஓடும் தீட்டத்தின் சாரம்சம் எல்லாம் அறிந்திருந்த போதும் முதலில் கண்டுகொள்ளாதவன் பின் சில நாட்களில் அஞ்சலிக்கு பாதகம் வருவது போல் இருக்கவும் உள்ளுற பயம் அப்பி கொள்ள தடுமாறி போனான்..

அதான் அன்று தேவாவிடம் இது எதுவும் வேண்டாம் என வளியுறுத்தினான்...ஆனால் தான் நிற்கதியாக நின்ற போது தந்தை ஸ்தானத்தில் தனக்கு அடைக்களம் கொடுத்து தன்னை வளர்த்து விட்ட அதர்ஷனின் நிம்மதியை குழைப்பதையே பரதான நோக்கமாக கொண்டுள்ள நீலிமா ஆன்ட் கோவை அப்படியே விட மனம் இல்லாது அதர்ஷனை திடப்படுத்தி காரியத்தை தொடர்ந்திருந்தான்...


செல்வாவின் அருகில் இருந்தே அவன் ஆட்டத்தை ஒடுக்கி களைத்தவன் மறக்காமல் அனைத்து தகவலையும் ஒப்புவித்திருந்தான்..


செல்வா பெண்களை கடத்தி விற்பதில் பெயர் போனவனை விழங்கி நின்றதை தான் முதலில் கூடை கூடையாக மண்ணை அள்ளி தட்டினர்கள் இருவரும்...


அனைத்தும் நினைத்து போலவே நடந்தில் விதி தன் தலையிடு இல்லாமல் எப்படி என நேஹாவின் உருவில் இடைப்புகுந்து ஆட்டத்தை சூடும் பிடிக்க வைத்தது...


விதியின் சறுக்கலாக இத்தனை நாட்கள் செல்வாவின் முன் நின்றே அவன் கணகளில் விரலை விட்டு ஆட்டுவித்தவன் செல்வாவிடம் தொக்காக சிக்கியதில் அவனை கொல்லும் நாள் வரை அவனை ஆட விட்டு வெடிக்கை பார்த்ததை தேவா அறியாது போனது யார் பிழையோ...


அஞ்சலி கடத்தப்பட்ட செய்தி அறிந்ததும் தேவா வேகமாக கிளம்பி சென்று நின்ற இடம் செல்வாவின் இடம் தான்....அப்போது அஞ்சலி அனுபவித்த துன்பங்களை கண்டு கலங்கிய கண்களுக்கு சொந்தக்காரனும் அவன் தான்...

தேவா அங்கு வந்ததும் அவனை பார்த்திருந்த செல்வாவின் பார்வையில் தெரிந்த மாற்றத்திலேயே இவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என அறிந்து கொண்டவன் பயந்து பின் வாங்காது தில்லாகவே அவனுக்கு நேருக்கு நேராக இன்று அவன் பார்வையை சமாளித்திருந்தான் தேவா...

வாங்க வாங்க உங்களை தான் இவ்வளவு நேரம் எதிர்பாரத்தேன் நீங்க என்னடானா இவ்வளவு லேட்டா வரிங்க என நக்கலடித்தவனை பார்த்து தெரிஞ்சு போச்சா பாஸ் ஹப்பாடா இத்தனை நாளா கேட்டவன் மாதிரி நடிக்கிறது திரில்லா இருந்தாலும் கழுதை அது நமக்கு சரியா வர மாட்டிக்கிது பாஸ் இப்போ உங்களுக்கே தெரிஞ்ச அப்பறம் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டாம் பாருங்க இப்போ தான் நிம்மதியா இருக்கு என்றவனின் கேலி பேச்சில் வெறி கொண்டு அவன் தாக்க வரும் முன் வெற்றி அவனை தாக்கி இருந்தான்...

சரியாக பின் மண்டையில் பலமாக தாக்கி அவனை சுயநினைவை இழக்க வைத்ததை தொடர்ந்து தேவாவை வெழுத்தவன் செல்வாவிற்கு தான் ஒரு ஆகச்சிறந்த விசுவாசி என்பதை நிருபித்திருந்தான் வெற்றி...


உடலில் சிறு உயிர் மட்டுமே மிஞ்சிய நேரம் வெற்றியை தடுத்த செல்வா அவனை முழுதாக கொன்று தீர்க்காமல்
தன் கட்டுபாட்டில் வைத்து கொண்டதன் நம்பிக்கையில் தான் அதர்ஷனிடம் உனக்கு வேண்டப்பட்ட இரண்டு உயிர் என்கிட்ட இருக்கு என கூறி தன்னை காத்து கொள்ள முயன்றது...

ஆனால் அதர்ஷன் அவன் முன் நிற்க்கும் முன்பே தேவாவை வீர் மூலம் மீட்டு விட்டது செல்வா அறியானே...


இதையெல்லாம் நினைத்தப்படியே கண்களை மூடி மெத்தையில் சரிந்திருந்த தேவாவை பார்த்த படி அவனுக்கு ஆறுதலாக அஞ்சனா அவன் அருகில் அமர்ந்து கொண்டதை தொடர்ந்து அங்கே அதர்ஷனுக்கு ஆறுதலாக வீர் அவன் பக்கம் அமர்ந்திருந்தான்...


ஏற்கனவே தளர்ந்து அமர்ந்து இருந்தவனின் தலையில் இடியாக இறங்கியது அஞ்சலி அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர் சொன்ன செய்தி...


தொடரும்...
 
Last edited: