• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆறுகளின் சங்கமத்திற்கு இனிய வாழ்த்துக்கள்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
465
வைகையின் வண்ண நதிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..


போட்டியில் பங்கு பெறும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
இன்று முதல் போட்டிகள் ஆராவாரமாகத் தொடங்கிவிட்டன. போட்டியில் வெற்றி பெற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
எழுதுங்கள்,... வெல்லுங்கள்..

1649915130308.png✍️வள்ளல் நதி❤️
துள்ளல் கொண்டு
உங்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு பள்ளி
கொள்ளப்போகும் வள்ளல்நதி!

✍️பாலாறு❤️
அன்பின் பால், நட்பின் பால்
வாசகர்களின் இதயத்தில் பொங்கி எழுந்து நிறையப் போகும் பாலாறு!

✍️மஞ்சளாறு❤️
பொங்கியெழும் பொன்னிறத்தோடு,
உங்களிடையே தங்கி விளையாடப் போகும் மஞ்சளாறு!

✍️சிறுவாணி ஆறு❤️
சிறுக சிறுக சேர்த்து வைத்த துளிகளை பெரு வெள்ளமாய் உங்களிடையே ஆர்ப்பரித்துக் கொட்ட போகிறது சிறுவாணி ஆறு!

✍️சுருளியாறு❤️
சுற்றும் உலகத்தை சுருட்டி, உங்களிடையே மிரட்ட வருகிறது சுருளியாறு!

✍️தாமிரபரணி❤️
தரணி எல்லாம் சுற்றி பரணி பாடப் போகிறது தாமிரபரணி!

✍️மருதா நதி❤️
மனம் கொள்ளும் மாருதக் காற்றுடன்
மருட்ட வருகிறது மருதாநதி !

✍️முல்லை ஆறு❤️
கிள்ளை மொழி பேசும் பிள்ளையாய் தத்தித் தாவி இதயம் அள்ள வருகிறது முல்லையாறு!

✍️அமராவதி ஆறு❤️
இதயத்தின் அறைகளைத் தயார் செய்து வையுங்கள்!
அங்கே அமர வருகிறது அமராவதி நதி!

✍️தேநியாறு❤️
குளு குளு தென்றல் காற்றுடன்,
பூக்களின் நறுமணம் கமழ்ந்து இனிப்புடன் உங்களோடு கலக்க வருகிறது தேனியாறு!

✍️வராஹ நதி❤️
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தால்...
நதி தாங்கும் ஓடமாய் உங்களை தாங்கிச் செல்லுமே,
உங்கள் வராக நதி!

✍️கலிக்கவையாறு❤️
தான் கடந்து வந்த பாதையெல்லாம் பூக்களை சுமந்து வந்து உங்களை பூஜிக்க போகிறது கலிக்கவையாறு

✍️பஃறுளி ஆறு❤️
ஆர்ப்பரிக்கும் அருவிபோல், உங்களிடையே தாவி ஓடி ஆட வருகிறது பஃறுளி ஆறு!

✍️மணிமுத்தாறு❤️
சத்தமில்லா மணி முத்தங்களுடன் உங்கள் மணிமுத்தாறு!

✍️பச்சை ஆறு❤️
இச்சை கொண்ட அன்பு கலந்த பாசத்துடன் உங்கள்
பச்சை ஆறு!

✍️மூங்கிலாறு❤️
துளையிட்ட மூங்கில் ராகம் சுமந்து வருவது போல், உங்கள் உள்ளங்களை துளையிட்டு ராகம் மீட்ட வருகிறது மூங்கிலாறு!

✍️சோலையாறு❤️
காலை மாலை பூத்துக்குலுங்கும் சோலை போல்,
உங்கள் உள்ளங்களையும் சோலையாக்க வருகிறது சோலையாறு!

✍️கிருதுமலாறு❤️
உங்களை அன்பில் கிறுகிறுக்க வைக்க வருகிறது கிருதுமாலாறு!

✍️அர்ஜுனா நதி❤️
வில்லாய் வளைந்து சொல்லால் நிறைக்க வருகிறது அர்ஜுனா நதி!

✍️வெண்ணாறு❤️
வெண்மணி சதங்கை போல் கிண்கிணி இசைக்க வருகிறது வெண்ணாறு!

✍️பொருணை நதி❤️
வருணனைக் கொண்டு வர்ணம் பூசி வண்ணமயமாய் வருகிறது பொருணை நதி!

✍️பொன்னி நதி❤️
மண்ணிலிருந்து விண்ணிற்கும்,
விண்ணிலிருந்து மண்ணிற்கும் உங்களுக்கு பாலம் அமைக்க போகிறது பொன்னி நதி!

✍️சாத்தையாறு❤️
வார்த்தைகள் கொண்டு வளைக்க வருகிறது சாத்தையாறு!

✍️வெள்ளி நதி❤️
உருக்கி வைத்த வெள்ளி போல் உங்கள் உள்ளங்களை உருக வைக்க வருகிறது வெள்ளி நதி!

✍️சிறுமலையாறு❤️
குளிர்ந்திடும் குளிர்க் காற்றை மலைக் காற்றோடு சேர்த்து ராகம் மீட்ட வருகிறது சிறுமலையாறு!

✍️நொய்யலாறு❤️
உங்கள் மனதில் அன்பென்னும் இழை கொண்டு நெய்ய வருகிறது
நொய்யலாறு!

✍️செய்யாறு❤️
சொல்லாத சொல்லால் எழுதாத எழுத்தால் வசியம் செய்ய வருகிறது செய்யாறு!

✍️பறம்பாறு❤️
புறம் சென்ற அன்பை எல்லாம் அகத்தில் அடைக்க வருகிறது பறம்பாறு!

✍️கெடிலம் ஆறு❤️
உங்கள் அன்பெனும் பள்ளத்தில் வெள்ளமெனப் பாய்ந்து வருகிறது கெடிலம் ஆறு!

✍️அரசலாறு❤️
உங்களை ஆண்டு அரசாள வருகிறது அரசலாறு!

✍️பவானி ஆறு❤️
வா நீ என்றதும் வந்திட்டு, தா நீ என்று உங்கள் இதயங்களை களவாட வருகிறது பவானி ஆறு!

✍️கொட்டக்குடி ஆறு❤️
சொட்டச் சொட்ட நட்பு மழையோடு,
உங்கள் இதய வானில் கொட்ட வருகிறது கொட்டக்குடி ஆறு!

✍️உப்பாறு❤️
உப்பாறு தப்பாது உங்கள் உள்ளம் நிறைக்கும்!

✍️தென்பெண்ணை ஆறு❤️
விழி வழி நுழைந்து,
இதயத் துளை துளைக்க வருகிறது தென்பெண்ணை ஆறு!

✍️வட்டாறு❤️
உங்களை வட்டமிட்டு கட்டம் கட்ட வருகிறது வட்டாறு!

✍️வாணியாறு❤️
வந்தேன் என்று வந்து,
தந்தேன் என்று எழுத்து வெள்ளம் சுமந்துவரும் வாணியாறு!

✍️சங்கரபரணி ஆறு❤️
தரணி எங்கும் சக்கரம் போல் சுற்றி பரணி பாடி உங்களை வளைக்க வருகிறது சங்கரபரணி ஆறு!

✍️சின்னாறு❤️
சின்னச் சின்ன ஆசைகளை,
வண்ண வண்ண கனவுகளோடு மின்ன மின்ன சுமந்து வருகிறது சின்னாறு!

✍️நம்பி ஆறு❤️
தும்பி போல் மலர்த் தேனை சுமந்து வருகிறது நம்பி ஆறு!

✍️அனுமன் நதி❤️
அணுவைத் துளைத்து அதில் அத்தியாயம் படைத்து, அதை உங்கள் உள்ளங்களில் வெடித்து பூக்க வைக்க வருகிறது அனுமன் நதி!

✍️கருமேனி ஆறு❤️
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாசகர்களை வசியம் செய்ய வருகிறது கருமேனி ஆறு!

✍️அக்னியார் நதி❤️
கொதித்திடும் உள்ளங்களையும் குளிர்ந்தெழச் செய்ய வருகிறது அக்கனியார் நதி!
 
Top