அகானா - 53
ஒரு பக்கம் ஆரியன்-மகிழினி திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது, மற்றொரு பக்கம் அகானாவின் சர்ஜரிக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
ஒரே மருத்துவமனையில் இருந்தாலும், மஞ்சரியோ ரவியோ நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை.
அப்படியான சந்தர்ப்பத்தை மஞ்சரி உருவாக்கிக் கொள்ளவே இல்லை.
அப்படியே சந்தித்தாலும் ரவி நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து சென்று விடுவார்.
அவருக்கு எப்படி மஞ்சரியை நேருக்கு நேர் சந்திப்பது என்ற பயம். மஞ்சரி வாய் திறந்து கேட்கும் கேள்விகளை விட, அவரின் விழிகள் கேட்கும் கேள்விக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது.
அன்று அகானாவிற்கு சர்ஜரி. அதிகாலையிலேயே ஆரம்பித்து விட்டார்கள். ரவியின் நண்பர் மலேசியாவில் இருந்து வந்திருந்தார்.
ரவி அனஸ்தீசியா கொடுக்க, ஆகனும், ஆரியனும் அசிஸ் செய்ய, அந்த மருத்துவர் சர்ஜரியை ஆரம்பித்தார்.
மூன்று மணி நேரங்களுக்கு மேல ஆனது. இரு குடும்பத்திலும் வந்து காத்துக் கிடக்க, வழக்கம் போல காயத்ரியும், கவிதாவும் மஞ்சரியின் அருகில் இருக்க, நித்யாவும் வினோத்தும் சங்கரும் எதிரில் கனத்து போய் அமர்ந்திருந்தனர்.
இந்த நாட்களில் நித்யாவும், சங்கரும் கூட மஞ்சரியிடம் மெல்ல மெல்ல பேசி ஒரு சுமூக உறவை வளர்த்திருந்தாலும், வினோத்தால் அது முடியவே இல்லை.
அகானாவின் வாழ்க்கை இப்படி ஆக அவனும் ஒரு காரணமே. அந்த குற்றவுணர்ச்சி அவன் சாகும் வரை போகாது. அதனாலே அவனே மஞ்சரியோடு சாதாரணமாக பேசி தன் உறவை சரி செய்து கொள்ள முயலவில்லை.
பயத்துடன் அமர்ந்திருந்த மஞ்சரிக்கு, கதவு திறக்கும் சத்தம் மேலும் பயத்தை கொடுத்தது.
காயத்ரியின் கையை இறுக்கமாகப் பிடித்தவர், ரவிக்கு அருகில் வந்த மனிதரைப் பார்த்து அதிர்ந்தார். பின் அவரிடமிருந்து பார்வையை விளக்கி ஆரியனைப் பார்த்தார்.
அந்த நால்வரில் அவரின் நம்பிக்கைக்கு உரிய ஒரே ஆள் அது ஆரியன் மட்டுமே. அவரின் பார்வையை உணர்ந்த ஆரி அவர்களுக்கு முன்னால் சென்று மஞ்சரியின் கையைப் பிடித்து “மஞ்சு ம்மா..” என்றது தான் தெரியும்.
அப்படியே அவன் கைகளிலேயே மயங்கி விழுந்தார்.
“பயமில்ல.. இவ்ளோ நேரம் இருந்த பதட்டத்துலயும், பயத்துலயும் தான் மயங்கி விழுந்துருக்காங்க. கொஞ்ச நேரம் படுக்க வைங்க. அவங்களே முழிக்கட்டும். யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்..” என்றார் அந்த புதிய மருத்துவர் நிர்மல்.
ரவியும், அவரும் அங்கிருந்து நகர, ஆகன் தான் மற்றவர்களுக்கு சர்ஜரி பற்றி கூறினான்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை ஆன்டி. சக்சஸ் தான். இனி அம்முவோட கோ ஆப்ரேசன் தான் முக்கியம். அவ கோ ஆப்ரேட் பண்ணா சீக்கிரம் சரியாகிடும். கல்யாணத்துக்கு வீல் சேர்ல வர அளவுக்கு ரெடி ஆகிடுவா. டோன்ட் வொரி..” என விஜயாவுக்கு சொல்லிவிட்டு, சங்கரிடம் வந்தான்.
மகனின் முகத்தில் இருந்த தீவிரம் பெற்றவருக்கு பயத்தைக் கொடுத்தது. ஆனாலும் அவனாக கூறட்டும் என அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“அக்கா.. நீங்க மஞ்சு ம்மா கூட இருங்க.. இப்போ அகிக்கு யார் ஹெல்பும் தேவை இருக்காது. அவ கண் விழிக்கவே ஈவ்னிங்க் ஆகிடும். அதுக்குப் பிறகு நீங்க அகி கூட இருங்க. மஞ்சு ம்மா வேண்டாம். இவங்களை இப்படி பார்த்தா, அவ இன்னும் டென்சன் ஆவா.. அதோட அந்த டாக்டரைப் பார்த்து தான் மயங்கிருக்காங்க. இவரை வச்சும் ஏதோ ஒரு வருத்தமான நிகழ்வு நடந்திருக்கும் போல. அவர் கிளம்பற வரை மஞ்சு ம்மா அவர் கண்ணுல பட வேண்டாம். தேவையில்லாம மன்னிப்பு கேட்கறேன், அது இதுன்னு இவங்க முன்னாடி வந்து நின்னு இன்னும் டென்சன் பண்ணுவாங்க. அது நடக்கவே வேண்டாம். அகி விழிச்சதும் நீங்க போங்க, பெரியம்மா மஞ்சு ம்மா கூட இருக்கட்டும்..” என்றதும்,
காயத்ரிக்கும் அதுவே சரியெனப்பட, “அவரோட ப்ரண்டா அந்த டாக்டர்..” என்று மட்டும் கேட்டாள் காயத்ரி..
“ம்ம்.. இவங்க மேரேஜ் டைம்ல இந்த டாக்டர் தான் ஏதோ ஹெல்ப்லாம் பண்ணிருக்கார் போல..” என்றான் ஆரியன் விட்டேத்தியாக.
“ஹ்ம்ம்..” என்ற காயத்ரி.. “அம்முவை இங்க இருந்து கூப்பிட்டு போயிடுங்க. அவளை இப்படி பார்க்கவே முடியல எங்களால. சித்தி இங்க இருந்து திடீர்னு காணாம போனப்போ, தேடித்தேடி சலிச்சுப் போய், எங்கேயோ உயிரோட இருந்தா போதும்னு தான் நாங்க நினைச்சோம். ஏன் சித்தி இன்னொரு கல்யாணம் செஞ்சிருந்தா கூட நாங்க சந்தோசம் தான் பட்டிருப்போம். ஆனா இப்படி ரெண்டு பேரும் ஒரு சன்னியாசி வாழ்க்கை வாழ்வாங்கன்னு நினைக்கவே இல்ல.”
“அவர்.. அம்முவை எப்படி வச்சிருப்பார் தெரியுமா?” என்ற காயத்ரிக்கு அழுகை வெடித்தது.
“நான் சித்தி திருச்சில இருக்கும் போது, லீவுக்கு நான் அவங்ககூட தான் எப்பவும் இருப்பேன். இவருக்கு எங்க வீட்டு ஆளுங்களை எப்பவும் பிடிக்காது. அதனால அம்முவை எங்க யாருக்கிட்டயும் விடமாட்டார். அவர் இல்லாதப்ப தான் நானே அம்முவை வச்சிப்பேன். ஹாஸ்பிடல் போற நேரம் மட்டும் தான் அம்மு எங்ககிட்ட இருப்பா. மத்த நேரம் மொத்தமும் அவர்கிட்ட தான். சித்தியை விட்டுட்டு கூட ரெண்டு பேரும் சினிமாவுக்கு போயிட்டு வந்துருக்காங்க. அந்தளவுக்கு அவ மேல உயிரா இருந்தார். திடீர்னு என்ன நடந்ததுனே எங்களுக்கு தெரியாது.” என்று அழுதவளை கலங்கும் விழிகளோடு பார்த்தான் ஆரியன்.
“அக்கா போதும்.. எங்களுக்கு எல்லாமே தெரியும்..” என்றான் கரகரப்பாக.
“எங்ககிட்ட ஒட்டவே விடாம வளர்த்த பொண்ணை மொத்தமா ஒதுக்கிட்டு போனா, அது எவ்வளவு கஷ்டப்படும் தெரியுமா? அந்த டைம் சித்தி பைத்தியம் மாதிரி இருப்பாங்க. பாப்பா யாருக்கிட்டயும் சேராம ஒரு பக்கம் அழுதுட்டே இருப்பா. எங்க பாட்டி அதுக்கும் சேர்த்து சித்தியைத் திட்டுவாங்க. அந்த நேரமெல்லாம் சித்தி கடந்து வந்ததை இப்பவும் என்னால நம்ப முடியல. எங்க பாப்பாவும் சித்தியும் தற்கொலை செஞ்சிப்பாங்களோன்னு கூட நாங்க பயந்திருக்கோம். அந்தளவுக்கு வாழ்க்கையை வெறுத்து இருந்தாங்க. இது எல்லாத்துக்கும் மூல காரணம் அந்த ரஞ்சனி தான். அவளை எல்லாம் இந்த கடவுள் சும்மா விட்டா, நான் சாமி கும்புடுறதையே நிறுத்திடுவேன்..” என ஆவேசமாக கூறினாள்.
“க்கா… விடுங்க.. இப்போ நமக்கு அகி தான் முக்கியம். அவ வேலையில நாம மூக்க நுழைக்க முடியாது. அந்த வேலைக்காக அவ கஷ்டப்பட்டது கொஞ்ச நஞ்சம் இல்ல. அகியைப் பத்தி உங்களுக்கு தெரியல. இவங்க எல்லாரையும் லெஃப் ஹேன்ட்ல ஹேண்டில் பண்ணுவா.. அதனால நீங்க இந்த கவலையை விடுங்க. நீங்க இப்படி இருக்காதீங்க. அவ ரெகவர் ஆகி வந்து இவங்களை ஓட விடுவா.. அந்த நாளை ஆவலோட எதிர்பாருங்க..” என்று காயத்ரிக்கு ஆருடம் சொல்லிவிட்டு, அதுவரை இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த விஜயாவைப் பார்க்க, அவர் முகமும் கலங்கித்தான் போயிருந்தது.
“ம்ம்மா… நீங்களும் இப்படி இருக்காதீங்க. நீங்க சொன்னாதான் மஞ்சும்மா கொஞ்சமாவது கேட்பாங்க. அதனால போல்டா அவங்ககிட்ட பேசி சமாளிங்க..” என்றவன் வெளியில் சென்றான்.
அதே நேரம் ரவியின் அறையில் அமர்ந்திருந்த நிர்மலின் முகமும் இறுகிப் போய்தான் இருந்தது. ரவி எதிரில் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.
நீண்ட மௌனத்தை கலைத்தார் நிர்மல். “நீ செஞ்ச பாவத்துக்கு நானும் துணை போயிருக்கேன் ரவி. நீ எவ்ளோ கேட்டிருந்தாலும் அன்னைக்கு அந்த தப்பை நான் செஞ்சிருக்கக்கூடாது..” என்றார் வருத்தமாக.
வழக்கம்போல ரவியிடம் பதில் இல்லை.
“மஞ்சரி உனக்காக எந்த அளவுக்கு போனாங்கன்னு கூட இருந்து பார்த்த நானே… ம்ச்.. போயா..” என்றவர் “அந்த நேரம் பணம் வேணும்ன்ற வெறி, டாக்டர் என்ற திமிர்.. இவ எல்லாம் எனக்கு ஒரு ஆளா என்ற மிதப்பு.. எல்லாம் சேர்ந்து தான் அன்னைக்கு அவ்ளோ பேச வச்சது..” என்றவருக்கு அன்றைய நாள் ஓடியது.
அகானாவின் ஐந்தாவது வயதில் தான் நிர்மலின் கிளினிக்கை பார்த்துக்கொள்ள ஆள் இல்லையென்று அவர் கேட்டதற்காக ரவி தன் குடும்பத்துடன் திருச்சி சென்றார்.
நிர்மலின் மனைவியும், மஞ்சரியும் நல்ல நண்பர்கள் ஆகியிருந்தனர்.
அவர்களின் மற்றொரு வீட்டில் தான் ரவி தன் குடும்பத்துடன் இருந்தார். ஆரம்பம் அழகாக சென்றது.
ரவிக்கு ஆரம்பத்தில் பணம் மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது. பணப்பற்றாக்குறை அடுத்தடுத்து அனைத்தும் பிரச்சினையாக மாறியது.
திடீர் திடீரென இருவரையும் விட்டுவிட்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார் ரவி. பத்து நாட்கள் கழித்து வருவார். ஏன் என்று கேட்டால் பிரச்சினை ஆரம்பிக்கும். மஞ்சரிக்கு யாரிடம் பேசுவதென தெரியாமல் நிர்மலின் மனைவியிடம் கூற, அது நிர்மலுக்கும் அவர் மனைவிக்கும் பிரச்சினையை வெடிக்க வைத்தது.
அப்போது மஞ்சரியின் அண்ணன் திருமணத்திற்கு அவர் மூணார் சென்றிருந்த நேரம், தன் உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ரவி சென்று விட்டார்.
ஊரிலிருந்து வந்த மஞ்சரி முதலில் இதை கவனிக்கவில்லை. பின் மெல்ல மெல்ல கவனத்தில் பட, அதை கேட்கும் போதுதான் “உன்கூட வாழ எனக்கு விருப்பம் இல்ல. நான் என் அம்மா சொல்ற மாதிரி தான் கேட்பேன். நீ இங்க இருந்து போயிடு”ன்னு சொல்லி தன் உண்மை முகத்தை வெளியில் காட்டினார் ரவி.
அதுவே அதிர்ச்சி என்றால், வேலையை விட்டது, அதை நிர்மல் குடும்பத்திடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றது பேரதிர்ச்சி.
ரவி அங்கிருந்து மொத்தமாக சென்றது நிர்மலின் மனைவி சொல்லித்தான் மஞ்சரிக்கே தெரியும். இடிந்து போய் அமர்ந்திருந்தவளைப் பார்த்து பரிதாபப்பட்ட நிர்மலின் மனைவி “அவங்க வீட்டுக்கு போய் பேசு மஞ்சு. இதெல்லாம் தப்பு. ரவி உனக்கு செஞ்சது துரோகம்.” என நிர்மல் முறைக்க முறைக்கவே பேசினார்.
ஆனால் அதற்கு மஞ்சு கூறிய “ச்சே ச்சே என்ன க்கா பேசுறீங்க. அவருக்கு ஏதோ கோபம் அதான் போயிருக்கார். இது அடிக்கடி நடக்கிறது தானே. அவருக்கு எங்களை விட்டுட்டு எல்லாம் இருக்கவே முடியாது க்கா. அதுலயும் பாப்பா விட்டுட்டு அவர் இருப்பாரா சொல்லுங்க. வந்துடுவார் க்கா.. நீங்க பயந்து என்னையும் பயமுறுத்துறீங்க..” என்றாள் வலித்த புன்னகையில்.
ரவி மீதான அவளின் அசாத்திய நம்பிக்கையில் நிர்மலே அசந்து தான் போனார். அவர் முன்னமே மனைவியிடம் சொல்லிவிட்டார். ‘ரவி போயிட்டான். இவங்களையும் இங்க இருந்து அனுப்பு. நீ தான் பேசனும். நான் அந்த பொண்ணுக்கிட்ட அதிகம் பேசினதுல்ல. நான் பேசி அது பிரச்சினயாகிடக்கூடாது. நீயே சுமூகமா பேசி இங்க இருந்து அனுப்பிடு..” என மனைவியின் முறைப்பையும் கண்டுகொள்ளாமல் சொல்லி முடித்திருந்தார்.
இப்போது மஞ்சரியின் பேச்சைக் கேட்டு ஒரு பக்கம் வருத்தமும், மற்றொரு பக்கம் இப்படி ஏமாளியா இருக்கப்போய் தான் அவன் ஏமாத்திட்டு போயிருக்கான் என கோபமும் வந்தது.
“மஞ்சு.. உனக்கு இன்னும் புரியலையா?” என வருத்தமாக அவர் மனைவி கேட்க, குழப்பமாக பார்த்தாள் மஞ்சரி எனும் பேதை.
“க்கா..” என்றவளின் விழிகளில் ஒட்டுமொத்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தேங்கிக் கிடந்தது.
‘தப்பா மட்டும் சொல்லிடாதீங்க’ என்ற இறைஞ்சுதல் அப்பட்டமாக தெரிந்தது அந்த விழிகளில்.
“இங்க பாரு மா.. நீ நினைக்கிற மாதிரி இல்ல ரவி. அவனுக்கு.. ம்ச் அவனுக்கு அங்க ஒரு பொண்ணு பார்த்து எல்லாம் ஏற்பாடகிடுச்சு. கல்யாணத்துக்கு கூட நாள் குறிச்சிட்டாங்க ன்னு கேள்விப்பட்டேன். நீ இப்படி இருந்தா அவன் உன்னை ஏமாத்திட்டுத்தான் போவான். அவனுக்கு இப்போ தேவை நீ இல்ல. பணம் தான். அதை அந்த பொண்ணூ வீட்டுல அள்ளி அள்ளி கொடுக்குறாங்க. உன்னால கொடுக்க முடிஞ்சா, கொடுத்துட்டு உன் வாழ்க்கையை காப்பாத்திக்கோ..” என்று எரிச்சலாக பேசியவரை திகைத்துப் பார்த்தார் மஞ்சரி.
அதுதான் மஞ்சரி நிர்மலையும், அவர் மனைவியையும் கடைசியாக பார்த்தது. அதன் பிறகு இன்றுதான் பார்க்கிறார்.
அவர்கள் வெளியே போ என்று சொல்லாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து மகளோடு அங்கிருந்து கிளம்பினார்.
திருச்சியில் இருந்து எப்படி தேனி வந்து சேர்ந்தார் என்பது இப்போது வரை அவருக்கே தெரியாது.
“ரவி..” என்ற நிர்மலை நிமிர்ந்து பார்த்த ரவியின் முகம் வெளிறிப் போய் இருந்தது.
“இதை சரி பண்ண முடியாதா?” என்ற நிர்மலுக்கே அந்த நம்பிக்கை இல்லை.
“ம்ம்ஹ்ம்ம்..” இல்லையென்று வேகமாக தலையசைத்தார் ரவி.
“அப்போ அவங்களை அப்படியே விட்டுடு. நீ விட்டது விட்டதாவே இருக்கட்டும். அவங்க உலகமே வேற, அதுல மறுபடியும் நீ உள்ள நுழையனும்னு நினைக்காத..” என்றார் அழுத்தம் திருத்தமாக.
பின் “நானும் உனக்கு உண்மையான ஒரு நண்பன் இல்ல. அப்படி உண்மையா இருந்திருந்தா உன் வாழ்க்கை கெட நானும் ஒரு கார்ணமா இருந்திருக்க மாட்டேன்.. ம்ச்.. இல்ல.. இல்ல.. நான் நல்லது தான் செஞ்சிருக்கேன். உன்னை அவங்களுக்கு அடையாளம் காட்டிருக்கேன்.. அது நல்லது தான். நான் தடுத்திருந்தாலும் இது நடந்திருக்கும்னு இப்போ தெரியுது. காரணம் உன்னோட பணத்தாசை..” என்றார் ஆத்திரமாக.
“நிர்மல்..” என ரவி அதிர்ந்து பார்க்க,
“உண்மை தான்.. அதை இல்லைன்னு வேற சொல்லுவியா? அப்படி இல்லைன்னு உன்னால சொல்லத்தான் முடியுமா? அப்படி அந்த ஆசை இல்லாம இருந்திருந்தா இப்போ நீ அவங்க கூட தானே இருந்திருக்கனும்..” என்றார் அழுத்தமாக.
“என் மனைவிக்கு உன் பிரச்சினைக்கு அப்புறம் என் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு. ‘உங்க ஃப்ரண்ட் மாதிரிதானே நீங்களும் இருப்பீங்க. என்னை விட அதிகமா பணம் கொடுக்குறேன்னு யாரும் வந்தா, என்னை விட்டுட்டு போயிடுவீங்களான்னு அடிக்கடி கேட்பா.. ஃப்ரண்டுன்னா எப்பவும் கூடவே இருக்கிறது இல்ல, தப்பு செஞ்சா அதை தப்புன்னு சொல்லி தண்டிக்கிறதும் ஃப்ரண்ட்சிப் தான், நீங்க அதை செய்யவே இல்ல. அந்த பொண்ணோட பாவம் கண்டிப்பா நமக்கு ஏதோ ஒரு வகையில வந்து சேரும்னு சொல்லுவா.. அது உண்மை தான். இப்போ என் பொண்ணு வாழாவெட்டியா வந்து என் வீட்டுல இருக்கா..” என்றார் பெருமூச்சோடு.
இது எதற்கும் ரவியால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் காலம் முடியும் வரை, அவரின் தவறுக்கான தண்டனையும் பழியும் பாவமும் அவரை துரத்தத்தான் செய்யும்.. அதை அவர் ஏற்கத்தான் வேண்டும். வேறு வழியும் இல்லையே..
விதியின் செயலை மாற்ற முடியுமா?