அத்தியாயம் 13
நடுத்தர மக்கள் வசிக்கும் வீதி ஒன்றில் வாடகை வீட்டில் வாசலில் நின்றவாறு கணவனுக்காக காத்திருந்தார் வசுமதி.
"என்னக்கா உங்க வீட்டுக்காரர் வர்றதுக்கு காத்துட்டு இருக்கீங்களா ? அண்ணன் என்ன சின்ன புள்ளையா வந்துட மாட்டாங்களா " என அந்த வழியாக தண்ணீர் எடுத்துச் சென்ற பெண் கேட்கவே,
"அப்படியில்லை வீட்டுக்குள்ளே இருந்தா எப்படி நேரம் போகும் அதான் சும்மா வெளியில நின்னுக்கிட்டு இருக்கேன். காலையில தண்ணி வந்ததே நீங்க எடுக்கலையா ?" என்றுக் கேட்டார்.
பேச்சினை மாற்ற நினைத்து வசுமதி கேட்கவே, அவரோ கேட்டதுக்கு பதில் கூறும் விதமாக "நான் எங்க காலையில இங்கன கிடந்த, வேலைக்கு போயிட்டேனே . இப்ப நாலு மணிக்கு தான் வேலை விட்டு வந்தேன். வீட்டில பார்த்தா ஒத்த சொட்டு தண்ணி இல்ல. என் மகக்காரி இருக்குறாளே எடுத்து வைப்பான்னு பார்த்தா அவ எடுத்து வைக்காம போயிட்டா. சரி நாம எடுத்து ஊத்துவோம்ன்னு தான் ஊத்திக்கிட்டு இருக்கேன். பானையை வேற பைப்ல வச்சிக்கிட்டு வந்துட்டேன் நான் வாரேன் " எனக் கூறி அந்த பெண் சென்று விடவே நிம்மதி மூச்சு விட்டார்.
அந்த வீதியில் இருக்கும் அனைவருமே சகஜமாகத்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பழகிக் கொண்டு இருந்தனர். அவ்வப்போது சண்டையும் வரும் சுவாரசியமாகத்தான் இருக்கும். ஆனால் இவர்களின் இந்த வாழ்க்கைக்குள் வசுமதியால் தான் ஒன்றிப் போக முடியாது தவித்தார். அவரை பொறுத்தவரை இது எல்லாம் புதிது.
அவர் இப்பொழுது வாழும் வாழ்க்கை கூட அவருக்கு புதிதாக தான் இருந்தது. இந்த வாழ்க்கை தான் இனி நிரந்தரம் இதை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இந்த வாடகை வீட்டிற்கு வந்த நொடியை உணர்ந்து கொண்டவரோ முடிந்தளவு தன்னை மாற்றுவதில் தான் முயற்சி செய்து கொண்டிருந்தார். இப்பொழுது முன்புக்கு ஓரளவு தேறி வந்திருந்தார் வசுமதி.
அவரின் விழிப் பார்வை தேடிக்கொண்டிருந்தை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த தெருவுக்குள் பைக்கில் நுழைந்தார் ராம்குமார்.
வீட்டின் வாசலில் வந்து அவர் பைக்கினை நிறுத்தவே, லஞ்ச் பேக்கினை வாங்கிக்கொண்டு இன்முகமாக வரவேற்றார். ஆனால் மனைவியின் முகத்தில் இருக்கும் புன்னகைக்கு மாறாக அவரின் முகமோ வாடிப் போய் தான் இருந்தது.
கணவனின் முகத்தில் இருக்கும் அசதி ஏதோ பிரச்சனை என்பது புரிய, அதை விட அவர் தீவிரமாக யோசித்தவாறு வந்து நின்ற விதத்திலே புரிந்துக் கொண்ட மனைவியோ எதுவும் பேசாமல் முதலில் உள்ளே அழைக்க சென்றார்.
"கைகால கழுவிட்டு வாங்க. நான் டீ போட்டு கொண்டு வரேன் " எனக் கூற அவரும் சரி என உடை மாற்றி தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்து ஹாலில் இருந்த ஒரு சின்ன பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார்.
இந்த நேரத்திற்கெல்லாம் அவருக்கு சூடான டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்த வசுமதி, "என்னாச்சுங்க ஆபீஸ்ல எதுவும் பிரச்சனையா ? உங்க முதலாளி எதுவும் சொல்லிட்டாங்களா ?" என்றுக் கேட்டார்.
"அது எப்பவும் நடக்கிறது தானே, இன்னைக்கு என்னன்னு தெரியல நான் எல்லாமே தப்பு தப்பா பண்ணிட்டேன். அவரும் கொஞ்சம் அதிகமாவே திட்டிட்டாரு. நானும் முயற்சி பண்ணி பார்க்கத்தான் செய்றேன். எனக்கு சுத்தமா எதுவுமே வேலை செய்ய வர மாட்டேங்குது. எல்லாமே மறந்து மறந்து போகுது என்ன செய்ய சொல்ற "
"என்னாச்சுங்க நீங்க முன்னெல்லாம் இப்படி இருக்க மாட்டீங்களே ? ஆடிட்டிங் உங்களுக்கு நுனிவிரல்ல அத்து படியே. டக்குனு ஒரு நிமிஷத்துல அவங்க எவ்வளோ வேலையை கொடுத்தாலும் செஞ்சு முடிப்பீங்களே ? ஆனா இப்ப முடியலன்னு சொல்றீங்க. சில நாளாவே நீங்க இப்படியே தான் சொல்லிக்கிட்டே இருக்கீங்க ?உடம்புக்கு எதுவும் பண்ணுதா ? எதா இருந்தாலும் சொல்லிருங்க. எனக்கு உங்க ரெண்டு பேரையும் விட்டா யார் இருக்கா சொல்லுங்க ?"
"என்ன பேசிக்கிட்டே போற நீ. உடம்புக்கு எல்லாம் ஒன்னும் பண்ணல. நானும் மறக்க முயற்சி பண்ணாலும் என்னால நடந்ததை மறக்கவே முடியல. எப்படி இருந்தோம் ஒரு காலத்துல, ஆனா இப்ப நீ பார்க்க தானே செய்ற இந்த வாழ்க்கைக்கு உன்னாலையும் பழகிக்க முடியல. நீயும் முயற்சி பண்ற நானும் முயற்சி பண்ணத்தான் செய்றேன். நம்ம ரெண்டு பேரும் இப்படி இருக்கும் போது நம்ம மகன் சொல்லவா வேணும். அவன் எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறான். எனக்கு அதை நினைச்சு வேதனையில இருக்கும் போதே மத்த எதுவுமே என் மனசுக்கு ஓடவே மாட்டேங்குது " என்று புலம்ப ஆரம்பித்தார்.
"சரி விடுங்க இப்ப அதை பத்தி நினைக்காம இந்த டீயை குடிங்க மத்ததை பார்த்துக்கலாம். இப்ப நமக்கு என்ன குறை ஏதோ பசிக்கு சாப்பிடுறோம் புள்ள குட்டியோட கொஞ்சம் நிம்மதியா தான இருக்கிறோம். அப்புறம் என்ன விடுங்க பார்த்துக்கலாம். நான் நைட்டுக்கு போய் சமைக்கிறேன் உங்களுக்கு என்ன வேணும் ?தோசை வேணுமா இல்ல சப்பாத்தி பூரி செய்யவா ? "
"எதுனாலும் செய் " என்றதும் சரி என அவர் டீ குடித்து முடித்த டம்ளரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர அதே நேரம் உள்ளே நுழைந்தான் சாய்குமார்.
'என்ன இவன் ராத்திரி தானா வருவேன்னு சொன்ன அதுக்குள்ள வந்துட்டான் ' மனதுக்குள் நினைத்த வசுமதி, "வாடா அதுக்குள்ள வந்துட்டே வேலை தேடி போனியே என்னாச்சு ?" என்றார்.
"கவலைப்படாதீங்க இன்னும் கொஞ்ச நாள் தான் நம்முடைய எல்லா பிரச்சினையும் சரியாயிடும் நம்ம திரும்பவும் பழைய நிலைமைக்கே போயிரலாம் " என கூறியவனோ அதற்கு மேல் அங்கே நிற்காது அங்கிருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
"என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான். வேலை கிடைச்சதா இல்லையான்னு கேட்டா பழைய நிலைமைக்கு திரும்பிடுவோம்ன்னு சொல்றான். ஒரு வேளை வேலை கிடைச்சிருக்குமோ " என சந்தேகமாய்க் கேட்க,
"அப்படி கிடைச்சா நல்லது தான் சரி எனக்கு கொஞ்சம் அலுப்பா இருக்கு நான் போய் படுக்கிறேன் " எனக் கூறிய ராம்குமார் அங்கிருந்து சென்று விட, பின் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.
தன் அறைக்கு வந்து கட்டிலில் சரிந்தாரே தவிர அவரால் நிம்மதியாக விழி மூடி தூங்க முடியவில்லை. எந்த தவறும் செய்யாத தங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை ? தன் குடும்பத்தாரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கவே நிம்மதி என்பதை முற்றிலுமாக இழந்தார் ராம்குமார்.
ராம்குமார் வசுமதி இருவரின் ஒரே புதல்வன் சாய்குமார். இதற்கு முன் இவர்கள் செல்வ செழிப்பில் கோடியில் வாழ்ந்தவர்கள் தான். ஆனால் இப்பொழுது தெருக்கோடியில் ஒரு வாடகை வீட்டில் தங்கும் நிலைமைக்கு வந்திருந்தனர். கை தட்டினால் சுற்றி வேலையாட்கள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வந்த வசுமதி இப்பொழுது அனைத்து வேலைகளையும் செய்யும் நிலைமையில் இருந்தார். ஆயிரம் பேர் வேலை செய்யும் நிலைமையில் இருந்த ராம்குமார் இப்பொழுது ஒரு சிறிய கம்பெனியில் ஆடிட்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
தாங்களே செல்வ செழிப்பில் இருக்கும் பொழுது தான் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று தன் பெற்றோரின் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்து சுற்றி வந்த சாய்குமார் இப்பொழுது வேலை தேடி அலைந்து வந்தான். இவர்கள் மூவரின் வாழ்க்கை விதி புரட்டிப்போட்டு விளையாடி விட்டுச் சென்று இருந்தது.
சாய்குமார் இருபத்தி ஒன்பது வயது இளைஞன். அவன் பிறந்தது என்னவோ இங்கு தான் ஆனால் வளர்ந்தது முழுவதும் வெளிநாட்டிலே. பணத்திலேயே மிதந்தவனுக்கு அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவன். செல்லாத ஊரே இல்லை. ஊர் என்ன ஊர் நாடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். விடுமுறை நாட்கள் வந்தால் போதும் எங்கேயாவது வெளிநாடுச் சென்று சுற்றி வருகிறேன் என்று கிளம்பி விடுவான். அவனுக்கு என்று இருக்கும் நண்பர்களோடு சந்தோஷமாகத்தான் ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அனைத்தும் நொடியில் தரைமட்டமானது.
அவனால் இப்பொழுது ஏற்றுக் கொள்ள முடியாது அதிலிருந்து மீண்டு வரவே சில மாதங்கள் ஆனது. பின் நிகழ்காலத்தை புரிந்துக் கொண்டு இப்பொழுது ஒரு வேலையை தேடி வருகின்றான்.
அவனின் பெற்றோரைப் பொறுத்தவரை தான் வேலை தேடி அலைகிறேன் என்று. ஆனால் அவனின் உண்மையான குறிக்கோள் தங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்தவர்களை மொத்தமாக அழிக்க வேண்டும் என்பது தான் அவனின் உச்சபட்ச முதல் குறிக்கோள். அதற்காக தான் அவன் போராடிக் கொண்டிருக்கான். அதற்காக எந்த தீமையான எல்லைக்கும் செல்லக்கூட தயாராக தான் இருந்தான் சாய்குமார். அப்படி அவன் எடுத்து வைத்த முதல் அடி தான் அகலிகை.
அறைக்கு வந்தவனோ சிகிரெட்டை வாயில் வைத்து ஊதியவாறு தான் கொண்டு வந்த பேக்கில் இருந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்து படுக்கையில் பரப்பி வைத்தான். அதில் முழுவதும் அகலிகையின் புகைப்படம் மட்டுமே ! ஒரு சில புகைப்படங்களில் அவளோடு கவி மகிழன் சேர்ந்து இருப்பதுப் போன்று இருந்தது.
இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றி தங்களின் நாட்களை கழித்த பொழுதெல்லாம் புகைப்படமாக இருக்க, அதனை பார்த்து பார்த்து நெஞ்சம் கொதிக்க ருத்ர மூர்த்தியாக மாறினான். தன் கரங்களில் இருந்த லைட்டரால் கவிமகிழன் அகலி இருவரும் அணைத்தவாறு இருந்த ஒரு புகைப்படத்தை எரித்தான்.
தங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்த இவர்கள் அனைவரையும் விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான் சாய்குமார்.
'என்னடி அவன் கூட ரொம்ப சந்தோஷமா இருக்கியா இரு. ஆனா இந்த சந்தோஷம் இப்ப எப்படி போச்சு பார்த்தியா. அதே மாதிரி இனிமே ஒவ்வொரு நாளும் ஏன்டா நம்ம இருக்கோம்னு நினைச்சு உன்னை நீயே வெறுக்க ஆரம்பிப்பே. வயித்துல வளர அந்த குழந்தைக்கு யாரு காரணம்னு தெரியாம நீ தேடி தேடி அலைவே. உன்ன அலைய வைப்பேன். உன்னால கண்டு பிடிக்கவே முடியாதுடி. நானா அதை வெளிப்படுத்தினா மட்டும் தான் உண்டு. கொஞ்ச நாள் தான் அந்த நாள் கிட்ட நெருங்கப் போகுது. அப்ப இருக்கு உனக்கு ' புகைப்படத்தை பார்த்தவாறு கருமிக் கொண்டு இருந்தான் சாய் குமார்.
தன் தோழி அகலிகை கூறியதைக் கேட்ட வந்தனா அன்று அவளின் பெற்றோரிடம் மாடியில் இருக்கும் அறையில் தங்க வைப்பது பற்றி பேசினாள்.
"இல்லம்மா இப்போதைக்கு மேல யாரையும் விட வேண்டாம். உங்க அண்ணனும் இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவான். அவனுக்கு வந்ததும் ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு அவனாட்டி மேல இருந்துபான். அது வரைக்கும் வாடகைக்கு எல்லாம் விட வேண்டாம். உன் பிரெண்டுக்கு வேணா சொல்லு நான் வேற வீடு வேணும்னா விசாரிச்சு பார்க்கிறேன். நம்ம வீடு வேண்டாம்மா " என்று அவரின் தந்தையோ உறுதியாக கூறி விட, அவளுக்கு அது ஏமாற்றம் என்ற போது அகலிகைக்கு சொல்லவா வேண்டும் ?
தனியாக வயிற்றில் குழந்தையை சுமந்துக் கொண்டு என்ன செய்வாள் ?
அன்று அலுவலகம் வந்திருக்கவே, அகலிக்கு முக்கியமான வேலை இருக்க தன்னுடைய பொருட்கள் வேறு அலுவலகத்தில் இருக்கே அதை எடுப்பதற்காக அன்று வந்திருந்தாள். வந்தனாவைக் கண்டதுமே அவளிடம் கேட்க நினைத்து மதிய நேரம் வரை காத்திருந்தாள்.
பல நாட்களுக்கு பின் அகலிகை அலுவலகத்திற்கு வந்திருந்தால் அவளின் உடல் நிலையைப் பற்றி தான் மற்ற அனைவரின் விசாரித்தனர். இப்பொழுது அவளுக்கு மூன்றாம் மாதம் என்பதால் வயிறு அவ்வளவாக தெரியவில்லை. அவள் கருவுற்றிருக்கும் விஷயம் அங்கிருக்கும் யாவருக்குமே தெரியாது. வந்தனா மற்றும் கவிமகிழன் இருவருக்கும் மட்டுமே தெரிந்தது.
வந்தனா வேறு இரு தலைக்கொள்ளியாக தவித்து கொண்டிருந்தாள். தான் உயிராய் காதலிக்கும் காதலிடம் இந்த விஷயத்தை கூறாமல் இருப்பது கூட அவளுக்கு ஒரு மாதிரியாக தான் இருந்தது. இன்னும் சில நாட்களில் எப்படியோ கௌஷிக்கு விஷயம் தெரிந்து விடும் ஏன் தன்னிடம் இந்த விஷயத்தை கூறவில்லை என்று கேட்டால் தான் என்ன சொல்வது ? அதை விட இப்பொழுது தன் தோழி தன்னிடம் வந்து வீட்டினைப் பற்றி கேட்பாள் அதற்கு என்ன பேச ? என யோசித்தவாறே சில மணித்துளிகளை கடத்திக் கொண்டிருந்தாள்.
தன் காதலியின் முகத்தை அவ்வப்போது வேலைப் பார்த்தவாறு கண்டு கொண்டு தான் இருந்தான் கௌஷிக். மதிய நேரம் போல் பேசுவதற்கு வந்தனாவிடம் நெருங்கும் போது முன்னே வந்து நின்று விட்டால் அகலிகை.
தொடரும்...