• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-14

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
111
43
Maduravoyal
இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-14
ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு சென்றபின் இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருந்தாள் ரேஷ்மி.
கனகவள்ளியும் ஒரு வாரம் லீவு கேட்டு வீட்டில் ரேஷ்மியுடன் இருந்தாள்.
அம்மா.... அப்பா கிட்ட சொல்லிட்டீங்களா?
கண்கள் கலங்கிய வாரே.... இல்ல என்றாள்.
அப்பா ஆஃபீஸூக்கு கிளம்பிட்டாரா?
கிளம்பிட்டாரு. ரெண்டு நாள் லீவு முடிஞ்சு இன்னைக்கு காலைல தான் ஆஃபீஸூக்கு போயிருக்காரு.
இன்னைக்கு சாயந்திரம் அப்பா வீட்டுக்கு வந்ததும் சொல்லிடுங்க.... என்று தொண்டையை கருமியவாறே கூறினாள் ரேஷ்மி
வேணாம் டி.... அப்பா ஹார்ட்டு பேஷன்ட் ன்னு உனக்கு தெரியும் இல்ல?.... அப்புறம் எதுக்கு சொல்ல சொல்ற....
அம்மா... அப்பா கிட்ட உண்மையை மறச்சிருக்கோம்ன்னு தெரிஞ்சா.... அதை தான் அப்பாவால தாங்கிக்க முடியாது.
ஹூம்....சரி.... நேரம் பார்த்து சொல்றேன்.
ராகவிற்கு ராபர்ட் கால் செய்தான்.
சார் ப்ஃரியா இருந்தீங்கன்னா என்னோட ஆஃபீஸூக்கு வர முடியுமா?
ஒன் ஹவர்ல இருப்பேன்.... என்றான் ராகவ்.
டிடெக்டிவ் ஏஜென்சி ஆஃபீஸில்....
சொல்லுங்க ராபர்ட்...
சார்.... அந்த ஜூஸ் உங்க தங்கச்சிக்கு கலந்தது இல்ல....
வாட்.... அப்போ யாருக்கு?
உங்க அப்பாவுக்கு....
என்னது என்னோட அப்பாவுக்கா?.... அவருக்கு யாரும் எதிரிகள் இல்லையே....
அவன் உங்க அப்பா கொல்லனும் நினைக்கல.... அதை வச்சி அவன் எதிரியா இருப்பான்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது. உங்க அப்பாவால தெரிஞ்சோ தெரியாமலையோ பாதிக்கப்பட்ட ஒரு ஆள் தான் செஞ்சிருக்கனும் நினைக்கிறேன்....
ஆனா....எங்க அப்பா தெரியாம கூட யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டார்.... சரி.... இந்த டீடெயில்ஸ் எப்படி கிடைச்சது?
அந்த சர்வர் கிட்ட யாரோ கணேஷ் ன்னு ஒருத்தன் பணம் கொடுத்து உங்க அப்பாவ அசிங்க படுத்த சொல்லி இருக்கான்.
அவனோட டீடெயில்ஸ் தெரிஞ்சுதா?
இல்ல.... அவன் யூஸ் பண்ண நம்பர் கூட ஃபேக்.... பிளான் பண்ணி தான் செஞ்சிருக்கான். கணேஷ் ன்னு சொன்ன நேம் கூட ரியலா ன்னு தெரியல.... இவனை பார்த்து நேரா பேசிதான் பிரைப் பண்ணிருக்கான்.
அப்போ.... நேரா பார்த்தா....அந்த சர்வர் சொல்லுவானா?
இருங்க.... அதான் சொல்ல வரேன்.... அவன் ஹெல்மட் அப்புறம் மாஸ்க் போட்டுக்கொண்டு இருந்திருக்கான். அவனை நேரா பார்த்தாலும் அந்த சர்வரால கண்டுபிடிக்க முடியாது.
சே..... என்று சலித்து கொண்டான் ராகவ்.
வேற எதாவது தெரிஞ்சா சொல்றேன். இப்போதைக்கு உங்க அப்பாவை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க....
ஓகே ராபர்ட்.... தேங்க்ஸ். நான் பேமென்ட் உங்களுக்கு கூகுள் பே பண்ணிடறேன்.
ஓகே.... தேங்க்ஸ்.... பை... என்றான் ராபர்ட்.
மாலை 6.30
வீட்டிற்கு வந்தான் ராகவ். ரேஷ்மி அழுதுகொண்டு இருக்கும் சப்தம் கேட்டது.
ரூம் கதவு தட்டும் சப்தம் கேட்டு ரேஷ்மி கண்களை துடைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
வா அண்ணா.... என்றாள்.
இப்போ எப்படி டி இருக்க?
பரவாயில்ல அண்ணா....
அப்போது ராஜசேகரும் வந்தார்.
எப்படி மா இருக்க?... என்றார்.
இப்போ பரவாயில்ல அப்பா.... என்றாள் ரேஷ்மி.
சரிம்மா... நீ ரெஸ்ட் எடு.... என்று சொல்லி திரும்பியவரை...
அப்பா என்று அழைத்தாள் ரேஷ்மி.
அதற்குள் கனகவள்ளி காஃபி கொண்டு வர அனைவரும் அங்கேயே அமர்ந்து காஃபி குடித்தனர்.
அப்போது ரேஷ்மி
அப்பா.... உங்க கிட்ட ஒரு விஷயம் அம்மா சொல்லுவாங்க.... அதை கேட்டு நீங்க.... என்று சொல்லும் போதே அவளுக்கு அழுகை வந்தது.
என்னம்மா.... என்னாச்சு.... என்று அவளருகில் சென்று அவள் தோளை தடவி கேட்டார்.
ஒரு நிமிஷம் வாங்க என்று சொல்லி அவர்களுடைய ரூமிற்கு அழைத்து சென்றாள் கனகவள்ளி.
ஆதரவாக தன் அண்ணன் தோளில் சாய்ந்து கொண்டாள். ராகவ் அவளுடைய தலையை கோதினாள்.
அண்ணா.... நான் தான் அம்மாவை அப்பா கிட்ட சொல்ல சொன்னேன்.
எனக்கு தெரியும். அம்மா எனக்கு ஃபோன் பண்ணி கேட்டாங்க.... நானும் சொல்ல சொன்னேன்.
அழுகை வர அவனுடைய தோளில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவன் யாருன்னு மட்டும் தெரியட்டும்.... அவனை கண்டதுண்டமா வெட்டி போட்டு விடுவேன்.... என்றான் ராகவ்.
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு வந்தார் ராஜசேகர்.
கண்கள் சிவந்து கலங்கி இருந்தது.
அப்பா.... என்று அழத் தொடங்கினாள் ரேஷ்மி.
அவளை நிமிர்ந்து கூட பார்க்க திராணி இல்லாமல் குனிந்த தலையுடன் அழத் தொடங்கினார் ராஜசேகர்.
அப்பா... என்று ராகவ் எழுந்து சென்று அவரை சமாதானம் செய்ய நினைத்தான்.
ஆனால்.... அவரின் அழுகை நிற்கவில்லை. கனகவள்ளி ரேஷ்மி எவ்வளவோ சொல்லியும் அவர் அழுகை நிற்கவில்லை. மூன்று நாட்களாக கனகவள்ளியும் ரேஷ்மியும் யாருக்கும் தெரியாமல் அழுது அழுது தீர்த்தனர். இப்போது ராஜசேகர் அழுகை தொடங்கியது. அவரை பார்த்து மற்ற மூவருக்கும் அழுகை வர.... அவர் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டார்.
பிறகு ராகவிடம்....
இப்போ என்னப்பா பண்றது....என்றார்.
அப்பா.... நீங்க கவலைப் படாதீங்க.... நான் பாத்துக்கிறேன்.... என்றான் ராகவ்.
ராகவ் ராஜசேகரிடம் யாராவது உங்களுக்கு ஆஃபீஸில் எதிரிகள் இருக்கிறார்களா? என்று கேட்க நினைத்தான். பின்னர் அவர் அந்த ஜூஸை தான் குடித்திருந்தாலே பரவாயில்ல ரேஷ்மி குடித்ததால் தான் இவ்வளவு பெரிய இழப்பு என்று நினைத்து இன்னும் அழுது அவருடைய உடம்பை கெடுத்து கொள்வார் என்று நினைத்து பேசாமல் இருந்தான் ராகவ்.
ராகவ் ஃபோன் அடித்தது. வைஷாலி கால் செய்தாள்.
வெளியே வந்து அவளிடம் பேசினான்.
எல்லாரும் எப்படி இருக்காங்க?
ஹூம்...
நீங்க?...
ஹூம்....
என்ன முடிவு பண்ணிருக்கீங்க?
நான் சட்டப்படி போகல.... அவன் யாருன்னு கண்டு பிடிச்சு....அவனை என் கையால்.....
ராகவ்.... பிளீஸ் டென்ஷன் ஆகாதீங்க.... நான் எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பேன்.....
வைஷாலி பேசுவதை கேட்டார் ராமகிருஷ்ணன். இதற்கு மேல் இப்படியே விடக்கூடாது. ராஜசேகரிடம் நாளை நாம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
திரும்பி அவர் ரூமுக்கு செல்லும் போது விஷ்வா வின் அறையிலிருந்து அழுகுரல் கேட்டது.
அவனுடைய ரூம் கதவை தட்ட நினைத்தவர் அவன் பேசுவதை கேட்டு நிறுத்தினார்.
ரேஷ்மியின் புகைப்படத்தை பார்த்து....
ஏய் நான் உன்னை எவ்ளோ சின்சியரா லவ் பண்றேன் தெரியுமா டி?.... ஏன்டி உனக்கு என்னை பிடிக்கல.... இல்ல நான் என் காதலை உன் கிட்ட சொல்லவே இல்லையே.... சொல்லி இருந்தா என்னை உனக்கு பிடிச்சிருக்குமா? ஆனா நீ தான் அந்த மதனை காதலிக்கிறேன்னு என் கிட்டயே சொல்லிட்டியே..... நான் என் காதலை சொல்லி இருந்தாலும் நீ என்னை ரிஜெக்ட் தான் பண்ணிருப்ப.... ஹாஹா ஹா ‌.... என்று சிரித்தான்.... பின்னர்..... இப்போ உன்னால என்னை ரிஜெக்ட் பண்ண முடியாதே..... ஹா ஹா.... ஹா ஹா...
ஏன் இவ்வாறு சிரிக்கிறான் என்று யோசித்தார் ராமகிருஷ்ணன்.
ஆனா.... ஸாரி ரேஷ்மி ‌.... உனக்காக அந்த ஜூஸ்ல நான் டிரக்ஸ் கலக்கல..... உங்க அப்பாவுக்கு தான் கலந்தேன். அவரு என்னை என் அப்பா கிட்ட போட்டுக் கொடுத்துட்டாரு.... ஆனா உங்க அப்பான்னு தெரிஞ்சதும் அவர் குடிக்க கூடாதுன்னு தான் நான் வந்து அந்த ஜூஸை வாங்கிக் கிட்டேன்.... ஆனா அந்த சர்வர் இன்னொரு பொட்டலம் வச்சிருந்தான்னு எனக்கு தெரியாது.... அதை நீ குடிப்பன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை.....
அடப்பாவி.... தப்புக்கு மேல தப்பு பண்ணி இருக்கானே..... இவனை.... என்று சொல்லி தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவன் பேசுவதை கேட்டு கொண்டு நின்றுக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
ஆனா நீ குடிச்சதும் நல்லதுக்கு தான். இல்லன்னா நான் உன்னை இவ்வளோ ஈஸியா ரேப் பண்ணிருக்க முடியாது. ஹா ஹா....
இதற்கு மேல் கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்க முடியாமல் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து கதவை தாழிட்டு டிவியை சவுண்டாக வைத்து விட்டு அவனை அடித்து உதைத்தார்.
நீ எப்படி டா எனக்கு பையனா பொறந்த? சீ.... இவ்வளோ மோசமானவனா நீ.... உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கவே என் வாய் கூசுது.....
அவர் அடித்த அடியில் அவன் போதை தெளிந்தது.
அப்பா... என்னை மன்னிச்சிடுங்க..... தெரியாம தப்பு பண்ணிட்டேன்..... நான் அவளை சின்ஸியரா லவ் பண்றேன்.... அவளை நான் கல்யாணம் பண்ணிக்கனும் ன்னா அதுக்கு ஒரே வழி ன்னு தப்பா என் மனசு யோசிச்சிடிச்சு.... என்னை மன்னிச்சிடுங்க அப்பா என்று அவர் காலில் விழுந்து அழுதான்.
ராமகிருஷ்ணன் சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு விஷ்வா விடம்....
இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது.... மவனே இந்த மாதிரி தண்ணியை போட்டு கிட்டு உளறி யாரு காதுலயாவது போச்சுன்னு தெரிஞ்சுது.... உன்னை நானே கொன்று போட்டிடுவேன். நான் சொல்ற வரைக்கும் நீ கெஸ்ட் ஹவுஸ் போயிரு.... அம்மாவோ வைஷூவோ கால் பண்ணா பிராஜெக்ட் விஷயமா பெங்களூர் ல இருக்கன்னு சொல்லு.... இதை தவிர வேறு எதுவும் பேச கூடாது.... என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
உடம்பெல்லாம் நன்றாக அடித்து விட்டார் ராமகிருஷ்ணன். வலி தாங்காமல் அழுதான் விஷ்வா.... பின்னர் சிறிது நேரம் கழித்து அவன் அப்பா கூறியது போல
வீட்டின் பின் வழியாக கெஸ்ட் ஹவுஸூக்கு கால் டாக்ஸி புக் செய்து சென்றான்.

மாடிக்கு வந்த ராமகிருஷ்ணன் இதற்கு மேல் தாமதிக்க கூடாது என்று நினைத்து ராஜசேகருக்கு கால் செய்தார்.
சொல்லுங்க சார்.... என்றார் ராஜசேகர்.
ராஜசேகர்.... நான் சொல்ற அட்ரஸூக்கு வரமுடியுமா?
இப்ப வா சார்?
ஆமாம்....
சரி சார்.... என் பையன் ராகவை கூட்டிக்கிட்டு வரேன்.
இல்ல ராஜசேகர்.... நீங்க மட்டும் தனியா வாங்க பிளீஸ்....
என்னாச்சு சார்....
நேரா பேசலாம் வாங்க.... பட்ஜெட் பிளானிங் ன்னு வீட்ல சொல்லிட்டு வாங்க....
சிறிது யோசித்தவர்....ஓகே சார்.... என்று சொல்லி ராகவிடம் கால் டாக்ஸி புக் செய்ய சொல்லி அவ்விடம் வந்து சேர்ந்தார்.
அது ராமகிருஷ்ணனின் பட்ஜெட் பிளானிங் செய்யப் படும் வழக்கமான கெஸ்ட் ஹவுஸ். ஆகையால் ராகவிற்கு சந்தேகம் வரவில்லை.
முன்னமே அவ்விடத்தில் இருந்த ராமகிருஷ்ணன்....
வாங்க ராஜசேகர்....உட்காருங்க... என்று சொல்லி அவர் பக்கத்தில் இருந்த சொபாவை காண்பித்தார்.
சற்றே தயக்கத்துடனும் கலக்கத்துடன் அமர்ந்தார் ராஜசேகர்.
ராஜசேகர்.... நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.... உங்க பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா?
இதை சற்றும் எதிர்பாராத ராஜசேகர்....
என்ன சார் சொல்றீங்க?
உண்மையா தான் கேட்கிறேன்....
இல்ல சார்.... ஒத்து வராது.... எனக்கு சரியா படல.... வீட்டுல நிலைமை சரியில்ல....
எனக்கு தெரியும் ராஜசேகர்....
என்ன சொல்றீங்க சார்?
ராஜசேகரின் கையை பிடித்து கண்களில் வைத்து அழத் தொடங்கினார் ராமகிருஷ்ணன்.
என்ன சார்? என்னாச்சு?....
என்னை மன்னிச்சிடுங்க ராஜசேகர்.... என் பையன் தான் உங்க பொண்ண..... என்று அதற்கு மேல் கூற முடியாமல் அழுதார்.
ராஜசேகர்.... தயவு செய்து இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளவே இருக்கட்டும்....இது நம்ம ரெண்டு பேரோட குடும்பத்தை பாதிக்கக் கூடியது. என் பையன் பண்ண தப்பை நான் சரின்னு சொல்ல வரலை..... ஆனா அதை சரி பண்ண நமக்கு ஒரு வாய்ப்பு இருக்குன்னு தான் சொல்றேன். உங்க பொண்ணை நான் என் பொண்ணா நினைக்கவே தான் இப்படி கேக்குறேன். இந்த விஷயம் வைஷாலிக்கோ உங்க பையனுக்கோ கூடத் தெரிய வேண்டாம். உங்க பொண்ணோட சம்மதத்தை கேளுங்க.... அவளுக்கு விருப்பம் இல்லன்னா..... வேண்டாம்.... அவ சட்ட ரீதியா கேஸ் கொடுக்கனும்னாலும் ஓகே.... எனக்கு எந்த ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல.... நீங்க உங்க வீட்ல போய் பேசிட்டு எனக்கு ஒரு முடிவை சொல்லுங்க..... எதுவாக இருந்தாலும் சரி....
அதிர்ச்சியில் மார்பை பிடித்து கொண்டு ஆ.... என்று அப்படியே கீழே விழுந்தார் ராஜசேகர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராமகிருஷ்ணன்....
ராஜசேகர்.... என்னாச்சு.... என்று அவரை கைத் தாங்களாக பிடித்து அவரை அழைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றார்.


தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

.