அகானா - 56
ரவிக்கு முதலுதவி முடித்து ஐசியுவில் வைத்திருந்தனர். அதே நேரம் அகானாவையும் அங்கு தான் கொண்டு வந்திருந்தனர்.
ஆரியன் ரவியிடம் இருக்க, ஆகன் தான் அகானாவிடம் வந்திருந்தான்.
என்ன நடந்தது என கேட்டுக் கொண்டவன் அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்திருந்தான். முழுதாக இரண்டு மணி நேரங்கள் ஆனது அவளது கண்டிசன் ஸ்டேபிளாக.
தன்னுடைய செய்கை அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் என அவனுக்குத் தெரியும் தான். தெரியாமல் செய்யவில்லையே..
சமாளித்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையும் ஒரு காரணமாக கூட இருக்கலாம். ஆனால் என்ன? இந்தளவிற்கு அதிர்ச்சியை அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
‘இல்ல இவ சரியில்ல.. ஷீ நீட் கவுன்சிலிங்க்… எஸ் டெபனட்லி ஷீ நீட் சம் கவுன்சிலிங்க்..’ என மனதுக்குள் முணுமுணுத்தவன் உடனே தன் நண்பனுக்கு அழைத்து அகானா பற்றி கூறி ‘என்ன செய்யலாம்?’ என்றான் வருத்தமாக.
“டேய் அந்த பொண்ணா?” என்றான் எதிர்புறம் ஆச்சரியமாக.
“ம்ம்.. ஆனா அவளுக்கு விருப்பமில்லாம தாலி கட்டிட்டேன். அதனாலத்தான் இப்படி ஆகிட்டா.?” என்றான் மிகவும் கலக்கமாக
“போடா ஃபூல்.. அதனால ஒன்னும் அவளுக்கு ஸ்ட்ரெஸ் வரல…”
“தென்..”
“மச்சான்.. நான் ஒன்னு சொல்லுவேன்.. நீ தப்பா நினைச்சுக்காத..?” என்றான் ஆகனின் சைகாட்ரிஸ்ட் நண்பன் சத்தியன்.
“ம்ச்.. சத்யா இழுக்காம என்னனு சொல்லுடா?”
“நீ சொல்றது சரிதான். அவளுக்கு உடனே கவுன்சிலிங்க் தேவைதான். ஆனா அதையும் தாண்டி அவ எதிர்பாக்கிறது உன்னை இல்லை… உங்க மாமாவோட அன்பை..” என்றான் பட்டென.
“வாட்.. என்னடா சொல்ற? அவரை பார்த்தாலே எரிஞ்சி விழறா? பழி வாங்குறேன்னு என்னென்னமோ செய்றாடா..?” என்றான் ஆகனும் குழப்பமாக.
“எஸ்.. இதெல்லாம் அவங்களோட உண்மை வெளிய தெரிஞ்சிடக்கூடாது என்பதால், இப்படி தன்னை காட்டிக்கிறாங்க.
“புரியல சத்யா..?” என்றன் ஆகன் மீண்டும் குழப்பமாக.
“ம்ம்ம் எஸ் ஆகன். உன்னோட அம்முவுக்கு அவளோட சின்ன வயசு அப்பா வேணும். அவர் மட்டும் தான் வேனும். அவர்தான் அவளோட ரியல் ஹீரோ. அதே நேரம் இப்போ இந்த இருக்கிற அப்பாவை அவளுக்கு சுத்தமா பிடிக்கல. அவரைப் பார்க்கவே கூடாதுனு நினைக்கிறா? எங்களை கஷ்டப்படுத்தின அவரை கொலையே கூட செஞ்சிடலாமான்னு கூட சில நேரம் யோசிக்கிறா, இப்படி ரெண்டுக்கும் நடுவுல மாட்டி ரொம்பவே தன்னை மன அழுத்தத்துக்கு கொண்டு வந்துட்டா.. இதை மெடிசினால கண்டிப்பா சரி செய்ய முடியாது ஆகன். அவளோட முயற்சியால மட்டும் தான் முடியும்..”
“சத்யா..”
“எஸ் ஆகன். இப்போ இருக்கிற இந்த அப்பாதான் நிதர்சனம்னு புரிய வைக்கனும். அதை உணர்ந்துட்டா அதுக்குப் பிறகு..”
“அதுக்குப் பிறகு..”
“ஹ்ம்ம் அதுக்குப் பிறகு இப்போ இருக்கிறதை விட இன்னும் இரண்டு மடங்கு வீரியமா எழுந்து நின்னு அவரை பழி வாங்குவா..”
“டேய்..”
“எஸ் ஆகன்.. நான் பொய் சொல்லல.. இதுதான் உண்மை. அவளை சரி செய்ய இப்போ உன்னால மட்டும் தான் முடியும். அவ உங்கிட்ட என்ன கேட்டாலும் செஞ்சிக் கொடுத்துடு. கண்டிப்பா உங்கிட்ட தான் கேட்பா.. அவ விருப்பத்துக்கு விட்டுடு. கண்டிப்பா ஒரு நாள் உன்னையும் உன் காதலையும் தேடி வருவா.. அப்போ அவளை ஒரு ராணி மாதிரி நீ கொண்டாடு. அதுக்குப் பிறகு உன்னை விட்டு போகவே மாட்டா..”
“எனக்கு புரியல சத்யா? அம்முவுக்கு மாமா மேல இருக்குற கோபத்தை நான் கண்ணால பார்த்துருக்கேன். ஆனா நீ அவர் மேல உயிரா இருக்கான்னு சொல்ற..”
“டேய் மென்டல்.. நான் சொன்னதை கவனிச்சியா இல்லையா? அவளுக்கு தன்னோட சின்ன வயசு அப்பாதான் வேனும். இந்த அப்பா இல்லை. அவரால அவ இழந்தது கொஞ்ச நஞ்சம் இல்லை. அதையெல்லாம் நினைச்சு நினைச்சு அவர் மேல கோபத்தை வளர்த்து வச்சிருக்கா. அது நிச்சயம் அவரை பழிவாங்காம விடாது. அப்படி அவள் பழிவாங்கனும்னு என்ன செஞ்சாலும் நீ அதுல தலையிடாத. அவளை அப்படியே விடு..”
“என்னடா சொல்ற?”
“ஆமா ஆகன். அப்படி நடந்தா மட்டும் தான் அகானாவை உன்னால சரி பண்ணிக்க முடியும். இல்லைன்னா அவளை..”
“அவளை..”
“மறந்திட வேண்டியது தான்..” என்றான் சத்யா..
“டேய் உங்கிட்ட வந்து கேட்டேன் பார்.. என்னை செருப்பால அடிக்கனும்டா..”
“உண்மையை ஏத்துக்க கஷ்டமாத்தான் இருக்கும் ஆகன். ஆனா அதுதான் உண்மையும் கூட. நீ உன்னோட குடும்பத்துக்காக முன்னாடி வரும் போதெல்லாம் உன்னோட அம்மு உன்னை விட்டு வெகு தூரம் போயிடுறா.. அதை நீ இன்னும் உணரவே இல்லையா? முதல்ல அதை சரி பண்ற வழியைப் பார்.. அது புரிஞ்சாலே, நீ அவளோட ஃபீலிங்க்சை தப்பா புரிஞ்சிக்க மாட்ட..” என்ற சத்யன் “அவளுக்கு நீ தான் எல்லாம்னு உணர வை ஆகன். அதுதான் அவளோட எதிர்பார்ப்பும்..” என்று அழுத்தமாக கூறி போனை வைத்துவிட, ஆகனுக்கு இந்த சூழலை எப்படி கையாள என்றேத் தெரியவில்லை.
ஒருபக்கம் அவனின் உயிரான மாமா.. மற்றொரு பக்கம் அதே உயிரான மாமனின் மகள். இப்பொது அவன் என்ன முடிவெடுக்க வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக கல்யாண வேலை, அதோடு கண்ணனின் துணையோடு, யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு செய்த தன்னுடைய கல்யாண வேலை.
இருந்த பதட்டத்தில் இந்த ஒரு வாரமாக உறக்கமே இல்லை. அதோடு இன்று காலை மண்டபத்தில் நடந்த களேபரம் எல்லாம் சேர்ந்து அவனுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்திருந்தது.
ரவியும், அகானாவும் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார்கள் என்ற பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.
இப்போது அவன் மூளையில் அன்றைய ஆரியனின் பேச்சுத்தான் ஓடிக் கொண்டே இருந்தது.
அன்று மகியை வீட்டில் விட்டுவிட்டு வந்த ஆரியன் நேராக ஆகனிடம் வந்து தான் நின்றான்.
“என்ன ஆரி.?” என்ற ஆகனிடம்,
“ம்ம் அகியைப்பத்தி நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்க சீனியர். உங்களுக்கு அவ வேணுமா? வேண்டாமா?” என்றான் பட்டென.
“ம்ச் இப்போ என்னடா வேணும் உனக்கு. எதுக்கு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க?”
“சீனியர்.. ஐம் சீரியஸ்.. எனக்கு அகியோட வாழ்க்கை ரொம்ப முக்கியம். நான் ஃப்ராங்கா உங்க கிட்ட ஒரு விசயத்தை சொல்றேன்..” என்று நிறுத்த, அவனை புருவ சுருக்கி பார்த்தான் ஆகன்.
“எஸ்… எனக்கு மகியைப் பிடிச்சிருந்தது தான். ஆனா அவ உங்க சிஸ்டர்னு தெரிஞ்ச நொடி வேண்டவே வேண்டாம்னு முடிவு பண்ணேன்.. ஆனா அப்போ என் மனசுக்குள்ள அகி வந்து நின்னா. நீங்க விட்டுட்டு போன டைம் அவ எவ்ளோ கஷ்டப்பட்டான்னு கூட இருந்து நான் பார்த்திருக்கேன். அந்த வலியை மகிக்கு நான் கொடுக்கக்கூடாது நினைச்சேன். அதே சமயம் அகிக்கும் நான் ஏதாவது செய்யனும்னு முடிவு பண்ணேன். அதனால..”
“அதனால…” என்று ஆகன் கூர்மையாக கேட்க,
“எஸ்.. உங்க கெஸ் கரெக்ட்தான். அகி உங்களை வேண்டவே வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கினாலும் நீங்க அவளை எப்படியாவது மேரேஜ் செய்யனும். அதுவும் எங்க மேரேஜ் அப்பவே நடக்கனும். இல்லைன்னா உங்க தங்கச்சி உங்க தங்கச்சியாவே இருப்பா.. நான் யாரைப் பத்தியும் யோசிக்காம கிளம்பி போயிக்கிட்டே இருப்பேன்..” என்றான் நிதானமாக.
“வாட் த ஹெல் ஆரி.. நீ என்னை ப்ளாக்மெயில் பண்றியா? அதை நான் செய்வேனு வேற எதிர்பார்க்கிறியா இடியட்..?”
“ஹான் அப்படியே கூட வச்சிக்கலாம். உங்களை மிரட்டத்தான் செய்றேன். இல்லைன்னு சொல்லவே இல்லையே. நான் உங்களுக்கு ஒரு டாப் ஆப்சன் கொடுத்துருக்கேன். இதை நீங்க மிஸ் பண்ணிட்டா இந்த ஜென்மம் மட்டுமில்ல, எந்த ஜென்மத்துலயும் அகி உங்களுக்கு கிடைக்கமாட்டா..” என்று கிண்டலாக கூறியவன் பின் “உங்க தங்கச்சி என்னை ஏன் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சானு நினைக்கிறீங்க.” என்றான் அதே கிண்டலுடன்.
ஆகன் இது என்ன புதுசா என்ற பார்வையைக் கொடுக்க,
“ஹான்.. அப்படியாவது நீங்க உங்க அம்மு கூட சேரனும்னு தான். அவளுக்கு உங்க காதல் கல்யாணத்துல முடியனும்னு ஆசை..” என்றவன் அங்கிருந்து சென்றுவிட, ஆரியன் சொல்லிச் சென்றதையே யோசித்துக் கொண்டிருந்தான் ஆகன்.
‘அவன் சொல்வதும் உண்மைதான். வீட்டில் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து அவளொடு திருமணம் என்றால், நிச்சயம் நூத்துக் கிழவன் ஆகி விடுவான்.
அதோடு முதலில் அந்த ராங்கிக்காரி சம்மதிக்க வேண்டுமே. இதையெல்லாம் நடத்தி, அதன் பிறகு திருமணம் என்றால் நினைக்கும் போதே இப்போது ஆகனுக்கு மூச்சு வாங்கியது.
பேசாமல் ஆரியன் கூறியதையே செய்து விடலாமா? என்று யோசித்த நேரம் தான் கண்ணனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
புருவத்தை சுருக்கியபடியே “என்ன அங்கிள்..?” என்றான் ஆகன்.
“அது தம்பி.. பாப்பா இங்க இருந்து ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருக்கு போல. அதுவும் நார்த் சைட் வேனும்னு பர்டிகுளரா மென்சன் பண்ணிக் கேட்டுருக்குறதா சொல்றாங்க. மெடிகல் லீவ் முடிஞ்சதும் அங்க போய் ஜாயின் பண்ற மாதிரி ஆர்டர் கேட்டிருக்காங்க..” என்றார் மிகவும் வருத்தமாக.
இதையும் ஆகன் எதிர்பார்க்கவில்லை. அவனின் எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறாக்குவதில் அவளுக்கு நிகர் அவள் மட்டும் தானே..
“ஓகே அங்கிள்.. இதை எங்கிட்ட ஏன் சொல்றீங்க.? இது அவளோட விருப்பம்.. நான் என்ன செஞ்சிட முடியும். அவ என்னைப் பார்த்தாலே காண்டாகிடுறா..?” என்றான் ஏதோ போல்.
கண்ணனுக்கும் ஆகனின் பதில் ஏதோ போல்தான் இருந்தது.
“சாரி தம்பி..” என்று அவர் வைத்துவிட, அவனுக்குமே அது வருத்தம் தான். ஆனால் அகானா விசயத்தில் எதையுமே யோசிக்காமல் செய்யக்கூடாது என்ற முடிவோடு இருப்பவனிடம் வேறு என்ன எதிர்பார்த்திட முடியும்.
ஆரியனும், கண்ணனும் கூறுவது தனக்காக அல்ல என்று தெரியும். அவனின் அம்முவுக்காக. அது அவனுக்கு மகிழிச்சிதான்.
ஆனால் அவளுக்கு விருப்பமில்லாமல் வழுக்கட்டாயமாக திருமணம் செய்வது தான் இடித்தது. தன் வீட்டு ஆட்களை சமாளிக்க வேண்டியதை நினைத்தாலே எரிச்சல் வந்தது.
பின் ஒரு பெருமூச்சோடு என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என திட்டம் தீட்டி, அதற்கு ஆரியனையும், கண்ணனையும் துணைக்கு வைத்துக் கொண்டான்.
அனைத்தும் அவன் நினத்ததைப் போலத்தான் நடந்தது. இதோ தாலியைக் கட்டிவிட்டான். அவளிடமிருந்து மிகப்பெரிய ஒரு வாக்குவாதத்தையும், மறுப்பையும் எதிர்பார்த்து நின்றிருந்த நேரம், யாருமே எதிர்பார்க்கவில்லை தாமோதரன் இப்படி செய்வார் என்று..
தன் மாமனை ரத்த வெள்ளத்தில் பார்த்தவன் நொடி நேரம் என்றாலும் அதிர்ச்சியில் உறைந்து தான் போனான். இப்போது நினைத்தாலும் அவன் உடல் நடுங்கித்தான் போனது.
சட்டென தலையை உழுக்கி நிகழ்வுக்கு வந்த நேரம் அகானா அவனையே பார்த்தபடி படுத்திருந்தாள்.
ஒரு வருத்தமான புன்னகையுடன் அவளை நெருங்கியவன், நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு “நீ இப்போ ஓக்கே ஆகிட்ட..” என்றான்.
“ஹ்ம்ம்.. ஹ்ம் அவர் இப்போ எப்படி இருக்கார்.?” என்றால் மெல்லியக் குரலில்.
“ம்ம் இப்போ ஓகே தான். தோளைத்தான் உரசிட்டு போயிருக்கு..” என்றான் மெல்ல..
“ம்ம்ம்ம்..” என பெருமூச்சு விட்டவள் “எங்க என் தண்டனையை எல்லாம் அனுபவிக்காமலே செத்துடுவாரோன்னு நினைச்சேன். நல்லவேலை சாகல..” என நிம்மதி பெருமூச்சு விட, மனைவி என்றவளை திகைத்துப் போய் பார்த்தான் ஆகன்.