• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 10

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
அன்று அவனின் மனதில் ஆலமரமாய் வேரூன்றி போனவளின் குணநலன்களை கண்டு இன்னும் அதீதமாய் காதலிக்க ஆரம்பித்தான்.

அதற்கு பின்பு அவளை பற்றிய தகவலை சேகரிக்க சொன்னவன் அவளை தொடர்ந்து செல்வது வாடிக்கையாய் போனது.

அவன் மனதில் வேரூன்றிய காதலை அவளிடம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பமும் அமைந்தது.

ஒரு நாள் அலுவலகம் முடித்து விட்டு தனது ஹாஸ்டல் செல்ல பேருந்துக்காக காத்திருந்தவளுக்கு அன்று பார்த்து எந்த பேருந்தும் ஆட்டோவும் ஓடவில்லை.

ஏதோ ஒரு அரசியல்வாதி இறந்துவிட்டதால் அவனின் ஆதரவாளர்கள் அவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடைய அடைக்க சொல்லி உத்தரவிட்டனர்.. அதுவும் அவன் ஆளுங்கட்டியாக போய்விட்டதில் மக்களும் பயத்துடன் தங்களின் பொருட்களை பாதுகாக்க அதற்கு ஆதரவு தரும்படி ஆகிவிட்டது.

அதே நேரம் ஆட்டோ பஸ் எதுவும் வராமல் நின்றவளின் அருகே நின்றிருந்த மக்கள் ஒவ்வொருவரும் அவர்களின் உறவுகள் வந்து அழைத்து செல்ல அவள் மட்டும் தனியே நின்றிருந்தாள்.

அவள் அழைத்தாலும் கூட வருவதற்கு அப்படி எந்த உறவும் இல்லை.

அந்த நேரத்தில் தாய் தந்தையை நினைக்காமல் இருக்க முடியவில்லை பெண்ணவளால்.

தன் உணர்வுகளில் இருந்தவள் அருகில் இருந்த சூழ்நிலையை கவனிக்கவில்லை.

சற்று முன்பு கூட்ட நெரிசலில் இருந்த அந்த பேருந்து நிலையம் தற்சமயம் யாரும் இல்லாமல் அவளை மட்டுமே சுமந்திருந்தது.

வெளிச்சம் மறைந்து இருட்டும் சூழ சற்று முன் இருந்த தைரியம் சுத்தமாக தொலைந்து போனது மங்கையிடத்தில்.

அதே நேரம் இரண்டு ஆடவர்கள் குடி போதையில் வந்து நின்றவர்கள் அவளை பார்ப்பதும் கோனலாய் சிரிப்பதுமாய் நின்றிருந்தார்கள்.

தெளிவாய் இருக்கும் ஆண்களிடம் சண்டை போடலாம்.. ஆனால் அவர்களோ முன்பு மது போதையில் இருக்க இப்போது மாது போதையும் சேர்ந்து கொள்ள அவளையே பார்த்தபடி அவளின் அருகே வந்தனர்.

படபடக்கும் மனதோடு அங்கிருந்து செல்லலாம் என்று நினைக்கும் நேரம் அவளின் முன்னே வந்து நின்றார்கள் இருவரும்.


"டேய் குட்டி அப்படியே கடைஞ்செடுத்த தங்கமா ஜொலிக்குறா டா.. எப்படியும் இன்னைக்கு நமக்கு நல்ல வேட்டை.." என்று ஒருவன் மற்றவனிடம் கூறியபடி அவளருகே சென்றனர்.

உள்ளம் தடதடக்க பின்னே காலடி வைத்தவளை ஒரு இரும்பு கரம் இதமாய் அருகே இழுத்தது. முன்பே பயத்தில் இருந்தவள் இப்பொழுது தன் பின்னே நின்ற உருவத்திடம் பயந்து அதிகமாய் கத்தியவள் அப்படியே அந்த கைகளில் தொய்ந்து விழுந்தாள்.

தன் கைகளில் பூமாலையாய் விழுந்தவளை ரசனையுடன் பார்த்தவன் தன் முன்னே நின்றிருந்தவர்களை அரக்கனமாய் மாறி பார்வையாலே அசுர வதம் செய்தான்.

அவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்தவன் அவளை கைகளில் ஏந்தி தன் காரில் படுக்க வைத்தவன் அந்த இரு ஆடவர்கள் முன்பு நின்றவன் தன் இரும்புக் கரத்தால் ஆளுக்கு ஒரு அறை குடுக்க இருவரும் ஆளுக்கொரு திசையாய் விழுந்தனர்.

அவர்களை பார்த்து முறைத்தவன்,

"இனி ஒரு முறை எந்த பொண்ணை பார்த்தாலும் நீங்க உயிரோட இருக்கறது அது தான் கடைசியா இருக்கும்.. ஜாக்கிரதை நீங்க யாரு மேல கை வச்சீருக்கீங்கன்னு தெரியுதா.. ஷீ ஈஸ் மை கேர்ள்.." அவர்களை பார்த்து அழுத்தமாய் சொன்னவன் அடுத்த நொடி தன் காரை அங்கிருந்து கிளம்பிய அடுத்த நொடி அங்கே மற்றொரு கருப்பு நிற ஆம்னி வேன் வந்து அங்கிருந்த இருவரையும் அள்ளி சென்றது.

தன் முன்னே மயிலாய் துயில் கொண்டிருந்தவளை பார்த்தவனின் கண்கள் அளவில்லாத காதலை கொட்டியிருந்தது.

தன் சிப்பி இமைகளை மெல்ல திறந்தவளின் எதிரே நின்றிருந்தவனை புதிதாய் பார்த்தவள் யார் நீ என்று இருந்தது.

" ஹாய் இப்போ எப்படி இருக்கீங்க.." என்றான் மென்மையாய்.

ஏனோ அவனின் மென்மையான வார்த்தையில் மனதில் ஏதோ இடம் பிறள்வதை போல் உணர்ந்தாள் பெண்ணவள்.

அதை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டு, "ம்ம் இட்ஸ் ஆல் ரைட்.." என்றாள் மெல்ல.

தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தவள், "நான் எங்கே இருக்கேன்.." என்றாள் பார்வையை பதித்தபடி.

"இப்போ நீங்க என்னோட ஹாஸ்பிடல்ல இருக்கீங்க.. உங்களுக்கு ஒன்னுமில்ல சின்ன மயக்கம் தான்.." என்றான் அவளை பார்த்து சிரித்தபடி.

ஏனோ ஆடவனின் சிரிப்பு வஞ்சயவளின் நெஞ்சத்தில் நுழைந்தது.

" பை த பை ஐ ஆம் தேவநந்தன்.. நந்தா குரூப்ஸ் எம் டி.." என்றான் கம்பீரமாய்.

அதை கேட்டு தலையசைத்தவள், "என்னோட பேரு.." என்று சொல்ல வந்தவளை இடை மறித்தவன்,

"தேவகன்யா தேவகன்னிகை.." என்று உள்ளார்ந்து அழுத்தத்துடன் சொன்னான்.

அதே கேட்டவளின் வதனங்கள் செந்தூரமாய் சிவந்து போனது.

நந்தா குரூப்ஸை பத்தி கேள்விபட்டிருக்கிறாள்.. ஆனால் அதன் எம் டி யை இன்று தான் நேரில் காண்கிறாள்.

"நீங்க இப்போ ஓகே வா.. உங்க வீட்டுக்கு போலாமா.." என்றான் மெல்ல.

" இல்லைங்க சார் நான் ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தான் இருக்கேன்.. ஒரு வண்டி மட்டும் அரேன்ஞ் பண்ணி தாங்க நானே போயிடுறேன்.." என்றாள் மென்மையாய்.

" ஹாஸ்டல்லையா.. ஆனா இப்போ உங்களுக்கு உடம்புக்கு முடியலையே.. எப்படி நீங்க போய் அங்கே இருப்பீங்க.." என்றான் கவலையாய்.

இதே இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தாள் எனக்கென்ன என்று சென்றிருப்பான்.

ஆனால் பெண்ணவளோ அவனின் இதயத்தின் ஆழமாய் நுழைந்த உயிராயிற்றே.

அவளுக்கு சிறு வலி என்றாலும் கூட அதை தாங்காது ஆண் மனம் தவிக்க இப்பொழுது தன்னவளை சந்தித்த மருத்தவர் ரொம்பவும் வீக்காக இருப்பதாக கூறிவிட அதை கேட்டு ஆடவனின் உள்ளம் வலித்தது.

அவளின் நிலை நன்றாய் தெரிந்தாலும் கூட அவளுக்காக தான் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் தன் வீட்டிற்கு அவளை அழைத்து செல்லும் முடிவை எடுத்திருந்தான்.

ஆனால் எப்படி அதற்கு தன்னவளை சம்மதிக்க வைப்பது என்று யோசித்தவனுக்கு விடையாய் அதே மருத்துவமனைக்கு மாதாந்திர செக்கப் செய்ய தன் கணவனுடன் வந்திருந்தார் கஸ்தூரி.

தன் தாயை கண்டதும் வேகமாய் அவரருகே ஓடியவன்,

"ம்மா செக்கப் முடிஞ்சிதா.." என்றான் பாசமாய்.

" ம் முடிஞ்சிது பா.. ஆமா நீ எப்படி டா இந்த நேரத்துக்கு இங்கே வந்த.. வீட்டுக்கு போயிட்டு நாங்க இல்லேங்கவும் இங்க வந்தியா என்ன..?" என்றார் கேள்வியாய்.

"அம்மா அது வந்து எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை.. அது தான் இங்கே அழைச்சிட்டு வந்தேன்.. அவளோட ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருக்காம்.. அவளுக்கு யாருமில்லை மா.. இப்போ ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கா.. நம்ம வீட்ல ஒரு வாரம் வச்சிருந்து பாத்து உடம்பு சரியானதும் அனுப்பலாமா மா.." என்றான் கண்களில் எதிர்பார்ப்புடன்.

தன் மகனா இது..? வீட்டு பெண்களை தவிர வேறு யாருடனும் அவ்வளவு இயல்பாய் பேசாதவன் இன்று ஒரு பெண்ணை இத்தனை நேரம் தன் வேலையை விட்டு அருகிலிருந்து பார்த்திருக்கிறான் என்றால் அந்த பெண் அவனின் மனதில் என்னவாக இருக்கிறாள் என்று காதலோடு வாழ்ந்து பார்த்தவர்களுக்கு புரிந்தது.

"தேவா நீயா இது என்னால நம்பவே முடியலை.. நீயா ஒரு பொண்ணை பத்தி பேசுற.. ஆமா அந்த பொண்ணு அந்தளவுக்கு என்னடா ஸ்பெஷல்.. ஆமா உன் மனசுக்குள்ள நுழைஞ்ச அந்த பொண்ணு யாருடா.." என்றார் கிண்டலாய் கஸ்தூரி.

"அம்மா..." என்று சிணுங்கினான் மெல்ல.

"உன் அம்மாவே தான் தேவா.. சொல்லு அந்த பொண்ணு பேரு என்ன.. இப்போ அவ எங்கே.." என்றார் தாயின் அக்கறையோடு.

"அம்மா அவ பேரு தேவகன்யா.. நான் வழக்கமா டொனேஷன் தருவேனே அந்த ஆசிரமத்துல தான் முதல்ல பார்த்தேன்.. பார்த்த முதல் பார்வையிலே எனக்கு அவளை ரொம்பவே புடிச்சி போச்சி மா..

அவளுக்கு அப்பா அம்மா இல்லை.. ஆனா சொந்தமா வீடு எல்லாம் இருக்கு.. தனியா இருக்க முடியாம இங்கே இருக்க லேடீஸ் ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணியிருக்கா..


ஒரு கம்பெனியில வேலைக்கும் போறா மா.. எனக்கு அவளை ரொம்பவே புடிச்சிருக்கு மா.. அவளோட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லாருக்கும் மா.. உங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்ல மருமகளாகவும் அண்ணியாவும் இருப்பா மா.." என்றவனின் வார்த்தை கஸ்தூரிக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

ஏன் அதை கூறும் போது கூட அவளுடன் வாழும் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டான்.. ஆனால் அந்த கனவு வெறும் கானல் நீராய் தன் குடும்பமே அதில் பொசுங்கி போனதில் ஆடவனின் உயிர் துடித்தது.

' உன் மேல உயிரையே வச்சிருந்தேனேடி.. ஆனா நீ என்னை ஒரு நிமிஷம் கூட நினைக்கலை இல்லை.. எப்படி டி உன்னால இப்படி இருக்க முடிஞ்சது கனி.. உன் அழகை பாத்து நேசிச்சாலும் கூட உள்ளதை உள்ளபடி சொல்லுமே உன் முகம்.. அந்த மாசுமருவற்ற முகத்தை தாண்டி உன் மனசு அதோட பேரழகு டி.. ஆனா இன்னைக்கு என் நம்பிக்கையை உடைச்சிட்டேடி..' என்று நிகழ்காலத்தில் கடந்த காலம் மேலொழும்ப அதன் நினைவுகள் தாக்கத்தில் கதறி துடித்தது ஆண் மனம்.

அதே நிலையில் தான் பெண்ணவளும் இருந்தாள்.

அன்று தான் யாரென தெரியாமலே தன்னை நம்பி தன் வீட்டுக்கு அழைத்து வர அத்தனை துடித்தவன் இன்று அவனின் சரிபாதி அல்லவா நான்.. நான் எப்படி அவனுக்கு துரோகம் செய்திருப்பேன்.. ஒரு நொடி யோசித்தானா இதை பற்றி..

அவ்வளவு தானா அவன் என் மேல் வைத்த காதல்.. காதலுக்கும் தாம்பத்தியத்துக்கும் அடிப்படையே நம்பிக்கை தானே..? அந்த நம்பிக்கை என்னிடம் இற்று போய் விட்டதா..?

நான் நல்லது தானே நினைத்தேன்.. ஆனால் எனக்கே இத்தனை கேடாக ஏன் நடக்க வேண்டும்..? புரியவில்லையே.. தான் தவறு செய்யாதவள் என்று அவள் நிரூபித்து தான் தன்னை அவனுக்கு புரியுமா..? என்ற கேள்வி தான் அவளுக்குள்ளே வேள்வியாய் இருந்தது.

'ஏன் நந்து என்னை நீங்க நம்பலை.. ஒரு துளி கூடவா என் மேல நம்பிக்கை இல்லாம போச்சி உங்களுக்கு..' என்றபடி தன்னவன் மனதோடு பேசி கொண்டாள்.


இப்படி ஒருவரையொருவர் ஆழமாய் நேசிக்கையில் எதற்காக இத்தனை கோபம்..? எதற்காக இந்த பிரிவு..? அடுத்தடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.



இதயம் நுழையும்...
✍️


 
  • Love
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
154
110
43
Dindigul
இங்க பாருங்க ரைட்டர், அரக்கன் அசுர வதம், இரும்புக்கரம்னு எல்லாம் போட்டு பில்டப் பண்ணி வச்சிட்டு கடைசில அவனை ஒன்னுமில்லாம ஆக்குனா கடுப்பாகிடுவேன் சொல்லிட்டேண்
 
  • Love
Reactions: ரமா

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
இங்க பாருங்க ரைட்டர், அரக்கன் அசுர வதம், இரும்புக்கரம்னு எல்லாம் போட்டு பில்டப் பண்ணி வச்சிட்டு கடைசில அவனை ஒன்னுமில்லாம ஆக்குனா கடுப்பாகிடுவேன் சொல்லிட்டேண்
thanks for valuble comment sis.. read the next epi sis