• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -39

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal


இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -39

ஃபோனை பார்த்து அதிர்ந்தாள் ரேஷ்மி.

ஆம்.... அவள் கன்னத்தை காட்ட.... அதில் விஷ்வா முத்தம் கொடுக்கிறான்.

மற்றொன்று வீடியோ.....

இப்போ நீ கிஸ் பண்ண இல்ல.... இப்போ நான் உனக்கு கொடுக்கிறேன்.... என்று சொல்லி அவள் விஷ்வாவின் இதழில் முத்தமிடும் வீடியோ இருந்தது.

அவளை நினைத்து அவளுக்கே அருவருப்பாக இருந்தது.... நம்ம தான் அவனை உசுப்பேத்தி விட்டிருக்கோம்.... எந்த ஆம்பளை.... ஒரு பொண்ணு வலிய வந்து கிஸ் பண்ணா தள்ளிவிட்டுட்டு போவான். ஆனா.... அன்னைக்கு அண்ணன் அவ்ளோ அடி அடிச்ச போது.... உன் தங்கச்சி தான் என்னை முதல்ல கிஸ் பண்ணான்னு சொல்ல எவ்ளோ நேரம் ஆயிருக்கும்..... என்று நினைத்து கொண்டாள். கண்கள் கலங்கியது.

டைம் ஆகுது அத்தை நாங்க கிளம்பட்டுமா?..... இன்னைக்கு வெள்ளிக்கிழமை.... ஸோ....ரேஷ்மி வீட்டுக்கு வந்து விளக்கேத்தனும்னு சொன்னாங்க அம்மா..... என்றான் விஷ்வா.

சரிப்பா....இந்தாப்பா பால் பாயசம்.... இதை குடிச்சிட்டு.... டிரெஸ் வாங்கி வச்சிருக்கோம்.... அதை வாங்கிக்கிட்டு கிளம்புங்க.... என்றாள் கனகவள்ளி.

எதுக்கு அத்தை இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்?....

இல்ல பா.... இது தான் முறை..... நியாயமா விருந்தே வெச்சிருக்கனும்.... எனக்கு உடம்பு சரியில்லாததால உங்க அத்தையால செய்ய முடியல....என்றார் ராஜசேகர்.

அச்சோ மாமா.... முதல்ல நீங்க உடம்பை பாத்துக்கோங்க.... என்றான் விஷ்வா.

ரேஷ்மி என்று கனகவள்ளி கூப்பிட.....

முகம் கழுவி.... வேறு உடை மாற்றி.... வகிடில் குங்குமம் இட்டு அழகோவியமாக வந்து நின்றாள் ரேஷ்மி.

அவளை பார்த்ததும் ஒரு நொடி மெய் மறந்தான் விஷ்வா.

கனகவள்ளி....ரேஷ்மியை பார்த்து சுற்றி திரிஷ்டி உடைத்தாள்.

ஒரு தட்டில் டிரெஸ் மற்றும் வெற்றிலை பாக்கு பழம் போன்ற தாம்பூலம் வைத்து நின்றனர் ராஜசேகரும் கனகவள்ளியும்.... ரேஷ்மியும் விஷ்வாவும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு.... தாம்பூலத்தை வாங்கி கொண்டு கிளம்பினார்கள்.

அப்பா.... உடம்பை பாத்துக்கோங்க.... அம்மா நீங்களும் என்று சொல்லி விட்டு கண்கள் கலங்க இருவரையும் ஒரு முறை கட்டி அணைத்து கொண்டு பின்னர் கிளம்பினாள் ரேஷ்மி.

காரில் செல்லும் போது....

இனிமே நீ கவலைப்படாதே..... அந்த டிரைவரை வேலையை விட்டு தூக்கிட்டேன்.... மத்தவங்களுக்காக என் கிட்ட கிளோஸ்ஸா இருக்குற மாதிரி இனிமேல் உனக்கு நடிக்க தேவை இருக்காது .... என்றான் விஷ்வா.

எப்படி.... இவனுக்கு நம்ம மனசு தெரிஞ்சுது.... என்று யோசித்தாள்.

இரவு.....

கட்டிலில் பூ... அலங்காரங்கள் செய்யப்பட்டு.... பல பழ வகைகள் அடுக்கி வைக்கப்பட்டு.... இனிப்பு வகைகள் பல இருந்தது விஷ்வாவின் அறையில்.....

ராஜேஸ்வரி ரேஷ்மியை குளித்துவிட்டு வரச்சொல்லி பட்டுப்புடவை உடுத்த சொல்லி.... தலையை வாரி நிறைய பூ வைத்து.... உள்ளே அனுப்பி வைத்தாள்.

ரூமுக்கு உள்ளே நடுக்கத்துடன் சென்றாள் ரேஷ்மி.

பெட்டில் அமர்ந்து ஃபோன் பேசிக் கொண்டு இருந்தான் விஷ்வா.

பயந்து கொண்டே உள்ளே சென்று பால் சொம்பை அங்கிருந்த டேபிலில் வைத்தாள்.

டேய்.... நான் அப்புறமா பேசறேன் டா.... பை.... என்று ஃபோனை வைத்தான் விஷ்வா.

அவளை பார்த்து.... வா.... வந்து உட்காரு.... என்றான்.

அவள் நின்று கொண்டே இருந்ததால்.... அவள் கையை பிடித்து அருகில் அமர வைத்தான்.

உடல் நடுங்க வியர்க்க ஆரம்பித்தது ரேஷ்மிக்கு. ஏசி கூலிங்கை அதிகப்படுத்தியவன்.... அங்கிருந்த ஸ்வீட்டை எடுத்து சாப்பிடறீயா.... என்றான்.

வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.

அதிலிருந்து ஒரு பன்னீர் ஜாமூனை எடுத்து அவள் இதழ் அருகில் கொண்டு வந்து....இதை விட இது ஸ்வீட்டா இருக்கும் போலையே.... என்று சொல்லி அந்த ஸ்வீட்டை கீழே போட்டு விட்டு.... அவள் இதழ்களில் தன் இதழை பதித்தான்....

கார் சடன் பிரேக் போட்டு நிற்க....

அவன் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரேஷ்மி கனவு கலைந்து அதிர்ந்து எழுந்தாள்.

சே.... கனவா.... என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

கனவு நினைவாகும் நேரமிது என்பது போல பூ அலங்கார ஆட்கள் வராந்தாவில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

வாம்மா.... ரேஷ்மி.... குளிச்சிட்டு வந்து விளக்கேத்து.... என்றாள் ராஜேஸ்வரி.

அச்சச்சோ.... என்னடா இது.... கனவு பலிச்சிடும் போல.... என்று நினைத்து கொண்டே குளிக்கச் சென்றாள்.

விஷ்வா ராஜேஸ்வரியிடம் கிட்சனுக்கு அழைத்து சென்று

என்னம்மா இதெல்லாம்.... என்றான்.

இதெல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயம்.... உனக்கு ஒண்ணும் தெரியாது....

அம்மா.... பிளீஸ்....நானே அக்காவுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டேனே ன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கேன்.... இப்போ நீங்க இதெல்லாம்.... அதுவும் இல்லாம பாவம் ரேஷ்மி கூட.... அவ நார்மலாக கொஞ்ச நாளாவது ஆகனும் இல்ல.... எதுவுமே புரிஞ்சிக்க மாட்டீங்களா?.... என்றான் விஷ்வா.

கண்கள் கலங்க.... அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள் ராஜேஸ்வரி.....
சாரி பா..... நான் இதை பத்தி எல்லாம் யோசிக்கல.... நான் இப்பவே அவங்கள போகச் சொல்லிடறேன்....

சீக்கிரமா மா.... வைஷூ வந்திட போறா.... ரேஷ்மிக்கும் தெரியவேண்டாம்.

ஹூம்.... சரிப்பா.... என்று சொல்லி விட்டு வெளியே வந்து அவர்கள் அனைவரையும் போகச் சொல்லி விட்டு வந்தாள் ராஜேஸ்வரி.

வெளியில் இருந்து வந்த வைஷாலி விஷ்வா ராஜேஸ்வரியிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்தாள் கண்கள் கலங்க....

குளித்து விட்டு விளக்கேற்றி.... பூஜை செய்தாள் ரேஷ்மி. என்னடா இது குளிக்க போறதுக்கு முன்னாடி ஏதோ பூ அலங்கார ஆட்கள் வராந்தாவில் உட்கார்ந்து இருந்த மாதிரி இருந்துச்சே..... அதுவும் கனவா?..... வீட்டுக்குள்ள நடந்து வரும்போது கூடவா நம்ம தூங்கிக்கிட்டே வந்தோம்....என்று யோசித்துக் கொண்டே பூஜை செய்தாள் ரேஷ்மி. தனக்கு ஏற்ற மருமகள் கிடைத்துவிட்டாள் என்ற ஆனந்தத்தில் திளைத்து போனாள் ராஜேஸ்வரி.

இரவு டின்னருக்கு ராஜேஸ்வரி கிட்சனில் ரெடி செய்து கொண்டிருந்தாள் ‌. ரேஷ்மி உள்ளே சென்று....

அத்தை நான் ஹெல்ப் பண்ணவா?....

வாம்மா....

என்ன டின்னர்?

சப்பாத்தி - டால்.... அப்புறம் கொஞ்சமா குருமா..... டால் காரமா செஞ்சா மாமாவுக்கு ஆகாது.... காரம் கம்மியா செஞ்சா விஷ்வாவுக்கு பிடிக்காது.... அதான் காரமான குருமா கொஞ்சமா செஞ்சிடுவேன்.

ஓ....ஓகே.... குருமா நான் செய்யவா?...

சிரித்து கொண்டே.... ஹூம்.... சரி செய் டா கண்ணு.... என்றாள் ராஜேஸ்வரி.

சீக்கிரமாகவே குருமா செய்து முடித்தாள். வாசனை நன்றாகவே வந்தது..... வாயில் ஒரு ஸ்பூன் விட்டு பார்த்த ராஜேஸ்வரி....

சூப்பர் மா.... இவ்வளோ சீக்கிரமா டேஸ்டியா பண்ணிட்டியே.... உங்க வீட்ல நீ சமைப்பியா?.... நிறைய பண்ணுவேன் அத்தை.... கல்யாணம் ஆகி போயிட்டா எங்களுக்கு எல்லாம் நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னு அப்பாவும் அண்ணாவும் அம்மாவை வெறுப்பேத்துவாங்க.... என்று சொல்லி விட்டு சிரித்து கொண்டே கண்கள் கலங்கினாள்.

அவள் தோளை தடவி தேற்றிவிட்டு...... இங்க இருக்கிறவங்களையும் அப்படி சொல்ல வெச்சிடுவ போல.... என்று சொல்லி சிரித்தாள் ராஜேஸ்வரி.

அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். ராமகிருஷ்ணன் வர லேட்டாகும் என்று மெஸேஜ் அனுப்பி இருந்தார்.

குருமா விச்தியாசமாக இருந்ததை முதல் வாய் வைக்கும் போதே தெரிந்துக் கொண்டான் விஷ்வா. சுவையும் நன்றாக இருந்தது. ரேஷ்மி விஷ்வா ஏதாவது சொல்லுவான் என்று பார்த்து கொண்டு இருந்தாள்.

ரேஷ்மி முகம் வாடியதை கவனித்தாள் ராஜேஸ்வரி.

வைஷூ.... இன்னைக்கு குருமா நம்ம ரேஷ்மி தான் பண்ணினா.... சாப்பிட்டு பாரேன்.... என்று சொல்லி அவளுக்கு தட்டில் வைத்தாள்.

எல்லாமே சமைக்க தெரியுமா உனக்கு?.... என்றாள் வைஷாலி.

ஸ்மைல் செய்தாள் ரேஷ்மி.

ஏய்.... உண்மையாகவே சூப்பரா இருக்கு.... அம்மா நீங்க கோச்சிக்காதீங்க.....

இல்லம்மா.... நான் ஏன் கோச்சிக்கப் போறேன்.... என் மருமக நல்லா சமைச்சா எனக்கு பெருமை தான.... என்று சொல்லி அவர்கள் மூவரும் சிரிக்க.... அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து ரூமுக்குள் சென்றான் விஷ்வா.

மூவரும் அதை கவனிக்க தவறவில்லை.

வைஷாலி சாப்பிட்டு விட்டு ரூமிற்கு சென்றதும்....

ராஜேஸ்வரி ரேஷ்மியிடம் வந்து....

அம்மாடி.... இன்னைல இருந்து நீ உங்க ரூம்ல படுத்துக்கலாம்.... பழைய விஷயங்களை எல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடு மா.... விஷ்வா என் புள்ளைன்னு சொல்லல.... உண்மையிலேயே அவன் நல்லவன் தான் மா.... ஒரு ஈ எரும்புக்கு கூட கெடுதல் நினைக்க மாட்டான்..... ஏதோ போறாத காலம் அவனை அப்படி தப்பு பண்ண வச்சிடிச்சு.... நான் உன்னை இப்பவே அவனை முழு மனசோட ஏத்துக்க சொல்லல..... ஆனா தயவு செஞ்சு அவனை வெறுத்திடாத.... என்று கண்கள் கலங்க சொல்லி விட்டு உள்ளே சென்றாள் ராஜேஸ்வரி.

ரேஷ்மி விஷ்வாவின் ரூமிற்கு வந்தாள்.

விஷ்வா ஹெட் ஃபோன்ஸ் மாட்டிக் கொண்டு அவனுடைய டேபிளில் லேப் டாப் வைத்து ஏதோ எழுதிக்கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தான்.

அங்கே இருந்த ஒரு சேரில் அமர்ந்தாள்.

அவளைப் பார்த்ததும்.... தன் ஹெட் ஃபோனை கழட்டி விட்டு....

நீ போய்.... பெட்ல படுத்துக்கோ.... நான் இந்த சோஃபாவில் படுத்துக்கிறேன்.... என்றான் விஷ்வா.

பதில் ஏதும் பேசாமல்.... சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். கண் அயர்ந்தாள் ரேஷ்மி.

விஷ்வா தன் ஃபோன் அடிக்க.... சத்தத்தில் ரேஷ்மி முழித்து கொள்வாளோ என்று நினைத்து கட் செய்து விட்டு.... பால்கனி சென்று அந்த நம்பருக்கு ஃபோன் போட்டான்.

என்னடா?.... இந்த நேரத்துல?....

ஓ சாரி மச்சான் உனக்கு கல்யாணம் ஆயிடிச்சு ன்னு மறந்திட்டேன் டா.... சாரி சாரி டிஸ்டர்ப் பண்ணதுக்கு என்றான் ஜானி.

அடச்சே.... வாயை மூடு டா லூசு.... ரேஷ்மி தூங்கறா டா.... சவுண்ட் கேட்டு முழிச்சிடப் போறான்னு கட் பண்ணிட்டு இப்போ பால்கனி வந்து பேசறேன்.

ஓ... ஓகே டா மச்சான்.... ஒண்ணும் இல்ல.... நாளைக்கு சேட்டர்டே இல்ல அதான் வழக்கம் போல கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸ் பண்ணவா?.... நீயே ஒரு மூணு வாரமா ஆட வரலையே.... அதான் உன்னை கேட்கலாம் ன்னு.....

தெரியல டா.... நாளைக்கு ஒரு வேலை இருக்கு அதை முடிக்கனும்.... காலேஜ் பிராஜெக்ட் இருக்கு அதை முடிக்கனும்.... அப்புறம்.... எனக்கு கல்யாணம் ஆயிடிச்சே டா.... நான் எங்க அப்பாவோட காசுல சாப்பிட்டா பரவாயில்ல.... ஆனா என் பொண்டாட்டியை எங்க அப்பா காசுல சாப்பிட வைக்கமாட்டேன் டா.... அதான் பார்ட் டைம் ஜாப் டிரை பண்றேன்.... பீப்பில் பெர் ஹவர் வெப்சைட்டில்.... என்னோட கோடிங் நாலேட்ஜ் அப்புறம் வெப் பேஜ் டிசைனிங் எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணிருக்கேன்.... அதுல எனக்கு ஒர்க் அலாட் பண்ணிருக்காங்க.... அப்பா கம்பெனில ஜாயின் பண்ற வரைக்கும் இது மாதிரி எதாவது செஞ்சு காசு சம்பாதிச்சு அம்மா கிட்ட கொடுத்திடுவேன்.... அதுவும் இல்லாம ரேஷ்மிக்கும் தனிப்பட்ட தேவைகள் இருக்கும்.... அதுக்கு காசு யார் கிட்ட கேட்பா அவ.... கல்யாணம் ஆன பிறகும் அவ அப்பா, அம்மா, அண்ணா கிட்ட போய் அவ காசு கேட்டா ன்னா.... அது அவளுக்கும் எனக்கும் அசிங்கம்.... அதுக்காகவும் தான் டா நான் சம்பாதிக்க நினைக்கிறேன்....

மச்சான்.... உண்மையிலேயே.... உன்னை பிரெண்டுன்னு சொல்றதுக்கு பெருமையா இருக்கு டா..... தண்ணியா காசை செலவழிச்ச விஷ்வா எங்க?..... இப்போ ஒரு ரூபாயா இருந்தாலும் அவனே உழைக்கனும்னு நினைக்கிற விஷ்வா எங்க?..... கிரேட் டா மச்சான்..... ஓகே டேக் கேர்..... ரொம்ப நேரம் முழிச்சிக்கிட்டு உடம்பை கெடுத்துக்காத..... என்றான் ஜானி.

ஓகே டா மச்சான்.... பை.... என்று சொல்லி விட்டு மெதுவாக உள்ளே வந்து தன் வேலையை தொடர்ந்தான் விஷ்வா....

ஆஃபீஸில் இருந்து வந்த ராமகிருஷ்ணன்.... காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழையும் முன் பால்கனியில் நின்று விஷ்வா பேசியதை கேட்டார். தன் மகன் உருப்படாதவன்.... எதற்கும் லாயக்கில்லை என்று நினைத்து நிறைய நாட்கள் வருந்தியுள்ளார்..... ஆனால் இன்று விஷ்வா பேசியதை கேட்டவுடன்.... மனமார சந்தோஷப்பட்டார். அதை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளே சென்றார்.

ராஜேஸ்வரி சப்பாத்தி டால்... தட்டில் வைத்து ரூமிற்கே எடுத்து வந்து கொடுத்தாள்.

அதை கையில் பிட்டு சாப்பிட்டுக்கொண்டே விஷ்வா கூறிய அனைத்தையும் ராஜேஸ்வரியிடம் கூறினார்.

என் புள்ள அப்படியா சொன்னான்.... என்று கண்கள் கலங்க கேட்டாள்.
அந்த ஸ்படிக மாலையை போட்டவுடன் எவ்வளவு மாற்றம் பாருங்க அவனுக்குள்ள..... என்றாள்.

அது என்னவோ சரி தான்.... காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததா ன்னு தெரியல.... என்றார் ராமகிருஷ்ணன் சிரித்து கொண்டே....

போங்க.... எப்போ பாத்தாலும் உங்களுக்கு கிண்டல் தான்.... என்று இருவரும் பேசி சிரித்தனர்.

அவன் காசு கொடுத்தா நான் வாங்கிக்கனுமா?.... அதெல்லாம் முடியாது.... என்றாள் ராஜேஸ்வரி.

இல்ல ராஜி.... அவன் கொடுத்த உடனே வாங்காத.... வேண்டாம் ன்னு சொல்லு.... கண்டிப்பா அவன் உன்னை வற்புறுத்தி கொடுப்பான்.... அப்புறம் வாங்கிக்கோ.... அவன் நினைக்கிறது கரெக்ட்.... அவனோட மனைவிக்கு அவன் சம்பாதிச்சு செலவு பண்ண நினைக்கிறான்.... அதை நம்ம உதாசின படுத்தக் கூடாது.

சரிங்க.... என்றாள் ராஜேஸ்வரி.

தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.