• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 51

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 51

“மகி.. நீ வீட்டுக்கு கிளம்பு.. இங்க இத்தனை பேர் இருக்கோம் நாங்க பார்த்துப்போம்..” என்ற நித்யாவிடம் தலையசைத்த மகிழினி ஆரியனிடம் வந்து நிற்க,

“போலாமா.?” என்றான் யோசனையாக அவளைப் பார்த்து.

“ம்ம் அண்ணி..” என்றவள் சட்டென அதை மாற்றி “அது அம்முவை பார்த்துட்டு போலாமா?” என்றாள் மகியும் தயக்கமாக

“ம்ம் அகி தூங்கிருப்பான்னு நினைக்கிறேன்..” என்றவன் அவளோடு நடக்க, ரஞ்சனியோ மகளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு மகி அவளிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தாள். அதை கவனித்து கேட்ட ஆரியனிடம் கூட “இதை இப்படியே விடுங்க ப்ளீஸ்..” என்று முடித்திருந்தாள்.

ஆரியன் ஆகனிடம் கூறியிருக்க, ஆகனும் தங்கையிடம் விசாரிக்க “ண்ணா.. ஏதோ நடந்திருக்குன்னு உனக்கு புரியுது இல்ல. அவ்ளோதான் அதோட நிறுத்து. என்னனு என்னால உனக்கு விளக்கம் சொல்ல முடியாது, இனி ஒவ்வொன்னுக்கும் இப்படி விளக்கம் சொல்லிட்டேவும் இருக்க முடியாது. ப்ளீஸ்.. நான் அதை மறக்கனும்னு நினைக்கிறேன்.. ஆனா அதையே கேட்டு நீயும் அவரும் என்னை ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க..” என்று வருந்தி கூற, ஆகனும் அதை அப்படியே விட்டுவிட்டான்.

“நான் கேட்டாலும் ஒன்னும் சொல்லல ஆரி. பட் அம்மா ஏதோ உன்னை வச்சு பேசிருப்பாங்க போல. அதுதான் மகி இவ்ளோ ஃபீல் பண்றா.. நீ பொறுமையா பேசி பார்.. அவளா சொன்னா கேட்டுக்கோ. இல்லைன்னா ஃபோர்ஸ் பண்ணாத..” என ஆரியிடமும் சொல்லியிருந்தான்.

இப்போது அதை நினைத்தபடியே அவளுடன் நடந்தவன் அகானாவின் அறைக்குச் செல்ல, இவர்களை புன்னகையுடனே எதிர்கொண்டாள் பெண்.

“தூங்கிருப்பன்னு நினைச்சேன்..” என தங்கையின் அருகில் அமர, இருவரையும் சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மகி.

“என்னாச்சு உங்க வீட்டம்மா என்னையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்காங்க..” என ஆரியிடம் முணுமுணுக்க,

“உன்னையாவது பார்க்குறாளே..” என ஆரி சிரிக்க,

“அடப்பாவி.. இப்போ என்ன சொல்ல வர்ர, உன்னை பார்க்கலன்னு சொல்றியா? இல்லை என்னை மட்டும் பார்க்கிறாளேன்னு பொறமையா சொல்றியா?” என்றதும்,

“அடியே உன் சகுனி வேலையை இப்பவே ஆரம்பிக்காத..” என அரண்டவன், “இப்போ எல்லாம் மேடம் பின் ட்ராப் சைலன்ட் தான்..” என கிண்டலடிக்க, அதற்கும் புன்னகைதான் மகிழினியிடம்.

அவள் ஏதோ நினைத்து மிகவும் தன்னையே மிகவும் வருத்திக் கொள்கிறாள் என்று இருவருக்குமே புரிந்தது.

மகிழினியை பார்த்த முதல்நாள் அவளின் குறும்புத்தனம் நிறைந்த பேச்சும் நடவடிக்கையும் தன்னாலே இருவருக்கும் நியாபகம் வந்தது.

“ஆரி.. எனக்கு காஃபி வேணும்.. வாங்கிட்டு வர்ரியா?” என்ற அகானாவிடம்,

“சீனியர்கிட்ட கேட்டுட்டு வாங்கிட்டு வரேன். அவர் டயட் ஃபாலோவ் பண்ண சொன்னார். அதுல அவாய்ட் பண்ண சொன்னதுல காஃபியும் இருக்கு..” என முறைக்க,

“ம்ச் இப்போ வாங்கிட்டு வர முடியுமா? இல்லையா? இல்லைன்னா விடு நான் நவீன் அண்ணாக்கிட்ட கேட்குறேன்..” என அகானாவும் பதிலுக்கு முறைக்க, அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஆகன்.

அவனைப் பார்த்ததும் அகானா முகத்தைத் திருப்பிக் கொள்ள, “என்ன டா?” என ஆகன் சூழ்நிலையை முன்னிட்டு கேட்க, ஆரியும் நடந்ததை சொல்ல,

“வாங்கிட்டு வந்து கொடு டா.. டெய்லி ஒரு டைம் ஓக்கே தான்..” என்றதும் மகி சிரிக்க, அகானாவிற்கும் சிரிப்புதான். ஆனால் அதைக் காட்டிவிட்டால் அவள் அகானா இல்லையே.

மூவரையும் முறைத்தபடி ஆரி வெளியில் செல்ல, “என்ன பாப்பா?” என தங்கையைப் பார்த்து கேட்டான் ஆகன்.

“என்ன ண்ணா.. நான் இவங்களை பார்க்க வந்தேன்.” என அகானாவை காட்டினாள் தங்கை.

“என்ன மகி இது? அவங்க இவங்கன்னு கூப்பிடுற, முறை சொல்லி பழகு.. ஆரியனுக்கு சிஸ்டர், உன்னைவிட பெரியவ அண்ணின்னு சொல்லு..” என அழுத்தமாக சொல்ல, ஆகனை முறைத்தாள் அகானா.

“அதெல்லாம் தேவையில்ல அகானானே கூப்பிடு..” என வெடுக்கென சொன்னவள் “உனக்கும் ஆரிக்கும் என்ன பிரச்சினை? நீ ஏன் இப்படி இருக்க? இது உன்னோட நேச்சரே கிடையாதே? விஜிம்மா நீ வருத்தப்படுற மாதிரி பேசிட்டாங்களா?” என்று மகியிடம் கேட்டாள்.

“ச்சே ச்சே அப்படியெல்லாம் எதுவும் இல்ல..” என மகி உடனே மறுக்க,

“பாப்பா.. நானே உன்கிட்ட பல தடவை கேட்டுட்டேன். நீ எதையோ நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ற.. அம்மாக்கூடவும் பேசுறது இல்ல. என்ன நடந்தது, அவங்க தான் பேசினாங்களா? இதை சால்வ் பண்ணாம உன்னால நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு? நீ விரும்பின லைஃப். அதை ஸ்மூத்தா கொண்டு போகனும்னு நினச்சு, என்ன நடந்ததுனு சொல்லு..” என ஆகனும் அதட்ட, அகானா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“என்னையும் அம்மாவையும் வச்சு தான் பிரச்சினையா?” என அகானா பொதுவாக கேட்க,

“வாயை மூடு.. உடனே அதை தூக்கிட்டு வந்துடுவ..” என ஆகன் அதட்ட,

“ஆமா அப்படித்தான். அதைத் தாண்டி உங்க வீட்டாளுங்க பேச வேற என்ன இருக்கு..” என என அகானாவும் கத்த,

“ம்ச்.. அப்படித்தான்.. ஆனா அப்படி இல்ல..” என இருவருக்கும் பதில் சொன்னாள் மகிழினி.

“என்ன சொல்ற?” என இருவருமே கேட்க,

அன்று ரஞ்சனி மைதிலியிடம் பேசியது, அதை வினோத்தும் தானும் கேட்டு சண்டை போட்டு கிளம்பியது வரை அனைத்தையும் கூறியவள் “அவங்க திருந்தவே மாட்டாங்க ண்ணா..” என்றாள் அழுகையோடு.

அகானா இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என ஏற்கனவே அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. அதோடு மஞ்சரி கூட இப்படியும் அவர்கள் செய்யவும் வாய்ப்பிருக்கு என்று கோடி காட்டியிருந்தார் மகளிடம். அவள் பேசி அதனால் ஆரியனுக்கும் மகிக்கும் பிரச்சினை வந்துவிடக்கூடாது. ஆரியன் சும்மாவே இருக்கமாட்டான். அதனால் ஆகனே பேசட்டும் என அமைதியாக இருந்தாள்.

“பாப்பா.. அவங்க இதை விட மோசமாவே இறங்குவாங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணேன்..” என்ற ஆகன் “எங்கிட்ட சொல்லிட்ட இல்ல.. இனி இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் பாப்பா. நீ இப்படி இல்லாம, உன்னோட மேரேஜ என்ஜாய் பண்ணு. நீயே நினைச்சாலும் மறுபடியும் இப்படி ஒரு மொமன்ட் கிடைக்காது. இது எல்லாம் நம்ம லைப் எண்ட் வரை கூடவே வர மெமரிஸ். அதை மிஸ் பண்ணக்கூடாது. நீ இப்படி இருந்தா ஆரியால எப்படி சந்தோசமா இருக்க முடியும். அவன்தான் வேனும்னு வலுக்கட்டாயமா அவனை இழுத்து உள்ள விட்டுட்ட, இப்போ அவன் லைஃபும் உன் கையிலதான் இருக்கு. தாலி கட்டுறதுக்கு முன்னாடியே ஏன்டா கல்யாணம் பண்றோம்னு அவனை யோசிக்க வச்சிடாத. அது அவனுக்கு செய்ற துரோகம்.” என்றான் கண்டிப்பாக.

“ண்ணா என்ன பேசுற?” என்ற மகிழினிக்கு அழுகையே வந்துவிட்டது.

“என்ன பேசுறீங்க? துரோகம்னு எல்லாம் சொல்றீங்க. அது ரொம்ப பெரிய வார்த்தை..” என அகானா அதட்ட,

“ம்ம் என்ன பெரிய வார்த்தை.. அது தான் உண்மை. அவனுக்கு நல்லது செய்றதா நினைச்சி பெரிய இக்கட்டுல கொண்டு வந்து நிறுத்தியிருக்க. நீ மட்டும் தாலியைக் கட்டிக்காம இருந்திருந்தா, கொஞ்ச நாள் உன்னை நினைச்சு வருத்தப்படுவான், ஃபீல் பண்ணிட்டு அப்படியே அதை கடந்து போயிருப்பான். அவனுக்கு நம்ம ஃபேமிலியை ஃபேஸ் பண்ற சிச்சுவேசனே இருந்திருக்காது. ஆனா நீ செஞ்ச காரியத்தால, இப்போ எவ்ளோ பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதா இருக்கு. அதெல்லா யோசிச்சியா? இப்போ நீ என்ன எதிர்பார்க்கிற, அவனுக்காக நீ பெரிய தியாகம் பண்ணிருக்கன்னு, அதை நினைச்சு அவன் உன்னை கொண்டாடனுமா?” என காட்டமாக கேட்க, மகிழினியால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“நான்.. நான் அப்படியெல்லாம் நினைச்சு செய்யல..” என்றாள் விசும்பலோடு.

“பின்ன… எனக்கு அப்படித்தான் தோனுது. அம்மா பேசினா அது அவங்க குணம். அவங்க அப்படித்தானு யோசிச்சு, அதை அப்படியே விட்டுட்டு வேற என்ன செய்யலாம்னு பார்க்கனும். உன்னோட லைஃபை மட்டும் நீ காம்ப்ளிகேட் பண்ணல, அவன் லைஃபையும் சேர்த்துதான் பண்ற…” என்றான் கோபம் குறையாமல்.

“இதுவரை ஒன்னும் தெரியாம வளர்த்துட்டு, இப்போ இவ்ளோ சொன்னா அவளுக்கு எப்படி தெரியும்.. எல்லாமே போக போக புரியும். ஆரி அவளை மேனேஜ் பண்ணிப்பான்..” என்றாள் அகானா இடையில்.

“அதுதான் இங்க பிரச்சினை. அவனே எல்லாம் மேனேஜ் பண்ணா, இவ என்னதான் செய்வா? அவனோட ஒர்க் எப்பவும் ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்கும். அதை புரிஞ்சிக்கனும். அவன் வீட்டுக்கு வரும் போது இவ உம்முனு இருந்தா அவனால என்ன மேனேஜ் பண்ண முடியும். கொஞ்ச நாள்ல அவனுக்கும் சலிப்பு வந்துடும். ரெண்டு பேருக்கும் இடைல பிரச்சினை வெடிக்கும். மகி இப்படி நடந்தா கன்ஃபார்மா இதுதான் நடக்கும்..” என ஆகன் முடிக்க, ஆரியன் காஃபியோடு உள்ளே வந்தான்.

அவன் பார்வையில் மகிழின் அழுதிருப்பது பட, “என்ன மகி?” என வேகமாக கேட்க,

“என்னடா என் தங்கச்சியைத் திட்டக்கூட எனக்கு உரிமை இல்லையா?” என ஆரியனிடமும் பாய, அவனோ ஆகனைவிட்டு அகானாவை முறைத்தான்.

“நீ அவளை அழைச்சிட்டு கிளம்பு…” என்றாள் அகானா உடனே. ஆரியும் எதுவும் பேசாமல் மகிழினியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

இருவருக்குள்ளும் பேரமைதி. அந்த அமைதியை அகானாவே கலைத்தாள்.

“எதுக்கு இவ்ளோ ஹார்ஷா பேசுற.. அவ சின்னப் பொண்ணுதானே புரிஞ்சிப்பா.. போக போக சரியாகிடும்..”

“ம்ச்.. அவ புரிஞ்சிப்பான்னு எனக்கும் தெரியும். பட் டைம் ஆகும். இப்போ நான் பேசிருக்கேன். நீ பேசியிருக்க.. எப்படியும் போகும் போது ஆரியும் பேசுவான். உடனே சரியாக முயற்சி
எடுப்பா..”

“ம்ம்.. ஆரிக்காக அவ இவ்ளோ இறங்கி வரும்போது, ஆரியும் அவளை நல்லா பார்த்துப்பான்.”

“தெரியும்.. எல்லாரும் என்னை மாதிரி கூமுட்டையா இருக்க மாட்டாங்க. கைல கிடைச்ச சொர்க்கத்த தொலைச்சிட்டு தேடுற முட்டாள் அவன் இல்லனு எனக்குத் தெரியும்..”

“உனக்கு என்னாச்சு.. நீ ஏன் இப்படி பேசிட்டு இருக்க.. நீ நினைக்கிறது எப்பவும் நடக்காது. என் அம்மாவே சம்மதிச்சாலும்..” என்றாள் காட்டமாக.

“முதல்ல நீ நடப்பியாம்.. அப்புறமா அது நடக்கிறதைப் பத்தி பேசுவோம்..” என மிகவும் சாதாரணமாக கூற பல்லைக் கடித்தாள்.

“இப்போ திண்டுக்கள் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் தான் இங்க கூடுதல் பொறுப்புல இருக்குறதா கேள்விப்பட்டேன். உன்னை வந்து பார்க்க கேட்டாங்களா?”

“ம்ம் நாளைக்கு மார்னிங்க் அப்பாய்ன்மென்ட் இருக்கு.. கண்ணன் அங்கிள் இருப்பார் மேனேஜ் பண்ணிப்பாங்க. உங்க நித்யா அத்தை கேஸ் கூட ரெண்டு நாள்ல ஹியரிங்க் வருது, ஆரியும் நவீன் அண்ணாவும் பார்த்துப்பாங்க. அவங்கள பயந்துக்க வேண்டாம் சொல்லுங்க..”

“ம்ம் அத்தை தான் அம்மாச்சியை பார்த்துக்கிறாங்க. நாளைக்கு ஒரு நாள் வாய்தா வாங்கலாமான்னு வினோத் மாமா கேட்டார்.”

“ஒரு ஒன் அவர் தான் கேஸ் முடிஞ்சிடும். வாய்தா கேட்டா ஜட்ஜ் தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு. யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு அனுப்புங்க..”

“ம்ம் நான் சொல்லிப் பார்க்குறேன்.”

“எப்படி இருக்காங்க உங்க பாட்டி.?”

“ம்ம்..” என இழுத்தவன் “பெட்டர் தான்.. பயத்துல கீழெ விழுந்து தலையிலயும், இடுப்புலயும் நல்ல அடி. பிபி ஹை ஆகிடுச்சு.. ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு..” என்றான் சோர்வாக.

‘வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியாகும், அவங்களும் சரியாகிடுவாங்க’ என்று வாய் வார்த்தையாக கூட அகானா கூறவில்லை.

அவள் அப்படி பேச வேண்டும் என்று ஆகனும் எதிர்பார்க்கவில்லை.

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தொற்று நின்றது.

அன்று நாய் தள்ளிவிட்டு கீழே விழுந்த சரஸ்வதியைப் பார்த்து, அழகர் கத்தி கூச்சலிட, வீட்டிற்குள் இருந்து ரஞ்சனி அரண்டடித்து ஓடி வந்தார்.

உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, அங்கு ஆகனும் இல்லை ரவியும் இல்லை. ஆரியன் தான் அவர்களைப் பார்க்க வேண்டியதானது.

எக்ஸ்ரே- சிடி- எம்ஆர்ஐ என எல்லாம் எடுத்துப் பார்க்க இடுப்பில் அடி, பின் பக்கம் மண்டையிலும் அடி, அதோடு முதுகு தண்டுவடத்தை ஒட்டி சிறு அடி, அதனால் அவரால் எழுந்து அமர முடியாமல் போனது.

செய்தி கேட்டு ரவியும், ஆகனும் உடனே வந்துவிட்டனர்.

ரிபோர்ட்ஸை பார்த்த ரவிக்கு சர்ஜரி செய்யும் அளவிற்கு காயம் இல்லை, அதோடு அவரது வயது அதற்கு ஒத்துழைக்காது என்று புரிந்தது.

ஆகனிடமும், ஆரியனிடமும் டிஸ்கஸ் செய்ய, ஆகன் இப்படியே இருக்கட்டும் என்றான் அவர் உடல்நிலை குறித்து, ஆனால் ஆரியனோ ரிஸ்க் எடுக்கலாம் என்றான்.

“ப்ரெசரும் சுகரும் நார்மலைஸ் பண்ணிட்டு யோசிக்கலாம். இப்போதைக்கு இப்படியே விடுங்க..” என்று முடித்துவிட்டார் ரவி.

மைதிலி வந்து பார்க்கவே இல்லை. அவரை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.

மைதிலியின் கோபம் அங்கு அனைவருக்குமே புரிந்தது. ரஞ்சனிக்கு கல்யாண வேலை வேறு இருக்க, மருத்துவமனையில் நித்யாவை விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு சென்று விட, ரவி மருத்துவமனையிலேயே முழு நேரமாக தங்கிவிட்டார்.

இங்கு ஆரியனோடு காரில் சென்று கொண்டிருந்தாள் மகிழினி. அவளுக்கு ஆகன் பேசியதே மனதில் ஓடிக் கொண்டிருக்க, பொறுக்க முடியாமல் “ஆரி சார் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே.” என்றாள் கலக்கமாக.

“என்ன சொல்லனும்..” என்றான் அவனும் யோசனையாக.

“அது.. அது வந்து இந்த வெட்டிங்கே நிறுத்திடலாமா?” என தயக்கமாக கேட்க, அந்த நொடி எதையும் யோசிக்காமல் காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் மகிழினி என்ன என யோசிக்கும் போதே அவளை ஓங்கி ஒரு அறை கன்னத்தில் அறைந்திருந்தான் ஆரியன்.

 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
935
108
63
Coimbatore
அட லூசு ஆகன், என்ன நினைத்து சொன்னான். மகி எப்படி எடுத்துக் கொண்டு இருக்கிறாள்.