அகானா - 46
“சார் மூக்குத்தில இவ்ளோதான் டிசைன்ஸ் இருக்கு.. வேனும்னா நீங்க டிசைன் பண்ணிக் கொடுத்துட்டு போங்க. நாங்க செஞ்சி கொடுக்குறோம்..” என்றார் அந்த கடை மேனேஜர்.
அவர் குரலே எந்தளவுக்கு தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசுகிறார் என்று மகிழினிக்கு புரிந்தது.
“ஹான்.. இதெல்லாம் ஓல்ட் மாடல் ப்ரோ.. கொஞ்சம் ட்ரெண்டியா இருந்தா பெட்டர்..” என ஆரி மீண்டும் மீண்டும் அதே கூற,
“ம்ச்..” எரிச்சல் ஏறியது மகிழினிக்கு.
“எனக்கு அந்த ஃப்ளவர் டிசைன் பிடிச்சிருக்கு. அதையே எடுக்கலாம்.” என ஆரியின் காதில் முணுமுணுக்க,
“அது ஸ்மால் சைஸா இருக்கு. கொஞ்சம் பெருசா.. அந்த மூக்குக்கு மேல பளிச்சினு தெரியனும். அப்பதான் நல்லா இருக்கும்..”
“ஹான்.. பெருசாவா.. நோ.. சின்னதா ஒரே ஒரு கல் இருக்குற மாதிரி போதும் ப்ளீஸ்.. இதையே உங்களுக்குப் பிடிக்காதுனு சொல்லி, அம்மாக்கிட்ட அவாய்ட் பண்ண நினைச்சேன்..” என்றாள் அரண்ட குரலில்..
“நோ.. நோ.. எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ சொன்னதுமே நேத்து நைட்டெல்லாம் இதே யோசனைதான்.. என்ன டிசைன் போட்டா நல்லா இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன்..”
“நிஜமாவா?” என நம்பாத குரலில் மகி கேட்க,
“ஹேய் சீரியசா ப்பா..” என அவனும் கூற,
“ம்ம்.. அப்போ டிசைன் கொடுத்துட்டு வாங்க. மேரேஜ் க்கு முன்னாடி செஞ்சிக் கொடுக்க சொல்லுங்க. இப்போ ஒரு கல் இருக்குற மாதிரி மட்டும் எடுத்துக்கலாம்..” என உடனே சம்மதிக்கவும், ஆரியனுக்கு மனம் மலர்ந்தது.
தன் மீதிருக்கும் கோபம், வருத்தம் அனைத்தையும் மறந்து தனக்காக சமாதானம் ஆனவளை அந்த நொடி அத்தனைப் பிடித்தது ஆரியனுக்கு.
“ஹ்ம்ம்.. ஃபர்ஸ்ட் டைம் நீ போடுற ஜ்வெல் என்னோடதா இருக்கனும்னு நினைச்சேன். தப்பு இல்லையே..” என்றான் மயங்கிய குரலில்.
“ஹான்.. ஹ்ம்ம்..” என்றவள் “செலக்ட் பண்ணுங்க போலாம்.. இங்க ரொம்ப நேரம் வேண்டாம்..” என்றதும், ஆரியனும் வேகமாக ஒற்றை வைரக் கல் வைத்த மூக்குத்தியை எடுத்துவிட்டு, மற்ற மூக்குத்திக்கு டிசைனும் உடனே வரைந்து கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டனர்.
காரில் ஏறியதுமே “நாளைக்கு இதைத்தான் போட்டுக்கனும் எனக்காக..” என்றவனின் குரலில் இருந்த மந்திரத்தில் மங்கையவளும் கட்டுப்பட்டு ‘சரி’ என்பது போல் தலையசைத்தாள்.
காரை மெதுவாக செலுத்தியவன் சிட்டியை விட்டு வெளியில் வந்து ஒரு ஹோட்டலுக்கு முன் நிறுத்தினான்.
‘என்ன?’ என்பது போல் பார்த்தவளிடம், “சாப்பிட வேண்டாமா? எனக்கு பசிக்கிது.” என்றதும்
“ஹான் போலாம்..” என இறங்க போனவளின் கையைப் பிடித்துக் கொண்டவன் “என் மேல இருக்குற கோபம் போயிடுச்சா..?” என்றான் மெல்ல.
“கோபம் போக நீங்க என்ன செஞ்சீங்க? இந்த நகை வாங்கிக் கொடுத்ததா.?” என்றாள் பட்டென.
“ப்ளீஸ் மகி இப்படியெல்லாம் பேசாத. நீ இப்படியெல்லாம் பேசிடக்கூடாதுனு தான் நான் ஓடி ஒழிஞ்சேன்.. இந்த கேள்விக்கு எல்லாம் எங்கிட்ட பதிலே இல்ல. எனக்கேத் தெரியாத பதிலை நான் எப்படி உனக்கு சொல்ல முடியும்..” என்றான் தளர்ந்து போன குரலில்.
“உன்னை பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது. அகி வந்து நீதான் சீனியரோட தங்கச்சின்னு சொல்ற வரைக்கும் உன்கிட்ட எப்படி லவ் சொல்றது, எங்க வீட்டுல பிரச்சினை இல்ல. உங்க வீட்டுல என்ன சொல்வாங்க.. வில்லேஜ்ல எல்லாம் முன்னாடியே எங்கேஜ்மென்ட் பண்ணி வச்சிருவாங்கனு கேள்விப் பட்டேன். ஒருவேளை அப்படி யாராவது உன் லைஃப்ல இருப்பாங்களா? இப்படி ஏகப்பட்ட கேள்வியோட தான் நான் வெய்ட் பண்ணேன். அப்புறம் அகி வந்து பேசின பிறகு, உங்க குடும்பத்து மேல இருந்த கோபத்துல, உன்னை அவாய்ட் பண்ணனும் நினைச்சேன், ஆனா முடியல. எனக்கு அகி எவ்ளோ முக்கியம்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும். அவளுக்காகத்தான் எல்லாம் செஞ்சேன். அவளுக்காகத்தான் இந்த லவ்வையும் ஒதுக்கி வச்சேன். ஆனா நான் நிம்மதியா இருந்தேனான்னு கேட்டா கண்டிப்பா இல்ல. இவங்க யாரும் வேண்டாம், உன்னை மட்டும் தூக்கிட்டு எங்கேயாவது போயிடனும்னு வெறியே வந்துச்சு. என்னை உனக்கு புரியுதா.?” என பேசிக் கொண்டே இருந்தவன் திடிரென கேட்டான்.
மகி பதிலே சொல்லவில்லை. ஆரியனை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சொல்லு உனக்கு என்னை புரியுதா?” என்றான் வார்த்தைக்கே வலிக்காத குரலில்.
மகிக்கு அவன் இப்படி கேட்கவும் அவனின் நிலை அவளுக்குள் மாயம் தான் செய்தது.
“உங்களைப் புரிஞ்சதுனாலத்தான், உங்க மேல அப்போ லவ்வே இல்லைன்னாலும், உங்க காதலுக்காக, உங்க காதல் தோத்துடக்கூடாதுனு தான் இந்த தாலியை நான் கழுத்துல கட்டிக்கிட்டேன். இதுக்கு மேல என்னை எப்படி புரிய வைக்க..” என்றாள் பெண்ணும் அவன் குரலைப் போலவே.
“ம்ம்.. புரிஞ்சது.. கொஞ்சம் லேட்டா புரிஞ்சது. முதல்ல என்னையும் அகியையும் பழி வாங்கத்தான் தாலியைக் கட்டிட்டியோன்னு நினைச்சிட்டேன்..” என்றான் சற்று திணறலாக.
“ஹ்ம்ம்.. அப்படித்தான் நினைக்க வைக்கும். உங்க நினைப்பை தப்பு சொல்ல முடியாது, எங்க ஃபேமிலி பேகிரவுன்ட் அப்படி..” என்றவள் தலையைக் குனிந்து தன் கை விரல்களை ஆராய்ந்தாள்.
“சாரி மனி.. நிஜமாவே என்னால உங்க ஃபேமிலியை நல்ல விதமா யோசிக்க முடியல. சீனியர் கூட நான் மூனு வருசம் இருந்துருக்கேன். அவரே அகியை அசிங்கமா தான் பேசினார். அப்படி இருக்கும் போது மத்தவங்களை..” என்றவன், அவள் விரல்களைப் பிடித்து தன் நெஞ்சோடு வைத்து “ரியலி சாரி மனி மா.. நான் என்ன செஞ்சாலும், சொன்னாலும் என்னை விட்டு மட்டும் போயிடாத.. நீ இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணல.. நான் வேற எப்படி என்னை புரிய வைக்க..” என்றவனுக்கு உடலும் குரலும் சோர்ந்து போக, அப்படியே சீட்டில் சாய்ந்து கொண்டான்.
மகிக்கும் அவனிடம் என்ன பேசி சமாதானம் செய்ய என்று புரியவில்லை. அவன் எண்ணுவதை தவறென்று சொல்ல முடியாது. அவள் அப்படியில்லை என்று புரிய வைக்க அவர்கள் வாழப்போகும் வாழ்க்கைதான் சான்றாக இருக்க முடியும்.
இருவரும் ஒரே சிந்தனையில் இருக்க, திடிரென நிமிர்ந்த ஆரியன் “நம்ம வாழ்க்கை இப்படியே போயிடாதுல்ல மனி. உங்க அத்தை சும்மா இருப்பாங்கன்னு எனக்குத் தோணல..” என்றான் இறுகிப் போய்.
அவன் மார்பின் மீதிருந்த கையில், அவன் இதயம் வேகமாக துடிப்பதை அவளால் உணர முடிந்தது.
“ம்ச் ஏன் இவ்ளோ ஃபாஸ்டா ஹார்ட் பீட் துடிக்கிது..” என அந்த விரலைக் கொண்டே அங்கு அழுத்தம் கொடுத்து வருட,
வருடிய விரலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன் “ம்ம் பயமா இருக்கு மனி மா.. இதெல்லாம் நிஜம்னு இப்பவும் நம்ப முடியல..” என்றவன் “இன்னும் உனக்கு என்மேல லவ் வரலையா?” என அழுத்தமான குரலில் கேட்க, மகிழினிக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.
தன் குடும்பத்தினர் மேல் இருக்கும் பயமும் புரிந்தது.
நகைக்கடையில் அத்தனை உரிமையாக அவனிடம் தான் நடந்து கொண்டதை நினைத்துப் பார்த்தவள், காதல் இல்லாமல் எப்படி இந்த உரிமை உணர்வு வரும்.
அவனைப் பிடித்திருக்கிறது.. அவனை மட்டுமே பிடித்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு, காதலில் அனைத்தும் சாத்தியம் தான் என்ற பதில் கிடைத்தது.
அவனை பார்க்காமலே அவன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது மகிழினியால். இப்போது அவள் பதில் சொல்ல வில்லையென்றால் அவன் முகம் மேலும் வாடி விடுமோ, இந்த அருகாமையை இழந்து விடுவோமோ என திணறினாள் மகிழினி.
மகியின் அமைதி வேறு ஆரியை நிலையிழக்கச் செய்ய “ம்ம் சொல்லு மனி, உனக்கு என்மேல ஒரு அஃபெக்சன் கூட வரலையா?” என்றான் உயிரை உருக்கும் குரலில்.
“அஃபெக்ஷன் இல்ல. ஆனா.. ஆனா உங்க மேல நேசம் இருக்கு. உண்மையான நேசம் இருக்கு..” என மெல்லியக் குரலில் சொன்னாலும், அழுத்தமாக கூற, ஆரிக்கு வேறேதுவும் தேவையாக இருக்கவில்லை.
‘மகியின் விரல்கள் இருந்த இடத்திற்கு அவளை மொத்தமாக இழுத்து சாய்த்துக் கொண்டவன், “தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..” என்றான் குரல் தழுதழுப்பாக.
“ஹ்ம்ம்..” என முதலில் அதிர்ந்து திமிறினாலும், அவன் அனைப்பின் இறுக்கம் கூடுவதை உணர்ந்து அதை கைவிட்டவளாக, அப்படியே சாய்ந்து கொண்டாள்.
அவளின் மென்மையான கன்னங்களை தன் நுணி விரல் கொண்டு தீண்ட கன்னங்கள் சிவந்து போக, ‘இதுக்குத்தான் நான் உன் பக்கத்துலையே வரல..” என முணுமுணுத்தவன், அந்த வார்த்தைகளில் சிறு புன்னைகயுடன் நிமிர்ந்தவளை ‘சிரிக்கிற நீ’ என்றவன், பெண்ணவளின் செவ்விதழ்களை தன் விரல் கொண்டு வருடி, வருடி மேலும் சிவப்பாக்க, அவளோ கொடியென துவண்டு அவன் மேலே விழ, அதற்கு மேல் தாங்க முடியாமல் துடித்த அந்த செவ்வதரங்களை தனக்குள்ளே வேகமாக இழுத்துக் கொண்டான்.
இங்கு ஹாஸ்பிடலில் வேகமாக கிளம்பிய ஆகன், தன் போக்கில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். அரை மணி நேரத்திற்கு மேலே அவன் பயணம் நீள, அவன் சென்றுக் கொண்டிருந்த சாலையில் அவனுக்கு முன்னே ஆம்புலன்ஸ்கள் வரிசைக் கட்டி பறந்தன.
ஒரு ஆம்புலன்ஸ் என்றால் கூட அமைதியாக இருந்திருப்பானோ என்னவோ? வரிசையாக ஆம்புலன்ஸ் செல்ல, ஆகனுனக்குள் இருந்த மருத்துவன் விழித்துக்கொள்ள தன் காரின் வேகத்தைக் கூட்டினான் அவன்.
சற்று தூரத்திலேயே ஒரு கோர விபத்து நடந்திருப்பது பார்க்கும் போதே புரிந்தது. ஒரு டேங்கர் லாரியும், ஒரு அரசு பேருந்தும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதை அவனால பார்க்க முடிந்தது.
நிச்சயம் பேருந்தின் முன்பக்கம் அமர்ந்திருந்தவர்களில் சிலர் உயிர் இழந்திருக்கலாம் என்று அந்த நொறுங்கிப் போன பேருந்தை பார்க்கும் போதே தெரிந்தது.
‘கடவுளே..’ என தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடியவனின் விழிகளில் ஆட்சியரின் வாகனமும் கண்ணில் பட, ஆகனின் சித்தம் கலங்கியது.
அந்த வாகனத்திலும் அடி பட்டிருக்க, ஆகனின் இதயம் நின்றே விட்டது. அங்கு நடந்திருந்த விபத்தை அவன் பார்க்கவில்லை என்றாலும், உணர முடிந்தது. அதில் பல உயிர்கள் இழந்திருக்க வாய்ப்பு அதிகம். அந்த இடத்தில் அகானாவின் வாகனமும் இருக்கிறதென்றால் ஆகனால் அடுத்து யோசிக்கவே முடியவில்லை.
தன் வேகத்தைக் கூட்டி அந்த இடத்தை நெருங்கி, சுற்றும் முற்றும் அவளைத் தேடினான்.
முதலில் அவன் கண்ணில் பட்டது கண்ணன் தான். அவர் கையில் நல்ல அடி.. அவரை ஒரு ஓரமாக அமர வைத்து அவருக்கு முதலுதவி நடந்து கொண்டிருந்தது.
ஆகனின் பயம் மேலும் மேலும் கூட, அவரிடம் வந்தவன் “அங்கிள்.. கண்ணன் அங்கிள்.. அம்மு.. அம்மு எங்க?” என பயமும் பரிதவிப்புமாக கேட்க,
“வந்துட்டீங்களா தம்பி.. பாப்பா… பாப்பாவை முதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்.. சொல்ல சொல்ல கேட்காம, அங்க பாருங்க..” என அகானா இருந்த இடத்தைக் காட்ட, அதைப் பார்த்த நொடி “அம்மு..” என அலறியேவிட்டான் ஆகன்.