• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 44

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 44

ஆரியன் கேட்ட கேள்விக்கு ரஞ்சனியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால் அவரிடம் பதிலே இல்லை எனலாம்.

அதனால் அவர் அமைதியாக தலையைக் குனிய, அதைப் பார்த்த ஆகன் “ஆரி..” என்றான் சற்று அதட்டலாக.

“சீனியர் நான் தப்பா எதுவும் பேசல.” என்றான் ஆரியனும் சத்தமாக.

இருவரின் சத்தத்திலும் மகி அரண்டு போக, அதைப் பார்த்த சங்கர் “கண்ணா விடு.. இப்போ ஏன் அவரை அதட்டுற, அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவரும் தப்பா சொல்லல. அவங்க செஞ்சதைத் தான் சொல்றார். உண்மையை சில சமயம் ஏற்க கஷ்டமாத்தான் இருக்கும்..” என்று வெகு நிதானமாக கூறினார்.

மகளைச் சொன்னதும் சரஸ்வதிக்கு கோபம் வந்துவிட்டது. “மாப்பிள்ளை என்ன பேசுறீங்க?” என கேட்க,

“ம்மா அவங்க எல்லாரும் உண்மையைத்தான் சொல்றாங்க. நீங்க எதுவும் இப்போ பேச வேண்டாம்..” என்ற ரஞ்சனியிடம், முகத்தைத் திருப்பிக் கொண்டார் சரஸ்வதி.

“ம்ச்..” என்று சலித்த ஆரியன் “ப்ளீஸ்.. ஆன்டி இனி உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரக்கூடாது. இப்படித்தான் எங்க லைஃப் இருக்கும். அகி என்னோட சிஸ்டர். அவளுக்காக நான் எதுவும் செய்வேன். ஆனா அதுக்காக மகியைக் கஷ்டப்படுத்துவேன்னு நீங்க நினைச்சிடாதீங்க. தங்கச்சிக்கும், மனைவிக்கும் எந்தளவுக்கு உரிமை கொடுக்கனும்னு எனக்குத் தெரியும். இதை உடனே நம்ப உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பட் நான் வேற என்ன பண்ண முடியும். ரியாலிடி இதுதான். நாங்க வாழப் போற வாழ்க்கைதான் உங்களுக்கு அதைப் புரிய வைக்கும்..” என்று முடித்துவிட்டான்.

ஆரியனின் அந்த வார்த்தைகளே அங்குள்ளவர்களுக்கு, முக்கியமாக ரஞ்சனிக்கு போதுமானதாக இருந்தது.

“சரி.. அதுதான் ரஞ்சனி கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்டாளே.. இனி மகி எதுக்கு இங்க இருக்கனும். எல்லாம் முறைப்படி நம்ம வீட்டுல வச்சு நடத்தலாம். நாளைக்கு விசயம் வெளிய தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்குத்தான் இது அசிங்கம். நாம மகியை கூப்பிட்டு போகலாம்..” என சரஸ்வதி கூற, அனைவருமே ஒவ்வொரு உணர்வுடன் அவரைப் பார்த்தனர்.

ரஞ்சிக்கும் ஆசை இருந்தது. ஆனா மகனும் கணவரும் விடமாட்டார்கள் என்பதால் அதைப்பற்றி கேட்கவே இல்லை.

“அந்த பேச்சே ஆகாது..” என பட்டென ஆரி சொல்ல,

“இதுக்குத்தான் கிளம்பி வந்தீங்களா?” என சங்கர் மனைவியைப் பார்த்து கோபமாக கேட்க,

“அய்யோ இல்லீங்க… நான் மகியைப் பார்க்கத்தான்..” என்றவருக்கு, கணவரின் அதட்டலில் விழிகள் கலங்கிப் போனது.

“பாட்டி.. இப்போ யாரு உங்களை இதை கேட்க சொன்னா? ஆரம்பத்துலயே சொன்னதுதான். மகி இங்கதான் இருப்பா.. தேவையில்லாத வேலைப் பார்க்காதீங்க.” என்று ஆகன் சத்தம் போட,

“ஸீனியர் ப்ளீஸ் இங்க எந்த சத்தமும் வேண்டாம். இதெல்லாம் மகியைத்தான் அஃபெக்ட் பண்ணும். இவங்க பேசிட்டு போயிடுவாங்க. அதுக்குப் பிறகு மகி உக்காந்து அழறதை என்னால பார்க்க முடியாது. அப்படி எதுவும் நடக்க வேண்டாம். நான் ஆன்டிக்கிட்ட பேசுறேன்..” என ஆகனை தடுத்த ஆரியன்,

“ஆன்டி.. நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்.. இப்போ நீங்களோ, மகியோ எப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. நீங்க கேட்டிருந்தா கூட உடனே ஓகே சொல்லிருப்பேனோ என்னவோ, அவங்க கேட்கவும் என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல. உங்க பேரண்ட்ஸ் பத்தி உங்களுக்கேத் தெரியும். நீங்களே யோசிச்சுப் பாருங்க, அவங்க மனசுல எந்த வஞ்சமும் இல்லாமத்தான் மகியை அங்க கூப்பிடுறாங்களா? தாலி கட்டுற கடைசி நிமிசம் வரைக்கும் கூட அவங்க இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சிப்பாங்கன்னு எனக்குத் தெரியும்..”

“ச்சே ச்சே.. பாருங்க ஆன்டி.. நான் எங்கேயோ போறேன்.. எதையோ பேசுறேன். உங்க வீட்டுல தான் தாலியே கட்டினாலும் இவங்களுக்கு அது ஒரு பொருட்டே இல்லையே, தாலியை கழட்டி எறிஞ்சிட்டு வா, உனக்கு வேற வாழ்க்கை அமைச்சித் தரேன்னு வலுக்கட்டாயமா செஞ்சு வைக்கிற ஆளாச்சே இவங்க. அவங்களைப் பத்தியோ, அவங்க உணர்வுகள் பத்தியோ கொஞ்சமும் கவலை படமாட்டாங்களே.. அது உங்களுக்குத் தெரியாம இருக்குமா? அப்படிப்பட்ட இவங்க கேட்டு என்னால கண்டிப்பா மகியை அனுப்ப முடியாது ஆன்டி. நீங்க என்னைத் தப்பா நினைச்சாலும் பரவாயில்ல..” என்றவன் மகியைப் பார்க்க, அவளோ கலங்கிய விழிகளுடன் தாயைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க சொல்றதுல எந்த தப்பும் இல்ல மாப்பிள்ளை. மகி இங்கேயே இருக்கட்டும். ஷாப்பிங்க் போகும் போது மட்டும் வந்து கூப்பிட்டுக்கிறேன்.. அதுக்கும் அனுப்பமாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க..” என்ற ரஞ்சனிக்கு அழுகையே வந்துவிட்டது.

“ம்மா.. என்ன ம்மா நீங்க..?” என மகி தாயின் கையைப் பிடித்துக் கொள்ள,

“ம்மா.. என்ன பேசிட்டு இருக்கீங்க..” என ஆகனும் ரஞ்சனியின் மற்றொரு பக்கம் அமர்ந்துகொள்ள,

“ரஞ்சி போதும்.. நல்ல காரியம் நடக்கும் போது இப்படி எல்லாத்துக்கும் சண்டையும், சச்சரவும், அழுகையும் கூடாது. முகத்தை துடைச்சிட்டு கிளம்பு. நாளைக்கு ஜவுளி எடுக்க மதுரை போகனும். சம்மந்தி வீட்டுல நைட் கிளம்பி காலையில வந்துடுவாங்க.” என சொல்ல வேண்டியதை சொல்லி அதட்ட,

மகளின் திருமணத்தில், தான் ஒதுக்கி வைக்கப்பட்டதை எண்ணி எண்ணி அவர் அழாத, வருந்தாத நிமிடங்களே இல்லை. அதிலும் மகனும், கணவரும் ஒரே வீட்டில் இருந்தும் கூட அவரிடம் பேசாமல் ஒதுங்கிப் போனதை நினைத்து விரக்தியின் உச்சிக்கே சென்றிருந்தார்.

இப்போது கணவர் தன்னிடம் பேசியதில் அவர் மனம் சற்றே நிம்மதி கொண்டது.

“அப்போ நாங்க கிளம்பறோம் மகி. கவனமா இருக்கனும். உன்னோட திங்க்ஸ் நாளைக்கு வரும் போது கொண்டு வரேன்.” என்ற ரஞ்சனி மகளை அனைத்து விடைபெற, சரஸ்வதியும், அழகரும் ஒரு தலையசைப்போடு கிளம்பி விட்டனர்.

கேட் வரை வந்து, கலங்கிய விழிகளுடன் பெற்றவர்களை வழியனுப்பிய மகிழினியை பார்த்து ஆரியனுக்கும் கலக்கமாகத் தான் இருந்தது.

‘தப்பு செய்கிறோமோ?’ என்று கூட தோண்றியது.

ஆகன் தங்கையை சமாதானம் செய்து கொண்டிருக்க, ஆரியன் வீட்டிற்குள் வந்துவிட்டான்.

பெரியவர்கள் இருவரும் வீட்டிற்கு வர, ஹாலில் அமர்ந்து இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் மைதிலி.

“அது வந்து மைதிலிமா..” என சரஸ்வதி ஆரம்பிக்க, ‘ஒன்னும் சொல்ல தேவையில்ல’ என்பது போல் கையைக் காட்டி நிறுத்தியவள், தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

மைதிலியின் இந்த அமைதி அவர்களுக்கு மிகவும் பயத்தைக் கொடுத்தது.

அடுத்த நாள் சற்றே சுமூகமாகத்தான் சென்றது. ஜவுளி எடுக்க நித்யாவும் வந்திருக்க, பெரிதாக எந்த பிரச்சினையும் நடக்கவில்லை.

விஜயா மஞ்சரியை கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தார். மஞ்சரியைப் பார்த்ததும் ரஞ்சனிக்கு சட்டென ஒரு கோபம் வந்ததுதான். ஆனால் அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

நித்யா வந்து பேசினால் கூட அளவோடு நிறுத்திக் கொண்டார் மஞ்சரி.

முடிந்தது முடிந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவரும் மகளும் தெளிவாகவே இருந்தனர்.

அதனால் அந்த வீட்டாட்களோடு பழகுவதில் கூட விருப்பம் காட்டவில்லை மஞ்சரி.

அகானா இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆரியன் கேட்டதற்கு கூட, “மேரேஜ் அப்போ கூட இருப்பேன்.. இப்போ என்னை தொந்தரவு பண்ணாத..” என்று முடித்துவிட்டாள்.

இதோ பத்திரிக்கையும் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் ஆரியனும் மகிழினியும் சரியாக பேசிக் கொள்ளவில்லை.

இரண்டு மூன்று முறை மகி அவனிடம் பேச வந்தாள் தான். ஆனால் ஆரி தான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தேவைக்கு மட்டும் பேச, அதன் பிறகு மகியும் கூட அவனைத் தொந்தரவு செய்யவில்லை.

நேற்றே ஆகன் தங்கைக்கு அழைத்து “பாப்பா ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ஸ்க்கு இன்விடேஸன் வைக்கனும். நீ நாளைக்கு வந்துடு.. வச்சிடலாம்.” என்று சொல்லியிருந்தான்.

அதை ஆரியனிடம் சொல்லாமல் மஞ்சரியிடம் சொல்லியிருந்தாள் பெண்..

அன்றிரவு உணவின் போது மஞ்சரி கூற, சட்டென நிமிர்ந்து எதிரில் இருந்தவனைப் பார்த்தான் ஆரியன். அவளோ அமைதியாக குனிந்த படி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

சில நொடி அமைதிக்குப் பின் “எனக்கு ஓக்கே தான் மஞ்சு ம்மா.. ஹாஸ்பிடல் வந்ததும் சேர்ந்து கொடுத்துக்குறோம்..” என்ற போதும் கூட மகிழினி நிமிர்ந்து பார்க்கவில்லை.

‘சீக்கிரம் அவளை சரி செய்ய வேண்டும்..’ என்று மட்டும் புரிந்தது. அவளைப் பார்த்த நாளில் இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் அத்தனை வித்தியாசங்களை கண்டு கொள்ளலாம்.

தன்னுடைய சுயநலத்துக்காக அவளைக் கடத்தி, காதல் அது இதென்று சிறு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்கிறோமோ என்று கூட இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது.

அவன் யோசனையில் இருக்க, மகி சாப்பிட்டுவிட்டு சென்றிருந்தாள். மஞ்சரியும் கிச்சனில் இருக்க, அகானா தான் “நீ அவளை எப்போ சரி பண்ணுவ ஆரி.. நீ இப்படி நடந்துக்கிறது எனக்கு கில்ட்டா இருக்கு. எனக்காகத்தான் அவளை மேரேஜ் பண்ணிக்க போறீயோன்னு கூட தோனுது. உன் மர மண்டைல என்னதான் ஓடுது. அதைத் தெளிவாச் சொல்லு.. அவ பாவம் டா.. அவளை ரொம்பவும் கஷ்டப்படுத்தாத. சின்ன பொண்ணு. அவளுக்கு இந்தளவுக்கு பக்குவம் வந்ததே பெருசு. அவ உலகம் வேற.. அதை விட்டு வெளியில் வந்து உனக்காக இவ்ளோ அட்ஜஸ்ட் செஞ்சி இருக்கிறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீ இன்னும் அவளை கஷ்டப்படுத்துற.. அட்லீஸ்ட் நீ என்ன நினைக்கிற, என்ன யோசிக்கிற, உன்னோட எதிர்பார்ப்பு என்னனு அவக்கிட்ட மனசு விட்டு பேசு.. அப்போதான் உன்னை அவளுக்குப் புரியும்.. அம்மாக்கிட்ட கூட அவ பேச ரொம்ப தயங்குறான்னு சொல்றாங்க. நீ நடந்துக்கிறது தான், அவளை இவ்ளோ யோசிக்க வைக்குது.. இதுக்கு மேல எனக்கு டீடைலா பேச வரல ஆரி..” என்று அகானாவும் உணவுத் தட்டோடு எழுந்து கொள்ள, தலையே வெடித்து விடும் போல் இருந்தது ஆரியனுக்கு.

உணவும் இறங்குவேனா என்றிருந்தது. அதற்கு மேல் அவனால் அங்கு உட்கார முடியவில்லை. கையைக் கழுவி விட்டு, மகிழியின் அறைக்குச் சென்றான்.

பெண்ணவளோ வழக்கம்போல, பால்கனியில் இருந்து இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டவனுக்கு, இதயத்தின் கனம் கூடிக்கொண்டே போனது.

ஒரு வழியாக தன்னை சமாளித்து “மகி..” என்றான் சற்று சத்தமாக. அவள் நிகழ்வுக்கு வர வேண்டுமே.

“ஹான்..” என வேகமாக திரும்பியவள், அங்கு ஆரியனைக் கண்டு விழி விரித்தாள்.

“என்ன..? என்னாச்சு மறுபடியும் எங்க வீட்டாளுங்க பிரச்சினை பண்றாங்களா?” என்றாள் பதட்டமாக.

பெண்னவளின் வார்த்தைகளில் ஆணவன் ஒரு நொடி செத்துத்தான் பிழைத்தான். கல்யாண கனவுகளுடன் வலம் வர வேண்டிய பெண், அதற்கான சிறு அறிகுறி கூட இல்லாமல், எப்போதும் என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டே இருப்பதில், அவன் தோற்றுப் போனதாகவே உணர்ந்தான்.

தன் பதிலுக்காக அவள் காத்திருப்பதை உணர்ந்து, தன் யோசனைகளைத் தள்ளி வைத்து “இல்ல. அதெல்லாம் எதுவும் இல்ல. என் டியூட்டி டைம் தெரியும்ல. அப்போ ஹாஸ்பிடலுக்கு வந்துடு. ரெண்டு பேரும் சேர்ந்தே இன்விடேஷன் கொடுத்துடலாம். அப்படியே கொஞ்சம் வெளியே போகனும்.. போயிட்டு வந்துடலாம்..” என்றான் பொறுமையாக.

“ஹான் சரி.. நான் ஆகன்கிட்ட சொல்லிடுறேன். அம்மா மூக்கு குத்தனும். ஆசாரி வர சொல்றேன் சொன்னாங்க.” என்றாள் மெல்ல..

“ஓ..” என்றவனுக்கு, அவர்கள் குடும்ப பழக்கம் என்று புரிந்தது.

“சரி.. நாளைக்கு வேண்டாம்னு சொல்லிடு. அடுத்தநாள் வர சொல்லு.. நாளைக்கு நாம கொஞ்சம் ஷாப்பிங்க் போயிட்டு வந்துடலாம்..” என்றவன் “நோஸ் பின் போட்டா எனக்கு பிடிக்குமா? பிடிக்காதான்னு எல்லாம் ஒபினியன் வாங்க மாட்டியா.?” என்றான் ஒரு மாதிரி குரலில்.

அந்த குரலில் அவள் திகைத்துப் பார்க்க, அவனோ வெளியில் சென்றுவிட்டான். இப்போ போடனுமா? வேண்டாமா? என்னதான் சொல்லிட்டு போறான்? என தனக்குள்ளே புலம்பித் தவித்துப் போனாள் பெண்.

இத்தனை நாளும் நடந்ததை அண்ணனும் தங்கையும் யோசித்துக் கொண்டார்கள்.

ஆகனுக்கு தங்கை திருமணம் சந்தோசம் என்றாலும், அகானாவை நினைத்து மனம் தவித்துப் போனது. இத்தனை நாட்களில் அவளைத் தனியாக சந்திக்கவே முடியவில்லை.

பல முறை முயற்சித்துப் பார்த்துவிட்டான். வேண்டுமென்றெ தவிர்ப்பவளிடம் எப்படி தன்னை முன் நிறுத்துவது என்றும் தெரியவில்லை. அவன் காதல் அவனை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் அரித்துக் கொண்டே இருந்தது.

அவள் நடந்து கொள்வதை எல்லாம் பார்க்கும் போது தன் காதல் கனவில் கூட கைகூடாது என தெளிவாக அவனுக்குப் புரிந்தது.

ஆனால் அதை அப்படியே ஆகனால் விட முடியுமா? அப்படி விட்டால் அவன்தான் ஆகனாக இருக்க முடியுமா?