அத்தியாயம் 10
ஒரு வாரம் கடந்த நிலையில் அன்று அலுவலகம் வந்திருந்தாள் அகலிகை. அவளின் வருகைக்காக தான் காத்திருந்தாள் வந்தனா. அவள் வந்த நொடியை வேகமாய் அழைத்துக்கொண்டு தனிமையாக இடம் நோக்கிச் சென்றாள்.
"என்னடி கால் பண்ணா ஆபீஸ்ல வந்து நேர்ல பேசுறேன்னு சொல்லுற, என்ன தாண்டி பிரச்சனை ? டிஎன்சி பண்ணலையா அதுக்குள்ள ஆபீஸ் வந்துட்ட, ஹாஸ்பிட்டல இருந்து நீ ஏன் அன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகிட்டே. என்னதான் நடக்குது ? " என்று இந்த ஒரு வாரமாக தன் மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் அவளிடம் கேட்க, அவளோ நடந்த அனைத்தையுமே கூறினாள்.
"அப்படின்னா நீ இந்த குழந்தையை வளர்க்க போறியா ? இது உங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க. அப்பா இல்லாம இந்த சமுதாயத்தில நீ எப்படி இந்த குழந்தையை வளர்ப்ப ?"
"ஏன் என்னால வளர்க்கறதுக்கு என்ன ? நான் நல்ல படிச்சிருக்கேன் சம்பாதிக்கிறேன். என் கிட்ட திறமை இருக்கு. ஏன் ரத்தத்தில இருந்து வந்த குழந்தையை என்னால வளர்க்க முடியாதா என்ன ? நான் நல்லபடியா வளர்ப்பேன். எனக்கு யாருமே தேவையில்லை "
"சரி இந்த விஷயத்தை நீ நம்ம சார் கிட்ட சொல்லிட்டியா ?"
"ஹாஸ்பிட்டல் இருந்து வந்த அன்னைக்கே சொல்லிட்டேன் "
"ஓ அதனால தான் சார் உர்ன்னு சுத்திக்கிட்டு இருக்காரா எப்ப பார்த்தாலும். காரணமே இல்லாமல் நம்ம ஸ்டாப் எல்லாத்தையும் திட்டிக்கிட்டே இருக்காங்க. கௌஷிக்கை கூட நேத்து எல்லாரும் முன்னாடியும் ரொம்ப திட்டிட்டாரு. அவனுக்கு அவமானமா போச்சு. இத்தனைக்கும் அவன் பண்ண ப்ராஜெக்ட் நானும் செக் பண்ணி பார்த்தேன். எல்லாமே கரெக்டா தான் இருந்துச்சு. ஆனா அது சரியில்ல அப்படின்னு சொல்லிட்டாரு. இப்ப தான் புரியுது அதுக்கு என்ன காரணம் நீ சொன்ன வார்த்தைகள் அவர் மனசு ரொம்ப பாதிச்சிருக்கு அப்படின்னு "
"இந்த குழந்தையை நீ அபார்ஷன் பண்ணிடு. நமக்கு குழைந்தையே பிறக்கலைனாலும் பரவாயில்ல நான் உனக்கு வாழ்க்கை தரேன். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ரொம்ப பெருந்தன்மையா முன்னாடி வந்து அவன் சொல்றான். எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அதனால எங்களுக்குள்ள கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. அந்த கோபத்தில் தான் இப்படி எல்லாரையும் போட்டு வறுத்துக்கிட்டு இருக்கான். கொஞ்ச நாள் தான் அதுக்கப்புறம் சரியா போயிரும் விடு "
"சரி இப்ப நெக்ஸ்ட் என்ன பண்ற ஐடியால இருக்க ? உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல போறியா இல்லையா ?"
"என்னால இப்படியே இருக்க முடியாது. கண்டிப்பா அவங்க கிட்ட சொல்லித்தான் ஆகணும். ஆனா அதுக்கு முன்னாடி நான் பெங்களூர் போகணும். பெங்களூர் போய் அன்னைக்கு நான் ஸ்டே பண்ண ஹோட்டல்ல என்ன நடந்ததுன்னு நான் கண்டு பிடிக்கணும். அன்னிக்கு நான் மகிழ் கூட தான் அந்த ரூம்ல இருந்தேன். எனக்கு நல்ல அவனுடைய முகம் ஞாபகம் இருக்கு. கண்டிப்பா எல்லா ஆதாரமும் கிடைக்கும். ஆனா இப்ப டிராவல் பண்ண கூடாது அப்படின்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு அப்பறம் வேணாம் நீங்க எங்கனாலும் போகலாம். அதுவரைக்கும் நீங்க ரெஸ்ட்ல இருந்தா மட்டும் தான் உங்களோட பேபியை நீங்க புரோடக்ட் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால தான் நான் இப்ப அமைதியா இருக்க வேண்டியது ஆயிடுச்சு "
"சரி விடு உன்னோட உயிருமே முக்கியம் தான். இப்ப அந்த குழைந்தையை அபார்ட் பண்ணி எல்லாம் உன்னோட உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கப்புறம் என்ன பண்ண முடியும் பார்த்துக்கலாம். உனக்கு என்ன ஹெல்ப் வேணுனாலும் என்கிட்ட கேளு. எங்க அக்காக்கு கூட இப்ப தான் ரீசண்டா குழந்தை பிறந்துச்சு. அதனால உனக்கு ஏதாவது டவுட் இருந்தா நான் என் அக்கா கிட்ட கேட்டு சொல்றேன். எந்த நேரம் ஆனாலும் எனக்கு கால் பண்ணு. சும்மா என்ன அவாய்ட் பண்ணிட்டு இருக்காத சரியா புரிஞ்சுதா " என்று வந்தனா கூறவே, சரி எனக் கூற பின் இருவரும் அன்றைய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
கௌஷிக்கு அன்று அகலி வந்துவிட்டால் என தெரிந்ததுமே அவளின் முன்னே வந்து நின்று விட்டான்.
"மேடம் நல்ல வேலை நீங்க எங்க வராமலே போய்விடுவீங்களான்னு நினைச்சேன். ஒரு வாரமா நீங்க எப்ப வருவீங்க எப்ப வருவீங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன். வந்தனா கிட்ட கேட்டா அவ எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டா. எனக்கு உங்களோட உதவி வேணும் மேம் உங்களுக்கே தெரியும் அந்த பிராஜெக்ட் பத்தி. நான் நல்லா தான் பண்ணுனேன். ஆனா சாருக்கு அது பிடிக்கலை " என அதில் தனக்கு என்ன சந்தேகம் என்று அவளிடம் கூறி அவளின் அபிப்பிராயத்தை கேட்டான்.
அதை எந்த வகையில் திருத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் இருவரும் நீண்ட நேரமாக டிஸ்கஸ் செய்துக் கொண்டனர். ஒரு வழியாக இரண்டு மணி நேரம் அவர்களின் அந்த மீட்டிங் முடிந்து நிம்மதியாக அங்கிருந்து நகர்ந்தான் கௌஷிக். இதை எல்லாம் தன் அறையில் அமர்ந்து சிசிடிவியில் கண்டவாறு தான் இருந்தான் கவி மகிழன்.
முன்பெல்லாம் அவள் யாரிடம் பேசினாலும் எளிதாக எடுத்துக் கொள்பவன் இப்பொழுது அவள் எந்த ஒரு ஆண் மகனிடம் பேசினாலும் ஏனோ தன் உள்ளம் கோபம் கொள்வதை உணர்ந்தான். யாரிடமோ அவளை இழந்து விட்டால் அது தனக்கு நன்றாக தெரிந்த ஒன்று தான். இருந்தும் தன்னிடம் இருந்து அவளை இழப்பதற்கு அவனின் மனமோ முன் வரவில்லை.
அவள் தனது துரோகம் செய்துவிட்டால் இனி அவளின் முகத்திலே விழிக்க கூடாது அவள் தன்னை நம்பவில்லை என்றெல்லாம் நினைத்து கோபம் கொண்டாலும் அகலி எப்பொழுது தன் உயிரானால் என்று அவனுக்கு தெரியவில்லை.
தன்னை விட்டு ஒரு பொருள் செல்லப் போகிறது என்பதை அறியும் நொடி தான் அதனின் மீது தனக்கு அன்பும் பாசமும் வரும் என்பதுப் போல் தான் அவனுக்கு விலகிச் செல்லும் அகலியின் மீது காதல் அதிகரிக்கச் செய்தது.
அன்று காலையில் கூட அலுவலகம் இருவரும் கிளம்பி ஒரே போல் தான் கதவினை மூடி வெளி வந்தனர்.
"நானே உன்ன டிராப் பண்றேன் வா " அகலியைக் கண்டு அழைக்க,
"இல்ல வேணாம் நான் டாக்ஸி புக் பண்ணி இருக்கேன் " என்று பிடிவாதமாக கூறினாள் அகலிகை.
இவள் தன்னிடம் முகத்தை திருப்பி கொண்டு பேசும்போது இதற்கு மேல் இறங்கி வர அந்த நொடி அவனுக்கு மனம் வரவில்லை. சரியென காரிலேயே வழக்கம் போல் கிளம்பி விட்டான்.
இப்பொழுது அவனின் வாழ்க்கை அவனுக்கு வெறுப்போடுச் செல்வதுப் போல் இருந்தது.
முன்பெல்லாம் சந்தோஷமாக அவளோடு பயணித்து தருணங்கள் எல்லாம் நினைவில் வந்து அவனை வாட்டியது. மகிழன் என்ன ஓட்டங்கள் எல்லாம் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு தான் இப்பொழுது சிக்கிய சிக்கலில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பது மட்டும் தான் அவளின் மனதில்.
சிறிதளவு அவளின் கவனத்தை மகிழினின் மீது திருப்பி இருந்தால் ஆழ்மனதில் இருக்கும் காதல் புரிந்திருக்குமோ என்னவோ !
அலுவலகத்தில் ஓய்வு நேரத்தில் வந்தனா அகலி இருவரும் ஒரு காபியை அருந்தியவாறு பேசிக் கொண்டிருக்க அங்கு வந்தான் கவி மகிழன்.
"அகலி இன்னைக்கு நைட் ஒரு பர்த்டே பார்ட்டிக்காக நம்ம கேளம்பாக்கம் வரைக்கும் போகணும். அதுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாமே எடுத்து வச்சுக்கோ. என்ன தீம்ஸ் அப்படிங்கிறது நான் உனக்கு மெயில் அனுப்புறேன். அத பார்த்துக்கோ ரெடியா இரு " என்று கூறவே அவளும் சரி என தலையசைக்க தடுத்தாள் வந்தனா.
'சார் அகலியால இப்ப இதை பண்ண முடியாது " என்று வந்தனா கூறவே,
"இல்ல வந்தனா என்னால பண்ண முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு " என்றாள்.
அதை கேட்ட கவிக்கு சுத்தமாக புரியவில்லை. ஏன் இவ்வாறு இருவரும் பேசுகிறார்கள் என்று ?
"என்ன ஆச்சு ஏன் அவளால முடியாது ? அவளுக்கு இது ஒன்னும் புதுசா கிடையாது. இதுக்கு முன்னாடி ஏகப்பட்ட போட்டோ ஷூட் என்கூட வந்து இருக்கா அவளும் போட்டோ எடுத்து இருக்கா அப்புறம் என்ன ?" என்றுக் கேட்க,
"சார் அப்போ பிரச்சனை இல்ல ஆனா இப்போ டூ ஹவர்ஸ்க்கு மேல டிராவல் பண்ணனும். எப்படி டிராவல் பண்ண முடியும் ? டாக்டர் டிராவல் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. ஆபீஸ்க்கு வராதே அவ டேஞ்சர் தான். அப்படி இருக்கும் போது அவ்வளவு தூரம் வந்தா இவளுக்கு அபார்ஷன் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஒரு வேலை அபார்ஷன் ஆயிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்தாயிரும் " என்று வந்தனா கூறவே, அது அவனுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
இதற்கு முன் சண்டையிட்ட போது தான் இந்த குழந்தை வளர்க்க போகிறேன் என்று கூறினாலே தவிர இந்த குழந்தையை தான் அழிக்க நேரிடும் போது தன் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதை மட்டும் தோழியிடம் கூறியவள் மகிழனிடம் கூறவில்லை.
"அகலி இவ என்ன சொல்றா, இந்த குழந்தை அபார்ஷன் பண்ணா உன்னோட உயிர்க்கு ஆபத்தா ? இத ஏன் நீ என்கிட்ட சொல்லவே இல்ல " என்றான்.
'அய்யய்யோ ! நம்ம தான் கேப்புல வாயை விட்டு இப்ப மாட்டிக்கிட்டோம்மா. இவ வேற என்னை ஏண்டி சொன்னேன் வெளுத்து கட்டுவாளே ' மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "எனக்கு வேலை இருக்கு நான் மறந்தே போயிட்டேன். நீங்க பேசுங்க நான் இத வந்துடறேன் "என்றாள் வந்தனா.
இப்பொழுது அவர்கள் இருவர் மட்டுமே தனியே இருக்க, தன் தோழி சென்ற சில நிமிடங்களிலேயே மகிழனின் முகத்தைக் காண பிடிக்காது அவளும் செல்ல திரும்ப, கரம் பற்றி அழுத்தமாக நகர விடாது தடுத்தான்.
"என்ன விடு மகிழ் நான் போகணும் "
"முடியாது இப்ப வந்தனா சொன்னது உண்மையா ? ஏன் நீ என்கிட்ட சொல்லலை சொல்லு ?"
"நான் ஏன் உங்க கிட்ட சொல்லணும். இது என்ன உங்க குழந்தையா ? நான் என்ன ஆனா உங்களுக்கு என்ன ? இனிமே என் வாழ்க்கையை விட்டு நீங்க போயிருங்க. என் வாழ்க்கை இந்த குழந்தை மட்டும் தான் இந்த குழந்தைக்காக தான் நான் இனி ஒவ்வொரு நிமிஷமும் வாழப் போறேன். உங்களுடைய லைஃப் நீங்க வீணாக்கிடாதீங்க. கொஞ்ச நாள் தான் நான் அதுக்கப்புறம் அந்த பிளாட்டை உங்ககிட்ட சேல்ஸ் பண்ணிட்டு கிளம்புறேன். அதுவரைக்கும் நான் அந்த இடத்தில இருக்கிறேன் " என்று அந்நியன் போல் அவனிடம் கூறினாள்.
அவளின் மனமோ அவன் தன் பின் சுற்றுகிறேன் என்று வாழ்க்கை வீணாக்கக்கூடாது என நினைத்தது.
"அதுக்கு நான் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டேன். நீ என் கூட அந்த பிளாட்டில தான் இருக்கணும். சரி உன்னோட ஒர்க் வேணா நான் வீட்டில இருந்து பண்ற மாதிரி மாத்திக்கிறேன். இனிமே நீ ஆபீஸ் வர வேண்டாம். வீட்டில் இருந்து உன்னோட வேலையை பார்க்கலாம். அதுதான் உனக்கும் நல்லது உன் வயித்துல வளர குழந்தைக்கு நல்லது "
"ஒன்னும் தேவையில்லை நான் ஒரு இடத்தில் முடங்க கூடாதுன்னு நினைக்கிறேன் "
"உன் நெனப்பு சரிதான். ஆனால் நீ என்ன இதுக்கு மேல பேச வைக்காத, அப்புறம் நமக்குள்ள சண்டை தான் வரும் இது ஆஃபீஸ் அதனால நான் அமைதியா இருக்கிறேன். சும்மா எரிச்சல் படுத்துற மாதிரி பேசிக்கிட்டு இருக்காத அரக்கி. இன்னைக்கு நீ வர வேண்டாம் நான் தீபக் கூட்டிட்டு போய்டுறேன். நீ சேஃபா வீட்டுக்கு போ " எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அவன் சென்ற சில நிமிடங்கள் ஆகியும் தன் தோழி இன்னும் வரவில்லையே, அந்த அறையில் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்.
ஒருவேளை இவர்களுக்குள் எதுவும் பிரச்சினை வந்து அவனுக்கு எதுவும் நேர்ந்து விட்டதோ என பயத்தோடு வந்தனா மீண்டும் அந்த அறைக்குள் நுழைய, அங்கே அதே நிலையில் அப்படியே நின்றாள் அகலிகை.
அருகில் சென்று அவளை தொட்டு, "என்னாச்சு, சார் எதுவும் உன்ன சொன்னாரா ?" எனக் கேட்ட நொடி தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
அவளுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே ஆறுதல் வந்தனா ஒருத்தி தான். அவளிடம் தன் மனக்குமுறலை அழுகையாக மட்டுமே வெளிப்படுத்தினாள்.
தொடரும்...