இரவின் நிலவின் குளுமை கூட ஆடவனின் இறுக்கத்தை குறைக்கவில்லை.. யாரை இத்தனை நாட்களாய் பார்க்ககூடாது என்று நினைத்தானோ இன்று அவர்களை கோவிலில் வைத்து பார்த்ததிலிருந்து உள்ளம் தவியாய் தவித்தது.
இதே தன்னவள் அவர்களை பார்த்திருந்தாள் தன் நிலை தான் என்னவாய் இருக்கும்.. அவர்கள் யாரென்று தெரிந்தால் தன்னை தூக்கி எறியவும் தயங்கமாட்டாள்.
இல்லை அவள் தன்னை விட்டு என்றும் பிரிய கூடாது.. எப்படி என்று மட்டும் ரிஷிக்கு சுத்தமாய் புரியவில்லை.
உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சாலாவை தூர இருந்தே பார்த்தவன் மனம் பனித்துளியாய் உருகி போனது.
இவளை இழந்து வாழ்வதா..? இல்லை அப்படி ஒரு வாழ்வு தனக்கு தேவையில்லை என்று தான் தோன்றியது.
மெல்லமாய் உள்ளே வந்தவன் அவளருகில் அமர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.
புன்னகை பூவாய் உறங்கி கொண்டிருந்தவளின் அழகு பன்மடங்காய் ஆடவனுக்கு தோன்றியது.
அவளை பார்க்க பார்க்க அவனுக்கு தோன்றியது ஒரு பாடல் தான்.
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
கரையின் மடியில் நதியும் தூங்கும்…
கவலை மறந்து தூங்கு…
இரவின் மடியில் உலகம் தூங்கும்…
இனிய கனவில் தூங்கு…
காதல் என்றால் கவலையா…
கண்ணில் நீரின் திவலையா…
நோயானேன் உயிரும் நீ யானேன்…
இரவில் காயும் முழு நிலா…
எனக்கு மட்டும் சுடும் நிலா…
வாராயோ எனை நீ சேராயோ…
தூங்க வைக்கும் நிலவே…
தூக்கமின்றி நீயே வாடினாயோ…
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
மாலை வானில் கதிரும் சாயும்…
மடியில் சாய்ந்து தூங்கடா…
பூமி யாவும் தூங்கும் போது…
பூவை நீயும் தூங்கடா…
மலரின் காதல் பனிக்கு தெரியும்…
என் மனதின் காதல் தெரியுமா…
சொல்ல வார்த்தை கோடிதான்…
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்…
தூங்க வைக்க பாடினேன்…
நான் தூக்கமின்றி வாடினேன்…
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு…
பூவுடன் மெல்ல நீ பேசு…
தன் மனதில் காதல் பூத்த தருணத்தை நினைத்தவனின் இதழ்களில் மெல்லியதாய் வெட்க சிரிப்பு தோன்றியது.
இந்த காதல் தான் எப்படி பட்டவர்களையும் எப்படி மாற்றிவிடுகிறது.
இதோ இவளின் காதல் கிடைக்க தான் என்னவெல்லாம் செய்தோம் என்றவனின் கண்கள் கலங்கி துடித்தது.
அவளின் கரத்தை மெல்ல பிடித்து கொண்டவன்,
"நீ ஏன்டி என் வாழ்க்கையில இவ்வளவு லேட்டா வந்த.. நீ முன்னவே வந்துருந்தா நான் தப்பா வாழ்ந்திருக்க மாட்டேன் இல்லை கண்ணம்மா.. சாலா குட்டி என்னை மன்னிப்பியா டி.." என்றவனுக்கு முதலில் அவளை சந்தித்த நாள் மனதில் வந்தது.
அவளை முதலில் சந்தித்த தருணத்தை இப்போதும் ஆடவன் வெறுத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
ரிஷிவந்த் கோடிஸ்வரன்.. பரம்பரை பரம்பரையாய் வந்த சொத்துக்கள் அது மட்டும் இன்றி பிஸ்னஸில் புலி.. சிறு வயதில் இருந்த வேலையாட்கள் மூலமாக வளர்ந்ததால் யாரிடமும் அவனுக்கு பாசம் கிடைக்காமல் போனது.
தாய் வேறொரு ஆணுடன் ஓடி விட தந்தையோ தன் சோகத்தில் மூழ்கி ரிஷியை கவனிக்க தவறினார்.
அதன் விளைவு முறையான தாய் பாசமும் தந்தை பாசமும் கிடைக்காமல் போனதில் மற்றவர்களை ஒரு எல்லையுடன் சிறு வயதிலே நிறுத்திவிட்டான்.
வேலையாட்களும் அவனின் இறுக்கத்தில் தங்களின் வேலையை கடமைக்காக மட்டுமே பார்த்தனர். முறையான பாசம் கிடைக்காமல் வளர்ந்த குழந்தை சிறு வயதிலேயே பணத்திற்காக உறவுகளின் அட்டை உறிஞ்சும் நாடகத்தனமான பாசம் இதை கண்டவன் எந்த உறவையும் நம்ப மறுத்தான்.
விளைவு வளர வளர பணக்கார தோரனையுடன் அதிகாரம் அகம்பாவம் கர்வம் திமிர் என அனைத்தும் ஒருங்கே இணைந்து முரட்டு தனமாய் வளர்ந்தான்.
மென்மை என்றால் அவனை பொறுத்தவரை அது நாடகம் தான். அப்படி தான் யாரிடமும் நடிக்க வேண்டியதில்லை என்று நினைத்தவன் மற்றவர்களிடம் தனித்தே தெரிந்தான்.
இளைஞனாய் வளர்ந்த ரிஷிக்கு அவனின் பணத்துக்காக அவனிடம் பாராட்டு நண்பர்கள் முதற்கொண்டு காதலிக்கிறேன் என்று சொல்லி கொண்டு அவனை நெருங்கும் பெண்கள் வரை யாரையும் அவன் நம்பவும் இல்லை.. தன்னிடம் யாரையும் நெருங்க விட்டதில்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் அவனுக்கு இந்த தனிமை பயத்தை கொடுக்க அதை விரட்ட எவ்வளவோ செய்தவனுக்கு அந்த பயம் மட்டும் போகவில்லை.. ஆனால் அந்த பயத்தை மற்றவர்கள் அறியாமல் பார்த்து கொண்டது தான் அவனின் புத்திசாலித்தனம் இருந்தது.
மதுவில் தன் தனிமையை மறக்க துணிந்தவனுக்கு உடனே மாதுவின் போதையும் தேவைப்பட்டது.
அதற்கு ஏற்றாற் போல் அவனை சுற்றி என்னாலும் பெண்களின் கூட்டம் அலைமோதியது.. அவனின் பணத்துக்காக என்றாலும் கூட அவனின் அழகு.. சிவந்த நிறத்தில் பால் கலந்தது போல் தந்த சிற்பமாய் தெரிந்தவனை கண்ட இளம்பெண்கள் மட்டும் அல்லாமல் பேரிளம் பெண்களும் ஆசை கொண்டனர்.
தன்னிடம் வந்த பெண்களை அரவணைத்து கொண்டவன் தன் தேவை முடிந்ததும் அவர்களுக்கு பணத்தை கொடுத்து அனுப்பிவிடுவான்.
இருட்டில் கிடைக்கும் தனிமையின் பயத்தை போக்க மாதுவின் துணையை அதிகமாய் தேடினான்.
சற்றே பயம் தெளிந்தவன் அதை விட முடியாமல் மாது போதை அவனை பாதை மாற்றியது.
பார்க்கும் பெண்களிடம் எல்லாம் கேட்கும் கேவலமானவன் இல்லை தான் என்றாலும் கூட கண்ணுக்கு அழகாய் தெரிந்தால் தன் பணத்தால் வீழ்த்திவிடுவான்.
ஏன் சில பெண்கள் அவனிடம் வந்த காதல் சொன்ன தருணங்களை எல்லாம் எள்ளலுடன் நோக்கியவனுக்கு தெரியும் அந்த காதல் எதன் மீது என்று.
ஒன்று அவனின் பணத்திற்காக மற்றொன்று அவனின் கம்பீரமான அழகுக்காக.
ஏன் நிறைய பெண்கள் அவனின் சொத்து கணக்கை தெரிந்து கொண்டு அவனிடம் திருமணம் செய்து கொள்ள ஆசை எனவும் கேட்டிருக்கின்றனர்.
ஆனால் ஆடவனுக்கோ அவர்களின் திருமணம் எதுவரை என்று அறிந்தவன் அப்படி யாரையும் தன் நிழலை கூட தீண்ட அனுமதிக்க மாட்டான்.
அப்படித்தான் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவனுக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்து சென்றிருக்க எப்போதும் இதற்கெல்லாம் வெறும் கிப்ட் மட்டும் அனுப்பி வைப்பவனுக்கு அன்று என்ன தோன்றியதோ இல்லை இன்றைய இரவை கழிக்க பெண் எதுவும் கிடைக்கவில்லையே எதுவோ ஒன்று அவனை அத்திருமணத்திற்கு அழைத்து வந்தது விதி.
ஆம் விதி என்று தான் சொல்ல வேண்டும்.. வேறு யாரை சொல்ல.. எதோர்ச்சியாய் அந்த வழியாக வந்தவனின் வண்டி அந்த திருமண மண்டபத்திற்கு முன்பாக நின்று விட மன எரிச்சல் அதிகமாய் கொண்டவன் இறங்கி தன் காரை எட்டி உதைத்தவன் கேப் புக் பண்ண போகும் நேரம் அவன் காதுகளில் கிண்கிணியாய் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது.
'இது என்னடா குயில் சத்தம் இங்கே கேட்குது..' என்னை நினைத்தவன் சுற்றியும் பார்க்க அப்போது தான் அந்த திருமண மண்டபத்தின் வாயிலில் நின்றிருந்த ஒரு பெண் தான் சிரித்து கொண்டிருந்தாள்.
பௌர்னமி மேகத்திற்குள் ஒளிந்திருக்கும் நிலவாய் பெண்ணவள் ஜொலிக்க அவள் அணிந்திருந்த ஆகாய வண்ண பட்டு புடவை அவளின் மேனியை அலங்கிரிக்க அவள் காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கி அவளின் பேச்சு மற்றும் தலையசைகேற்ப ராகம் இசைக்க அவளின் சங்கு கழுத்தோடு ஒட்டியிருந்த வைர அட்டிகை அவளை கோட்டோவிய சிற்பமாய் காட்டியது.
ஏனோ அவனின் கண்களை அங்கும் இங்கும் எங்கும் திசை திருப்ப முடியவில்லை ஆடவனால்.
இதுவரை எத்தனையோ பெண்களை தொட்டவனை முதல் முறை சிலையாய் நிற்க வைத்த பெருமை அவளை மட்டுமே சேரும்.
யாரிடமும் தோன்றாத ஒரு சிலிர்ப்பு.. யாரிடமும் தோன்றாத ஒரு எண்ணம் அவளை அணைக்க சொல்லி கெஞ்சிய உடம்பின் தாக்கத்தில் ஆடவனின் உயிர் துடித்தது.
தன் நெஞ்சோரம் கை வைத்து தடவி கொண்டவன்,
"என்ன இவ என்னனென்னவோ பன்றா.. ஏன் இங்கே ஏதோ சத்தம் அதிகமா கேட்குது.. ஏன் இப்படி நான் தடுமாறி போறேன்.. ஓஓ ஒரு வேளை அழகா இருக்காளே அதனால இருக்குமோ.. ஆமாம் அப்படித்தான் இருக்கும்.." என்று தனக்கு தானே கேட்டு கொண்டவன் தானே பதிலும் சொல்லிக் கொண்டான்.
இப்படி பார்த்த நொடி நேரத்திலே அவனின் மனதோரம் மேடை போட்டு சீருங்காரமாய் குடியேறியவள் தான் விசாலி.
ஆனால் வழக்கமான அவனின் நம்பகமற்ற பார்வை பெண்ணவளை எடைபோட, "இல்லை இவளும் பணத்துக்காக எது வேணாலும் செய்வா.. நான் பணத்துக்கு கூப்பிட்டா கூட நிச்சயம் ஒரு நாள் வருவா.. ஆமா இவ ஒரு நாள் கிடைச்சா போதும்.. இத்தனை நாள் எத்தனையோ பேரை பாத்துருக்கேன்.. ஆனா யாரும் இதுவரை திரும்பவும் எனக்கு நினைவுல வந்ததே இல்லை.. இவளும் அப்படித்தான்..' என்று அவனாகவே நினைத்து கொண்டவன் அவளிடம் பேச சென்றான்.
ஆனால் அன்று அப்படி பணத்துக்காக மட்டும் அவளை தேடி செல்லாமல் இருந்திருந்தால் இன்று இவனின் வாழ்க்கையும் நன்றாகவே இருந்திருக்கும்.
இப்படி யாருக்கோ பயந்து வாழும் வாழ்க்கை இருந்திருக்காது.
அந்த திருமண மண்டபத்திற்குள் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே யாரோ ஒருவர் வேகமாய் அவனிடம் வந்து,
"சார் நீங்களா வாங்க வாங்க.. ரொம்பவே சந்தோஷம் சார்.. நாம்ம பாஸ்கர் ரொம்பவே சந்தோஷபடுவார் சார் நீங்க வந்ததை நினைச்சி.. வாங்க சார் பொண்ணு மாப்பிள்ளையை பாத்துட்டு வந்துடலாம்.." என்று அவனை அழைத்தார்.
அவரை கண்கள் இடுங்க பார்த்தவனுக்கு அப்போது தான் விளங்கியது இவர் தன் அலுவலகத்தில் வேலை செய்பவர் ஆயிற்றே.. இவர் எங்கே இங்கே..? என்று யோசனையுடன் மேடையை பார்க்க அங்கே அவனின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பாஸ்கரின் திருமணம் வரவேற்பு அது.
' ஓஓ ஆமா இந்த பாஸ்கருக்கு கல்யாணம் இல்லை.. ஆனா இங்கே எப்படி அவ வந்தா.. எங்கே அவ..' என்று திரும்பி அவளை தேட தொடங்கினான்.
ஆனால் அவனின் தேடலுக்கு உரியவளோ அங்கே இல்லை என்றதும் ஆடவனின் மனதில் ஏமாற்றம் வந்து போனது.
இல்லை இங்கே தான் இருப்பா.. அவளை தேடி கண்டுபிடிக்கனும்.. என்று உறுதியுடன் அவளை தேட தொடங்கினான்.
தன்னை இப்படி ஒருவன் தேடி கொண்டிருந்தது தெரியாமலே பெண்ணவள் தன் தோழிகளுடன் உணவருந்த சென்றுவிட்டாள்.
அவளை தேடியபடியே தன்னை அழைத்தவருடன் மேடை ஏறியவர் பொண்ணு மாப்பிள்ளையிடம் ஒப்புக்காய் பேசி சிரித்தவன் ஒரு போட்டே எடுத்து கொண்டு கீழே இறங்க மயில் தோகையாய் கூந்தல் முன்னே அசைந்தாட பெண்ணவள் நடந்து வந்தாள் அவனின் எதிரே.
அவள் கண்டவனின் கண்களில் வெளிச்ச மின்னல் வர மெதுவாக அவளருகே வந்தவன்,
"எக்ஸ்க்யூஸ் மீ மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.. கொஞ்சம் அப்படி வர்றீங்களா.." என்று தன்மையாய் கேட்டான்.
அவனின் கம்பீரத்தில் ஒரு நிமிடம் தயங்கி நின்றவளுக்கு அவனின் பின்னே எந்த நம்பிக்கையில் சென்றாள் என அவளுக்கு சுத்தமாய் விளங்கவே இல்லை.
மண்டபத்தின் வெளியே மரத்தடிக்கு அழைத்து சென்றவன் சற்று தயங்கியபடி அவளிடம் என்ன கேட்டானோ அடுத்த நொடியே அவனின் கண்ணத்தில் தன் இளம்பிஞ்சு கரத்தை இடியென இறக்கினாள் பெண்ணவள்.
அப்படி என்ன கேட்டிருப்பான்.. ? எதற்காக இந்த கோபம்..? பொறுத்திருந்து அடுத்தடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.
இதயம் நுழையும்...