• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 52

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,392
445
113
Tirupur
அகானா - 52

“இது இதுக்குத்தான் எல்லாரும் பயந்தாங்க.. அப்படியே உங்க குடும்பப் புத்..” என்றவன் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது என்று ஸ்டிரிங்கிலேயே தன் கையை ஓங்கி ஓங்கி குத்தினான்.

“அய்யோ.. என்ன பண்றீங்க.. ப்ளீஸ் இப்படியெல்லாம் பண்ணாதீங்க..” என அவன் கையைப் பிடித்துக் கொண்டு கதறியவளை, விளக்கித் தள்ளி காரை விட்டு வேகமாக இறங்கி வெளியில் சென்றான் ஆரி.

மகியின் வார்த்தைகள் அவனை பெருமளவு தாக்கியிருந்தது. இப்படியெல்லாம் நடந்து விடுமோ என்றுதானே எல்லாரும் பயப்படுகிறார்கள்.

அந்த பயம் தேவையே இல்லை என்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் தானே இருக்க வேண்டும்.

பிரச்சினை என்றால் அதை விட்டு ஓடி ஒழிவது எந்த மாதிரியான எண்ணம்.. என யோசித்துக் கொண்டே அந்த உச்சி வெயிலில் ரோட்டில் நடந்து கொண்டிருந்தான் ஆரியன்.

காருக்குள் இருந்த பெண்ணவளோ முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஆகன் பேசியது தான் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அவன் கூறியது உண்மைதானே. தனக்குத்தானே தாலியைக் கட்டி தேவையில்லாமல் அவனை உள்ளே இழுத்து விட்டு, அவனது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டாளே..

ஏற்கனவே அந்த குற்றவுணர்ச்சி அவளுக்கு இருந்து கொண்டேதான் இருந்தது. அடுத்து ரஞ்சனி பேசியது வேறு..

திருமணமாகி ஒரு குழந்தையோடு இருந்த ரவி மாமாவையே அவர்கள் பேசி பிரித்து விட்டிருந்தார்கள். நானெல்லாம் அவர்களுக்கு எம்மாத்திரம். ஒருவேளை அப்படி நடந்து விடுமோ என்றும் பயந்து போனாள்.

அந்த பயத்திலும் குழப்பத்திலும் இருக்கும் போது தான் ஆகன் பேசியதும் சேர்ந்து கொண்டது.

அனைத்து குழப்பமும் சேர்ந்து கொள்ள, அவளுக்கு இதை யாரிடமும் மனசு விட்டு பேசக்கூட பயமாக இருந்தது.

நித்யாவிடம் பேச வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரம் தான் சரஸ்வதி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சங்கரும் மகளிடம் பேசத்தான் செய்கிறார். ஆனால் அவரிடம் இதை எப்படி அவளால் பகிர முடியும்.

ஆரியனோ அன்றைய நாளுக்குப் பிறகு அவளிடம் தேவைக்கு அதிகம் பேசவில்லை.

தனிமை அதிகம் வாட்டியது பெண்ணை. அந்த தனிமையின் கொடுமையில் அதிகம் யோசித்து, பயந்து குழம்பித்தான் இந்த வார்த்தைகளை விட்டு விட்டாள் மகிழினி.

ஆனால் முதல் நாள் விஜயா அவளிடம் பேசும் போதே ‘உன் குடும்பத்தை என்னால் நம்பவே முடியாது. ரவியை போல நீ இருக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்னு கேட்கும் போது கூட, ரஞ்சனி ஜீன் மட்டும் எனக்குள்ள இருக்கல, என் அப்பா ஜீனும் இருக்கு. கண்டிப்பா அந்த தப்பை செய்யமாட்டேன்..’ என்று தைரியமாக அவரின் முகத்துக்கு நேரே கூறியவள், இன்று அவள் செய்த காரியத்தில் தன்னையே பிடிக்காமல் வெறுத்தாள்.

அழுது அழுது முகமெல்லாம் சிவந்து போனது. அதில் ஆரியன் அடித்த கைத்தடம் வேறு அப்படியே தெரிந்தது. ஏங்கி ஏங்கி அழுதது மூச்சு விடவும் சிரமமாகிப் போக, மூச்சுக்கு தவிக்க ஆரம்பித்தாள் மகிழினி.

அவள் விட்ட வார்த்தைகளின் தாக்கத்தில் உண்டான கோபத்தில் அடித்து விட்டானே தவிர, அவனுக்குமே ‘அய்யோ’ என்றாகிப் போனது.

எப்படி அந்த வார்த்தைகளை விடலாம் என்ற தார்மீக கோபம் அவனது. அதை தவறென்று சொல்லவும் முடியாது. ஆனால் அவள் இப்படி பேச என்னக் காரணம் என்றும் யோசிக்க தவறிவிட்டான்.

இப்போது அதுவெல்லாம் மூளையில் ஓட, மண்டை சூடாக ஆரம்பித்தது.

‘என்னடா உன் பிரச்சினை. உனக்காகத்தான் அவ இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்திருக்கா? எவ்ளோ பிரச்சினைகளை ஃபேஸ் பண்ணிட்டிருக்கா. உன் வீட்டுலயும் சரி, அவ வீட்டுலயும் சரி இன்னும் யாரும் இந்த கல்யாணத்தை ஒரு சந்தோச நிகழ்வா பார்க்கல, ஏதோ ஒரு கடமைன்னு நினைச்சு செஞ்சிட்டு இருக்காங்க. அவளுக்கும் ஆயிரம் ஆசை இருக்கும், அத்தனையையும் தூக்கிப் போட்டுட்டு உனக்காக வந்திருக்கா. அவளை இப்படி கஷ்டபடுத்திட்டியே, சின்ன பொண்ணு ஆரி.. அவளோட குறும்புத் தனத்தையும், சேட்டையையும் பார்த்து தான நீ அவளை விரும்பின, இப்போ அதெல்லாம் அந்த பொண்ணுக்கிட்ட எங்க இருக்கு. உன்னை பார்க்காம, நீ அவ வாழ்க்கைக்குள்ள வராம போயிருந்தாலே அவ அப்படியே சிட்டுக்குருவி மாதிரி சந்தோசமா இருந்திருப்பா.. காதல் கன்றாவின்னு ஆரம்பிச்சு வச்சிட்டு, நீ உன் இஸ்டத்துக்கு இருந்தா, அவ இப்படித்தான் யோசிப்பா. முதல்ல அவளை சமாதானம் பண்ணு, அவ மனசுல எத போட்டு குழப்பிட்டு இருக்கான்னு கேளு, மனசு விட்டு பேச வை. அப்போதான் அவ மனசுல எது உறுத்திட்டே இருக்குன்னு தெரிஞ்சிக்க முடியும். போ.. போய் முதல்ல அவள சமாதானம் செய்..’ என மனசாட்சி அவனை விரட்ட, அவளைத் திரும்பிப் பார்த்த ஆரியனோ அதிர்ந்து தான் போனான்.

“இனி..” என கத்தியபடியே வேகமாக வந்தவன், கார்க் கதவை திறந்து ஜன்னல் கண்னாடி அனைத்தையும் இறக்கிவிட்டான்.

“இனி.. இனி.. இங்க பார்.. ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல டி.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என தன் மேல் சாய்த்து அவள் முதுகைத் தேய்த்துக் கொடுக்க, சில நிமிடங்களில் அவளது மூச்சு சீராக, அப்படியே தொய்ந்து அவன் மேலே விழுந்தாள்.

“இனி என்னடி நீ..” என பரிதவித்தவன், அவளை வெளியே எடுத்து பின் பக்கம் படுக்க வைத்து, தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் விசையாக அடிக்க, மூன்றாவது முறையில் தான் எழுந்தாள் பெண்.

திரு திருவென விழித்து, உதட்டைப் பிதுக்கியவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவன் “சாரி.. சாரி இனி.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. ரியலி சாரி டி.. நீ இப்படியெல்லாம் பேசினா என்னால தாங்கவே முடியலடி.. ப்ளீஸ் இனிமேல் இப்படியெல்லாம் பேசாத டி.. மனசு ரணமா வலிக்குது..” என்றவனின் குரல் கரகரத்து வந்தது.

மகியோ அவன் நெஞ்சை விட்டு நிமிரவே இல்லை. இன்னும் அழுத்தமாக புதைந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தாள்.

“இங்க பார்.. உன் மனசுல ஏதோ ஒரு குழப்பம். அதை தெரிஞ்சிக்காம, உன்னையும் புரிஞ்சிக்காம நான் தான் கை நீட்டிட்டேன். தப்புத்தான். என்னை மன்னிச்சிடு.. ஆனா நீ இப்படி இருக்காத டி.. உன்னோட குறும்புத் தனத்தைப் பார்த்துதான் உன் மேல எனக்கு லவ் வந்தது. இப்போ அந்த குறும்புத்தனத்தையே பார்க்க முடியல. எல்லாம் என்னாலத்தான். நான் காதல் கத்திரிக்கான்னு உன்னை இழுத்து விட்டுட்டேன்..” என உடைந்த குரலில் பேசப் பேச மகிழினியின் அழுகை கூடிக் கொண்டே போனது.

“ஹேய் இனி.. இங்க பார்.. நான் ஒன்னும்.. உன்னை ஒன்னும் சொல்லல.. ப்ளீஸ் இப்படி அழாத..” என சமாதானம் செய்தாலும் அழுகை நின்றபாடில்லை. அவனுக்குமே எப்படி அவள் அழுகையை நிறுத்துவது என்றும் தெரியவில்லை.

பொறுத்துப் பார்த்தவன் பெண்னவளின் முகத்தை நிமிர்த்தி கூர்மையாக அவள் விழிகளைப் பார்த்தான். அதில் இருந்த ஏக்கத்தைக் கண்டவனுக்கு தன்னையே மன்னிக்க முடியவில்லை.

ஒரு வீட்டில் இளவரசியாக வலம் வந்தவளை சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது போல் வைத்திருந்தால், அவளும் தான் வேறு என்ன யோசிப்பாள்.. முட்டாள் டா நீ என தன்னையே குட்டிக் கொண்டான்.

பின் அவள் விழிகளையும், முகத்தையும் அழுந்த துடைத்து அழுகையில் துடித்த உதடுகளை தன்னிதழ் கொண்டு மென்மையாக முத்தமிட்டான்.

மென்மை வனமையாக மாற, நீண்ட சில நிமிடங்களில் அவளிடமிருந்து எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல் போக, தானே அவளை விடுத்து தன்னோடு இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு ‘தான் ஏன் அப்படி கேட்டேன்?’ என்பதை மெதுவான குரலில் அவனுக்கு கூறினாள் மகிழினி.

‘அய்யோ’ என்றானது ஆணவனுக்கு. ஏற்கனவே பயத்தில் இருந்திருக்கிறாள். நானும் பேசி அவளை காயப்படுத்தி விட்டேனே என மறுகிப் போனான்.

“அத்தை கேட்கும் போது, என் அம்மா ஜீன் மட்டும் எனக்கில்ல, என்னோட அப்பா ஜீனும் இருக்கு. அது என்னைத் தப்பு செய்ய விடாதுனு தைரியமா சொன்னேன். ஆனா அது பொய் போல. என் அம்மா ஜீன் தான் இப்போ வேலை செஞ்சிருக்கு. அதுதான் அப்படி வார்த்தையை விட்டுட்டேன்..’ என்றாள் மீண்டும் அழுகையோடு.

“ம்ச்.. நீ தான் சின்னப் பொண்ணு.. நானாவது யோசிச்சிருக்கலாம். ஒரு பொருள் எந்த கஷ்டமும் இல்லாம கையில கிடைச்சா அதோட அருமை தெரியாதுன்னு சீனியர் சொல்வார். அது உன்மைதான். நான் கேட்க முன்னாடியே எனக்காக வந்து நின்னதுனால எனக்கு உன் காதல் ஈசியா போயிடுச்சு..” என்றான் ஆரியனும் வருத்தமாக.

இதற்கு மகிழினி எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாகவே அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.

“சரி நீ இனிமேல் இப்படி யோசிக்கக்கூடாது. அப்படி உனக்கு குழப்பமா இருந்தா உடனே எனக்கு போன் பண்ணு. பிசியா இருந்தா முடிஞ்சதும் நானே கால் பண்றேன். எதையும் குழப்பிக்காம எங்கிட்ட மனசு விட்டு பேசு. நம்ம காதல் ஆரம்பம் எப்படி வேனும்னா இருக்கட்டும். ஆனா முடிவுல தோத்துடக்கூடாது. எந்த கஷ்டம் எப்படி வந்தாலும், நீ எனக்காகவும், நான் உனக்காகவும் நிக்கனும். சரியா.. அந்த புரிதல் வந்துட்டாலே வாழ்க்கை ஈசியா மூவாகிடும்..” என்று பொறுமையாக அவளுக்கு எடுத்துக் கூறினான் ஆரியன்.

அவளும் அமைதியாகவே கேட்டுக் கொண்டாள்.

“ஃபோர்சா அடிச்சிட்டேன்.. கன்னத்துல அப்படியே கைத்தடம் இருக்கு.. ம்ச்.. எந்த சாத்தான் என் மூளையில புகுந்து இப்படி ஆட்டிப்படைக்கிதோ?” என தனக்குத் தானே புலம்பியவன் “மாய்சட்ரைசர் க்ரீம் இருக்கா உன்கிட்ட.. இல்லன்னா வாங்கிட்டு போயிடலாம். அது போட்டா எரிச்சலும் வலியும் குறையும். சாரி டி..” என்றான் மீண்டும்.

“வீட்டுல இருக்கு..” என்றாள் அமைதியாக..

“ம்ம் சரி..” என்றவன் “என் மேல கோபம் இல்லையே..” என்றான் மெதுவாக.

“ம்ம் இல்ல.. அது கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் பயம் எல்லாம் சேர்ந்து என்னை தப்பா யோசிக்க வச்சிடுச்சு.. நானும் தான் சாரி சொல்லனும். சாரி.. இனிமேல் எப்பவும் இப்படி பேசமாட்டேன்..” என்றாள் குற்றவுணர்ச்சியோடு.

“விடு ம்மா.. இதுவும் நல்லதுக்குதான் நடந்திருக்கு. இல்லைன்னா நமக்குள்ள இந்த கேப் ஃபில்லாகிருக்காதுல்ல..” என்றான் மெல்லிய புன்னகையோடு.

“ம்ம் அதுவும் சரி தான்..” என்ற மகி ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள்.

“என்னம்மா.. என்ன இனி.. இன்னும் என்ன மனசுக்குள்ள வச்சிருக்க.. வெளிப்படையா பேசு.. என்ன ஓடுது உன் மண்டையில..” என்றான் பரிதவிப்பாக.

“அது.. நீங்க தப்பா நினைக்கக்கூடாது. ஆகனும் அம்முவும் லவ் பண்ணாங்கன்னு தெரியும். அண்ணன் தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டானும் தெரியும். அவன் தான் மன்னிப்பு கேட்டானே… மன்னிக்க முடியாத பெரிய தப்பை பண்ணிட்டானா? அதனாலத்தான் அம்முவால அவனை ஏத்துக்க முடியலையா? ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா இப்பவும் விரும்புறாங்க. அவங்க பார்வையே அதை சொல்லுது. ஆனா ஏன் இப்படி..?” என்றவள் “அவங்க சேரவே முடியாதா? அண்ணாவால மட்டும் தான் அம்முவை நல்லா பார்த்துக்க முடியும். நாம.. நம்மளால கூட ஒன்னும் பண்ண முடியாதா?” என்றாள் ஏக்கமாக.

“இனி.. இதை உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது.?” என்றவனுக்குமே அகியின் எதிர்காலத்தை நினைத்து அத்தனை பயம்.

நவீனும், குமரனும் கூட இது பற்றி அவனிடம் பேசினார்கள். ‘அம்முவுக்கு பிடிச்சா பண்ணட்டும். எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்ல..’ என்று காயத்ரியும் கூறினாள் தான்.

ஆனால் அகி.. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே..

“இனி.. முதல்ல அகி சர்ஜரி முடியட்டும்.. அதுக்குப் பிறகு இதை பேசலாம். இப்போ பேசினா சர்ஜரி கூட வேண்டாம்னு சொல்ல வாய்ப்பிருக்கு..” என்றான் யோசனையாக.

மகிழினிக்கும் அதுவே சரியெனப்பட, அமைதியாக அதற்கு ஒத்துக்கொண்டாள்.

அதே நேரம் மஞ்சரியின் எதிரில் அமர்ந்து அவரிடம் தன் மனதை சொல்லிக் கொண்டிருந்தான் ஆகன்.