• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆயிழை - 3

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
தாத்தா… தாத்தா…”

எஸ்தரின் அலறல் மட்டுமே நிறைந்திருந்தது.

“அக்கா... அவங்க நம்ம தாத்தா இல்ல. என்ன ஆச்சு உனக்கு”
எஸ்தரின் அலறலில் மணிமாறன் இடைபுகுந்தான்.

“என் தாத்தா இல்லையா. நீ பாத்தியா, அங்கப் பாரு நம்மத் தாத்தா” மிகுந்த ஆக்ரோஷமாக மீண்டும் அலறினாள்.

“சரிமா சரிமா நம்ம தாத்தா தான்‌”
மணிமாறன் அவளை அடக்க முயல,

“ஹலோ யாருக்கு யாரு தாத்தா” என்று அவர்களின் பேச்சில் இடை நுழைந்தான் அந்த வாலிபன்.


“அஜய்… நீ எங்க இங்க”

எஸ்தரின் அலறல் மீண்டும் அதிகமானது.

“தாத்தாக்கு என்ன ஆச்சு. என்ன விட்டுப் போயிடுவியா தாத்தா. மணி போக வேணாம்னு சொல்லுடா. என்னால என்னால… ஆ… என்னால இதுக்குமேல முடியாது. நான் செத்துப் போறேன். என்னால முடியாது” எனக் குழந்தையைப் போல அவள் அரற்றியவள், கண்ணையும் கணத்தில் ஆக்ரோஷமாகி மருத்துவமனையைவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தாள்.

“ஏ…ஏய் புடிங்கடா. அய்யோ… எஸ்தர்… அக்கா…”

“சிஸ்டர்…”

“ஏம்மா நில்லுமா…”

யாருடைய குரலுக்கும் அவள் செவிகொடுக்கத் தயாராக இல்லை.‌ ஓடிப்போனவள் தானாகவே உடல் தளர, ஒரு கல் தடுக்கி “பாப்பா” எனக் கத்தியபடி மயங்கி சரிந்தாள். விழுந்த வேகத்தில் கையிலும் முகத்திலும் கொஞ்சம் சிராய்வு ஏற்பட்டது. ஓடிச்சென்று தூக்கிக் கொண்டான் மணிமாறன். மருத்துவமனை பெட்டில் படுக்க வைத்துத் தண்ணி தெளிக்க எந்த பயனும் இல்லை.

“இல்ல அவங்கள இப்போதைக்கு விடுங்க” என்ற மிஸ்பா, மணிமாறனிடம் “அவங்க இந்த வீக் நல்லாதானே இருந்தாங்க. திடீர்னு வருற காரியம் இல்ல. நீ எதும் வேண்டா வேலை பார்த்தியா…” என்று கோபமாகக் கேட்டாள்.

“நான் என்ன பண்ணுனேன்” என்று புரியாமல் யோசித்தவன், “அக்காக்கு வரன் பாத்தேன்” என்றிட, கண்கள் விரியக் கேட்டவள் சட்டென இடம் மறந்து அவனை அறைந்தாள்.

“தங்கச்சி…”

இளமாறன் கண்டிக்கும் விதமாக அழைக்க,

“ நீங்க இதுல தலையிடாதீங்க” என இளமாறனைத் தடுத்தாள். அதற்குமேல் அவனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை.

“மற்றவங்களுக்கு வேணும்னா அவங்க நிலை தெரியாம இருக்கலாம். உனக்குக் கூடவா புரியாது” என்றவளுக்குக் கோபத்தில் மூச்சு வாங்கியது.

“ஹேய் உனக்கு என்னடி”
தமக்கை படுக்கையில் மூச்சு பேச்சில்லாமல் இருக்க இவளுக்கும் எதுவேனும் ஆகிவிட்டதோ என்ற பயம் அவனுக்கு.

“அய்யோ அப்படியே பதறுற மாதிரி நடிக்காத. உன் அக்காவோட நிலை என்னனு உனக்குக் தெரியாதா… எல்லாம் அந்த மூத்த ராங்கி ரங்கம்மா பண்ணுறதுதானே. கொய்யால டேய் உன்னைய…”

அவளுக்கு என்ன கோபமோ. இந்த நிலையில் எஸ்தரை இப்படிப் பார்க்கவும் மொத்த கோபமும் மணிமாறனின்புறம் திரும்பியது.

“அடேய் என்னடா சர்க்கஸ் காட்டுறீங்க. கொஞ்சம் முன்ன இந்தம்மா பளார்னு அறைஞ்சாங்க. துள்ளிட்டு திரியுற நீயும் பம்மிட்டு நிக்குற. ஆமா தலைவரே நீங்க டபிள் லாங்வேஜ்ல தானே பேசணும். என்ன சிங்கள் லாங்க்வேஜ்ல பேசுறீங்க. அதிசயம்தான்” இடைபுகுந்து மணிமாறனை நோண்டினான் இளமாறன்.

‘பத்தவச்சுட்டியே பரட்ட… ஆ…’
வெளியில் வாயைத் திறந்து சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டான்.

“இப்ப என்ன. இவன வெளுக்கணும் அவ்வளவு தானே. அது லாம் ஒரு மேட்டரா” என்ற மிஸ்பா சுற்றும் முற்றும் எதையோ தேட,

“ஏய் ஏய்… உன் டாமி தொங்கிடும்டி…”
வெளிரிய முகத்துடன் பயத்தில் அந்த அறையை விட்டு ஓட ஆரம்பித்தான்.

அவர்கள் இருந்தது கேசுவாலிட்டியில் இருந்த தனி சிகிச்சை அறை. அது சத்தம் வெளியே போகாதபடி இருக்கும் என்பதால் இவர்களின் களேபரம் வெளியே தெரியவில்லை. கூடவே சிகிட்சை பிரிவில் வேறு செவிலியர்கள் இருப்பதால் ஏதும் பிரச்சனை இல்லாதிருந்தது.

“என் டாமியா… எனக்கு ஏதுடா டாமி… சைடு கேப்புல உன் காதோல கடைபரப்பப் பாக்குறியோ. நடக்காது ராசா” என்றவள், கையில் கிடைத்த ஒரு கத்திரிக்கோலை எடுத்து எறிந்தாள். அந்த நிலையிலும் அவன் வாய் அடங்காமல்,

“கொலைகாரி உன்னப் பாத்து
உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி..
கொலைகாரி அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரி.. ஆஹா” என தனக்கு ஏற்றதுபோல பாடலை மாற்றிப் பாடியவன் அவள் கைகளுக்குச் சிக்காமல் ஓடி ஆட்டம் காட்டினான்.

“டேய் அக்கா மூச்சு பேச்சில்லாம கிடக்குறாளேனு தோணுதா… இந்த நிலைமைல கூட இப்படி சுத்துறீங்க… என்னமா… முதல்ல என்னமோ அவனை அந்தக் கிழி கிழிச்ச. இப்ப என்ன னா அவன்கூட டபிள்யூ டபிள்யூ சேம்பியன்ஷிப் ஆட்டம் ஆடுற… இல்ல எனக்குப் புரியல” எனக் குழப்பமாய் நோக்கினான்.

“நீங்க புதுசுல அதான் பதறுறீங்க… எங்களோட பதற்றமெல்லாம் அவங்களுக்கு அடிபட்டுருமோ ங்குறதுதான். வேணும்னா பாருங்க. கண் முழிக்கும்போது எந்த டென்ஷனும் இல்லாம நிதானமா எழுந்துப்பாங்க‌” என்றவள் திரும்பவும் மணிமாறனை அடிக்கும் வேலையை படுதீவிரமாகச் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் நேரத்தில் எஸ்தரிடம் சிறு அசைவு ஏற்பட
ஆரம்பித்தது.

அந்த நேரம் இளமாறனுக்கு ஒரு அழைப்புவர, மணிமாறனிடம்“டேய் மணி… எஸ்தர் கிட்ட அசைவு தெரியுது. சரி பாருங்க. எனக்கு ஒரு முக்கியமான கால் வருது. அப்புறம் வந்து அவங்களைப் பாத்துக்கிறேன்” என்றவன் உடனே கிளம்பினான்.

எல்லாவற்றையும் யோசித்தவர்கள் இளமாறன் எப்படி சரியான நேரத்தில் அங்கு வந்தான் என்பதை யோசிக்க மறந்தனர். அதுதான் இறைவன் வைத்த விதியாக இருக்குமோ…

*****

டொம்மென விழுந்து உடைந்தது கண்ணாடி மீன்தொட்டி ஒன்று.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க. அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நடவடிக்கைகள் போகுதாமே”

“என்ன இருந்தாலும்” பேச வந்த சுகுமாரனை இடைவெட்டி நிறுத்தினார் முதல் பேசிய நபர்.

“எம்மா ஜீவிதா.. அப்பாவைக் கொஞ்சம் பேச விடுமா…” கலைவாணி இடைபுகுந்தார்.

ஜீவிதா. சுகுமாரன் கலைவாணியின் முதல் மகள். அடுத்துப் பிறந்ததுதான் இந்த இரட்டையர்கள்.

பெற்றவர்களுக்கு ஜீவிதா என்றால் தனிப்பிரியம். மூத்த பிள்ளை மீது என்றும் பெற்றவருக்குத் தனிப்பிரியம் தானே. முதலில் தங்களைப் பெற்றோர் ஆக்கியவள்(ன்) என்ற அன்பு இருக்கத்தானே செய்யும்.

அவள் மீதும் அதே பிரியம் தான். ஆனால் அதுவே அளவுகடந்து பெற்றதோடு, அதற்காக அடுத்தப் பிள்ளையை பலிகொடுக்கவும் தயாராகி விட்டது‌ சுயபுத்தியில் அவர்கள் செய்த வேலையை விட, ஜீவிதாவின் கைப்பாவையில் ஆட்டுவிக்கப்பட்ட நாள்களே அதிகம். ஜீவிதாவின் இந்த குணத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டதென்றவோ எஸ்தர் தான்.

“கொஞ்சம் பொறு ஜீவி… நேரம் பாத்துதான் எதுனாலும் செய்யணும்” என்று ஜீவிதாவை சமாதானம் செய்யும் நோக்கில் பேசினார் சுகுமாரன்.


“இன்னும் எவ்வளவு நாள். அவள கல்யாணம் பண்ண விட்டுட்டு… ஆமா … நான் மணிமாறனை என் நாத்தனாருக்குத்தானே முடிக்கக் கேட்டேன். அது என்ன ஆச்சு”
அவளின் ஒவ்வொரு பேச்சுக்கும் பெற்றவர்கள் எச்சில் விழுங்க வேண்டியிருந்தது.

“அது… அவன் ஒத்துக்கலமா”
கலைவாணி சொல்ல, எரிச்சலுடன் திரும்பியவள்,

“எனக்குக் கல்யாணம் என்னைக் கேட்டா பண்ணுனீங்க. ஒழுங்கா சரி சொல்ல வைக்குறீங்க. அவ்வளவுதான்”

அவர்கள் பேசிக்கொண்டிருக்க வீட்டின் வாசலில் வண்டியில் ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.

“என் வீட்டுக்காரர் வந்துட்டாரு. நான் இப்பப் போறேன். ஆனா அடுத்த வாரம் வரும்போது எனக்கு சாதகமான பதில் வரணும்” என்றவள் கடகடவென வீட்டை விட்டு வெளியேறி வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.

அவள் வீட்டை விட்டுப் சென்ற பின்னரே நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

“என்னங்க பண்ணப் போறோம். இவ பண்ணுறதைப் பார்த்தா எஸ்தரைக் கல்யாணம் பண்ணி அனுப்ப விட மாட்டா போலவே… இவளுக்குனு ஒரு குடும்பம் வந்தா ஒதுங்குவானு பார்த்தா இப்பக்கூட எஸ்தரை விரட்டுறாளே…” என்று கலைவாணி கலக்கமாகக் கூற,
“எனக்கும் அதுதான்மா கவலை. அதோடு விட்டால் பரவாயில்லை. மணிமாறனையும் அவளோடு இழுத்துக்கப் பாக்குறாளே… அவ நாத்தனாரு வயசென்ன நம்ம மணி வயசென்ன…

சரி அத கூட விடு. இரண்டு கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்தையெல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிட்டுத் தனியா வந்தவளுக்கு என் மகனைக் கட்டி வைக்கக் கேக்குறாளே… இருக்குற நிலை தெரியாம இந்த எஸ்தர் வேற… ச்சை” என்று மனதில் உள்ளவற்றைக் கொட்டினார் சுகுமாரன்.


“இப்படி தானே அன்னைக்கு எஸ்தருக்கும் இருந்திருக்கும். எல்லாம் உங்களால வந்தது. நீங்க பண்ணுன பாவம் அதை முதல்ல ஜீவிதா மேல் இறக்குனீங்க. ஜீவிதா எஸ்தர் தலைல இறக்குனா. மூத்தவளுக்கு இதுவும் போதாதுனு இப்ப மணியை அவ வலைல இழுக்கப் பாக்குறா”

“பேசாம முடியாதுனு சொல்லிடலாமா… அவளோட ஆட்டத்துக்கு இன்னமும் இசைஞ்சு கொடுத்தா அவ நம்மளையும் வாழ விடமாட்டா…” என்று சுகுமாரன் யோசனையாகக் கேட்க,

“உங்களுக்குப் புரியுதா இல்லையா. அவ விரிச்சு வச்சுருக்குற வலைல போய் சிக்கவா… போய் ஜெயில்ல நீ களி தின்னுக்கோங்க”

“ஏய் ஏய் இந்த மீன்தொட்டியை க்ளீன் பண்ணுடி. இல்லனா மாறன் வேற வந்து சாமியாடுவான்”

“எவ்வளவு நாளு நானே செய்யணும்… நீங்க செஞ்ச பாவத்துக்கு நீங்களே அனுபவிங்க”

காட்டமாகக் கத்தியவர் அதற்குமேல் என்னவும் செய் என்பது போல அறைக்குள் நுழைந்து கொண்டார்.
கலைவாணி இனிமேல் கண்ணாடித் தொட்டியின் உடைசல்களை துடைத்து நீக்க மாட்டார் என்பதை உணர்ந்தவர்‌ தானே கழுவி துடைத்து மாற்றத் துவங்கினார்.

ஒரு பெற்றவராய் செய்யக்கூடாத வேலைகளைச் செய்துவிட்டு இப்போது பெற்ற மகளிடமிருந்து தப்பும் வழியறியாது முழித்துக் கொண்டிருக்கின்றனர் இருவரும்.


****

‘அப்சரா பேலஸ்’ அழகான எழுத்துக்களில் வீட்டின் முன்சுவரில் ஜொலித்துக் கொண்டிருந்தது. அது ஒரு அழகிய மாடி வீடுதான் என்றபோதும் அந்த வீட்டின் அழகியின் வேண்டுகோளின் பெயரில் இந்தப் பெயரை வைத்தனர் அந்த வீட்டினர்.

“தாத்தா… தாத்தா”
பதற்றத்துடன் வீட்டினுள் ஓடிவந்தான் இளமாறன்.

“இப்ப எதுக்குடா இந்தக் கத்து கத்துற”
பதற்றத்துடன் ஓடிவந்தவனை வழிமறித்தார் அவன் தாய் கல்யாணி.

“யாழிக்குட்டி எங்கமா. தாத்தா அவளுக்குத் திரும்ப உடம்பு முடியலனு கால் பண்ணுனாங்க”

“டேய் பதறாத. முதல்ல நிதானமாகு… அவளுக்குத் திரும்ப வலிப்பு வந்துடுச்சு. அதுனால ஜே.கே. ஹாஸ்பிடலுக்கு அவரும் அப்பாவும் கூட்டிட்டுப் போயிருக்காங்க”

மனம் நொந்துபோய் நாற்காலியில் அமர்ந்தான் இளமாறன்.

“டேய் கண்ணா…” அவன் நிலை கண்டு தாயவர் பதறி அழைக்க,

“என் பிள்ளையை என் கிட்டயிருந்து பிரிச்சுடுவீங்களா…" என்று ஏக்கமாகக் கேட்டான்.

“டேய் தம்பி… அவ நம்ம பிள்ளை இல்லடா. இன்னமும் நாம அவளைப் பெத்தவ கிட்ட கொடுக்காம விட்டால் பெத்தவ சாபம் நம்ம சும்மா விடாதுடா…நிதர்சனத்தை நீ ஏத்து தான் ஆகணும்” சற்று இறுக்கமாகவே பேசினார் கல்யாணி.

ஆனால் இளமாறனோ பரிதவிப்பு மாறாத குரலில் “அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்” என விசாரிக்க,

“அந்தக் குழந்தை இருந்தா அவனோட வாழ்க்கை இப்படியே முடிஞ்சுடுமேடா. புரிஞ்சுக்கடா… உன்னப்போல அவனும் வாழணும்டா…” என அவனை வாயடைக்க வைத்தார்.

ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் தேவதை அவள். திடீரெனத் தூக்கிக் கொடுக்க யாருக்கு மனம் வரும். ஆனால் கொடுக்கத்தான் வேண்டும்.

“ஆனா… என் பாப்..பா…”
இதற்குமேல் அவனிடம் என்ன சமாதானம் சொல்வதென அவருக்கும் தெரியவில்லை‌.

“உரியவ கிட்ட சேர்த்துதான் ஆகணும்… இப்பவே என்ன நிலையில இருக்காளோ அந்தப் பொண்ணு”

“தூக்கி எறிஞ்சு போனவங்களுக்கு எங்கேயிருந்து பிள்ளை போன வலி தெரிய போகுது”

சொற்கள் கோபத்தில் வெளிவந்தது இளமாறனிடமிருந்து.

“நீ சொல்லக் கூடாது இளா… அந்தப் பிள்ளைக்கு என்ன நிலையோ. தயவு செய்து விதண்டாவாதம் பண்ணாம போய்ப் படு. இதுக்குமேல எதுனாலும் தாத்தா வந்ததும் கேளு. இதுக்கெல்லாம் ஆரம்பப்புள்ளி வச்சது அவருதான்”

கோபமா வேதனையா எனப் பிரித்தறிய இயலாத குரலில் கல்யாணியின் வார்த்தைகள் வெளிவர, எதுவும் பேசாமல் தனது அறைக்குச் சென்றான் இளமாறன்.
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
என்னாச்சு எஸ்தருக்கு🤔 திடீருன்னு ஏன் இப்படி நடந்துக்கிட்டா? 🙄 ஏன் பாப்பான்னு சொல்லிட்டே மயங்கிட்டா🧐🤔 ஏதோ ரகசியம் இருக்கு 🧐

மிஸ்பா வெச்சு வெளுக்குறா🤣🤣🤣 அப்பவும் வாய் குறையல மணிமாறனுக்கு 🤣🤣🤣 ஒரே சேட்டை தான் 🤣🤣

டாடி சுகு என்ன கேடி வேலை செஞ்சு வெச்சாரு🧐

ராங்கி வந்து பீரங்கி மாதிரி குண்டு போட்டுட்டு போறா🤔 அப்படி என்ன கூடப்பிறந்தவ மேல வெறுப்பு🙄

யாழினி யாரோட பொண்ணு🤔 அவளோட அப்பா யாரு? இளமாறனுக்கு அண்ணா இருக்கானா? 🤔🙄

இளமாறன் அம்மா சொல்ற பொண்ணு ஒருவேளை எஸ்தரோ? 🙄🤔🧐😢

அடேய் ஒரே எபில எத்தனை கேள்விகள் முளைக்குது 🤣🤣

அடுத்த எபிக்கு வெயிட்டிங்❤️