அகானா - 42
அந்த இரவு நேரத்தில் மைதிலியை வெளியே கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது. நேரம் தான் போய்க்கொண்டே இருக்கிறதே தவிர, எந்த ஒரு சுமூகமான வழியும் கிடைக்கவில்லை.
ரவி தன்னுடைய பின்புலத்தால் எத்தனையோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. எங்கு சென்றாலும், யாரிடம் உதவி கேட்டாலும், கடைசியாக சென்று நிண்ட இடம் அகானாதான்.
“கலெக்டர் மேல அட்டாக் நடந்திருக்கு. பெர்சனல் வெஞ்சன்ஸ் வச்சு இவங்கதான் செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க. இந்த கேஸ்ல எப்படி ஜாமின் தர முடியும்.” என ரவியின் நீதிபதி நண்பர் ஒருவர் கேட்க,
“ஏன் ப்பா.. அந்த பொண்ணு ஏதோ ஒன்னு பண்ணிட்டு போகுது. இதுக்கு ஏன் உங்க வைஃப் இவ்ளோ வெஞ்சண்ஸ் காட்டுறாங்க. நான் இந்த கேஸ்ல இன்வால்வ் ஆனா நாளைக்கு எனக்கு பிரச்சினை ஆகிடும் ப்பா..” என அரசியல்வாதி நண்பர் கூற, கடைசியில் துரைப்பாண்டியின் உதவியைத்தான் நாட வேண்டியிருந்தது அவர்களுக்கு.
“டாக்டர் உங்க முகத்துக்காக மட்டும் தான் நான் சும்மா போறேன். இன்னொரு தடவை அந்த பொண்ணு மேலையோ, அவங்க குடும்பம் மேலையோ கை வைக்கக்கூட நினைக்கக்கூடாது. உங்க வாழ்க்கையை நீங்க பார்த்துட்டு ஒதுங்கிட்டீங்க. அவங்க அவங்க பாட்ட பார்த்துட்டு இருக்காங்க. சும்மா இருந்தாலும் சீண்டிகிட்டே இருக்கனுமா? அன்னைக்கே உங்க மனைவிக்கிட்ட இப்படியொரு எண்ணத்தோட இங்க வரக்கூடாதுனு சொல்லியிருந்தேன். மறுபடியும் அதையே செஞ்சா, என்ன துரைப்பாண்டி மேல பயம் போயிடுச்சா..?” என்றார் கோபமாக.
அதற்கு ரவி எந்த பதிலும் பேசவில்லை. சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர் ரவி. வெளி வாழ்க்கையில் இதுவரை அவரை யாரும் ஒரு வார்த்தை தப்பாக பேசியது இல்லை.
மைதிலியின் இந்த செயலால், அவருக்கு அத்தனை அசிங்கம்.
தன் நண்பர்கள் அத்தனை பேர் இருக்க, யாராலும் உதவ முடியவில்லை. அவர்கள் அனைவவரும் முடியாது என கையை விரித்ததை நினைத்து அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
இந்த நிலையை உருவாக்கிய மனைவியின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
நேரம் இரவு பணிரெண்டுக்கு மேல் ஆகியிருக்கும். துரைப்பாண்டி தன் பிஏ விடம் “கலெக்டரோட பிஏ அந்த கண்ணன் தான, அவனுக்கு போன் போட்டு கொடு..” என்றதும், அவரும் போன் செய்து கொடுக்க,
“கண்ணன்.. கலெக்டரம்மா மேல கொலை முயற்சின்னு நீ தான் கேஸ் கொடுத்திருக்க போல..” எனவும்,
“ஆமா அய்யா…” என்றார் மிக பவ்யமாக.
“ஹான் அந்த கேஸ் வாபஸ் வாங்கனுமே.. உங்க கலெக்டரம்மாக்கிட்ட பேசனுமா? நான் பேசனும்னா சொல்லு பேசுறேன்..” என்றார் துரைப்பாண்டி.
“அதெல்லாம் வேண்டாம் அய்யா.. மேடமே கேஸ் வாபஸ்தான் வாங்க சொன்னாங்க. ஆகன் தம்பி கூட இப்போ பேசினாங்க. மேடமோட அம்மாவுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்ல. அதனால..” என இழுக்க,
“சரி.. நான் இங்க கண்டமனூர் ஸ்டேஷன்ல இருக்கேன். சீக்கிரம் வந்துடு. நான் மத்த ஃபார்மாலிடிஸ் எல்லாம் பார்த்துக்கிறேன்..” என்று வைத்து விட்டவர், ரவியைப் பார்த்து “இப்படித்தான் ஒரு பொண்ணை வளர்க்கனும், நிச்சயமா சொல்றேன் இந்த பொண்ணு இன்னும் இன்னும் உயரத்துக்கு போவா.. அவ்வளவு மரியாதையும், கண்ணியமும் நிறைஞ்ச பொண்ணு. அவங்க அம்மா அருமையா வளர்த்திருக்காங்க..” என பாராட்ட, மைதிலிக்கு உடலெல்லாம் எரிந்தது.
ரவியின் பக்கத்தில் நின்ற ஆகனைப் பார்த்து, ‘யாருக்கிட்ட போனா வேலை ஆகும்னு தெரிஞ்சி வச்சிருக்கீங்களே டாக்டர் தம்பி.. வேலையை கரெக்டா முடிச்சிருக்கீங்க. நீங்க எல்லாம் இருக்குற தைரியம் தான் உங்க அத்தை இவ்ளோ அட்டகாசம் பண்றாங்க. இது சரியான்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம் கலெக்டரம்மாவை கொஞ்ச நாள் அப்படியே விடுங்க.. இந்த ஊருக்கு ஏதோ நல்லது செய்யனும்னு நினைக்கிது. செஞ்சிட்டு போகட்டும். ஒருவேளை அவங்க அம்மா பிறந்து வளர்ந்த ஊருன்னு ஒரு பாசம் வந்திருக்கலாம். ஏன் குடும்பமே சேர்ந்து அவங்களுக்கு இவ்ளோ ப்ரெஷர் கொடுக்குறீங்க..” என பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணன் வந்துவிட்டார்.
“என்ன அதுக்குள்ள வந்துட்ட.?” என துரைப்பாண்டி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவருக்கு பின்னே அகானா வந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் அனைவரும் திகைக்க, துரைப்பாண்டி தான் புன்னைகையுடன் வரவேற்றார்.
காவலர்கள் அனைவரும் சல்யூட் அடித்து அட்டேன்சன் பொசிசனில் இருக்க, இன்ஸ்பெக்டர் எழுந்து அகானா அமர, இடம் கொடுக்க, துரைப்பாண்டியின் எதிரில் நிமிர்வாக அமர்ந்தாள் அகானா.
இன்ஸ்பெக்டர் தவிர்த்து அனைத்து காவலர்களும் துரைப் பாண்டியின் ஒரு பார்வைக்கு வெளியில் சென்றுவிட்டனர்.
‘இப்போ இவ ஏன் இங்க வந்தா?’ என ஆகன் நினைக்க,
‘இந்த நேரத்துல இந்த பிசாசு எதுக்கு வந்திருக்கா? கேஸ் ஸ்ட்ராங்க் பண்ணிடுவாளோ?’ என மைதிலி நினைக்க,
ரவியோ அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தார். அடி எங்கெங்கு பட்டிருக்கிறது. காயம் ஆழமா என்று தன் பார்வையாலேயே மகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
மகளின் சோர்வு அவருக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், அவளின் நிமிர்வும் கூரிய பார்வையும் தகப்பனை நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள செய்தது உண்மை.
“வணக்கம் சார்..” என துரைப்பாண்டிக்கு வணக்கம் வைத்தவள், மற்றவர்களை பார்வையால் கூட தீண்டவில்லை.
“வணக்கம் கலெக்டரம்மா.. உங்க வேலையெல்லாம் எப்படி போகுது? இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே? உங்க பெரியப்பனை ஏதோ ஹோம்ல சேர்த்துட்டதா கேள்விப்பட்டேன். நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன் தெரியுமா? கேட்டதே இல்ல. நீ சொன்னதும் மறுவார்த்தை பேசாம போயிட்டான். வரட்டும் அப்புறம் பேசிக்கிறேன் அவனை. தாமு திரும்பி வந்தா எங்கிட்டதான் வருவான்.” என்றார் பெருமையாக சிரித்தபடியே..
“முன்னாடியும் அவர் உங்ககிட்ட தான் இருந்தார் சார். அப்போ விட்டுட்டீங்க. மறுபடியும் வருவார். அப்போவும் விட்டுட்டா.?” என கொக்கி போட, அப்போது அவர் பார்வை மின்னலென மைதிலியைத் தொட்டு மீண்டது.
“எப்பவும் இந்த துரைப்பாண்டி தூங்கிட்டே இருக்க மாட்டான். அப்போ நான் என் மகன்கிட்ட அமெரிக்கா போயிட்டேன். நான் இல்லைன்னு தெரிஞ்சுதான் என் தாமு மேல கை வச்சிருக்காங்க. அதுதான் தப்பிச்சிட்டாங்க. இனி என்னை மீறி என் தாமு மேல கை வச்சா, அவங்க குடும்பத்தையே கருவறுத்துடுவேன் நான். என்னைப்பத்தி எல்லாருக்கும் தெரியும். ஏன் உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமே கலெக்டரே..” என கேட்க,
“ம்ம்… உங்க டைலாக் எல்லாம் கேட்டா புல்லரிக்குது தான்.. மெர்சலாத்தான் இருக்கு. ஆனா நம்பத்தான் முடியல. ஓகே இனி அதைப்பத்தி பேச வேண்டாம். இப்போ வந்த வேலையை பார்க்கலாம்..” என்று அந்த பேச்சை அப்படியே முடித்து, ஆகனைப் பார்க்க, அவனோ ‘பேசு’ என்பது போல் தலையசைத்துவிட்டு ரவியைப் பார்த்தான்.
“வெல்.. எனக்கு இவர்கிட்ட ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு..” என ரவியைப் பார்த்து கூற,
ரவியோ இன்னும் மகளைப் பார்த்து தீரவில்லை போல, பதிலேதும் சொல்லாமல் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னனு சொல்லுங்க கலெக்டெரம்மா.. டாக்டர் கண்டிப்பா செய்வார்…” என துரைப்பாண்டி கூற,
“நீங்க சொன்னா போதுமா? உங்க டாக்டர் சொல்லனுமே? எனக்கு அவங்க வீட்டுல யார் மேலையும் நம்பிக்கை இல்லை. அதனாலத்தான் நீங்க இருக்கும் போதே பேசிடனும்னு வந்தேன்..” என்றதும், துரைப்பாண்டிக்கு மகிழ்வாகிப் போனது.
“நான் பேசி முடிக்கிற காரியம். கண்டிப்பா தப்பா போகாது. இப்போ டாக்டர் என்ன செய்யனும்?” என்ற துரைப்பாண்டி “டாக்டர் சார் என்ன அப்படியே நின்னுட்டு இருக்கீங்க. கலெக்டர் மேடம் கேட்டது உங்க காதுல விழுந்துச்சா இல்லையா?” என்றார்.
“ம்ம்.. ஆமா ண்ணா சொல்லுங்க..?” என்றாலும் பார்வை மகளிடம் தான்.
“நானோ, என் அம்மாவோ இவரைத் தேடியோ, இவங்க குடும்பத்தை தேடியோ வரல. இப்போ மட்டுமில்ல எப்பவும் வரவும் மாட்டோம். எங்க வாழ்க்கையில அவர் இல்லை. அதுல நாங்க தெளிவா இருக்கோம். அப்படி இருக்கும் போது இவங்க வீட்டு ஆளுங்க எதுக்கு என் மேலயும், என் அம்மா மேலையும் இவ்வளவு வன்மத்தைக் கக்கனும்.”
“முடிஞ்சது எல்லாம் முடிஞ்சது தானே.. நான் மஞ்சரியோட பொண்ணு மட்டும்தான். அதைத்தான இந்த மைதிலி எதிர்பார்க்கிறாங்க. ஆனா அவர்தான் நான் உருவாக காரணம்னு யாராலையும் மறுக்க முடியாது இல்லையா? இதுல எங்க தப்பு எங்க இருந்து வந்தது. இவங்க தண்டிக்கனும், கண்டிக்கனும்னா இவரைத்தான செய்யனும், எதுக்கு எங்களை கட்டம் கட்டி செய்யனும்.”
“அன்னைக்கு என் அம்மாவை துரத்தும் போது அவங்களுக்கு யாருமில்ல தான். ஆனா இப்போ அப்படி இல்லையே.. நான் இருக்கேன். நீங்க சொன்ன மாதிரி ஒருத்தரையும் விடாம ஒழிச்சுக் கட்டிடுவேன். என்னோட பதவிக்கு நான் நியாயமா ஒழுக்கமா இருக்கனும்னு நினைக்கிறேன். அதை மீற வச்சிடாதீங்க.” என்று எழுந்தவள், வினோத்திடம் திரும்பி “மகி கல்யாணத்துல இவங்க எந்த பிரச்சினையும் பண்ணக்கூடாது. அப்படி செஞ்சா மகியை நீங்க மொத்தமா மறந்துடுங்க..” என்றவள், “கண்ணன் அங்கிள் முடிச்சிட்டு வாங்க.. நான் வெளிய வெய்ட் பண்றேன்..” என நடந்துவிட, தொய்ந்து போய் நின்றார் ரவி.
உண்மையில் அந்த இடத்தில் ரவி என்ற மனிர் உயிரோடு மறித்துப் போய் தான் நின்றார்.
அங்கிருந்த அனைவருமே அவரைப் பரிதாபமாகத்தான் பார்த்தனர்.
ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. உடனே அங்கு நிற்காமல் அகனாவிற்கு பின்னே வேகமாக வெளியில் வந்தார்.
அவர் சென்ற வேதத்தை பார்த்து மைதிலிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. வாய்ப்பு கிடைத்தால் இந்த நொடியே அகானாவை கொன்றுவிடும் அளவிற்கு அவர் விழிகளில் குரோதம் மின்னியது.
அதை அங்கிருந்த அத்தனை பேருமே கண்டு கொண்டனர். ஆகனுக்கு மைதிலியின் மீது அத்தனை ஆத்திரம். ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து, தன்னை மிகவும் கட்டுப்படுத்தி நின்றான். அவன் உடல் விரைத்து நின்றதிலேயே அவனின் கோபம் புரிய ‘கண்ணா..’ என வினோத் தான் அவனை சமாதானம் செய்தார்.
ஆகனைப் பார்த்த துரைப்பாண்டி “இதுக்குப் பிறகு உங்க அத்தை எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்லது. இல்ல… நான் இப்படித்தான்.. என்னை யாரும் எதுவும் கேள்வி கேட்கக் கூடாதுன்னு ஆட்டம் காமிச்சா, அதுக்கு பிறகு நடக்கிற விபரீதக்களுக்கு நான் பொறுப்பில்லை..” என்றவர், கண்ணனை பார்த்து “கூடவே இருய்யா..” என வெளியில் நடந்தார்.
இங்க வெளியில் வந்த ரவீந்திரன் மகளிடம் சென்று “அம்மு.. அம்மு நில்லு…” என தன் வயதையும் மீறி ஓடி வர, அகனாகவும் நின்று நிதானமாக திரும்பி ‘என்ன.?’ என்பதை போல் பார்த்தாள் பேசவே இல்லை.
அவளின் கூர்பார்வையில் ஒரு நொடி தடுமாறி, “நான் உன்னோட அப்பாவா இதை கேட்கல.. அந்த தகுதியை இழந்து பல வருஷம் ஆச்சுன்னு எனக்கு தெரியும்.. ஜஸ்ட் ஒரு டாக்டரா கேட்கிறேன், ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற.?’ என்றார் மிகவும் வருத்தமாக.
“நீங்க ரிஸ்க் எடுத்திருந்தா, நான் இப்போ இங்க இப்படி வந்து நின்னுருக்கமாட்டேன். உங்களுக்குத்தான் பிரச்சினைன்னா யார் பின்னாடியாவது ஒழிஞ்சுக்கனுமே.. அதே மாதிரி நான் இருக்க முடியுமா? ஹ்ம்ம் உங்களுக்கு வேணும்னா பொறுப்பு இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு இருக்கே.. அப்போ இந்த ரிஸ்க் தேவைதான..?” என்றவள் காரில் ஏறிக்கொள்ள, மகளின் இந்த வார்த்தைகளில் தளர்ந்து போய் நின்றார் மனிதர்.