• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் - 43

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal


இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் - 43

வைஷாலி மற்றும் ராகவ் மேலே கடும் கோபத்தில் சென்னைக்கு வந்தான் சுப்பிரமணி.

அந்த அன்னோன் காலரை தேடி டில்லிக்கு சென்றான் ராகவ்.

ஏர்போர்டில் இறங்கியதும் கால் டாக்ஸி புக் செய்தான் சுப்பிரமணி.

ஏதேச்சையாக டிரைவராக வந்தான் சண்முகம்.

காரில் செல்லும் போது.... சுப்பிரமணி டிரைவரிடம் பேசினான்.

ஹாய்.... உங்க பேரு?

சண்முகம்.... சார்.

சண்முகம்.... என் பேரு செல்வம் (சுப்பிரமணி).... நான் டெல்லில இருந்து வரேன்.... இங்க தங்குவதற்கு நல்ல ஹோட்டல் இருந்தா சொல்லுங்க....

சார் உங்களுக்கு எந்த ஏரியாவுல வேண்டும்....

சிட்டி அவுட்டர்ல.... ரொம்ப டிராஃபிக் இல்லாத இடமா.... எங்க இருக்கு....

சார் டெல்லி அளவுக்கு இங்கே டிராபிக் இருக்காது....

நீ டெல்லி வந்திருக்கியா?

ஆமாம் சார்.... நாலு வருஷம் முன்னாடி.... என் ஃபிரண்ட்ஸ் கூட டூர் போனேன்.

ஓ.... ஓகே.... இங்க லாயர் ரஞ்சித் எங்க இருக்காரு தெரியுமா?

லாயர் ரஞ்சித்தா..... கேள்வி பட்டிருக்கேன்.... ஆனா தெரியல சார்.... எனக்கு தெரிஞ்ச இன்னொரு லேடி லாயர் இருக்கா.....ங்க....

யாரு....

வைஷாலி ராமகிருஷ்ணன்....

தேடி வந்தவளை தெரிந்தவனே கிடைத்தது.... அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

வைஷாலியா?

ஆமாம் சார்.... நீங்க எதுக்காக லாயரை பார்க்கனும்....

ஒரு லேண்ட் டிஸ்பியூட்....

ஓ.... ஓகே....

அவங்க கிட்ட என்னை கூட்டிட்டு போக முடியுமா?

இல்ல சார்....

ஏன் என்னாச்சு?

அந்த வீட்ல தான் மூணு வருஷமா டிரைவரா இருந்தேன்.... என் பிரெண்ட்ஸோட ஒரே ஒரு தடவை காரை எடுத்துக்கொண்டு போயிட்டேன்.... அது கூட அந்த வீட்டு அம்மா கிட்ட சொல்லிட்டு தான்....அது தெரியாத அந்த ராமகிருஷ்ணன்.... சார்.... என்னை அடிச்சிட்டாரு.... மறுநாள் வந்து சாரி சொன்னா.... எல்லாம் சரி ஆயிடுமா?....

அதனால நீ வேலையை விட்டு விட்டு வந்திட்டியா?

இல்ல சார்.... அந்த வீட்ல காலேஜ் படிக்கிற ஒரு பையன் இருக்கான்.... அவனுக்கு தீடீர் ன்னு கல்யாணம் ஆகிடிச்சு....

வாட்....
வைஷாலி தமஂபிக்கு கல்யாணம் ஆனதை நித்தின் சொல்லவே இல்லையே.... ஒருவேளை அவனுக்கே தெரியலையா?....என்று யோசித்தான்.

என்னாச்சு சார்....

இல்ல காலேஜ் பையன் ன்னு சொல்றீங்களே.... அதான்.... அவனுக்கு எப்படி கல்யாணம் ஆச்சுன்னு....

தெரியல சார்.... லவ் மேரேஜ் ன்னு எங்க கிட்ட சொன்னாங்க.... அந்த பொண்ணு அவனும் கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பு பண்ணிட்டாங்க அதனால அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க ன்னு எல்லாரும் பின்னாடி பேசிக்கிட்டாங்க.... ஆனா அந்த பொண்ணுக்கு விஷ்வாவை சுத்தமா புடிக்கல அது மட்டும் தெரியும்....

விஷ்வா யாரு....

அதான் சார் காலேஜ் படிக்கிற பையன்.... லாயர் வைஷாலியோட தம்பி....

ஓ... ஓகே....

நீ தான லவ் மேரேஜ் ன்னு சொன்ன.... இப்போ புடிக்கல ன்னு சொல்ற?...

அதான் சார் எனக்கும் புரியல....


அப்புறம் அந்த பொண்ணுக்கு அவனை புடிக்கல ன்னு எதை வெச்சு சொல்ற?....
அதெப்படி உனக்கு தெரியும்....

கல்யாணம் ஆன அன்னைக்கே.... எல்லார் முன்னாடியும் அவனை திட்டினாளே....
லவ் பண்றவ எப்படி மத்தவங்க முன்னாடி தன் காதலனை அதுவும் கணவனா ஆனப் பிறகு எப்படி திட்டுவா.... அதுவும் ஒரு பொது இடத்தில?....

ஓ..... ஓகே......
சரி நீ ஏன் வேலையை விட்ட.... அதை சொல்லு....

அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கும் சார்.... அதான் அவளை கண்ணாடில ஒரு ரெண்டு முறை பார்த்தேன்.... அதுக்கு என்னை வேலையை விட்டு தூக்கிட்டான் அந்த விஷ்வா....

ஓ.... நீயா வேலையை விடவில்லையா?

இல்ல சார்.... அதான்.... விஷ்வா, இந்த விஷயத்தை வைஷாலி கிட்ட சொல்லியிருந்தான்னா அவ்வளவு தான்.... செருப்பால என்னை அடிச்சிடுவா.... அவ்ளோ தைரியமான பொண்ணு வைஷாலி....

ஓ.... சரி.... நான் பாத்துக்கிறேன்.... நம்பர் மட்டும் கிடைக்குமா?

கோவத்துல டெலீட் பண்ணிட்டனான்னு தெரியல.... பார்க்கிறேன் சார்.... என்று சொல்லி விட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு

இருக்கு சார்.... என்று நம்பரை எடுத்து கொடுத்தான்.

ஒண்ணு பண்றியா?

சொல்லுங்க சார்....

நீ அந்த வைஷாலிக்கு கால் பண்ணி பேசு.... உடனே ஃபோனை கட் பண்ணிட்டான்னா.... உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கும் அவளுக்கு.... அப்புறம் நான் வேற வழில அவள பார்த்துக்கிறேன்..... பேசினான்னா.... உனக்கு தெரிஞ்சவங்க.... கேஸ் விஷயமா பார்க்கனும்.... எப்போ பார்க்கலாம் ன்னு கேட்டு சொல்லு....

ஓகே சார்....

ஃபோனை ஸ்பீக்கர்ல போடு.... அவ உன்னை பத்தி தெரிஞ்சு பேசறாளா இல்ல தெரியாம பேசறாளா என்று நான் சொல்றேன்.

சரிங்க சார்....

கால் செய்தான்.

ஹலோ.... சொல்லு சண்முகம்..... எப்போ ஊர்ல இருந்து வருவ.... பாவம் அம்மா தான் கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போக நீ இல்லாம கஷ்ட படறாங்க.... உங்க அம்மாவுக்கு இப்போ பரவாயில்லையா?.... என்றாள் வைஷாலி.

விஷ்வா எதுவும் சொல்லவில்லை.... என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்....
இப்போ பரவாயில்ல மேடம்.... நாளைக்கு சென்னை வந்திடுவேன்....

ஓ.... அப்போ நாளைக்கே வேலைக்கு வந்திடறியா?

இல்ல மேடம்.... கொஞ்சம் வேலை இருக்கு அதெல்லாம் முடிச்சிட்டு வரேன்.... என்றான் சண்முகம்.

சரி சண்முகம்.... என்ன விஷயம்..... எதுக்கு கால் பண்ண?

மேடம்....

சொல்லு....

எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தருக்கு லேன்ட் டிஸ்பியூட் கேஸ் ன்னு சொன்னாரு.... அது நீங்க எடுத்து நடத்த முடியுமா?

இல்ல சண்முகம்.... இப்போ முடியாது.... வர சன்டே.... எனக்கும் ராகவுக்கும் என்கேஜ்மெண்ட்....

ராகவ்.... யாரு....

அதான் சண்முகம்... நம்ம விஷ்வா ஒயிஃப் இருக்கா இல்ல ரேஷ்மி அவளோட அண்ணன்....

ஓ சரிங்க மேடம்.... வாழ்த்துக்கள்....

ஃபோன்ல சொன்னா போதாது.... நேரா வந்து சொல்லனும்.... என்று சொல்லி சிரித்தாள்.

கண்டிப்பா மேடம்.... வைக்கிறேன்.... என்று சொல்லி கட் செய்தான் சண்முகம்.

சார்.... என்று சொல்ல

அவன் சற்றும் எதிர்பாராத விதமாக ராகவ் வைஷாலி கல்யாணம் நடக்க போகிறது என்று எண்ணி கடும் கோபத்தில் இருந்தான் சுப்பிரமணி.

சார்.... என்று மறுபடியும் சண்முகம் சொல்ல....

என்ன பண்றது சார்....

நான் பாத்துக்கிறேன் சண்முகம்.... முடிஞ்சா அவங்க வீட்டுக்கு பக்கத்தில ரூம் கிடைச்சா போடுங்க.... என்றான் சுப்பிரமணி.

சரிங்க சார் என்று சொல்லி அவர்களின் வீட்டுக்கு பின் புறம் இருந்த ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்தான்.....

நான் கிளம்பட்டுமா சார் என்று சண்முகம் சொல்ல....

தன் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவனிடம் கொடுத்தான் சுப்பிரமணி.

ரொம்ப தேங்க்ஸ் சார்....

வண்டி வேணும்னா.... நான் உன்னையே கூப்பிடறேன்.... உன் நம்பர் கொடு.... என்றான்.

சரிங்க சார்.... என்று சொல்லி விட்டு தன் நம்பரை கொடுத்து விட்டு கிளம்பினாள் சண்முகம்.

ரூமிற்கு சென்று.... நித்தின் கொடுத்த‌ மற்ற இரண்டு பிளான்களை எடுத்து.... இது ரெண்டுமே இப்போ வேலைக்கு ஆகாது.... என்று கிழித்து போட்டான்.... பின்னர்.... அடியேய் வைஷாலி உன்னையும் உன் காதலனையும் உன்னோட என்கேஜ்மெண்ட் அன்னைக்கே போட்டு தள்றேன்.... என்று சொல்லி விட்டு பலமாக சிரித்தான் சுப்பிரமணி.

****************


காலை பத்து மணி அளவில் அந்த அட்ரெஸூக்கு சென்று காலிங் பெல்லை அடித்தான் ராகவ்......

வெகு நேரத்திற்கு பிறகு....

ஒரு முஸ்லிம் பெண் வந்து கதவை திறந்தாள்....

ராகவ்.... நீ.... நீங்க இங்க எப்படி?.... என்றாள்.

நீயா?.... என்றான் ராகவ்.

ராகவ் பிளீஸ்.... மதியம் நான் சொல்ற இடத்துக்கு வா.... அங்க பேசலாம்.... பிளீஸ்....பிளீஸ்.... என்று அவள் கெஞ்சினாள்.

குழந்தை அழுகுரல் கேட்டது....

ஓகே.... என்று சொல்லி விட்டு சென்றான்.

மதியம்....

அவள் மெஸேஜ் செய்த இடத்தில் காத்திருந்தான் ராகவ்.

தன்னுடன் காலேஜில் படித்தவள் தான் அவள். இவள் ஏன் நமக்கு ஃபோன் செய்தாள்....என்று யோசித்துக் கொண்டே இருந்த சமையம்....

முஸ்லிம் அணியும் புர்கா அணிந்து கொண்டு வந்தாள் அவள்.

என்ன இது மைதிலி.... என்றான் ராகவ்.

பிளீஸ்.... நான் சொல்றதை மட்டும் கவனமா கேட்டுக்கோ ராகவ்....

ஏன் இப்படி பயப்படற.... யாருக்கு பயப்படற?....

என்னோட மச்சினனுக்கு....

வாட்.... யாரு அவன்?

பேரு சுப்பிரமணி....

அப்போ... அந்த கேஸ் ஃபைல்ல இருந்த விமலா ஃபிரெண்ட் மைதிலி நீயா?

ஆமாம்.... அப்போ சுப்பிரமணி உன் பாஸா?

அப்போ எனக்கு பாஸ் அவன்.... அதுக்கு அப்புறம் தான் நான் அவனோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா என் புருஷனோட தம்பி தான் சுப்பிரமணின்னு அப்போ தெரியாது எனக்கு.

அப்போ நீ நம்ம காலேஜ்ல படிச்ச விக்னேஷை கல்யாணம் பண்ணிக்கலியா?

விக்னேஷை உனக்கு தெரியுமா?....

உங்க லவ் தான் காலேஜ் ஃபுல்லா தெரியுமே....

இல்ல அவன் ஹைய்யர் ஸ்டடீஸ்.... ஃபேமிலி செட் ஆகாதுன்னு.... ஏதேதோ சொல்லி என்னை கழட்டி விட்டுட்டான். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் ஒரு எம்.பி பொண்ணை லவ் பண்றான்னு....அப்போ நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.... ரிலாக்ஸாக இருக்க தான் சுப்பிரமணி கம்பெனில ஜாயின் பண்ணேன்.... அப்போ தான் விமலா பழக்கம் ஆனா.... ரொம்ப நல்ல பொண்ணு.... அவளைப் போய் இந்த சுப்பிரமணி நாசம் பண்ணி கொன்னுட்டான்... அவன் தான் குற்றவாளி ன்னு தெரிஞ்சு அரெஸ்ட் பண்ணின அப்புறம்.... நான் வேலையை விட்டுட்டேன்.... கிளோஸ் ஃபிரெண்டா நினைச்ச விமலாவின் மரணம்.... இன்னும் எனக்கு மனவலியை கொடுத்துச்சு.... அப்போ தான் சுப்பிரமணியோட அண்ணன் ஜெய்கணேஷ் எனக்கு பழக்கம் ஆனாரு.... கவுன்சிலிங் ஸெஸ்ஷன்ல தான் அவரை பார்த்தேன்.... சுப்பிரமணிக்கு ஒரு கம்பெனி மற்றும் ஜெய்கணேஷூக்கு ஒரு கம்பெனியும் கொடுத்து இருந்தார் அவர்களுடைய அப்பா.... சுப்பிரமணி அரெஸ்ட் ஆனதும்.... ஜெய்கணேஷோட கம்பெனியும் மூடும் நிலைமைக்கு போனது.....அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவரும் கவுன்சிலிங் வந்திருந்தார்.... அப்போது பழக்கமானோம்....கொஞ்ச நாளா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.... இவங்களுக்கு துபாய்ல ஒரு கம்பெனி இருக்கு.... அதை பார்த்துக்க இவரு போயிருக்காரு.... இன்னும் பிறந்த குழந்தையை கூட அவரு பாக்க வரல....அவரு துபாய் போன பிறகு தான் சுப்பிரமணி ரிலீஸ் ஆகி வந்தான். அப்போ தான் என் புருஷனோட தம்பின்னு எனக்கு தெரிய வந்துச்சு.... எத்தனையோ முறை டிரை பண்ணேன் அவர் கிட்ட சுப்பிரமணி பற்றிய விவரம் சொல்ல....என்னை மிரட்டி சொல்ல விடமாட்டேங்கிறான்.... பலத்த காவல் போட்டிருக்கான் எனக்கு........ எதாவது ஒரு காரணத்தை ஏற்படுத்தி அவரை இங்கே வரவிடாமல் பண்றான் இந்த சுப்பிரமணி. என்னையும் துபாய்க்கு போக விடமாட்டேங்கிறான்.... நான் எங்க உண்மையை அவருக்கு சொல்லிடப் போறேன்னு நான் ஃபோனை பேசி முடிக்கிற வரைக்கும் என் குழந்தையை அவன் தான் வச்சிருப்பான்.... என்று அழுதுகொண்டே சொன்னாள்.

அதுசரி.... வைஷாலி பத்தி என்ன தெரியும்.... சுப்பிரமணி வைஷாலியை கொல்ல நினைத்தது உனக்கு எப்படி தெரியும்.

தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.