• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-33

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-33

காரில் செல்லும் போது ஒரு பிரபலமான உள்ளாடை கடையில் நிறுத்தினான் விஷ்வா.

நான் வாங்க நினைத்தது எப்படி இவனுக்கு தெரியும் என்று யோசித்தாள் ரேஷ்மி.

காலையில் அவள் குளித்து விட்டு வந்த போது அவனுடைய வாட்ரோபில் இருந்தது விதவிதமான உடைகள் மட்டுமே.... உள்ளாடைகள் எதுவுமே அவர்கள் வாங்கி வைக்கவில்லை. ராஜேஸ்வரியும் அதை மறந்து விட்டாள்.... அவள் ஏற்கனவே உடுத்தியிருந்த உள்ளாடையை அலசி உடுத்தியிருந்தாள்.... முதுகில் ஈரம் தெரிந்தது....அதை கவனித்த விஷ்வா.... அவளுக்கு அவற்றை வாங்கித்தர கடையின் வாசலில் நிறுத்தினான். அவனுடைய பர்ஸை அவளிடம் நீட்டி.... நீ எது வேண்டுமோ வாங்கிக்கோ.... எந்த கார்டு வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோ....ஒய்ஃபை கார்டு தான் ஸோ பின் நம்பர் தேவையில்லை.... நான் கார்லலையே வெயிட் பண்றேன்.... என்றான்.

அப்போ காலைல நான் ஈரமாக போட்டிருந்தது இவன் கண்களுக்கு தெரிந்திருக்கிறது....எவ்வளவு வக்கிரமான புத்தி.... சீ.... என்று நினைத்து கொண்டாள்.

எனக்கு புதுசா எதுவும் வேணாம். முடிஞ்சா என்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போ.... அங்கிருந்து நான் என்னோட துணிகளை எடுத்து கொண்டு வந்திடறேன்.... என்றாள்.

சரி.... என்று சொல்லி விட்டு அவள் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.

போகும் போது ரேஷ்மி அவளுடைய அம்மாவிற்கு கால் செய்து தான் வீட்டிற்கு சென்று சில துணிமணிகளை எடுத்து செல்ல போகிறேன்....சாவி யார் கிட்ட கொடுத்து இருக்கீங்க?....என்றாள்.

வீட்டிற்கு போறீயா?.... கல்யாணம் ஆகி முதல் முறையா வர.... ஆரத்தி எடுக்க கூட வீட்டில ஆள் இல்லையே.... என்றாள் கனகவள்ளி.

அம்மா..... இது ரொம்ப முக்கியம்?....சாவி எங்க இருக்கு அதை மட்டும் சொல்லுங்க....

பக்கத்து வீட்டு மோனிகா கிட்டதான் இருக்கு.... என்று சொன்னாள் கனகவள்ளி.

சரிம்மா.... நான் பாத்துக்கிறேன்....

அடுத்த கால் மணிநேரத்தில் ரேஷ்மி வீட்டு வாசலில் கார் நின்றது.

நான் கார்லையே வெயிட் பண்றேன்.... நீ போயிட்டு வா.... என்றான் விஷ்வா.

ஹூம்.... என்று சொல்லி விட்டு அவள் இறங்கியதும் அங்கே மோனிகாவின் அம்மா தட்டில் ஆரத்தியுடன்....நிற்க பக்கத்தில் மோனிகா.... அடுத்த வீட்டு ஆன்டி.... எதிர் வீட்டு ஆன்டி என அனைவரும் கூடி இருந்தனர்.

ஸ்மைல் செய்து கொண்டே நடந்து வந்தாள் ரேஷ்மி.

எதுக்கு ஆன்டி இதெல்லாம்...அம்மா சொன்னாங்களா?....சாவி மட்டும் கொடுங்க போதும்.... நான் டிரெஸ் எடுத்து போக தான் வந்தேன்.

இல்லம்மா.... அம்மா உன் கிட்ட சாவி கொடுக்க தான் சொன்னாங்க.... ஆனா வீட்ல இருந்திருந்தா ஆர்த்தி எடுத்திருப்பேன்னு ஃபீல் பண்ணாங்க.... அதான் நாங்க எல்லாரும் சேர்ந்து எடுக்கலாம்னு முடிவு பண்ணி வந்தோம்.

சரி கூப்பிடு அவர....என்றார்கள்.

வேறு வழியின்றி விஷ்வாவை அழைத்து வந்தாள்.

மோனிகா ரேஷ்மியிடம்....

அக்கா.... மாமா சூப்பர்.... எத்தனை வருஷமா லவ் பண்றீங்க....

ரேஷ்மி மோனிகாவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்.

நாங்க ரொம்ப வருஷமா லவ் பண்றோம் பேபி.... உன் பேரு என்ன? என்ன படிக்கிற?

என் பெயர் மோனிகா.... நான் 8த்து படிக்கிறேன் மாமா....

நைஸ் நேம்.... ஸோ ஸ்வீட்....என்று சொல்லி விட்டு ஸ்மைல் செய்தான்.

ரேஷ்மி தங்கமான பொண்ணு.... அவளை பத்திரமா பாத்துக்கோ தம்பி.... என்று மோனிகா வின் அம்மா கூற....

கண்டிப்பா ....... என் கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குவேன்.... என்று சொன்னான் விஷ்வா.

ரேஷ்மி நீ கொடுத்து வச்சவ.... என்று சொல்லி ஆரத்தி எடுத்து விட்டு மோனிகாவிடம் கொடுத்து வெளியே ஊற்றச் சொன்னாள் அவளுடைய அம்மா. ஆரத்தி எடுத்ததற்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் போட்டான்.

அதைப் பார்த்த உடன் அவளுக்கு அன்றைய தினம் ஞாபகத்திற்கு வந்தது.

உள்ளே சென்றவுடன் ஸ்வீட் எதுவும் இல்லாததால்.... பாலில் வாழைப்பழம் மற்றும் ஒரு துளி வெல்லம் சேர்த்து கோண்டு வந்து கொடுத்தார்கள். விஷ்வா பாதி மற்றும் ரேஷ்மி பாதி குடித்த பிறகு.... நாங்க கிளம்பறோம் ரேஷ்மி என்றனர்.

அம்மா.... அக்கா ,மாமா கூட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கவா? என்றாள் மோனிகா.

நான் ஃபோனை வீட்ல வெச்சிட்டேன்.... ரேஷ்மி உன் ஃபோன்ல எடுத்திட்டு அனுப்பறியா மா?....

நான் கார்ல என் ஃபோனை வச்சிட்டேன்னு நினைக்கிறேன்.... இருங்க எடுத்து வரேன் என்றாள் ரேஷ்மி.

இரு.... என் ஃபோன்ல எடுத்திட்டு ஸென்டு பண்ணிடறேன்....என்று சொல்லி விஷ்வா ஃபோட்டோ எடுத்தான். பல ஃபோட்டோக்களை எடுத்த பின்னர்.... அவர்கள் அனைவரும் கிளம்பினார்கள்.

(ரேஷ்மி லவ் பண்ணியவனோடு தான் திருமணம் நடந்தது என்றும் அவள் ஜாதகப் படி 20 வயதில் திருமணம் ஆகிவிடும் இல்லையென்றால் முப்பது வயதாகும் என்பதால் நாங்கள் சிம்பிளாக குலதெய்வ கோவில்ல மேரேஜ் நடத்திட்டோம்....என்று கூறி வைத்திருந்தாள் கனகவள்ளி. மேலும் அந்த ஜாதக விஷயம் மோனிகா அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் யாரும் தவறாகக் நினைக்கவில்லை. ஒரு நல்ல நாள் பார்த்து ரிசெப்ஷன் வைப்போம்... அப்போ எல்லாரையும் கூப்பிடறோம்.... என்று சமாதானம் சொல்லியிருந்தாள் கனகவள்ளி).

ஹால் சோஃபாவில் விஷ்வா அமர்ந்து இருந்தான்.

அவளுடைய ரூமிற்கு சென்று தன் டிரெஸ்ஸை சிலவற்றை அங்கே வைத்து விட்டு சிலவற்றை எடுத்து தன் சூட்கேஸில் அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

ஹால் கப்போர்டில்....அவளும் ராகவும் வாங்கி இருந்த பல டிராஃபிகளை பார்த்துக் கொண்டு இருந்தான் விஷ்வா. ரேஷ்மி பரதநாட்டியத்திலும் படிப்பிலும் கப் வாங்கியிருந்த ஃபோட்டோக்கள் இருந்தது. ராகவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்தான்.... அவனுடைய கோப்பைகள் பல இருந்தது.

அதைப் பார்த்த உடன்.... அதான் அடி அன்னைக்கு அப்படி விழுந்துச்சோ....என்று தனக்குள்ளே சொல்லி கொண்டான்.

ஒரு ஃபோட்டோவில் ரேஷ்மி செம கியூட்டாக இருந்தாள். அதை கையில் எடுத்து பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.

ஆ..... என்று ரேஷ்மியின் குரல் கேட்டு அவளுடைய ரூமிற்கு ஓடினான்.

***************

நித்தின் மற்ற மூன்று பாடி கார்டுகளை ஃபாலோ செய்ததில்.... அவனுக்கு தெரியவந்த விஷயங்களை ஜி என்கிற சுப்பிரமணிக்கு சொல்ல மெஸேஜ் செய்தான்.

சுப்பிரமணியே நித்தினுக்கு கால் செய்தான்.

ஜி....

சொல்லு நித்தின்....

மத்த மூணு பாடிகார்ட்ஸூம் ஒரே ஃபேமிலி....

என்ன?

ஆமாம் ஜி....

அப்பா.... மிலிட்டரி ரிடையர்டு.... ராமகிருஷ்ணனோட ஃபிரெண்டு.... அவரோட பசங்க ரெண்டு பேரும். ஒருத்தன் போலீஸ்ல செலக்ட் ஆகி இருக்கான்.... இன்னொருத்தன் பரத் அவன் மார்ட்ஷியல் ஆர்ட்ஸ்( கராத்தே போல ஒரு தற்காப்பு கலை).... கிளாஸ் ஸ்டியோ வச்சிருக்கான்.

ஓ.... ஓகே....
சரி..... நம்ம தீபக்கை கொன்றதுக்காக தான் இவங்களையும் கொல்லனும் நினைச்சேன்....ஆனா இவங்க பேக்கிரௌண்டு தெரிஞ்சதும் இப்போ அவங்க மேல கை வைக்கிறது கொஞ்சம் ரிஸ்க்..... ஸோ....அவங்கள பிளான்ல இருந்து ஸ்கிப் பண்ணிடு....

ஓகே ஜி.... புரிஞ்சுது.... மேரி....

அவ கிட்ட பேசிட்டேன்.... பிளான் படி எல்லாம் நடக்குதுன்னு சொன்னா....

ஜி.... ராகவ் அப்புறம் வைஷாலி ஃபாலோ பண்ணும் போது.... யாரோ ஒருத்தன் அவங்களுக்கு கால் பண்ணி அவங்க உயிருக்கு ஆபத்துன்னு முன் கூட்டியே தகவல் சொல்லி இருக்கான்.... அதனால தான் தீபக் அட்டாக் பண்ண போறது தெரிஞ்சு.... அவங்க கேர்ஃபுல்லா ஆயிட்டாங்க....இப்ப நாங்க சென்னைக்கு வந்ததையும் அவன் ராகவிற்கு கால் பண்ணி சொல்லி இருக்கான்....

வாட்.... யாராக இருக்கும்?....

தெரியலை ஜி.....

சரி நித்தின்.... அதை நான் பாத்துக்கிறேன்.... நீ அவங்க ரெண்டு பேரையும் கிளோஸா வாட்ச் பண்ணு....

ஓகே ஜி....குட் நைட்.... பை.... என்று சொல்லி ஃபோனை வைத்தான் நித்தின்.

***************

ராபர்ட்...ராகவ் கொடுத்த டீடெயில்ஸ் வைத்து அலசி ஆராய்ந்ததில் அந்த சுப்பிரமணியின் பழைய கேஸூக்கு சம்பந்தமான யாரோ தான் சொல்லி இருக்க வேண்டும் என்று யூகித்தான்.... ஆனால் ராகவிற்கு எதற்காக கால் பண்றாங்க..... அதுதான் அவனுக்கு தெரியாத ஒன்று.....

அந்த கேஸ் டீடெயில்ஸ் எடுத்தான்.

ரேப் அன்ட் மர்டர் கேஸ் ஃபைல்....

விக்டிம்- விமலா.
டிகிளார்டு கில்டி- சுப்பிரமணி.
ஜட்ஜ்மென்ட் - லைஃப் சென்டன்ஸ்.


(விமலாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகள். கணவர் அகத்தியன். காதல் திருமணம். 3 வயதில் ஒரு மகன் பெயர் அவினாஷ். இருவருடைய பெயரின் முதலெழுத்தை எடுத்து மகனுக்கு பெயர் சூட்டினர்.)

அகத்தியன் பிரபல வங்கியில் மேனேஜர் வேலையில் உள்ளான். விமலா ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்கிறாள்.

விமலா மிகவும் அழகாக இருப்பாள். மாநிறம் தான் ஆயினும் முகம் லக்ஷனமாக இருக்கும். புடவையோ, சுடிதாரோ, ஜீன்ஸ் பேண்ட்_ டீ-ஷர்டோ அல்லது நைட்டியோ எதை உடுத்தினாலும் அம்சமாக இருக்கும். அவளுக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பீரியட்ஸ டைமில் நெற்றி வகிடில் குங்குமம் வைக்காமல் போனால் புதிதாக பார்க்கும் ஆண்கள் சைட் அடிப்பார்கள் ப்ரபோஸ் செய்ய நினைப்பார்கள்.

அகத்தியன் பற்றி விரிவாக சொல்ல தேவையில்லை. ஆறடி உயரத்தில் நல்ல அழகான ஆண்மகன். சிக்ஸ் பேக் இல்லை என்றாலும் உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருந்தான். ஒல்லியும் இல்லை குண்டும் இல்லை. உயரத்திற்கேற்ப உடல் வாகு. முதல் பார்வையிலே விழுந்துவிட்டாள் விமலா.

தினமும் அவினாஷை பள்ளியில் விட்டு விட்டு, விமலாவை அவள் ஆஃபிஸில் விட்டு விட்டு அகத்தியன் பேங்கிற்கு செல்வான்.

விமலா மேடம் ..... என்றான் பியூன்.

யெஸ்.....

மேனேஜர்(சுப்பிரமணி) உங்கள கூப்பிடரார் என்றான்.

எக்ஸ்கூயூஸ் மீ ஸார், என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
பத்து நிமிடம் கழித்து சற்று சோகமாக வெளியே வந்தாள். நேராக அவளுடைய இருக்கையில் போய் அமர்ந்தாள்.
மைதிலியும் விமலாவும் நெருங்கிய தோழிகள்.

மதியம் உணவு வேளையில்....

அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். எல்லாம் ஷேர் செய்துக் கொண்டு சாப்பிடுவார்கள்.

விமலா சோகமாக இருந்ததைக் கவனித்த மைதிலி...

என்ன விமலா, டல்லா இருக்க.... என்றாள்.

ஒண்ணமில்லையே, நார்மலா தான் இருக்கேன்.... என்று சிறு புன்னகையை சிந்தினாள்.

அனைவரும் வழக்கம் போல கிண்டலும் கேலியும் மாறி மாறி செய்து கொண்டு உணவை உண்டனர். விமலா புன்னகை மட்டுமே செய்தாள்... அவர்களின் கிண்டல், கேலி எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை.

மேனேஜர் சுப்பிரமணி சொன்ன வார்த்தைகளே அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

விமலா, ஐ தாட் ஆஃப் சஜஸ்டிங் யூவர் நேம் ஃபார் டீம் லீடர்....பட் யுவர் பர்ஃபார்மன்ஸ் ஃபார் தி திரீ வீக்ஸ் இஸ் லேக்கிங்... ஐ கிவ் யூ ஒன் வீக் டைம் டு ரெக்டிஃபை இட்...யு ஆர் கம்பிளீட்டீங் ஆல் யுவர் ஒர்க்ஸ் ஆஃப்டர் யுவர் டெட் லைன்... எயிதர் கன்சிடர் திஸ் ஆஸ் மை அட்வைஸ் ஆர் வார்ணிங்...(vimala, I thought of suggesting your name for team leader... But your performance for the last 3 weeks is lacking, I give you one week time to rectify it... You are completing all your work after your dead line...either consider this as my advice or warning)

விமலாவுக்கு எதோ பிரச்சினை என்று மைதிலி அவளின் முகத்தை பார்த்து தெரிந்துகொண்டாள். எல்லாரும் இருக்கவே எதுவும் கேட்காமல் விட்டுவிட்டாள்.

விமலா வீட்டிற்கு சென்ற பிறகு, மைதிலி ஃபோன் செய்து விஷயத்தை அறிந்தாள்.

கவலைப்படாதே விமலா, அந்த ஆளுக்கு குறை சொல்ல மட்டும் தான் தெரியும். ஒரு நாளாவது யாரையாவது புகழ்ந்திருக்காரா?
விடு அதையே நினைச்சிட்டு இருக்காதே... என்றாள் மைதிலி.

ஹூம் என்று மட்டும் சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டாள்.

அகத்தியன், அவளருகில் வந்தமர்ந்து என்னாச்சுடி என்றான்.

அவன் தோளில் சாய்ந்து கொண்டு நடந்ததை கூறினாள்.
விடு மா, இதெல்லாம் ஒரு பிரச்சனையா? நீ என்ன மிஸ்டேக் பண்ணன்னு யோசிச்சு பாரு... இல்ல உனக்கு கஷ்டமா இருந்தா வேலையை விட்டுவிடு...

பதிலேதும் கூறாமல் அவன் தோள்களிலே சாய்ந்து கொண்டு இருந்தாள்.

சரி, பையன் சாப்பிட்டுடானா?...

அவன் தூங்கிட்டான் மணி 9.30 ஆயிடிச்சு என்றாள்.

சரி வா நம்ம சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என்று கூறினான்.

தூக்கமே வரவில்லை அவளுக்கு. புரண்டு புரண்டு படுத்தாள். எதில் நாம் தவறு செய்தோம் என்று சிந்தித்து பார்த்தாள்.

பெண்களுக்கான ஒரு தனிப்பட்ட குணங்கள்:

#யாரும் அவர்களை குறை சொல்ல கூடாது.
#அப்படி சொல்லிவிட்டால் அதன் காரணத்தை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
#அந்த முடிவில் அவர்கள் மேல் தப்பே இருக்காது.
#அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றத்திற்கு ஒரு துளி கூட அவர்கள் காரணமில்லை என்று நிரூபிப்பார்கள்.
#அவர்கள் மேல் சிறு தவறு இருக்கிறது என்று அவர்களுக்கே தோன்றினால், எதிராளியின் மேல் உள்ள மிக பெரிய தவறை சுட்டிக் காட்டி விடுவார்கள். ஆகையால் அவர்கள் பதில் பேச முடியாதவர்களாவர்.

இந்த விசேஷ குணம் நம் விமலாவுக்கும் உண்டு. இரு நாள் அலசி ஆராய்ந்து அவளுடைய வேலையின் தாமதத்தினையும் கண்டுபிடித்து மறுநாள் மேனேஜரிடம் தெரிவித்தாள்.

ஸார், திஸ் ஈஸ் நாட் மை மிஸ்டேக்....
ஐ ஹேவ் கம்பிளீடட் மை வோர்க் ஆன் டைம்... ஜான் அன்ட் அஜ்மல் தான் லேட்டா ஒர்க் சப்மிட் பண்ணியிருக்காங்க.

ரொம்ப கிளவர் தான் நீ விமலா.... உன் மேல சொன்னா.... நீ மத்தவங்க மேல திருப்பி விடறியா?.... ஜான் அன்ட் அஜ்மல் டிரெயினீஸ்.... ஸோ.... நீ தான் ரெஸ்பான்ஸிபில்.... உன்னால கம்பெனிக்கு 25 லேக்ஸ் லாஸ்.... அதை ஒன் வீக் குள்ள பே பண்ணிட்டன்னா.... உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.... இல்லைனா உன் மேல கேஸ் போடுவேன்....உன் ஹஸ்பண்டுக்கு கூட வேலை போகலாம்.... என்றான்.

அய்யோ சார்.... அப்படி எல்லாம் சொல்லாதீங்க..... அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன்?..... பிளீஸ் சார்.....

அச்சச்சோ.... உன்னை பார்த்தா எனக்கு பாவமா தான் இருக்கு..... ஆனா நான் என்ன பண்றது....

சார் சார் பிளீஸ்.... எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.... என்று அவனுடைய காலை பிடித்து கொண்டு அழுதாள்.

சரி.... உனக்காக அந்த பணத்தை நானே கம்பெனியில் கட்டிடறேன்..... பதிலுக்கு நீ என்ன செய்வ எனக்கு?....

அவனுடைய கேள்விக்கு அர்த்தம் புரிந்து கொண்டாள் விமலா....

தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.