தன் முன்னே நின்றவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தவனின் கண்கள் ரசனையுடன் மிளிர்ந்தது.
அவனின் பார்வையில் ஒரு மாறி உடல் கூச போனவள்,
"சொல்லுங்க எதுக்காக என்னை கூப்பிட்டீங்க.." என்றாள் எங்கோ பார்த்தபடி.
" ஹாய் ஐ ஆம் ரிஷிவந்த்.. நான் ரிஷி பில்டர்ஸ் ஓனர் அண்ட் சீ ஈ ஓ.. எனக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு.. அப்பா மட்டும் தான்.. அம்மா இல்லை இறந்துட்டாங்க.. எனக்கு உங்களை ரொம்பவே புடிச்சிருக்கு.. ஐ தீங்க் நீ அழகா இருக்கேன்னு நினைக்குறேன்.. அது தான் ஒரு விஷயம் உங்களை கேட்கலாம்னு நினைச்சி தான் வர சொன்னேன்.." என்று அப்படியே நிறுத்தியவனை கண்டவளுக்கு உள்ளம் எங்கும் ஒரே படபடப்பு.
எங்கே தன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல போகிறானோ.. இல்லை திருமணத்திற்கு கேட்க போகிறானோ.. என்ற எண்ண ஓசையில் இருந்தவளை கலைத்தது அவனின் குரல்.
"நான் என்ன சொல்றேனா ஒரு நைட் என் கூட நீ இருக்க என்ன ரேட் பிக்ஸ் பன்ற.." என்று அலட்சியமாய் கேட்டவனின் வார்த்தையில் உடலில் அமிலம் வாரி இறைத்ததை போல் உணர்ந்தாள் பெண்ணவள்.
அவளின் நினைப்பே வேறு அல்லவா.. ஏனோ அவனை கண்டதும் அவனின் கம்பீரமும் ஆண்மை பொருந்தி அழகும் பெண்ணவளை வசீகரமாய் இழுத்தது.
அந்த ஒரு நொடியில் அவளின் இதயத்தில் ஆழமாய் நுழைந்து போனான் ஆடவன்.
பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை அறியாமல் மற்ற பெண்களை போல் இவளையும் நினைத்தவன் தன் ஒரு நாள் இச்சைக்கு இவள் போதும் என்று நினைத்துவிட்டான். அதுதான் இவளிடம் இத்தனை துணிச்சலாய் கேட்டிருக்கிறான்.
அவன் மேல் துளிர்த்த அந்த ஒரு நொடி நேசத்தை அமிலகரைசலில் தூக்கி போட்டவள் கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து,
"யூ பிட்ச் யாரை பாத்து என்ன கேட்ட.. உன்னை.." என்று தன் பூந்தளிர் கரத்தை அவனின் கண்ணத்தில் அழுத்தமாய் இறக்கினாள்.
இதுவரை தான் ஆசைப்பட்ட எதுவும் அவன் மடி தேடி வந்துவிடும்.. இல்லை தன் பணத்தின் மூலம் வரவைப்பான்.. ஆனால் ஒரு சாதாரண பெண் இன்று தன் ஆசையை சொல்லியும் தன்னை கை நீட்டி அடித்திருப்பது அவனின் தன் மானத்தை அசைத்து பார்த்தது.
"ஏய்.." என்று ஆத்திரத்துடன் அவளின் கழுத்தை நெறிக்க போனவன் இருக்கும் இடம் உணர்ந்து தன் கையை இறக்கியவன்,
"ஏய் இந்த ரிஷிவந்த் இதுவரைக்கும் ஆசைப்பட்டு எதுவும் அடையாம இருந்ததில்லை.. ஆனால் இன்னைக்கு நீ என்னை கை நீட்டி அடிச்சிருக்க.. நல்லா நியாபகம் வச்சிக்கோ இனி என்கிட்ட இருந்து உன்னை யாராலும் காப்பாத்த முடியாது டி.." என்று சிங்கமாய் கர்ஜித்தான்.
அவனின் கோபத்தையும் ஆத்திரத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள் அவனை அலட்சியமாய் பார்த்தாள்.
நீ இந்த நாட்டுக்கே ராஜாவா இருந்தாலும் நீ கேட்டது தப்புடா என்று தான் அவளின் பார்வையில் இருந்த அழுத்தம் உணர்த்தியது.
அதை கண்டவனுக்கு மேலும் வெறியேற ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்றான்.
போகும் அவனை மனதில் வலி பொங்க பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தது.
ஏனோ பார்த்த நொடியில் அவளின் மனதினுள் இனிமையாய் நுழைந்தவன் இப்படி தவறான ஒருவனாய் இருப்பான் என்று அவள் சுத்தமாய் யோசிக்கவில்லை.
' இல்லை விசாலி உன்னோட கண்ணீருக்கு இவன் தகுதி இல்லாதவன்.. முதல்ல இவனை மற..' என்று தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டவள் எழுந்து தன் தோழிகளுடன் நின்று கொண்டாள்.
இங்கே தனக்கு வந்திருந்த வண்டியில் ஏறியவனின் கண்களுக்குள் அவள் தான் வந்தாள்.. மனம் பூராவும் அவளின் நினைவுகள் தான்.. மெல்லியதான அவளின் சிரிப்பு சத்தம்.. அவளின் இமைகுடைகள் அசைந்த நளினம் என அனைத்தும் அவனின் கண்களுக்குள் வந்து இம்சை செய்தாள் அவள்.
அவனின் மனதில் ஆழமாய் நுழைந்தவளை வெளியே அனுப்ப முடியாமல் தவித்தான் ஆடவன்.
ஆனால் அத்தனையும் தாண்டி தன்னை கை நீட்டி அடித்தவளின் மேல் அத்தனை வன்மம் உண்டானது.
ஆனால் அவன் அறியவில்லை இந்த ஆத்திரமும் கோபமும் தான் அவளை பின்னாளில் இழக்க போதுமானதாக இருக்க போகிறது என்று.
அவளின் மேல் தோன்றிய நேசம் அடி மனதில் அமிழ்ந்து போக அவள் அடித்ததில் இருந்த கோபமும் இதுவரை ஆசைபட்ட எதுவும் அவனை கைக்கு வந்து சேராமல் போகவில்லை.. இவளையும் அப்படி விட அவனின் மனது விடவில்லை.. நிச்சயம் தன்னை அடித்தவளுக்கு தண்டனை தர வேண்டும் என்று முடிவு செய்தவன் செய்த செயல் தான் இன்று தன்னவள் நினைவு இழந்து வாழும் இந்த வாழ்க்கை காரணமே தான் என்ற குற்றவுணர்ச்சியே அவனை கொன்று தின்றது.
தன் அருகில் பௌர்னமி நிலவாய் துயில் கொண்டிருந்தவளை கண்டவன் மனம் வலித்தது.
' சாலா ஏன்டி அன்னைக்கு என் கண்ணில் பட்ட.. உன்னை நான் அன்னைக்கு பாக்காம இருந்திருக்கனும்.. நீயும் என் மேல கோபபட்டு அடிக்காம இருந்திருந்தா இப்படி நமக்கு ஒரு நிலமை இல்லையே.. ஆனா தப்பு என் மேல தாண்டி.. என்னை மன்னிச்சிடு சாலா..
அரவணைச்சி வழி நடத்தி நல்லது கெட்டது எடுத்து சொல்றதுக்கு யாருமில்லாம வளர்ந்தவன் டி நான்.. என்னோட வறட்டு கௌரவம், பிடிவாதம், முரட்டு குணம் இதெல்லாம் தாண்டி உன்னை காயப்படுத்த துணிஞ்சிது.. எனக்கு தெரியலை டி.. நீயும் என்னை வெறுத்தராத சாலா.. நிச்சயம் அதை தாங்க என் மனசுல தெம்பு இல்லை டி.. நீ எனக்கு வேணும் சாலா.. யாருக்காகவும் உன்னை என்னால இழக்க முடியாது டி..
உன்னை இழந்தா என் உயிர் போயிடும் டி.. எனக்கு நீ என் வாழ்வு முழுமைக்கும் வேணும் சாலா.. என்னை விட்டு பிரிஞ்சிடாத டி..' மனம் முழுவதும் தன்னவள் தன்னை விலகி சென்று விடக்கூடாது என்ற எண்ணம் தான் அவன் மனம் முழுவதும்.
தான் செய்த தவறும் அவனை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது.
அதே நேரம் தன் வீட்டிற்கு வந்த நேரம் அங்கே யாரும் இல்லாமல் போக அவனின் கண்கள் மட்டும் தன்னவளை வட்டம் போட்டு தேடியது.
ஆனால் அவனின் தேடலுக்கு உரியவளோ அப்போது தான் இப்பொழுது தங்கி இருக்கும் அறையில் மயங்கி கிடந்தாள்.
அதை அறியாதவன் தான் தேடியும் கிடைக்காதவளை விட்டு விட்டு தன் அறை நோக்கி செல்லும் நேரம் மிருதுளா வேகமாய் கத்தி அழ அவளின் அழுகை சத்தம் கேட்டு வேகமாய் கன்யாவின் அறை நோக்கி சென்றான்.
' குழந்தை இப்படி அழறா.. இவ இன்னும் என்ன தான் பன்றா..' என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தவன் முதலில் கண்டது என்னவோ அழும் மிருதுவை தான்.
வேகமாய் ஓடி சென்று அள்ளி கொண்டவன் கோபத்துடன் அவளை தேட அவள் இருக்கும் சுவடு கூட இல்லாமல் இருக்க அவனின் மனம் குழம்பிய குட்டையானது.
' எங்க போனா இவ.. குழந்தையை இப்படி தனியா விட்டுட்டு போக மாட்டாளே..' என்று தேடியவனின் காதுகளில் குளியல் அறைக்குள் சத்தம் கேட்க ,
'ஓஓ குளிக்கிறா போல..' என்று நினைத்து கொண்டவன் மிருதுவை எடுத்து கொஞ்ச கொண்டு அங்கிருந்து செல்லும் நேரம் மீண்டும் மிருதுளா வீறிட்டு கத்த துவங்கினாள்.
"ஏய் மிருமா என்னாச்சிடா.. எதுக்கு இந்த அழுகை.. அது தான் அப்பா வந்துட்டேன் இல்லை.. அப்புறம் என்னடா தங்கம்.. அவளுக்கு அறிவே இல்லை.. குழந்தை அழற சத்தம் கேட்டும் இன்னும் வெளியே வராம என்னதான் பன்றாளோ.." என்று பேசியபடி வெளியே செல்ல இருந்தவனின் கண்கள் குளியல் அறை பக்கம் போக அங்கே தண்ணீர் அறைக்குள்ளே வர அதை கண்டவனின் மனம் ஏதோ உந்த அறையின் பக்கம் போய் நின்றவன் கதவை தட்டினான்.
" ஏய் கன்யா கதவை திற.." என்று படபடவென தட்டினான்.
ஆனால் அவனி தட்டலுக்கு எந்த விதமான எதிர்வினையும் அந்த பக்கம் இருந்தும் கிடைக்காமல் போக வேகமாய் கதவை தட்டினான்.
ஏனோ மனம் தவிக்க உடனே மிருதுவை கட்டிலில் அமரவைத்து விட்டு வேகமாய் கதவை தட்டினான்.
எவ்வளவு நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாமல் போக அவனின் மனமோ தன்னவளின் நினைவில் அதிகமாய் அழுந்த கதவை உடைக்க முயன்றான்.
ஆறடி ஆண்மகனின் இரும்பு உடலால் கூட அந்த கதவை உடைக்க முடியாமல் போக தன் வலியையும் மீறி கதவை உடைத்தான்.
கிட்டதிட்ட பத்தாவது மோதலில் கதவின் உட்பக்க தாழ்ப்பாள் சற்றே நெளிய மீண்டும் உதைத்தவனுக்கு கதவு திறந்து வழிவிட்டது.
அங்கே கிடந்தவளை கண்டவன் வேகமாய் சென்று அவளை அள்ளினான்.
கிட்டதிட்ட மூச்சு பேச்சில்லாமல் கிடந்தாள் அவனின் கனி.
அவளை அப்படி கண்டதும் அவனின் ஆவி துடித்தது.
"கனி கனி இங்கே பாருடி என்னை பாரு டி.. டேய் கனி மா மாமூ பாவம் டி.. இங்கே பாரு எழுந்திருடா..கண்ணை திற மா.." பரிதவித்தவனின் மேல் சிறிதும் கருணை இல்லாமல் உடல் எல்லாம் ஜில்லிட கிடந்தாள் பேதையவள்.
எவ்வளவு நேரம் இப்படி நீரில் இருந்தாளோ..? வீட்டிலும் யாருமில்லை..? கடவுளே என்னோட கனிக்கு எதுவும் ஆகக்கூடாது..? என்று யோசித்தவன் அவளை அள்ளி எடுத்து கொண்டவன்,
"வரதம்மா.." என்று கத்தி அழைத்தான்.
சமையல் அறையிலிருந்து அவரும் வர அவனை கண்டவர்,
"அய்யா என்னாச்சி கன்யா அம்மாவுக்கு.. பாப்பா எங்கே.." என்றாள் பதட்டமாய்.
" வரதம்மா இப்போ சொல்ல எதுவும் நேரமில்லை.. பாப்பா ரூம்ல இருக்கா.. அவளை பாத்துக்க.. வீட்டுல அப்பா அம்மா வந்தா சொல்லி நம்ம ஹாஸ்பிடல் வர சொல்லு.. இவ மயக்கமாயிட்டா.." என்றபடி தன்னவளை எடுத்து கொண்டு தன் காரில் பின்னே அவளை படுக்க வைத்தவன் வண்டியில் ஏறி அதை வேகமாய் பறக்க வைத்தான்.
அவனின் உயிரே அவனிடம் இல்லை.. அவளை வெறுத்ததாக தான் சொன்னான்.. ஆனால் அவனின் உயிரின் ஆழம் வரை நுழைந்தவளை வெறுக்க அவனால் முடியுமா என்ன..?
அதன் பிரதிபலிப்பு தான் இப்போது அவன் துடித்தது.
அப்படி அவளுக்கு என்ன தான் ஆனதோ..?
அடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே..!
இதயம் நுழையும்..