• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 15

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
கரை தீண்டும் அலையை போல மனமும் அவளை தேடி அவள் மடி சாய மனம் துடிக்கிறது.. ஆனால் அவள் தான் ஒற்றை வார்த்தையில் அவனின் உயிர் குடித்துவிட்டாளே..?

அவனின் தோளில் ஒரு கரம் விழ அதை இறுக்கி பிடித்தவனின் கண்கள் கலங்கி தான் போயிருந்தது.

அண்ணா என்னாச்சி.. நீ எங்கே போன.. உனக்கு என்னாச்சின்னு தெரியாம நான் எத்தனை நாள் தவிச்சேன் தெரியுமா.. ஆனா நீ இப்படி இடிஞ்சி போய் இருக்க.. நீ உயிரோட இல்லைன்னு என்கிட்ட சொன்னாங்க அண்ணா.. ஏன் இப்படி எதுக்காக அண்ணா இந்த தலைமறைவு.. யாருக்காக அண்ணா இப்படி இருக்கே..

நான் ஒருத்தி இருக்கறதே உனக்கு நினைவு இல்லையா என்ன.. ஏன் அண்ணா இப்படி இருக்க.. நீ எப்படி கம்பீரமா வாழ்ந்தவன்.. ஆனா இன்னைக்கு இப்படி யாரோ மாறி மறைஞ்சி நிக்கறியே.. என்ன தான் அண்ணா ஆச்சி.. உண்மையா சொல்லனும்னா நீ இறந்துட்டதா நினைச்சி நான் அந்த குடும்பத்தோட நிம்மதியையே அழிச்சிட்டேன் அண்ணா.." என்றாள் அவள்.

" ஐ ஆம் சாரி குட்டி மா.. அன்னைக்கு என் நினைவுல இருந்தது என்னோட சாலா மட்டும் தான்.. அவ வேணும்னு மட்டும் தான் நான் யோசிச்சேன்.. என்னால அவளை யாருக்காவும் விட்டு கொடுக்க முடியலை..

அவளை விட்டு பிரிஞ்சா என்னோட உயிர் போயிடும்.. அதனால தான் நான் அப்படி பண்ணேன்.." என்றவனுக்குள் இருந்த காதலின் வலி புரிந்தது பெண்ணுக்கும்.

" அண்ணா எனக்கு உன்னோட நிலை புரியுது.. ஆனா உன் பக்க நியாயத்தை அவங்களுக்கு புரிய வச்சிருக்கலாமே அண்ணா.. ஆனா இன்னைக்கு என்ன என்னவோ நடந்து போச்சி.." என்றாள் பெரிய மனிதியாய்.

"எனக்கு இன்னமும் பயமா தான் இருக்கு குட்டி மா.. என் சாலாவுக்கு பழைய நினைவு வந்துட்டு.. பார்த்ததுமே என் மேல கோபத்தை காட்டிட்டா.. திரும்ப எழுந்து என்ன கேட்பான்னே புரியலை.." என்றான் பயத்துடன்.

அவளோ அவனை ஒரு பார்வை பார்த்தாள்.. இந்த காதல் தான் எப்படிபட்ட வீரனையும் கூட கோழையாக்கி விடுகிறது.. கோழையை வீரனாக்குகிறது.

" என்ன குட்டி மா என்னை அப்படி பாக்குற.." என்றான் ரிஷி.

அவளோ தலையசைத்து மெல்லமாய் சிரித்தவள், "இல்லைண்ணா எப்படி கம்பீரமா யாருக்கும் அடங்காம ராஜாவா இருந்த.. ஆனா இன்னைக்கு நீ யாருக்கோ பயந்து இப்படி வாழறதை நினைச்சா கஷ்டமா இருக்கு அண்ணா.." என்றாள் அவனின் தோளில் சாய்ந்தபடி.

அவளின் தலையை மென்மையாக வருடியவன்,

"சாரி டா குட்டி மா.. என்னை மட்டுமே நினைச்சி உன்னை மறந்துட்டேன்.. சுயநலமா இருந்துட்டேன் இல்லை.. உனக்கும் என்னை விட்டா யாருமில்லைங்கறதை மறந்துட்டேன் டா.. என்னை மன்னிச்சிடு டா.." என்றான் மனதார.

" விடுங்க அண்ணா.. சரி வாங்க அண்ணிகிட்ட போலாம்.. " என்றாள் சிரிப்புடன்.

"அவளை அண்ணியா ஏத்துக்கிட்டியா டா.." என்றான் கலங்கிய போன குரலில்.

" நீங்க என்னோட அண்ணன் அப்படிங்கிற போது உங்க மனைவி என்னோட அண்ணி தானே.. அது தானே முறையும் கூட.. வாங்க போலாம்.. ஆமா எப்போ அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு போறது அண்ணா.." என்றாள் மெதுவாய்.

" இன்னைக்கு கூட்டிட்டு போலாம் டா.. ஆனா அவ என்னோட வரனும்.." என்றவனின் வார்த்தையில் வலி இருந்தது.

" நிச்சயம் அவங்க உன்னோட காதலை புரிஞ்சிப்பாங்க அண்ணா.. வா போலாம்.." என்று அவனை அழைத்தபடியே சாலா இருந்த மருத்துவமனைக்குள் சென்றனர்.

தன் அருகில் நிம்மதியாய் உறங்கி கொண்டிருக்கும் தன்னவளை விழி அசைக்காமல் பார்த்திருந்தான் தேவநந்தன்.

மாலையில் இருந்த பயம் பதட்டம் இல்லாமல் நிம்மதியாய் நிர்மலமான முகத்துடன் உறங்கி கொண்டிருந்தாள்.

அவளின் பக்கத்தில் மிருதுவும் அவளின் அணைப்பில் சுகமாய் உறங்கி கொண்டிருந்தாள்.

இருவரையும் பார்த்தவனுக்குள் இதில் யார் குழந்தைகள் என்றே தெரியாமல் உறங்கி கொண்டிருந்தாள் அவனின் மனதின் மஹாராணி.

மெல்ல அவளின் முகத்தில் அசைந்தாடிய கூந்தலை விலக்கிவிட்டவன்,

"கனிமா என்னை மன்னிச்சிடு டி.. உன்னை எல்லா சொந்தமாவும் இருந்து பாத்துப்பேன்னு உனக்கு வாக்கு கொடுத்தேன்.. ஆனா என்னால அந்த வாக்கை காப்பாத்த முடியாம போயிடுச்சி.. என் குடும்ப பிரச்சனையில உன்னை நான் சந்தேகபட்டிருக்க கூடாது.. ஐ ஆம் சாரி டி.. உன் காதலுக்கு நான் தகுதி இல்லாதவன் டி.. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உனக்கு எதிராவே இருந்திருந்தாலும் கூட நான் உன்னை நம்பியிருக்கனும்.. ஆனா நான் நம்பலை.. என்னை மன்னிச்சிடு டி.." என்று பேசியவன் அவளின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.. அதில் அவனின் காதல் இன்னும் அதிகமாய் பதிந்து போனது.


எவ்வளவு நேரம் அவளையே பார்த்திருந்தானோ அதை கலைக்கவென அவனின் அலைபேசி அழைத்தது.

அதை எடுத்து காதுக்கு வைத்தவன் அந்த பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ அடுத்த நொடி வேகமாய் எழுந்தவன்,

"இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் அங்கே இருப்பேன்.." என்று சொல்லிவிட்டு எழுந்தவன் தன்னவளை பார்த்தவனின் கண்கள் கலங்கி போனது.

" சாரி டி உன்னை புரிஞ்சிக்காம நான் உன்னை என்ன லவ் பண்ணேன்னு எனக்கு தெரியவே இல்லை டி.. சாரி செல்லம்மா.." என்று வேதனையில் வெந்தவன் அங்கிருந்து வேகமாய் வண்டி சாவியை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

அதே நேரம் அவனின் முன்னே வந்து நின்ற மரகதம்,

"தேவா உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க.. அவ இங்கே இருக்க கூடாதுன்னு நான் சொன்னேன் இல்லை.. நீ திரும்பவும் அவளை கூட்டி வந்து குடும்பம் நடத்த போறியா என்ன.. ஒரு அனாதைக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே அதிகம் தான்.. எம்புள்ளையை ஒன்னுமில்லாம கொன்னவ அவ.. அவளை திரும்பவும் இந்த வீட்டுக்கு கூட்டி வந்து கும்மியடிச்சிட்டு இருக்கியா நீ.." என்றார் கோபமாய்.

அதை கேட்டவன் ஆத்திரத்தில் அவரை முறைத்து பார்த்தவன், "உங்க எல்லை எதுவோ அதோட நிறுத்துங்க.. இனி என முன்னாடி அவளை பத்தி நீங்க பேசுனா உங்க உயிர் உங்க உடல்ல இருக்காது பாத்துக்கோங்க.." என்றவன் ஆத்திரமாய் அங்கிருந்து சென்றான்.

அவனின் முறைப்பில் அடங்கிய மரகதம் அவன் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் தன் அலைபேசியை எடுத்து யாருக்கு பேசினாரோ அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அலைபேசியை வைத்தவரின் முகத்தில் ஒரு குரூர புன்னகை வந்தது.

இங்கே அந்த மருத்துவமனைக்கு வந்து தன் காரை நிறுத்தியவன் தன் விழியை நாலாபுறமும் சுழற்றி பார்க்க அவனின் பார்வை முடியும் நேரம் ஒருவன் அங்கே வந்து நின்றான்.

" குட்ஈவ்னிங் பாஸ்.." என்றான் பவ்யமாய்.

அதை கேட்டு தலையாட்டியவன், "என்னாச்சி தாண்டவம் எங்கே பார்த்த.. அது அவங்க தானா.." என்றவனின் குரலில் அத்தனை கோபம் இருந்தது.

"ஆமா பாஸ் சந்தேகமே இல்லாம அது அவங்க தான் பாஸ்.. அதோட இன்னொரு விஷயமும் இருக்கு பாஸ்.. இதோ இதை பாருங்க பாஸ்.." என்றபடி தன் அலைபேசியை கொண்டு ஒரு வீடியோவை ஓடவிட்டு அதை தேவாவின் கைகளில் கொடுத்தான் அவன்.

அதை வாங்கியவனின் கண்களில் புரியாத பல பாவனைகள் வந்து போனது.

"இந்த பொண்ணு எப்படி தாண்டவம்.. இது பொய் இல்லையே.." என்றான் சந்தேகமாய்.

"கொஞ்சமும் சந்தேகமே இல்லை பாஸ்.. அவனோட ரிலேஷன் தான் அந்த பொண்ணு.. ரொம்ப அந்நியோன்யமா பேசிகிட்டாங்க பாஸ்.." என்றான் கூடுதல் வரியாய்.

அந்த வீடியோவை திரும்பவும் ஓட விட்டவன் என்ன யோசித்தானோ அடுத்த நொடியே அந்த தாண்டவனின் காதுகளில் எதுவோ சொல்ல அவனும் அவனின் உத்தரவிற்கு கட்டுபட்டு தலையாட்டினான்.


தாண்டவம் அங்கிருந்து சென்றதும் அந்த மருத்துவமனை கட்டிடத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தவன்,

"நீ எவ்வளவு சந்தோஷமா இருக்குறியோ இருந்துக்கோ.. என் குடும்பத்தோட நிம்மதியையும் சந்தோஷத்தையும் அழிச்சிட்டு நீ நிம்மதியா இருக்கலாம்னு பாக்குறியா.. அது முடியாது டா முட்டாள்.. கூடிய சீக்கிரமே நேர்ல பாக்கலாம்.. அதுவரைக்கும் நல்லா சுதந்திரமா சந்தோஷமா இருந்துக்கோ..' என்று கூறியவன் அங்கிருந்து கிளம்பினான்.

அவன் அங்கே நின்றதை இத்தனை நேரமும் கண்ட இரு விழகளில் கண்ணீர் வழிந்தது.. அதை தடுக்கும் வகை அறியாமல் தூரமே இருந்து அவனை ஏக்கமாய் பார்த்திருந்தது.

அந்த ஏக்கம் படிந்த விழிகளுக்கு சொந்தமான உருவம் யாரோ..?

இங்கே மீண்டும் வீட்டிற்கு வந்தவன் ஹாலில் தன் தாய் தந்தை இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க அதை கண்டவன் விழிகளோ தன்னவளை ஜல்லடை போட்டு தேடியது.

ஆனால் அவனின் தேடலுக்கு சொந்தமானவள் தான் அங்கே இல்லை.

அங்கிருந்த தன் தங்கையை பார்த்தவன்,

"கயல் அவ எங்கே.." என்றான் அவர்களை பார்வையால் தழுவியபடி.

அவளோ அவனின் முகத்தை பார்க்காமல்,

"மேலே இருக்காங்க.. பாப்பா அழுதுச்சின்னு தூக்கிட்டு போனாங்க.. அவங்க சாப்பிட்டாங்க.." என்றாள் பொத்தாம் பொதுவாய்.

அதை கண்டவனுக்கு கோபம் பாத்து கொண்டு வந்தது.. உடன் பிறந்த அண்ணனிடம் யாரோ ஒருவனிடம் பேசுவதை போல் பேசுகிறாளே என்ற ஆத்திரம் வந்தாலும் கூட தானும் வார்த்தையால் இவளை காயப்படுத்தி இருக்கிறோம் அதற்கான தண்டனை இது என்று நொந்தவன் மேலே தங்களின் அறைக்கு செல்ல காலடி எடுத்து வைத்தவனை வரவேற்றது அவனவளின் குரல் தான்.


செங்காந்தலே
உனை அள்ளவா
செல்ல தென்றலே உனை ஏந்தவா

அழைத்தேன் உன்னை என்னோடு

இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள்
என்னை தீண்டுமா

மிதந்தேன் காற்றில் காற்றாக

நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள்

என்னை காணுமா...

ஆராரோ … ஆராரிரோ …

ஆராரோ … ஆராரிரோ …

சின்ன சின்ன

மலர் குவியலை போல்
எனக்குள் மலர்ந்தாய்

என்ன என்ன

உயிர் சிலிர்க்க வைத்து
கருவில் அசைந்தாய்

உன்னைப் பெறும்

அன்னை வலி
வலியல்ல ஓர் வரமே

என் மார்பிலே
கூடு கட்டி
நீ உறங்கிடும் நாள் வருமே

பால் கசியும் இதழோடு
உன்னைக் காணவே..
தெய்வம் கூட ஓசை இன்றி

வந்து போகுமே..

அன்னை நெஞ்சில் அனல்

எரிகையிலே
மழை போல் வந்தாய்

எந்த திசையிலும்

இருட்டுக்குள் தான்
வெளிச்சம் தந்தாய்

ஜென்மம் ஒன்று
போதாதென்று
ஏழு ஜென்மம் நான் சுமப்பேன்

என் வாழ்விலே ஒரே இன்பம்

கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்

உன் மேல் தூசும் தீண்டாமல்
காப்பேன் அன்பே..

காலம் முழுதும் உனக்காக

வாழ்வேன் அன்பே..

ஒரு தாய் கருவில் உதித்த மகளுக்காக பாடியது.. ஆனால் இவளோ தாயின் வலிகளை அல்லவா சொல்கிறாள் என்று உணர்ந்தவனுக்கு மனம் வலித்தது.

இவளின் இந்நிலைக்கு நானும் ஒரு காரணம் தானே..

இல்லை இதற்கு சீக்கிரமே ஒரு முடிவை தேட வேண்டும்.. இனியும் என்னவள் யாருக்காகவும் கலங்கவிடக் கூடாது என்று உறுதி மேற்கொண்டான்.

அதை காப்பானா.. இல்லை தன் அவசர புத்தியால் மீண்டும் பிரிவை தேடுவானோ..?


பொறுத்திருந்து தான் பார்ப்போமே அடுத்தடுத்த பாகத்தில்.



இதயம் நுழையும்..
✍️
 
  • Love
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
154
110
43
Dindigul
ஒவ்வொரு எபியும் செம்மையா இருக்குமா?
அடுத்து என்ன அடுத்து என்னன்னு ஆர்வத்தை தூண்டுது