• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕60(முடிவுரை)

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
அவள் ஏதிர்கா போடப்பட்டிருந்த நாற்காலியை இழுத்து அவள் படுத்திருந்த மெத்தைக்கு அருகில் அமர்ந்தவன் இன்னும் மயக்கமாக இருந்தவளை எழுப்ப துனியாமல் அவளையே கலக்கமாக பார்த்திருந்தவனுக்கு அவளை எப்படி சமாளிக்க போகிறோம் என்பதே உள்ளுக்குள் கலவரத்தை கிளப்பியது...

நொடிகள் பல கடந்ததை அடுத்து கனிசமாக சில நிமிடங்களும் கடந்ததை அடுத்து மெதுவாக இமை பிரிக்க முயன்றவளை பார்த்து இன்னும் பீதியாக தொண்டைக்குழிக்குள் எச்சில் கூட்டி முள் தைக்கும் வலியோடு சிரமப்பட்டு விழுங்கியவன் அம்மு இப்போ ஒகே வாடா என மெல்ல அவள் தலை வருடியவின் கையை பற்றி கொண்டவள்...

ம்ம் என பதில் அளித்தவள் பின் சட்டென ஏதோ நியாபகம் வந்ததாய் விழியை தாமரை மொட்டாக வட்டமாக விரித்தவள் மாமா நா மயங்கனதுக்கு காரணம் அதான என்று ஓர் ஏதிர்பார்ப்போடு கேள்வியோடு தன் முகத்தை பார்த்தவளின் முகம் பார்க்க முடியாது பார்வையை அங்கும் இங்கும் சுழட்டியப்படி ஆம் என்பதாய் தலையாட்டியதில்....

ஏதிர்பார்ப்பிலேயே மலர்ந்திருந்த அவளின் முகம் இப்போது இன்னும் இன்னும் மலர நிஜமாவா என்று கண்கள் பனிக்க அவன் கையை பிடித்தவளின் கைகளுக்கு கீழாக அகப்பட்டிருந்த தன் கையை உருவி கொண்டு அவள் கரங்களின் மேல் வைத்தவன் மெல்ல சிக்குண்டு கரகரத்த குரலை செருமி கொண்டு அம்மு இந்த குழந்தை வேணாம்டா என ஒரு வழியாக சொல்ல போகும் விஷயத்திற்கு தொடக்க புள்ளி இட்டிருந்தவனின் வார்த்தைக்கே அவள் முகம் முற்றிலுமாக மாறா போனது...

மெல்ல தன் கரம் மேல் பதிந்திருந்த அவன் கரங்களை விலக்கிவிட்டு கேலி பண்ணி விளையாடாதிங்க ஆது என அப்போதும் அவன் அதை விளையாட்டாக கேட்கிறான் என நினைத்து கொண்டு பதில் அளித்திருந்த போதும் நெஞ்சோடு உறுத்தல் படர்ந்து அழுத்தாமல் இல்லை...

அவள் விலக்கிய கையை மீண்டும் இழுத்து பற்றி கொண்டவன் நெஜமா தான் சொல்லுறேன் இந்த குழந்தை நமக்கு வேண்டாம் என்றவன் மருத்திவர் விளக்கிய அத்தனையையும் அப்படியே அவளிடம் ஒப்பிக்க தொடங்கினான்...

அவுங்களுக்கு காயம் பட்ட சரியான அப்பறம் நீங்க எந்த டாக்டர்டையும் நீங்க உங்க லைப்பை ஸ்டார்ட் பண்ணலாமானு ஒப்பினியன் கேட்கவே இல்லையா என்ற கேட்டவரின் கேள்வியில் புருவம் சுலித்தவன்..

கேட்டோம் டாக்டர் அவுங்க எல்லாம் ஒகேனு தான் சொன்னாங்க ஆனா இன்னும் கொஞ்ச நாள் அவுங்களை கவனமா பாத்துக்க சொன்னாங்க‌ என்றவனை ஆயசமாக பார்த்தவர்...

அவுங்க பிரக்னன்டா ஆனா இந்த இந்த மாதிரி காம்பிலிக்கேஷன்ஸ் வரும்னு அவுங்க சொல்லவே இல்லையா மிஸ்டர் என்று சற்று காட்டமாகவே கேட்வருக்கு இந்த ஆம்பளைங்களுக்கு இது மட்டும் தான் பிரதானமா என்ற எரிச்சல் வார்த்தைகளிலும் படர்ந்து அவனை தவறாது சுட்டது...

மெல்ல தலையை தாழ்த்தியவன் காம்பிலிக்கேஷன்ஸ் இருக்கும் அது பிரேக்னேன்ஸி டைம்ல டாக்டர் கைடன்ஸ்ல டயட் கேர் எல்லாம் பாத்துகிட்டா பிரச்சனை இல்லாம நீங்க சுலபமா கருத்தரிச்சு நல்லபடியா குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னாங்க என கூறி அஞ்சலி கத்தி குத்து பட்ட போதான கேஸ் ஹிஸ்டிரியை எடுத்து நீட்டியவனின் கையில் இருந்து வாங்கி பார்த்தவர்...

மிஸ்டர் கொஞ்சம் நா சொல்லுறதை பொருமையா கேளுங்க நீங்க ஒப்பினியன் கேட்டுகிட்டது எல்லாம் சரி தான் ஆனா இவுங்க நிலமை ரொம்ப மோசமா இருக்கு கத்தி குத்துன இடம் கரெக்கடா கருப்பையை டெச் பண்ணதுனால கொஞ்சம் டெமேஜஸ் அதிகம் தான் இப்போ இவுங்க பிரக்கனேட் ஆனதோ இல்ல அவுங்க பெத்து எடுக்க போறதோ பிரச்சனை இல்லை ஒவ்வொரு மாசமோ அவுங்க எப்படி வலியை பொருத்துக்க போறாங்கங்கறது தான் இங்க பிரச்சனை...

பிரஸ்ட் தீரி மன்த்ஸ் அவ்வளவு வலி இருக்காது ஆனா அப்பறம் அவுங்களாலால் சுத்தமா முடியாது இதுல அவுங்க அன்டர் வெயிட்டுக்கு டூ தீரி கேஜிஸ் தான் கூட அதுனால இப்போ இந்த பேபி உங்களுக்கு வேண்டாம்னு தான் நா சொல்லுவேன் அதுனால அவுங்களுக்கு புரிய வைங்க என்ற அவர் விளக்கி கூறியதையும் அவர் அடுக்கிய அறிவுரையையும் மொத்தமும் அவளிடம் கூறி முடித்தான்...

பொருமை இழுத்து பிடித்து அவன் கூறிய அனைத்தையும் கேட்டு கொண்டவள்...

தீர்க்கமாக அவனை நிமிர்ந்து பார்த்து நா வலியை அனுபவிப்பேன்னு இந்த குழந்தையை என்னால கலைக்க முடியாது எனக்கு இந்த குழந்தை வேணும் என்றவளிடம் இதற்கு மேல் என்னவேன்று கூறி சம்மதிக்க வைப்பது என தடுமாறியவனுக்கும் குழந்தையின் மேல் ஆசை இல்லாமல் இல்லையே ஆனால் தன் அம்மு என்று வருகையில் குழந்தை இரண்டாம் பட்சமாக போயிருக்க அதன் மேல் இருந்த ஆசையை மொத்ததையும் கட்டுப்படுத்தி கொண்டவனாய் கல் மனதோடு இப்படியோரு முடிவுக்கு துனிந்திருந்தான்...

விடாது அவளை பேசி கறைக்க முயன்றவனின் எந்த ஒரு சொல்லுக்கும் மசியாது எனக்கு வேண்டும் என்றால் வேண்டும் என அடமாக நின்றவள் ஒரு கட்டத்தில் ருத்திரகாலியாக அடியும் தீர்த்திருந்தாள்...

மருத்துவரும் தன் பங்கிற்கு அவளை கறைக்க முறச்சி எடுத்ததாய் பேசி பார்க்க அப்போதும் தீர்க்கமாக ஒரே பதில் தான் அவளிடமிருந்து...

பின் மெல்ல தீரி மன்த்ஸ் டைம் இருக்குல மிஸ்டர் அவுங்களை கன்வின்ஸ் பண்ணுங்க என அவனுக்கு தைரியம் கூறி அனுப்பி வைத்திருந்தார்...

காரில் வரும் போது இருந்த பதடத்தை விட வீட்டிற்கு திரும்பும் வேலை பன்மடங்கு கூடி போனதாய் தன் தோள் சாய்ந்து தூங்குபவளின் முகத்தை நொடிக்கு ஒரு முறை திரும்பி கலக்கமாக பார்த்து கொண்டாவனுக்கு சுத்தமாக நம்பிகை இல்லை அவள் இதற்கு ஒத்து கொள்வாள் என...

வீட்டிற்கு அழைத்து வந்து அவளை ஹால் சோப்பாவின் மெத்தையிலேயே வசதியாக அமர வைத்து விட்டு நீ மாடி ஏற வேண்டாம் கீழ் ரூம் ரெடி பண்ணுறேன் என்று நகற இருந்தவனை வீட்டில் இருந்த அனைவரும் பிடித்து கொண்டனர்...

இது வரை அவனே அனைவரும் இழுத்து தன் விசைப்படி ஆட்டுவிக்கவில்லை என்றாலும் அவன் ஆலுமையில் கவர்ந்து தன்னால் அவன் விசைக்கு ஆடிப்பழகியவர்களுக்கு அவன் கலங்கி முகம் அனைவரின் முகத்தையும் கலங்கடித்தது...

அண்ணா என்னாச்சுனா என தேவா அவனின் தோளில் மெல்ல கை வைத்து கேட்கவும் அப்படியே மடங்கி அமர்ந்து எல்லாவற்றையும் கூறியவன் அழுகையினோடு எனக்கு என் அம்முவை இழந்து தான் இந்த குழந்தை வேணும்னா அப்படி ஒரு குழந்தையே வேண்டாம் தேவா அவகிட்ட நீயாவது சொல்லுடா கேட்க மாட்டிக்கிறா.. பயமா இருக்கு அவளை இழந்துருவோமோனு என குழந்தையாக தேம்பியவனை பார்த்து இரு ஆண்களோடு அவன் மனைவிமார்களும் கலங்கி தான் போயினர்...

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது எல்லாம் இனி சுபம் தான் என ரெக்கை முளைத்த சின்ன சிட்டு குருவி ரெக்கை முளைக்கும் வரை அனுபவித்த கஷ்டங்களை மறந்து பறக்க தயாராகும் வேலை பனங்காயை அதன் தலையில் சுமத்தி அதன் ஆசையை மறைமுகமாக உருக்குலைப்பதை போலான நிலை தான் இங்கேயும்...

அண்ணனுக்கு இனையாக கண்ணீர் வடித்து நின்ற கனவர்களை அவர்கள் மனைவிமார்கள் ஒருவாராக சமாளித்திருந்த போதும் அவர்களின் முயற்ச்சிக்கு பயனளிக்க அவர்கள் மனம் முரண்டினாளும் ஏற்கனவே கலங்கி நிற்பவனை மேற்கொண்டு கலங்க வைக்க விரும்பாது அவசர அவசரமாக ஏதோ அப்போதைக்கு வாய்க்கு வந்த ஆறுதல் வார்த்தைகளை அவன் முன் அடுக்கி விட்டு நகர்ந்து கொண்டனர்...

எல்லொரும் விலகி சென்ற பின் தரையில் குழந்தையாக தன்னை குறுக்கி கொண்டவன் தப்பு எல்லாம் என் மேல தான் அப்படி என்ன வெறி உச்சந்தலையை தொட்டு காமபிசாசா அலஞ்ச எல்லாம் என்னால தான் என அழுது அறற்றியவனுக்கு மேலும் அங்கே நிலைக்கொள்ள திராணி இல்லாததோடு தன்னவளின் அருகாமை விடைப்பெற்ற சில நிமிடங்களுக்கே தாக்கு பிடிக்க முடியாதவன் மறு கனம் அவளை தேடி ஒடியிருந்தான்...

வேகமான நகர்வை காட்டிய காலச்சூழ்ர்ச்சி இப்போது ஆமை போலான வேகம் காட்டியதில் அதர்ஷன் நொந்தே போனான்...

ஒரே விஷயத்தை ஜெபம் போல் ஓதி கொண்டே இருந்தாள் கண்டிப்பாக காது புளித்து போகுமே ஆதலால் வெகு சிரமப்பட்டு ஒரு வார்த்தை கிடத்தி விட்டு தன்னையும் கொஞ்சம் பக்குவப்படுத்தி கொண்டு அவள் முன் வந்து நின்றான்...

அம்மு என்ன முடிவு பண்ணிருக்க என கொஞ்சமும் குரலில் குழைவை காட்டாது கடுத்தமாக கேட்டவனை நிமிர்ந்து பார்க்காமல் என் முடிவு மாறாது எனக்கு இந்த பாப்பா வேணும் என்றவளை ஒரு கனம் ஆயசமாக நொக்கியவன்

இதுலை மாற்றமே இல்லையா அப்போ..

இல்லவே இல்ல..

இந்த குழந்தைக்கு நீ மட்டும் பொறுப்பும் இல்ல காரணமும் இல்ல அப்படி பார்த்தா உனக்கு இருக்க உரிமைல சம விகிதம் எனக்கும்‌ இருக்கு இல்லையா அதுனால எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்றவனை சற்று அதிர்ச்சி மேலிட நிமிரந்து பார்த்தவள்..

ஆது நம்ம குழந்தை ஆது அதை எப்படி என அழுகுரலில் குரல் கமர வினவியவளை பார்த்து..

ஆமா நம்ம குழந்தை தான் நா இல்லைனு சொல்லையே ஆனா எனக்கு இது வேண்டாம்..

ஏன் வேண்டாம்..

எனக்கு புடிக்கலை..

அவன் வார்த்தைகள் இதயத்தில் அமில கரசலை ஊற்றினாலும் தன் பிள்ளையை தன்னோடு நிலை படுத்தி கொள்ள அவன் வாய் வார்த்தையாக மட்டுமே உதிர்த்த வார்த்தையை பிடித்து கொண்டு புடிக்கலைனா எது புடிக்கலை நம்ம ஒன்னா இருந்ததா இல்லை என்றவள் வார்த்தையை முடிக்கும் முன் ஆக்ரோஷமாக அவள் கன்னதில் அறைந்திருந்தான்..


அவன் அடித்த கன்னங்களை தாங்கி பிடித்தபடி நின்றிருந்தவளை கலக்கம் மேலிட பார்த்தவன் ஏன்டி கொள்ளுற நான் உனக்கு முக்கியமே இல்லையா.. இவ்வளோ தானா அம்மு நா உனக்கு குழந்தை மட்டும் தான் முக்கியமா தெரியுதுல உனக்கு இருந்துட்டு போகட்டும் எனக்கு பிரச்சனை இல்லை ஆனா இப்போ குழந்தை வேணாம் டா சொன்னா புரிஞ்சுக்கோ சீக்கிரமே நமக்கான பாப்பா நம்ம தேடி வரும் இந்த பாப்பா நமக்கானது இல்லைங்கறதுனால தான் இவ்வளவு வலி வருத்தம் எல்லாம் வருது... மிரட்டலில் ஆரம்பித்தவின் மிரட்டல் எல்லாம்‌ சில நொடிகளிலேயே தொலைந்து போனதாய் கெஞ்சலாக தொடர்ந்தான்..

இல்லை இது நமக்கான பாப்பா தான் ஆது ஒரு உயிர் காரணமில்லாம உதிக்காது எனக்கு எதுவும் ஆகாது நா நீங்க சொல்லுறபடி எல்லாம் பண்ணுறேன் மாத்திரை போட்டுக்கிறேன் நீங்க சொல்லுற டைமுக்கு சாப்பாடு இப்பிடி எல்லாமே ஆனா குழந்தை விஷயத்துல எதுவும் உங்களுக்காக பண்ண நா தயாரா இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்ட பின் என்ன செய்வது..

அதிர்ஷனை அடுத்து அவளை கறைக்க முயனர் அனைவரும் பரிதாபமாக மண்ணை கவ்வியிருந்தனர்...

கயிற்றில் நடப்பதை போல் நடக்க வேண்டும் என கூறி தன்னை ஏற்றி விட்டிருந்தால் தாரளமாக அவன் யோசிக்காது தன் அம்முவிற்காக நடந்திருப்பான் ஆனால் இங்கே மேல நிற்கும் நபர் தானாக இல்லாம் தன்னவளாக இருப்பதில் தான் இத்தனை நடுக்கம் பதற்றம் எல்லாம்...


எல்லாம் இறுகி கட்ட முடிவை தொட்ட பின் எல்லாரும் அவள் வளைத்த வளைப்பிற்கு வளைய வேண்டிய கட்டாயத்தோடு வளைந்து கொடுத்திருக்க மருத்துவரும் வளைந்தார்..

லிஸ்ட் போட்டு டயட் பெட் ரெஸ்ட் என எல்லாம் திவ்யமாக தொடங்கியது..

அவள் பாதங்கள் தரையை தீண்டாது தன்னோடே வைத்து கொண்டவன் சாப்பிடும் நேரம் கூட தானே தூக்கி வந்து டைனிங் டேபிலில் அமர்த்தி உணவு கொடுத்து விட்டு பின் அது உள்ளிருங்கும் வரை காத்திருந்து மீண்டுமாக தூக்கி கொண்டு தான் உள் செல்வான்‌‌...

தங்கை பாசத்தில் வழுக்கி கொண்டு அண்ணன்மார்கள் ஏதாவது உதவ வந்தாலும் அதர்ஷன் அனுமதிப்பதில்லை‌‌ என் பொண்டாட்டி என் உரிமை என கறார் பெயர்வழியாக போய் புள்ள பெத்த உங்க பொன்டாட்டியை பாருங்கடா என விரட்டி அடித்தான்..

ஆம் ரிதன்யா மற்றும் அஞ்சனாவிற்கு ரணகளத்தின் இடையே கேட்ட இனிமையான கிளுகிளுப்பு சத்தமாக வார வித்யாசங்களில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்திருந்தது...

புது வரவு சற்று எல்லொரின் நெஞ்சிலும் தெம்பை வார்த்தில் நடைபாதை கயிறாக இருந்தாலும் அது கொஞ்சம் தடிமனாகி பயத்தை குறைத்ததாய் அனைவருக்கும் நெஞ்சோடு கொஞ்சம் இதம்...

வலியோடு நாட்களை கடத்தி கொண்டிருந்தவள் சாமர்த்தியமாக தன்னவனிடம் இருந்து தன் வலியை மறைத்துவிட்டதாய் எண்ணி இருந்ததற்கு ஏதிராக அவளுக்கு மறைவில் இருந்து கவனித்து கொண்டிருப்பவனும் மேலும் மேலும் கலங்கி தான் போகிறான்...

ஒருவழியாக ஏழு மாதங்கள் வலியோடு கடந்துவிட்டிருந்தது அதர்ஷன் தம்பதியருக்கு அவள் உடலால் வலியுற்று வெந்து மடிந்தாள் என்றாள் அவனோ மனதால் அனுபவித்து துவண்டான்..

தூக்கத்திலும் வலியிலில் தத்தளிப்பதாய் புருவ சுருக்கங்களோடு தன் மடி சாய்ந்திருந்தவளின் புருவத்தை மெல்ல நீவி விட்டு இவ்வளவு வலி தேவையா டி உனக்கு அடம் எல்லாத்துக்கும் அடம் இப்போ வலி உனக்கு தான..நா தான்டி உன்ன செல்லம் கொடுத்து கெடுக்குறேன் அதான் நீ ரொம்ப ஆடுற..பேசாம இந்த குழந்தையை என் வயித்துகுள்ள எடுத்து வச்சுக்கவா என கண்டப்படி பதி உளறலுமாக மீதி புலம்பலுமாக அதனோடு கொஞ்சம் சீசனிங்க சேர்த்ததாய் அவளுக்கும் கேட்காத வகையில் செல்ல மிட்டலுமாக பேசி கொண்டிருந்தவன் எப்போது தூங்கினானோ அன்றைக்கு என்று சற்று அயர்ந்து தூங்கியிருந்தான்...


நள்ளிரவு இரண்டு மணிக்கு பிறப்புறுப்பில் தோன்றிய முடிச்சவிழும் வலியில் பற்களை அழுந்த கடித்து எழுந்த அமர்ந்து கொண்டவள் தன் வயிற்றை மெல்ல வருடிய படி தூங்கியவனை எழுப்ப நினைத்த அவனை நெருங்குவதற்குள் சிறுநீர் கட்டிலை நனைத்ததில் வேகவேகமாக நொடிக்கு ஒரு முறை பெருகும் வலியை பொருத்து கொண்டு குளியல் அறை நுழைந்த நொடி இதற்கு மேல் அம்மா வலி தாங்க மாட்டாள் என அவள் மகவு முடிவெடுத்ததாய் சற்றே காலை விரித்து தோன்றிய வலிக்கு இதமாக குத்தங்கால் இட்ட இடைவெளியில் இத்தனை நாள் பட்ட அவஸ்த்தைக்கு கிடைத்த பொக்கிஷமாக அவர்களின் மகள் பெரும் சிரமம் இன்றி பிறந்திருந்தாள்...

போட்டிருந்த நைட் கவுனின் கீழ் பாகத்தை உள்ளாக மடித்து பிள்ளை வழுக்கி தொடையை எட்டிய போதே தவறவிடாது பிடித்து கொண்டவள் அப்படியே சுவற்றில் சோர்ந்து சாய்ந்து அமர்ந்தபடி ஆது என ஈனஸ்வரத்தில் முனங்கியவள் தலை குப்பற கிடந்த குழந்தை என்ன குழந்தை என்பதை கூட அறிய முடியாத அளவிற்கு சோர்வு ஆட்டுவித்தது...

இத்தனை நாள் போராட்டமும் இந்த சின்ன மொட்டை பார்ப்பதற்காக தானே அதனை கண்டு விட்ட மகழிச்சியில் பெருமளவாக சோகம் தளர்ந்து நம்மியதியாக உணர்ந்தாள்...

இவள் ஈனஸ்வரத்தில் முனங்கியது கேட்கவில்லை என்றாலும் ஏதார்த்தமாக எப்போதும் இரவு ஒரு முறைக்கு பல முறை அவள் நலத்தை சோதித்து திருப்தி கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தவன் இன்றும் எழுந்து பக்கத்தில் அவளை கைகளால் அலசி தேடியவனின் கைகளுக்கு அகப்படாத அவளின் ஸ்பரிசத்தில் பதறி வேகமாக எழுந்தவன் அம்மு என கூக்குரலோடு சற்று பதற்றமாக கட்டினில் கீழ் விழுந்திருப்பாளோ என்ற எண்ணதோடு மெல்ல குனிந்து பார்த்தவனுக்கு இன்னும் தான் பதட்டம் கூடி போனது...

எங்கடி இருக்க என எதர்ச்சையாக குளியலறையை திறந்தவன் வெகுவாக அதர்ந்து ஒரு சில நொடிகளுக்கு திக் பிரம்மை பிடித்ததாய் நின்றவனுக்கு எதுவும் விளங்கிறாத நிலை...

இரத்த திட்டுகளோடு குட்டி உருவமாக அன்னையின் மடியை ஆக்ரமித்து இருந்த குழந்தையை பார்த்து என் உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை...

ஆனால் எத்தனை நேரம் அதிர்ச்சியோடே இருப்பது அவசரமாக அவளை நோக்கி ஒடி அம்மு இங்க பாருடி என கன்னத்தை தட்ட அவளோ நம்மதியாக எந்த வலியும் இல்லாத சுமாக நித்திரையின் மயக்க பிடியில்...

தொப்புல் கொடியோடு கிடக்கும் குழந்தையை திருப்பும் பயமாக இருந்த போதும் குப்புற படுத்ததில் மூச்சுக்கு திணறிய குழந்தையை மெல்ல திருப்பி நெஞ்சை நீவி விட்டதும் தான் தாமதம் வீல் என வீட்டையே இனிமையாக குலுக்கியிருந்தாள் அவனின் மகளரசி...

தேவகி மற்றும் ராஜன் அஞ்சலியின் நிலை அறிந்து இங்கேயே தங்கிவிட்டிருந்தது ஒரு வகையில் அவனுக்கு தொதாக போயிருக்க கால நேரம் நாகரிகம் பார்க்க நேரம் இன்றி அவர்களின் அறையை தட்டி கொஞ்சம் சீக்கிரம் வாங்க என அவன் அழைப்பது விட்டு ஒடியவனின் பின்னோடே ஒடியவரின் காதை நனைத்தை இனிய பாடலான அழுக்குரலை கேட்டு மாப்பளை என ஏதோ கேட்க வந்தவரை தடுத்து சீக்கரம் வாங்க என அழைத்து சென்றவன் நேராக அஞ்சலி முன் நிறுத்தி விட்டு நா டாக்டர்கு கூப்பிடுறேன் அவளை கொஞ்சம் பாத்துக்கொங்க என கூறிவிட்டு...


அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து உடனே மருத்துவர் இங்கு வந்திருக்க வேண்டும் என்ற கட்டலையோடு போனை அனைத்த சில நிமிடங்களிலேயே அவன் கூறிய தகவலுக்கு அடித்து பிரண்டு வந்த மருத்தவர் வேகமாக அவன் அறை நுழைந்து அஞ்சலியை பார்த்தவர் தேவகி மற்றும் சற்று நேரத்திற்கு கொஞ்சம் முன்னதாக அங்கே ஆஜராகி இருந்த சாந்தியையும் வைத்து அடுத்த அடுத்த காரியங்களில் படபடத்தார்...


மிஸ்டர் குழந்தை சீக்கிரமே பிறந்துருச்சு இல்லையா அதுனால இன்குபெடர்ல வைக்கனும் அதுக்கு நீங்க ஹாஸ்பிடல் அழைச்சுட்டு வரனும் உடனே என்றவர் குழந்தையை மிக கவனமாக மெல்லிய பூந்துவலையால் ரோஜா மொட்டாக சுற்றி விட்டு அஞ்சலியின் வயிற்றையும் சுத்தம் செய்து விட்டு சீக்கிரம் கார்லயே வரலாம் பிரச்சனை இல்லை என்று கூறியவர் அவர்களுக்கு முன்னதாக ஹாஸ்பிடலை சென்றடைய கிளம்பியிருந்தார்...

தேவகி மற்றும் சாந்தியின் உதவியோடு குழந்தையோடு அரை மயக்க நிலையில் இருந்தவளையும் அள்ளி எடுத்து கொண்டு மருத்துவமனை சென்றான்...

தீடரென தேவதை ஒன்று கண் முன் தொன்றி நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுடிங்க அதுனால இனி உங்களுக்கு மகிழ்ச்சி மட்டும் தான் என கூறி நொடியில் சூழலை மாற்றி வாழ்வை நந்தவனமாய் மாற்றியதை போல் மிகவும் இனிமையானதாக அமைந்து போனது அந்த நொடிகள்....

ஓர் அளவிற்கு சோர்வு களைய எழுந்த அஞ்சலி தன் பக்கம் நின்ற அவளனவனை பார்த்து முறுவலித்தவள் நமக்கு என்ன குழந்தை என்றவளின் தலையை வருடி உன்னோட மினியேச்சர் என்றவனின் கைகளை இறுக பற்றி கொண்டு ஆனந்தமாக கலங்கியவளின் கண்களை துடைத்து விட்டு...

இனி உன் கண்ணுல இருந்து கண்ணீர் வருதுனா அது நா உன் பக்கத்துல இல்லாத சமயமா தான் இருக்கனும் சரியா என மெல்லிய குரலில் அழுத்தமாக கூறியவனின் வார்த்தையில் அழுகையை அப்படியே அனைப்போட்டு தடுத்து நிறுத்தியவள் பாப்பாவ பாக்கணும் என கூறிய நொடி பிள்ளையை தூக்கி வந்த நர்ஸ் பீட் பண்ணுங்க என கூறி குழந்தையை எப்படி ஏந்தி கொண்ட பாலுட்ட வேண்டும் என்பதை சொல்லி கொடுத்து விட்டு அவள் விலகி கொண்டதை அடுத்து..


பிள்ளையை சரியாக பிடிக்க முடியாமல் தடுமாறியவளை பிடித்து நீ நேரா முதல்ல கம்பர்டேபலா கொஞ்சம் சாஞ்சு படு நா பாப்பாவ பிடிச்சுக்குறேன் என கூறி அவள் தயக்கத்தை கருத்தில் கொள்ளாது அவனே அவள் அடையை விலகி விட்டு பிள்ளைக்கு பாலுட்ட வைத்தவன் எல்லாமே நான் தான உனக்கு அப்பறம் என்ன உனக்கு என்கிட்ட தயக்கம் உன்னலாம் இருடி கொஞ்சம் தேறி வா இருக்கு உனக்கு என அவளை மிரட்டியபடி தன் பிள்ளை மொச்சுக் மொச்சுக் என பால் குடிக்கும் அழகோடு அந்த நிகழ்வையும் சொட்டு விடாது ரசித்து மனப்பெட்டகத்தில் நிறப்பி கொண்டான்...


தங்ளது ஆறு மாத குழந்தையோடு மருத்தவமனை வந்துவிட்டிருந்த இரு ஜோடிகளுக்கும் பெரும் அளவு ஆனந்தம் தான் அதுவும் அடுத்த அடுத்து ஆண் பிள்ளையில் வாசத்தை கண்ட வீட்டில் இப்போது பெண் வாசத்தை நுகரவும் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி..

குழந்தை மிகவும் சிறு அளவிலேயே இருந்தால் அனைவரின் கைகலில் தவழவில்லை என்றாலும் குட்டி தொட்டிலில் வைத்தே ஆசை தீர கொஞ்சி மகிழ்ந்தனர்...

கதிரவனின் வெப்ப கதிர்கள் தன் முகத்தை தீண்டியதில் நினைவலைகளோடு தூக்கத்தில் இருந்தும் மீண்டு எழுந்த அதர்ஷனுக்கு தன் மகள் பிறந்து ஒரு வயது கனிசமாக கடந்து விட்ட போதும் நடந்தவை எல்லாம் கனவு போலவே இருந்தது..

கட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி தொங்கிய தொட்டிலில் படுத்திருந்த தன் மகளை கொஞ்சமாக துனியை விலக்கி பார்த்து சிரித்து கொண்டவன் அடுத்ததாக மனைவி புறம் திரும்ப அவளோ குழந்தைக்கே டப் கொடுக்கும் விதமாக அவன் மாரில் தன் கன்னம் பிதுங்க அழுத்தி கொண்டு லேசாக வாயில் கீற்றாக ஒலுக தூங்கியவளை பார்த்து யாரு குழந்தைனே தெரியலை என செல்ல அலுப்போடு முனங்கி கொண்டவன் அவளை எழுப்ப தொடங்கினான்...


அடியே அம்மு எழுந்துரு இன்னைக்கு என்ன நாள்னு மறந்து போச்சா இன்னும் தூங்குற கிளம்பு டி என எழுப்பவும் வேகவேகமாக எழுந்து அமர்ந்தவள் மணி என்னதனை என கேட்டதை அடுத்து அவன் கூறிய பதிலில் அவனை கடுமையாக முறைத்து தள்ளியவள்...

யோ போயா ஆறு மணிக்கு போய் எழுப்பிக்கிட்டு என்றவளை இழுத்து அனைத்தவன் என்னது போயா வா சேட்டை கூடி போச்சுடி உனக்கு அதான் வாய் ரொம்ப நீளுது என கூறி பேசி இதழுக்கு தண்டனை தருவதாக நினைத்து வருடி விட்டு கொண்டிருந்தான்..

மெல்ல அவனின் இருந்து மூச்சு வாங்கி விலகியவள் இன்னும் தான் டைம் இருக்குல நாம் வேணும்னா அடுத்து அதர்ஷன் வர்மா மினியேச்சர் ரெடி பண்ணுவோமா என்றவளை அனைத்தவாக்கிலேயே முறைத்தவன் வேண்டாம்டி ஒழுங்கா இருந்துக்கோ என்கிட்ட அடி வாங்காத என்றவனை நக்கலாக பார்த்து..

எங்க அடிங்க பார்ப்போம் என்றவளை பார்த்து இன்னும் முறைத்தவன் ஏதோ கூற வாயை திறக்க வரும் அவளே அவன் சொல்ல வருவதை கூறி முடித்திருந்தார்..

என்னது எனக்கு சேட்டை அதிகா ஆகிறுச்சு அதான் வாய் அதிகமா இருக்கு அதான சொல்ல வந்திங்க என்றதில் சிரித்தவனை பார்த்து...

சிரிச்சு ஏமாத்தாதிங்க சொல்லுங்க ரெடி பண்ணலாமா...

வேண்டாம் டி இன்னோருக்கா நீ அப்படி வலி அனுபவிக்கிறது கண்டிப்பா என்னால பார்க்க முடியாது நமக்கு நம்ம ஆராதனா போதும்..

என்றவனை பார்த்தவள் சரி விடுங்க இதுவே வேண்டாம்னு சொல்லிட்டிங்க அப்போ சைட் டிஸ் கூட வேண்டாம்னு தான் சொல்லுவீங்க போங்க என்றுவிட்டு விலக பார்த்தவளை இழுத்து தன் மேல் விழ வைத்தவன் அது எல்லாம் நா வேணாம்னு சொல்லவே இல்லை நீ கொடுத்தா ஓகே தான்..

ஹையோடா நா ஒன்னும் போர்ஸ் பண்ணல நீங்களும் எனக்காக கஷ்டப்பட வேண்டாம் என்றவளின் இதழை இழுத்து இழுத்து விளையாடியபடி சும்மா சும்மா கோப படுற அம்மு எனக்கு வேணும் என தொட்டிலில் தூங்கும் சிறிவளுக்கு போட்டியாக தோற்றம் காட்டியதில் மயங்கியவள் அவன் கேட்டதையும் மறுக்காமல் செய்திருந்தாள்..


அப்படி இப்படி என நேரம் ஒன்பதை நெருங்கி இருந்த வேலையில் தலையில் பூந்துவலையோடு எல்லாம் உங்கலால தான் எட்டு மணிக்கு போகனும்னு தான சொன்னிங்க இப்போ பாருங்க அங்க குழந்தைங்க எல்லாம் ஏதிர்பார்த்து இருக்கும் என புலம்பி கொண்டே சேலையை கட்டுகிறேன் என பெயரில் சுற்றி கொண்டிருந்ததை பார்த்து சிரித்து அவளை நெருங்கி புடவையை நேர்த்தியாக கட்டி விட்டபடி அப்போ எல்லாத்துக்கும் நான் தான் காரணம் இல்லையா என்றவனை நிமிரந்து பார்க்க முடியாது முகம் சிவந்து நின்றவள் கடிப்பட்டும் நனத்தை விலக்கி வைத்து அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவளுக்கு புடவையை கட்டி முடித்து அடுத்ததாக மகள் மேனியை உறுத்தாக செட்டின் கவுனில் மகளை புகுத்தி கிளப்ப தொடங்கினான்..


ஒருவழியாக அவனும் கிளம்பி கொண்டு தன் இரு தேவதைகளையும் கிளப்பி கொண்டு இறங்கியதை பார்த்த வீர் அண்ணா எவ்வளவு நேரம் டைம் ஆகிட்டே இருக்குனு இப்போ தான் தேவா எல்லாத்தையும் கூட்டிட்டு முன்னாடி போயிருக்கான் வாங்க நம்மளும் கிளம்பலாம் என்று அவன் கூறவும் அதர்ஷனை பக்கம் அஞ்சலியின் பார்வை கோபமாக படிந்தது...

சரி டி முறைக்காத நா தான் லேட் பண்ணேன் போதுமா வா போகலாம் டைம் ஆச்சு என்றவன் அவளை பார்வையால் சமாளித்து அழைத்து கொண்டு கிளம்பினான்...

நேராக மழலை ராகம் என்ற ஆஷ்ரமத்திற்கு முன் வண்டியை நிறுத்தியிருந்தான்..

அங்கே நின்றிருந்த அஞ்சனாவும் ரிதன்யாவும் எவ்வளவு நேரம் டி குழந்தைங்க எல்லாம் பாவம் அப்போதுல இருந்து அவுங்க எப்போ வருவாங்கனு கேட்டுட்டே இருக்காங்க வா என அழைத்து கொண்டு சென்றதை அடுத்து அங்கே பிள்ளைகள் குழுமி இருந்த இடத்தில் இருந்த பெரிய பெரிய பரிசு பெட்டிகளோடு சேர்ந்து இருந்த கேக்கின் முன் குழந்தையோடு வந்து நின்ற அதர்ஷன் மற்றும் அஞ்சலி பிள்ளைக்கு பிறந்த நாளை கொண்டாட தொடங்கினர்..

ஆம் இன்று அவர்கள் மகளரசியின் முதல் பிறந்த நாள்...

அவர்கள் சூழ நின்ற குழந்தைகளோடு தேவா மற்றும் வீரின் மகன்களான வர்ஷன் மற்றும் அதீத்த அதிபனும் கை தட்டுகிறேன் என கையை ஆட்டி அப்படியும் இப்படியுமாக அசைந்து ஆடி ஆரவாரம் செய்ததில் பெரியவர்கள் மனதோடு எல்லொரின் மனமும் நிறைந்தது மகழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது...

இவர்கள் இதே போல் இனிமை காற்றை சுவாசிக்க வேண்டி விடைப்பெறுவோம் மக்களே..

நன்றி...

இத்தனை நாள் எனக்கு ஆதரவு கொடுத்த எல்லொருக்கும் ரொம்ப ரொம்ப தெங்கஸ் நா லேட்டா போடுறதையும் பொருமையா படிச்சு கமென்ட் பண்ண எல்லாருக்கும் அதை விட பெரிய தெங்கஸ்...
 
Last edited:
  • Like
Reactions: Maheswari