• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 13

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
அந்த அறையின் குறுக்கும் நெருக்கமாய் நடந்து கொண்டிருந்தான் தேவநந்தன்.. அவளை அப்படி கண்ட நொடியில் இருந்து ஆடவனின் இதயம் எக்கு தப்பாய் துடித்து கொண்டிருந்தது.

என்ன ஆச்சி..? எப்படி மயங்குனா..? என எதுவும் தெரியவில்லை ஆடவனுக்கு.

அதே நேரம் மிருதுவுடன் அங்கே வந்தனர் வாஞ்சிநாதனும் கஸ்தூரியும்.

அவனை கண்டதும் மிருது அவனிடம் தாவி கொண்டு வர அவளை வாங்கியவன் தன் தாய் தந்தையை பார்த்தான்.

கஸ்தூரியோ, "அவளுக்கு என்னாச்சி தேவா.. நல்லா தானடே இருந்தா நான் கோவிலுக்கு போகும் போது.." என்றவரின் கண்கள் கலங்கி இருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து தன்னுடன் பேசும் தாயை பார்த்தவன், "தெரியலை மா நான் ஆபிஸ் முடிச்சிட்டு வந்து பாத்தா யாரையும் காணலை.. அப்போ தான் இவளோட அறையில இருந்து மிருது கத்துற சத்தம் கேட்டு நான் போனேன்.. அங்கே தான் மயங்கியிருக்கறதை பாத்து தூக்கிட்டு வந்தேன்.." என்றவனுக்கு அடுத்த என்ன சொல்வது என்று தெரியவில்லை.

வாஞ்சிநாதனும் கஸ்தூரியும் அவள் கண்விழிக்கட்டும் என்று காத்திருந்தனர்.

தாய் தந்தை வந்ததும் அவளை விட்டு செல்லலாம் என்று கிளம்பியவனை தடுத்து நிறுத்தியது அவனின் மனம்.

இவ்வளவு தானா உன் காதல்.. அதற்கா அவளை அப்படி வற்புறுத்தி திருமணம் செய்தாய்..? இந்த நிலையில் அவளை விட்டு சென்ற பின்பு உன்னால் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன..? இல்லை இதோ உன் கையில் உள்ளாளே இவள் தான் அவளில்லாமல் இருந்துவிடுவாளா..? அதுமட்டும் இல்லாமல் முதலில் டாக்டர் வந்துவிடட்டும்.. அவரிடம் விசாரித்து விட்டு கூட சென்றுவிடலாம் என்று எண்ணியவன் அப்படியே மிருதுவுடன் அமர்ந்துவிட்டான்.

சற்று நேரத்தில் வெளியே வந்த அந்த பெண் மருத்துவர் அவனை பார்த்து,

"சார் இது அவங்களோட பீரியட்ஸ் டைம்.. அதீதமான உதிரபோக்குல மயங்கி விழுந்துருக்காங்க.. அவங்க மயக்கமாகியும் ரொம்ப நேரமாச்சு.. அதுல உதிரமும் அதிகமா ஆகியிருக்கு.. டிரிட்மெண்ட் பண்ணிருக்கேன்.. கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிடுவாங்க சார்.." என்று அவள் சொல்லிவிட்டு போக இவன் இடிந்து போய் அமர்ந்தான்.

இந்த கொஞ்ச நாளில் அனைத்தும் மாறி போனது.. ஆனால் அவளின் உடல்நிலை முழுவதும் அறிந்தவன் அவளை தவிக்க விட்டதை தான் ஆடவனின் மனம் ஏற்க முடியாமல் போனது.

அவனுக்கு நன்றாக தெரியும் அவளின் உடல்நிலை.. மாதா மாதா வரும் பீரியட்ஸ் டைம் அவளால் அதை தாங்க முடியாமல் மிகவும் சோர்ந்து போய் விடுவாள்.. இது பெண்களுக்கே தரப்பட்ட இயற்கையின் வலி தான் என்றாலும் கூட தான் அவளருகில் இருந்து பார்த்து கொள்ள வேண்டியது.

ஆனால் வீன்கோபமும் வறட்டு பிடிவாதமும் அவளை தள்ளி வைத்தவன் இன்று அதற்குரிய தண்டனை அவனுக்கு.

தங்களுக்கு திருமணம் ஆன நாளிலிருந்து இதுவரை இப்படி அவளை தனியே விட்டதில்லை.. முதல்நாளிலே வலியில் துடிப்பவளை விட்டு செல்ல ஆடவனுக்கு மனம் வராது.

அதுவும் சில நேரங்களில் வாந்தி மயக்கம் என அதிகமாய் நடந்த நாட்களும் உண்டு.

அப்போது எல்லாம் அவளருகில் இருந்து அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டவன் இன்று அவளின் அந்நாள் தேதியை கூட மறந்தது தான் விதி.

மடியில் இருந்த மிருது வேறு கன்யாவை தேடி அழுக ஆரம்பித்தாள்.

தாயும் தந்தையும் தன்னை கோபமாய் பார்ப்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் சென்றான்.

உடன் சென்ற கஸ்தூரியை கைப்பிடித்து இழுத்த வாஞ்சிநாதன்,

"நீ எங்கடி போற..." என்றார் கோபமாய்.

" ஏங்க உங்களுக்கு என்ன பைத்தியமா.. அங்கே அந்த பொண்ணு அப்படி கிடக்கிறா.. நீங்க என்னன்னா என்னை தடுக்குறீங்க.." என்றபடி தன்னவனை கோபமாய் திட்டினார்.

"அடியே பைத்தியக்காரி அவளை பாத்துக்க உன் பையன் இருக்கான்.. அவன் பாத்துப்பான்.. நீ ஒன்னும் கிழிக்க வேணாம்.. வா வீட்டுக்கு போலாம்.." என்றபடி அவரின் கையை பிடித்து இழுத்தார்.

" ஏங்க அவன் அவளை பாத்துப்பானா என்ன.. ஏற்கனவே அவ மேல அவ்வளவு கோபமா இருக்கான்.. இப்போ அவனை நம்பி எப்படிங்க அந்த பொண்ணை விட்டுட்டு போக.." என்றவருக்கு தன் மகனின் கோபம் தான் தெரிந்தது.

"கஸ்தூரி அவனுக்கு அந்த பொண்ணு மேல கோபம் இருக்கு தான்.. ஆனா அதை தாண்டி அவளை அவன் உயிரா நேசிக்குறான்.. நடந்த எதையும் மாத்தமுடியாது.. அதுக்காக அவங்க ரெண்டு பேரும் சேரவே வேணாம்னு சொல்வோமா என்ன... இல்லையில்லை கன்யாவும் நம்ம பையனும் சந்தோஷமா இருக்கனும் மா.. அது நடக்கும் சரி நீ வா நாம வீட்டுக்கு போகலாம்.." என்றவருக்கு மகனை பற்றிய சிந்தனை இன்னும் ஓரத்தில் மிச்சம் இருந்தது.

தன் கணவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் அவருடன் வீட்டிற்கு சென்றார் கஸ்தூரி.

இங்கே படுக்கையில் கிடந்தவளை கண்டவனுக்கு குற்றவுணர்ச்சி கொன்றது.

அவளை நன்றாக பார்த்து கொள்வதாக சொல்லித்தானே திருமணம் செய்தான்.. ஆனால் இன்று அவன் பார்த்து கொண்ட லட்சனம் தான் தன்னவள் யாருமில்லா வீட்டில் அனாதையாய் மயங்கி கிடந்த தருணம் மனதை பாரமாக்கியது.

கையில் உள்ள மிருதுவை பார்த்தவனுக்கு மீண்டும் மனம் பாரமானது.

' ஏன்டி அன்னைக்கு அப்படி பண்ண.. என்னால உன்னை மறக்கவும் முடியாம வெறுக்கும் முடியாம நான் தவிக்கிற தவிப்பு உனக்கு புரியுதா டி.. கனி மா சத்தியமா இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையில வரும்னு நான் கொஞ்சமும் யோசிக்கலை டி.. உன்னை எந்தளவு நேசிச்சேன்..

உன்னை கல்யாணம் பண்ண எவ்வளவு மெனக்கெட்டேன்.. ஆனா எல்லாமே ஒரே நாள்ல கலைஞ்சி போயிடும்னு நினைக்கவே இல்லை டி..

வேண்டாம் கனி பழசை எதுவும் யோசிக்க வேண்டாம்னு மனசு கிடந்து தவிக்குது.. ஆனா மிருதுவை பாக்குற ஒவ்வொரு செகன்டும் உன் மேல கொலைவெறி உண்டாகுது டி.. நான் இருதலை கொள்ளை எறும்பா தவிக்குறேன் டி.." என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதே நேரம் கண்கள் திறந்தவள் தன் முன்னே தன்னவன் கலங்கி நிற்பதை தாங்க முடியாதவள்,

"நந்து.." என்றழைத்தாள் மென்மையாக.

அவளின் மென்மையான அழைப்பில் கண் திறந்தவன் தன் முன்னே இருந்தவளை கண்டவனுக்கு இறுக்கமாய் அணைத்துக் கொள்ள உடலும் உள்ளமும் உந்தியது.. ஆனால் எதுவோ ஒன்று தடுத்தது.

அதை உணர்ந்தவன் , "இப்போ எப்படி இருக்கு.." என்றான் பார்வையை மிருதுவின் மீது வைத்து கொண்டு.

அதை கேட்டவள் கண்கள் கலங்க சந்தோஷமாய் தலையாட்டியபடி,

"ம்ம் இப்போ ஓகே நந்து.. வீட்டுக்கு போலாம்.. ஹாஸ்பிடல் மிருதுவுக்கு ஒத்துக்காது நந்து.." என்றாள் மிருதுவை பாசமாய் பார்த்தபடி.

"ம்ம் நான் போய் டாக்டரை பாத்து பேசிட்டு வர்றேன்.." என்று குழந்தையுடன் சென்றவனை கண்டவள்,

"நந்து.." என்றழைத்தாள்.

அதில் திரும்பியவன் முன்னே தன் குளுக்கோஸ் போட்டிருந்த கரத்தையும் சேர்த்து அவனின் முன்னே இருகரம் கொண்டு நீட்டினாள்.

அதை பார்த்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியாமல் திகைத்தான்.. அதை உணர்ந்தவள் மெல்ல சிரித்தபடி,


"மிருதுவை என்கிட்ட கொடைத்துட்டு போயிட்டு வாங்க.." என்று குழந்தைக்காக தான் கை நீட்டினேன்.. உனக்காக இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி சென்றாள் பெண்ணவள்.

அதில் ஒரு பெருமூச்சு விட்டவன் மிருதுவை தூக்கி அவளிடம் கொடுத்தவன் வெளியே டாக்டரை பார்க்க சென்றான்.

சற்று நேரத்தில் வந்தவன் இருவரும் சிரித்து கொஞ்சியபடி இருக்க அதை சந்தோஷமாய் பார்த்தவன்,

"மிருதுவை கொடு.. வா வீட்டுக்கு போலாம்.. நடந்து வந்துடுவ இல்லை.." என்றான் பாசமாய்.

அவன் பாசமும் காதலும் எப்போதும் குறையவில்லை என்று நினைத்தவள் அதில் மென்மையாய் சிரித்து விட்டு எழ இருந்தவள் என்ன நினைத்தாளோ அப்படியே அமர்ந்து விட்டாள்.

அவனோ இன்னும் அவள் வராமல் இருப்பதை கண்டு திரும்பி பார்த்தவன் அவள் எழாமல் இருப்பதை பார்த்து,

"என்னாச்சி.." என்றான் யோசனையாய்.

அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்தவளை கண்டவனுக்கு,

"இதோ பாரு என்னாச்சி.. எனக்கு நேரமாகுது.. மிருது தூங்கற நேரம் வந்தாச்சி.. இன்னும் என்ன பன்ற.." என்றான் கோபமான குரலில்.

"இல்லை நீங்க போங்க நான் அப்புறமா வர்றேன்.." என்றாள் தயங்கியபடி.


" ம்ப்ச் என்ன தாண்டி உன்னோட பிரச்சனை.. இதுவரைக்கும் நல்லா தானே இருந்த.. இப்போ என்னாச்சி.." என்று எரிச்சலுடன் கத்தினான்.

அதை கேட்டு உடல் நடுங்கியவள், "இல்லை பெட்ல டிரஸ்ல பீரியட்ஸ் ஆகிடுச்சி.. இறங்கி நடந்தா அப்படியே தெரியும்.." என்று கண் கலங்கியபடியே கூறினாள்.

அவள் சொன்னதை கேட்டவன் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறக்க அடுத்த நொடியே,

"சரி இங்கேயே இரு வர்றேன்.." என்று விட்டு மிருதுவுடன் வெளியே சென்றவன் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் கையில் ஒரு கவருடன் வந்தான்.

" இந்தா இதுல உனக்கு தேவையானது எல்லாம் இருக்கு.. நீ போய் மாத்திட்டு வா.." என்றவன் அப்படியே நிற்க அதில் சங்கடபட்டவள்,

"நீங்க கொஞ்சம் வெளியே.." என்று இழுத்தவளை அவனின் கண்டன பார்வை அப்படியே நிறுத்தியது.

"ஏன் இத்தனை நாளா இதெல்லாம் நான் தானே உனக்கு செஞ்சேன்.. அப்போ எதுவும் சொல்லலை இப்போ எதுக்கு நான் வெளியே போகனும்.." என்றான் கண்டனமாய்.

அடுத்து நொடி எதுவும் பேசாமல் அங்கேயே இருந்த குளியல் அறைக்குள் நுழைந்தவள் தன் கையில் இருந்த கவரை பிரித்து பார்த்தாள்.

அதில் அவளுக்கு தேவையான உடைகளும் நாப்கின் என இருக்க அந்த உடையை எடுத்து அணிந்து கொண்டவள் எப்போதும் போல் இப்போதும் தன்னவனின் தேர்வில் சந்தோஷம் என்றாலும் அது எப்படி சரியான அளவில் எடுத்து வந்துள்ளான் என்பது மட்டுமே புரியாத புதிர் தான்.

இவள் உள்ளே சென்ற அடுத்த நொடியே அங்கிருந்த கட்டிலை பார்க்க அதில் இருந்த உதிர துளிகள் அவளின் வலியை அவனுக்கு உணர்த்தின.

குழந்தையை அங்கிருந்த மற்றொரு கட்டில் படுக்க வைத்தவன் கட்டிலில் இருந்த பெட்ஷீட்டை உருவி அங்கிருந்த வேறொரு கவரில் வைத்து விட்டு மீண்டும் குழந்தையை தூக்கி கொண்டான்.

அதற்குள்ளாக அவளும் உடை மாற்றி வந்திருக்க கட்டிலை கண்டவள் தன்னவனின் வேலை தான் என்று புரிந்தவள் மெல்ல புன்னகை சிந்தி விட்டு குழந்தையை கையில் வாங்க கைதூக்க அவனோ அவளை தன் கரத்தால் அணைத்து கொண்டு வெளியே சென்றான்.

ஏனோ அவனின் அணைப்பில் இன்னும் அதிகமாய் அவனுக்குள்ளே நுழைந்து கொள்ள பெண்மனம் பேராவல் கொண்டது.

அதே நேரம் இதை கண்ட இரு விழிகள் வன்மத்தில் மின்ன மற்றும் இருவிழிகள் அதிர்ச்சியில் சிலையாய் நின்றுவிட்டது.


அந்த அதிர்ந்த விழிகள் யாருடையது..? வன்மம் கொண்ட விழிகள் யாருடையது..? விடை அடுத்த பாகத்தில் மக்களே..


இதயம் நுழையும்...
✍️