• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரவனைப்பு -சரு'ஸ்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
அரவணைப்பு

"க்கா... க்கா... பஞ்சு மிட்டாய் வாங்கிக்கோ க்கா...," ஆரம்பத்துல திக்கி திக்கி பேசிய வார்த்தைகள்லாம் இப்பொழுது நன்று பழகிய யாசக குரலில் சோர்வு கலந்து வெண்கல மணியோசையுடன் போட்டிப் போட்டுக்கொண்டு இயல்பாக வந்தது.

'வேண்டாம்' என்ற வார்த்தையைக் கூட யாசிக்கும் குரலுக்கு செலவளிக்க விருப்பமில்லாமல் இட-வலம் என சன்னமாக தலையசைத்து மறுத்துக் கொண்டிருந்தனர் சில மக்கள்.

சிறு சிறு குடும்பக் கூட்டங்களிடம் மறுப்பான தலையசைப்பையும் ஒன்றிரண்டு குழந்தைகளின் நச்சரிப்பில் சில ரூபாய்களையும் பெற்றுக்கொண்டிருந்தான் 10 வயதை கடந்த விக்னேஷ்.

அச்சிறுவனை அலைப்பும், களைப்பும் சூழ்ந்திருந்த பொழுதும் தோளிலிருந்து இடுப்புடன் குறுக்காக கட்டிவைத்த ஒரு துணி மூட்டையின் உள் அவ்வப்பொழுது இரு விழிகள் அவனை ஏறிடுவதும் அவன் கன்னத்தை தடவுவதிலும் சிறு புன்னகை அவன் முகத்தில் வந்து சென்றுக் கொண்டிருந்து.

சோர்ந்து விழும் நேரங்களை நிரப்பும் ஆற்றல் என்னவோ இவளின் தீண்டல்தான். இரண்டு வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு ஊரையே உலுக்கிச் சென்ற புயலில் சிக்கிய குடும்பங்களில் மிச்சமாக தூக்கி எறியப்பட்ட பிஞ்சுகள்.

புயலில் குடும்பத்துடன் இருப்பிடத்தையும் தொலைத்த உடன்பிறப்புகள் ரெயில் கூட்டத்தில் கலந்து பயணசீட்டு இல்லாமலே பயணித்து கள்ளம் அறியாமலே நாட்டின் விளிம்பில் இருக்கும் ராமேஸ்வர கரையில் ஒதுங்கியிருக்கிறார்கள்.

இடுக்கான சந்து ஒன்றில் நுழைந்து சில அடிகள் கடந்து, சுவரை ஒட்டி நான்கடியில் சிறு சிமெண்ட் தடுப்பு பகுதியின் அருகில் வந்தவன், "பாப்பா இக்கட உண்டு அண்ணா சுச்சா போயொஸ்தாணு" என தமிழ் வாடையுடனான தெலுங்கில் கூறிக் கொண்டே தோள்களில் வழிந்த மூட்டையை கழுத்துவழி பிரித்தவன் அதை தரையில் வைப்பதற்கு சிறிது குனிய முற்பட, அந்த பிஞ்சோ அவனை விடாது தன் குச்சிக் கைகளால் அவனது தோள்பகுதி சட்டையை இறுக்கி பிடித்ததில் தோய்ந்து போன துணியினை நெய்த நூல்கள் சிறிது பிரிந்து வந்தன.

"ச்சோ பாப்பா! சட்டை சிறிகிபோதோந்தி ரெண்டு நிமிஷம் பாப்பா" எவ்வளவோ மன்றாடியும் அந்த மொட்டு விரல்கள் அவனது சட்டையின் பிடியை விட்டு மலரவே இல்லை.

பெற்றோர்களை இழந்து, வாழ்க்கையை வாழ்வதற்கே திணறும் நிலையைக் காட்டிலும் சிறுவனான விக்னேஷிற்கு இருக்கும் பெரும் சங்கடம் நான்கு வயதாகும் தங்கை வைஷ்ணவியின் பிணைப்பே!

தாயின் அரவணைப்பிலேயே தவழ்ந்தவள் அந்த கதகதப்பை இழந்து தகிக்கும் தணலில் துடிக்கும் வேளையில் மீண்டும் அண்ணனிடமே அந்த கதகதப்பை உணர்ந்து கங்காரு குட்டியாக அவனுள்ளேயே தங்கி விட்டிருந்தாள் வைஷ்ணவி.

அவர்களுக்கென இருக்கும் சிறு கூடாரத்திலும் இவனின் இருப்பு இல்லாமல் இவள் இருப்பதில்லை, காத்திருந்து அவள் அசந்து தூங்கும் ஏதோ ஒரு பொழுதே இவனது குளியல் வேலைகளைக் கூட செய்ய முடியும். இப்படி மொத்தமாக இவனின் மேல் சவாரி செய்யும் தங்கை என்று நடைபழக? மற்றவர்களை போல் பூமித்தாயின் அரவணைப்பில் எப்பொழுது அடங்குவாள் என்ற எண்ணங்கள் சமீப காலமாக அவனுள் உளன்றுக் கொண்டே இருக்கின்றன. இயற்கை அழைப்பைக்கூட அடக்கி வாழவேண்டிய சூழ்நிலையில் தங்கையை பற்றிய கவலை இன்னும் அதிகரிக்கும்.

வேறு வழி இல்லாமல் தங்கையை பிணைத்திருந்த மூட்டையுடன் எக்கி கரை படிந்த சுவரின் வெளிப்பகுதியில் திருப்பி அமரவைத்து அவளை ஒரு கையாலே பிடித்துக் கொண்டே இயற்கை உபாதையை நிறைவேற்றி மீண்டும் அவனது அரவணைப்பில் அவளைக் கட்டிக்கொண்டு, சுமந்தபடி அந்த சந்தின் முக்கில் சிறிதே அகலமாக பிரிந்து செல்லும் வலது தெருவில் நுழைந்தான்.

சிறு சிறு தார்ப்பாய் கூடாரங்கள் கடந்து ஒரு ஓலை குடிசையின் வாயிலில் இருக்கும் கற்களில் அமர்ந்த நேரம், அந்த வீட்டின் உரிமையாளர் ‘சுப்பராயலு’ ஒரு யுவதியுடன் வந்தார்.

“டேய் விக்கி! இந்த பக்கம் வாடா அம்மா உட்காரட்டும்” எனவும்,

“சரி நைனா” என்றவன் எழுந்து குடிசைக்கு முட்டு கொடுத்திருக்கும் கம்புக்கு இவன் முட்டுக்கொடுத்தபடி நின்றான்.

அந்த பெண் அமரும் முன்பே, "இவன மாறி அம்மா, அப்பா இல்லாம இருக்கிற சின்ன பயலுவக ஒரு பாஞ்சு(பதினஞ்சு) பேரு என் பாதுகாப்புல இருக்காங்கமா. இவங்கள ஒரு கட்டிடத்துக்குள்ள வச்சி பாத்துக்க எனக்கு வசதி இல்ல, அதான் முட்டு சந்துல டெண்டு கட்டி இருக்க வச்சிருக்கேன், பொழப்புக்கு பஞ்சு முட்டாய், சங்கு பொருளலாம் வித்துக்க ஏற்பாடு பண்ணிருக்கேன். கொஞ்சம் பெரிய பசங்களா எதுனா கூலி வேலைக்கு போவானுங்க" எனக் கூறிக் கொண்டிருந்தார்.

அவரின் பேச்சை கேட்டுக்கொண்டே சுற்றுப்புறத்தை கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை விக்கி கண் சிமிட்டாது கவனித்துக் கொண்டிருந்தான். கல்லில் அமர்ந்திருக்கும் பொழுதும் அவளின் பாதம் திடமாக நிலத்தில் பதிந்திருந்ததை பார்த்து அவன் கண்கள் அவள் பாதத்திலேயே நிலைக் குத்தி நின்றது.

அவன் மனத்திரையில் இன்னமும் பாதங்களை முழுதாக நிலத்தில் ஊன்ற முடியாமல் தடுமாறி, தவழ்ந்துக் கொண்டிருக்கும் தங்கை வைஷ்ணவியின் நிலை வந்துப் போனது. அவள் நடை பழக எழுந்து நின்ற நேரம்தான் பெற்றோர்களை இழந்தார்கள். சிறுவனான இவனிற்கும் தங்கையை தாங்கிக்கொள்ள முடிந்த அளவு அவளுக்கு வேறு எந்த பழக்கத்தையும் ஏற்படுத்த தெரியவில்லை. நடை, பேச்சு என்று எதிலுமே திடமற்று அவனின் அழுக்கு மூட்டையுள்ளேயே வாசம் செய்து வரும் தங்கையின் நிலையை சில நாட்களாகதான் பிற பிள்ளைகளை பார்த்து உணர்கின்றான். அந்த உணர்வால் சமீபகாலமாக திடமான பாத அடிகளை காணும் பொழுதெல்லாம் மனதில் தங்கைகான ஏக்கம் ஊற்றெடுக்கும்.

சூழ்நிலையை சுற்றி வந்த அப்பெண்ணின் விழிகளை விக்கியின் மூட்டையில் ஏற்பட்ட அசைவுகள் ஈர்த்தது. சிறு திடுக்கலுடன் அம்மூட்டையை பார்த்திருந்தவள் சில நிமிடங்களின் பின்தான் மூட்டையின் உள்ளடங்கியிருக்கும் உருவத்தை அறிந்துக் கொள்ள முடிந்தது. மூட்டைத் துணியின் கசங்கல்களுக்கிடையிலே மடித்து வைத்த அழுக்குத்துணி போல் ஒரு சிறு உருவம். உயிர்ச்சத்து இல்லாத உடலென சான்றளிக்கும்படி தோல்களின் மேல் ஆங்காங்கே வெளுத்த நிழல்கள் படிந்த முகம்.

கண் சிமிட்டாமல் அச்சிறுமியை பார்த்திருந்தவளின் அலைவரிசையில் வைஷ்ணவியும் மெல்லமாக எட்டிப் பார்த்தாள். வைஷ்ணவியை பார்த்ததும் மெல்லிதாக உதட்டசைத்து புன்னகைத்தவள், "பாப்பா பேரு என்ன?" என விசாரணையில் இறங்கினாள். தன்னிடம் அவள் பேசவும் மீண்டும் மூட்டையினுள் தன்னை ஒளித்துக் கொண்டாள் வைஷ்ணவி.

"குட்டி பேரு வைஷ்ணவி, யாரையும் பாக்க கூட மாட்டாமா, இவனும் கங்காரு மாதிரி இவள மூட்டைல கட்டிகிட்டே சுத்துறான், இங்க வந்ததுல இருந்து இந்தப்பய ஒழுங்கா குளிச்சதுகூட இல்ல." என இவர்களின் வாழ்க்கை சங்கடங்களை கூறிக் கொண்டிருந்தார் ஆதரவற்ற சிறு பிள்ளைகளுக்கு தன்னாலான சிறு ஆதரவளித்து வரும் சுப்பாராயாலு நாயக்கர்.

பூர்விகம், குடும்பம் என எந்த அடையாளமும் இல்லாமல் பெயர் மட்டுமே சுமந்து வந்தவர், ராமேஸ்வரத்தின் தெரு ஓரத்திலேயே வளர்ந்து அவ்விடத்தில் கிடைப்பதை ஆதாரமாக கொண்டு உயிர் வாழும் ஜீவன்.

அவரின் கூற்றைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பார்வை விக்கியிடம் விழுந்து, "உன் பேரென்ன?", சிநேக புன்னகையுடன் கேட்டவளை அப்பொழுதும் இமைக்காமல்தான் பார்த்திருந்தான்.

அவனது பார்வையில் இருக்கும் பிரமிப்பை உணர்ந்தவளாக அவனிடம் அவளது கைகளை அறிமுகத்திற்கு நீட்டியபடி, "நான் மித்திலா" என்றாள்.

அவளது கரங்களையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் வலது கையை பிடித்த நைனா மித்திலாவின் கைகளில் வைத்து, "விக்னேஷ்" என்றார்.

"இவக, நம்மளலாம் படம் புடிக்க வந்திருக்காங்க அவங்க கேக்றதுக்கு பதில் சொல்லு" என விக்கியிடம் மெல்லமாக சொன்னார் நைனா.

பார்வை மித்திலாவிடம் இருந்தாலும் நைனாவின் வார்த்தைகளுக்கு தலையசைத்தான் விக்கி. என்னதான் சிநேகமான தோற்றம் என்றாலும் அவள் கழுத்தில் அணித்திருக்கும் ஒற்றை ருத்ராட்சை கொண்ட கயிறும், மூளை உழைப்பின் திடம் சொல்லும் பார்வையின் தீட்சண்யமும் அவளைச் சுற்றி பிரமிக்கத்தக்க அலைவரிசையை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன அந்த பாலகனிற்கு.

"ஷாட் ரெடி மித்திலா, போலாமா?" என்றபடி வந்தான் ஒரு இளைஞன்.

"ஓகே ரவி போலாம்" என அவனுக்கு பதிலளித்தவள் நைனாவை பார்த்து "இவங்க ரெண்டு பேருதான் இங்க இருக்காங்களா? மத்தவங்க எங்க?" என கேள்வியெழுப்ப,

"கூட்டியாரேன்மா" என அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவர் நகர்ந்ததும் மித்திலாவும் எழுந்து ரவியுடன் நகரத் தொடங்கினாள். அவளின் அசைவில் லயித்திருந்த விக்கியும் அவளது பாத வழித் தடங்களைப் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தான்.

தடங்களில் தடங்கல்கள் இருந்தாலும் தவிர்க்கும் அவசியமற்று தாண்டி செல்லும் திடமான பாத அடிகள், அவளது பாதங்கள் ஒரு இடத்தில நிலைபெறவும், விக்கியும் நின்று அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

ரவியுடன் இணைந்து அவன் பொறுத்தியிருந்த புகைப்பட கருவியின் சூழ்நிலையைப் பார்த்தாள். புகைப்பட கருவிக்கு எதிரில் இருக்கும் ஒரு நீல் இருக்கை பலகையில் விக்கியை அமரச் சொல்லவும் இவனும் அங்கே அமர்ந்தான்.

"டெய்லி நீ பண்ற வேலை, சாப்பாடு, தூங்கிறது அப்புறம் உன்னோட ஆசை இதெல்லாம் சொல்லுறியா?" என மித்திலா கேட்கவும்,

"உங்களால எப்படி நடக்க முடியுது?" என்ற அவனது மாற்று கேள்வியில் நிதானித்து பின் சிறு புன்னகையுடன், "நீ எப்படி நடக்க கத்துக்கிட்டியோ அப்படித்தான் நானும்" என பதிலளித்தாள்,

"அன்ட்டே நாகு யார் சொல்லிக் கொடுத்தானு குருத்து லேதெ(ஆனா எனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்கனு ஞாபகம் இல்லையே)" என்றவனின் கைகள் மூட்டையின் கைப்பிடி துணியை திருகியதில் அவனது சங்கோஜம் நன்றாகவே வெளிப்பட்டது.

"அது ஞாபகம் இல்லன என்ன! எப்படி நடக்கிறதுனு ஞாபகத்துல இருக்குல" என தலையை மேலேற்றி இறக்கி கேள்வியால் அவனுக்கு திடமூட்ட முயன்றாள்,

"நாகு உந்தி, கானி பாப்பாக்கு நி...யப... குருத்து லேதேவே..!" தமிழில் சொல்ல முயன்று முடியாமல் தெலுங்கு கலந்தே சொன்னேன்.

மித்திலாவின் கண்கள் மூட்டையினுள் தெரியும் கச்சையான உருவத்தை பார்க்க எத்தனித்தது, வைஷ்ணவி பற்றி நைனா சொன்னது நினைவு வர தன்னால் ஏதும் உதவ முடியுமா என சிந்திக்கும் பொழுது மற்ற பிள்ளைகளுடன் நைனா அவ்விடம் வந்தார். மித்திலா விக்கியிடம் கேட்ட கேள்வியை மற்ற பிள்ளைகளிடம் கேட்டு அவர்களின் பாவனைகள், திக்கிய பதில்களைத் திருத்தி படம்பிடிக்கத் தொடங்கினாள்.

விக்கி மட்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் நைனாவின் அருகில் நின்று மித்திலாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். இறுதியாக மீண்டும் விக்கியை முன் நிறுத்தி அதே கேள்வியை அவனிடம் கேட்க,

"பிரதகாலால நைனா பன் கொடுப்பாங்க, அத சாப்பிட்டபுறம் நைனா பஞ்சுமிட்டாய் கொடுக்கிற கடைக்கு கூட்டிட்டு போவாங்க, இரவை ஐது (25) பாக்கெட் நாகு தீசுக்கோனு டூரிஸ்ட் ஸ்பாட்ல பிள்ளலு இருக்குறவங்க பக்கம் மணி ஆட்னா கண்டிப்பா வாங்குவாங்க, சீசன்ல இருக்கறப்ப ஐநூறுக்கு மேல கிடைக்கும், டல்னா இருநூறு ரூபா வரும் அதை நைனாட்ட கொடுப்பேன், அவங்கதான் எல்லாம் பாத்துப்பாங்க..." என தயங்கி தயங்கி சொல்லி முடித்தவன் இப்பொழுது பெரும் தயக்கத்தில் மித்திலாவின் கால்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு வேற ஆசை இருக்கா? படிக்கணுமா?" என மேலே பேசத் தூண்டினாள் மித்திலா.

நிமிர்ந்து அவளை பார்த்தவன் மீண்டும் பார்வையை மித்திலாவின் பாதங்களில் பதித்து, "பாப்பா உங்கள மாதிரி நடக்கணும்" என்றான்.

அவனது பதிலில் புன்னகை விரிய, "நடக்க வச்சிடுவோம்" என்றவள் ரவியிடம் "கட்" என்றபடி நைனாவிடம் சென்றாள்.

"சார், கவர்ன்மெண்ட் ஹோம் அப்ளிகேஷன் ஃபார்ம் (Application for admission to children section in Service Homes) ரெடி பண்ணி கொடுக்கிறேன், இந்த பசங்க எல்லாருக்கும் ஃபில் பண்ணி கார்டியன் நேம் உங்க பேரும், உங்களோட ஐ.டி ப்ரூப் சேர்த்து கலெக்டர் ஆஃபிஸ்ல DSWO(District Social Welfare Officers) கிட்ட கொடுத்து ப்ரொஸீட் பண்ணிக்கலாம்." என்ற மித்திலாவின் வழிகாட்டலை கவனமாக கேட்டுக் கொண்டார் நைனா.

விக்கியின் அருகில் வந்தவள், "கொஞ்ச நாள்ல எல்லாரும் படிக்க போவீங்க நிறைய பிள்ளைங்க கூட விளாடுவீங்க அப்போ பாப்பா கண்டிப்பா ஓடி விளையாடுவா பாரு! ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க பாப்பாவை இப்படி மூட்டைக்குள்ள வைக்க கூடாது, அவள வெளில தூக்கி பிடிக்கணும்" என கூறிக் கொண்டே மூட்டையினுள் இருக்கும் வைஷுவை தூக்கினாள்.

மித்திலா திடீரென தூக்கவும் வைஷு அவசர கதியில் அண்ணனின் சட்டையை பிடிப்பதற்கு பதில் மூட்டையை இறுக்கி பிடிக்க மித்திலா தூக்கியதால் மூட்டையும் இழுபட்டு விக்கியும் மித்திலாவின் மேல் மோதி நின்றான்.

Attachments

  • WhatsApp Image 2022-07-14 at 5.06.06 PM.jpeg
    WhatsApp Image 2022-07-14 at 5.06.06 PM.jpeg
    111.3 KB · Views: 53

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
வைஷுவின் உடல் மொழியில் ஒரு இறுக்கமும், முக்கலான முனங்கலும் அவளது எதிர்ப்பை காட்டியது. அவளது இடது கைவிரல்கள் பற்றுக்கோள் தேடி மித்திலாவின் தலைமுடியை இறுக்கத் தொடங்கின. முடியின் இழுவலை பொருட்படுத்தாமல் வைஷுவை வளைத்துப் பிடித்து அவளது வலது கைவிரல்கள் இறுக்கியிருந்த மூட்டையை பிடிவாதமாக பிரித்தெடுத்து விக்கியை அவளது பிடியில் இருந்து தளர்த்தி தன் அரவணைப்பிற்குள் கொண்டு வந்தாள்.

பிடியின் தளர்வு அண்ணனின் அரவணைப்பை இழந்ததை உணர்த்த அவளது முனங்கல் அதிகரித்தது. இப்பொழுது வலது கைவிரல்கள் மித்திலாவின் காதை இறுக்கத் தொடங்கின, நொடிக்கு நொடி அந்த பிஞ்சு விரல்களின் பலம் அதிகரித்து இறுக்கமும் அதிகரிக்க கண்ஜாடையில் ரவியை தன் பக்கம் அழைத்தவள்,

"ரவி நான் இப்ப வைஷுவ விட்ருவேன் நீ அவ கால்ல பிடிச்சுக்கோ" என்றவள் ரவி தயாராக நிற்கவும் வைஷுவை தூக்கியிருந்த கைகளை தளர்த்தினாள், பிடி தளரவும் உடல் நழுவுவதால் தோன்றிய அச்சத்தில் இரு கைகளைத் தளர்த்தி மித்திலாவின் கழுத்தை சுற்றி வேகமாக பிடித்தாள் வைஷ்ணவி. ரவி அவளது கால்களை பிடிக்க அதை உதறி மித்திலாவின் இடுப்பைச் சுற்றி போட்டுக் கொண்டு அச்சத்துடன் விழிகளை மூடிக் கொண்டாள்.

"பாப்பா... பாப்பா" என்ற விக்கியின் அழைப்பில் விழி திறந்து அவனை நோக்கி கைகளை நீட்ட, மித்திலா வைஷுவை அவனிடம் கொடுத்து, "இடுப்புல வச்சிக்கோ, மூட்டைக்குள்ள வைக்காத" என உத்தரவிட்டாள்.

"நைனா இவங்களை நான் கொஞ்சம் வெளில கூப்பிட்டு போகலாமா?" என அவரின் அனுமதி பெற்று ரவியுடன் அவர்கள் வந்த பெரிய ரக வாகனத்தில் ஏறி கிளம்பினார்கள். பயணத்தின் பொழுது மித்திலாவின் கவனம் முழுவதும் வைஷுவிடம் தான், அவளிடம் பேசிக்கொண்டும் வழியில் செல்பவர்களை, விளையாடும் குழந்தைகள், வாகன ஓட்டுனர்கள் மனிதர்களின் செயல்கள் என பேசிக் கொண்டே வந்தாள். அவள் பேசியதில் எதுவும் புரியாவிட்டாலும் இளையவள் கவனம் மித்திலாவின் மேல் அழுத்தமாக படிந்திருந்தது.

சிறு தொலைவில் இருக்கும் கடற்கரையை வந்தடைந்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி அலைகளை நெருங்கி கரையில் நின்றார்கள். அப்பொழுதும் வைஷ்ணவி விக்கியின் இடுப்பில்தான் இருந்தாள். ஆனால், கவனம் மட்டும் மித்திலாவிடம், அவளது கவனயீர்ப்பு செயலில் ஈர்க்கப்பட்டு அவளுக்கு பழகியிருந்தாள் இப்பொழுது. அந்த ஈர்ப்பை பயன்படுத்தி பேச்சை நிறுத்தாமல் வைஷுவை விக்கியிடமிருந்து அணைத்தபடி வாங்கியவள் கையசைவினால் விக்கியை நகர்ந்து செல்ல சொன்னாள்,

விக்கியும் அவளது கைகள் சுட்டிக்காட்டிய பகுதியிலிருந்த மீன் பிடிக்கும் வலை குவியல்கள் பின் உட்கார்ந்து இவர்களை ஆர்வமுடனும், பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்களின் பேச்சுக்கள் காதில் விழவில்லை என்றாலும் செயல்களை நன்றாகவே உள்வாங்கினான். கடல் மணலின் சூடு விக்கியின் பாதங்களை ஊடுருவும் சமயம் மித்திலா பேச்சை நிறுத்தாமல் வைஷுவை மடிதாங்கி அலைகள் உரசி செல்லும்படி அமர்ந்தவள், சில நொடிகளில் வைஷ்ணவியை கரையில் அமர வைத்தாள்.

அதுவரை மித்திலாவிடம் கட்டுண்டிருந்த வைஷ்ணவி, உடலில் பரவிய ஜில் உணர்வில் மீண்டும் உடலில் இறுக்கம் பரவ எக்கி மித்திலாவின் கழுத்தை வளைக்க முயன்றாள். அவளுக்கு வசதியாக சிறிது குனிந்து கழுத்தைக் கொடுத்தாலும் வைஷ்ணவியை தூக்கவில்லை, பதிலாக கடல் தண்ணீரை எடுத்து அவளது கால்கள், கைகள் என ஊற்றி, தேய்த்து சுத்தம் செய்தபடி இறுக்கத்தை தளரச் செய்தாள். இத்தனை செயல்களிலும் அவளது பேச்சு நிற்கவில்லை.

உடலில் நீர் படவும் வைஷ்ணவியிடம் முனங்கலும் சேர்ந்துகொண்டது, பார்வை வட்டத்தினுள் அண்ணனைத் தேடத் தொடங்கினாள், பார்வையில் சிக்காதவனிற்காக சுற்றி சுற்றித் தேடலின் பகுதிகளை அதிகப் படுத்தினாள் வைஷ்ணவி. பல நிமிடங்கள் நகர்ந்தும் தேடலுக்கு பலன் இல்லை எனவும், 'ண்...ஆ...' என குரலெழுத்துக்கள் உதித்தது, காதில் விழுந்தாலும் கவனிக்காததுபோல் பேச்சை தொடர்ந்துக் கொண்டே இருந்தாள் மித்திலா.

'ண்...ஆ...ஆ...ஆ...' என்ற வார்த்தைகளின் இழுவை அதிகமாகிக்கொண்டே அவளது உதட்டின் அசைவும் தசைகளும் செயல் பட்டுக் கொண்டே இருந்ததை பார்த்த விக்கியினுள்ளும் ஒரு பரவசம் பரவத் தொடங்கியது.

தன்னை மறந்து எழுந்து வலை குவியலை விட்டு வெளியே வந்தவனை கண்ட வைஷ்ணவி மித்திலாவின் கழுத்துப் பிடியை தளர்த்தி அண்ணனை நோக்கி திரும்பி தவழத் தொடங்கினாள். விக்கி அவளை நெருங்க நகர முற்பட, பேச்சை நிறுத்தினால் நிச்சயம் வைஷ்ணவியின் செயல் தடைப்படும் என உணர்ந்த மித்திலா பேச்சைத் தொடர்ந்துக் கொண்டே அவனை நகரவேண்டாமென சைகை செய்தாள்.

அலைகளின் உரசல் வைஷ்ணவியை இயல்பாக தவழ விடவில்லை, என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்து விக்கியை நோக்கி கைகளை தூக்க அந்தக் கைகளைப் பிடித்த மித்திலா அவளை அப்படியேத் தூக்கி நகர்த்தி நடைப் பயிற்றினாள்.

வைஷ்ணவியின் பாதங்களை அணைக்கும் அலைகள் கூட அவளது அடிகளுக்கு பெரும் தடங்கலாக விக்கியின் கண் முன்னே தோன்றின, அந்த தடங்களை மீறி அடி எடுத்து வைக்கும் அவளது பாதத்தின் திடத்தை கண்சிமிட்டாமல் உள்வாங்கினான். தடங்கல்கள் அகன்று கடல் மணலில் பாதம் புதைத்து மித்திலாவின் கைப் பிடித்து நடை பயின்று வந்தவளை அள்ளிக்கொள்ள கைகளை நீட்டியவனை, "அவ கைய பிடிச்சுக்கோ விக்கி அவளை தூக்கிடாத" என்ற வார்த்தைகளுக்கு அடிபணிந்து வைஷ்ணவியின் கரங்களை தன் கைகளுக்குள் அடக்கியவனின் முகத்தில் படிந்திருந்த நீண்ட நாள் தவிப்பும், பயிற்றுவிக்க தெரியாத கவலையின் நிழல்களும் நீங்க புன்னகைத்தான்.

சில நிமிட தேடலின் முடிவில் அண்ணனிடம் வந்தடைந்த வைஷ்னவியன் உதடுகளும் அவனது புன்னகையை எதிரொலிக்க சிறிது அசைந்தது. அந்த அசைவில் உலகத்துடன் இயல்பாக பொருந்த இத்தனை வருடங்கள் கடந்து பயின்றவள் என்ற அறியாமையும், இயல்பும் இணைந்து மழலை மாறா முகத்திலும் ஒரு மலர்ச்சி பரவத்தான் செய்தது.

அந்த அசைவில் மேலும் உவகைகொண்டவன் தங்கை பதித்த பாத சுவடுகளைப் பார்த்தான்.

உடல் தன்னிச்சையாக நிற்பதை உணராமல் இயல்பாக அண்ணனின் கைகளை பிடித்திருந்த தங்கையின் பாதச் சுவடுகள் கடல் மண்ணில் புதைந்து பூமித் தாயின் அரவணைப்பில் அடங்கியிருந்ததை பார்த்தவனின் வெளிர் மஞ்சள் நிற பற்கள் சூரியனின் ஒலியுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.

***
 
Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
838
28
93
Jaffna

ஆரம்பமே சூப்பர்.. எதிர்பார்பை தூண்டுகிறது.
 
  • Like
Reactions: Saran Saru

பலர் இப்படித்தான்.. பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் அவர்களின் திறமையினை முடக்குகின்றார்கள்.. அவர்கள் வானில் பறந்து செல்ல அவர்களது சொந்த சிறகினை விரிக்க விட்டாலே பறப்பதற்கு காற்றே கற்று தரும்...
சூப்பர்....
 
  • Like
Reactions: Vathani

கிருஷ்ண தாணு ரதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
6
5
3
Chennai
அருமையாக இருந்துச்சு கா நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்றே கூறவேண்டும் அவ்வளவு நுடபமாக அந்த குழந்தையின் சிறு சிறு அசைவுகளையும் விக்கியின் வாழ்க்கையையும் கண் முன்னே தோன்ற வைத்து இருக்கிறீர்கள். இதுபோல் எத்தனை பிள்ளைகள் ஊர்விட்டு ஊர் வந்து இப்படி வாழ்கின்றனரோ என்று என் மனம் அவர்களை எண்ணி வருத்தப்பட்டது.

உங்கள் எழுத்து மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 
  • Like
Reactions: Saran Saru

Saran Saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 15, 2022
3
0
1
Tamilnadu
பலர் இப்படித்தான்.. பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் அவர்களின் திறமையினை முடக்குகின்றார்கள்.. அவர்கள் வானில் பறந்து செல்ல அவர்களது சொந்த சிறகினை விரிக்க விட்டாலே பறப்பதற்கு காற்றே கற்று தரும்...
சூப்பர்....
Thanks dear :)
 
Saran Saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 15, 2022
3
0
1
Tamilnadu
அருமையாக இருந்துச்சு கா நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்றே கூறவேண்டும் அவ்வளவு நுடபமாக அந்த குழந்தையின் சிறு சிறு அசைவுகளையும் விக்கியின் வாழ்க்கையையும் கண் முன்னே தோன்ற வைத்து இருக்கிறீர்கள். இதுபோல் எத்தனை பிள்ளைகள் ஊர்விட்டு ஊர் வந்து இப்படி வாழ்கின்றனரோ என்று என் மனம் அவர்களை எண்ணி வருத்தப்பட்டது.

உங்கள் எழுத்து மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thanks dear :)
 
Ramya(minion)

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 27, 2021
405
190
63
India
அரவணைப்பு-சிறுகதை

இப்படி ஒரு கதைகரு நான் வாசிச்சதில்லை👌👌👌👌👌 எழுத்துநடை சூப்பரா இருக்கு.தெளிவான விளக்கம்+காட்சி அமைப்பு.கண்முன்னால நடக்கறமாதிரி பீல் பண்ண முடியுது.

நான்கு வயதாகியும் நடக்காமல் பத்து வயதான அண்ணன் விக்னேஷூடன் கங்காரு குட்டியாய் வாழும் வைஷ்ணவி. இவள் எப்போது மற்றவர்களை போல் நடப்பாள் என தவிக்கும் விக்னேஷ்.

அவளின் தளிர் பாதங்கள் பூமியை முத்தமிடும் போது என்னுள்ளும் உதிர்த்தது உவகை.

கட்டாயப்படுத்தி திணிக்காமல் இயல்பாய் அவளை நடக்க வைக்கும் மித்திலா👌👌🤞🤞❣️
அந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிச்ச சுப்பாராயாலு நாயக்கர் மனிதம் நிறைந்த ஆன்மா.
 
வாசிப்பிற்கு தேர்ந்தெடுத்ததோடு கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள்... 💖💖💖💖