அகானா - 41
இங்கு வீட்டிற்கு வந்த மைதிலியை யாராலும் சமாளிக்க முடியவில்லை. யார் என்ன பேசினாலும் அவர்களை வார்த்தைகளால் கடித்து குதறினாள். அழகரும் சரஸ்வதியும் மகனைத்தான் பாவமாக பார்த்தனர்.
ரவியுமே மனைவியிடம் பேசி பேசி ஓய்ந்து போய்தான் இருந்தார். அவருக்குமே மைதிலியை எப்படி சமாளிக்க எனத் தெரியவில்லை.
“உங்களுக்கு தேவைப்படுற வரை என்னையும், என் பணத்தையும் யூஸ் பண்ணிட்டு, இப்போ அவ வரவும் என்னைத் தூக்கி எரிய ப்ளான் பண்றீங்களா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தது, உங்க யாரையும் சும்மா விடமாட்டேன். என்கிட்ட டபுள் கேம் விளையாடனும்னு நினச்சா? ஹான் என்னைப்பத்தி உங்களுக்கு நல்லாவேத் தெரியும், மொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வச்சிடுவேன்..” என ஆங்காரமாகக் கத்தியவள் தன் அறைக்குள் சென்று, உடனே ரஞ்சனிக்கு அழைத்தாள்.
மைதிலி எப்போது வேண்டுமானாலும் தனக்கு அழைக்கலாம் என்று தெரிந்து கொண்ட ரஞ்சனி, அவளின் பேச்சுக்கு பயந்து போனையே ஆஃப் செய்து வைத்துவிட்டார்.
இரண்டு, மூன்று என அழைத்துக்கொண்டே இருக்க, ரஞ்சனியின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வர, யோசிக்கவே இல்லை. நேரம் ஒன்பதைத் தாண்டிவிட்டது என்ற யோசனை கூட இல்லை.
உடனே ரஞ்சனியின் வீட்டுக்கு கிளம்பினார் மைதிலி. மருமகளின் ஆங்காரத்தைக் கண்ட பெரியவர்கள் இருவரும் வாயேத் திறக்கவில்லை.
ரவியுடனான இந்த வாழ்க்கையில் இனி எப்போதுமே மஞ்சரியும், அவள் மகளும் இருக்க மாட்டார்கள் என்று உறுதி கொடுத்து தானே மைதியிலியோடு ரவிக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.
இப்போது திடிரென வந்து நிற்கும் இருவரையும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் இருவரையும். மைதிலியின் பயமும் கோபமும் சரிதானே என்று நினைத்து பெரியவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர்.
“ரவி.. நீ இப்படி அமைதியா இருக்கிறது ரொம்ப தப்பு ப்பா.. மைதிலியோட பயம் நியாயமானது தானே. அவ பயந்துக்கிற மாதிரி தானே நீயும் நடந்துக்கிற..” என சரஸ்வதி பேச,
அன்னையின் பேச்சுக்கு முதலில் எந்த பதிலும் தரவில்லை ரவி. பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக “மஞ்சுவும் நானும் எந்தளவுக்கு விரும்பினோம்னு உங்களுக்குத் தெரியும். அவளை விட்டுட்டு வரும் போது கூட, எப்படியாவது உங்களை எல்லாம் சமாதானம் செஞ்சு, அவளையும் அம்முவையும் என்கூட கூப்பிட்டுக்கனும்னு ஆசை இருந்தது. ஆனா அதை அப்போ என்னால வெளிப்படையா பேச முடியல..”
“உங்களுக்கு நான் ஒரு உதாவக்கரை பையன். படிக்க வச்சும் என்னால என் வாழ்க்கையில முன்னேற முடியல. உங்க பாஷையில சொல்லனும்னா பொழைக்கத் தெரியாதவன், உங்களை அம்போன்னு விட்டுட்டு பொண்டாட்டி புள்ளைன்னு ஓடிப்போன ஒரு சுயநலவாதி.. உங்களோட பார்வையில இதுதானே நான். ஆனா எனக்கும் ஒரு மனசு இருக்கும்னு நீங்க யாரும் யோசிக்கவே இல்லதான.”
“எனக்கு அவளைத்தான் புடிச்சது. அவளை மட்டும் தான் பிடிச்சது. அப்பவும் இப்பவும்.. நீங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணுகூட நான் கடமைக்காகத்தான் வாழறேன். அதுவும் தப்புத்தான். என்னோட சுயநலத்துக்கும், பேராசைக்கும் நான் கொடுத்துக்கிற தண்டனை தான் மைதிலியோட என் வாழ்க்கை.” என்றதும் அழகர் மகனையே வெறித்தார்.
“தப்புத்தான்.. ரொம்ப பெரிய தப்புத்தான்.. உங்களைத் தெரிஞ்சும், உங்க ஆசை என்னனு தெரிஞ்சும் நான் இப்படி என் வாழ்க்கையை கையிலெடுத்திருகக்கூடாது. நீங்க என்னையும் என் குடும்பத்தையும் அப்படியே விட்டுடுவீங்கன்னு அப்போ நான் நினைச்சேன்..” என்ற ரவியின் பேச்சைக் கேட்டு பெற்றவர்கள் ‘எதுக்கு இப்போ இதெல்லாம்?’ என்பது போல் பார்த்தனர்.
“லவ் பண்ணி ஓடிப்போன எல்லாரையும் பார்த்துருக்கேன். ஒரு குழந்தை ஆனா ரெண்டு வீட்டுலயும் சேர்த்துப்பாங்க. நானும் அப்படித்தான் தப்பா நினைச்சிட்டேன். இருபத்தியெட்டு வருசம் உங்கக்கூட இருந்தே எனக்கு உங்களைப் பத்தி தெரியல, அவளுக்கு என்ன தெரிஞ்சிருக்கும். எல்லாத்தையும், ஏன் என்னையும் பைத்தியக்காரத்தனமா நம்பினா? ஆனா அவளுக்கு நான் கொடுத்தது நம்பிக்கைத் துரோகம். பச்சையான நம்பிக்கைத் துரோகம்..” என்றதும்,
“இன்னைக்கு இவ்ளோ பேசுற நீ.. அப்பவே எனக்கு என் பொண்டாட்டி புள்ளதான் வேணும்னு முடிவா சொல்லிருக்கனும். இப்போ வந்து புலம்பினா, அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்..” என்றார் சரஸ்வதி, சற்றும் தயவு தாட்சன்யமின்றி..
“நீங்க எனக்கு கொடுத்த மென்டல் டார்ச்சர் எப்படி பட்டதுனு உங்களுக்கு இன்னும் புரியல. சென்டிமென்டலா என்னை லாக் பண்ணி, அடுத்த அடி எடுத்து வைக்க வக்கில்லாம ஆக்கிட்டு, எதையும் யாரையும் யோசிக்க விடாம, உங்களை மட்டுமே யோசிக்க வச்சு… ஷப்பா…” என்றார் தலையை வேகமாக ஆட்டி.
“ரவி.. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்.. அதுக்கு நீயும் தான் உடந்தையா இருந்த.. எங்க பையன் வேணும்னு நாங்க செஞ்சதை எப்படி தப்புன்னு சொல்லுவ.. நாங்க செஞ்சது தப்புன்னா, உன்னையே நம்பி இருந்த எங்களை தவிக்கவிட்டு ஓடி நீ செஞ்சதும் தப்புத்தான்..” என்றார் அழகர்.
“அது தப்புன்னு நீங்க எனக்கு கொடுத்த டார்ச்சர்ல தான் புரிஞ்சது. பணம் பணம் ன்னு நீங்க எனக்கு கொடுத்த டார்ச்சர்ல அவக்கிட்ட இருந்த மொத்த நகையும், ஏன் தாலியைக் கூட வாங்கி அடகு வச்சு உங்களுக்கு கொடுத்தேன். என்னால சமாளிக்க முடியாதுனு தெரிஞ்சு தான் நீங்க கேட்டீங்கன்னு அப்போ எனக்குத் தெரியாது. இது எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உங்ககிட்ட வரனும்னு தான் நீங்க எனக்கு அவ்ளோ கஷ்டம் கொடுத்துருக்கீங்க.. இது கூட எனக்குத் தெரியல.. அப்போ நான் எந்தளவுக்கு முட்டாளா இருந்திருக்கேன்..?”
“ரவி முடிஞ்சதை பேசாத? இனி என்ன செய்யனுமோ அதை யோசி. முதல்ல மைதிலியை போய் கூப்பிட்டு வா.. மாப்பிள்ளை இருக்கும் போது, அவங்க வீட்டுல போய் ரஞ்சியை சத்தம் போட போறா மைதிலி..” என்று மகனின் பேச்சை முடிக்க நினைத்தார் சரஸ்வதி.
“அன்னைக்கு கடைசியா இங்க வந்த போது மஞ்சு சொன்னான்னு என்கிட்ட சொன்னீங்களே நியாபகம் இருக்கா? அவர் கேட்டுருந்தா கண்டிப்பா நான் எந்த பிரச்சினையும் பண்ணாம பிரிஞ்சி போயிருப்பேன். எனக்கு அவரோட நிம்மதிதான் முக்கியம்.. ஆனா அதை விட்டுட்டு ஏன் இப்படி செஞ்சீங்கன்னு கேட்டான்னு சொன்னீங்களே.. அது நூறு சதவீதம் உண்மை. என்னை விட்டுட்டு போயிடுன்னு நான் சொல்லிருந்தா கண்டிப்பா போயிருப்பா, அவளைப் போய் நான் எவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன்..” என தாயின் பேச்சை கேட்காமல், தன் பாட்டுக்கு பேசினார் ரவி.
“இன்னைக்கு என் பொண்ணு.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் இந்த உயிர் ஏன் இன்னும் இருக்குன்னு என்னோட மனசாட்சியே என்னை காரித்துப்பி கேட்குது. என் கூட இருந்து, நான் பார்த்து வளர வேண்டிய என் பொண்ணு, இன்னைக்கு எங்கேயே இருந்து கஷ்டப்பட்டு படிச்சு யாருமே தொட முடியாத இடத்துல இருக்கா, அவளைப் போய் நீங்க எல்லாம் வாய்க்கு வந்ததை பேசுவீங்களா?” என சட்டென ஆவேசமாக கூற, பெற்றவர்கள் இருவரும் ரவியையே இமைக்காமல் பார்த்தனர்.
“என்னையோ மஞ்சரியையோ நீங்க என்ன சொன்னாலும் நான் பொறுமையா கேட்டுட்டு போய்டுவேன். ஆனா என் பொண்ணை எதுவும் யாரும் சொல்லக்கூடாது. அப்படி ஒன்னு நடந்தது எனக்குத் தெரிஞ்சது, இதுவரை பார்த்த ரவியை இனி பார்க்க மாட்டீங்க..” என ஆக்ரோசமாக கத்த,
“என்னடா.. என் பொண்ணு என் பொண்டாட்டின்னு பினாத்திட்டு இருக்க. நீதான் அதுங்க மேல பாசமா இருக்க. அதுங்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல. அன்னைக்கு பார்த்தியே எப்படி பேசினான்னு.. உன்னையும் இந்த குடும்பத்தையும் ஒரு இதுக்கு கூட அவ மதிக்க மாட்டா.. இப்படியே திமிர் காட்டிட்டு திரிஞ்சா, மைதிலி பத்தி தெரியும்ல.. இருக்குற எடம் தெரியாம அழிச்சிட்டு போய்டுவா..” என சரஸ்வதியும் ஆவேசமாக கத்தினார்.
அடுத்த நொடி தன் இருக்கையில் இருந்து ஆவேசமாக எழுந்த ரவி “நெஞ்சு முழுக்க பாசம் இருந்தும் இத்தனை வருசம் நான் ஏன் தெரியுமா அவங்களைப் போய் பார்க்கல. அவங்க உங்க கண்ணுல விழுந்துடக்கூடாதுனுதான்.” என்றவர் “இப்போ இந்த நிமிசம் என்னை மன்னிச்சிடு மஞ்சுன்னு அவக்கிட்ட போனா, என்னோட எல்லா தப்பையும் மன்னிச்சு என்னை ஏத்துக்குவா? அதை என்னால உறுதியா சொல்ல முடியும். எப்படி தெரியுமா? அவக்கிட்ட இருக்கிறது உண்மையான காதல்.” என்றவருக்கு மஞ்சரியின் காதலில் எப்போதுமே ஒரு கர்வம் உண்டுதான். இன்று அது சற்று அதிகமாய் காணப்பட்டதோ?
“நானும் உங்களை எல்லாம் ஏமாத்திட்டு போயிருந்தா உங்களால என்ன செஞ்சிருக்க முடியும். ஆனா நான் செய்யல. ஏன் தெரியுமா? அவங்களுக்குத் தான் நான் துரோகியா போய்ட்டேன். உங்களுக்காகவாவது நான் உண்மையா இருந்துட்டு போறேன்னு நினச்சுத்தான் அதை செய்யல. ஆனா இனியும் அப்படியே இருப்பேன்னு கனவுல கூட நினைக்காதீங்க. என் பொண்ணு மேல் ஒரு துரும்பு பட்டாக்கூடா இந்த ரவியோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க..” எனக் கத்திவிட்டு அறைக்குள் செல்ல, பெரியவர்கள் இருவரும் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தனர்.
“களி மண்ணைக் கூட ஓரளவுக்கு மேல நம்ம இஷ்டத்துக்கு மாத்த முடியாது. இவன் நம்ம பையன். உணர்வுகள் நிறைஞ்ச மனுசன். அவனோட ரத்தம் மேல அவனுக்கு பாசம் வரதுல எந்த தப்பும் இல்ல. இனி நாம பேச ஒன்னுமே இல்ல. நீயும் வாய்க்கு வந்ததை பேசாம, மருமகளுக்கு புத்தி சொல்ற வழியைப் பார்..” என்ற நேரம் அவசரமாக வெளியில் வந்தார் ரவீந்திரன்.
மகனின் பதட்டத்தில் “என்ன ரவி..?” என்ற சரஸ்வதியிடம்,
“ம்ம் எதிர்பார்த்தது தான்.. மைதிலியை போலிஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்..” என கிளம்ப,
“என்ன என்ன சொல்ற? அரஸ்ட் பண்ணீட்டாங்களா? ஏன் எதுக்கு..?” என வரிசையாக கேட்க,
“வேற எதுக்கு? எல்லாம் வில்லி வேலை பார்த்ததுக்குத்தான்..” என்றதும்,
“என்ன சொல்ற ரவி..?” என அதிர்ச்சியாக கேட்க,
“அம்முவை ஆள் செட் பண்ணி ஆக்சிடென்ட் பண்றதுக்கு திட்டம் போட்டிருக்கா? கொலை முயற்சி கேஸ்ல அரெஸ்ட் பண்ணிருக்காங்க. இது அம்மு கேஸ் கொடுக்கல. செகியூரிடிக்கு போன போலிஸ்தான் கேஸ் கொடுத்திருக்கார். ஆகன் அத்தனை தூரம் சொல்லித்தான் சென்னை அனுப்பினான். நான் கிளம்பவும் என்கூடவே வந்துட்டா.. இப்போ யாருக்கு கஷ்டம்..” என்றவர், அடுத்து அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.
“என்னங்க நடக்குது இந்த வீட்டுல. முதல்ல நித்யாவை அரெஸ்ட் பண்ணாங்க. இப்போ மைதிலியை அரேஸ்ட் பண்றாங்க. யார் பார்த்த வேலை? எதுக்கு இப்படி.?” என புலம்ப, அழகருக்கு புரிந்தது, அனைத்தும் அகானாவின் வேலை என்று. அதை மனைவியிடம் சொல்லி அவரை மேலும் டென்சனாக்க விரும்பாமல் அமைதியாகிவிட்டார்.
“எனக்கு மட்டும் என்ன தெரியும்? அதுதான் பையன் போயிருக்கான்ல பார்த்துட்டு வரட்டும்..” என்று விட்டார் மனிதர்.
மைதிலி வீட்டிலிருந்து வெளியேறும் போதே காயத்ரி அழைத்து ‘அந்தம்மா கிளம்பி எங்கேயோ போகுது பாப்பா..” என அகானாவிற்கு சொல்லியிருந்தாள். அவர்கள் ஊரில் இருந்து சற்று தள்ளி, இரண்டு ஊருக்கும் நடுவில் வைத்து தான் மைதிலியை மடக்கிப் பிடித்திருந்தனர்.
என்ன கேட்டாலும் மிகவும் திமிராக பதில் சொல்லிக் கொண்டிருந்த மைதிலியின் மீது கோபம் வர, அந்த ஊரில் இருக்கும் ஸ்டேசனுக்கு கொண்டு வந்துவிட்டனர்.
‘எனக்கும் சட்டம் தெரியும். நைட் ஒரு லேடியை அரெஸ்ட் பண்ணா, ப்ராப்பர் டாகுமென்ட் இல்லாம பண்ண முடியாது, அன்ட் லேடி கான்ஸ்டபிள் இருக்கனும், இது கூட தெரியாம அரெஸ்ட் பண்ண வந்துட்ட..” என நக்கலாக கேட்க, அந்த போலிஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது.
அந்த கடுப்பில் உடனே ரவிக்கு இன்ஃபார்ம் செய்யாமல், அலைக்கழித்து அதன் பிறகும் ஒரு மணி நேரம் கழித்தே செய்தார்.
ரவி ஸ்டேசனுக்கு வரும் போது ஆகனும், வினோத்தும் கூட வந்துவிட்டனர்.
“நான் தான் சொன்னேனே மாமா.. இவங்களை சென்னையிலேயே விட்டுட்டு வாங்கன்னு..” என ஆகன் சலிப்பாக சொல்ல,
“ஆகா நீ முன் ஜாமின் எடுத்து வச்சியா இல்லையா? எங்களை அனுப்பி வச்சிட்டு நீயும் உன் குடும்பமும் அவ கூட உறவாடலாம்னு கனவு கண்டுட்டு இருந்திருப்பீங்க. அதெல்லா இந்த மைதிலி இருக்குற வரை நடக்காது..” என ஆகனைப் பார்த்து மைதிலி கத்த,
“உனக்கு செய்யனும்னு அவனுக்கு எந்த அவசியமும் இல்ல. உன்னை கட்டின பாவத்துக்கு நான் தான் செய்யனும் அவனை ஏன் மரியாதை இல்லாம பேசுற,, இப்போ நீ வாயை மூடல. இங்கேயே கிடன்னு விட்டுட்டு போயிட்டே இருப்பேன்..” என ரவியின் சத்தத்தில் அந்த இடமே அமைதியாகிவிட, மைதிலியை கேட்கவும் வேண்டுமா?
முதல்முறை கணவனின் கோபத்தில் திகைத்து போ பார்த்தார்.