அகானா - 60
சரஸ்வதியின் இறுதி காரியங்கள் அவர் வீட்டில் நடந்து கொண்டிருந்தன. தாய்க்கு தலைப் பிள்ளை என்ற கூற்றின் படி ரவி தான் அவருக்கு அனைத்தும் செய்ய வேண்டியதாக இருந்தது. அதனால் சரஸ்வதியின் இழப்பை சுட்டிக்காட்டி அவரை பரோலில் எடுத்திருந்தான் ஆகன்.
நீதிமன்ற காவலில் இருப்பவர்களை பரோலில் விட முடியாது என்றாலும், இறந்தவர் தாய் என்பதால் ரவிக்கு பரோல் கிடைத்திருந்தது.
மகிழினியின் கணவன் என்ற முறையில் ஆரியன் அங்கு வந்து வெறும் ஆளாக மட்டுமே நின்றிருந்தான்.
சொந்த பந்தம், நண்பர்கள் என அனைவருமே அங்கிருக்க, மஞ்சரியும் அகானாவும் இல்லை. அவர்களின் சொந்தமும் இல்லை.
அவர்களை அழைக்கவே பயந்து போய் இருந்தார்கள் அனைவரும். ஆகனிடம் சொல்லலாம் என்றாலும் அவன் முகம் மிகவு இறுகிப் போயிருந்தது. அவனை நெருங்கவே பயந்து போனார் சங்கர்.
அதனால் அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்த்தார்.
வினோத்தும் ஒடுங்கி போய்விட, ரஞ்சனியும் தாயின் அருகில் அமர்ந்தவர் தான் அங்கிருந்து எழவே இல்லை.
மைதிலி ஆட்களுக்காக, சரஸ்வதியின் அருகில் அமர்ந்திருந்தார் அவ்வளவே. மற்றபடி எதிலும் கலந்து கொள்ளவில்லை. யாரிடமும் பேசவுமில்லை.
நித்யா தான் வழக்கம்போல அனைத்தையும் பார்க்க வேண்டியிருந்தது.
பேரன் பேத்திகள் நெய்பந்தம் எடுக்க அழைக்கப்பட, மகிழினியை அனுப்ப ஆரியனுக்கு விருப்பமே இல்லை. ஆனால் அது அவளின் விருப்பம், அதை தடை சொல்ல வேண்டாம் என நினைத்து அமைதியாகிவிட்டான். அதோடு மஞ்சரியும் அவனிடம் இதை சொல்லித்தான் அனுப்பியிருந்தார். அதனால் அமைதியாகவே அனைத்தையும் வேடிக்கை பார்த்தான்.
அப்போது ஒருவர் “எய்யா ரவி உன் பொண்ண காணோம்.. இன்னும் வரலயா?” என்றார் எதார்த்தமாக.
இப்போதெல்லாம் ரவி மிகவும் அமைதியாகிவிட்டார். அதனால் இப்போதும் அமைதியாகவே இருக்க “யாருக்கு யாரு பொண்ணு?” என ரஞ்சனி ஆத்திரமாக எழ,
“ஏன் இல்லன்னு வேற சொல்வியா?” என கர்ஜனையாக கேட்டவரை அனைவரும் அதிர்ந்து பார்க்க,
“சொல்லு இல்லன்னு வேற சொல்லுவியா?” என்றார் அதுவரை அமைதியாக இருந்த ரவி.
“ண்ணா.. என்ன பேசுற?” என ரஞ்சனி திகைத்து கேட்க,
“என்ன தப்பா பேசிட்டேன்.. அவ என்னோட பொண்ணு தான. அவங்க அம்மா என்னோட முன்னாள் மனைவி. அதை இல்லன்னு சொல்ல முடியுமா? யாராலயும் சொல்ல முடியாது..” என்று கர்ஜிக்க, ரஞ்சனிக்கு சர்வாங்கமும் அடங்கியது.
“அவ என் பொண்ணோ இல்லையோ, ஆனா உன் வீட்டு மருமகதான. அது உன் புத்திக்கு உரைக்கலயா? உன் பையன் வாழ்க்கை என்ன ஆனாலும் பரவால்லன்னு இப்படித்தான் பேசுவியா? இனி என்னோட வாழ்க்கைல உன்னோட தலையீடு எப்பவும் இருக்கக்கூடாது புரியுதா? இதுவரைக்கு என் வாழ்க்கையை நீங்க வாழ்ந்தது போதும். இனி நான் பார்த்துக்கிறேன்..” என்றார் ஆத்திரமாக.
“அண்ணா.. நான் அண்ணிக்காகத்தான்..” என மைதிலியைப் பார்த்து உள்ளே போன குரலில் விம்மியபடியே கூற,
“ஹ்ம்ம் அதுதான் எனக்குத் தெரியுமே.. இனி நான் பார்த்துக்கிறேன். உங்க அண்ணிக்கும் நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றார் அதே ஆத்திரத்துடன்.
“இப்பவே இங்கேயே உங்களால எனக்கு பதில் சொல்ல முடியுமா?” என ரவிக்கு எதிரில் நிதானமாக வந்து நின்றார் மைதிலி.
“கண்டிப்பா என்னால சொல்ல முடியும். ஆனா இந்த கூட்டத்துக்கு முன்னாடி உனக்குத்தான் அது அசிங்கமா போய்டும். உனக்கு பரவாயில்லன்னா எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. சொல்லட்டுமா?” என்றார் மைதிலியின் அதே நிதானத்துடன்.
அதில் மைதிலி கணவனை முறைத்துப் பார்க்க, சங்கர் தான் “மச்சான்.. இப்போ நடக்க வேண்டியதை பார்க்கலாம். மீதி கதையை அப்புறம் பார்த்துக்கலாம்.. இது சாவு வீடு. இங்க இந்த கீழ்த்தரமான பஞ்சாயத்து எல்லாம் வேண்டாம்.” என்று ரவியை சமாதானம் செய்து அழைத்துப் போக, அங்கிருந்த ஆரியனைப் பார்த்த ரவி “உங்க தங்கைக்கு போன் போட்டு வர சொல்லுங்க..” என்றார் கட்டளையாக.
ரவியிடம் இப்படியான குரலை இதுவரை யாருமே கேட்டதில்லை. முதல் முறையாக கேட்டவர்களுக்கு திகைப்பிற்கு மேல் திகைப்பு தான்.
“அவ இங்க வந்தா நான் இருக்க மாட்டேன்..” என கத்தினார் மைதிலி.
“அது உன்னோட விருப்பம். என் பொண்ணு அவ. இதுல அவளுக்கும் கடமை இருக்கு. அவ வந்து செய்வா..” என்றார் மைதிலிக்கு பதிலாக.
“நான் அந்த தப்பை செய்ய மாட்டேன் அங்கிள். எந்த காலத்துலயும் அகியை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன்..” என ஆரியும் பட்டென சொல்ல, உடனே ஆகனை திரும்பி பார்த்தார் ரவி.
அவன் பார்வையோ வேறெங்கோ இருக்க, “நான் போய் அழைச்சிட்டு வரேன்..” என ரவி கிளம்ப போக,
“அவங்க இங்க இல்ல மாமா.. இன்னைக்கு அம்முவுக்கு மதுரைல ஜோனல் மீட். சிஎம் வரார். ரெண்டு நாள் அங்கதான். அதுக்காக அத்தையையும் கூடவே கூட்டிட்டு போய்ட்டா..” என்றான் ஆகன் வெற்று குரலில்.
“ஓ..” என்றவருக்கு குரலே எழும்பவில்லை. அடுத்து எதுவும் பேசவில்லை. அமைதியாக மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துவிட,
சரஸ்வதிக்கு காரியங்கள் தொடங்க ஆரம்பித்தது. அப்போது ஒரு பெண்மணி “இவ பேச்சைக் கேட்டு அந்த நவீனுக்கு மாலினியை கொடுக்க மாட்டேன்னு சொல்றியே.. நீ எல்லாம் என்ன பொம்பள. உன் இன்னொரு பொண்ணு அந்த வீட்டுல தான பொழைக்குது. இதுவரைக்கு ஒரு சின்ன பிரச்சினைன்னு வந்து நின்னிருக்குமா? கவிதா எல்லாம் மாமியாரா கிடைக்க உன் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கனும். இப்போ வரை ராகினியைப் பத்தி ஒரு வார்த்தை குறை சொன்னது இல்ல தெரியுமா? அவ உன் வீட்டுல இருந்தத விட, அங்க நல்லா இருக்கா. இதுக்கு மேல உனக்கு என்ன வேணும். இன்னும் இந்த ரஞ்சனி பேச்சைக் கேட்டா நடுத்தெருவுல தான் நிக்கனும் பார்த்துக்கோ..” என மாலினியின் தாயை கடிய,
“நல்லா சொல்லுங்க பெரிம்மா.. அவங்க வீட்டுலயே அவங்களுக்கு மரியாதை இல்ல. இந்த மைதிலி அத்தை கூட சேர்ந்து தேவையில்லாம பேசி, எல்லாரும் ஒதுக்கி வச்சிட்டாங்க. ஆகன் அண்ணாவும், சங்கர் பெரிப்பாவும் அவங்களோட பேசுறதே இல்ல. மகி மொத்தமா ஒதுங்கிட்டா. இனி அவங்க பல்லு பிடுங்கின பாம்பு தான். எதாவது பேசினா கண்டிப்பா யாரும் சும்மா இருக்கமாட்டாங்க..” என மாலினி இடையில் பேச,
“நீ வாயை மூடு. பெரியவங்க பேசும் போது உனக்கு இங்க என்ன வேலை. போ.. போய் மகி கூட இரு. அவ கூட யாரும் இல்ல பாரு.” என விரட்டினார் அந்த பெரிம்மா.
அப்போதும் மாலினி நகராமல் இருக்க, “ம்ச்.. நம்ம பங்காளி பொண்ணு மகி. கண்டிப்பா நாம அவ கூட இருக்கனும். நீ போ..” என அதட்ட, ‘சரி’ என மகியிடம் சென்றுவிட்டாள் மாலினி.
“மாலினியும் சரி, அந்த பையன் நவீனும் சரி உங்க சம்மதத்துக்காக காத்துட்டு இருக்காங்க. அவங்களை ஏமாத்தாம சீக்கிரம் கல்யாணத்தை நடத்தி உங்க மரியாதையை காப்பாத்திக்க பாருங்க. ஏற்கனவே சின்ன பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சி வருசம் ஆகுது, இன்னும் பெரிய பொண்ணுக்கு முடிக்கல, என்ன பிரச்சினை? பொண்ணுக்கு எதுவும் குறையோன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. போக போக வேற மாதிரியும் பேசுவாங்க. இதெல்லாம் தேவையான்னு பார்த்துக்கோ.. சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க..” என்றார் அந்த பெரியம்மா.
“நானும் கொஞ்ச நாளா யோசிச்சிட்டு தான் இருக்கேன் க்கா.. ராகினிக்கும் ஏழு மாசம் தொடங்க போகுது. கவிதா அண்ணி வளைகாப்பு வைக்க எல்லாம் பேசிட்டு இருக்காங்க போல. ஃபங்க்சன் இங்க வச்சிட்டு, ராகினியை மஞ்சு வீட்டுக்கு அனுப்பலாம்னு பேசியிருக்காங்களாம்.” என வருத்தமாக கூற,
“நான் தான் சொன்னேனே.. அவங்க குணம் அப்படி.. நீ அதுக்கு முன்னாடி ஒரு நல்ல முடிவா எடு..”
“சரி க்கா..”
“ம்ம் சரி வா.. போய் ரஞ்சி கூட நிக்கலாம். இல்லைன்னா சங்கர் மாமா வருத்தப்படுவாங்க.”
“ம்ம் போலாம் க்கா..” என்ற இருவருமே ரஞ்சனியின் அருகில் சென்று நின்று கொண்டனர்.
பொதுவாக கிராமத்தில் வயதானவர்கள் இறந்துவிட்டால் பெரிய சாவு என்று கூறி திருவிழா போலதான் எடுத்து சென்று அடக்கம் செய்வார்கள்.
அனைவரிடமும் அத்தனை வருத்தங்கள் இருந்தாலும், சரஸ்வதியை சகல மரியாதையுடன் அனுப்ப வேண்டும் என முடிவு செய்தவர்கள், அதற்கு ஏற்றார் போலவே அனைத்தையும் செய்தார்கள்.
பறை அடிப்பவர்கள் ஒருபக்கம், கரகாட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, சரஸ்வதியை எடுத்து செல்லும் தேர் வண்டியை படகு போலவே பூவில் தயார் செய்து வைத்திருந்தனர்.
சரஸ்வதியின் உடன் பிறந்தவர்கள் கோடி துணி போட, அடுத்தடுத்து சம்மந்தக்காரர்களும் கோடி போட, காரியங்கள் தொடங்கி சரஸ்வதியின் உடலை எடுத்து தேரில் வைத்தனர்.
தேரை அந்த ஊர் இளைஞர்கள் தள்ளிக்கொண்டு செல்ல, அழகர் முன்னே நடக்க, அவருக்கு பின்னே ரவி கொள்ளிப் பானையோடு நடக்க, வினோத்தும் மற்றவர்களும் அவர்களுக்கு பின்ன நடந்தனர்.
இடுகாட்டில் ரஞ்சனி நீர்க்குடத்தை உடைத்ததும், பெண்கள் அனைவரும் அப்படியே வீடு திரும்ப, ஆண்கள் அனைவரும் மயானத்திற்கு சென்றனர்.
இங்கு மீட்டிங்கில் இருந்த அகானாவிற்கு, சரஸ்வதியின் இழப்பில் கொஞ்சமும் வருத்தமோ கலக்கமோ இல்லை.
ஆனால் ஆகன் கூறிய வார்த்தைகள் மட்டும் மனதை குடைந்து கொண்டிருந்தது.
“ஏன் அம்மு உன்னை நீயே கீழ இறக்கிக்கிற. நீ செஞ்சது மட்டும் அத்தைக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க. உன்னோட குணமே மாறிடுச்சோன்னு பயமா இருக்கு அம்மு. அவங்க உனக்கு வேண்டாம்னா அப்படியே ஒதுங்கிடு. அதை விட்டுட்டு கொலைகாரி பட்டம் வாங்காத.. மத்தவங்களுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா உன் மனசாட்சிக்கு தெரியும்ல. அது உன்னை நிம்மதியா தூங்க விடுமா.. பிரச்சினையை நீயே காம்ப்ளிகேட் பண்ணிக்கிறியோண்ணு தோணுது அம்மு..” என்றான் மித மிஞ்சிய வருத்தத்தில்.
அகானாவிற்குமே அதை நினைத்து லேசான குற்றவுணர்ச்சி இருக்கத்தான் செய்தது.
ஒரு உயிர் துடித்து துடித்து இறப்பதை கண் குளிர பார்த்து ரசித்த தன்னை நினைத்து அவளுக்கே பயமாகத்தான் இருந்தது.
இந்தளவிற்கு அரக்கியாக மாறிவிட்டோமோ? நம்மிடம் இருந்த அந்த இரக்கக் குணம் எங்கே போனது என அவளே யோசித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அந்த நேரத்தில் ஆகன் இப்படி பேசவும், அவன் மேல் கோபமெல்லாம் வரவில்லை. அவனும் கோபப்படவில்லையே. வருத்தமாக பேசி வைத்ததோடு சரி.
அதன் பிறகு இப்போது வரை அவன் அழைக்கவே இல்லை.
அங்கு என்ன நடக்கிறது என்று எதுவும் அவளுக்குத் தெரியாது. தெரியவும் விருப்பப்பட வில்லை. தன்னை அழைப்பார்களோ? என்று கூட நினைத்தாள் தான். ஆனால் ஆகனும், ஆரியனும் அதற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று புரிந்து சிரித்து கொண்டாள்.
‘ம்ம்..’ என பெருமூச்சுவிட்டு கண்ணை மூடியவளின் விழிகளில் ‘என் பையனுக்கு என்ன வேணும், வேண்டாம்னு எங்களை விட உனக்கு நல்லாத் தெரியுமா? அவன் கூப்பிட்டா உடனே ஓடி வந்துடுவியா? இதோ பிச்சிக்கிட்டு உங்களை விட்டு ஓடிவந்துட்டானே.. இப்போ என்ன செய்யப் போற.. அவக்கிட்ட இருந்து விடுதலை வாங்கிக் கொடுங்கன்னு கெஞ்சுறான். அத எப்படி எங்களால விட முடியும். நாங்க கொடுக்குற பணத்தை வாங்கிட்டு, இங்க இருந்து கிளம்பு..’ என நக்கலும், கிண்டலுமாக மஞ்சரியைப் பார்த்து பேசிய அழகரின் உருவம் வந்து போனது..
‘ஊப்ஸ்..’ என்றவள் சட்டேன விழிகளைத் திறந்து அங்கிருந்த நீரை எடுத்து அருந்தி, தன்னைத் தானே சமாதானம் ஆக்கிக் கொண்டாள்.
அதே நேரம் சரஸ்வதியின் சவத்திற்கு சிதை மூட்டி அனைவரும் வீடு திரும்ப, ஆகனின் கையைப் பிடித்தபடி வ்ந்து கொண்டிருந்த அழகரின் உடல் தன்னாலே தளர்ந்து விழுந்தது.