• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அர்ப்பணம் 5

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
89
11
43
Tamilnadu
“எப்படி நிரூபிக்கிறதுங்க?”என்றவளிடம்,

“நான் தெனமும் உன்கிட்ட கட்டில்ல நடந்துக்கிட்ட மாதிரி நீ இப்போ எங்கிட்ட நடந்துக்கனும்! அதுக்கப்புறம் தான் நீ சொல்றதை நான் நம்புவேன்!”என்றான் அவளது கணவன்.

அதைக் கேட்டவுடன் பெண்ணவளின் முகம் பயத்திலும், அவமானத்திலும் இருண்டு போய் விட்டது.

அதில் திருப்தியுற்ற ராஜனோ,”என்ன? உன்னால் முடியாதா?”என்று அவளிடம் காட்டமாக கேட்க,

“ஹாங்! அது…”என்று இழுத்தவளிடம்,

“அப்போ நீ இன்னும் அவனைத் தான் மனசில் வச்சிட்டு இருக்கிற. அப்படித் தான?”என்று கூறி விட,

“ஐயோ இல்லைங்க!”என்று அதை மறுத்தாள் தங்கபுஷ்பம்.

“ம்ம்ம். அப்போ நான் சொன்னதை செய்டி!”என்றவனிடம், அதற்கு மேல் விவாதம் செய்யாமல்,

“சரிங்க”என்று அவன் கூறியதைச் செய்ய ஒப்புக் கொண்டாள்.

உடனே தன் கண்களில் வெறியேற்றிக் கொண்டு அவளது உடலை நார்நாராக குத்திக் கிழிக்கத் தயாராகி விட்டான் ராஜன்.

அவனை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்து விட்டு அவனது அருகில் உட்கார்ந்து கொண்டவளுக்கோ, கணவன் கூறியபடி நடப்பதற்கு ஒரு போதும் மனம் இசைந்து கொடுக்கவில்லை.

அவளது தயக்கத்தைக் கண்டு,”என்ன? உன்னால் அதைச் செய்ய முடியலையா?”என்று அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தான் ராஜன்.

எப்போதுமே அவன் தான் இவளை மிருகத்தனமாக அணுகுவான். இப்போது முதல் முறையாக இவளை அவ்வாறு செய்யச் சொல்லவும் அதுவே தங்கபுஷ்பத்திற்கு பிடிக்காமல் போயிற்று.

தாம்பத்தியத்தைப் பொறுத்த வரைக்கும் முதலில் யார் வேண்டுமானாலும் தொடங்கி வைக்கலாம்.

அதில் இருவருக்கும் சரிசமமாக உரிமை இருக்கிறது.

ஆனால் இவர்கள் விஷயத்தில் நடப்பதோ வேறு. அதனாலேயே தனது தயக்கத்தையும், மறுப்பையும் வெளிப்படையாக காட்ட முடியாமல் திண்டாடினாள் தங்கபுஷ்பம்.

“என்ன ஒன்னுமே பேச மாட்ற? அப்போ உனக்கு நிரூபிக்க விருப்பம் இல்லையா?”என்று உறுமினான் ராஜன்.

“இல்லைங்க”என்று கூறிக் கையைப் பிசைந்தவாறு இருந்தவளின் கரத்தை வெறித்தனமாகப் பிடித்து,

“இப்போ நான் எவ்ளோ கொடூரமானவன்னு உனக்கு நிரூபிக்கிறேன்!”என்று அவளைக் கட்டிலில் சாய்த்து தங்கபுஷ்பத்தின் உடலில் ஆழமான வடுக்களைக் கொடுக்க ஆரம்பித்தான்.

அதில் கத்தி அழக் கூடத் திராணி இல்லாமல் ஒடுங்கிப் போயிருந்தாள்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளிடம் தன்னுடைய தேவையைத் தீர்த்துக் கொண்டு நன்றாக குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான் ராஜன்.

தனது உடைகளைக் கூட அணிந்து கொள்ளாமல் தன்னைப் போர்வையால் மூடிக் கொண்டு அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கபுஷ்பம்.

இதே சமயம்,”நீ அந்த அறையில் போய் உறங்குடா. அப்பா சாயங்காலம் வந்ததும் பேசிக்கிடலாம்”என்று நண்பனிடம் கூறி அனுப்பினான் சித்தன்.

அவன் சொல்லைக் கேட்டுத் தனியறைக்கு வந்து தனது சிரத்தை தலையணையில் இடம் பெற வைத்தாலும் உறக்கம் வரவில்லை வீரபத்திரனுக்கு.

அவனது சிந்தை முழுவதும் தங்கபுஷ்பமே நிறைந்திருந்தாள் எனலாம்.

அவளை முதல் முறையாகப் பார்த்த அந்த நாளின் பசுமையான நினைவுகளை மீண்டுமொரு முறை அசை போடத் தொடங்கி விட்டான் வீரபத்திரன்.

தன்னுடைய தந்தை தர்மராஜின் தொழில் விஷயமாகவோ அல்லது வேறு சில விஷயமாகவோ வந்து போகும் சமயங்களில் தான் அவனுக்குச் சித்தனுடன் தோழமை உருவானது.

அப்படியாகத் தான் அவன் அந்த ஊருக்கு அடிக்கடி வந்து போகத் தொடங்கினான் வீரபத்திரன்.

அப்போது தான், அவன் ஒரு நாள் தங்கபுஷ்பத்தைப் பார்க்க நேரிட்டது.

அவள் இருந்த ஊரில் தன்னுடைய தந்தை நிலம் வாங்க விருப்பப்பட்டதால் அதன் பொருட்டு அவருடன் சேர்ந்து தானும் அவ்வூருக்கு வந்து தன் நண்பனுடன் ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் வீரபத்திரன்.

அப்போது தன் இடுப்பில் குடத்தைத் தாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் தங்கபுஷ்பம்.

அப்போது,”ஏ புள்ள! நான் கூப்புடக், கூப்புட நிக்காம போனா என்னடி அர்த்தம்? நில்லு!”என்று அவளது பின்னாலிருந்து குரல் வந்தது.

அதில் வீரபத்திரனும், சித்தனும் தங்கள் கவனத்தை அவர்கள் புறம் திருப்பினர்.

இதே நேரத்தில் வேக எட்டுக்கள் மூலம் அவளை நெருங்கிய ராஜனோ,”நில்லு புள்ள!”என்று அவளது தோளைத் தொட,

அவனது கையைத் தட்டி விட்டு விட்டு,“ப்ச்! உன்னை என் கூடப் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டேன் தான மாமா? அப்பறம் என்னத்துக்கு என் பேரை ஏலம் போட்டுக்கிட்டு இருக்கிற?”என்று அவனைச் சத்தம் போட்டாள் தங்கபுஷ்பம்.

“ஹான்! நான் உன்னை மொத தடவை கூப்புடும் போதே நீ நின்னுக் கேட்டு இருந்தா நான் ஏன் உன் பேரை ஏலம் போட்டுக்கிட்டு இருக்கப் போறேன்?”என்று அவளிடம் காய்ந்தான் அவளது அத்தை மகன்.

“என்னன்னு வெரசா சொல்லு மாமா”என அவனிடம் எரிச்சலுடன் கூற,

“ஏய் என்ன திமிரா? எங்கிட்ட குரலை உசத்திப் பேசுற வேலை வச்சுக்காதே!”என்று அவளை அதட்டினான் ராஜன்.

அதற்கு அவளோ,”அப்படித் தான் பேசுவேன். என்னப் பண்ணுவீங்க?”என்றவளது நிமிர்வைக் கண்டு வீரபத்திரனுக்குப் புன்னகை அரும்பியது.

“அடிச்சுப் பல்லு, கில்லு எல்லாம் தட்டிப் போடுவேன்! கருவண்டுக்கு வாயைப் பாரு! ஒரு ஆம்பளையை நாக்கு மேலே பல்லுப் போட்டு என்னப் பேச்சுடி பேசுற?”என்று தன் கையை ஓங்கிக் கொண்டு அவளை மிரட்டியவனது கரத்தை ஒடித்து விடும் நோக்கத்தில் ஒரு அடி முன்னே எடுத்து வைத்தான் வீரபத்திரன்.

அதைக் கண்டு கொண்டு,”வேண்டாம் மாப்பிள்ளை. அவிய சொந்த விஷயத்தில் நீ தலையிட்டா பிரச்சினையை வேற மாதிரி திசை திருப்பிப் பஞ்சாயத்தில் நாற வச்சிடுவானுங்க! நீ அசலூர்க்காரன் வேற. கட்டுப்படுத்திக்கோ!”என்று கூறி அவனது கையைப் பிடித்துக் கொண்டான் சித்தன்.

“இங்கே பாருங்க மாமா! இந்தக் கருவண்டுன்னுக் கூப்பிட்ற வேலையை எல்லாம் வச்சுக்காதீங்க! அப்பறம் நானும் உங்களை எக்காளமாகப் பேசுவேன்! பாத்துக்கிடுங்க!”எனச் சண்டைக் கோழியாகத் திமிறினாள் தங்கபுஷ்பம்.

“உஸ்! நான் உன்னைக் கட்டிக்கப் போறவன்! எங்கிட்டேயே இப்படி திமிராகப் பேசுற! இரு. உன் வீட்டுல சொல்லி உன்னை அடி வெளுக்க வைக்கிறேன்!”என்று அவளிடம் சவடால் விட்ட ராஜனிடம்,

“நீ என் வீட்டுல என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ மாமா. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. முதல்ல வழியை விடு. குடத்தோட பாரம் வேற தாங்கலை”என அவனிடம் சலித்துக் கொண்டாள்.

“உன்னைப் பத்தி அத்தை, மாமா கிட்ட பேசிக்கிறேன். நீ கெளம்பு!”என்று அவளிடம் சொல்லி அனுப்பி விட்டுத் தானும் அங்கேயிருந்து அகன்றான் ராஜன்.

அவர்களது உரையாடலைக் கேட்டு முடித்த வீரபத்திரனோ,”அவன் அந்தப் பொண்ணைக் கட்டிக்கப் போறவனா சித்தா? அவனுக்கும், அந்தப் பொண்ணுக்கும் பரிசம் போட்டாச்சா?”என்றவனுக்கு,

“ம்ஹூம். அவங்க ரெண்டு பேரும் அத்தைப் பையன், மாமா பொண்ணுடா. அதான் அவன் அப்படி சொல்லிட்டுப் போறான். அவளோட வீட்டைப் பத்தி தெரியலை. ஆனால் அவனோட அம்மாவுக்கு அந்தப் புள்ளையோட சொத்து வேணும். அதான், இவனை அந்தப் பொண்ணுக்குக் கட்டி வைக்க ஆசைப்பட்றாங்க!”என்று விளக்கம் அளித்தான் சித்தன்.

“ஓஹோ! அந்தப் புள்ளைப் பேரு என்ன?”எனக் கேட்டான் வீரபத்திரன்.

“தங்கபுஷ்பம்” என்றதும்,

அதைக் கேட்டவனோ,”ஆமாம். தங்கமாகத் தான் இருக்கிறாள்!”என்று ரசனையுடன் உரைத்த நண்பனைக் கலவரத்துடன் பார்த்தான் சித்தன்.

“என்னடா?”

“நீ இப்படி அந்தப் பொண்ணோட பேரைக் கேட்கிறதும், அது போய் அரை மணி நேரமாகி இருந்தாலும் கூட அவ போன பாதையவே பார்த்துட்டு இருக்கிறதைப் பார்த்தாலே எனக்குப் படபடன்னு வருது மாப்பிள்ளை. ஏதாவது வம்பு, தும்பு பண்ணிடாதே! இங்கே வந்த சோலியை முடிச்சிட்டு ஊரு போய்ச் சேரு”என்று அவனுக்கு அறிவுரை வழங்கவும்,

வீரபத்திரன்,“வம்பு, தும்புக்குப் போறது எனக்கு என்னப் புதுசா?”என்றான் அலட்சியமாக,

“அது என்னவோ வாஸ்தவம் தான்! ஆனால் நீ இங்கே இருக்கிற வரைக்கும் எதுக்கும் எச்சரிக்கையா இரு”என்றுரைத்தான் சித்தன்.

“சரிடா. பார்த்துக்கலாம்”என்றவனால் தன்னுடைய மனம் தங்கபுஷ்பத்தை நாடியதை தவிர்க்க முடியவில்லை.

அவள் அணிந்திருந்த பாவாடை, தாவணியின் தரத்தை வைத்து அவள் அந்த ஊரில் இருக்கும் உயர்குடி குடும்பத்தில் பிறந்த பெண் என்பதை அறிந்து கொண்டான் வீரபத்திரன்.

அவளது வாய்ச் சவடாலை ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டவனுக்கு இதழின் ஓரத்தில் ரசனைப் புன்னகை உருவானது.

அதற்குப் பிறகுத் தன் நண்பனுடன் வீட்டிற்குச் சென்றவனோ அங்கே சித்தனின் தந்தை மதிய உணவுண்ண வந்திருக்கவும் அவருடன் பேசத் தொடங்கினான்.

அதே சமயம், தங்களது வீட்டிற்குள் நுழைந்தவளை,”ஏட்டி புஷ்பா! உனக்கு என்ன அவ்ளோ வாய்க் கொழுப்பா? ராஜனை மட்டு மரியாதை இல்லாமல் பேசி வச்சிருக்கிறவ? வாயைக் குறைக்க மாட்டியா?”என்று அவளது தாயின் அதட்டல் குரல் வரவேற்றது.

“அதுக்குள்ளே வீட்டுக்கு வந்து உன் காதில் ஓதிட்டுப் போயாச்சா?”என்று அவரிடம் அலட்சியமாக கேட்டாள் தங்கபுஷ்பம்.

“அடியேய்! நீ என்னடி நினைச்சிட்டு இருக்கிற? அவன் உன்னைக் கட்டிக்கப் போறவன்! அது முதல்ல உனக்கு ஞாபகம் இருக்கா?”என்று அவளை அதட்டினார் வள்ளி.

“ப்ச்! தெரியும்மா. அதுக்காக அந்தாளு என்னிய கருவண்டுன்னு சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா வரச் சொல்றியா? அதான் நாலு வார்த்தைக் கேட்டுட்டு வந்தேன்!”

“கூறு கெட்டச் சிறுக்கி! புருஷனாகப் போறவனைப் போய் அந்தாளுன்னு பேசிட்டு இருக்கிறவ! உங்க அய்யன் வரட்டும். உன் வாயைத் தைக்கச் சொல்றேன்”என்று அவளை மிரட்டவும்,

“க்கும்! அதைத் தவிர உங்களுக்கு வேற என்ன தெரியப் போகுது!”எனச் சலித்துக் கொண்டவளுக்கோ பசி வமிற்றைக் கிள்ளியது.

சமையலறைக்குச் சென்று தட்டில் உணவைப் போட்டுக் கொண்டுக் கூடத்திற்கு வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கி விட,

அவளது செயலைப் பார்த்த வள்ளியோ,“கல்லுளிமங்கி!”என்று முணுமுணுத்ததைக் கேட்டாலும் அதை அசட்டை செய்து விட்டுச் சாப்பிடுவதில் கவனத்தைச் செலுத்தினாள் தங்கபுஷ்பம்.

“உன்னை எந்த வேலையும் செய்ய விடாமல் வளத்தது எங்க தப்புடி! அதான் இப்படி திமிராகத் திரியுற!”என்று அவளைக் கரித்துக் கொட்டினார் வள்ளி.

அதைக் கேட்டு,“க்கும்!”என்று கொணட்டிக் கொண்டவளை மேலும் தீவிரமாக முறைத்தவருக்குக் காளிமுத்துவின் குரல் கேட்டதும்,

“உங்கப்பா வந்துட்டாரு! உன்னைப் பத்தின பிராதை அவர் கிட்டே சொல்லிட்றேன். அவர் உன்கிட்ட பேசினால் தான் நீ இதுக்கப்புறம் சரியாக நடந்துக்குவ!”என்று அவளிடம் கூறி விட்டுக் கணவரிடம் சென்றார்.

- தொடரும்