இதயத்தில் இடம் கொடுப்பாயா பாகம்-50(கடைசி பாகம்)
வீட்டிற்கு வந்தனர் ராகவ், வைஷாலி மற்றும் விஷ்வா.
அவர்கள் வீட்டிற்கு வரும் வரை மாமியாரும் மருமகளும் பூஜை அறையிலேயே இருந்தனர். கனகவள்ளியும் அவர்களுடன் பூஜை செய்து கொண்டிருக்க.... ராமகிருஷ்ணன் மற்றும் ராஜசேகர் ஹாலில் அமர்ந்து இவர்களது வருகைக்காக காத்திருந்தார்கள்.
அவர்கள் நல்லபடியாக வீட்டிற்கு வந்ததும்..... அனைவருக்கும் மகிழ்ச்சி.
விஷ்வா ரேஷ்மி ரிசெப்ஷன் மற்றும் வைஷாலி ராகவ் என்கேஜ்மென்ட் மிக கிராண்டாக ஏற்பாடு செய்து இருந்தார் ராமகிருஷ்ணன். ராஜசேகரும் அதில் பாதி செலவை ஏற்றுக் கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை....
காலை என்கேஜ்மென்ட் முடிந்தது. மாலை ரிசெப்ஷன்.
லைட் புளூ நிறத்தில் லெஹங்கா போட்டிருந்தாள் ரேஷ்மி.... டார்க் புளூ நிறத்தில் ஷர்வானி போட்டிருந்தான் விஷ்வா. பிங்க் கலரில் பட்டு புடவை உடுத்தியிருந்தாள் வைஷாலி..... அதே கலரில் சூட் போட்டிருந்தான் ராகவ்.
வந்தவர்கள் சிலர் என்ன இது தம்பிக்கு கல்யாணம் ஆகிடிச்சு.... இப்போ தான் அக்காவுக்கு நிச்சயதார்த்தமா?.... என்று பேசிக் கொண்டார்கள்.
ஒரே குடும்பத்துல பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கறாங்க.... என்றனர் சிலர்.
அந்த பொண்ணு ரேஷ்மிக்கு அந்த விஷ்வாவை பிடிக்காதாம்....
அப்படியா?.... அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா.... என்று ஒருவர் இன்னொருவரிடம் சொல்ல....
உனக்கு யாரு சொன்னது?.... என்று மற்றொருவர் கேட்க....
அந்த வீட்ல வேலை செஞ்ச டிரைவர்.....
யாரு சண்முகமா?..... என்று குரல் கேட்டு திரும்பினார்கள் பேசிக் கொண்டு இருந்தவர்கள் மூவரும்.
சண்முகம் நின்று கொண்டு இருந்தான்....
நீ தானே சொன்ன?
தெரியாம சொல்லிட்டேன்.... அவங்க ரெண்டு பேரையும் பாருங்க.... எப்படி சிரித்து பேசி.... கை கோர்த்து கொண்டு இருக்காங்க..... இவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கல ன்னா யாராவது நம்புவாங்களா?.... என்றான் சண்முகம்.
நீ சொல்றது சரிதான்....என்றார் ஒருவர்.
அய்யோ மறுபடியுமா?.... நான் வரலை இந்த விளையாட்டுக்கு.... என்று சொல்லி விட்டு மேடை ஏறி கிஃப்ட் கொடுத்தான் சண்முகம்.
அதை வாங்கி கொண்டு தேங்க்ஸ் அண்ணா என்றான் விஷ்வா.
ஸாரி விஷ்வா.....
எனக்கு தெரியும்.... ரேஷ்மி சொல்லிட்டா.... வந்ததுக்கு தேங்க்ஸ்.... சாப்பிட்டு விட்டு போங்க.... நாளைல இருந்து வேலைக்கு வந்திடுங்க.... என்றான் விஷ்வா.
கண்கள் கலங்க ரொம்ப தேங்க்ஸ் விஷ்வா.... அன்னைக்கு அந்த செல்வம்.... சே.... அந்த சுப்பிரமணி என்னை திட்டி அடித்த போது தான் நீங்க எல்லாரும் என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டு இருந்தீங்கன்னு தெரிஞ்சுது.... எந்த முதலாளியும் அவரை பேர் சொல்லி கூப்பிட ஒத்துக்க மாட்டான்.... ஆனா நான் விஷ்வா விஷ்வா ன்னு தான் கூப்பிடுறேன்..... அந்த அளவுக்கு உரிமை கொடுத்து இருக்கீங்க நீங்களும் உங்க ஃபேமிலியும்.... மறுபடியும் தேங்க்ஸ் என்று சொல்லி வெளியே வந்த ஒரு சொட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கினான்.
மதன் மற்றும் விஜியும் வந்து பரிசு கொடுத்து விட்டு சென்றார்கள்.... ரேஷ்மி மிகவும் சந்தோஷ பட்டாள்.
நிவியும் அவளுடைய அத்தை பையனும் வந்து பரிசு கொடுத்தார்கள்....
அனைவரிடமும்.... தேங்க்ஸ்.... சாப்பிட்டு விட்டு போங்க.... என்று சொன்னார்கள் ரேஷ்மியும் விஷ்வாவும்.
விஷ்வாவின் ஃபிரெண்ட்ஸ் விமல் கணேஷ் மற்றும் ஜானி மூவரும் சேர்ந்து விஷ்வாவிற்கு கோல்டு பிரேஸ்லெட் போட்டார்கள்.
ஏய்.... என்னடா.... இதெல்லாம்.... ஏன்டா....
மச்சி உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம்..... என்றான் ஜானி.
நீ எங்களுக்கு செஞ்சதை விட இதெல்லாம் ஒண்ணுமே இல்ல டா.... என்றான் விமல்.
மச்சான் நீ எங்க நண்பேன்டா.... என்றான் கணேஷ்.
தேங்க்ஸ் மச்சிஸ்.... என்றான் விஷ்வா.
மைதிலி மற்றும் குழந்தையும் ஒரு கிஃப்ட் கொடுத்தார்கள்.
ரேஷ்மி வீட்டு பக்கத்தில் இருந்த மோனிகா மற்றும் அவளுடைய அம்மா.... மற்றும் இரண்டு வீட்டில் இருப்பவர்களும் வந்து கிஃப்ட் கொடுத்து விட்டு சென்றனர்.
ரேஷ்மிக்கும் விஷ்வா வகுக்கும் பிளாட்டினம் செயின் போட்டான் ராகவ்....
எதுக்கு அண்ணா.... இது வேற..... என்றாள் ரேஷ்மி.
இல்லடி.... எனக்கு கொடுக்கனும் ன்னு தோணுச்சு.... அதான்.....
தேங்க்ஸ் அண்ணா.... தேங்க்ஸ் மாமா....
விஷ்வாவிற்கும் ரேஷ்மிக்கும் வைரத்தில் மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் போட்டாள் வைஷாலி....
எதுக்கு வைஷூ.... நீ வேற தனியா கிஃப்ட் தர?
ஆமாம் அண்ணி.... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணு கொடுத்தாலே போதுமே....
நான் இன்னும் மிஸ்ஸஸ் ராகவ் ஆகல.... அதுவும் இல்லாம என்னோட தம்பிக்கும் உனக்கும் நான் தனியா ஒரு கிஃப்ட் வாங்கி தர நினைச்சேன்.....
ரொம்ப அழகா இருக்கு.... தேங்க்ஸ் அண்ணி....
அவள் கன்னத்தில் கை வைத்து வெல்கம் டியர்.... என்றாள் வைஷாலி.
விழா சிறப்பாக நடந்தது....
சாப்பாடு சூப்பர் என்று அனைத்து சொந்தக்காரர்களும் ராமகிருஷ்ணன் மற்றும் ராஜசேகரிடம் சொல்லிவிட்டு சென்றனர்.
அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு வந்த ராகவ் தன் பெட்டில் அமர்ந்து கொண்டு வைஷாலிக்கு கால் செய்தான்.
ஹாய் ஷாலி....
சொல்லுங்க ஹாஃப் ஹஸ்பண்டு....
என்னது ஹாஃப் ஹஸ்பண்டா?
ஆமாம் இப்போ தான் நமக்கு நிச்சயதார்த்தம் ஆயிடிச்சு இல்ல?....
அதனால.... ஹாஃப் ஆ?
ஆமாம்....
நான் உன்னை என்னைக்கு லவ் பண்ண ஆரம்பித்தேனோ அந்த நொடியிலிருந்தே நீ என் பொண்டாட்டி டி.....
அதை கேட்டு மிகவும் நெகிழந்தாள் வைஷாலி.
என்னடி ஒண்ணும் பேசமாட்டேங்குற.....
தொண்டையை சரி செய்து கொண்டு....
என்ன பேசணும் டா?
ஹா ஹா ஹா.... கிளோஸா ஆயிட்ட போல....டா.... வந்திடிச்சு....
ஹூம்....சரி ஏன்டா சிக்ஸ் மன்த்ஸ் கழிச்சு நம்ம மேரேஜ் வெச்சிக்கலாம்ன்னு சொன்ன? இப்பவே உன்னை கட்டிப் பிடித்து கொண்டு தூங்கனும் போல இருக்கு.....
ஷாலி.... நான் என் சொந்த கால்ல நிக்கனும்.... அதுக்கு தான்.... எனக்காக வெயிட் பண்ண மாட்டியா?
கண்டிப்பா டா.... புத்தி கேக்குது.... மனசு ஏங்குது....
பார்ரா.... கவிதை மாதிரி பேசுற....
எல்லாம் உன்னால.... தானா வருது....
ஷாலி ஐ லவ் யூ டி....
ஐ டூ லவ் யூ டா.....
ஃபோனில் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டார்கள் வைஷாலியும் ராகவும்.....
ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் ராஜசேகரும் கனகவள்ளியும் மிகவும் சந்தோஷமாக முடிந்த ஃபங்ஷனை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
மைதிலியும் தன் கணவன் ஜெய்சங்கருக்கு கால் செய்து பேசினாள்....
விஷ்வாவின் ரூமில்....
காற்றுக்கூட புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்து படுத்திருந்தனர் ரேஷ்மியும் விஷ்வாவும்.
ரேஷ்மி....
சொல்லு டா....
அதான் அக்காவுக்கு நிச்சயதார்த்தம் ஆயிடிச்சு இல்ல....
அதனால....
யாராவது பசிக்கும் போது மாம்பழத்தை பார்த்துக்கிட்டே இருப்பாங்களா?
சீ.... போடா....எனக்கு வெட்கமா இருக்கு....
நம்ம நெக்ஸ்ட் ஸ்டெப் போலாமா?....
ஏய்.... வேணாம் டா.... நான் காலேஜ் போகணும்.... அப்புறம் வயித்துல நின்னுட்டா ரொம்ப கஷ்டமா ஆயிடும்.....
நீ டாக்டருக்கா படிக்கிற?
ஆமாம்.... ஏன் கேக்குற.....
இவ்வளவு குழந்தை தனமா பேசறீயே..... நாம பாதுகாப்பா இருக்கலாம்.....
வெட்கத்தில் அவள் முகத்தை மூடிக் கொள்ள.... தன் ஸ்படிக மாலையை கழட்டி வைத்து விட்டு அவளருகில் சென்றான் விஷ்வா.....
நம்ம ரெண்டு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் வாழ்க்கை இனிதாக தொடங்கியது.... அவர்கள் அனைவரும் நன்றாக இருக்க நாமும் வாழ்த்துவோம்.....
என்னையும் என் கதையையும் ஊக்குவித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். விரைவில் எனது அடுத்த தொடர் கதையில் சந்திக்கலாம்.... இதே போல அதற்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.
முற்றும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.