ஆயிழை -1
கதிரவன் தன்னை மறைத்து நிலவுமகளை வழியனுப்பிக் கொண்டிருந்தான். வானம் செவ்வானமாய்க் காட்சியளிக்க, இயற்கையில் உயிரினங்கள் தத்தம் கூடுகளுக்குள் அடையத் தொடங்கின. ஆனால் மனித மனங்கள் மட்டும் வீட்டில் ஒன்றும்நேரம் வேலைக்குச் செல்கின்றனர். வினோதம் தான்…
வாகன இரைச்சலினூடே ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட்களில் ஒரு வீட்டின் அறைக்குள் ஆடிக்கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி.
‘பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு’ என்ற பாடல் அவள் அறைக்குள் ஓட, அவளோ பலமாய் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்க, அதற்கு மாறாக ஒருவனோ
“மச்சான் பேரு மதுர… நீ நின்று பாரு எதிர” என்று பாடியபடி ஓடி வந்தான்.
“ கொய்யால… எசப்பாட்டா பாடுற…”என்று பெண்ணவள் முறைக்க,
“ எசப்பாட்டு இல்லடாவ்… எனக்கு மச்சான் வேணும்… அதனால உனக்கு அத்தான் பாத்துட்டு வந்திருக்கேன். கேட்ச் தி ஜேஸ்மின். போய் ஜோரா ரெடியாகிட்டு வா பாக்கலாம்…” என்று அவன் பாட்டிற்குச் சொல்ல, அவனை மேலிருந்து கீழாக நோக்கியவளோ
“ நீ அவ்வளவு நல்லவன் இல்லையே… உன் வழிய கிளியர் பண்ண என்னைய நோண்டுறியாடா பாடிசோடா…” என்றாள்.
“எப்படி வேணும்னா இருக்கட்டுமே… அதுல என்ன… இன்னைக்கு ஒரு குடும்பத்துல இருந்து பொண்ணு கேட்டு வர்ராங்க… அடக்கமா சேலை கட்டி நிக்குற… இந்த சம்பந்தம் நல்ல குடும்பமா தெரியுது. பேசி முடிக்கலாம்னு இருக்கோம்” என்றிட , அவர்களை அழுத்தமாகப் பார்த்தவள், ஒன்றும் கூறாமல் அலைபேசியை எடுத்து அதில் வலைதளங்களில் உலாவத் தொடங்கினாள்.
அவளின் தாயார் கலைவாணி “எஸ்தர்… எஸ்தர்…” என்றழைத்தார்
ஆம் அதுதான் அந்த யுவதியின் பெயர்.
“இப்ப எதுக்கு என் பெயரை ஏலம் விடுறீங்க…”
“நான்தான் சொல்றேன்ல… போய் குளிச்சு ரெடியாகு” என்றவர் முனைப்புடன் அறையை விட்டு வெளியேற, எஸ்தரின் பார்வை அவளுக்கு எதிரில் நின்றிருந்தவன்மேல் நிலைத்தது.
“ஹிஹி… சரி சரி அப்படி பாக்காத… இந்தப் பையனைப் பற்றி நானே விசாரிச்சுட்டேன். ஆல் கிளியர். உனக்கு ஏத்த வரனா இருக்கும். கட்டிக்கலாம்டி… இப்போதைக்குப் பாரு. உன் மனசுக்குப் பிடிச்சிருந்தா கட்டிக்கலாம். முடிவு உன் கையில்” என்றிட,
“சரி மாறா… எதோ நீயும் சொல்ற… பாக்கலாம்” என்றிட , அவனும் வாங்கி வந்திருந்த மல்லிகைப் பூவில் அவளிடம் கொடுத்தவன் கொஞ்சம் மட்டும் எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் எவரும் அறியாதே மறைத்து வைத்தான்.
எஸ்தர்… இருபத்து எட்டு வயது நிறைந்த யுவதி. அவளுடைய தாய்வழி பாட்டியின் விருப்பத்திற்கிணங்க வைக்கப்பட்டப் பெயர் தான் எஸ்தர். எஸ்தர் மகாராணி ஏழ்மையின் நிலையில் ஆதரவின்றி நின்றபோது கடவுளின் இரக்கத்தினால் உலகத்தின் பெரும்பங்கு இந்தியா உட்பட ஆண்டாராம். அதுபோல இவளும் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் ஒரு நாள் மிகுந்த இன்பத்தினால் நிறைந்து வாழவேண்டுமென ஆசீர்வதித்து அவளுக்கு எஸ்தர் என்று பெயரிட்டார்.
சுகுமாரன் கலைவாணி தம்பதியரின் மகளே எஸ்தர். எஸ்தர் மகாராணியைப் போல இவளின் இளமைப் பருவம் பலவித இன்னலினால் நிறைந்ததாய் இருப்பினும் இன்பம் நிறைந்த எதிர்காலம் ஒன்று உண்டோ என இறைவன் ஒருவனே அறிவான்.
மாறன்… எஸ்தரின் தம்பி என்றபோதும் இருவரும் இரட்டைப் பிறவிகள். பெற்ற தாய் தந்தையரை விட, உடன்பிறப்புகள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவுகடந்த பாசம். இப்போது இவ்வளவு போதும்.
அடுத்த இரு மணிநேரத்தில் பெண் பார்க்க ஒரு குடும்பம் ஒரு மகிழுந்தில் வந்திருந்தனர். ஒரு முதியவர், குடும்பத்தின் தலைவர் மற்றும் தலைவி, மகன், இன்னொருவர் இருந்தார். அவன் பையனின் நண்பராக இருக்கலாம்.
“பொண்ண அழைச்சுட்டு வாங்க” என மகனின் தாய் கூற, மாறனோ துள்ளிக் குதித்து எஸ்தரின் அறைக்குச் சென்றான்.
“எஸ்து… எஸ்து குட்டி… ஹேய் அழகா இருக்கடி… என்னடி பாக்க பொண்ணு போல இருக்குற… எத்தன கோட்டிங் மூஞ்சில அடிச்ச…” என்றவன் அவளைத் திருப்பித் திருப்பி பார்க்க, அவளோ எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் நின்றிருந்தாள்.
உண்மையில் அவள் அத்தனை அம்சமாக இருந்தாள். பச்சை வண்ணப் பட்டுப்புடவையில் ரோஜா நிற பாடர் வைத்து அணிந்திருந்தாள். தலை முடியை அழகாய்ப் பின்னி, மல்லிப் பூவைச் சூடியிருந்தாள்.
“எதயும் யோசிக்காமா வந்து மாப்பிள்ளையப் பாரு. எதுனாலும் உன் விருப்பம் பொறுத்து தான்” என்று கூறியவன் கையோடு அவளை அழைத்து வந்தான்.
‘பொண்ணு ரொம்ப லட்சணமா இருக்ககுறா..’
‘ பரவால ரொம்ப நல்லா இருக்கு’
‘பொண்ண உனக்கு பிடிக்கிருக்காடா’
‘பொண்ணு என்ன வேலைல இருக்குரளோ’
‘கல்யாணம் முடிஞ்சு வேலைக்கு போவாளோ’
கலவையான பேச்சுகள் அவர்களுக்கு உள்ளே நிகழ்ந்தன. அவங்களுக்கிடையான பேச்சுகள் முடிய, முதியவர் பேசத் தொடங்கினார். அதே நேரம் பையனின் முகம் நோக்க எஸ்தரைப் பிடித்ததற்கான அறிகுறி தான்.
“ பொண்ண எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. உங்களுக்கு எப்படியோ “ என்றிட, எஸ்தரின் தாய் உடனே
“எங்களுக்கு சம்மதம் தான்மா. எங்க விருப்பம் தான் எங்க பொண்ணோட விருப்பமும்கூட. இல்லையாமா…” என்று அவள் நீட்டி முழக்க, எஸ்தரோ பட்டெனத் பதிலைக் கூறியிருந்தாள்.
“ இல்ல”
“பையனைப் பிடிக்கலயாமா” அந்த முதியவரே பொறுமையாக விசாரிக்க,
“நான் அத சொல்லலைங்க ஐயா… என் பெற்றவங்க விருப்பம் தான் என் விருப்பம் னு சொல்றாங்களே, அதைச் சொல்லுறேன்” என்றவள் முகத்தில் பொறுமையும் அமைதியும் நிலையாய் குடியிருந்தது.
“சரிமா நான் கேக்குறேன். உனக்கு எங்க பையனை பிடிச்சிருக்கா. எங்கப் பையனைக் கட்டிக்க உனக்கு விருப்பமா…” என பொறுமையாய்க் கேட்டார் அந்த முதியவர்.
“பார்வைக்கு நல்லதா தெரியுற எல்லாமே வாழ்க்கைக்கு நல்லதா அமையும்னு சொல்ல முடியாதுங்களே…”
அவள் பேசுவதின் பொருள் மற்றவருக்குப் புரியாவிடினும் மாறனுக்கு நன்கு புரிந்திருந்தது.
மாறன் கலக்கமாய் நோக்க, முதியவரோ “ஆனா பார்வைக்கு அழகா இருக்குறது கெட்டதுனு கூட சொல்ல முடியாதேமா… அதுலாம் சரியா தான் வரும்.
என் கேள்வி உன் மனசுக்கு பிடிச்சிருக்கா… சரி கொஞ்சம் நாள் எடுத்துக்கோ. என் ஃபோன் நம்பரை தந்துட்டு போறேன். நீங்க எங்கனயாச்சும் விசாரிக்கணுமா… விசாரி.
உன் மனசுக்குப் பிடிக்கலனா கூட பரவால… அதையும் என்கிட்டயே சொல்லு. அப்ப வரோம் ங்க” என்றவர் மற்றவர்களுக்குக் கண்காட்ட, அனைவரும் கிளம்பியிருந்தனர். செல்லும்முன் மறக்காமல் அவரது அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு அவளின் எண்ணைப் பெற்றப்பின்னரே சென்றார்.
வந்தவர்கள் கிளம்பியிருக்க, எஸ்தர் அவள் அறைக்குச் சென்றிருந்தாள். அவளின் மனம் குழம்பிய நிலையில் இருக்க, கண்கள் கொடுத்துச் சென்ற அலைபேசி எண்ணிலேயே நிலைத்திருந்தது. அறைக்கு வெளியில் மாறனுக்கும் பெற்றோருக்கும் பஞ்சாயத்துப் போய்க் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அறைக்குள் வரலாம்.
‘ரொம்ப நல்ல குடும்பமா இருப்பாங்க போலவே… ஆனா நமக்கு தான் குடுத்து வச்சிருக்கோ என்னமோ தெரியல…
அது எப்படி முடியும். நம்ம நிலை தெரிந்தா துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடிர மாட்டாங்க. இங்க பாரு எஸ்தர். வாழ்க்கை முழுக்க நமக்கு நாம மட்டும் தான். மாறனோட வாழ்க்கையையும் பாக்கணும். நாம இங்க இருந்தா இவன் நம்மள அடுத்த வீட்டுக்குப் பேக் பண்ண பாத்துடுவாங்க.
ஆனாலும் நாம செஞ்சு வச்சுருக்க வேலை தெரிஞ்சா இவனே நம்மள உசுரோட புதைச்சுடுவானே. ஆத்தி எதுக்கு வம்பு. எதனா ஒரு வேலைய பாத்து ஓட வேண்டியதுதான்’
எண்ண அலைகள் ஏகத்துக்கும் ஏறி இறங்கினாலும் இறைவன் நிர்ணயித்த காரியங்கள் தானே இவ்வுலகில் நிகழும்.
****
“அப்பா என்ன நீங்க ஃபோன் நம்பர்லாம் குடுத்துட்டு வந்துருக்கீங்க. எங்களையும் பேச விடாம கண்ண காட்டிகிட்டு… “ பையனின் தாயார் கேட்டார்.
“ஏன் உங்களுக்குப் பொண்ண பிடிக்கலயா…” முதியவரும் விட்டுக்கொடுக்காமல் கேட்க,
“அப்படி ஒன்றும் ஸ்பெஷல் இல்லையே…” என்றார் பையனின் தந்தை.
“எத்தா கல்யாணி… உமக்கு எப்படியே தெரியல. ஆனா எனக்கு அந்தப் பிள்ளைய காரணமே இல்லாம நிரம்பப் பிடிச்சிருக்கு. அமைதியும் பொறுமையும் நிரம்பி இருக்கு. கண்ணால கட்டளையிட்டு வேலைய நடத்திடுவா போல…” முதியவர் எஸ்தரைக் கண்ட நிமிடத்தில் கணித்தவற்றை எடுத்துரைத்தார்.
உடன் வந்தவர்கள் முகத்தில் அப்படி பெரிதாக நிறைவு ஒன்றும் இல்லை. ஆனால் அதில் ஒருவன் மனம் மட்டும் வேறொரு கணக்கைப் போட்டது. அவனோடு விதியும் இணைந்து கொண்டால் இந்த சூழ்நிலையே தலைகீழாய் மாறுமோ…
***
“ உன்னோட நல்லதுக்குத் தானே நாங்க சொல்றோம். அது உனக்குப் புரியுதா இல்லையா…”
எஸ்தரின் அம்மா கலைவாணி திட்ட, அதற்கு மாறாக மாறனோ பாட்டு பாடியவண்ணம் ஆடத்தொடங்கினான்.
“உருட்டுங்க உருட்டுங்க
இன்னும் கொஞ்சம் உருட்டுங்க
உருட்டுங்க உருட்டுங்க
ஆடி பாடி உருட்டுங்க
உருட்டுங்க உருட்டுங்க
சந்தோஷமா உருட்டுங்க
உருட்டுங்க உருட்டுங்க
ஆர்ப்பாட்டமா உருட்டுங்க
உருட்டுங்க உருட்டுங்க
எட்டுத்திக்கிலும் உருட்டுங்க”
இது நம் மாறனின் வழமையானப் பாடல். அவனே உருவாக்கியப் பாடல். அவ்வப்பொழுது யாரையுனும் நக்கலடிக்க இந்தப் பாடலைப் பாடுவான். அதில் பெரும்பாலும் மாட்டுவது என்னவோ அவன் தந்தை சுகுமாரன் தான்.
“என்ன நக்கலா” அவளின் அப்பா சுகுமாரன் இடையில் நுழைய,
“நக்கல் இல்லப்பா பாட்டு பாட்டு… நல்லா இருக்குல இந்தப் பாட்டு…” என மாறன் ராகமாய் இழுக்க,
“வர வர உனக்கும் அவளுக்கும் கொழுப்பு கூடிப் போச்சு. வேலைக்குப் போறத் திமிரோ… பாத்துக்குறேன் இன்னும் எவ்வளவு நாளைக்குனு” என்றவர் தோளில் போட்டிருந்த துண்டை உதறிவிட்டு அறைக்குள் சென்றார்.
“நீங்க மட்டும் தான் செய்வீங்களா… நானும் செய்வேன்” என்றவன் அவரைப் போலவே செய்கிறேன் என்று செய்யத் தெரியாமல் துண்டை உதற, அதுவோ அவன் முதுகில் பலமாய் அடியைப் போட்டது.
வலி பின்னி எடுத்தாலும் ‘நல்ல வேளை யாரும் பாக்கல’ என சுற்றி சுற்றிப் பார்த்து பெருமூச்சுவிட, “நானு பாத்துட்டேன்” என்று கூறி சிரித்தபடி அறைக்குள் ஓடினாள் எஸ்தர்.
நாட்கள் வேகமாய் உருண்டோடி இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. மாறனே எஸ்தருக்காகப் பையனைப் பற்றி விசாரித்தான். விசாரித்தவரை தவறான ஒரு செய்தியும் இல்லை. பையனின் காவல்துறை வேலையைக் காரணம் காட்டி வேண்டாம் என்று விட்டாள்.
வந்திருந்த பையனின் பெயர் இளமாறன். எஸ்தரின் தம்பி பெயர் மணிமாறன். அந்த வகையில் பெயருக்காகவே தோழனாக்கிக் கொண்டான் நம் மணிமாறன்.
ஆனால் அந்த முதியவர் மட்டும் அடிக்கடி எஸ்தருடன் அலைபேசியில் பேசுவார்.
****
அன்று ஒருநாள் மணிமாறனும் இளமாறனும் சந்திக்கும்படி இருந்தது. சோழிங்கநல்லூர் வழியாக முதல்வரின் வாகனம் போவதாகக் கூறி காவலுக்கு நிறுத்தியிருந்தனர்.
அந்த நேரம் ஒரு மகிழுந்தில் ஒருவர் வழிவிடும்படியாகத் தகராறு செய்ய, காவலுக்கு நின்ற காவலர்களோ விடுவேனா என்பது போல நின்றிருந்தனர். இன்று பத்து உயிர்களின் இறப்பை விட ஒரு உயர் அதிகாரத்தில் இருப்பவரின் பாதுகாப்பு தானே இந்திய தேசத்தில் முக்கியமாக உள்ளது. பணமும் அதிகாரமும் இருப்பவர் பக்கம் தான் எல்லாமுமே போலும்.
“கொய்யல டேய் , மரியாதை கெட்டுரும் பாத்துக்க. ஒரு தடவை சொன்னா புரியாதாடா. லூசாடா நீ அப்படினு உங்களைப் பாத்துத் திட்டனும்னு தோணுது சார். ஆனா உங்கப் பதவிக்கும் வேலைக்கும் அது சரியா இருக்காதுங்களே…” என்று அடக்கமாக நிற்பதுபோல பாவனை செய்து வானநீல நிற செவிலியர் சீருடை அணிந்த பெண்ணொருத்தி நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அருகே சென்றனர் இருவரும். அதில் இளமாறன்,
“என்னமா வார்த்தையெல்லாம் வரம்பு மீறி வருது. எதுக்குக் கத்துறீங்க” என்றிட அருகிருந்த மணிமாறன் இளமாறன் காதில்,
“மாப்ள மாப்ள நான் கொஞ்சம் பெர்ஃபாமன்ஸ் பண்ண விட்ரா”
என்று பாவம் போல் மூஞ்சியை வைத்துக்கொண்டு சொல்ல, ‘கருமம் போய்த்தொலை’ என்பதுபோல பகிர்ந்துகொண்டான்.
“சொல்லுமா என்னப் பிரச்சனை” என்று அந்த யுவதியைப் பார்த்துக் கேட்க,
“யோவ் நீ யாருயா புதுசா. எத்தனை முறை தான் எக்ஸ்ப்ளென் பண்றது. உள்ள இரண்டு வயசானவங்க ஸ்ட்ரோக் அட்டாக் வந்து இருக்காங்க. இமிடியெட் ட்ரீட்மெண்ட் குடுக்கலனா பக்கவாதத்துல மொத்தமா படுக்குற நிலைதான். தயவுசெய்து வழிய விட்டுத் தொலைங்க” என்று கோபத்துடன் கத்த ஆரம்பித்தாள்.
அவள் சொன்னதை உறுதி செய்யும் வகையில் மகிழுந்தில் நோக்க, இரு முதியவர்களுக்கு முகத்தில் வாய் ஒருபக்கமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.
“இப்ப நம்புவீங்களா சார்”
ஒற்றைப் புருவம் வில்லென மேலேறி வளைந்து வார்த்தைகள் முன்பை விட இன்னமும் காட்டமாக வெளிவந்தது. ஆனால் மணிமாறனுக்கு என்னவோ ‘இத நீ செய்துதான் காட்டேன்’ என்பதுபோல் இருந்தது.
“இன்ஸ்பெக்டர் சார், கொஞ்சம் வழி விடுங்களேன்” என உரைத்தவன், பாதையை மாற்றி விட வைத்திருந்த தகரத்தினாலான தடுப்பு சட்டங்களை நீக்கி, மகிழுந்து செல்ல வழிவிட்டவன், அந்தப் பெண்ணைப் பார்த்து கண்ணிடித்து வசீகரமாய் சிரித்து வழியனுப்ப, இளமாறனோ ‘ஆ’வென வாயைப் பிளந்து பார்த்தான். பெண்ணவள் வழியைக் கடந்ததும் “க்ளோஸ் தி வாய்” என்றவன் அந்தத் தடுப்புகளை முன்புபோல் வழியை மறைத்து வைத்தான்.
வண்டி சென்ற சில நிமிடங்களில், அவனது உயர் அதிகாரி அலைபேசியில் அழைக்க, ‘இந்தா வந்துட்டாங்கல’ என முணுமுணுத்தவன் , அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்க, அந்தப் பக்கம் சரமாரியாகத் திட்டு விழத்தொடங்கியது. கடைசியில் அந்த உயரதிகாரியே
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மிஸ்டர். மணிமாறன், ஹையர் அஃபிஷியல்ஸ் போற நேரத்தில் இனிமே இப்படி நடந்தா சஸ்பென்ஷன் தான் உங்களுக்கு”
“ஓகே சார். பட் இனிமே பப்ளிக் வீடியோ எடுத்து நியூஸ் சேனலுக்கு அனுப்பினால், எங்க ஐயா தான் இப்படி செய்ய சொன்னாருனு சொல்லி, குட் பாய்யா உங்க கட்டளைக்கு ஒபே பண்ணி நிக்குறேன் சார்” என்றிட, அந்த அதிகாரிக்கு எதுவும் சொல்ல இயலாத நிலை. ஏனெனில் சிறுபிள்ளைத்தனமாகப் பார்ப்பதற்குத் தெரிந்தாலும் மணிமாறன் செய்யும் கூத்து அப்படிப்பட்டது.
“ஏன்டா இப்படி” என இளமாறன் சிரிப்புடன் விசாரிக்க,
“இவங்கள எல்லாம் நம்மால மிரட்டி அடக்கி இருத்த முடியாது. ஆனா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துல பயங்கரமா பண்ணலாம்ல” என்று கூறிச் சிரித்தான். ஆனால் இளமாறனுக்கோ மணிமாறனின் வார்த்தைகள் ஏனோ மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
“ஆமா எங்க அந்த நர்ஸ் பிள்ளை” என்று நோட்டமிட, “அந்தப் பிள்ளை அப்பவே கார்ல ஏறி போனாங்களே. நீயும் பாத்தியே. இப்ப எதுக்கு ஜோக்கர் வேஷம் போட்ர” என்று குறுகுறுவென நோக்க, அவனோ,
“போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே!
போறாளே போறாளே
காத்தோட தூத்தலப்போல’
ரோட்டில் வாகனங்களை ஒதுக்கி விட்டபடியே பாடலைப் பாட ஆரம்பித்தான் மணிமாறன்.
“என்ன மாறா… பாட்டு லாம் பலமா இருக்கு… அந்த நர்ஸ் பிள்ளைய ஏன் விசாரிக்குற. உன்னது என்னவாம் கதை”
“என் மிஸ்க்கு மிஸ்டர் ஆகி ஜாஸ்மின் வைக்க ஆசைப்படுறேன். ஆனா என் மிஸ் என்கிட்ட மிஸ்ஸிங் கேஸ் குடுக்குதே தவிர, மிஸ்ஸோட மிஸ்டர் பதவி தர மாட்டுது… டூ பேட்” என்று தன் பாட்டுக்குப் புலம்பினான்.
“என்னடா குழப்புற. யாரு ப்பா உன் மிஸ். உனக்கு மிஸஸ் ஆக மாட்டேன்னு ரொம்ப அடம் பண்ணுறாங்களோ. என்ன சப்ஜெக்ட் எடுக்குறாங்க. எந்த ஸ்கூல் டா. ஆனா இப்ப எதுக்கு சம்மந்தம் இல்லாம நர்ஸ் பிள்ளைய இழுத்த… ஓகே அதுல யார சைட்டடிக்குற… யார மிஸஸ் ஆக்கப் போற” ஆர்வமிகுதியில் இளமாறன் விசாரிக்க,
“பொறும பொறும பொறுமசாமி. ஒரு பதட்டத்துலயே இருக்கீங்களே. என் மிஸ் பாடம் எடுக்குற மிஸ் இல்லப்பா. அவுங்க என்னோட நர்ஸ் புள்ள. மிஸ்ஸு… என் மிஸ்பா பாப்பா”
“புரியலயே… அப்ப இந்த நர்ஸ் பிள்ளையா. உனக்கு இந்தப் பிள்ளையை முன்னவே தெரியுமா. உனக்குப் பொண்ணு தேடுற வேலையே உங்க வீட்டுக்கு இல்லைல”
“பொறுமையா இருப்பா. நான் எங்கேயும் பறந்துட மாட்டேன். என் லவ்ஸ் பெயர் மிஸ்பா” என்று கூறி வெட்கப்பட,
“மிஸ்பா. நல்லப் பெயர் தான். ஆனாலும் கருமாந்திரம் வெட்கப்படாதடா எப்பா… ஒன்னும் சொல்றதுக்கு” எனக் கூறி தலையிலடித்துக் கொண்டான்.
“உனக்குப் பொறாமை போடா”
“டேய் மணிமாறா… உன்ன மணியடிக்க விட்ருவேன் பாத்துக்க. ரொம்பத்தான் பண்ணுற”
“எனக்கு ஆளு இருக்கு நான் பெல்லு கூட அடிப்பேன். உனக்கு தான் ஒன்னுமே இல்லையடா தங்கப்புள்ள… யூ யாருக்கு பெல் ரிங்க் பண்ணுவ”
“கன்ராவி… ஒன்னு தமிழ்ல பேசு. இல்ல இங்கிலீஸ்ல பேசு. ஏன்டா மிக்ஸ் பண்ணி என் காதைக் கொடுமை பண்ணுற…” என்று கடுப்பாக இருப்பதுபோல இளமாறன் சொல்ல,
“காதல் கம்மிங்… உளறல் ஸ்டார்டிங்” என்று மீண்டும் அதே டோனில் பேசினான்.
“நீ எதையாவது உளரு” என்றவன் வெளியே கடுப்பாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் சிரிக்கத்தான் செய்தான்.
அதன் பின்னர் முதல்வர் அந்த வழியே சென்றபின்னர், தடுப்புகளை நீக்கி வழியை பொதுமக்கள் செல்லும் வகையில் சரிசெய்து சாலையில் பாதையை சீராக்கினர் இருவரும்.
அதற்கே நேரம் மாலையைத் தொட்டது. வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் நேரம்.
“சரி வா. உன்னை வீட்ல ட்ராப் பண்ணுறேன்” என்று அழைத்தான் இளமாறன்.
காலை வேளையில் வேலைக்குக் கிளம்பும் நேரம் மணிமாறனின் இருசக்கர வாகனம் சதி செய்தது. அதனால் இளமாறனின் வண்டியில் வந்திருந்தான். இனி வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என கரிசனையாய் அழைக்க, மணிமாறனோ தனது வாலில்ல குரங்கு சேட்டையை இளமாறனிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
“இது காதல் பேர்ட்ஸ் லவ் ஸ்கையில் பறந்து திரியும் நேரம். என்னைக் கொண்டுபோய் ஜே.கே.ஹாஸ்பிடலில் விடுங்க. எனக்கு லவ் ஃபீவர் வந்துருச்சு” என்று இளமாறனைக் கடியாக்கினான் மணிமாறன்.
“எனக்கு ஒரு சந்தேகம்… நல்லா தான் இருக்குற. திடீர்னு ஏன்டா வார்த்தைகளை மொழி கலந்து கலந்தே பேசுற… நான் வேணா நீயூரோ டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகவா” என்று கடுப்பில் வினவ,
“நோ நோ… என்ன கேசுவாலிட்டில இருக்குற நர்ஸ் கிட்ட கூட்டிட்டுப் போங்க. அவங்க தான் சட்டுனு டயக்னோஸ் பண்ணி இமீடியெட் சிகிட்சை கொடுப்பாங்க” என்றிட,
“கேசுவாலிட்டி நர்ஸ் தானேப்பா… இதோ நானே வந்துட்டேன். வர்றீங்களா ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றபடி ஸ்கூட்டியில் வந்து நின்றாள் எஸ்தர். அவளைக் கண்டதும் மணிமாறன் கண்களை உருட்டி திருதிருவென முழித்தபடி நிற்க,
“சாமி நடிச்சது போதும். இப்ப வண்டியில ஏறுறீங்களா” என்றிட, முகத்தில் பல பாவனைகளைக் காட்ட, அசருவேனா என்பது போல நின்றிருந்தாள் எஸ்தர்.
“சரி வேற வழியில்ல… டாட்டா பை பை சீயூ சூன்” என்று இளமாறனிடம் கூறியபடியே வண்டியில் ஏறி எஸ்தருக்குப் பின்னால் அமர்ந்தான் மணிமாறன். அவனின் சேட்டைக்கு எஸ்தர் திரும்பி ஒரு பார்வை பார்க்க, அவனது வாய் கப்சிப்பென மூடிக்கொண்டது.
‘அடங்குவேனா’ என்பதுபோல ஆடிக்கொண்டிருந்த மணிமாறன், எஸ்தரின் ஒற்றைப் பார்வைக்கு அடங்கியதை ஆச்சரியமாக நோக்கினான் இளமாறன்.
‘இந்தப் பொண்ணு பயங்கரமான ஆளுதான் போலவே’ என்று நினைத்துக் கொண்டவனோ, இதழில் புன்னகை விரிந்திட தன் இருசக்கர வாகனத்தில் ஏறி தன் வீட்டை நோக்கிப் பயணமானான். வீட்டில் அவன் தாத்தா அவனுக்கு வைத்திருக்கும் வெடிகுண்டைப் பற்றி அறியாதவனாக…
அவனோடு சேர்ந்து நாமும் காத்திருப்போம்.
ஆழுவாள் ஆயிழை…
- என்றும் உங்கள் அன்புடன்,
மருந்தாய் இனித்திடும்
இஞ்சி மிட்டாய்