• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕53

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
83
89
18
Madurai
தன் கை வளைவினுள் பாந்தமாக பதுங்கி கொண்ட மின்னும் பெண் தாரகையை புரித்து பார்த்த அதர்ஷனின் உடலுக்குள் விளைந்து தென்பட்ட சொல்ல முடியாத உணர்ச்சியின் சாயலில் கிறக்கமாக அவளை கண்ணுற்று நின்றான் அவன்...

அவளின் மாமா என்ற அழைப்பு ஒன்றும் புதிது இல்லையே அரிதாக எப்போதாவது அவளை மீறி அவ்வார்த்தைகள் அவள் இதழில் அடங்காது வெடித்து வரும் போது கேட்டு பழகிவனுக்கு எப்போதாவது உதிர்க்கப்படும் அவ்வார்த்தையை அனுதினமும் கேட்டு பெற்று கொள்ள பேராசை தான் ஆனால் தேவியவள் தன் முன் வைக்கப்பட்ட மனுவிற்கு மனம் வைத்து செயல் படுத்த வேண்டுமே..

எப்போதும் காதால் கேட்டு சுகிக்க படும் அவ்வார்த்தை இன்று அந்த உணர்ச்சியின் வரைமுறைக்குள் அடங்காது வேறு ஏதையோ ஏதிர்பார்த்ததாக பெண்ணவளின் தேகத்தில் ஆணவனின் கைகளை ஊர விட்டு தேட மனம் கட்டளையிட்டதாய் அதர்ஷனின் கரங்கள் தன் அம்முவின் தேக மேடு பள்ளங்களில் மெல்ல ஊர்ந்தது..

பிடரி முடி நட்டுக்கொள்ள கண்கள் சொருகி பாப்பா என அவள் இதையத்தின் இறுகிய தசையை தளர்த்த செய்வதாக உயிர் கசிந்துருக அழைத்து நிறுத்தியவனின் குரலில் பெண்ணவளின் கிறக்கமும் ஹைய் பிட்ச்சில் சென்று நின்றது...

அரசனுக்காகவே செய்தேடுத்த வாள் எத்தனை காலம் கடந்தாலும் அரசனின் கைகளில் அழகாக பதுங்கி கொள்ளுமாம்

அதனை போல் அவனுக்காகவே பிரத்தியேகமாக அவள் இதழில் இருந்து உதிரப்படும் அவளின் மாமா என்ற அழைப்பு எத்தனை காலம் கடந்தாலும் அனுக்கானது தானே...

கேட்டு பழகிய வார்த்தை என்றாலும் துருப்பிடித்த வாள் அரசனின் கை சேர்ந்து பின் அவன் வீசிய முதல் வீச்சில் துரு உதிர்ந்து பழைய பளபளப்புடன் காணப்படுவதை போல் அவள் அந்த வார்த்தை அவளுக்காகவே அடக்கி வைத்த உணர்ச்சிகளுக்கு இன்று திறவுகோள்ளாக அமைந்தது...

தன் முகம் பார்க்க நின்றவளை அழுங்காமல் திருப்பி அவள் கழுத்தில் மொச் மொச் என முத்தத்தால் ஊர்ந்தவனின் செயலில் மாயவலையில் சிக்கியதாய் பெண்ணவளும் கிறக்கம் மேலிட சொக்கி தான் நின்றாள்...

உணர்ச்சி வேகத்தில் முத்தம் செல்ல கடியாக உருபெற்று அவள் கழுத்தில் இடம் கொண்டதில் துள்ளி விழுந்து முனங்கினாள் அவள்...

அவள் முனங்கும் சத்தில் வீறிட்டு கிளம்ப காத்திருக்கும் உணர்ச்சியின் திறவுகோளான ஏவுகணை வெடித்து சிதறும்படி இறுதி கட்டத்தை அடைந்திருந்தாளும் அந்த கடைசி நொடிதனில் ஓர் ஆண் மகனால் பின் வாங்க முடியுமா...

ததும்பிய உணர்ச்சியால் இமை லேசாக துடிக்க இன்னும் மௌனநிலையில் கட்டுன்டு கிடந்தவளை மெல்ல விலக்கி அவளை தெளிய வைப்பதாய் நேற்றியில் புரண்ட முடி கற்றையை உதுக்கி அழுந்த முத்தமிட்டு அவளின் மௌன நிலையை களைத்தான்...

மௌன நிலையில் இருந்து களைந்து வெளி வந்த பின்னும் இன்னும் கூட கிறக்கம் விலகாத கண்களோடு ஏன் இந்த விலகல் என்ற கேள்வியையும் சேர்த்து கண்களில் தேக்கி அவனை ஏறிட்டவளை இழுத்து அனைத்து கொண்டவனுக்கு தன் மீதே கோபம் தன்னவளின் உணர்ச்சிகளை தானே தூண்டி விட்டு இப்போது விலகி நிற்பதில்...

விலகி நிற்க நிற்பந்த பட்டிருப்பவனுக்கு தன் மீது தானே கோபம் எழுந்ததே அன்றி விலகி நிற்க காரணியாக அமைந்த பெண்ணவளின் மேல் துளி ஏமாற்றமோ சலிப்போ வருத்தமோ இன்றி அனைத்தபடியே அவள் வயிற்றை மெல்ல வருடி சாரி அம்மு தப்பு என் மேலை தான் பீல் பண்ணாத டா என்றவனிடம் இருந்து சற்று தள்ளி நின்றவள்...

நா நல்லாதான இருக்கேன் அப்பறம் ஏன் இப்படி பண்ணுறீங்க என்றவளை மீண்டும் இழுத்து தன் கை வளையில் நிறுத்தி கொண்டவன் நீ இன்னும் பூரணமா குனமாகலை டா இது எல்லாம் தெரிஞ்ச நானே எப்படி டா ஏன் உணர்ச்சி தான் முக்கியம்னு உன்ன காயப்படுத்த முடியும் உன்னவிட எனக்கு சுகம் முக்கியமாடி என்றவனின் வார்த்தையில் கண்ளில் கர்வம் மின்ன இதழில் பூக்க துடித்த புன்னகை கடினப்பட்டு அடக்கியப்படி அவனை ஏறிட்டவள் சரிதான் என்னும் படியாக தலை அசைத்தவளின் அடும் தலை பிடித்து என்னடி கின்டலா...

இல்லை சரி தான்னு தான் சொன்னே என சிரிப்பை அடக்க சரிமப்பட்டு கூறியவளை சேட்டை கூடி போச்சு டி உனக்கு அதான் வார்த்தை ரொம்ப நக்கலா வருது என்று அவன் மன்டையில் கொட்ட கை நீட்டும் முன் கிளுக்கி சிரித்தபடி ஒடத்தொடங்கியவளை பார்த்து ஏய் பாத்து டி விழுந்துறாத மெதுவா என கத்தியபடி வேக எட்டு வைத்து அவளை பிடித்து சற்று தளர்ச்சியோடு அனைத்து கொண்டான் அவன்....

மீண்டும் அவன் கரங்களில் சிக்கி கொண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை கர்வம் நெஞ்சமதில் பொறையோடி நெகிழ வைத்தது...

அவன் கூடி இருந்தால் கூட இத்தனை மகிழ்ந்திருப்பாளா என்பதே ஐயமாக போனது முழு வீச்சாக பொங்கி பெருகிய உணர்ச்சியை தனக்காக உள்ளடக்கி கொண்டு பட்டென அதில் இருந்து களைந்து வெளி வந்து தன்னை குழந்தையென அரவனைத்து கொண்டதில்...

தன்னவன் மேல் இன்னும் காதல் பெருகி போக தனக்குள் ஆனந்த கூத்தாடினாள் பெண்ணவள்...


வீர் மட்டற்ற மகிழிச்சியில் துள்ளி குதிக்காத குறையாக சந்தொஷித்தவன் தன் தாரகையின் பெயரை சுருக்கி தன்யா என மானசீகமாக அழைத்து பார்த்தவனுக்கு தானாக வெட்கம் வேறு வந்து தொலைத்தது...

பெண்கள் வெட்கம் காணக்கிடைக்கும் போக்கிஷம் என்றால் மிடுக்காக நிமிர்ந்து நிற்கும் ஆண்மகனின் இறுகிய திசை ஓர் பெண்ணிற்காக சற்றே குழைந்து வெட்கத்தோடு சின்ன சிரிப்போடு சுருங்குவது காணக்கிடைக்காத பொக்கிஷம் தானே...


பாவம் ரிதன்யா தான் இவனின் வெட்கத்தை அப்போதைக்கு காண முடியாத துர்பாக்கியசாலியாகி போனாள்...

அந்த கண்களின் மேல் மட்டுமே ஈர்ப்பு அதுவும் தன் கனவில் தோன்றாது போனாள் இந்த ஈர்ப்பும் மங்கி போகும் என நினைத்திருந்தவனின் நினைப்பிற்கு அப்படியே தலை கீழாய் அதே காதல் கசிந்துருகும் விழியை நேரில் கண்ட பின்பு தான் அவை தன்னுள் நிகழ்த்தும் ராஜ்யித்தை அறிந்திருந்தான் அவன்...

பெரும் சுய அலசலுக்கு பின் காதலை உணர்ந்து கொண்டதும் அவளை தன்னுள் காதலால் புதைத்து கொள்ளும் பேராசை அவனுள் ஆனால் அவனின் காதலி அவனுள் உருகி கறைய சம்மதிப்பாலா என்பதே இப்போது பெரும் கேள்விக்குறியாக அவன் மனதை உறுத்தியது...

சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லாது பரிதாபமாகவோ வீர் தன்னை பார்க்க மாட்டான் என்பதை நன்றாக அறிந்திருந்த ரிதன்யாவிற்கு அவன் நம்பிகையும் கூட..



இருப்பினும் தான் கலங்கப்பட்டவள் அவன்‌ எந்த கோனத்திலும் கலங்கப்படாத தூயவன் என ஏதேதோ புலவர்களுக்கே புரியாத பாடலை பாடி விலகி நிற்க துணிந்திருந்தாள்...

தானே அவள் முன் சென்று காதலை வெளிப்படுத்தினாலும் ஒப்பு சப்பில்லாத காரணத்தோடு தன்னை விலக்கி நிறுத்துவாள் என விஜி கூறியதை வைத்து ஒர் அளவிற்கு யுகித்து கொண்டவன் எப்படித்தான் அவளை காதலை தனதாக்கி கொள்வது என்ற யோசனையில் ஆழ்ந்தான்...

அவள் கண்டிப்பாக வீருக்கு வேண்டும் என்பதே ஐயமற்ற பதிலாக அவனிடம் இருந்து...

காலம் முழுவது தன்னை கிறக்கத்தில் ஆழ்த்தும் அதே விழி கிறக்கத்தின் இடைவெளியில் தன்னை அரவனைக்கவும் வேண்டும் என நினைத்தவன் வாழ்வின் எல்லை வரை அந்த விழியில் செத்து பிழைக்கவும் தயாராகி விட்டான்...

ஆனால் அவன் கண்மனியின் பக்கமாக பார்க்கும் போது தான் பெரும் மளைப்பாக தெரிந்தது அவனுக்கு...


ஏதேதோ யோசித்தவன் கடைசில் ஏதோ ஓர் முடிவை உறுதியாக எடுத்தவனாக விஜியின் உதவியை நாடி செல்ல துணிந்தான்...

இங்கே ரிதன்யா இன்னும் பேய் அறைந்தது போலான நிலையிலேயே சமைந்து இருக்க அவளிடம் என்னதான் ஆச்சு என்று கேட்டே நொந்து போயிருந்தாள் விஜி...

அவளுக்கு அவன் முத்தமிட்டது மனதில் குளிர் சாரலை பரப்பி இதம் அளித்தாலும் ஏதோ நெருடலில் அவன் மீது கடல் அளவு காதல் இருந்தும் விலகி கொள்ள அப்பட்டமான ஓர் முட்டாள் தனமான முடிவை உறுதியின்றி எடுத்திருந்தாள்..

இவ்வளவு நாள் இருந்த பயம் இன்று அவன் பார்த்த ஒற்றை காதல் பார்வையில் சுக்கலாக உடைந்த பின்னும்...ஏன் மனது நெருடுகிறது என்பது அவளுக்கே புரியவில்லை...

ஆகமொத்தில் அவளும் குழப்பி கொண்டு அவனையும் தெளிவாக குழப்பி விட்டால் பாவை... (ஆக மொத்தம் இரண்டும் சேர்ந்து நம்மள குழப்புதுங்க..🤦🏼)

விஜி அவளிடம் என்னாச்சு என கேட்டு கொண்டே இருக்க ரிதன்யாவும் சற்று தன் மன பாரத்திற்கு தளர்ச்சியாக இருக்கும் என நினைத்து இன்று வீர் அறையில் தங்களுக்குள் நிகழ்ந்து போன அனைத்தையும் ஒப்பித்து முடித்தாள்..

விஜி புரிந்து கொண்டாள் வீரும் இவளை காதலிக்கிறான் என அதில் பெரிதாக மகிழ்ச்சி உற்றவள் தோழியிடம்

அப்பறம் என்ன ரிது அவர் பார்த்த பார்வை தான் சொல்லுதே உனக்கான பதிலை அப்பறம் என்ன தயக்கம்

தெரியல விஜி ஒரு மாதிரி இருக்கு அவனுக்குள் நான் இருக்கேன்னு தெரிஞ்சும் ஏதோ தடுக்குது

ரிது இங்க பாரு முதல்ல நீ என்ன சொன்ன வீர் பார்வைல நீ தப்பானவளா தெரிஞ்சா என்னால தாங்க முடியாது அதான் உன் லவ்வை அவுங்கிட்ட எக்ஸ்பரஸ் பண்ணமுடியலனு சொன்ன ஆனால் இப்போ அவரே உன்ன அப்படியே ஏத்துகிட்ட ரேடி சொல்லாம சொன்ன பிறகும் என்னடி என சற்று ஆயாசம் தொனிக்க கேட்டவளை நிர்மலமான பார்வையோடு ஏறிட்டவள் விவரிக்க முடியாத உணர்ச்சியோடு வார்த்தையையும் கொட்டினாள்...

நானும் இது மட்டும் தான் காரணம்னு நினச்சேன் ஆனால் இந்த நெருடல் எதனாலனு புரியலையே ஒருவேலை என ஏதோ ஒரு புதிய கதையை தொகுத்து வழங்க முயன்றவளை கரம் நீட்டி தடுத்த விஜி...

ஒருவேலைனா புரியலை நீ என்ன சொல்ல வர ரிது எனக்கு சத்தியமா புரியலை முதல்ல நீ அன்னைக்கு நடந்த விசயத்துல இருந்து வெளிய வா நடக்காததையும் உன் கற்பனை தான் நடத்தி காட்டுது அதுனால தேவை இல்லாம யோசிக்காத என்றவளின் கடுமையான சாடலுக்கு பின்னும் குழப்பம் தெளியாதவளாய்..

அன்னைக்கு நடந்ததை நானும் மறக்க முயற்சி பண்ணுகிட்டு தான் இருக்கேன் விஜி ஆனால் முடியல சிறு விசும்பலோடு கண்கள் பனிக்க கூறியவளை பார்த்து பைத்தியமா இவள் என்பது போல் பார்த்து வைத்த ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவளாய்...

சும்மா அதைய சொல்லாத ரிது...அவன் உன்ன அனைச்சு முத்தம் கொடுத்தா உன் கற்பு போய்ருமா அவள் பேச்சில் ஆவேசம் தொனித்தது..

பதில் இல்லாது அமைதியாக கண் கலங்க நின்றவளை பார்த்து தன்னை சற்றே ஆசுவாசித்து கொண்டவள்...

ரிது நீ இவ்வளவு கோழயா இருப்பனு நா கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்றவளின் வார்த்தையில் தன் தன்மானம் அடிவாங்கியதாய் உணர்ந்த ரிதன்யா ஆமா ஆமா நான் கோழை தான் போதுமா என கத்தியவள் அடுத்து தன் குரலை சற்று தனித்து கொண்டு உனக்கு என்னடி தெரியும் அங்க அப்போ நீ இருந்தியா இல்லைல...

அப்போ அன்னைக்கு எங்க அப்பா அம்மா முன்னாடி குனி குறுகி நின்ன வலியும் உனக்கு புரியாது...சும்மா மறந்துட்டுபோ மறந்துட்டு போனா எப்படி டி முடியும்..அனைக்கு எங்க அப்பா ஒரு பார்வை பாத்தாரு பாரு சத்தயமா இப்போ நினைச்சாலும் ஏன் இன்னும் சாகம இருக்கோம்னு தோனது...

எனக்கு அவன் தொட்டது அருவருப்பா இருந்தாலும் அதுல இருந்து மீண்டு வந்துடேன்..ஆனால் அப்பா பார்த்த அந்த துச்சமான பார்வை முடியலடி என கோவத்தில் ஆரம்பித்திருந்தவள் இப்போது நொறுங்கி தரையில் அமர்ந்து அழுகையோடு முடித்தாள்...

மெதுவாக அவளை நெருங்கி தலை வருடி ஆறுதலாக அரவனைத்து கொண்ட விஜி....

ரிது எனக்கு நல்லா புரியுது நீ உங்க அப்பா பார்வையில உன்ன ப்ருவ் பண்ணனும் நினைக்கிற...அது தான் உன்ன ஓரு நெருடல்ல நிறுத்தி வீர் கிட்ட இருந்து தள்ளி வைக்குது..

யாருகிட்டையும் நம்ம இப்படி தான்னு ப்ருவ் பண்ண முடியாது ரிது...ப்ருவ் பண்ணாலும் அதுல யூசும் இல்ல..இந்த விசயத்துல ஆதாரம் காமிச்சு நிருபிச்சேனா அடுத்தும் ஆதாரம் தான் கேட்பாரு ஆனால் நம்பிக்கை என இதழை பிதுக்கி வராதே என்பதாக குறிப்பு காட்டியவளை அமைதியாக பார்த்திருந்தாள் அவள்...

உங்க அப்பாக்கு உன் மேல நிறையா நம்பிக்கை இருக்கு..அன்னைக்கு அவரு உன்ன அருவருப்பா பாத்தாரு அடிச்சாரு எல்லாம் ஓகே ஆனால் இன்னைக்கு வரைக்கும் இதை யாரு கிட்டயும் சொல்லவோ நீ என் பொண்ணே இல்லனு சொல்லவோ இல்லையே ஓகே அவரோட செயல் அப்படி இருந்தாளும் பட்டவர்தனமா எதையுமே செய்யலையே

உனக்கு உங்க அப்பா மேல பயம்னா..அப்பாக்கு ஊர் மேல அவ்வளவு தான்...உங்க அப்பா நினச்சா உன்ன கொலை கூட பண்ணிருக்கலாம்..ஆனால் நீ ஊர விட்டு போறேன்னு தெரிஞ்சும் உன்ன தடுக்கவோ ஆளு வச்சு வேவு பார்க்கவோ இல்ல..அதுலயே தெரியலையா...

என்ன இவ சம்மந்தமே இல்லாம தீடிர்னு அப்பாவ பத்தி பாராட்டு பத்திரம் வாசிக்கிறானு நினைக்காது...எத்துக்கும் காரணம் இருக்கு நல்லா யோசி...நீ தான் ஒன்றோடு ஒன்று கலந்து யோசிச்சு எல்லாத்தையும் தேவையில்லாம் ஓரே கூட்டுல சேர்த்தே குழப்பிக்கிற...
உனக்குள் தான் எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு யோசி..

இதுக்கு மேல முடிவு நீ தான் எடுக்கனும் ரிது இப்பவும் சொல்லுறேன் எதுவுமே உன் கை நழுவி போகலை எல்லாம உன் கைக்குள் நீ இழுத்து பிடிக்க தான் காத்திருக்கு ஆனால் எப்பையும் இதே மாதிரி உன் கைக்குள்ளையும் நிக்காது தக்கவச்சுக்கிறது உன் சாமர்த்தியத்துல தான் இருக்கு அவ்வளவு தான் சொல்லுவேன் என்றவள் பின் நீ நினைச்சா உங்க அப்பாவோட மன்னிப்பும் கிடைக்கும் அதுவும் உண்மை யோசி...

எல்லாம் சரியான பிறகும் வீரை லவ் பண்ணுறதுல எதாவது நெருடல் இருந்துச்சுனா..தயவு செஞ்சு உன் மனச மாத்திக்கோ அவரையாவது நிம்மதியா இருக்க விடு என அவளுக்குளேயே அவள் கேள்விக்கான பதில் அடங்கி இருப்பதை அவளுக்கு உணர்த்தி விட்டு எழுந்து நின்றவள் இதற்கு மேல் கூற ஒன்றும் இல்லை என்பதாக விலகியும் சென்றிருந்தாள்...

கடைசியாக அவள் கூறிய வாக்கியத்தில் திகைத்து செல்லும் அவளின் முதுகையே வெறித்து இருந்தாள் பாவையவள்...

இங்கே ரிதன்யாவை விட்டு தள்ளி வந்தவள் யாருக்கோ சக்ஸஸ் என குறும் செய்தியை தட்டி விட்டு..

இனி தன் தோழி வாழ்வு இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நம்மதியான தூயிலில் ஆழ்ந்தாள்.. அந்த ஆருயிர் தோழி‌‌‌.....

தொடரும்....
 
Last edited: