அகானா - 59
அன்று ஃபீல்டு விசிட்டிற்காக வருசநாட்டை நோக்கி அகானாவின் அரசு வாகனம் சென்று கொண்டிருந்தது.
வழக்கம் போல கண்ணன் கார் ஓட்ட, அருகில் டவாலி. பின்பக்கம் அகானா. மிகவும் அமைதியாக தன்னிடமிருந்த கோப்பை புரட்டியபடி அமர்ந்திருந்தாள் ஆட்சியர் பெண்.
அவள் கண்களில் தெரியும் தீவிரமும், கூர்மையும் கண்ணனுக்கு எப்போதும் பிடிக்கும்.
அவரது அனுபவத்தில் எத்தனையோ ஆட்சியர்களை, நிர்வாகிகளைப் பார்த்திருக்கிறார்.
ஆனால் இந்த சிறு வயதில் ஒரு சிறு பெண்ணுக்கு இத்தனை துடிப்பும், திமிரும் அவர் பார்த்ததில்லை.
அன்றைய பிரச்சினைக்கு பிறகு அகானா அவரிடம் தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை.
அது அவருக்கு வருத்தமாக இருந்தாலும், ஆகனோடு சேர்த்து வைத்ததில் அந்த வருத்தம் குறைந்து தான் போயிருந்தது.
இவர்களுக்கு முன்னே ஒரு போலிஸ் ஜீப் சென்று கொண்டிருக்க, பின்னே ஒரு மஹிந்த்ரா தார்(Thar) வந்து கொண்டிருந்தது.
அலுவலகத்தில் இருந்து புறப்படும் போது அந்த வண்டியை காணவில்லை. கண்டமனூர் பாலத்தை தாண்டிய பிறகே அந்த தார்(Thar) அவர்களை தொடர்வதை கண்ணன் கண்டுகொண்டார்.
முதலில் சற்று பயந்தார் தான். ஆனால் ஆகனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் அமைதியாகிவிட்டார்.
அவன் தான் அனுப்பியிருப்பதாக செய்தி சொல்லியிருந்தான்.
அகானாவிற்கும் அது தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு அமைதியாக வருபவள் இல்லையே.
“அந்த டீ கடைல நிறுத்துங்க..” என்றவளின் கணீர் குரலில் சற்று தடுமாறி வண்டியை நிறுத்தியவர் யோசனையாக அவளைப் பார்க்க, அவளோ அவரை கண்டுகொள்ளாமல் இறங்கி கடையை நோக்கி நடந்தாள்.
அங்கு இவளுக்காக காந்திருந்தவரைப் பார்த்து கண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆம் அங்கு இருந்தது துரைப்பாண்டி.
அவரைப் பார்த்து வணக்கம் வைத்து கண்ணன் ஒதுங்கிக் கொண்டாலும், ஆகனுக்கு செய்தி சொல்ல மறக்கவில்லை. அகானா சிறு புன்னகையுடன் அவருக்கு எதிரில் அமர்ந்தாள்.
“எப்படி இருக்கீங்க கலெக்டர் அம்மா..” என்றபடியே “என்ன சாப்பிடுறீங்க?” என்றார் புன்னகையுடன்.
“நோ சார்.. ஒன்னும் வேண்டாம்... நீங்க எப்படி இருக்கீங்க..?” என்றவள் “பெரிப்பா எப்படி இருக்கார்?” என்றாள் கூடவே.
“தாமு பத்தின கவலையே உங்களுக்கு வேண்டாம். அவனை மறுபடியும் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்குறது என்னோட பொறுப்பு..”
“ம்ம் நான் இப்போ போய் பார்க்க முடியாது. ஏகப்பட்ட ஃபார்மாலிடிஸ் இருக்கு. அன்ட் எனக்கு அவர் மேல கோபம்..”
“உங்க சூழ்நிலை எனக்கு புரியும் மேடம். தாமுவை அப்படியே விடுங்க. அவனுக்கு இனி எந்த பிரச்சினையும் வராது..”
“ஓகே சார்.. இப்போ ஏன் என்னை ஃபீல்டுக்கு போகாம இங்க வர சொன்னீங்க.”
“மேடம்.. உங்ககிட்ட சில உண்மைகளை சொல்லனும். அதோட இந்த பிரச்சினைல இருந்து நீங்க தள்ளிப் போயிடுறது தான் உங்களுக்கும் நல்லது. இப்போதான் நீங்க சாவோட விளிம்பு வரை போய்ட்டு வந்துருக்கீங்க. மறுபடியும் ஒரு பிரச்சினை வேண்டாம்னு பார்க்குறேன். டீ சொல்றேன், உங்களுக்கு ஓக்கே தான..”
“டீ குடிக்கத்தான் என்னை இவ்ளோ தூரம் வர வச்சீங்களா? ஆச்சரியமா இருக்கு… சுத்தி வளைக்காம என்ன விசயம்னு சொல்லுங்க சார். இதை சொல்லத்தான் என்னை நிறுத்துனீங்களா, நம்ப முடியலையே? இல்ல என்னை மிரட்டனும்னு ப்ளான் பண்ணிருக்கீங்களா?”
“ஹாஹா கலெக்டர் மேடம்.. நீங்க எல்லாம் எனக்கு வெறும் தூசி தெரியுமில்ல. இந்த தேனி ஜில்லா மட்டுமில்ல சுத்தி இருக்குற ஆறு ஜில்லாவுலயும் இந்த துரைப்பாண்டி யாருனு கேட்டு பாருங்க. சொல்வாங்க.! என்னோட அனுபவம் கூட உங்க வயசு இல்ல.. அதை மறந்துடாதீங்க..”
“அது உண்மை தான். ஆனா அவ்ளோ பெரிய டான் எதுக்கு என்னைக் கூப்பிட்டு வச்சு பேசனும், அதுதான் அங்க அங்க இடிக்குது..”
“யோசிக்கவே வேண்டாம். ஒரே காரணம் தாமோதரன் மட்டும்தான்..”
“ஹோ.. ஓகே ஓகே..”
“இப்போ மத்திய அமைச்சரா இருக்குற ஒருத்தரோட இடம் தான், இன்னைக்கு நீங்க ஃபீல்ட் விசிட் பண்ணப்போற இடம். உங்களை அங்க போக விடாம பண்றதுதான் அவங்களோட முக்கியமான வேலை.”
“பட்.. அது அவரோட நிலம் இல்லை. அவங்க குடும்பம் அரசுக்கு இனாமா கொடுத்த நிலம். அதை ஏன் இப்போ அவர் உரிமை கொண்டாடுறார்.”
“அவங்க முன்னோர்கள் கொடுக்கும் போது அந்த நிலத்துக்கு வேல்யூ இல்ல. பட் இப்போ அந்த இடத்தோட வேல்யூ பல கோடி. அதை எப்படி அவன் விடுவான்.”
“ஓ.. இப்போ நான் என்ன செய்யனும்?”
“எதுவும் செய்ய வேண்டாம். நீங்க என்ன செய்யனுமோ செய்ங்க.. நான் பார்த்துக்கிறேன். ஆனா கவனமா செய்ங்க.”
“ஆனா ஏன்.? உங்களுக்கு பிரச்சினை ஆகிடாதா?”
“எனக்கா? ஹாஹா.. எனக்கா? எனக்கு பிரச்சினை ஆகிடுமா? இது அரசியல் பாப்பா.. நொடி நேரத்துல எதுவும் மாறும், எதுவும் நடக்கும். அதனால கண்டதையும் போட்டு குழப்பிக்காம வேலையை பாருங்க..”
“ம்ம் இப்போ நீங்க சொன்னது உங்களுக்கு தான் தேவைப்படும். நீங்களும் கவனமா இருங்க..”
“நான் பார்த்துக்கிறேன்..” என்றவர் கண்ணனைப் பார்த்து “சூதானம்யா.. கவனமா பார்த்துக்கோ..” என்றார் கண்டிப்புடன்.
“அதெல்லாம் பார்த்துக்கிறேண் அய்யா..” என கண்ணன் பவ்யமாக பதில் கொடுக்க,
“ஹ்ம்ம்..” என்றவர் அவர்களை வழியனுப்ப, மீண்டும் பயணம் தொடர “இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்..” என அகானா கேட்க,
“அரை மணி நேரத்துல போய்டலாம் மேடம். அங்க இன்ஸ்பெக்ஷன் மட்டும் சீக்கிரம் முடிச்சிடுங்க. லேட்டாச்சுன்ன ரிட்டர்ன் வரது கஷ்டம்..”
“ஓ.. சரி பார்த்துக்கலாம்..” என்ற நேரம் ஆகனிடமிருந்து அகானாவிற்கு அழைப்பு வந்தது.
‘என்ன திடீரென்று?’ என யோசித்தவள் எடுக்கலாமா? வேண்டாமா? என குழம்பி பின் எடுத்துவிட “அம்மு..” என்றவனின் குரல் பெண்ணவளுக்குள் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை வெளிக்காட்டாமல் “ஹலோ..” என்றாள் மிகவும் சாதாரணமாக.
“ஹான்..” என பெருமூச்சு விட்டவன் “உன்னை பார்க்கனும். எப்போ வரலாம்?” என்றான் அமைதியாக.
“அஃபிசியலா? பெர்சனலா?”
“அஃபிசியல் தான்.. அத்தையோட கேஸ் பத்தி டீடைல்ஸ் சொல்லனும்?”
“ம்ம் ஓக்கே நாளைக்கு மார்னிங்க் ஆஃபிஸ் வந்துடுங்க..” என்றதோடு வைத்துவிட, இவளை சரி செய்யவே முடியாதோ என்ற பெரும் பயம் ஆகனுக்குள்.
அன்று இரவு சாப்பாட்டு நேரம் தாண்டி தான் ஆரியன் வீட்டிற்கு வந்தான்.
தன் அலுவலக அறையில் இருந்து அப்போதுதான் வெளியே வந்த அகானா அதை கவனித்து ‘என்ன?’ என்று பார்க்க,
“அந்த அம்மா சீரியஸ் கண்டிசன்ல இருக்காங்க. டீன்(ரவி) அரெஸ்ட் ஆனதை இதுவரை அந்த அம்மாவுக்கு சொல்லாம இருந்தாங்க. இன்னைக்கு யாரோ சொல்லிருப்பாங்க போல. சொன்னதுல இருந்து மூச்சுத்திணறல். இப்போதான் கன்ட்ரோல் ஆகிருக்கு. டீனை(ரவியை) உடனே பார்க்கணும்னு சொல்லி அடம் பிடிச்சிட்டு இருக்காங்க. சீனியரும், வினோத் சாரும் அந்த வேலையா வெளியில் அளைஞ்சிட்டு இருக்காங்க. ஹாஸ்பிடல்ல நான் இருந்தே ஆகனும்னு சிச்சுவேசன். அதான் லேட்..”
“ஓ மறுபடியும் போகனுமா?”
“ம்ம் ஆமாம்.”
“அப்போ நானும் வரேன்.. எனக்கு அவங்களைப் பார்க்கணும்..” என்ற அகானாவின் குரலில் இருந்த தீவிரத்தில், வேண்டாம் என சொல்ல வந்தவன் அமைதியாக சரி என்று விட்டான்.
ரெஃப்ரெஸ் ஆகி, சாப்பிட்டு கிளம்ப, அவனோடு அகானாவும் கிளம்ப, மஞ்சரி மகளை ஏன் என்பது போல் பார்த்தார்.
“ஒன்னுமில்ல ம்மா.. ஓபி எல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு போகனும் போல இருக்கு.”
“ம்ம் சரி.. கவனமா போய்ட்டு வாங்க..” என இருவருக்கும் விடை கொடுத்தார் மஞ்சரி.
“அகி..”
“நான் அவங்ககிட்ட பேசல..”
“இல்ல அப்படி சொல்ல வரல.. சீனியருக்கு தெரிஞ்சா?”
“தெரிஞ்சா? தெரிஞ்சா தெரியட்டுமே..”
“அகி எனக்கு உன்னைத் தெரியும்.. இது.. இது தப்பு..”
“ப்ளீஸ்.. நீ அமைதியா வண்டிய ஓட்டு.. எனக்கு தலை வலிக்குது..” எனக் கடுப்படித்தவளைக் கண்டு அமைதியாகவே காரை செலுத்தினான்.
அந்த இரவு நேரத்தில் மருத்துவமனையின் காரிடாரில் நடந்து சென்றவளின் உடல்மொழியே ஆரியனுக்கு பயத்தைக் கொடுத்தது.
சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் அகானா நுழைய, அறை வாயிலையே பார்த்தபடி படுத்திருந்த சரஸ்வதி அதிர்ந்து விழித்தார்.
புருவத்தை உயர்த்தி, நக்கலாக சிரித்தபடியே அவளுக்கு அருகில் அமர்ந்த அகானா “எப்படி இருக்கீங்க அப்பத்தா?” என்றாள் கிண்டல் வழிந்த குரலில்.
“ஹான்..” என கத்தியவர் ‘வேண்டாம் வேண்டாம்.. நீ போ..’ என்ற விதமாக தலையை அசைக்க, அவர் தலையசைத்த விதத்தில் முகத்தில் மாட்டியிருந்த ஆக்சிஜன் மாஸ்க் சற்றே நழுவியது.
“என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது எனக்கு ஒன்னுமே புரியல.. தெளிவா சொல்லுங்க அப்பத்தா.” என அந்த அப்பத்தாவில் அழுத்தம் கொடுத்து சிரிக்க,
“ஹம்ம் ஹ்ம்ம்..” என்றவர் அகனாவின் நிதானமான பேச்சிலும், சிரிப்பிலும் பயந்து மேலும் மேலும் தலையை ஆட்ட, இப்போது மொத்தமாகவே அந்த ஆக்சிஜன் மாஸ்க் நழுவி போயிருந்தது.
மூச்சுக்கு ஏங்கி தவித்தவர், உயிருக்காக ஏங்கி அவளை கெஞ்சல் பார்வை பார்த்தபடியே கையை காலை ஆட்ட, அதனால் கையில் மாட்டியிருந்த வென்ஃப்லானில் இருந்து ரத்தம் கசிந்து அது ட்ரிப்ஸ் பாட்ட்லினுள் ஏற, அதை கவனித்த சரஸ்வதி பயத்தில் உச்சிக்கே சென்றுவிட்டார்.
‘காப்பாத்து.. காப்பாத்து.. உன் அம்மாவை என் பையன்கூட சேர்த்து வைக்கிறேன். என்னை காப்பாத்து..’ என வார்த்தைகளில் குளறியபடியே கத்த, அதை நிதானமாகப் பார்த்தபடியே எழுந்த அகானா “எங்க வாழ்க்கையில மிஸ்டர் ரவீந்திரன் எப்பவும் இருந்ததில்ல. இனி இருக்கப் போறதும் இல்ல. இது அவருக்கான பழிவாங்கல் கிடையாது. உன்னோட பணத்தாசைக்கு பழியான இரு அப்பாவி பொண்ணுங்களோட மன குமுறல். அதை இப்படித்தான் வெளிப்படுத்த முடியும். உன்கிட்ட தான் கோடி கோடியா பணம் கொட்டிக் கிடக்கே. அதுதான உனக்கு முக்கியம். அந்த கோடியை வச்சு உன்னோட உயிரை காப்பாத்திக்கோ..” என்றவள் நிதான நடையுடன் வெளியில் வர, அவளையே சஞ்சலமாக பார்த்தான் ஆரி.
“நான் ஒன்னுமே பண்ணலப்பா.. பீ கூல்..” என தோளைக் குழுக்க,
“அகி..?” என்ற ஆரியனை வெறித்துப் பார்த்தாள் அகானா.
சட்டென “நான் இனி இந்த டாக்டர் தொழிலை தொடவேமாட்டேன்..” என்றாள் அகானா.
“அகி..” என அதட்டிய ஆரி, “நீ ஒரு தப்பும் பண்ணல, அதை முதல்ல உன் மண்டைல ஏத்து. பைத்தியம் மாதிரி புலம்பாத.” என கத்த,
“நோ.. இது என்னோட ப்ரொஃபசனுக்கு நான் செய்த துரோகம். அதை மதிக்கனும்னா இனி நான் அதை கையில் எடுக்கக்கூடாது. அதுதான் சரி..” என தனக்குத் தானே பேசியபடி, மூச்சுக்கு ஏங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதியை நேர்ப்பார்வை பார்த்தாள்.
அந்த பார்வையில் தான் எத்தனை பரிதவிப்பு, எத்தனை யாசகம், எத்தனை கெஞ்சல், எத்தனை கோபம், பயம் எல்லாம்.
அது அகானாவிற்கு திருப்தியைக் கொடுத்தது நிஜம். அவள் மனக் காயத்திற்கு மருந்தானது நிஜம். தன் தாய்க்கு ஏற்பட்ட கொடுமைக்கு, பதில் கொடுத்ததாக ஒரு ஆசுவாசம் பிறந்தது நிஜம்.
ஐசியுவின் கண்ணாடி வழியே உள்ளே உயிருக்குப் போராடிய உருவத்தைப் பார்த்தாள் அகானா. ஆக்சிஜனின் அளவு குறைந்து மூச்சுத் தினறல் ஏற்பட்டிருந்தது.
கண்கள் மின்ன, மனதில் ஒரு ஆசுவாசம் தன்னைப்போல உருவாக, மூச்சுத் திணறி, திணறி அந்த உயிர் பிரிவதை ஒருவித திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஆர்யன். அவள் தோலைத் தட்டிக் கொடுத்தபடியே நின்றிருந்தான்.
“நீ கிளம்பு அகி… சீனியர் இப்போ வந்துடுவார். உன்னைப் பார்த்தா டவுட் வரும். கிளம்பு..” என்றவனிடம் விழிகள் கலங்க விடைபெற்றவள் தன் ஐட்வென்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
விழிகளில் இருந்து நீர்ப்பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஒருவரின் இறப்பு அவளின் இத்தனை நாள் வலியையும், வேதனையையும் போக்கியதா என்றால் இல்லை என்பது தான் விடையே.
அப்படியென்றால் எதுதான் அவளின் வலியைப் போக்கும். வேதனையை நீக்கும்..
ரவியின் இழப்பா?