• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -45

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal


இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் -45

ராகவ் சொன்ன ஐடியா....

குழந்தைக்கு லூஸ் மோஷன்.... டாக்டர் கிட்ட போகணும் ன்னு சொல்லு.... ஜூரம் ன்னு சொன்னா செக் பண்ணி பார்த்து கண்டுபிடிச்சிடுவாங்க.... ஆனா இதை செக் பண்ண மாட்டாங்க.... எதுக்கும் நீ கேர்ஃபுல்லா இரு.... மஞ்ச தண்ணீர் கரைச்சு பாப்பா ஹக்கீஸ் வெளி பக்கம் தெரியுற மாதிரி ஊத்தி வெச்சிக்கோ.... என்றான். அவன் சொன்னது போலவே செய்தாள். மேலும் பாப்பாவுக்கு காஃப்ஹ் சிரப் ஊத்திவிடு.... பாப்பா சிரித்து விளையாடினாலும் சந்தேகம் வரும்....

சுப்பிரமணிக்கு கால் செய்தான் ஒரு அடியாள்.

அவன் ஏற்கனவே டென்ஷனில் இருந்ததால்.... சரி ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போ.... ஆனா ஜாக்கிரதையா ஃபாலோ பண்ணுங்க.... என்று சொல்லி கட் செய்தான்.

ஹாஸ்பிடலில்.... டாக்டர் ரூமிற்கு செல்லும் போது.... பின் பக்கமாக வெளியே வந்து.... ராகவ் காரில் வெயிட் பண்ணியிருக்க.... அவனுடன் ஏர்போர்ட்டுக்கு சென்றாள் மைதிலி.

நிமிடத்திற்கு ஒரு முறை திரும்பி திரும்பி யாராவது ஃபாலோ செய்கிறார்களா என்று பார்த்து கொண்டு இருந்தாள் மைதிலி.

ஒரு வழியாக ஏர்போர்ட் சென்று அடைந்தார்கள்.

சென்னையில்....

சே.... ஒரே டென்ஷனா இருக்கு.... இங்க ஒருத்தன் அங்க ஒருத்தன்.... எல்லாம் வேஸ்ட் ஃபெல்லோஸ்.... என்று ஹிந்தியில் திட்டினான். சண்முகத்திற்கு ஹிந்தி தெரியும். ஆனால் அவனுக்கு தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் ஆத்திரமாக காரை ஓட்டிச் சென்றான்.

வைஷாலியும் விஷ்வாவும்.... வைஷாலியின் கிளையண்ட் வீட்டிற்கு சென்று அதன் பிறகு கோர்ட்டுக்கு செல்லலாம் என்று சென்றுவிட்டனர்.

கோர்ட்டுக்கு சென்று அவர்கள் அங்கு இல்லை என்று தெரிந்ததும்.... அப்போ அவங்க கோர்ட்டுக்கு வரல.... நீ வேற அவங்கள தவற விட்டுவிட்ட.... சே.... என்று கத்தினான் சுப்பிரமணி.

சார்.... பிளீஸ்.... இப்படி திட்டாதீங்க.... நீங்க ஏன் இவ்வளவு கோபப்படறீங்க.... லாண்டு டிஸ்பியூட் கேஸ் தான சொன்னீங்க.... அதுக்காக இவ்வளவு பெருசா டென்ஷன் ஆக என்ன இருக்கு.

ஷட் அப் யூ இடியட்.... உனக்கென்ன தெரியும்.... இன்னும் ஒரு வாரத்தில அந்த கேஸை முடிக்கனும்.... எனக்கு தான லாஸ்.... நான் டென்ஷன் ஆகாம....

தேவையில்லாம திட்ற வேலை வெச்சிக்காதீங்க.... என்றான் சண்முகம்.

ஆமாம் உன்னை திட்டக் கூடாது.... உன்னோட பழைய பாஸ் ராமகிருஷ்ணன் பண்ண மாதிரி அடிச்சிருக்கனும்....

என்ன?..... ரொம்ப ஓவரா பேசறீங்க.... மரியாதையா பேசுங்க...

உனக்கென்ன டா மரியாதை....

காலரை பிடித்து அடித்து கொண்டனர் இருவரும்.

உன்னை முதல்ல முடிச்சிட்டு அப்புறம் அந்த வைஷாலியை முடிக்கறேன்.... என்று கோபத்தில் உளறினான் சுப்பிரமணி.

அப்பொழுது தான் சண்முகத்திற்கு புரிந்தது.... அவன் கேஸூக்காக வரவில்லை.... வைஷாலியை கொலை செய்ய வந்திருக்கான் என்று....

தன் ஃபோனை எடுத்து போலீஸூக்கு கால் செய்தான் சண்முகம்.

அவனை தலையில் அடித்து விட்டு காரை விட்டு இறங்கி விட்டான் சுப்பிரமணி.

வைஷாலியின் ஃபேஸ் புக்குக்கு சென்று....
அவளுடைய தம்பி விஷ்வாவை பார்த்து கொண்டான்.... அதிலேயே ரேஷ்மி, ராகவ், மற்றும் வைஷாலியின் அம்மாவின் ஃபோட்டோ என அனைத்தையும் டவுன்லோட் செய்து கொண்டு....ஒரு ஆட்டோ பிடித்து மறுபடியும் கொர்ட்டுக்கு செல்லப் பார்த்தான்.

எதிரே ஒரு ஆட்டோவில் ரேஷ்மி மற்றும் இரண்டு பெண்கள் கடந்து செல்வதை பார்த்தான் சுப்பிரமணி.

உடனே ஆட்டோ டிரைவரிடம் அந்த ஆட்டோவை ஃபாலோ செய்யச் சொன்னான்.

அவர்கள் தியேட்டரில் இறங்கினார்கள்.
அவனும் இறங்கி கொண்டான்.

விஷ்வாவின் ஃபிரெண்டு ஜானி தான் ரேஷ்மியின் ஆட்டோவை அவர்களுக்கு தெரியாமலே ஃபாலோ செய்து கொண்டு வந்தான். விஷ்வாவிற்கு மெஸேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

நித்தின் சென்னை வந்த போது ஹெல்ப்புக்கு சில அடியாட்களை ஏற்பாடு செய்து இருந்தான்...
அவர்கள் உதவியுடன் ரேஷ்மியை கடத்த முடிவு செய்தான்.

டெல்லிக்கு கால் செய்து சென்னையில் உள்ள அடியாட்களின் நம்பரை வாங்கினான். அவன் எழுதி எடுத்து வந்த நம்பரை மிஸ் செய்து விட்டான். எப்போதுமே அவனுடைய ஃபோனில் நம்பர்களை சேவ் செய்து வைத்து கொள்ள மாட்டான். பப்ளிக் பூத்தில் இருந்து தான் கால் செய்வான்.

சினிமா தியேட்டரில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது அவள் குடித்த ஜூஸில் வயிறு வலிக்கும் மருந்து கலந்து விட்டான்..... அதை குடித்த ரேஷ்மிக்கு வயிறு வலிக்கவே.... நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.

அப்போது அவளுக்கு மயக்கம் மருந்தை முகத்தில் அடித்து கடத்திவிட்டார்கள் சுப்பிரமணியின் ஆட்கள்.

தியேட்டரின் பின் பக்கமாக கடத்த பட்டதால் ஜானிக்கும் மற்ற யாருக்கும் தெரியவில்லை.

விஷ்வாவிற்கு மெஸேஜ் அனுப்பினான் ஜானி.

மூவரும் உள்ளே படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். நான் வெளியே நிற்கிறேன். விமல் உங்க அப்பாவையும் ரேஷ்மி அப்பாவையும் ஃபாலோ செய்கிறான்....

ஓகே மச்சி.... ரொம்ப தேங்க்ஸ் டா....

எதுக்கு டா ஃபிரெண்டஸூக்குள்ள தேங்க்ஸ் எல்லாம்....

ஆனா.... ரொம்ப அவசியமா.... இவங்க மூணு பேரும் சினிமாவுக்கு போகனுமா?...
என்று நொந்துக் கொண்டான் விஷ்வா.

விடு... டா.... நீ உண்மையை சொல்லி இருந்தா அவங்க வீட்டை விட்டு வெளியே வந்திருக்க மாட்டாங்க..... என்றான் ஜானி.

அது என்னவோ சரி தான்.....சரி ஜாக்கிரதையா இரு.... எனக்கு அப்டேட் கொடுத்துக்கிட்டே இரு...... என்றான் விஷ்வா.

சரி மச்சி.... நீ கவலைப்படாதே.... பை.... என்று ஃபோனை வைத்து விட்டு அவர்கள் வருகிறார்களா என்று பார்த்து கொண்டு இருந்தான் ஜானி.

படம் முடிய இன்னும் கால் மணி நேரம் உள்ளது.... என்று நினைத்து கொண்டே இருக்கையில்....

கனகவள்ளியும் ராஜேஸ்வரியும் பதட்டமாக வெளியே வந்தனர்....

ஜானி வேகமாக ஓடிச் சென்று ராஜேஸ்வரியிடம்

என்னாச்சு ஆன்டி?..... என்றான்.

நீ எங்கப்பா இங்க?.....

ஒரு வேலை விஷயமா போய்கிட்டு இருந்தேன்..... உங்களை பார்த்ததும் வண்டியை நிறுத்தி விட்டு வந்தேன். என்ன பதட்டமா இருக்கீங்க.....

இல்லப்பா..... ரேஷ்மியை காணோம்....

என்ன?.... காணுமா.... உங்க கூடத் தான படம் பார்க்க வந்தா.... இப்போ என்ன திடீர்னு காணோம்னு சொல்றீங்க?.

என்ன சொல்ற நீ.... நாங்க வந்ததை பார்த்தியா?... என்று அவன் காலரை உளுக்கிக் கேட்டாள் ராஜேஸ்வரி.

சாரி ஆன்டி.... விஷ்வா தான் உங்களை ஃபாலோ பண்ண சொன்னான்.... என்று விஷயம் மொத்தமும் சொல்ல....

கனகவள்ளிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.... ரேஷ்மிக்கு என்ன ஆனதோ.... வைஷாலிக்கு என்ன‌ஆகுமோ!!!!. என்று நினைத்து இருவரும் அழத் தொடங்கினார்கள்.

இருவரையும் சமாதானம் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு விஷ்வாவிற்கு ஃபோன் செய்தான் ஜானி.

ஸாரி மச்சான்.... ரேஷ்மியை காணோம் டா...

வாட்.... என்னடா சொல்ற?.....

தூக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்..... எல்லா இடத்தையும் தேடி பார்த்துட்டேன்.... அம்மாவையும் ரேஷ்மி அம்மாவையும் சமாதானம் செய்து உங்க வீட்டுக்கு அனுப்பிட்டேன்....

சரி.... அங்கேயே இரு.... நான் வரேன் என்று சொல்லி விட்டு....

வைஷாலியிடம்..... சென்று நடந்ததை சொல்லி விட்டு.... நான் வரும் வரை கோர்ட்டில் இருந்து வெளியே வராதே.....என்று சொல்லி விட்டு சென்றான்.

அங்கே தியேட்டர் வாசலில் ஜானி நின்று கொண்டு இருந்தான்.

எத்தனை மணிக்கு ரேஷ்மி ரெஸ்ட் ரூம் போனதா அம்மா சொன்னாங்க?

அவங்க வெளியே வரும்போது மணி 3.30 இருக்கும். கால் மணி நேரமா அவளை காணோம்.... பாத்ரூமுக்கு போய் பார்த்தோம்... அங்கு யாரும் இல்லைன்னு சொன்னாங்க....


அப்போ 3.10 இல்ல 3.15 மணிக்கு தான் கடத்தி இருப்பாங்க.... தியேட்டரின் மேனேஜர் கிட்ட பேசினியா?

பேசிட்டேன் டா.... வா.... ரெஸ்ட் ரூம் ல போய் செக் பண்ண ஒத்துக்கிட்டாரு.... 10 நிமிஷம் நமக்காக யாரையும் அலோ பண்ணாம இருக்கிறேன்னு சொன்னாரு.... அவரு.... அவங்க ஒருவேளை வெளியே போயிருப்பாங்க.... போலீஸ் பர்மிஷனோட வந்தா.... சிசிடிவி செக் பண்ணிக்க தியேட்டர் ஓனர் கிட்ட பர்மிஷன் வாங்கி வைக்கிறேன்னு சொன்னாரு.....

ரெஸ்ட் ரூம் போய் செக் செய்தார்கள்.... அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

ராகவிற்கு கால் செய்தான் விஷ்வா....
மாமா.... என்று குரல் தழுதழுக்க கூறினான்.

என்னாச்சு விஷ்வா?

மாமா.... ரேஷ்மியை காணோம்....

தெரியும்.....

என்ன மாமா சொல்றீங்க?....

ஆமாம் விஷ்வா....ரேஷ்மியை கடத்திருக்காங்க.... நான் அந்த சுப்பிரமணியோட காலை டிரேஸ் பண்ணேன்.... அங்கே சென்னையில் இருக்கும் ரவுடிகளின் நம்பர் வாங்கினான். ஆனா அவனோட நம்பர்ல இருந்து அவங்களுக்கு கால் பண்ணல.... நான் எதுக்கும் அந்த ரவுடிகளோட நம்பரை ராபர்ட்டிடம் கொடுத்து டிரேஸ் பண்ண சொன்னேன்.... வேற எதோ பப்ளிக் பூத்தில் இருந்து தான் அவங்களுக்கு ஃபோன் பண்ணான். அதிலிருந்து அவன் ரேஷ்மியை கடத்த போறான் ன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.....

சரி மாமா....ஆனா நீங்க முதல்லையே சொல்லி இருக்கலாம் இல்ல?.... நாங்க கேர்ஃபுல்லா இருந்திருப்போம் இல்ல?.... என்றான்.

இல்ல, நமக்கு விஷயம் தெரியலன்னு நினைச்சு தான் அவன் பிளானை நடத்திக் கிட்டு இருக்கான்.... நமக்கு உண்மை தெரிஞ்சுதுன்னு அவனுக்கு தெரிஞ்சா.... வேற எதாவது விபரீதமான முடிவு எடுப்பான். நீ கவலைப்படாதே விஷ்வா ரேஷ்மிக்கு ஒண்ணும் ஆகாது. அவனுக்கு தேவை வைஷூ தான்.... ரேஷ்மி இல்லை....
வைஷாலி எங்க இருக்கா?

அவளை கோர்ட்டிலேயே நான் வரும் வரை இருக்கச் சொன்னேன்....

சரியா சொன்ன.... அது தான் இப்போதைக்கு பாதுக்காப்பான இடம்....

அப்போ இப்போ என்ன பண்றது மாமா?

முதல்ல.... போலீஸில் புகார் பண்ணுங்க.... அப்புறம் என்று சில விஷயங்களை சொன்னான்.....

சரி மாமா....பை.... என்று வைத்து விட்டான்.
கண்கள் கலங்கியது..... ரேஷ்மிக்கு எதுவும் ஆகக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.

அந்த பாடிகார்ட்ஸை ஏமாற்றி விட்டு ஏர்போர்ட்டுக்கு சென்ற ராகவ்..... மைதிலி மற்றும் மைதிலியின் குழந்தையையும் அழைத்துக் கொண்டு செக் இன் செய்தான்.

ஃபிளைட் ஏறி.... அது கிளம்பியதும் தான் மைதிலிக்கு உயிர் வந்தது....

ரொம்ப தேங்க்ஸ் ராகவ்.... சுப்பிரமணி கிட்ட இருந்து என்னை காப்பாத்திட்ட....

இல்ல மைதிலி....

என்ன காப்பாத்தலயா?

ஆமாம்.... உன்னை முழுசா.... காப்பாத்தல.....

ஏன் அப்படி சொல்ற?....

இல்ல.... நம்ம இப்போ சென்னைக்கு போறோம்.... சுப்பிரமணி சென்னையில தான் இருக்கான்....

நாம சென்னை தான் வந்திருக்கோம் ன்னு அவனுக்கு தெரியாது இல்ல?

கரெக்ட் தான்.... ஆனா நான் இப்போ சொல்லப் போறேன்.... நானும், நீயும் சென்னைக்கு தான் வந்திக்கிட்டு இருக்கோம்னு.....

ஏன்.... ஏன் ராகவ்.... பிளீஸ் மறுபடியும் என்னை அந்த காட்டு மிராண்டிக்கிட்ட விட்டராதீங்க...

மைதிலி.... நீ என்னை நம்பறியா?

கண்டிப்பா.....

அப்போ.... நான் சொல்றதை கேளு....

எதுக்காக இப்போ நம்ம சென்னை வந்ததை சொல்லனும்?...

ஏன்னா.... அவன் என் தங்கச்சி ரேஷ்மியை கடத்திட்டான்..... சுப்பிரமணி என்று அடித் தொண்டையில் மெதுவாக கத்தினான் ராகவ்.....

என்ன?.... என்றாள் மைதிலி.


தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.