• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் - 49

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
269
137
43
Maduravoyal


இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம் - 49

வீட்டிற்கு வந்தனர் விஷ்வாவும் ராகவும்....

அண்ணா.... என்று ஓடிச் சென்று ராகவை கட்டிபிடித்து கொண்டாள் ரேஷ்மி.

உனக்கு ஒண்ணும் ஆகலையே.... என்றான் ராகவ்.

இல்லண்ணா.... உங்களுக்கு?

ஒண்ணும் ஆகல மா.....

விஷ்வாவை திரும்பி பார்த்தாள்.

அவன் கண்கள் கலங்க அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

ரூமிற்கு சென்றான் விஷ்வா.

இதோ வரேன் அண்ணா.... என்று சொல்லி விட்டு ரேஷ்மி ரூமிற்கு சென்றாள்.

கட்டிலின் மேல் அமர்ந்து இருந்தான் விஷ்வா.

அவனருகில் சென்று அமர்ந்தாள். அவன் எழுந்து சென்றான்.

நில்லுங்க....என்னாச்சு?.... என்றாள் ரேஷ்மி.

உன்னை காணோம் ன்னு தெரிஞ்ச உடனே எனக்கு உயிரே போன மாதிரி இருந்துச்சு.... உன்னை பார்த்ததும் தான் உயிரே வந்துச்சு.....ஆனா உனக்கு.... என் மேல.... என்று அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை சரிசெய்தான் விஷ்வா.

எனக்கு உன் மேல லவ் இல்லன்னு சொல்றியா?.... என்றாள் ரேஷ்மி

ஆமாம்....

உனக்கெப்படி தெரியும்.... என் மனசை திறந்து பார்த்தியா?

இல்ல.... நாங்க உள்ளே வந்ததும்.... நீ உங்க அண்ணனை தான் பார்த்த.... அவருக்கு ஒண்ணும் இல்லையான்னு.... உனக்கு என்னை பார்க்கனும்னு தோணல இல்ல?

ஏய்.... லூசு.....

என்னது லூசா?.... என்ன டி சொல்ற....

ஆமாம் டா....

நான் எங்க அண்ணனை பார்த்த அடுத்த நொடி உன்னை பார்த்தேன்..... அண்ணாவை கட்டிப் பிடித்து கொண்டே உனக்கு எங்கேயாவது அடிப் பட்டு இருக்கான்னு பார்த்திட்டேன்.... உன் வலது கைல பின் பக்கத்தில இருந்து ரத்தம் லேசாக வருது.... அது வலிக்கல.... அதான் உனக்கே தெரியல.... பாரு என்று அவனுடைய கையை திருப்பிக் காட்டினாள்.

அப்போது தான் அவன் கையில் அடிப்பட்டிருந்ததை கவனித்தான் விஷ்வா....

தன் இரு கைகளையும் அவள் கன்னங்களில் வைத்து....

உண்மையிலேயே உனக்கு என்னை பிடிச்சிருக்கா?.... என்றான்.

ரேஷ்மி அவன் இதழ்களில் முத்தம் கொடுத்தாள்.....

இப்போ நம்பறீயா?....என்றாள்.

சிரித்து கொண்டே இருவரும் கட்டிப் பிடித்து கொண்டார்கள்.

கெஸ்ட் ரூமில் இருந்த மைதிலி.... சுப்பிரமணி அரெஸ்ட் ஆகியது தெரிந்ததும்.... இதற்கு மேல் அவனால் அவளுக்கோ அல்லது அவள் குழந்தைக்கோ இல்லை அவள் கணவருக்கோ ஆபத்து இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவள் கணவன் ஜெய்சங்கருக்கு கால் செய்து அனைத்து உண்மைகளையும் சொன்னாள்.

அதைக் கேட்ட ஜெய்சங்கர் கடும் கோபம் கொண்டான்.... நான் இப்பவே இந்தியாவுக்கு வரேன்.... அவனை சும்மா விடமாட்டேன் என்றான்.

நீங்க ஆத்திரப்படாதீங்க.... அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.... என் ஃபிரெண்டு விமலாவை கற்பழித்து கொன்றதும் அவன் தான் என்று சொல்லி அழுதாள்.

நீ அழாத மா.... நான் கூடிய சீக்கிரம் வந்து உன்னையும் நம்ம குழந்தையையும் இங்கே கூட்டிக்கிட்டு வந்திடறேன்.....

சரிங்க.... நான் காத்துக்கிட்டு இருக்கேன் என்றாள் மைதிலி.

அங்கே உனக்கு ஹெல்ப் பண்ணினாரு ன்னு சொன்னியே அவர் கிட்ட ஃபோனை கொடு....

ராகவ் வைஷாலி ஹாலில் அமர்ந்து இருந்தார்கள்.....

ராகவ்.... என் ஹஸ்பண்டு உன் கிட்ட பேசணும் ன்னு சொல்றாரு..... என்றாள் மைதிலி.

சொல்லுங்க சார்....

ரொம்ப தேங்க்ஸ் சார்.... நல்ல நேரத்தில வந்து என் ஒயிஃப் அப்புறம் என் குழந்தையை காப்பாத்தியதற்கு....

என்ன சார்.... தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க....

மைதிலி என்னோட ஃபிரெண்டு மட்டும் இல்ல.... என் தங்கச்சி மாதிரி....

நான் ஒரு ஒன் வீக் குள்ள வந்து அவங்களை அழைச்சிக்கிட்டு வந்திடறேன்.... அது வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கிறீங்களா?...

கண்டிப்பா சார்.... பத்து நாட்கள் ஆனாலும் பராவாயில்ல .....நீங்க வந்து கூட்டிக்கிட்டு போற வரைக்கும் எங்க வீட்ல பத்திரமா இருப்பா.... நீங்க கவலைப்படாதீங்க.... என்றான் ராகவ்.

ஒரு நிமிஷம் என்று சொல்லி ஃபோனை வாங்கி பேசினாள் ராஜேஸ்வரி.

தம்பி.... நான் ராகவோட அத்தை.... நீங்க கவலைப்படாதீங்க.... நீங்க வர வரைக்கும் எங்க வீட்லையே பத்திரமா இருப்பா..... என்றாள்.

தேங்க்ஸ் அம்மா.... என்று சொல்லி ஃபோனை வைத்தான் ஜெய்சங்கர்.

அனைவரும் காஃபி குடித்துக் கொண்டு இருக்கும் போது இன்ஸ்பெக்டரிடம் இருந்து வைஷாலிக்கு ஃபோன் வந்தது....

சுப்பிரமணி தப்பித்து விட்டான் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க என்று....

வாட்.... என அதிர்ச்சியாக கேட்டாள்.

ஆமாம் மேடம்.... நீலாங்கரை சவுக்கு தோப்பில் ஷஃபீனா பாடியை ஐடென்ட்டிஃபை பண்ண கூட்டிக்கிட்டு போன இடத்தில தப்பிச்சிட்டான்....

ஃபோனை வைத்து விட்டு ராகவிடம் விஷயத்தை கூறினாள் வைஷாலி.

வெளியே பதட்டமாக வைஷாலி பேசுவதை கேட்டு விஷ்வாவும் ரேஷ்மியும் ஹாலுக்கு வந்தனர்.

என்னாச்சு வைஷூ என்றான் விஷ்வா.

அந்த சுப்பிரமணி தப்பிச்சிட்டான்.

எப்படி..... என்றான் விஷ்வா

எப்படியோ.... அதை விடு.... இப்போ நம்ம என்ன பண்றது?....அதை யோசிக்கனும்.... என்றான் ராகவ்.

ரஞ்சித் சார் அந்த பேப்பர்ஸ் என் கிட்ட கொடுக்கல..... ஸோ அவன் அதை தேடித்தான் போவான்..... அதற்கு முன்னாடி நாம அங்கே போகனும்.... என்றாள் வைஷாலி.

ரஞ்சித் சார் குடும்பத்தையே கொன்னுருக்கான்.... அவனை நான் சும்மா விடமாட்டேன் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் வைஷாலி.

ராகவ் வைஷாலி மற்றும் விஷ்வா மூவரும் கிளம்பினார்கள். விஷ்வா மறுபடியும் தன் ஃபிரெண்ட்ஸ்களிடம்..... மறுபடியும் தொந்தரவு பண்றேன்னு நினைக்காதீங்க டா..... நாங்க வர வரைக்கும் இவங்க எல்லாரையும் பாத்துக்கிறீங்களா?

டேய்.... மச்சான்.... அவங்க எங்களுக்கும் தான் டா ஃபேமிலி..... லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதே.... போய் வேலையை பாரு.... என்றார்கள் விஷ்வா வின் ஃபிரண்ட்ஸ் விமல் கணேஷ் மற்றும் ஜானி.

ரேஷ்மி அவர்கள் மூவரிடமும் வந்து நின்று கைகளை எடுத்து கும்பிட்டு

அன்னைக்கு நான் உங்க எல்லாரையும் திட்டிட்டேன்.....சாரி பிரதர்ஸ்.... என்றாள்.

என்னம்மா.... நீ.... உன் நிலைமைல யாரு இருந்தாலும் அப்படி தான் பேசிருப்பாங்க..... என்று சொன்னார்கள்.

காரில் செல்லும் போது.....

நம்ம ரஞ்சித் சாரோட ஆபீஸ்ல ஃபர்ஸ்ட் செக் பண்ணலாம். சுப்பிரமணிக்கு அந்த பேப்பர்ஸ் கிடைச்சுதுன்னா.... அவ்வளவுதான்.... எப்படி விமலா கேஸ்ல வெளியே வந்தானோ.... அதே மாதிரி ஷஃபீனா கேஸில் இருந்தும் வெளியே வந்து விடுவான்.... என்றாள் வைஷாலி.

அது நடக்கக்கூடாது..... என்றான் ராகவ்.

நாம் அதை நடக்கவிடக்கூடாது.... என்றாள் வைஷாலி.

ரஞ்சித் சார் செகரிட்டரியிடம் சாவி வாங்கி தேட ஆரம்பித்தனர் மூவரும்.

தப்பிச் சென்ற சுப்பிரமணி.... இரும்பு கடைக்கு சென்று தன் கைகளில் போட்டிருந்த விலங்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.

போலீஸ் சைரன் வண்டியுடன் அவனை தீவிரமாக தேடிக் கொண்டு இருந்தனர்.

சுப்பிரமணி தப்பி சென்றதையும்.... இரும்பு கடையில் இருந்து வெளியே ஓடி வந்ததையும் பார்த்து கொண்டு இருந்தான் ஒருவன்..... ஆத்திரமும் கோபமும் அவன் கண்களில் தேங்கி இருந்தது.

ஒளிந்து ஒளிந்து கேப் போட்டு கொண்டு சுப்பிரமணி ஓடிச் சென்றதை பார்த்த அவன்..... தன் காரை வேகமாக ஓட்டிச் சென்று சுப்பிரமணி மேல் இடித்தான்..... பத்து அடி தூரமாக போய் விழுந்து தலையில் அடி பட்டது சுப்பிரமணிக்கு..... ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவனை பார்த்து விட்டு தன் காரில் உள்ளே பக்கத்து சீட்டில் அமர்ந்து தூங்கி கொண்டு இருந்த தன் பிள்ளை அவினாஷின் தலையில் தடவி விட்டப்படி காரை நிறுத்தினான் அகத்தியன்.

போலீஸ் ஜுப்.... அங்கே வந்தது. காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி....

போலீஸ் அதிகாரியிடம்.... இவன் யாருன்னு தெரியல சார்.... வேகமாக ஓடி வந்து கார் முன்னாடி விழுந்திட்டான்.

புரியுது சார்.... நீங்க கவலைப்படாதீங்க.... இவன் ஒரு கொலைகாரன்.... இவனை பிடிக்க நாங்க துரத்திக்கிட்டு வந்தோம்.... எங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தான்....அதான் உங்க வண்டியில் வந்து விழுந்திருப்பான்..... நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சைன் பண்ணிட்டு போங்க.... என் கிட்ட சொன்னதை பேப்பர்ல எழுதி..... அட்ரஸ் ஃபோன் நம்பரோட எழுதி கொடுங்க....

சரிங்க சார்....

சார் உங்க பேரு.....

அகத்தியன்.....

ஓகே சார்.... என்று குறித்து வைத்துக் கொண்டார் அந்த போலீஸ்காரர்.

ஆம்புலன்ஸ் வந்து சுப்பிரமணியின் உயிரற்ற உடலை எடுத்து சென்றது....

போலீஸ்காரர் ஒருவர் வைஷாலிக்கு கால் செய்து சுப்பிரமணி இறந்துவிட்டான்.... என்றார்.

என்ன சார் சொல்றீங்க? இப்போ தான் அரைமணி நேரம் முன்னாடி தப்பிச்சு போயிட்டான்னு சொன்னீங்க.... இப்போ செத்துட்டான்னு சொல்றீங்க.....என்கவுன்டர் பண்ணிட்டீங்களா?

இல்ல மா..... அவன் தப்பிச்சு ஓடும் போது ஒரு கார்ல அடிப்பட்டு இறந்து விட்டான்.

ஓ.... ஓகே.... தகவல் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்.... என்று சொல்லி ஃபோனை வைத்தாள் வைஷாலி.

விஷ்வாவிடமும் ராகவிடமும் தகவலை கூறினாள் வைஷாலி.

என்ன.... எப்படி என்று இருவரும் ஆச்சரியமாக கேட்டார்கள்.

நான் சட்டப்படி அவனுக்கு தண்டனை வாங்கிக் தர நினைத்தேன்.... மறுபடியும் அவன் வெளியே வந்திடுவான்னு கடவுளே அவனுக்கு தண்டனை கொடுத்திட்டார் போல.... என்றாள் வைஷாலி.

அப்போது அவர்கள் தேடிய பேப்பர்கள் கிடைத்தது..... அதைப் பார்த்த வைஷாலி

ரஞ்சித் சார் எல்லாத்தையும் ரெஜிஸ்டர் பண்ணிட்டு இருக்காரு.... இதோட காப்பியை நம்ம அந்த மஸ்ஜித் க்கு அனுப்பிடலாம்....என்றாள்.

அதை எடுத்து கொண்டு
மூவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.


தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.