இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -40
உள்ளே வந்த விஷ்வா.... ரேஷ்மி தூங்கிக் கொண்டிருக்கிறாளா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சோஃபாவில் போய் அமர்ந்து தன் லேப் டாப்பை மடியில் வைத்து கொண்டு அவன் செய்துகொண்டிருந்த வேலையை முடித்தான்.
பின்னர் கட்டிலில் படுத்து இருந்த தன்னவளை சிறிது நேரம் பார்த்து ரசித்து கொண்டிருந்தான். தன்னவளை தன் மார்போடு அணைத்துக் தூங்கக் கூடிய நாள் என்று வருமோ? இல்லை வராதோ? என்று நினைத்து கொண்டே சோஃபாவில் படுத்து உறங்கினான்.
சனிக்கிழமை காலை...
ரேஷ்மி எழுந்து குளித்து விட்டு கிட்சனுக்கு சென்றாள். அங்கே ராஜேஸ்வரி டிபன் ரெடி பண்ணிக்கொண்டு இருந்தாள்.
அத்தை.... குட் மார்னிங்.... என்றாள்.
குட் மார்னிங் டா கண்ணு....
என்ன டிபன் அத்தை.... நான் பண்ணட்டுமா?....
பொங்கல், சாம்பார், சட்னி....என்ன இவ்வளோ சீக்கிரமா குளிச்சிட்டு வந்திட்டு இருக்க.....
என்னோட அத்தைக்கு குளிச்சிட்டு கிட்சனுக்கு வந்தா ரொம்ப புடிக்கும் ன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.... அதான்.... என்று சொன்ன அடுத்த நொடி ராஜேஸ்வரி வேகமாக வந்து.... ரேஷ்மியை கட்டி அணைத்து கொண்டாள். என் தங்கம்..... என்றாள்.
ரேஷ்மிக்கும் தன் அம்மாவை போல பார்த்துக் கொள்ளும் மாமியார் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அத்தை....
சொல்லுமா....
நான் இந்த சேட்டர்டே அன்ட் சன்டே எங்க வீட்டுக்கு போயிட்டு வரவா.... இன்னைக்கு நைட்டு மட்டும் அங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு ஈவினிங் வரவா.... அதுவும் இல்லாம நான் மன்டே காலேஜூக்கு கொண்டு போக வேண்டிய புக்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வர மறந்திட்டேன்....
இதெல்லாம் கேட்கனுமா டா கண்ணு.... இன்னைக்கு மட்டும் இல்ல.... வாரம் வாரம் சனிக்கிழமை காலை போயிட்டு ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் வா.... பாவம் அவங்களுக்கும் உன் கூட இருக்கனும்னு ஆசை இருக்கும் இல்ல.... கல்யாணம் ஆன உடனே பொண்ணை பிரிஞ்சி இருக்கனும்னா.... யாருக்கா இருந்தாலும் கஷ்டமா தான் இருக்கும்.... நீயும் அடிக்கடி போயிட்டு வா.... அவங்களையும் வந்து போகச் சொல்லு.... என்றவுடன்.... இம்முறை ரேஷ்மி ராஜேஸ்வரியை கட்டி அணைத்து கொண்டாள்.
தேங்க்ஸ் அத்தை.... தேங்க் யூ சோ மச்..... என்றாள்.
ஏய்.... நான் தான் சொன்னேன் இல்ல.... நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம் ன்னு.... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ராஜேஸ்வரி.
ஓகே அத்தை.... நான் டிபன் சாப்பிட்டு விட்டு போயிட்டு வரேன்.
சரிம்மா.... அப்புறம் ஒரு விஷயம் என்று ராமகிருஷ்ணன் சொன்னதை ரேஷ்மியிடம் சொல்ல வந்தாள் அதற்குள் ராஜி.... என்று ராமகிருஷ்ணனின் குரல் கேட்க....இதோ வரேன் மா.... என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் ராஜேஸ்வரி.
சட்னி அரைத்து ரெடி செய்து வைத்தாள் ரேஷ்மி.
அனைவரும் காலை உணவு சாப்பிட்டு முடித்து அவரவர் வேலைகளை பார்க்க தொடங்கினார்கள்.
ரூமுக்குள் வந்து.... நான் எங்க வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு ஈவினிங் வரேன்.... என்று விஷ்வாவிடம் கூறினாள் ரேஷ்மி.
அவன் காதில் ஹெட் ஃபோன் மாட்டிக் கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான். அவள் சொன்னது அவனுடைய காதில் விழவில்லை.
அவன் வேண்டும் என்றே அவ்வாறு செய்கிறான் என்று நினைத்து கொண்டாள்.
தன் ஹேன்ட்பேகை எடுத்துக் கொண்டு வெளியே சென்று தன் மாமியாரிடம்
நான் கிளம்பட்டுமா அத்தை?.... என்றாள்.
சரிடா கண்ணு.... விஷ்வா கிட்ட சொல்லிட்டியா?.... அவன் டிராப் பண்றானா உன்னை?....
நான் சொன்னேன்.... அவரு ஏதோ வேலை பண்ணிக்கிட்டு இருக்காரு..... காதுல ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு.... நான் ஆட்டோ புக் பண்ணிருக்கேன்..... அதுல போயிப்பேன்.... நீங்களே அப்புறமா அவர் கிட்ட சொல்லிடுங்க அத்தை.... பிளீஸ்.... என்றாள்.
அதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்று நினைத்து....
சரி மா.... என்றாள் ராஜேஸ்வரி.
அப்போது ராமகிருஷ்ணன் ஆஃபீஸூக்கு கிளம்பி வெளியே வந்தார்.
மாமா.... நான் எங்க வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு ஈவினிங் வந்திடவா?
போயிட்டு வா மா..... இதெல்லாம் கேட்கனுமா?.... எப்படி போற?....
ஆட்டோ புக் பண்ணிருக்கேன்.... மாமா.
கேன்சல் பண்ணிடுமா.... நான் ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி உன்னை உங்க வீட்ல விட்டுட்டு போறேன்..... உங்க அப்பாவை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு.... என்றார் ராமகிருஷ்ணன்.
சரிங்க மாமா.... வாங்க.... என்று சந்தோஷமாக சொன்னாள்.
போயிட்டு வரேன் அத்தை என்று சொல்லி விட்டு கிளம்பினாள் ரேஷ்மி.
காரில் செல்லும் போது....
மன்டேல இருந்து காலேஜ் போகட்டுமா மாமா?
கண்டிப்பா போ மா.... படிப்பு எதற்காகவும் பாதில நிக்கக் கூடாது. அதுவும் இல்லாம நீ ரொம்ப நல்லா படிப்ப ன்னு உங்க அப்பா சொல்லி இருக்காரு.... இதுவே ரெண்டு வாராம நீ காலேஜ் போகல.... எல்லா நோட்ஸூம் வாங்கி படிச்சிக்கோ மா....
சரிங்க மாமா....
இரண்டு வருஷம் உங்க அப்பா பே பண்ணி படிக்க வச்சாரு.... அடுத்த ரெண்டு வருஷம் நான் படிக்க வைக்கிறேன்........
கண்கள் கலங்க ரொம்ப தேங்க்ஸ் மாமா....
என்னம்மா நீ.... தேங்க்ஸ் எல்லாம் சொல்ற.... நீயும் எனக்கு பொண்ணு தான் மா..... இவ்ளோ வருஷமா உனக்கு ஃபீஸ் பே பண்ண உங்க அப்பா கிட்ட தேங்க்ஸ் சொன்னியா என்ன?.... என்றார் ராமகிருஷ்ணன்.
நல்ல மாமனார் மற்றும் மாமியார் கிடைத்ததற்கு கடவுளுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்ததும்....
வாங்க மாமா.... என்று அவரை கூப்பிட்டு விட்டு
உள்ளே வேகமாக ஓடிச் சென்று....
அம்மா - அப்பா.... மாமா வந்திருக்கார்..... என்றாள் ரேஷ்மி.
ஹாலில் அமர்ந்து இருந்த இருவரும் எழுந்து நின்று.....
வாங்க... வாங்க.... என்றனர்.
வெளியே கிளம்ப தன் ரூமிலிருந்து ரெடியாகி வெளியே வந்தான் ராகவ்.
ரேஷ்மி.... என்றான்.
அண்ணா.... என்று ஓடி சென்று கட்டிக் கொண்டாள்.
எப்படி டி இருக்க?....
நல்லா இருக்கேன் அண்ணா....
நீங்க....
ஹூம்....
பிறகு ராமகிருஷ்ணனை பார்த்து வாங்க என்றான்.
நல்லா இருக்கியா பா.... என்றார் ராமகிருஷ்ணன் .
ஹூம்.... உட்காருங்க என்றான்.
ரேஷ்மி உள்ளே சென்று அனைவருக்கும் டீ போட்டாள்.
என்ன ராஜசேகர்.... இப்போ எப்படி இருக்கீங்க?
இப்போ பரவாயில்ல சார்....
இரண்டு விஷயங்கள் உங்க கிட்ட பேசணும்....
சொல்லுங்க சார்....
ஒண்ணு.... நம்ம ஏற்கனவே பேசின படி ரேஷ்மிக்கும் விஷ்வாவுக்கும் ரிசெப்ஷன்.... இன்னொன்று.... உங்களுக்கே தெரியும் ராகவும் என் பொண்ணு வைஷாலியும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்கன்னு.... அதான் அவங்களுக்கும் என்கேஜ்மெண்ட் அன்னைக்கே பண்ணிடலாமா?.... உங்க எல்லாருக்கும் இதுல சம்மதமா ன்னு கேட்டுட்டு போகலாம் ன்னு வந்தேன்.
ராஜசேகர் திரும்பி ராகவை பார்க்க....
சார்.... நான் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்.... அதுக்காக எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.... இன்குளூடிங் பினான்ஸ்..... கரெக்ட்டான லொகேஷன் பார்த்துக்கிட்டு இருக்கேன்... அது செட் ஆனதும்.... ஸ்டார்ட் பண்ணிடுவேன்.... என் சொந்த கால்ல நின்னு....என் பொண்டாட்டியை பார்த்துக்குற அளவிற்கு சம்பாதிக்கனும்....அதுக்கு எனக்கு குறைஞ்சது ஆறு மாசம் தேவைப்படும்.... அப்புறமா என்கேஜ்மெண்ட் பத்தி பேசிக்கலாம்.... என்றான்.
மாமா..... எங்க அண்ணனை கேட்டீங்கன்னா.... இப்படி தான் சொல்லுவாரு..... நீங்க ஏற்பாடு பண்ணுங்க.... நான் எங்க அண்ணனை சம்மதிக்க வைக்கிறேன்....என்றாள் ரேஷ்மி... டீயை தட்டில் வைத்து எடுத்து கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்து கொண்டே....
சிரித்து கொண்டே டீயை எடுத்து கொண்டார்கள் அனைவரும்.
ரேஷ்மி..... என்றான் ராகவ்.
அண்ணா.... என்கேஜ்மெண்ட் தான அண்ணா சொல்றாங்க..... கல்யாணம் ஆறு மாசத்துக்கு அப்புறம் நீங்க சொன்ன மாதிரி பண்ணிக்கலாம்.... பிளீஸ் அண்ணா.... என்றாள்.
ராகவ் தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தான்.
அவர்களும் ஓகே என்று தலை அசைக்க.....
சரிங்க சார்....உங்க விருப்பப்படி செய்யுங்க.... என்று சொன்னான் ராகவ்.
என்னப்பா இன்னும் நீயும் உங்க அப்பாவும் சாரு ன்னு சொல்றீங்க?....
இல்ல சார்.... அவ்ளோ சீக்கிரம் எனக்கு முறை வெச்சு கூப்பிட்டு பழக்கமில்லை.... டைம் ஆயிடிச்சு.....நான் கிளம்பறேன்.... என்றான்.
சரி.... நானும் கிளம்பறேன்.... என்றார் ராமகிருஷ்ணன்.
மாமா இருங்க ஜூஸ் கலந்து தரேன் என்றாள்.
அம்மாடி.... இப்போ தான டீ குடிச்சேன்.... ஜூஸ் எல்லாம் வேண்டாம் மா.... என்றார்.
அவர் காரில் கிளம்பியதும்.....
ராகவ் ரேஷ்மியிடம்....
விஷ்வா நம்பர் இருக்கா?
ஹூஹூம்... என்றாள்.
என்னடி நீ இன்னும் நம்பர் வாங்கிக்கிலையா?.... என்றாள் கனகவள்ளி.
எதுக்கு அண்ணா?
ஒண்ணும் இல்ல.... கொஞ்சம் பேசணும்....அண்ணிக்கிட்ட இருக்கும் வாங்கிக்கோங்க.....
அது எனக்கு தெரியாதா டி.... என்று சொல்லி அவள் தலையில் செல்லமாக தட்டிவிட்டு கிளம்பினான்.
அம்மா.... இன்னைக்கு நைட்டு நான் இங்கே தான் தங்க போறேன் என்று சொல்லி கட்டிக் கொண்டாள்.
சந்தோஷம் மா....
அம்மா.... இன்னைக்கு மட்டும் இல்ல.... வாரா வாரம்.... சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைல போய் உங்க அம்மா அப்பா கூட இருந்து விட்டு வா ன்னு அத்தை சொன்னாங்க....
உண்மையிலேயே நீ கொடுத்து வச்சவ டி.... எந்த மாமியார் இப்படி சொல்லுவாங்க....
ஹூம்.... அம்மா அப்பா மாதிரி பாத்துக்குற நல்ல மாமியார் மாமனார் கிடைச்சிருக்காங்க.... என்று சொல்லி ராமகிருஷ்ணன் காலேஜ் ஃபீஸ் பே பண்றேன் என்று சொன்னதை அவர்களிடம் கூறினாள்.
ராஜசேகரும் கனகவள்ளியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
அச்சச்சோ என்றாள் ரேஷ்மி....
என்னடி ஆச்சு?....
அம்மா.... என் ஃபோனை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.... ஹேண்ட் பேக்ல இருக்கு ன்னு நினைச்சேன்.... என்றாள் ரேஷ்மி.
**********
தன் வேலையை முடித்து சப்மிட் பண்ணிவிட்டு வெளியே வந்தான் விஷ்வா.
அம்மா.... அம்மா.... என்றான்.
என்னடா....
என்ன வீடே ஒரே காலியா இருக்கு....
ஏய்.... சுத்தி வளைச்சு பேசாம.... நேரா கேளு....
சரி சரி.... என்று அசடு வழிய.... ரேஷ்மி எங்கே?.... என்றான்.
அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா....
ஓ.... ஈவினிங் போய் கூட்டிக்கிட்டு வரவா....
அவ இன்னைக்கு அங்க ஸ்டே பண்ண போறா....
ஏன்?.... எதுக்கு?....
டேய்.... டேய்.... உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஒட்டே இல்ல.... இப்பவே நீ இப்படி பேசறன்னா.... இன்னும் அன்யோன்யமா இருந்தீங்கன்னா.... அவ்வளவுதான் போலையே.... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ராஜேஸ்வரி.
அம்மா.... ஏன்னு சொல்லுங்க....
அவ தான் கேட்டாடா.... ஒன் டே ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு ஈவினிங் வந்திடவா ன்னு..... இல்ல கூடாது.... முடியாது ன்னு சொல்ல சொல்றியா?.... அதுவும் இல்லாம அவங்க அம்மா அப்பா வீட்டை விட்டுட்டு ஒரேயடியா நம்ம வீட்லையே இருக்க முடியுமா?.... அதான் வாரா வாரம் சேட்டர்டே அன்ட் சன்டே அங்க போயிட்டு வரச் சொல்லிட்டேன்....
அம்மா.... என்னம்மா நீங்க.... வாரா வாரம் எதுக்கு?....
விஷ்வா.... நீ எங்களை விட்டு விட்டு அங்க போய் இருன்னா இருப்பியா?..... முடியாது இல்ல.... அந்த மாதிரி தானே அவளுக்கும் இருக்கும்..... நம்ம குடும்பத்தோட சேர அவளுக்கு டைம் கொடுக்கனும் டா.....
ஹூம்.... புரியுது மா..... இருந்தாலும் என் கிட்ட ஒரு வார்த்தை அவ சொல்லி விட்டு போயிருக்கலாம்.....
ஏய்.... அவ சொன்னாலாம்.... நீ தான் காதுல மாட்டிக்கிட்டு ஏதோ வேலை பண்ணிக்கிட்டு இருந்தன்னு சொன்னா.....
ஓ.... அப்படியா.... என்று சொல்லி விட்டு ரூமிற்கு சென்றான்.
உண்மையிலேயே நம்ம கிட்ட சொன்னாளா இல்ல அம்மா கிட்ட அப்படி சொல்லி வச்சிருக்காளா?.... இன்னைக்கு ராத்திரி அவளை பார்க்காம எப்படி தூங்கறது.... என்று நினைத்து கொண்டே இருந்தான்.
விஷ்வா.... விஷ்வா.... என்று கூப்பிட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் ராஜேஸ்வரி.
என்னம்மா....
இந்தா ஃபோன்.... ரேஷ்மி லைன்ல இருக்கா....
என்ன?.... ரேஷ்மியா?..... என் கிட்ட பேசணும் ன்னு சொன்னாளா? என்று ஃபோனை வாங்கி...
ஹலோ.... என்றான்.
ஒரு மணி நேரம் கூட பேசாம இருக்க முடியல போல என்று நினைத்து கொண்டே வெளியே சென்றாள் ராஜேஸ்வரி.
நான் என்னோட ஃபோனை சார்ஜ்ல போட்டுவிட்டு மறந்து வந்திட்டேன்.... நீங்க எதாவது வேலையா வெளியே போனீங்க ன்னா.... எனக்கு ஃபோனை எடுத்து வந்து தரமுடியுமா?.... எதாவது நியர் பை பிலேஸ்ஸா இருந்தாலும் நான் பைக்ல வந்து வாங்கிக்கிறேன்.
ஓகே.... நான் சொல்றேன்.... என்றான் விஷ்வா.
தேங்க்ஸ்.... என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள் ரேஷ்மி.
அம்மா.... இந்தாங்க உங்க ஃபோன் என்று சொல்லி கொடுத்தான்.
என்னடா.... உன்னை மாதிரியே அவளுக்கும் உன்னை பிரிஞ்சி இருக்க முடியலையா?....
அம்மா.... அம்மா.... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?...
அவ ஃபோனை இங்க விட்டுட்டு போயிட்டா.... வெளியே போற வேலை இருந்தா எடுத்து கொண்டு வந்து தரமுடியுமா?.... அவளே கூட பைக்கில வந்து எதாவது பிலேஸ்ல வாங்கிக்கிறேன்னு சொல்றா....
டேய்.... மரமண்டை....
அம்மா.... என்னம்மா நீங்க.... இப்படி திட்றீங்க....
நீயெல்லாம் காலேஜ் படிக்கிற பையனா டா....
எதாவது ஒரு காஃபி ஷாப் வரச்சொல்லி கோடுக்குற சாக்குல கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம் இல்ல.... நீ தான் அவ நைட் வரலை ன்னு ஃபீல் பண்றீயே.... என்றாள்.
அம்மா.... யூ ஆர் கிரேட்.... நீங்க லவ் மேரேஜா?....
இல்லடா.... ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பண்றோம்.... என்று வெட்கப் பட்டுக்கொண்டே சொன்னாள் ராஜேஸ்வரி.
அம்மா.... போதும்.... உங்களுக்கு சீக்கிரமா 60 ஆம் கல்யாணம் வரப்போகுது.... இந்த வயசுல உங்களுக்கு வெட்கம் லவ் எல்லாம் தேவையா?....
டேய்..... லவ் க்கு வயசு தேவையில்லை.... மனசு தான் தேவை....
அம்மா.... போதும் ஆளை விடுங்க.... நான் கிளம்பறேன்.
ரூமிற்கு சென்று அவளுடைய ஃபோனை எடுத்து பார்த்தான்.
அவள் வால்பேப்பரில் அவளுடைய அழகிய ஒரு செல்ஃபி ஃபோட்டோவை வைத்திருந்தாள்.
அதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் விஷ்வா.
அப்போது அவனுடைய ஃபோன் அடித்தது....
எடுத்து ஹலோ.... என்றான்.
ஹலோ.... நான் ராகவ் பேசறேன்....
எந்த ராகவ்?...
ஹூம்.... என்று தொண்டையை கருமியவாறே ரேஷ்மியோட அண்ணன் ராகவ்.
கையில் வைத்திருந்த ரேஷ்மி ஃபோனை பயத்தில் கீழே போட்டு விட்டான்.... நல்ல வேலை பெட்டில் விழுந்ததால் ஒன்றும் ஆகவில்லை.
ஓ சாரி.... உங்க நம்பர் இல்லை என் கிட்ட.... என்றான் விஷ்வா.
நான் உன் கிட்ட பேசணும்....
சொல்லுங்க....
ஃபோன்ல இல்ல.... லொகேஷன் அனுப்பறேன் மதியம் இரண்டு மணிக்கு வந்திடு....என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்துவிட்டான் ராகவ்.
என்ன விஷயமா?.... என்று கேட்கும் முன் லைன் துண்டிக்கப்பட்டது.
உங்க அண்ணன் எதுக்கு வரச் சொல்றாரு ன்னு தெரியலையே..... அன்னைக்கு வாங்கின அடிதான் ஞாபகத்துக்கு வருது....
என்று புலம்பி கொண்டே இருக்கும் போது.... லொகேஷன் மெஸேஜ் வந்தது.
கிளம்ப தயாராக ஆனான் விஷ்வா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.