• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕42

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
83
89
18
Madurai
ஆசை காட்டி பார்த்தாயிற்று கொஞ்சியும் கெஞ்சியும் கூட பார்த்தாயிற்று இதற்கு அவளை மீட்டெடுக்கும் வழி தெரியாது திண்டாடி போனவனும் கிட்டதட்ட அவளுடனே உடன்கட்டை ஏற ஆயத்தமாகி இருந்தான்...

அம்மு என முனங்களாக அழைத்து அவள் கரங்களை இறுக பற்றி கொண்டு அதில் தலை சாய்த்திருந்தவன் மரித்து போனானோ என்னும் விதமாக அசைவற்று படுத்து கிடந்தான் அதர்ஷன்...

தன்னை சூழ வந்த உலகம் நின்றதாய் உணர்ந்தவனுக்கு மறுபுறம் புதிதாக ஓர் உலகில் சஞ்சரிப்பதாய் தோன்ற அந்த நிலையை புரிந்து கொள்ளும் முனைப்போடு பேந்த பேந்த விழித்தவனின் பாதையில் மறைந்த போன அவனவளின் காலடி தடத்தை கண்டு பூவி கூட ஆனவமாய் சிரிப்பதாய் பிரம்மை ஏற்பட்ட குழப்பி போனான் அவன்...

என்ன இடம் இது என் அம்மு எங்க என பரிதவித்தவிப்போடு நிலையை உணர்ந்து கொள்ளும் முனைப்பை தாண்டி இப்போது அவளை தெடுவதில் படு முனைப்பாய் பறந்து விரிந்த அந்த காலி இடத்தில் எங்கேங்கோ ஒடி திறிந்தவனின் ஒட்டம் கேட்ட ஏதோ ஓர் அசரீரி குரலில் தடைப்பட்டு போனது....

உன்னிப்பாக சத்தம் கேட்ட திசையில் அவன் தன் காதுகளை கூர்மையாக்கி கொண்ட நேரம் நா எங்க போறேன் உடம்புலா பயங்கர வலி அதுனால கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதுக்குனு என்ன விட்டு இப்படி வருவிங்களா என கண்டித்து கேட்ட குரலை வைத்து குரலின் சொந்தகாரியை கண்டு கொண்டவன் அம்மு அம்மு என பரிதவித்து சுற்றிலும் கண்களை அழைய விட்டவன் செவிக்கு தரிசனம் அளித்தவள் கண்களுக்கு தரிசனம் தர மறுத்திருந்தாள் அஞ்சலி...

நா எங்கடி போனேன் உன் கிட்ட தான இருக்கேன் நா மட்டும் உன்ன விட்டு எங்கடி போறது என்றவனின் பதிலை மறுதலித்தவள் சும்மா சொல்லாதீங்க அப்போ ஏன் என்ன விட்டுட்டு இவ்வளவு தூரம் வந்திங்க என்றவளின் பேச்சில் புரியாது விழித்தவன் புரியலை டி என்றவனிடம்

நா எப்படி உங்களை தனியா தவிக்க விட்டு போவேன்னு நீங்க நினைச்சிங்க ஏன் எனக்கு தெரியாதா என் ஆதுக்கு என்ன வேணும் என்ன வேண்டாம்னு ஆனா உங்களுக்கு எனக்கு என்ன வேணும்னு தெரியலை அதான் ஆளுக்கு முதல்ல நா வரேன் வரேன்னு செத்து போனிங்களா உங்களுக்காக நா போராடி வந்தது எல்லாம் வேஸ்ட் அப்படி தான என்றவளின் கூற்றை கேட்டு அதிர்ந்தான் அதர்ஷன்

என்னது நா செத்துடேன்னா என அதிர்ச்சியில் உச்சத்தில் கத்தியவனை தொடர்ந்து கேட்ட அஞ்சலியின் சத்தமும் மறைந்திருக்க துடித்து போனான் அவன்‌ கடவுளே என்ன பண்ணி வச்சுருகிங்க நா செத்தா கூட என் அம்மு கூட தான்‌ இருக்கனும்னு தான கேட்டேன் ஆனா நீங்க என்ன மட்டும் எதுக்கு இங்க அழைச்சுட்டு வந்திங்க என மேலே அன்னாந்து பாரத்து கடவுளிடம் நியாயம் கேட்டு நின்றவனுக்கு‌ இனி தன்‌ அம்முவிடம்‌ போய் சேர வாய்ப்பே இல்லையா என தவித்து போனான்...


பாலைவனம் போல் காட்ச்சி அளித்த இடத்தில் தனித்து நின்றவனின் தோளை தொட்ட ஒரு கரம்‌ அவன் திரும்பிய உடன் கலகலவென சிரித்திருந்தது அந்த கரங்களுக்கு‌ சொந்தமான அந்த உருவம்...

அந்த கரங்களுக்கு சொந்தமான உருவத்தின் முகத்தை பார்க்க முடியாத அளவுக்கு கண்கள் கூசி போக அவசர அவசரமாக கண்களை தெய்த்து விட்டு கொண்டு பார்த்த போதும் அதே நிலை தான்...

யார் நீங்க நீங்க தான் என்ன இங்க கூட்டிட்டு வந்திங்களா என்றவனிடம் ஆம் என்பதாய் தலை அசைத்த அந்த உருவத்தின் முகத்திற்கு முன் நிலவை நிறுத்தியது போல் முகத்திற்கு பதில் வெளிச்சமே அதர்ஷன் கண்ணிற்கு தெரிந்தது...‌

நா என் அம்மு கிட்ட போகனும் என குழந்தை போல் சினுங்காத குறையாக கூறியவனிடம் ஒருவழியாக வாயை திறந்து பதிலை உரைத்திருந்தது அந்த உருவம்...

உனக்கு தான் நேரம் குறைய குறைய‌ நம்பிகை குறைச்சு போச்சே அப்போ அதே மாதிரி‌ ஒரு நாள் நீ அவ மேல வச்ச பாசுமும்‌ குறைஞ்சு ஏன் மறந்து கூட போயிரும் என்றதில் அப்படி எல்லாம் இல்லை அவ தான் என்னோட எல்லா உணர்ச்சிக்கும் அடித்தளம்ங்கற போது அவ மேல எப்படி அந்த உணர்ச்சி பற்றாகுறையா போகும் நா அவகிட்ட போகனும் என்ன விடுங்க என்றவனை கண்டு அந்த உருவம் சிரித்திருக்கும் போலும் முகம் இன்னும் பிரகாசமாக மின்னியது அந்த உருவத்திற்கு...

வீடு கட்டி முடிச்ச அப்பறம் யாரும் அடிதளம் தான்‌ இவ்வளவு பெரிய கட்டிடத்தை எழுப்பி இருக்குனு உணர்ந்து நன்றி கடனா காலால மிதிக்காம கைய ஊனி போகமாட்டாங்க அதர்ஷா அதே மாதிரி தான் அவளும் உனக்கு...

யாரும் கையை ஊனி போகமாட்டாங்க தான் ஆனா யாரும் அத உடைச்சு சந்தோஷ படமாட்டாங்ளே அந்த மாதிரி அவளுக்கு நா எனக்கே தெரியாம எதாவது வலி கொடுத்தாளும் உடைய விடாம தாங்கிப்பேன் என்றவனின் உருதியான பேச்சிற்கு பின் எந்த கேள்வியும் இன்றி அப்போ நீ உன் அம்மு கிட்ட போயே ஆகனும் அப்பிடி தான...

ஆமா சீக்கிரம் அனுப்புங்க நேரம் போய்கிட்டே இருக்கு அப்பறம் அவளும் என்ன தேடி இங்க வந்துருவா என்று அவன் கூறிய பின் அவனை தன் பலம் கொண்ட மட்டும் ஒங்கி தள்ளியிருந்தது அந்த உருவம்...

அந்த உருவம் தள்ளிய அடுத்த நொடி அடித்து பிடித்து எழுந்த அதர்ஷனுக்கு தான் உயிரோடு தானே இருக்கிறோம் என்ற சந்தேகம் மேல் எழும்பியதில் தன்னை அழுத்தமாக கிள்ளி கொண்டு வலியை உணர்ந்த பின் தான் ஆசுவாசம் அடைந்தான் அவன்...

பின் வேகமாக தலை திருப்பி அஞ்சலியை காண அவளோ சலனம் இல்லாது அதே நிலையில் படுத்திருப்பதை கண்டு அவளை எழுப்ப முனையும் முன் அவனை நெருங்கிய செவிலியர்கள் சார் டைம் முடிஞ்சு போச்சு சாரி டூ சே திஸ் இனி ஒன்னும் பண்ண முடியாது என்றவர்கள் அவன் கொஞ்ச நேரம் இருங்க அவ தூங்கிட்டு தான் இருக்கா நா எழுப்புறேன் அவ எழுந்துப்பா என்றவனின் கூற்றை வேதனையோடு உள்வாங்கிய படியே தங்கள் வேலையில் முனைப்பாய் அவள் மேல் பொருத்தியிருந்த உபகரனங்களை விலக்க தொடங்கினர்...

அவனை கண்ணீரோடு பிடித்து கொண்ட வீர் அண்ணா அமைதியா இருங்க என குரல் கரகரக்க உறைத்து நகற விடாது அவனை இறுக்கி பிடித்து கொண்டவனிற்கும் அஞ்சலியின் இந்த நிலையை ஏற்ற கொள்ள முடியவில்லை என்றாலும் நிதர்ஸனத்தை உணர்ந்தவனாய் கண்களை மூடி நிதர்ஸனத்தை கிறகித்து கொள்ள தொடங்கினான்...

டேய் என்னை விடு டா அவ நிஜமா தூங்கிட்டு தாண்டா இருக்கா எழுப்புனா எழுந்துப்பா அவளை போய் ஏதோ செத்து போன மாதிரி டிரிட் பண்ணுறிங்க என்றவனின் குரலில் தொனித்த கர்ஜனை எல்லொரையும் மிரள செய்ததாலும் அவர்களுக்கு அவன் வேதனையில் அறற்றுவது போல் தான் இருந்ததால் அவனை யாரும் சட்டை செய்வதாக இல்லை...


அவனின் அலுமை மற்றும் கம்பிரத்தை மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு இவனின் இத்தகைய அர்த்தமற்ற உளறலை கேட்டு மனம் கனத்து போனதோடு அவனை இப்படி பார்க்கவும் முடியவில்லை என்பதே நிதர்ஸன உண்மை...

அனைவரும் இனி அவ்வளவு தான் என முடிவே செய்துவிட்டிருக்க அதர்ஷனோ இன்னும் விடாப்பிடியாக அவளை எழுப்பி விடுடா வீர் அவ நல்ல தூக்கத்துல தாண்டா இருக்கா...

அண்ணா அமைதியா இருங்க என்றவனுக்கு கண்களில் கண்ணீர் பெருகினாலும் அதர்ஷனை கரங்களை இறுக்கி இருந்த கரங்களை தளர்த்தாது அடக்கி இருந்தான்...

அவளை கட்டிலில் இருந்து செட்ச்சரில் மாற்றிய செவிலியர்கள் அவளை இழுத்து கொண்டு வெளிய செல்ல எத்தனிக்கும் முன் வீர் பிடியில் இருந்து தன் கையை ஒங்கி உதறி விடுவித்து கொண்டவனின் முகத்தில் துளி கலக்கமோ சோர்வோ சோகமோ எதுவும் இன்றி அவளை இழுத்து சென்றவர்களை தடுத்து நிறுத்தியிருந்தவன் நா தான் சொல்லுறேன்ல அப்பறமும் இழுத்துகிட்டு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம் என அவர்களிடம் சீறியவன் அடுத்ததாக அஞ்சலி புறம் திரும்பியவன்...

அடியே தூங்குனது போதும் எந்திரி என அவன் அவளை உலுக்கியதை கண்டவர்களுக்கோ அவன் மேல் பரிதாபம் படுவதை தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை அதனோடு அவனுக்கு நிதர்ஸத்தையும் உணர்த்த முடியாத தவித்த நின்றனர் அனைவரும்...

அஞ்சலி என்ன கோபம் படுத்தாத இப்போ நீ எழுந்துக்கலேனா நீ அடுத்து எழுந்துக்கவே வேண்டாம் பேசாம நானும் கண் மூடி உன் கூடவே வந்துறேன் இரண்டாவது முறையா அந்த இடத்துக்கு சேர்ந்தே போலாம் என கூறியவனுக்கு சற்று முன் தான் கண்டது கணவா இல்லை கடவுள் நடத்திய சோதனை பயிற்ச்சியா என எதுவும் விளங்காத போதும் அஞ்சலி தன்னை விட்டு செல்ல மாட்டாள் என ஆனித்தரமாக அவன் நம்பியதாலோ என்னவோ அவளை மிரட்டி எழுப்பி கொண்டிருந்தான்...

அவன் வாக்கியத்தை முழுதாக முடித்து முற்று புள்ளி வைக்கும் முன் அஞ்சலியின் உடல் வெட்டி இழுக்க துடிக்க தொடங்கயவளை கண்டு மிரட்டியதை மறந்து வேகமாக அவளை நெருங்கியவன் ஏய் அம்மு என்னாச்சு டா என அவள் கன்னத்தை தட்டி நின்றவனை அவளிடம் இருந்து விடாப்படியாக வெளியே இழுத்து வந்த செவியிருள் ஒருவள் டாக்டரை அழைக்க வேகமெடுத்து ஒடியிருந்தாள்...

அங்கு வந்த மருத்துவரை தடுத்து நிறுத்திய அதர்ஷனை பாரத்து கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஆனா இனி நீங்க பயப்பிட வேண்டிய அவசியம் இருக்காது என்றதோடு முடித்து கொண்டவர் அவளை மீண்டும் சட்ச்சரில் இருந்த நர்ஸின் உதவியோடு கட்டிலுக்கு மாற்றியவர் அவளை பறிசோதிக்க தொடங்கியிருக்க...

வெளியே அதர்ஷனோ பயமின்றி இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஏற்கனை அனைத்தையும் கனித்து வைத்து கொண்டவன் போல் பரபரப்பாக நின்றவனை தொடர்ந்து நின்றிருந்த வீரோ தன் தங்கை எப்படியேனும் பிழைக்க வேண்டும் என வேண்டியவன் மருத்துவர் அவளுக்கு ஒன்னும் இல்லை என கூறும் வரை அத்தனை கடவுளையும் துனைக்கு அழைத்து துனை நிறுத்தி கொண்டான் அவன்...

நெருப்பின் மேல் நிற்பது போல் சில நிமிடங்கள் கடந்திருந்தது...

சிறிது நேரம் செல்ல வெளியே வந்த மருத்தவர் நேராக அதர்ஷன் முன் சென்று நின்று மென்னகையை உதிர்த்து எப்படியோ அடம் பிடிச்சு மிரட்டி கொஞ்சி கெஞ்சி உங்க அம்முவை மீட்டு வந்துடிங்க இப்போ ஹெப்பி தானா மிஸ்டர் என்றவரை முகம் மலர பார்த்தவன் வேகவேகமாக ஆம் என தலை அசைத்து ரொம்ப ரொம்ப தேங்கஸ் டாக்டர் என சந்தோஷ பரபரப்பில் பாய்ந்து கட்டி கொண்டான் அவன்...

அவனை சிரித்தபடியே மெல்ல விலக்கியவர் அவன் தோளை தட்டி கொடுத்து விட்டு நௌ ஷி ஸ் பைன் இன்னும் புன்னு தான ஆறனுமே தவிர வேற ஒரு பிரச்சனையும் இல்லை என்ற அவர் கூறிய பின் இன்னும் கூட கொஞ்சம் மகம் மலர்ந்து போனான் அவன்...

அவுங்க உடம்புல எந்த ஒரு அசைவ காட்டினாலும் அது நம்ப கொடுத்த டிரீட்மென்டை ஏத்துக்க ஆரம்பிச்சுருக்குனு தான் அர்த்தம் அதுனால இப்போ பாடி இப்படி ரியாக்ட் பண்ணதுல எந்த பிரபளமும் இனி ஹொப்பி தான என்று அவனை பார்த்து சிரித்து விட்டு தன் வேலையை பார்க்க நகர தொடங்கியவரிடம் டாக்டர் ந.நா..நான் என் என சந்தோஷ மிகுதியில் திக்கியவன் பின் தன் குறலை செருமி கொண்டு தெளிவாக என் அம்முவ நா பாக்கலாமா என்றவனிடம்..

ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அம்முவை ரூம் மாத்திடுவாங்க நீங்க போய் பாருங்க நோ இஷ்யூஸ் அது வரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என நகர்ந்திருந்தார் அவர்...


டாக்டர் அம்மு எனக்கு மட்டும் மித்தபடி அஞ்சலி என கூறியவன் நாசுக்காக தன்னவளை அவர் அம்மு என அடையாலப் படுத்துவதில் ஏற்பட்ட பிடித்தமின்மையை மறைமுகமாக காட்டியவனிடம் தலை அசைத்து கொண்டு சிரித்தவர் ஷி இஸ் வேறி லக்கி டூ ஹெவ் யூ என கூறி சென்று விட்டார் அவர்...

எல்லொருக்கும் இவர்கள் காதல் கை கூடியதில் மகிழ்ச்சி குத்தாட்டம் தான் என்பதால் நேற்று அமைதியை தத்தெடுத்திருந்த பிளாக் இன்றி சற்று பூரிப்பில் பிளீச்சென்றே காட்ச்சி அளித்தது..

எல்லொரும் இப்படி என்றால் வீருக்கு சொல்லவே வேண்டாம் சந்தோசம் உச்சியை எட்டியதில் கால்கள் தரையில் பதிய மறுத்தது...பின் என்ன மன்றாடி வேண்டுதல் வைத்த அனைத்து கடவுளுக்கு அவசர அசரமாக நன்றி கூறியவன் ஸ்விட் பாக்ஸ் வாங்க வந்து அனைவருக்கும் வளங்கி எனக்கு வேண்டாம் பா என சுகர் பெஷன்டை கூட விடாது அவர்கள் வாயில் தினித்து விட்ட பின்பே ஒய்ந்தான் அவன்...

தேவாவும் வீர் போலவே மகிழ்ச்சில் டி.ஜெ இல்லாம் குத்தாட்டம் போட்டிருப்பான் ஆனால் பாவம் கால் கொஞ்சம் வலித்ததில் சற்று அடங்கிய போதும் சந்தோஷத்தில் கண்கள் வியர்த்து போக முகம் கொள்ளா புன்னகையுடன் மானசீகமாக ஆட்டம் போட்டு பக்கம் நின்ற அஞ்சனாவை‌ அனைத்து கொண்டு அவன் பாட்டுக்கு ஏதேதோ மகிழ்ச்சியில் கூத்தாடி கண்டபடி வளவளத்து கொண்டிருக்க பெண்ணவள் தான் அவன் தீடர் அனைபில் இன்னதென கூற முடியா உணர்ச்சியில் சிக்கி அவஸ்தைக்குள்ளானாள்...


நேற்று அவன் தன்னை அனைத்த போது அதை உணரும் நிலையில் இருவருமே இல்லாததில் இருவருக்குள் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை ஆனால் இன்று அப்படி இல்லையை சூழல் மொத்தமும் இனிமையாகவே உரு மாறியிருக்கு தன்னால் உணர்ச்சிகளும் மேல் எழும்பியதில் அவனை அரவனைத்து கொள்ளவதா இல்லை விலக்கி விடுவதா என்றே குழப்பமாய் போனது அவளுக்கு...


அவள் உடலில் திடிரென குடிபுகுந்த நானத்தில் நெளிவதை வேறு அர்த்ததில் புரிந்து கொண்டவன் பட்டென மலர்ந்த முகம் சுருங்கி போக சாரி என கூறி தன் பிடியை தளர்த்தி கொண்டான் அவன்...

அவனால் சிவந்து போன தன் முகத்தை மறைக்க பூமியிலேயே பார்வையை பதித்து இருந்தவள் பின் குனிந்தபடியே தன் கண்களை மட்டுமே உயர்த்தி அவனை பார்த்தவள் நா அஞ்சலிய பார்த்துட்டு வரேன் என அவன் துளையிடும் பார்வையில் இருந்து தப்பித்து குடுகுடுவென ஒடியிருந்தாள் அஞ்சனா...

தன்னை பிடிக்காமல் தான் ஒடுகிறாள் என உண்மை நிலவரம் தெரியாது தனக்கு தானே ஒன்றை யூகித்து கொண்டு கண் மூடி மெத்தையில் சரிந்து கொண்டான்...


அஞ்சலியை அறை மாற்றிய போது உள்ளே சென்று அதர்ஷன் நேரங்கள் பல கடந்து அந்த அறையை விட்டு வருவதாய் இல்லை அவன்...

எங்கேயே அமர்ந்திருந்த வீர் இருவரும் சேர்ந்த பின் தான் ஏதற்கு இடையில் நந்தி என நினைத்தவன் தேவோடு ஐக்கியமாகி கொண்டான்...

அறையை மாற்றிய உடன் சீட்டாக பறந்து சென்று அஞ்சிலியை அனுமதித்த அறையில் புகுந்து கொண்டவன் அவளை தான் வழக்க செயலுள் ஒன்றான கண் சிமிட்டலை மறந்தவனாய் அவளை வெறிக்க பார்த்து கொண்டிருந்தவன் அவசத்தையோடு அவள் கண் திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தான் அவன்...


கண்களில் கருமணி உருல மெதுவாக விழியை பிரித்தவள் பின் இரண்டு நாட்கள் முழுவதும் வெளிச்சத்தை காணாத கண்கள் இப்போது வெளிச்சத்தை காணவும் கண்கள் கூசி போக மெல்ல மூடி மூடி திறந்து கண்களை வெளிச்சத்திற்கு பழக்கி கொண்டவளாய் நன்றாக விழித்து பார்த்தவள்‌ முன் கண்களில் ததும்பிய நீருமாய் உதட்டில் உறைந்த சிறு புன்னகையுமாய் நின்ற அதர்ஷனை கண்டதும் கண்ணீர் கண்களின் பக்கவாட்டில் கோடிழுக்க அழுதவளை நெருங்கி வந்தவன்...

அழுகாதடா அம்மு ஒன்னும் இல்லை என தன் கண்ணீரை தொடைத்து விட்டவனை பலகீனமாக தன் முகத்திற்கு நேராக இழுத்தவளின் இழுப்பிற்கு தோதாக வளைந்து கொடுத்து அவள் முகத்திற்கு அருகே நெருங்கியவனின் காதில் ஆது சாரி தப்பு எல்லாம் என் மேல தான் இனி இப்படி பண்ண மாட்டென என அழுகை பெருக கூறியவளின் கண்களை அழுந்த துடைத்து விட்டு உன் மேல கோவம்லா இல்ல டா அதுனால சாரிலா வேண்டாம் அழுகாதடா தங்கம் வயிறு வலிக்கும் பீளிஸ் உனக்கு நா கோவமா இருக்க மாதிரி இருந்துச்சுனா என்ன இழுத்து அடிச்சுக்கோ என இதழை சுட்டி காட்டி இரட்டை அர்த்ததில் கூறியவன் விளையாட்டாக தான் கூறினான் ஆனால் அவளோ அவன் இதழை முயல் குட்டி போல் கவ்வி கொண்டாள்...

சில நொடிகளுக்கு மேல் அவளின் நிலை அறிந்து பிரிந்தவன் சும்மா தாண்டி சொன்னே சேட்டை காரி என அவள் இதழில் வலிக்காது தட்டியவன் பின் விரிந்த இதழ் லேசாக சுருங்க ரொம்ப பயமுறுத்திட்ட அம்மு நீ ஆனா காட்டுன பயத்துக்கு எல்லாம் நீயே மருந்தும் போட்டு விட்டுட இனி எனக்கு எந்த கவலையும் என கூறிவனை தரும்பி இழுத்து இதழை கவ்வ பார்த்தவளின் இதழில் செல்லமாக தட்டி உனக்கு ஹாஸ்மிடல்ல தான் ரொமேன்ஸ் வருமா டி ராட்ச்சஸி.. தூங்குடி கண்ண மூடி சும்மா நல்ல பிள்ளைய கெடுக்கிறதே வேளையா போச்சு இவளுக்கு என்றவனை கண்டு அழுகை மறந்து சிரித்தவள் சிறிது நேரத்தில் மருந்தின் விரியத்தில் உறங்கியும் போனாள் அவள்...

அதன் பிறகு யாரையும் அனுமதிக்காமல் அவனே அவளை பார்த்து கொண்டான்...

அஞ்சனா சில விஷயங்களில் பெண்களின் தேவைப்படும் என உணர்ந்து உதவ வந்த போதும் திட்டவட்டமாக மறுத்து விட்ட அதர்ஷனை மீறி அவளை நெருங்க கூட முடியவில்லை அவளுக்கு...
மருத்துவரின் குறிப்பு படி அவனே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான்...

இரவு உணவை புகட்டி கொண்டிருந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்த அஞ்சலியின் பார்வையில் நானமுற்றவன் என்னடி என்றான் அதற்கு ஒன்றும் இல்லை என தலை அசைத்தவள் உணவை முடித்து கொண்டு படுக்கும் வரையில் கூட கண்களை சிமிட்டினாளே அன்றி அவனில் இருந்து பார்வையை மாத்தியிருக்கவில்லை அவள்....

அவனும் எத்தனை நேரம் தான் கண்டு கொள்ளாதது போல் இருப்பான் ஒரு கட்டத்தில் அவள் பார்வையின் வீச்சை தாங்க முடியாது என்னதான்டி வேணும் உனக்கு இப்படி மனுஷனை திங்குற மாதிரி பாத்து கொள்ளுற என்றவனை வா என்னும் விதமாக கையை விரித்து காட்டி அழைத்ததை தொடந்து அவள் பக்கம் வந்தவன் என்ன மா என்றான்...

அவன் என்ன என்று கேட்ட உடன் மெத்தையில் சற்று நகர்ந்து படுத்தவள் தன் பக்கம் இருந்த வெற்று இடத்தை கை காட்டி வா என்று அழைத்ததும் போடி அங்குட்டு என் கை கால் எதாவது பட்டுச்சுனா சரி வராது நீ தூங்க பாத்ரூம் போகனும்னா இல்ல தண்ணி வேணும்னா மட்டும் என்ன கூப்பிடு இப்போ தூங்கு என அவன் கூறியதற்கு பட்டென முகம் சுருங்கி போவளிடம் சற்று தன்மையாகவே வேண்டாம் டா உன்ன கட்டிகிட்டு படுத்தே தூங்கி பழகிட்டேன் இப்போ உன் பக்கத்துல படுத்து தெரியாம கை கால் பட்டுடாலும் அவஸ்த புரிஞ்சுக்கோ என்றவனை கண்டு கண்களால் இறஞ்சியவளை பார்த்த பின் அவன் மறுப்பானா என்ன அவளுக்கு பல இன்ச்சு இடைவெளி விட்டு படுத்து கொண்டான் அவன்...

சற்று இடைவெளி விட்டு படுத்தவனை கொஞ்சமே கொஞ்சம் நெருங்கி அவன் மார்பின் சட்டையை தன் கையால் இறுக்கி கொண்டு அவன் மார்பில் லேசாக புதைந்தே உறக்கத்தை தழுவி இருந்தவளை பார்த்தவனுக்கு உலகமே கையில் அகப்பட்டு போன சந்தோஷம்..

அவள் மேனி நோகாதவாரு மிக லேசாக கை போட்டு அனைத்து கொண்ஞவனும் அவளின் அருகாமையில் நேற்றைய துன்பங்களை முற்றிலும் மறந்தவனாய் சுகமாக துயில் கொண்டான்...

தொடரும்....
 
Last edited: