• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕7

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
அவள் இதழில் கள் உண்ட வண்டாக இதழை விடாது சுவைத்தவனுக்கு மனம் மயங்கி நின்ற போதும் தொழில் அதிபன் முலை மயங்காது விழித்து நின்றதில் தப்பிப்பதற்கு வழி தேடி எமெர்ஜெனசி பட்டனை அழுத்தி இருந்தான் அவன்...

அவன் முலையோ அது பாட்டிற்க்கு தப்பிக்க வழி தேட அவன் இதழோ படு திவிரமாக அவள் உதட்டின் வரி பள்ளங்களை என்னி கொண்டு இருந்தது இதில் அவள் சரிந்ததில் மேல் இதழ் சிரமம் படாமல் தன் இதழில் இனிமையாக அடைப்பட்டு கொண்டதில் இவளுக்கும் ஏசுநாதர் காற்று வந்து வீசயதோ என கண்டமேனிக்கு கவி கிறுக்கி இந்த நொடியை சிலாகித்து கொண்டது அவனின் மனம்...

அவன் எமெர்ஜெனசி பட்டனை அழுத்திய நொடி எமெர்ஜெனசி அலாரம் சத்தம் எழுப்பி ஏதோ ஆபத்து என உணர்த்தியதில் மாலில் இருந்த அத்தனை பெயர் கவனமும் லிப்டின் முன் குவிந்தது...

வீருக்கு தன் அண்ணன் லீப்டின் ஏறினானா என தெரியாத போதும் மற்றவர்களை போல் அவனின் கவனமும் ஈர்த்ததில் லீப்டின் முன் நின்று இருந்தான்...சிறிய சிக்கல் தான் என்பதால் மாலின் மேனேஜர் முலம் ஆட்களை வரவழைத்து அவர்கள் வந்ததும் துரிதமாக ஓரிரு நிமிடங்களில் கதவை திறந்து இருந்தனர் எதுவும் பாதிப்பு இன்றி...

கதவு திறந்த வேகத்தில் வீர் கண்ட காட்சியில் உறைபனியில் சிக்கியவன் போல் சிலையாக நிற்க்க லீப்டின் முன் கூட்டம் போட்டு நின்ற மக்களில் ஒருவன் லீப்ட் திறந்த பின்னும் வெளிவராதவர்களை பார்க்க ஆர்வம் தாங்காது கதவு முன் அடைத்து கொண்ட நின்ற வீரை தள்ளி நிறுத்தி உள் பார்த்தவன் சிறிதாக சிரித்து கியுட் என சலாகித்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட மற்றவர்களும் அவர்கள் நின்ற கோலத்தை புன்சிரிப்புடன் ரசித்தும் சிலர் பொறாமை கொண்டும் பார்த்து விலகி சென்றனர்...

உள் இருந்தவனோ துவண்ட கொடியவளை பதமாக கரங்களில் தாங்கி விரசம் இல்லாது தன் நெஞ்சோடு சாய்த்து அனைத்து காற்றுக்கும் நோகாத குறலில் ஓய் என கன்னத்தில் தட்டுகிறேன் என்ற பேர்வழி வருடி கொடுத்து மயங்கியவளை எழுப்பி கொண்டு இருக்க..

அந்த காட்சி மாலை தென்றலினோடு சுகமாக மொதி செல்லும் பூவின் மனம் போல் அனைவருக்கும் இனிமையாகவே தெரிந்து ரசிக்க வைத்தது... பாவம் வீரின் நிலை தான் 🤭🤭...

ஒருவழியாக தன்னை சமாளித்து கொண்ட வீர் வேகமாக தன் அண்ணனிடம் சென்று அண்ணா அஞ்சலிய தூக்கிட்டு வாங்க ஆஸ்பிடல் போகலாம் என கூற அவனும் அவன் வார்த்தையை ஆமொதித்து அவளை விருட்டென தூக்கி கொண்டு தன் கார் பார்கிங்கை நோக்கி ஓடினான்..

அவளை பின்யிருக்கையில் கிடத்திவிட்டு முதல் உதவிக்காக காரில் இருந்த தன்னிர் போத்தலை எடுத்து அவள் முகத்தில் பளீச் என தண்ணீர் தெளிக்க சாதாரன மயக்கம் என்பதால் சட்டென மயக்கம் தெளிந்து கண்ணின் கரு மணி உருல விழித்து கொண்டாள்...அவள் விழித்ததை பார்த்து பெருமூச்சு விட்டு எறிந்து நின்ற அதர்ஷனின் தொலைபேசி தொல்லை பேசியாக மாறி இம்சை செய்ததில் சலித்து கொண்டு சற்று திரும்பி நின்று அழைப்பை ஏற்க்கவும் அவள் முழுதாக தெளிந்து விழித்து அமரவும் சரியாக இருந்தது...

அவளோ ஓரு நொடி தனக்கு முதுகு காட்டி நின்றவனை கூர்ந்து பார்த்து விட்டு பின் திரும்பயவளின் கண்ணில் பட்ட வீரை கண்டவள் அப்போதுதான் மொட்டவிழும் மலராக மலர்ந்து சிரித்து வீர் அண்ணா நீங்க எங்க இங்க என கேட்டவளின் தலை கலைத்து சிரித்தவன் அது நா கேட்கனும் நீ இங்க என்ன பண்ணுற என கேட்க...

எஸ்.ஆர் கன்ஸ்டரக்ஷன்ல இருந்து என்னோட டிஸைன் பிடிச்சு போய் இன்டிரியர் டிசைனிங் ஹெட்டா ஹயர் செஞ்சு இருக்காங்க நாளைக்கு தான் வேலை இன்னைக்கு வேட்டியா தான் இருந்தேனா அதான் இங்க வந்தேன் என நீட்டி ஆழகாக தலை ஆட்டி கையை அசைத்து பேசியவளை வீர் கவனித்தானா தெரியாது ஆனால் போன் பேசி கொண்டே நடந்தவன் இதை கவனித்து ரசிக்க தவறவில்லை...

இவள் எஸ்.ஆர் கன்ஸ்டரக்ஷன்ல என கூறியதும் சிறிது புருவம் முடிச்சிட்ட வீர் பின் முகத்தை இயல்பாக வைத்து கொண்டு சரி டா..

சாப்பிட்டியா நேரம் ஆச்சு என ஆதுரமாக கேட்க இல்ல வீட்டுல அக்கா சமைச்சு வச்சு இருக்காங்க வீட்டுக்கு போய் சாப்பிடனும் என கூறியவள் திடிரென முகம் சுருக்கி உங்க மேல கோவமா இருக்கேன் இனி உங்கள பாத்தாலும் பேச கூடாதுனு நெனச்சி மறந்து பேசிட்டேன் போங்க என கழுத்தை வெடுக்கென திருப்பி கொண்டு குழந்தை பாவம் காட்டியவளை புரியாது பார்த்தவன்...

என் மேல எதுக்கு கோவம் என தங்கச்சிக்கு...

ஆமா கோவைல பார்த்த அப்பறம் உங்களை ஆளையும் காணோம் அட்ரஸ்சையும் காணோம் சரி போன் பண்ணியாவது பேசுனிங்களா அதுவும் இல்ல சும்மா வாய் தான் சக்கரை பாகு ஆனா என் என்னமே இல்லை என சிலுப்பி கொண்டு சண்டைக்கு நின்றவளை..

அப்படி இல்லடா நிறையா வேலை மூச்சு கூட விட முடியல நீ கேட்கிறதும் சரி தான் போன் பண்ணலாம் தான் ஆனால் அன்னைக்கு அவ்வளவு நேரம் பேசியும் நம்பர் வாங்க மறந்துட்டேன் அதான் என நீண்ட விளக்கம் கொடுத்து பாவமாக முகத்தை வைத்து கொண்டு இந்த தடவை மன்னிக்க கூடாதா என கேட்க...

அதில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு சரி போனா பிழைச்சு போங்க என பெரிய மனதுடன் மன்னித்தவளை செல்லமாக தலையில் தட்டி வாலு செட்டை தான உனக்கு..

அவளோ பழிப்பு காட்டி சிரித்தவள் பின் சரி நா கிளம்புரேன் வீட்டுக்கு போய் நாளைக்கு வேலைக்கு போக எல்லாம் ரெடி பண்ணனும்...

சரிடா போய்ட்டு வா ஆனா எப்படி போவ உனக்கு வழி தெரியுமா..

என் கூட தங்கி இருக்க அக்கா தெரிஞ்ச ஆட்டோ அண்ணா நம்பர் கொடுத்து இருக்காங்க அவுங்கள அழைச்சு போயிருவேன் என கூறியவள் அவருக்கு அழைத்து வர கூறி விட்டு பின் அவர் வந்ததும் கிளம்பி சென்றாள்...வீரும் ஆயிரம் பத்திரம் கூறி ஆட்டோவில் ஏற்றி விட்டான்...

போகும் சற்று தொலைவில் முதுகை காட்டி திரும்பி நின்றவனின் பக்கம் பார்வையை திருப்பி ஆட்டோ அந்த இடத்தை விட்டு அகலும் வரை பார்த்தவள் பின் திரும்பும் போது சட்டென திரும்பியவனை நன்றாக கூர்ந்து பார்க்கும் நேரம் ஆட்டோ அந்த இடத்தை தாண்டி இருந்தது...

காரணமே இல்லாமல் வருத்தப்பட்டு கொண்டது தான் காதல் துளிர்த்த கனமோ..

அவள் சென்ற பின் சிறிது நேரம் போனில் பேசி கொண்டு இருந்தவன் பின் வைத்து விட்டு திரும்பிய நேரம் அஞ்சலி அங்கு இல்லாததில் ஓரிரு நொடி பரபரப்பாக தேடியவன் பின் தன் போக்கை உணர்ந்து தன் தலையில் தட்டி நோடா அதர்ஷா என தனக்கு தானே கூறியவனின் விழி அப்போதும் அடங்காமல் தேடியதை என்ன என கூற..

வீர் நின்று இருந்த பக்கம் வந்த அதர்ஷன் போலாம் என கூறியவன் பின் தடுமாற்றத்தோடு அவனிடம் இங்க ஒரு பொண்ணு இருந்துச்சுல எங்க

அவன் யாரை கேட்கிறான் என தெரிந்துக்கொன்டே யாரு அண்ணா

அதான் மயங்கி விழுந்தாள அவ பன்மை எல்லாம் வரவில்லை சரலமாக உரிமை தொனிக்க ஒருமையில் தான் அழைத்தான்..

அவுங்க கிளம்பிட்டாங்க என்றதோடு முடித்து கொண்டவன் கிளம்பலாமா என முகத்தை கூர்ந்து கேட்டதில்..

ஓஓ அப்படியா என தெய்ந்த குரலில் இழுத்தவன் பின் வீரின் பார்வையில் தன்னை சுதாரித்து கொண்டு எனக்கு மீட்டிங்கு டைம் ஆச்சு சீக்கிரம் வண்டிய எடு என காரில் ஏறி கொள்ள வீர் காரை இயக்கினான் தங்கள் தலைமை அலுவலகம் நோக்கி...காரும் அந்த தார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது....

*******************

ஒருவன் காலில் விழாத குறையாக இந்த தடவை கண்டிப்பா மிஸ் ஆகாது அதுக்கு பக்காவா பிளான் பண்ணியாச்சு நம்புங்கள் என கூற

எதிரில் இருந்தவனோ எதற்கும் பிடி கொடுக்காமல் தலை அசைக்க...

உடனே தன் பக்கம் அமர்ந்து இருந்தவருக்கு கண் காட்டி பேசு என கூற..அவரோ ம்ம் என தலை அசைத்து இதுக்கு நா பொறுப்பு மீறி ஏதாவது சிக்கல் ஆச்சுனா உங்க இஷ்டம் அடுத்து கூட எங்க கிட்ட லிங்க் வச்சுக்க வேண்டாம் என கண்டிப்பாக தான் திட்டமிட்டது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்குறுதி கொடுத்தார் தாஸ்...

உன்ன எப்படி நம்ப சொல்ற சாரே போன தடவையே உனக்கு குடுத்த வேலையை சொதப்பிட்ட..இப்போ உன்கிட்டு எப்பிடி கொடுக்க அதுவும் இல்லாம இது எவ்வளவு லாபம் வரும் தெரியுமா என மலையாளத்தின் மனமோடு தமிழ் பேசியவன் தன் காரியத்தில் கண்ணாக இருந்தான் ஏனினில் இது ஈட்டி தரும் லாபம் பெரிது அல்ல இதனால் பல ஆர்டர் தனக்கு கிடைக்கும் என்றுதான்..

செட்டா இந்த தடவை முடிச்சுருவான் பக்கா என மீண்டும் அவர் உறுதியாக கூறியதில் யோசித்தவர் பின் சரி நீங்களே பன்னுங்க கமிஷன் வேலைய முடிங்க பேசிக்கலாம் என கூற அவனுக்கு தலைகால் புரியவில்லை ஆனந்ததில் ஆனால் அவனுக்கு தெரியவில்லை இது தான் அழிவின் முதல் படி என..

பேசி முடித்து வெளிய வந்தவர்கள் செல்வா அவர் சொன்னது கேட்டேல பாத்துகோ அப்பறம் என்கிட்ட வந்து அது இதுனு கதை சொல்லாத...இந்த தடவ மட்டும் சொதப்புச்சு அவன் நம்மை கானாபிணமா ஆக்கிருவான்...

போன தடவ அந்த அதர்ஷன் தடுத்துடான் மாமா இந்த தடவை அவனுக்கு முன்னாடி நம்ம முந்திக்கனும் அதான் சரக்க இரண்டு நாள் முன்னாடியே நம்ம கிட்ட வர மாதிரி பிளான் பின்னிட்டேன்...

ம்ம் எதோ பண்ணு ஆனால் செல்வா இந்த தடவை மிஸ் ஆச்சு நம்ம நடு தெருவுக்கு தான் போகனும்..

இவன் தான் செல்வா செல்வராகவ் பிஸ்னஸ் மேன் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும் பிளாக் மார்கெட் புரோக்கர் பல தகாத வேலைகளை பிஸ்னஸ் என்னும் போர்வைக்குள் இருந்து அசால்டாக நடத்தி முடிப்பவனுக்கு ஏழரையாக வந்தவன் தான் அதர்ஷன்...

ஒவ்வொரு முறையும் அவனை அடியோடு வேர் அறுக்க தான் பார்க்கிறான் ஆனால் வீசும் கோடாலி தன்னையே பதம் பார்ப்பதை என்னி எரிச்சல் தான் பெருகும் செல்வராகவனுக்கு..

அவனை தன் வழியில் இருந்து அகற்ற அத்தனையும் செய்து விட்டான் ஆனால் பலன் பூஜ்யம் தான்.. ஆசை இல்லாத மனதின் உண்டா என்ன முற்றும் துறந்த முனிவனுக்கு கூட ஆசை இருக்கும் ஆனால் இவன் வாய்ப்பே இல்லை என்பது போல் எல்லா பக்கங்களில் ஆசை காண்பித்தும் மசியவில்லை...

ஆண்கள் சபல புத்திகாரன்‌ தானே என பெண்ணை அனுப்பி வைத்தான் அவளும் அதர்ஷன் மேல் இருந்த மயக்கத்தில் சென்று அடி வாங்கி தலை தெறிக்க ஒடியது தான் மிச்சம்...

இப்படி கண்ணில் விழுந்த சீயக்காய் போய் உறுத்தி கொண்டே இருப்பவனை நினைத்து ஒச்சி மண்டை சூடேறி போனது அவனுக்கு பாவம்...

தாயும் மாமாவும் பக்கபலமாக இவனுக்கு செயல்படுவதால் தங்குதடையின்றி சென்ற அவனது செயலுக்கு இப்போது இருக்கும் ஓரே தடைகல் அதர்ஷன் மட்டுமே...

***************
அதர்ஷன் மீட்டிங் ஹாலின் உள் நுழைந்த நொடி அதுவரை சலசலத்த அறையில் இப்போது நிசப்தம் மட்டுமே குடி கொண்டு இருந்தது..

அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணக்கம் கூற அதனை சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு சாவகாசமாக தன் இருக்கையில் அவன் அமர்ந்த பின்‌ மற்றவர்களும் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்...

இப்போது எடுக்கும் விளம்பரமதில் இருக்கும் சிறு சிக்கல் அனைவரையும் யோசிக்க வைத்தது ஏனினில் இது முதலீட்டை விட பத்து மடங்கு லாபத்தை ஈட்டி தந்தாலும் அதில் இருக்கும் சிறு சிறு பிரச்சனை வளர்ந்து நிற்கும் தங்கள் நிறுவனத்தை கீழ் தள்ளவும் வெகு நேரம் ஆகாது என்ற அச்சத்திற்கு முற்று புள்ளி வைக்க தான் இந்த மீட்டிங்...

அனைவரும் தங்கள் கருத்தை முன் வைத்து அதற்கு காரணம் கூற அனைத்தையும் பொறுமையாக உள்வாங்கி கொண்டவன் பின் நிமிர்ந்து அமர்ந்து பேச தொடங்கினான்...

இதுல நீங்க சொல்லுற மாதிரி சின்ன சின்ன பிரச்சனை இருக்கு ஓகே தான் ஆனால் அத‌ மீறி நம்ம பண்ணும் போதும் நமக்கு லாபத்தை விட இன்னும் நல்ல ஓரு ரெபுடென்ஷன் கிரியேட் ஆகும் அது மட்டும் இல்லாம பிரச்சனை இல்லாத பிஸ்னஸூம் இல்லை சோ துணிந்து ஒரு கால் முன் வச்சா தான தெரியும் என்னனு நம்மை டீமை தாண்டி எந்த பிரச்சனையும் வாராதுனு எனக்கு நம்பிக்கை இருக்கு என அத்தோடு முடித்து கொண்டவனின் பேச்சு ஜாலம் அங்கு இருந்தவர்களின் கருத்தையும் மறந்து தலை அசைக்க வைத்தது...

மீட்டிங் முடிந்ததும் தன் கேபினுக்கு வந்து அமர்ந்து‌ மடிக்கணினியை உயிர்ப்பித்து வேலையை பார்க்க தொடங்கினான் அதர்ஷன் வர்மா...

இத்தனை‌ நேரம்‌ தன் கண்களால் அனைவரையும் ஜாலம் செய்து கவிழ்த்தவன் இப்போ சிறு கீற்றாக தோன்றிய தன் மோகினியின் நினைவில்லை மொத்தமும் கவிழ்ந்து இருந்தான் மாயவன் அவன்..

அவனுக்கே சில விஷயங்கள் புரியவில்லை ஏதோ பேன்டசி உலகில் மிதப்பதை போல் அனைத்தும் கனவு போல் இருந்தது...கட்டுண்டு அவள் இதழில் முழ்கியது ஒரு புறம் இன்பமாக தித்தித்தாளும் மறு புறம் நெருஞ்சி முள்ளாய் ஏதோ அழுத்தியது அவளின் பால் தடம்புரலும் தன் மனதை இறுக்கி பிடித்தவன் வேண்டாம் அதர்ஷா என தனக்கு தானே கூறி கொண்ட போதும் மனதோ அடங்காமல் அவளிடமே சரண் புக துடித்து நின்றது..

தூங்கும் அழகி கதையில் அந்த அழகி தூங்கிய போதும் தனக்கான இளவரசனை தன் அழகால் வசிகரித்து மனதை கொள்ளையிட்டதைப் போல் தான் இவன் கதையும்...ஆனால் காதல் தான் இல்லை என வேகவேகமாக தலையாட்டி மறுக்கிறான்..
ஆனால் அவனுக்கு தெரியவில்லை சிறு ஈர்ப்பு தானே காதலின் முதல் படி என்று.....

தொடரும்.............
 
Last edited:

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
Spelling check panni podunka ma, மூளை க்கு முலை ன்னு இருக்கு, அர்த்தமே மாறிடும்
 
  • Like
Reactions: Brindha Murugan

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
ரெண்டு பேருமே காதலின் முதல் படில காலடி வெச்சிட்டாங்க போல! 😍😎
 
  • Like
Reactions: Brindha Murugan