அகானா - 55
ரவி ரத்த வெள்ளத்தில் சாய, அந்த இடமே கலவரமாய் மாறியிருக்க, தோட்டா வந்த திசையைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி.
உண்மையில் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் துப்பாக்கியுடன் அங்கு நின்றிருந்த நபரை எதிர்பார்க்கவே இல்லை.
“ப்பா..” என குமரனும், நவீனும் அவரை நோக்கி ஓட, அதற்குள் போலிஸ் அவரை சுற்றி வளைத்திருந்தது. ஆம் தாமோதரனின் கையிலிருந்த துப்பாக்கியின் தோட்டாதான் ரவியை துளைத்து சென்றிருந்தது.
முந்தைய நாள் இரவு துரைப்பாண்டியின் வீடு..
“என்ன தாமு இப்படி பண்ணிட்ட..?” என ஆதங்கமாக கேட்டார் துரைப்பாண்டி.
ஆனால் தாமோதரனின் முகம் இளகவே இல்லை.
“தாமு உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்..” என அழுத்தமாக கேட்க,
“அண்ணா.. அன்னைக்கே அவனை சும்மா விட்டுருக்கக்கூடாது. சரி ஏதோ போதாத காலம் நடக்குது, எல்லாம் சரியாகி ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துடுவாங்கன்னு தான் அவனை விட்டு வச்சேன். ஆனா நான் பொண்ணு மாதிரி வளர்த்த என் மஞ்சு பொண்ண இப்படியெல்லாம் கஷ்டப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்லை. சரி எல்லாம் முடிஞ்சு அந்த பொண்ணுங்க ஏதோ வாழ்க்கையில ஜெய்ச்சி ஒரு நல்ல நிலைக்கு வந்தா அதையும் விட்டு வைக்க மாட்டேங்குறான். இவனை சும்மா விட சொல்றீங்களா? அன்னைக்கு அவன் ஆத்தா சொல்ற பேச்சைக் கேட்டு, பணத்துக்காக அந்த மைதிலி பின்னாடி போகும் போது தெரியலயா அவனுக்கு ஒரு பொண்ணும் பொண்டாட்டியும் இருக்காங்கன்னு..” என ஆக்ரோசமாக கத்த, துரைப்பாண்டியனுக்கே அவரைப் பார்த்து பயமாக இருந்தது.
“தாமு.. முதல்ல நீ அமைதியா பேசு. நீ எப்படி அங்க இருந்து வந்த? உன் வீட்டுல யாருக்கும் தெரியுமா? அந்த கலெக்டர் பொண்ணு உனக்காக யோசிச்சி இதை செஞ்சிருக்கு. உன்னை பழையபடி மாத்தனும்னு அங்க போய் சேர்த்துருக்கு. அதை மறந்து உன் வாழ்க்கையை கெடுத்துக்கப் போறியா? உனக்கும் மத்தவங்கள மாதிரி வாழ ஆசை இல்லையா?” என பொறுமையாக பேசினார்.
“ண்ணா.. மறந்துட்டீங்களா? நான் இப்படி பைத்தியக்காரண அலைய அந்த வீட்டு ஆளுங்க தான் காரணம். அப்பவே அவளுங்கள முடிச்சி விட்டுட்டு போயிருப்பேன். என் பொண்டாட்டிக்காத்தான் அமைதியா இருந்தேன். இப்போ அவளுக்கும் சரி, மத்த யாருக்கும் சரி எந்த பிரச்சினையும் இல்ல. இனி நான் யாருக்காகவும் தயங்க வேண்டியதில்ல, பயப்பட வேண்டியதுமில்ல. எனக்காக நீங்க இதை செஞ்சித்தான் ஆகனும்..” என்றார் தீர்மானமாக.
துரைப்பாண்டியனுக்கு தாமோதரனை நினைத்து பயம் தான். திருச்சியில் ஒரு ஹோமில் இருந்தவர் எப்படி இங்கு வந்தார் என்றே ஆச்சரியம். அதிலும் வந்தவர் ரவியை கொலை செய்யப் போவதாக கூறி வாக்குவாதம் செய்வது அதைவிட திகைப்பு.. இனியும் தாமோதரனை சமாளிக்க முடியும் என்று தெரியவிலை.
அதனால் அவருக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என முன்னரே யோசித்திருக்க, இப்போது அதை செய்யலாம் என்று முடிவு செய்து, தாமோதரனுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.
அடுத்த நாள் யாருக்கும் சந்தேகம் வராத படி ரெடியாகி, துரைப் பாண்டியனின் ஆட்களோடே உள்ளே வந்துவிட்டார்.
ஆகன் தாலி கட்டியதைப் பார்த்ததும் தான் தாமோதரனுக்கு கோபம் அதிகமாகிவிட்டது.
அதே வீட்டில் மீண்டும் தன் மகளின் வாழ்க்கையா? என் பிள்ளைகளை இவர்கள் நிம்மதியாகவே வாழ விட மாட்டார்களா? இத்தனைக்கும் காரணமான அவனைக் கொன்றே தீர வேண்டும் என்ற ஒரு தந்தையின் கோபம் ஆத்திரமாக மாற,
ரவியின் நெஞ்சை குறிப்பார்த்து தன் துப்பாக்கியின் விசையை அழுத்தினார் தாமோதரன்.
ஏற்கனவே தன் ஆட்களிடம் தாமோதரனின் மேல் ஒரு கண் வைத்திருக்கும் படி கூறியிருந்த துரைப்பாண்டி, அவர் துப்பாக்கியை எடுத்ததுமே கண்ணைக் காட்ட, சட்டென அதை சைடாக நகற்றி விட்டான் தாமோதரனின் பக்கத்தில் நின்ற துரைப்பாண்டியின் ஆள். அது சரியாக ரவியின் இடது கை தோள்பட்டையை மட்டும் உரசி சென்றுவிட, செய்த பாவத்தின் பலனாக ரவியின் உயிர் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.
அவரின் மரணம் இப்படி அமையக்கூடாது என்பது விதி போல!
காவலர்கள் தாமோதரனை அழைத்துப் போக, அதைக் கண்டு திகைத்து நின்றிருந்த கவிதாவிடம் “நீ இவனை யோசிக்காத, இவனை வெளியேக் கொண்டு வர்ரது என்னோட பொறுப்பு. எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணிட்டுத்தான் இவனை இங்க கொண்டு வந்திருக்கேன். இப்போ நீ உன் தங்கச்சிக்கும், கலெக்டருக்கும் தான் துணையா இருக்கனும். அவங்களை பாரு..” என அழுத்தமாக கூறி தன் ஆட்களோடு வெளியேறி விட, ஆரியனின் குடும்பமே அதிர்ச்சியில் இருந்தனர்.
தங்கள் ஒற்றை மகனின் திருமணம். ஆயிரம் கனவுகள் அவன் திருமணத்தை வைத்து அந்த பெற்றோருக்கு இருந்தது. அவன் பொருட்டு அனைத்தையும் விட்டுக் கொடுத்திருந்தனர்.
இப்போது இப்படி ஒரு சம்பவம், அவர்களை நிலைத் தடுமாற வைத்தது.
இத்தனை களேபரத்திலும், மஞ்சரியும் அகானாவும் எந்தவொரு உணர்ச்சிகளையும் காட்டாமல் கல்லைப் போல் இறுகி நின்றிருந்தனர்.
துரைப்பாண்டி சொல்லிச் சென்ற பிறகு, தன் கணவனைப் பற்றிய கவலைகளை ஒதுக்கி, தன் தங்கையிடம் ஓடி வந்தார் கவிதா.
அவர் வந்து உழுக்கிய பிறகே நிகழ்வுக்கு வந்த மஞ்சரி, மகளிடம் வேகமாக வந்தார்.
“அம்மு..” என மகளை அழைக்க,
“ம்மா.. நா.. நாம இங்க.. இங்க இருந்து போகலாம்.. ப்ளீஸ்..” என்றாள் குரல் நடுங்கி.
முதல் முறையாக மகளின் குரலில் தெரிந்த பயத்தையும், நடுக்கத்தையும் உணர்ந்த மஞ்சரிக்கு இதயமே வெடித்து சிதறுவது போல் இருந்தது.
அவர் எதற்கெல்லாம் பயந்தாரோ, அதுவே கண் முன் நடக்க செய்வதறியாது திகைத்துப் போனார்.
“ம்மா..” என மகள் மீண்டும் அழைக்க,
“போலம் அம்மு.. போலாம்.. நான் விஜி க்கா கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்..” என அங்கு பதட்டமாக நின்று கொண்டிருந்த விஜயாவைப் பார்த்து கூற,
“ம்மா.. போலாம் ப்ளீஸ்.. எனக்கு கிட்டினஸா இருக்கு..” எனும் போதே அகானாவின் உடல் நடுங்கத் தொடங்கியது.
“மஞ்சு.. புள்ளைக்கு உடம்பு நடுங்குது. ஜன்னி வந்துட போகுது. நாம உடனே இங்க இருந்து போகலாம். நான் அந்த செகியூரிடிய கூப்பிடுறேன்..” என பதட்டமாக ஓட, அதைக் கவனித்த விஜயாவும், முருகானந்தமும் மஞ்சரியிடம் வர, அவர் கூறாமலே நிலமையை யூகித்த இருவரும் “என்ன அகி நீ..?” என மகளைக் கடிந்து கொள்ள, அதற்குள் செக்யூரிட்டியும் ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்திருக்க, அகனாவை அப்படியே அதற்கு மாற்றி ஆம்புலன்சில் ஏற்றினர்.
ஆம்புலன்சில் ஏற்ற ஏற்றவே அவளுக்கு ஃபிட்ஸ் வந்துவிட, அகானாவின் மூன்று தாய்களும் மகளின் நிலை கண்டு தவித்து போயினர்.
முருகானந்தம் ஆரியனுக்கு அழைக்க, அவன் அழைப்பு எடுக்கப்படாமல் போக, சற்றும் யோசிக்காமல் ஆகனுக்கு அழைத்தார்.
அவன் எடுத்ததும் நடந்ததை கூற, அங்குதான் வந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை கூறி தன் காரில் ஏறும் நேரம் வேகமாக அவரிடம் வந்தாள் மகிழினி.
“மாமா நானும் வரேன்..” என்ற போது, அவளைப் பிடித்து தனக்கு பின்னே விட்ட ரஞ்சனி “இந்த கோலத்தோட வேண்டாம் சம்மந்தி.. நான் கூட்டிட்டு வரேன்..” என மகளைத் தடுத்துவிட்டார்.
முருகானந்தத்திற்கு ரஞ்சனிக்கு பதில் சொல்லக்கூட நேரமில்லை. தலையை அசைத்தவர் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.
அவர் சென்றதும் “எப்படி ஒரு குடும்பம்னு பார்த்தியா? நம்மளை எல்லாம் உயிரா நினைச்சு வாழ்ந்த உன் மாமாவையே கொலை செய்ய பார்த்திருக்காங்க. அந்த குடும்பத்துல நீ போய் வாழனுமா? இதுக்கு நான் சம்மதிப்பேன்னு நினைக்கிறியா? ஏதோ உன்னோட விருப்பம், போனா போகுதுனு நினைச்சேன். ஆனா இனி அப்படி என்னால இருக்க முடியாது. அந்த வீட்டுக்கு உன்னை என்னால அனுப்ப முடியாது. இந்த கல்யாணம், தாலி இதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு ஒழுங்கா என் பின்னாடி வந்து சேர். முடியாதுன்னு ஆட்டம் காட்டினா சோத்துல விசம் வச்சு கொல்லக்கூட தயங்க மாட்டேன்..” என ஆங்காரமாக ரஞ்சனி கத்திக் கொண்டிருக்க, அவரை ஒரு ஏளனப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழினி.
அவளைப் போலவே மற்றொரு பக்கத்தில் நித்யா.. இருவரம் ஒரு சேர “சபாஷ்” என்றனர்.
“நாய் வாலை நிமித்த முடியாதுனு அப்பா எங்கிட்ட சொல்லிட்டே இருப்பார். அப்போ எனக்கு உங்க மேல நம்பிக்கை இருந்தது. இப்போ அது சுத்தமா இல்ல.. நீங்க எங்களை பிரிக்க எந்த எல்லை வரைக்கும் போவீங்கன்னு எனக்கும் ஆரிக்கும் தெரியும், அதுக்காக பயந்து பயந்தே ஒரு வாழ்க்கை வாழ முடியுமா? உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோங்க..” என நித்யாவிடம் செல்ல,
“எல்லாம் இவளாலத்தான்.. இவ தான் நீதி நேர்மைன்னு பேசி என் குடும்பத்தை ரெண்டாக்கிட்டா.. என் பொண்ணும், என் பையனும் என்னை விட்டு போய்ட்டாங்க. அதுக்கு நீதான் காரணம். உன்னோட சினப்புத்தி தான் காரணம். மைதிலி அண்ணி மேல உனக்கு இருந்த பொறமை தான் காரணம். எங்க குடும்பத்தை சீரழிச்ச நீ நல்லாவே இருக்கமாட்ட..” என நித்யாவிடம் ஆக்ரோசமாக கத்த,
“ஊர்ல இருக்குற பாதி குடும்பத்தை கெடுத்து, அவங்க வாழ்க்கையை அழிச்ச, நீங்களும் உங்க குடும்பமுமே நல்லா இருக்கும் போது, செஞ்ச தப்பை சுட்டிக்காட்டி, இனி செய்யாதீங்கன்னு சொன்ன நான் எப்படி நாசமா போவேன். இனி தான் நல்லா இருக்கப் போறேன். அதையும் நீங்க பார்க்கத்தான் போறீங்க..” என கர்ஜனைக் குரலில் கூறிய நித்யா, மகிழினியை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்றாள்.
நித்யாவின் இந்த சரிக்கு சரியான பேச்சில் தடுமாறிப் போனார் ரஞ்சனி. இப்போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை தவற விடக்கூடாது என்ற எண்ணம் வழுப்பெற நித்யாவின் கையோடு சென்ற மகளை சட்டென இழுத்து தன் கையில் பிடித்துக் கொண்டார்.
“இங்க பார் நித்யா.. இவ என்னோட மக. இவளோட பொறுப்பு எனக்கு மட்டும் தான் இருக்கு. தேவையில்லாத வேலையை செஞ்சு, என்னை கொலைகாரியாக்கிடாத..” என ஆங்காரமாக கத்த, அவரை கூர் பார்வை பார்த்தபடி அவருக்கு எதிரில் வந்து நின்றார் சங்கர்.
“உனக்கு பொண்ணுன்னா எனக்கு யார்?” என்றார் நிதானமாக.
அதுவரை மகளை பேசவிட்டு வேடிக்கை பார்த்த அழகர், மாப்பிள்ளையைப் பார்த்தது ஓடிவந்து “அது ஒரு ஆதங்கத்துல பேசுது மாப்பிள்ளை, அதையெல்லாம் அப்படியே விட்டுடுங்க..” என்றதும் இப்போது அந்த பார்வை மாமனாரை நோக்கித் திரும்பியது.
“இப்போ இந்த நிமிசம் உங்க பொண்ணுக்கும், எனக்குமான உறவு முறியுது. இனி இவ என்னோட மனைவியும் இல்ல. நான் அவளோட கணவனும் இல்ல. முக்கியமா என் பசங்களோட வாழ்க்கையில இவ எங்கேயும் இல்ல. இப்படியே இவளை அழைச்சிட்டு போயிடுங்க. முடியாதுன்னு சொன்னீங்கன்னா உங்க பொண்ணு உயிர் என் கையால போயிருக்கும்..” என இறுகியக் குரலில் கூற, ரஞ்சனியின் உடல் பயத்தில் வெடவெடத்தது.
“ப்பா..” என ரஞ்சனி தன் தந்தையைப் பார்க்க,
“இத்தனை வயசுலயும், உங்களுக்கு சாஞ்சுக்கு உங்க அப்பாவோட தோளும், ஆதரவும் தேவைப்படும் போது, பச்ச மண்ணு அகானாவுக்கு எவ்வளவு தேவைப்பட்டிருக்கும். அவ வாழ்க்கையை நாசம் பண்ன, நாசக்காரி நீ மத்தவங்களுக்கு சாபம் விடுறியா?” என சங்கர் மனைவியை அடிக்க பாய,
“அண்ணா என்ன சொன்னாலும் அவங்க கேட்க போறது இல்ல, புரிஞ்சிக்கப் போறதும் இல்ல, கடைசி வரை அந்த மைதிலிக்கு ஜால்ரா தட்டிக்கிட்டே திரியட்டும், நீங்க வாங்க, நாம ஹாஸ்பிடல் போகலாம்..” என நித்யா இருவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட, அழகரின் மனமோ மகனை நினைத்து கலங்கியது.
காலம் கடந்து விட்டதை அவருக்கு யார் புரிய வைப்பது.