• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 14💘

Rizka muneer "Rizii"

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 12, 2022
16
5
3
18
Kandy
tamil.pratilipi.com
நடுநிசி வானில் பிரகாசமாய் நட்சத்திரங்களிற்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த முழுமதியின் ஒளி சாரளத்தின் வழியால் ஊடுருவி பெண்ணவள் அழகு வதனத்தை இருளிலும் பிரகாசிக்கச் செய்தது.

வீரிற்கு அப்பொழுது தான் உறக்கம் லேசாக எட்டிப்பார்க்க வலது கரத்தை நெற்றியில் வைத்து விழிகளை மறைத்தவாறு உறங்கியிருந்தவனிற்கு ஏதோ சிணுங்கல் சத்தம் காதுகளில் விழ மெல்ல கரத்தை விலக்கிப் பார்த்தான்.. அவன் பக்கத்திலிருந்து தான் அந்த சத்தம் வருகிறது என இனங்கண்டவன் மதியை பார்க்க அவள்தான் சிணுங்கிக் கொண்டிருந்தாள்..

அவனுக்கு முதுகு காட்டி உறங்கிக் கொண்டிருந்தவள் உறக்கத்தில் அவன்புறம் புரண்டிருந்தாள்.. நிலவொளியில் நன்றாகப் புலப்பட்டது அவள் வதனம்..

இதழ்கள் துடிக்க "தயவு செஞ்சு எனக்கு அவங்கள கொடுத்துடுங்க.. என்னால முடியல.. எனக்கு பயமா இருக்கு.. அவங்கள கொடுத்துடுங்களேன் " என்று பிதற்ற வீரோ புரியாது அவளை பார்த்தான்.. ஆனால் ஒன்று புரிந்தது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் எதற்கோ மிரண்டு பிதற்றுகிறாலென்று..

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. பயமா இருக்கு.." என்றவள் விசும்ப ஆரம்பித்தாள்...
நொடிக்கு நொடி அவளின் புலம்பலும் விசும்பலும் அதிகரித்துக் கொண்டே செல்ல விழிகளிலிருந்து கண்ணீர் மாலை மாலையை சிந்தியது.. ஒரு கட்டத்தில் வீரின் கரங்கள் தாமாய் அவளை இழுத்து அணைத்துக் கொண்டது.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு... என்ன விட்டுப்போயிடாதீங்க.." என்று மறுபடியும் அவனணைப்பிலிருந்தவாரே விசும்பலுடன் உறக்கத்தில் பிதற்றி அழ,

"ஏய் பேப்ஸ் ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.." என்று வீர் மதியை அணைத்தவாறு மெல்ல அவளின் தலையை வருடிக் கொடுக்க அவள் விசும்பல் சிறிது குறைந்தது..

"காம்டவுன் பேப்ஸ் காம்டவுன்.. எதுவும் கிடையாது.. கூல்.. எதுவுமில்ல நீ ரிலாக்ஸ்சா ஸ்லீப் பண்ணு.." என்று தன்னை அறியாது வெளிவந்த ஆறுதல் வார்த்தைகளை அவன் நா உதிர்க்க அவன் அணைப்பு கொடுத்த பாதுகாப்பை உறக்கத்திலிருந்தவள் உணர்ந்தாலோ என்னவோ
மெல்ல மெல்ல அவள் அழுகையும் அதனுடன் அவள் பிதற்றழும் அவனணைப்பிற்குள் அடங்கிச்செல்ல அவன் மார்பில் வாகாய் சாய்ந்து கண்ணயர்ந்தாள்..

வீரின் முகத்தில் கேள்வி ரேகைகள் பல பூக்க கண்ணிமைக்காது மதியின் வதனத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது கண்ணயர்ந்தான் என அவனே அறியவில்லை.


திரைசீலை விலகியிருந்ததாள் அதன் வழியால் புகுந்து வந்த ஒளிக்கற்றைகள் கண்ணை உறுத்த முகத்தை கரம் கொண்டு மறைத்தவாறு மறுபுறம் திரும்பிப் படுத்தவன் ஏதோ நினைவு வந்தவனாய் எழுந்து அமர்ந்தான்.

இரவு நேரம்சென்று உறங்கியதால் உறக்கம் உன்னை விடுவேனா என்று கட்டிலை நோக்கி இழுக்க அதன் எண்ணத்திற்கு தன்னை ஆட்டி வைக்கவிட்டு விட்டால் அது வீரேந்திர ஆதவன் கிடையாதே!

உறக்கத்தை அசட்டை செய்து விட்டு எழுந்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து கொண்டான்...
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் விழிகளோ அவனனுமதியின்றி அனைத்து இடங்களிலும் அலைபாய்ந்தது..

உடம்பில் தவழ்ந்த வியர்வை துளிகளை பூந்துவாயினால் துடைத்தவாரே பால்கனியை சென்று நின்றவன் அவன் கண்களிற்கு தரிசனம் வழங்கும் வகையில் தென்பட்டாள் மதி.

பாவாடை தாவணியில் கூந்தலை விரித்து விட்டு ஒரு சிறிய கிளிப்பில் முன்னே விழும் முடிக் கற்றைகளை அடக்கி காது, கழுத்து, கரங்கள் எதிலும் எந்த வித ஆபரணமும் அணியாதும் தேவதை யாய் காட்சியளித்தாள்.. எந்த ஒரு ஆண்மகனும் அவளை பார்த்தால் அவள் காலடியில் விழுந்து கிடக்கத்தான் தோன்றும்.. இதற்கு வீர் மட்டும் விதிவிலக்கா என்று கேட்டால் அவன் முகபாவனையோ எந்தவித உணர்வையும் எடுத்துக்காட்டாது அப்படித்தான் காட்சியளித்தது..

அவளுக்கு முன் அவளை விட சற்று உயரமாய் கிளைகள் விட்டு வளர்ந்து காணப்பட்ட மரத்தை அண்ணார்ந்து பார்த்தவாறு கன்னத்தில் ஒற்றை விரலை வைத்து எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தவளை விழியகற்றாது பார்த்துக் கொண்டே இருந்தவன் திரும்பிச் செல்ல யாரோ தன்னை பார்ப்பதை போல் உணர்ந்த மதி பால்கனி புறம் தன் பார்வையை செலுத்த அந்த இடமோ காலியாயிருக்க தோலை குலுக்கி உதட்டை பிதுக்கியவாறு மறுபடியும் தன் பார்வையை அந்த மரத்தின் புறம் செலுத்தினாள்.




மாலிற்கு வெளியே வண்டி வந்து நிற்க காவலன் ஒருவன் வேகமாய் வந்து கதவை திறந்து விட முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு வண்டியை விட்டு இறங்கினாள் தேஜ்விகா.

"இவனுங்க தொல்ல தாங்க முடியல" என்று அலுத்துக் கொண்டவாரே முன்னே நடக்க அவள் பின்னே இரு காவலர்கள் கண்டாமிருகம் கணக்காய் விரப்பாய் கையை கட்டிக் கொண்டு வர தேஜூ சட்டென நடையை நிறுத்தி உஷ்ன மூச்சுக்களை வெளியிட்டவாறு அவர்கள் புறம் திரும்பினாள்.

"இப்போ எதுக்கு நீங்க ரெண்டுபெரும் பின்னாலயே வரீங்க.. "

"உங்க கூடவே உங்களுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லி சார் சொல்லியிருக்காரு மேடம்.." என்று கையை மார்பிற்குக் குறுக்காய் கட்டியவாரே பார்வையை தாழ்த்தி பணிவுடன் கூற,

"ஐயோ நான் என்ன பட்டத்து ராணியா என்ன எவனாச்சும் கடத்திட்டு போகறதுக்கு.. எனக்கு என்ன பாதுகாத்துக்க நல்லா தெரியும் நீங்க ரெண்டுபேரும் இப்போ வீட்டுக்கு போய் உங்க சீர்ப் மினிஸ்டர் சார் பாதுகாப்பு கொடுங்க.." என்று வராத சிரிப்பை வரவழைத்து கையை நீட்டி வந்த வழியைக் காட்டி அவர்களை வழியனுப்பப் பார்க்க அவர்களோ அசைவோமா எனும் நிலையில் அதே இடத்தில் நின்றிருக்க தேஜூவிற்கோ ஐய்யோ என்றானது...

சோர்வான குரலில் "எதுக்கு இன்னும் இங்கயே நிற்குறீங்க அதான் நானே போக சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன போக வேண்டியது தானே.. " என்க,

"இல்ல மேடம்.. மேடம் சொன்னாங்க நீங்க இப்படிதான் சொல்லுவீங்க இருந்தும் உங்கள தனியா விட கூடாதுன்னு சொல்லியிருக்காங்க..."என்று ஒருவன் கூற,

மற்றையன் "உங்கள தனியா விட்டுட்டு போனோம்னா சீதா மேடம் எங்கள வேலைல இருந்து தூக்கிடுவாங்க" என்று தங்கள் பக்க நியாயத்தை கூறினான்..

அவர்கள் பக்க கூற்று சரியானதும் அவர்கள் வேலையே தங்களை பாதுகாப்பது என்றும் அவளறியாமலில்லை இருந்தும் அவர்களிடன் வேலை வாங்க அவள் விரும்பவில்லை.. அது மட்டுமின்றி தன்னை பாதுகாக்க வேறொருவரின் உதவியையும் அவள் எப்போதும் நாட விரும்பவில்லை..

"சரி ஓகே.. தென், நீங்க உங்க வேலைய பாருங்க, ஆனா ஒரு கண்டிஷன் நீங்க எல்லாரும் வெளியதான் இருக்கனும்.. " என்றதும் அவர்கள் ஏதோ கூற வர அதற்குள் இடையிட்டு "எனக்கு தானே திங்ஸ் வாங்க இருக்கு சோ நான் மட்டும் உள்ள போனா போதுல இல்ல உங்களுக்கும் ஏதாச்சும் திங்ஸ் வாங்க இருக்கா? " என்று சாமர்த்தியமாய் கேட்டு வைத்து ஒவ்வொருவர் புறமும் கையை நீட்டி வினவ அவர்கள் மறுப்பாய் தலையாட்ட "அப்ப ஓகே நான் போய் எனக்கு தேவையானத வாங்கிட்டு வரேன்" என்று மறுபடியும் திரும்பி சிரித்தவாறு மாலை நோக்கி ஓடினாள்.

அவள் மாலின் உள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட காவலர்கள் வெளியே காவல் காக்க அவளோ மெல்ல அவர்கள் கண்ணிற்கு புலப்படாது தான் அணிந்திருந்த டாப்பின் துப்பட்டாவால் முகத்தை மறைத்தவாறு மாலின் பின்புறம் சென்றாள்.

"இந்த அம்மா தொல்ல தாங்க முடியல.. எப்போ பாரு போடிகார்ட்ஸ்ச கூட அனுப்பிக்கிட்டு " புலம்பியவாரே மாலின் பின்புறம் எழுப்பப்பட்டிருந்து ஆளுயர மதிலின் மீது ஏறி வெளிப்புறம் குதித்தாள்.

"இந்த சீர்ப் மினிஸ்டர்க்கு பொண்ணா பொறந்து இன்னும் என்ன என்ன எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கோ.." என்று மேலே பார்த்து சிணுங்கியவாரே மதிலில் சிறிது ஊராய்ந்ததால் கை முட்டியில் ஏற்பட்ட காயத்தை ஆராய்ந்தவாரே கையில் ஒட்டியிருந்த தூசியை தட்டிவிட்டு நடையை கட்டினாள்..

அவள் கூறியதை கேட்டு அவள் விதி கமுக்கமாய் சிரித்து வைத்தது ..


காலை நேரம் என்பதால் சாலையில் ஆங்காங்கே சிலர் உடற்பயிற்சியும் நடை பயிற்சி, ஒட்டப்பயிற்சி செய்து கொண்டிருக்க இதழோர ஒட்டிய சிறு புன்னகையுடன் விழிகளை அங்கும் இங்கும் சூழலவிட்டவாறு பார்க்கை கடக்கச் சென்றவள் விழிகள் ஓர் இடத்தில் முற்றுப்பெற்றது..

இதழில் ஒட்டியிருந்த புன்னகை பறந்து போக உதட்டை சுளித்தவாறு ஜீன்ஸ் அணிந்து ஆம்கட்டுடன் ஓர் காலால் முட்டியிட்டு அருகே இருந்த நாயை வருடியவாறு இருந்தவனை பார்த்தவள் மூளை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று எடுத்துரைக்க "அன்னிக்கு என்னம்மா பேச்சு பேசின இரு இன்னிக்கு உன்ன என்ன பண்றேன்னு பாரு.. " என்று மைன்ட் வாய்ஸ்சில் அன்று அவளுடன் சண்டை பிடித்தவனைப் பார்த்தவாரே மைண்ட் வாய்சில் தனக்கு தானே பேசியவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றையை உதடு குவித்து ஊதி பின்னே ஒதுங்கினாள்..

அவனிற்கு சிறிது தள்ளி வந்து நின்ற தேஜூ பார்வையை அலையவிட்டு நிலத்தில் ஒரு ஓரமாய் கிடந்த சிறு கல்லை எடுத்து ஓர் திட்டத்துடன் மேலே தூக்கி போட்டு கேஷ் பிடித்தவள் அவனிற்கும் அந்த நாயிற்குமிடையிலாக குறி பார்த்தவாரே வீசி எரிய அது சென்று தவறுதலாய் அந்த நாயின் மேல் பதம் பார்க்க அதுவோ குழைத்துக் கொண்டே தெறித்தோடியது..

"ஏய் ஜிம்மி ஜிம்மி.. " என்று நாயை பார்த்து அவன் கத்த அதுவோ அவன் குரலை செவியில் வாங்காது கண் காணா தூரம் ஓடி மறைந்தது..

தேஜூவோ " ஜஸ்ட்டு மிஸ்சு" என்று தன் நோக்கம் நிறைவேறாததை நினைத்து வருந்தத்துடன் கூறி கையை வீசினாள்.



துடிக்கும்..