இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-38
விஷ்வா காலேஜில் இருந்து கிளம்பி ரேஷ்மியின் அம்மா வீட்டிற்கு சென்றான்.
ராஜசேகரும் கனகவள்ளியும் விஷ்வாவை வரவேற்று உபசரித்தனர். ரேஷ்மிக்கு டிரைவர் வராமல் விஷ்வா வந்ததால் சிறு மகிழ்ச்சி.
காரை பார்த்து விட்டு மோனிகா வந்தாள்.
ஹாய் அக்கா, ஹாய் மாமா.....
ஹாய் மோனிகா.... எப்படி இருக்கீங்க?
அக்கா காலைலியே வந்துட்டாங்க.... நீ இப்போ தான் பார்க்கிறீயா?.... என்றான் விஷ்வா.
ஆமாம் மாமா.... ஸ்கூலுக்கு போயிருந்தேன்.... இப்போ தான் வந்தேன்.... அன்னைக்கு எடுத்த ஃபோட்டோஸ் அனுப்பவே இல்லையே....
அச்சச்சோ.... மறந்திட்டேன்.... இப்போ அனுப்பறேன்.... என்று தன் ஃபோனை எடுத்தான்.
மோனிகா நம்பர் சொல்லுங்க.... மாமா அம்மாவோடது நியூ நம்பர் அது எனக்கு மனப்பாடமா தெரியாது. அக்கா கிட்ட இருக்கு என்னோட அம்மா நம்பர். நீங்க அக்காவுக்கு அனுப்புங்க.... அக்கா எங்களுக்கு அனுப்புவாங்க....
ஓ.... அப்படியா.... சரி சரி.... என்று சொல்லி தன் ஒரு மொபைலை ரேஷ்மியிடம் கொடுத்து.... புளூ டூத் ஆன் பண்ணிருக்கேன்.... ஃபோட்டோஸ் ஸென்ட் பண்ணிட்டு கொடு.... என்று சொல்லி விட்டு தன்னுடைய இன்னொரு ஃபோனை எடுத்து கொண்டு வெளியே சென்று தன் நண்பர்களுடன் பேசினான் விஷ்வா.
ஓகே அக்கா.... நீங்க அனுப்புங்க.... நான் போய் எங்க அம்மா ஃபோன்ல பார்க்கிறேன்...பை.... என்று சொல்லி விட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.
வெளியே ஃபோன் பேசிக் கொண்டு இருந்த விஷ்வாவுக்கும் பை மாமா.... என்று சொல்லி விட்டு ஓடிச் சென்றாள்.
ஏன்டி, உன் நம்பரை விஷ்வாவுக்கு கொடுக்கலையா?..... என்றாள் கனகவள்ளி.
என் ஃபோன் நம்பர் எல்லாம் தெரியாமல்லாம் இருக்காது...லவ் பண்ணேன்னு சொன்னானே அப்பவே தெரிஞ்சிருக்கும்..... மனப்பாடம் கூட பண்ணிருப்பான்.... இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி....ஏதோ நல்லவன் மாதிரி ஸீன் போடுறான்.
ஏய்.... அவன்.... இவன்னு சொல்லாத டி.... அட்லீஸ்ட் மத்தவங்க முன்னாடி விஷ்வா மேல மரியாதை இல்லாத மாதிரி நடந்துக்காத..... கனகவள்ளி இப்படி சொன்னதும்
ரேஷ்மிக்கு டிரைவர் சண்முகம் ஞாபகம் வந்தது. ஆம்.... அம்மா சொல்வது உண்மை தான்.... நான் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அவனை திட்டவே தான் அந்த டிரைவர் என் கிட்டயே தப்பா நடக்க முயற்சி பண்ணான்.... என்று நினைத்து கொண்டாள்.
அவள் ரூமுக்கு சென்று.... ஃபோனை ஓபன் செய்து கேலரியில் அன்று எடுத்த அனைத்து புகைப்படங்களையும் அவளுக்கு அனுப்பி பின்னர் அதை மோனிகா அம்மாவிற்கு ஃபார்வேர்டு செய்தாள்....
தேங்க்ஸ் அக்கா என்று மோனிகா ரிப்ளை செய்தாள்.
வெல்கம் டியர்.... என்று மெஸேஜ் செய்து விட்டு... விஷ்வா ஃபோனை கீழே வைக்க போகும் முன்.... டாக்கிடு போட்டோஸ் அன்டு வீடியோஸ் என்று இருந்தது.
அவன் உள்ளே வருகிறான என்று எட்டி பார்த்து விட்டு.... அதை ஓப்பன் செய்ய டிரை பண்ணினாள் ரேஷ்மி.
ஜூன் 6 அவன் பர்த்டே என்று அவனுடைய அம்மா கூறியது ஞாபகம் வந்தது.... அதை போட்டாள்.... இன்னும் இரண்டு நம்பர்கள் வேண்டும். இவளை விட ஒரு வருடம் பெரியவன் ஆகையால் அந்த வருடத்தை போட்டாள்.... லாக்கிடு கேலரி ஓப்பன் ஆகியது.
அதை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
***************
சுப்பிரமணிக்கு டென்ஷன் கோபம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர.... வீடே அதிரும்படி கத்தினான்.
அவனே இதில் இறங்க வேண்டும் என்று நினைத்து கொண்டான். அவனுடைய வலது கை மற்றும் இடது கையாக இருந்த இருவரும் இறந்துவிட்டனரே என்று மிகவும் வருந்தினான்.
அவனுடைய ஆட்களை கூப்பிட்டு சென்னைக்கு டிக்கெட் புக் செய்ய சொன்னான்.
இதற்கிடையில்....
ராகவ் ஃபோன் அடித்தது.
அன்நோன் நம்பர்....
உடனே ராபர்ட்க்கு வேறு ஒரு ஃபோனில் இருந்து கால் செய்து....தகவலை கூறினான்.
நான் சொன்னபடி செய்யுங்கள் ராகவ் என்றான் ராபர்ட்.
ஓகே.... என்று சொல்லி விட்டு.
அந்த ஃபோனை எடுத்து ஹலோ சொல்லாமல் காதில் வைத்திருந்தான்.
ஹலோ.... ஹலோ.... என்று மறுமுனையில் இருந்த பெண் பேசினாள்.
மறுபடியும் அமைதியாக இருந்தான் ராகவ்.
ஹலோ.... ராகவ்.... நான் பேசறது கேட்குதா?....
ராகவ் என்று உரிமையுடன் அவள் பேசியவுடன்.... இந்த குரலை எங்கோ கேட்டது போல இருக்கிறதே என்று நினைத்து கொண்டான் ராகவ்.
சே.... ஹலோ.... என்று அவள் கட் செய்ய போகும் முன்....
ஹலோ.... என்றான்.
ஹாங் ஹலோ.... என்றாள் அந்த பெண்மணி.
ஒண்ணுமே கேட்கல சிக்னல் சரியில்லை ன்னு நினைக்கிறேன்.... அப்படியே லைன்ல இருங்க.... நான் மாடிக்கு போறேன் என்று சொல்லி விட்டு நேரத்தை கடத்தினான்.
சே..... என்று சலித்து கொண்டாள் அந்த பெண்மணி.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு....
சாரிங்க.... சொல்லுங்க.... என்றான்.
உங்க உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் வந்தவங்க இரண்டு பேர் இறந்திட்டாங்க.... ஆனா உங்க உயிரை எடுக்க சொன்னவனே சென்னைக்கு வரான்.... ஜாக்கிரதையா இருந்துக்கோங்க....
மேடம்.... மேடம்.... யாரு நீங்க..... என்று ராகவ் சொல்வதற்குள் ஃபோன் கட் ஆகிவிட்டது.
இன்னொரு ஃபோனை எடுத்து ராபர்ட் க்கு கால் செய்தான் ராகவ்.
என்ன ராபர்ட்.... கால் டிரேஸ் பண்ண முடிஞ்சுதா.....
யெஸ் ராகவ். ஃபோன் டெல்லில இருந்து வந்துச்சு.....
வாட்.... டெல்லியா?.... ஆனா அந்த லேடி தமிழை நல்லா பேசுறாங்க.....
மே பி.... தமிழ் நாட்டில இருந்து அங்க போயிருப்பாங்க.
ஹூம்.... என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது வைஷாலி கால் செய்தாள்.
ராபர்ட் எனக்கு இன்னொரு கால் வருது..... நான் அப்புறம் பேசறேன். நீங்க அட்ரெஸ் எனக்கு சென்ட் பண்ணுங்க.... என்றான் ராகவ்.
ஓகே.... என்றான் ராபர்ட்.
ஹாய் ஷாலி.....
ஹலோ ராகவ்.... மீட் பண்ணலாமா?
கண்டிப்பா.... நானும் டிஸ்கஸ் பண்ண வேண்டிய விஷயங்கள் சில இருக்கு....
ஓகே....பார்க்ல மீட் பண்ணலாமா?
ஷூயர்....
பார்க் பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.
சொல்லு ஷாலி....
சொல்லுடி ன்னே.... சொல்லு டா.....
ஹூம்.... பரவாயில்லையே நிறையவே இம்ப்ரூவ்மெண்ட்.
சிரித்தாள் வைஷாலி.
ஒண்ணும் இல்ல.... அப்பா என் கிட்ட ரெண்டு விஷயங்களை சொன்னாரு....
என்ன?.... என்றான் சிறிது கடுப்பாக.
ராகவ்.... பிளீஸ்.... முடிஞ்சதை விடுங்க.... இப்போ நடக்க வேண்டியதை பார்க்கலாம்.
ஹூம்....என்றான்.
ஒண்ணு விஷ்வா- ரேஷ்மிக்கு ரிசெப்ஷன்.... அந்த ஃபங்கஷன்லையே நமக்கு என்கேஜ்மென்ட்.....
ஆனா ஷாலி....
தெரியும்.... நீங்க என்ன சொல்ல வரீங்க ன்னு.... உங்க ஜாப் தான?
அப்பா உங்களுக்கு ஆஃபர் பண்றேன்னு சொல்றாரு.....
இல்ல ஷாலி.... அது ஒத்து வராது.... நான் மும்பை போக மாட்டேன்....
இல்ல சென்னை ஆஃபீஸூக்கு....
இல்ல வேணாம் ஷாலி..... எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.... நானே சின்னதா கம்பெனி ஆரம்பிக்க முடிவு பண்ணிருக்கேன்.....
வாவ்.... கிரேட்.... என்ன கம்பெனி?
ஆடிட்டிங்.... ஜி.எஸ்.டி ஃபைலிங்.... அக்கவுன்டிங்.... இதெல்லாம் சின்னதா ஒரு ஒர்க் பிலேஸ்ல வச்சு.... ஃபிரி லான்சராக வேலை செஞ்சு தரப் போறேன். கான்டிராக்ட் பேஸிஸ்ல கம்பேனிகளுக்கு ஆடிட்டிங் பண்ணப்போறேன்.
சூப்பர்.... ராகவ்.... உண்மையை சொன்னா எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு..... எனக்குமே நீங்க எங்க அப்பா கம்பெனில வேலைக்கு சேருரது பிடிக்கல.... எனக்கு பிடிச்ச ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் கூட வரக்கூடாது. ஒரே கம்பெனில இருந்தா கண்டிப்பா அது என்னைக்காவது ஒரு நாள் நடக்கும். அதுவும் இல்லாம விஷ்வா படிப்பு முடிந்ததும் அப்பா கம்பெனில ஜாயின் பண்ணிடுவான்.... அதுவும் சரிவராது மாமன் மச்சான் ஒண்ணா வேலை செய்யறது.....
ஸ்மைல் செய்து விட்டு அவள் கைகளை கோர்த்துக் கொண்டு அவள் கையில் முத்தமிட்டான் ராகவ்.
ஐ லவ் யூ..... என்றான்.
ஐ லவ் யூ டூ.... என்றாள்.
சரி.... நீ என்ன சொல்ல நினைச்ச டா?... என்றாள் சிரித்துக்கொண்டே.
நானும் ரெண்டு விஷயம் சொல்லனும்.
ஹூம்.... சொல்லு....
அந்த அன்நோன் நம்பர் கால் வந்தது.... சென்னைக்கு நம்ம ரெண்டு பேரை கொல்ல வந்தவங்க ரெண்டு பேரும் இறந்திட்டாங்கன்னு அந்த லேடி சொன்னாங்க....
வாட்.... என்ன ராகவ் இது.... சுப்பிரமணி தான் ன்னு தெரிஞ்சிடிச்சு இல்ல.... நம்ம கேஸ் கொடுக்கலாமா?
கேஸ் கொடுக்க....நம்ம கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?
ஹூம்.... அதுவும் சரிதான்.
அப்புறம்.... யாரு அந்த லேடின்னு தெரிஞ்சுதா?
இல்ல.... டெல்லில இருந்து ஃபோன் வந்துச்சுன்னு ராபர்ட் சொன்னாரு....
அங்க நேரா போய் பார்க்க போறேன்....
நீங்க.... தனியா போறீங்களா? வேணாம் ராகவ்....
பயப்படாத ஷாலி.... எனக்கு ஒண்ணும் ஆகாது.
நான் அங்கே போகும் போது உனக்கு இங்க நான் பாதுகாப்புக்கு ஆள் வச்சிட்டு போறேன்..... பரத் ஃபேமிலியை வரச் சொல்றியா?
இல்ல ராகவ்.... பரத் அண்ணாவுக்கு போலீஸ் ஸெலக்ஷன் கிடைச்சு டிரெயினிங் போயிட்டாரு.... பரத் அவனோட அம்மாவுக்கு யூட்ரஸ் ஆப்பிரேஷன் அதனால அவனையோ இல்ல அவனோட அப்பாவையோ நம்ம டிஸ்டர்ப் பண்ண கூடாது. என்னை பத்தி கவலைப் படாதீங்க ராகவ்.... என் அப்பா கிட்ட சொல்லி நான் பாத்துக்கிறேன்.
என்னடி நீ..... ஒரு முறை வாடா போடா சொல்ற.... ஒருமுறை வாங்க போங்க சொல்ற....
உன்னை மாதிரி உடனேயே எனக்கு அப்படி பேச வரலை.... கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்.....
ஹா ஹா ஹா.... என்று சிரித்தான் ராகவ்.
சரி இன்னொரு விஷயம் என்ன?
நீ விஷ்வா கிட்ட பேசினியா?.... என்றான் ராகவ்.
இல்ல.... என்றாள்.
ஹூம்.... அன்னைக்கு மதன் அதான் ரேஷ்மியோட லவ்வர் சூசைடு அட்டெம்ட் பண்ணிட்டான்.
அச்சச்சோ.... அப்புறம்..... சே.... எல்லாம் இந்த விஷ்வாவால.... என்றாள்.
இல்ல.... ஒண்ணும் ஆகலை.... சரியாக ஆயிட்டான். பிறகு மதன் விஷ்வாவை பற்றி கூறிய அனைத்தையும் கூறினான் ராகவ்.
வைஷாலி கண்கள் லேசாக கலங்கியது.
எனக்கும் விஷ்வா மேல கோபம் தான் இல்லைன்னு சொல்லல.... ஆனா.... இதுக்கு மேல நீ உங்க அப்பாவுக்காக என் கிட்ட சொன்ன மாதிரி தான்....நடந்ததை மாத்த முடியாது இல்ல....
வைஷாலிக்கு கண்களில் இருந்து நீர் துளிகள் வழிந்தோடியது.
அப்போ நீங்க விஷ்வாவை மன்னிக்க போறீங்களா?
தெரியல.... என்றான் ராகவ்.
***************
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.