இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-31
ராபர்ட் ஆஃபீஸூக்குள் நுழைந்தான் ராகவ்.
அவனுக்கு வந்த அனைத்து அன்நோன் கால்களின் விவரத்தை ராபர்டிடம் சொன்னான்.
அவனும் அனைத்து விவரங்களையும் நோட் செய்து கொண்டு.... நெக்ஸ்ட் டைம்..... ஃபோனை எடுத்து ஹலோ சொல்லாமல்.... வெகுநேரம் வைத்திடுங்கள்...ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனதும் ஹலோ....ஹலோ.... எனக்கும் ஒண்ணுமே கேட்கல.... யாரு யாரு ன்னு பேசிக்கிட்டே இருங்க.... அவர்கள் கட் செய்ய நினைக்கும் போது.... ஹலோ எனக்கு சிக்னல் இல்லைன்னு நினைக்கிறேன்.... ஒரு நிமிஷம் லைனிலியே இருங்க..... மாடிக்கு வரேன் என்று சொல்லி....எவ்வளவு நேரம் லைனை கன்டினியூ பண்ண முடியுமோ....அவ்வளவு நேரம் பண்ணுங்க... அதுக்குள்ள நான் கால் எங்கிருந்து வருதுன்னு டிரேஸ் பண்ணிடறேன். அந்த கால் உங்களுக்கு வரும் போது என்னோட லேண்ட் லைனுக்கு கால் பண்ணுங்க..... ஸப்போஸ் நான் ஆஃபீஸ்ல இல்லைன்னாலும் என்னோட அஸிஸ்டென்ட்ஸ் கால் டிரேஸ் பண்ணுவாங்க....என்றான்.
ஷூயர் ராபர்ட்.... தேங்க் யூ ஸோ மச்....என்று சொல்லி கை கொடுத்து விட்டு கிளம்பி ஏ2பி க்கு சென்றான்.
அங்கே அவர்கள் வழக்கமாக உட்காரும் டேபிளில் வெயிட் செய்து கொண்டு இருந்தாள் வைஷாலி.
ராகவை பார்த்தவுடன் அவள் கண்கள் கலங்கியது. அவள் அருகில் போய் அமர்ந்தான் ராகவ். அவள் வலது கையில் தன் இடது கையை கோர்த்து அவள் காதருகில் சென்று.....
ஷாலி.... ஐ ஆம் வெரி வெரி சாரி.... கோபத்தில் அப்படி பேசிட்டேன்....
சாரி சொன்னா என் மனசுல ஏற்பட்ட காயம் சரியாயிடுமா?
என்ன பண்ணா உன் காயம் சரியாகும்.... நீயும் வேணும்னா என்னை திட்டிடு..... என்றான்.
கண்கள் கலங்க....அதை நான் எப்பவும் செய்ய மாட்டேன். இணைந்திருந்த அவளுடைய கைகளை எடுத்து தன் இன்னொரு கையால் பிடித்து....இனிமே நான் உன்னை தெரியாம கூட ஹர்ட் பண்ண மாட்டேன்....திஸ் ஈஸ் மை பிராமிஸ்....
நீங்க சொன்னதை யோசிச்சு பார்த்தேன்.... உரிமை உள்ளவர்களுடன் தான் டி போட்டு பேச முடியும். எனக்கு ஓகே.... நானும் உங்கள நம்ம மட்டும் தனிமைல இருக்கும் போது டா ன்னு கூப்பிடவா?
சரி டி ஷாலி....
ஓகே டா ராகவ்....
***************
யாருடா இது.... இந்த பிரச்சனையை பெரிசா ஆக்கி.... போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளெயின்ட் கொடுத்து....பெரிசா ஆக்கலாம் ன்னு நினைச்சா?..... என்று நினைத்து கொண்டே திரும்பி பார்த்தாள்.
அங்கே ஒரு தாத்தா அவர்கள் அருகே நடந்து கொண்டு வந்தார்.
என்னடா.... இந்த பெரிசு இப்போ வருது....
இருடா.... பாக்கலாம் என்ன சொல்லுதுன்னு....
பெரிசு நம்ம கிட்ட தான் வருது....
என்னடா நினைச்சு கிட்டு இருக்கீங்க.... வயசு வித்யாசம் பார்க்காம எல்லாரையும் மரியாதை இல்லாம பேசிக்கிட்டு....நியூசன்ஸ் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்.... ஜாக்கிரதை....என்று சொன்னார் விசாலாட்சி பாட்டியின் கணவர் வேணுகோபால்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல்.... நால்வரும் அந்த வேணுகோபால் தாத்தாவையும் மேரியையும் முறைத்து கொண்டே சென்றனர்....
ஒருவன்...என்னடி.... தப்பிச்சிட்டன்னு நினைச்சு சந்தோஷப் படாதே....ஹூம்....என்று சொல்லி விட்டு சென்றான்.
ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.... நீங்க தான் விசாலாட்சி ஆன்டியோட ஹஸ்பண்டா?.... என்று சிரித்துவாறு கேட்டாள்.
ஆமாம் மா.... உனக்கு வீடு பிடிச்சிருக்கா?
ரொம்ப நல்லா இருக்கு அங்கிள். தேங்க்ஸ்.... தேங்க்ஸ்.... எனக்கு நல்ல வீடு கொடுத்ததற்கும்.....அவங்க கிட்ட இருந்து இப்போ என்னை காப்பாற்றியதற்கும்.
பரவாயில்லை மா.... நீ பத்திரமா இரு....என்று சொல்லி விட்டு சென்றார் வேணுகோபால்.
சரிங்க அங்கிள் என்று சொல்லி தான் கொண்டு வந்த ஃபைல்களை எடுத்துக் கொண்டு கோபத்துடன் உள்ளே சென்றாள் மேரி.
பெட்ரூம் ஜன்னல் வழியாக அவர்கள் நால்வரும் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தாள் மேரி.
ஒருவனுடைய வீடு அவள் பெட்ரூம் ஜன்னல் வழியாக நன்றாக தெரிந்தது.
அவன் நேராக பார்க்கும் படி.... ஜன்னலில் ஒரு மெல்லிய ஸ்கிரீன் போட்டு விட்டு சல்வாரை மாற்றி நைட்டி போட்டாள்.... இவை அனைத்தும் ஒன்றும் தெரியாமல் எதார்த்தமாய் செய்வது போல செய்தாள்.
இதை பார்த்த அவன் அவனுடைய மொபைலில் நிழலாக தெரியும் மேரியை வீடியோ எடுத்தான்.
மற்ற மூவருக்கும் ஃபார்வேர்டு செய்தான். அடுத்த நொடி அவர்கள் மூவரும் அவனுடைய வீட்டிற்கு வந்தனர்.
என்னடா இவ.... இப்படி நம்மல உசுப்பு ஏத்துறா....
மச்சான் இன்னைக்கு ராத்திரி போய் டிரையல் பார்க்கலாமா?....
சரிடா.... என்று அனைவரும் பேசிக் கொண்டனர்.
அவர்கள் எப்படியும் வருவார்கள் என்று தான் முன்கூட்டியே சிசிடிவி பிஃக்ஸ் செய்திருந்தாள்.
மேரியும் அந்த நால்வரும் இரவு நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
***************
மதனை பார்க்கனும் கூட்டிக்கிட்டு போறீயா?.....என்று ரேஷ்மி சொன்னவுடன் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.
என்ன?.....
ஆமாம்.... நான் இப்பவே மதனை பார்க்கனும்.....
ஆத்திரம் வந்தாலும்.....அதை அடக்கி கொண்டு....சரி....லோகேஷன் சொல்லு கூட்டிக்கிட்டு போறேன்....
ஆச்சரியமாக பார்த்தாள் ரேஷ்மி.
என்ன....கோபப்படுவேன்.... கத்துவேன்.... திட்டுவேன்னு நினைச்சியா....
நீ நெனச்சிருந்தா அவனையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்.... ஆனால் நீ பண்ணிக்கல..... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்போதைக்கு மதனுக்கு உடம்பு சரியில்லை....இல்லை உன்னையே நினைச்சுகிட்டு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிறான்......ஏதோ ஒண்ணு.... கரெக்டா?
கண்கள் விரிய அவனை பார்த்தவள்....
தீபம் ஹாஸ்பிட்டலுக்கு போ..... என்றாள்.
மெல்லிய ஒரு புன்னகை சிந்தியவன்.... வண்டியை தீபம் ஹாஸ்பிட்டலுக்கு செலுத்தினான்.
ரேஷ்மி வர தாமதம் ஆனதால் விஜி மற்றும் நிவி இருவரும் அங்கேயே வந்துவிட்டனர்.
ரேஷ்மியை பார்த்ததும் இருவரும் ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.
என்னாச்சு டி....
உனக்கு கல்யாணம் ஆனதை தாங்கிக்க முடியாம இப்படி பண்ணிட்டாரு டி....
மூவரும் உள்ளே செல்ல....மதன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அங்கிருந்த கேஸ் ஷீட் ஃபைலை எடுத்து படித்து பார்த்தாள் ரேஷ்மி.
ஸ்டொமக் கிளியர்டு.... பேஷன்ட் ஸ்டேபில்....என்றிருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தாள்.
அவனுடைய பல்ஸை செக் செய்தாள்.... ஓரளவு நார்மலாக இருந்தது....
வெளியே வந்து.... நான் வந்து போனது மதனுக்கு தெரிய வேண்டாம்.... பிளீஸ்.... அவன் கிட்ட சொல்லி என்னை மறந்திட சொல்லுங்க....
நாங்க சொன்னா கேட்டிருவாரா அவரு.... என்றாள் விஜி.
நான் என்னடி பண்றது....என்னோட நிலைமையை புரிஞ்சுக்கோ....
விஷ்வா நடந்து வருவதை பார்த்தவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு....
சரி டி.... நான் கிளம்பறேன் என்று இருவரையும் பார்த்து சொன்னாள்.
விஷ்வா வை பார்த்து போகலாம்.... என்றாள் ரேஷ்மி....
ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு மதன் இருந்த ரூமிற்கு சென்றான் விஷ்வா.
ரேஷ்மிக்கு பயம் வந்தது.... மதனை விஷ்வா எதாவது செய்து விடுவானோ என்று....
அந்த டோரின் கண்ணாடி வழியாக இருவரையும் பார்த்தாள்.
விஷ்வா மதனின் மிக அருகில் சென்றான்.
தொடரும்.....
அ.வைஷ்ணவி விஜயராகவன்.