• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-41

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-41

ரேஷ்மியின் ஃபோனை எடுத்து கொண்டு மதியம் ராகவ் சொன்ன இடத்துக்கு சென்றான் விஷ்வா.

அவன் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தான்.

முதல் இரண்டு நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை.

பிறகு விஷ்வாவே பேச ஆரம்பித்தான்.

என்னை மன்னிச்சிடுங்க..... என்று விஷ்வா பேச ஆரம்பித்தவுடன்...

மிச்.... அதை பத்தி நான் இப்போ பேச வரலை.... என்றான் ராகவ்.

பதில் பேசாமல் மௌனமாக இருந்தான் விஷ்வா.

வைஷாலி உயிருக்கு ஆபத்து.

வாட்.... என்ன சொல்றீங்க?.... ஆனா டெல்லில இருந்து வந்ததும் எல்லாம் முடிஞ்சிடிச்சு ன்னு அப்பா சொன்னாறே....

இல்ல.... முடியல....வைஷாலியை நான் காப்பதியதனாலும் அவங்க ஆளுங்க இரண்டு பேர் இறந்ததிற்கு நான் காரணம் ன்னு நினைச்சு என்னையும் கொல்ல பார்க்கிறாங்க....

என்ன சொல்றீங்க?.... போலீஸ் பிரொட்டக்ஷன் கேட்கலாமா?....

அதெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இப்போ என்ன பண்றது?....

எனக்கு ஒரு அன்னோன் கால் வருது.... அவங்க தான் வைஷாலி உயிருக்கு ஆபத்துன்னு எனக்கு கால் பண்ணாங்க.... அப்புறம்.... டெல்லில இருந்து எங்கள கொல்ல வந்த இரண்டு பேர் இறந்திட்டாங்க.... அதனால எங்களை கொல்ல சொன்னவனே சென்னைக்கு வரான்னு சொன்னாங்க....

அப்போ நம்ம கேர் ஃபுல்லா இருக்கலாம்.... அப்பா கிட்ட சொல்லி அந்த பாடி கார்ட்ஸை வரவழைக்கலாம்.....

இல்ல அது முடியாது என்று வைஷாலி சொன்னவற்றை கூறினான்.

இப்போ என்ன பண்றது?.

நான் டெல்லிக்கு போகனும். அந்த அன்நோன் காலை டிரேஸ் பண்ணியாச்சு....எல்லா டீடெயில்ஸ் சொல்றாங்கன்னா அவங்களுக்கு கண்டிப்பா நெக்ஸ்ட் அந்த கில்லர் என்ன பண்ண போறான் ன்னு தெரியும். ஸோ அவன் சென்னைக்கு வந்து என்ன பிளான் வச்சிருக்கான்னு நம்ம கண்டு பிடிச்சு.... அவனை மடக்கிடலாம்.

நானும் உங்க கூட டெல்லி வரவா.....

இல்ல.... இங்க வைஷாலியை பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. நான் அங்க போற நேரத்துல அவன் இங்க வரலாம்..... அதனால நம்ம எப்பவுமே ஜாக்கிரதையா இருக்கனும். நீ உன்னோட ஃபிரண்ட்ஸ் ஹெல்போட வைஷாலியையும் மத்தவங்களையும் பார்த்துக்கோ.... இப்போ நீ ரேஷ்மியை கல்யாணம் பண்ண மெஸேஜ் கூட அவங்களுக்கு போயிருக்கலாம். அதனால.... என்னோட தங்கச்சி அப்புறம் என்னோட அப்பா அம்மாவுக்கு கூட ஆபத்து வரலாம். யாருக்கும் உண்மை தெரியாம நாம பாத்துக்கணும்....

ஓகே.... கண்டிப்பா.... என்னை மன்னிப்பீங்களா?....

டைம் ஆகுது.... நான் சொன்னது எல்லாம் கவனுத்துல இருக்கட்டும். எனக்கு அடிக்கடி அப்டேட்ஸ் கொடு.... பை.... என்று சொல்லி அவன் பதிலுக்கு கூட காத்திராமல் எழுந்தான்.

என்னைக்கு டெல்லிக்கு போறீங்க?

நாளைக்கு ராத்திரி ஃபிளைட்ல....

இருவரும் அவரவர் வழியில் சென்றனர்.
காரில் செல்லும் போது விஷ்வா தன் நண்பர்களிடம் கான்ஃபிரன்ஸ் காலில் அனைத்து விஷயங்களையும் கூறினான்.

நாங்க உன் கூட இருக்கோம் மச்சான்.... கவலைப்படாதே.... என்றனர்.

தேங்க்ஸ் மச்சான்ஸ்.... என்றான்.

தன் பிராஜெக்ட் தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு டைம் பார்த்தான்....மணி ஐந்து.

ரேஷ்மி காலையில் கால் செய்த நம்பருக்கு கால் செய்தான்.

ராஜசேகர் ஃபோனை எடுத்தார்.

மாமா... நான் விஷ்வா பேசறேன்.... ரேஷ்மி கிட்ட ஃபோனை கொடுக்க முடியுமா?

ஒரு நிமிஷம் பா.... என்று சொல்லி ஃபோனை அவளிடம் கொடுத்தார் ராஜசேகர்.

ஹலோ....

ஹாங் ஹலோ.... நான் விஷ்வா....

ஹாங்.... சொல்லுங்க....

பரவாயில்ல இப்போ மரியாதை வருதே.... என்று நினைத்து கொண்டான்.

நான் வி.ஆர் மால்ல இருக்கேன்..... ஃபோன் வாங்கிக்க வரமுடியுமா?.... இல்ல உங்க வீட்ல கொண்டு வந்து கொடுக்கவா....

இல்ல நான் மாலுக்கு வரேன்.... என்று சொல்லி விட்டு.... எந்த ஃபிளோர்?

நான் ஐ மேக்ஸ் ஆப்போஸிட்ல வெயிட் பண்றேன்.

ஓகே.... அங்கேயே இருங்க.... நான் அப்பாவோட ஃபோனை கொண்டு வரல.... என்றாள்.

ஹாங்.... ஓகே ஓகே.... என்றான்.

கால் மணிநேரத்தில் ரேஷ்மி அங்கு வந்தாள்.

வந்தவுடன் அவளுடைய ஃபோனை எடுத்து கொடுத்தான்.

தேங்க்ஸ்.... என்றாள்.

நமக்குள்ள எதுக்கு.... என்று சொல்ல ஆரம்பித்தவன்.... அவள் முறைத்ததை பார்த்து.... வெல்கம்..... என்றான்.

இஃப் யூ டோன்ட் மைன்டு.... ஒரு காஃபி குடிச்சிட்டு போலாமா?

ஒரு நிமிடம் யோசித்தவள்.... ஓகே என்று தலையை ஆட்டினாள்.

மனதிற்குள்.... யெஸ் யெஸ்.... என்று சொல்லி கொண்டான். தேங்க்ஸ் அம்மா என்றான்.

என்ன?....

இல்ல.... ஒண்ணும் இல்ல.... என்றான்.

காஃபே காஃபி டே வில் அமர்ந்தனர்.

கேப்பட்சீனோ.... என்று ஆர்டர் செய்தாள்.

எனக்கும் அதே தான்.... பிளஸ் சில்லி சீஸ் டோஸ்ட் -2.... என்றான்.

அதுவும் அவளுக்கு பிடித்தது.... அவளுக்கும் சாப்பிட ஆசையாக இருந்தது..... தெரிஞ்சி சொல்றானா ? இல்ல இவனுக்கும் பிடிக்குமா?.... என்று நினைத்து கொண்டாள் ரேஷ்மி.

ரேஷ்மியின் ஃபோன் அடித்தது. எடுத்து ஹலோ என்றாள்.

விஜி பேசினாள்.....

சொல்லு டி.... எப்படி இருக்க?

உன் கிட்ட பேசணும்....

என்னடி சொல்லு.... என்றாள் ரேஷ்மி.

இல்லடி.... வெளியே எங்கேன்னா போய் பேசலாமா?...

சரி நாளைக்கு?..…

இல்ல டி.... இப்போ....

என்னடி இப்பவே மணி 6.... இதுக்கு மேல எங்க வந்து பார்க்கிறது....

நீ எங்கே இருக்க?.....உன் வீட்டுக்கு வரவா?

நான் அம்மா வீட்டிற்கு போகப் போறேன்....
இப்போ வி . ஆர் மால்ல இருக்கேன்....

அங்கேயே இரு.... நான் வரேன் என்று சொல்லி ஃபோனை வைத்தாள் விஜி.

காஃபி குடித்தவுடன்.... பைக் ல வந்தீயா?

இல்ல.... ஆட்டோல....

ஏன்.... பைக் ல தான வரேன் ன்னு சொன்ன?

இல்ல பைக்ல சுத்தமா காத்து இல்ல.... பங்சரான்னு தெரியல.....

ஓ... ஓகே....சரி வா.... உன்னை டிராப் பண்ணிட்டு நான் கிளம்பறேன்.

இல்ல.... என் பிரெண்ட் விஜி வரேன் ன்னு சொல்லி இருக்கா.... அதான் வெயிட் பண்றேன். உங்களுக்கு வேலை இருந்தா கிளம்புங்க.... நான் ஆட்டோல போய்க்கிறேன்.

இல்ல இல்ல.... ஒண்ணும் பிரச்சனை இல்லை.... நீ பேசிட்டு வா.... உன்னை டிராப் பண்ணிட்டு நான் கிளம்பறேன்.

உன் ஃபிரெண்ட் கூட நீ தனியா பேசு.... நான் மால்லை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரேன்.... கால் பண்ணு நான் வரேன்....

நம்பர்?..

9840.....99..... என்று சொன்னான்.

ஸ்டோர் செய்து வைத்தாள் ரேஷ்மி.

மிஸ்டு கால் தரேன் என்னோட நம்பர் ஸேவ் பண்ணிக்கோங்க....

இல்ல வேணாம்.... உன்னோட நம்பர் நான் இங்க ஸ்டோர் பண்ணிட்டேன் என்று சொல்லி தன் இதயத்தை காட்டினான்.

அவள் முறைத்தாள்....

ஸாரி.... ஸாரி.... என்றான்.

விஜி வருவதை பார்த்து விட்டு அவன் எழுந்து சென்றான்.

வெகு நேரமாக பேசினார்கள்..

விஜி அழ..... ரேஷ்மி அழ.... விஜி ரேஷ்மி கையை பிடித்து கொண்டு பேச..... அவள் பேச.....பிறகு எழுந்து கிளம்பும் போது விஜியை கட்டிக் கொண்டாள் ரேஷ்மி.

ஒன்றும் புரியவில்லை விஷ்வாவிற்கு....

விஜி கிளம்பியதும்..... விஷ்வா ஐந்து நிமிடங்களாக வெயிட் செய்தான்..... ரேஷ்மி கால் செய்வாள் என்று....

ஆனால்.... அவள் ஏதோ யோசனையில் இருந்தாள்.

அதற்கு மேல் பொறுமை இல்லாமல்....

ரேஷ்மி அருகே வந்து....

என்ன உன் பிரெண்ட் போயிட்டாங்களா?

பதில் இல்லை....

நீ ஃபோன் பண்ணலயே.... நம்பர் ஒழுங்கா ஸ்டோர் பண்ணலையோன்னு வந்தேன்.....

பதில் இல்லை.....

ஹலோ.... ரேஷ்மி.... ரேஷ்மி.... என்று அவள் தோளை தொட்டு உளுக்கினான்.

சுயநினைவுக்கு வந்தவள்....

ஹாங்.... போலாம்.... என்றாள்.

அதற்கு மேல் விஷ்வா எதுவும் கேட்கவில்லை.....

காரில் செல்லும் போதும்..... அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தாள்.

கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. அதை துடைத்துக் கொண்டாள்.

பிறகு அவளே பேச ஆரம்பித்தாள்.

விஜி லவ் பண்றா.....

ஓ.....யாரை?

மதனை....

காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

வாட்?.....

ஆமாம்... அன்னைக்கு நம்ம போய் மதனை பார்த்து விட்டு வந்த பிறகு..... இரண்டு மூன்று முறை மதனிடம் பேசினாளாம்....அவன் மேலே கருணை வந்து அது காதலா ஆயிடிச்சு..... அவனை லவ் பண்ணவா ன்னு என் கிட்ட பர்மிஷன் கேட்டு வந்தா....

பதில் பேசாமல் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தான் விஷ்வா.

எந்த விதத்திலும் எனக்கும் மதனுக்கும் சம்பந்தம் இல்லை..... உனக்கும் மதனுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா அதிகமா சந்தோஷ படற ஆளு நானா தான் இருப்பேன்.... ன்னு சொன்னேன்.... நாளைக்கு விஜி பிரபோஸ் பண்ணப் போறா.... மதன் ஒத்துக்கனுமே ன்னு ஒரே டென்ஷனா இருக்கு.....

விஷ்வா.... அவளுடைய கையை பிடித்து தன் கண்களில் வைத்து கொண்டு..... ஸாரி.... ஸாரி.... ரேஷ்மி.... என்னை அடி.... என்று அவள் கையை எடுத்து அவனுடைய கன்னத்தில் அடித்துக் கொண்டான்.....

கையை எடுத்து கொண்டாள். நடந்த தப்புக்கு உன்னை மட்டும் காரணம் சொல்ல முடியாது.... நான் அந்த வீடியோவை பார்த்தேன்..... நான் தான் உன் கிட்ட கீழ்தனமா நடந்திருக்கேன்....


இல்ல ரேஷ்மி..... நீ போதை மாத்திரை கலந்த ஜூஸை குடிச்சதால அப்படி நடந்துகிட்ட....ஆனா நான் சுய நினைவுல இருந்துக்கிட்டே..... தப்பு பண்ணிட்டேன்.....என்னை மன்னிச்சிடு.... என்று சொல்லி மறுபடியும் அவள் கைகளை எடுத்து அடிக்க வந்தான்.

அவள் கைகளை எடுத்து விட்டாள்.....

நீ..... இப்பவும் மதனை தான் லவ் பண்ற இல்ல?

அவள் சொன்ன பதிலில் திடுக்கிட்டான்.

இல்ல....

அப்புறம்.... விஜி மதனை கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சதை நினைச்சு தான நீ இவ்வளவு நேரமா அழுத?....

ஹூஹூம்.... எப்போ அன்னைக்கு என்னை தொட்டது மதன் இல்லை ன்னு தெரிஞ்சிதோ.... அப்பவே நான் அவனை விட்டிரனும் நினைச்சேன். நம்ம கல்யாணம் ஆனப் பிறகு அவன் சூசைடு அட்டெம்ட் பண்ணானோ.... அப்போ எனக்கு குற்ற உணர்ச்சி ஆயிடிச்சு.... அதான் அவனுக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும்னு நினைச்சேன்.... இப்போ அது நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சு.... ஆனந்தத்துல கண்ணீர் வருது....

என்னை மன்னிப்பாயா?

கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த விஷ்வா வை என்னால மன்னிக்க முடியாது....

அப்போ.... இப்போ இருக்க விஷ்வாவை?

எனக்கே தெரியலை..... உன்னை எனக்கு பிடிச்சிருக்கா இல்ல இல்லையா ன்னு....
கல்யாணம் பண்ணிக்கும் போது உன்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா.... உங்க வீட்ல இருக்குறவங்களாலையும்.... சில சமையம் உன்னாலையுமே உன்னை எனக்கு பிடிச்சிருக்கு....

என்ன?.... என்னை உனக்கு பிடிச்சிருக்கா?.... என்று கண்கள் கலங்க கேட்டான்.

உன்னை பார்க்க தான் வேணும்னே என் ஃபோனை வீட்ல வச்சிட்டு வந்தேன்....

வாட்?..... கம் அகைன்....

கண்களில் நீர் தேங்க.... ஐ திங்க் ஐ ஸ்டார்டட் லவ்விங் யூ..... ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடு..... எல்லாவிதத்திலும் உன்னோட மனைவியா நான் நடந்துக்க....என்றாள்.

ரேஷ்மி.... தேங்க்ஸ்.... தேங்க் யூ சோ மச்....ஐ லவ் யூ.... என்று சொல்லி அவள் கைகளை பிடித்து சொன்னான்.

ஐ லவ் யூ டூ..... என்றாள் அவனுடைய தோள்களில் சாய்ந்து கொண்டு....

இப்போ எங்க போகனும்?.... நம்ம வீட்டுக்கா இல்ல உங்க அம்மா வீட்டுக்கா?.... என்றான் விஷ்வா.

தன் ஃபோனை எடுத்து
ஹலோ அம்மா.... லேட்டா ஆயிடுச்சு.... நாங்க வர இன்னும் லேட் ஆகும்.... நீங்க தூங்குங்க....நான் என்னோட வீட்டுக்கு போயிட்டு.... நாளைக்கு காலைல வந்து புக்ஸ் எல்லாம் எடுத்துக்கிறேன்..... என்றாள்.

என்னோட வீட்டுக்கு ன்னு மகள் சொன்ன ஒரு வார்த்தையிலேயே.... அவள் மனமாற்றத்தை தெரிந்து கொண்டாள் கனகவள்ளி.

சரிம்மா.... என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டு அந்த சந்தோஷத்தை ராஜசேகரிடம் போய் சொன்னாள். அவரும் சந்தோஷப் பட்டார்.

ரேஷ்மியும் விஷ்வா வரும் சந்தோஷமாக அவர்களுடைய வீட்டிற்கு சென்றனர்.

உலகத்திலேயே சந்தோஷமா‌ மனிதன் அவன் தான் என்பது போல உணர்ந்தான் விஷ்வா.

தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.