அத்தனை பெரிய அரண்மனையில் வீல்லென்று குழந்தையின் அழுகுரல் ஓங்கி ஒலிக்க அங்கிருந்த வேலையாட்கள் அதனை பரிதாபமாய் பார்க்க யாராலும் சென்று அதன் அழுகையை நிறுத்த இயலவில்லை என்று சொல்வதை விட முயலவில்லை என்பதே உண்மை.
அந்த குழந்தை இந்த அரண்மனையின் இளவரசி. அத்தனை எளிதாக யாராலும் நெருங்க முடியாது. அதே நேரம் அங்கே கனத்த சரீரத்தை தூக்க முடியாமல் தூக்கி வந்த மரகதம் குழந்தையின் அருகில் வந்து அதன் முதுகில் பலமாய் ஒரு அடி வைத்து,
"சனியனே எதுக்கு இப்படி கத்திட்டு இருக்கு.. இன்னும் யாரை கத்தி கத்தி கொல்ல போறே.." என்று அடித்தபடி தூக்கினாள்.
முன்பே அழுது கொண்டிருந்த அந்த இளந்தளிர் மரகதத்தின் அடியில் இன்னும் அதிகமாய் அழுக அதே நேரம் அந்த அரண்மனையின் வாயிலில் கம்பீரமாய் ஒரு லம்போர்கினி வந்து நின்றது.
அதிலிருந்து நெடுநெடுவென உயரமாய் ஒருவன் இறங்கி வந்தவன் அழுது கொண்டிருந்த குழந்தையை பார்த்து விட்டு மரகதத்திடம் திரும்பி,
"எதுக்காக பேபி அழறா.. எதுக்கு இப்படி அழுக வச்சிட்டு இருக்கீங்க.." என்றான் கர்ஜனையாய்.
அவனின் கர்ஜனையில் அதுவரையில் இருந்த தைரியமும் குழந்தையிடம் காட்டிய வெறுப்பும் கரைந்து போய் இருந்தது.
"அது வந்து இல்லை மாப்பிள்ளை ரொம்ப நேரமா அழுதுட்டு இருக்கா.. அது தான் தூக்கி சமாதானம் செஞ்சேன்.." என்று பேசியவளின் குரலில் இருந்த நடுக்கம் அது பொய் என்று உணர்த்தியது.
அழுத்தமாய் அவளையே பார்த்தவனின் கரங்கள் குழந்தையை நோக்கி நீண்டது.
அதுவரை அழுது கொண்டிருந்த குழந்தை அவன் கரத்தையும் அவனையும் பார்த்து அடையாளம் தெரிந்தோ தெரியாமலோ அவனை நோக்கி தாவியது.
அவன் தேவநந்தன்.. நந்தா குரூப்ஸ் இன் ஒரே வாரிசு.. பரம்பரை பரம்பரையாய் கட்டுமான தொழிலை மட்டுமே செய்து வந்த நந்தா குரூப்ஸ் தேவநந்தன் தலையெடுத்த பின்பு அனைத்து வகையான தொழிலும் செய்ய ஆரம்பித்து இன்று இந்திய தொழில் துறை நிறுவனத்தில் இரண்டாவதாக விளங்குகிறது.
இந்தியாவின் தொழிலதிபர்களின் சிறந்த தொழிலதிபர் விருதை பெற்றவன் தேவநந்தன்.
தொழில் துறையில் தேவநந்தனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யம் அமைத்து அதில் முடிசூடா மன்னனாய் விளங்கும் தேவநந்தனின் வாழ்க்கையை திசை திருப்பியது அவன் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள்.
அவனின் கைக்கு சென்ற அந்த இளந்தளிரும் அழுகையை நிப்பாட்டி அவனின் முகத்தில் தன் எச்சிலால் நனைத்தது.
அதை கண்ட மரகதத்திற்கு அத்தனை கோபம் வந்தது.. ஆனால் அதை வெளிகாட்ட முடியாமல் தேவநந்தன் அங்கே தடையாய் இருந்தான்.
குழந்தையுடன் தன் அறைக்கு சென்றவன் கட்டிலில் குழந்தையை கிடத்தி விட்டு வேகமாய் பிரஷ் அப் செய்தவன் குழந்தைக்கு பாலை எடுத்து வர சொன்னவன் அதை குடிப்பாட்டி விட்டு குழந்தையை தூக்கி தோளில் போட்டவன் அப்படியே கட்டிலில் படுத்து கொண்டான்.
அடங்காத அரிமாவாய் திரிந்தவன் இன்று அத்தனையும் அடக்கி வைக்க கற்று கொண்டிருந்தான்.
அவனின் நெஞ்சில் படுத்திருந்த குழந்தையும் தூங்கிவிட்டது.. ஆனால் அவனின் கண்களில் சுத்தமாய் தூக்கம் தொலைந்து போயிருந்தது.
எதுவும் சாப்பிடவில்லை.. இந்த வீட்டில் அவனை சாப்பிட்டாயா என்று கேட்க கூட சமீபமாய் யாருமில்லை.
இருக்கும் சொந்தங்கள் ஒன்றிரண்டும் கூட அவனின் பணத்துக்காக மட்டுமே அங்கே இருந்தது.
தன்னை மறந்து அவனின் கண்கள் பூத்து தன்னையறியாமல் உறங்கியது.
அந்த இருட்டில் மூச்சடக்கி அந்த சிறிய அறையில் கண்கள் நிறைய கண்ணீரும் பயமும் போட்டி போட அமர்ந்திருந்தாள் அவள்.
அவள் அமர்ந்திருந்த அறைக்கு வெளியே இரு பேச்சு குரல் கேட்டது.
" எங்கடா போயிட்டா அவ.. எப்படி டா தப்பிச்சா.. இது மட்டும் நம்ம ஐயாவுக்கு தெரிஞ்சா நமக்கு தான் சங்கு.." என்றான் ஒருவன்.
"எங்கேயும் போயிருக்க மாட்டா மாப்பிள்ளை.. ரொம்ப தூரம் அவளால போக முடியாது.. நம்ம நல்லா தேடனும்.." என்ற மற்றவனின் பார்வை அந்த இருட்டிலும் நாலாபுறமும் அவளை தேடியது.
ஆனால் அவனின் கண்களுக்கு தான் அவள் தெரியவில்லை.
இருவரும் நீண்ட நேரம் அவளை தேடிவிட்டு வேறு வழியாக அவளை தேடி சென்றனர்.
அவர்கள் சென்றதும் அங்கிருந்து வெளியே வந்தவள் கண்களை துடைத்து கொண்டு அவர்கள் சென்ற திசைக்கு எதிர்திசையில் காட்டு வழியில் ஓடினாள்.
இருட்டு என்றுமே பயம் தான்.. ஆனால் அந்த இருட்டை தாண்டிய ஒன்று இன்று அவளை ஒட வைக்கின்றது.
முன்னே என்ன வருகின்றது என்று தெரியாமலே பின்னே அந்த அரக்கர்கள் வருகிறார்களா என்று திரும்பி பார்த்த ஓடியவள் முன்னே வந்த வண்டியை கவனிக்காமல் அதன் மேலே விழுந்தவள் ரத்த வெள்ளத்தில் மயங்கினாள்.
அந்த காரிலிருந்து இறங்கிய உருவம் அவளருகில் சென்று பார்த்து அவளின் மூக்கின் மேல் கை வைத்து பார்த்தது.. மூச்சு வந்தது.. உயிர் இருக்கவும் அவளை தன் இருகரங்களால் அள்ளி எடுத்து கொண்டு காரின் பின் சீட்டியில் போட்டவன் அங்கிருந்த காரை எடுத்தான்.
நன்றாக விடிவதற்குள்ளாக அந்த காட்டு பகுதியை தாண்டி விட்டிவன் மனம் ஏனோ உந்த அவளை மீண்டும் திரும்பி பார்த்தான்.
இருட்டில் அவ்வளவாய் அவளின் வதனம் தெரியாமல் போக சற்றே வெளிச்சத்தில் தெரிந்த அவளின் வதனமோ பௌர்னமி நிலவாய் ஜொலித்தது.
என்ன அதில் ஆங்காங்கே உதிர துளிகள் இருக்க அதை கண்டவன் வேகமாய் மருத்துவமனையை நோக்கி தன் வண்டியை செலுத்தினான்.
அதில் அவளை சேர்த்தவன் அவளின் மருத்துவ செலவுக்கு பணம் கட்டியவன் அங்கிருந்து சென்றான் அவளை பார்க்காமல்.
எத்தனை உயிர் போராட்டத்திலும் வாழ வேண்டும் என்று அந்த மனம் நினைத்தால் தான் மரண கண்டத்திலிருந்தும் மீண்டு வர முடியும்.
அது போல அவளின் உயிரும் மரணத்தை எட்டி பிடித்து தான் வந்தது.
ஆம் அவளுள் இருந்த ஏதோ ஒன்று அவளுக்கு வாழும் ஆசையை உறுதிபடுத்தி அவளை மீட்டது.
தன் மேல் உறங்கிய குழந்தையை தூக்கி படுக்கையில் அவளின் தூக்கம் கலையாமல் படுக்க வைத்தவன் மெல்ல எழுந்தான் ஆதவனின் வெளிச்ச கீற்றின் உதவியுடன்.
நடு இரவில் அழுத குழந்தையை பால் கொடுத்து சமாதானம் செய்து நெஞ்சிலே தூங்க வைத்தவன் தானும் அப்படியே உறங்கி போனான்.
பிள்ளையவள் கண் மலர இன்னும் முழுதாய் இரண்டு மணி நேரம் ஆகும்.
அதற்குள்ளாகவே தனது உடற்பயிற்சியை முடித்து கொண்டு மற்ற வேலைகளையும் முடித்து கொள்வான்.
அவன் வீட்டிலிருக்கும் சமயம் பிள்ளையை யாரிடமும் தரமாட்டான்.
கங்காரு குட்டி போல் தன்னுடனே வைத்து கொண்டு சுற்றுவான். ஆனால் வீட்டை வெளியேறும் சமயம் தனியே தான் செல்வான்.
வெளியில் அவனுக்கே பாதுகாப்பு இல்லை என்ற போது இந்த சூழ்நிலையில் குழந்தையை எப்படி வெளியே அழைத்து செல்வான்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தை வீட்டிலிருப்பதே சிறந்தது என்ற முடிவில் தான் இங்கே விட்டு செல்கிறான்.
தன் மடியில் கிடந்த குழந்தையை அள்ளி அணைத்து கொண்டவனின் நெஞ்சம் முழுதும் கனத்து தான் போனது.
"பேபி உன்னையும் என்னையும் இப்படி நிறுத்தன யாரையும் உயிரோட விட மாட்டேன்.. இதுக்கு முழுக்க முழுக்க காரணமான அவளை என் கையாலையே கொள்ளுவேன் பேபி.. அவளோட மனசுல அந்த அளவுக்கு மிருகம் இருந்துருக்கு.. என்கிட்ட சொன்னதெல்லாம் நடிப்பா பேபி.. நான் எப்படி இருந்தவன்.. ஆனா இப்போ என்னையும் எதுக்கும் ஆகாதவனா நிக்க வச்சிருக்க அவளை என்ன செய்யறது பேபி..
வெறும் கானல் நீரை காட்டி காதல்னு என்னை உயிரோட கொன்னுட்டு போயிட்டா பேபி.. உனக்கு தெரியுமா பேபி.. நான் எப்படி இருந்தவன்னு.. ஆனா வெளியே இன்னும் சிங்கமா இருக்கேன்.. ஆனா அவ என்னை அவ்வளவு சுலபமா எடைபோட்டிருக்க கூடாது பேபி..
நிச்சயம் அவளுக்கு ஒரு பாடம் சொல்லாத அவளை அப்படியே விடமாட்டேன் பேபி.. எந்த அழகு இருக்குங்கிற திமிர்ல அவ இங்கேயிருந்து உன்னையும் என்னையும் விட்டு போனாளோ அப்பவோ எனக்குள்ள அவ இல்லை பேபி.. அவளுக்கு எமன் நான் தான் பேபி.. நீயும் நானும் அவளுக்கு முக்கியம் இல்லாதவங்களா மாறிட்டோம் இல்லை..
எனக்கு துரோகம் பன்னவங்களை கூட மறந்துடுவேன் மன்னிச்சிடுவேன்.. ஆனா இவளை நான் நிச்சயமா மன்னிக்கவும் மாட்டேன்.. மறக்கவும் மாட்டேன்.. என்னை அணு அணுவா கொன்னுட்டு போயிட்டா பேபி.. அவ வாழ்க்கையில நீயும் நானும் எவ்வளவு முக்கியம்னு அவ உணரனும் பேபி.. உணர வைப்பான் இந்த தேவநந்தன்.." மூன்று மாத குழந்தைக்கு என்ன புரியும் என்பது எல்லாம் யோசித்து பார்க்கவில்லை அவன்.
அவளை பழிவாங்க வேண்டும் என்பது மட்டுமே அவனின் மனதில் விழுந்த விதையாய் ஊறியிருந்தது.
யாரை பழி வாங்க குழந்தையிடம் நஞ்சை விதைத்து கொண்டிருந்தானோ அவள் தான் அவனின் உயிராயிருந்தாள் ஒரு காலத்தில்.
இன்று காலத்தின் கட்டாயம் அவளை எதிரியாய் நிற்க வைத்து பார்த்து கொண்டிருந்தது.
அவள் யாரோ.. தேவநந்தனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தமோ.. இந்த குழந்தைக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்..? விடை காலத்தின் கையில்.
"ஏய் ரிஷி என்னடா டிரெஸ் எல்லாம் பிளட் ஆ இருக்கு.. எங்கடா போய் சண்டை போட்டுட்டு வந்துருக்க.." என்றபடி அவனின் முன்னே இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தாள் விசாலி.
ரிஷியின் ஆருயிர் மனைவி. ஒரு காலத்தில் யாருக்கும் அடங்காத காளையை அடக்கி இன்று அதன் அங்குசத்தை கையில் வைத்திருப்பவள்.
"ஏன்டி என்னை பாத்த சண்டை போட்டு வந்தவன் மாறி தெரியுதா டி.. ஆனாலும் உனக்கு ஏகப்பட்ட லொல்லு டி.. ஏன் சொல்ல மாட்டே.. ஒரு பொண்ணு வண்டியில வந்து விழுந்துட்டா டி.. அது தான் அவளை கொண்டு போய் நம்ம ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு வர்றேன்.. ஆமா நீ எங்கே ரெடியா இருக்க.." என்று தன் சட்டையை கழட்டியபடி தன்னவளை கேட்டான்.
"அது ஒன்னும் இல்லை மாமா.. நீ வந்தா ஹாஸ்பிடல் போலாம்னு தான் கிளம்புனேன்.. ஆமா யாரு மாமா அது.." என்றபடி அவனிடம் சென்று சட்டையை வாங்கி கொண்டாள்.
" தெரியலை சாலா.. அந்த பொண்ணு புதுசா இருக்கா.. சரி கண் திறக்கட்டும் பாக்கலாம்.. சரி இருடி குளிச்சிட்டு வர்றேன் போலாம்.." என்று அவளிடம் கூறியபடி குளியலறைக்குள் சென்றான்.
தன்னவன் சென்ற திசையை பார்த்தவளின் கண்கள் அவளறியாமலே கலங்கியது.
தான் அழுவது தெரிந்தால் நிச்சயம் ஆத்திரம் கொள்வான் என்று அறிந்தவள் தன் கண்களை துடைத்து கொண்டாள் விசாலி.
அதே நேரம் தன்னவனை நினைத்து கர்வம் பொங்கியது.
எப்படி இருந்தவனை தன் காதல் எப்படி மாற்றி விட்டது.. இது தான் காதலோ என்று எண்ணியவளின் கண் முன்னே சில நிகழ்வுகள் தோன்ற அதில் உடல் நடுங்க நின்றவள் சிறிது நேரத்திலே அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.
இதயம் நுழையும்..