• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 16

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
ஆதவன் மேற்கில் மறையும் அந்தி நேரத்தில் கடலின் கரையோரம் அமைதியாய் அமர்ந்திருந்தான் ரிஷிவந்த்.

அவளை இன்னும் அவன் பார்க்க செல்லவில்லை.. உடம்பு முழுதும் பயம் தான் வியாபித்திருந்தது.

நிச்சயம் அவள் தன்னை மன்னிக்கமாட்டாள்.. ஆனால் அவளை பிரிந்து வாழும் வாழ்க்கை தனக்கு தேவையில்லை என்றே தோன்றியது.

இனி அவளிடம் எதையும் மறைத்து பயனில்லை அனைத்தையும் சொல்லவிடலாம் என்ற நிலையில் தான் நின்றான்.

ஆனால் அப்படி உண்மையை கூறி அவளை இழந்துவிட்டாள் அது இதையும் விட வேதனையானது.

அதே நேரத்தில் அவனின் அலைபேசி அழைக்க அதை எடுத்து காதுக்கு வைத்தவன் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அடுத்த நொடியே வேகமாய் எழுந்தவன் தன் காரை தேடி ஓடினான்.

அந்த மருத்துவமனையின் வாயிலில் காரை நிறுத்தியவன் வேகமாய் உள்ளே செல்ல அந்த அறையின் வாயிலில் மூச்சிறைக்க நின்றவன் தன்னை தேற்றி கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவனின் கண்களில் உதிரம் படிந்த கைகளில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு கண்கள் மூடியிருந்தாள்.

அதை பார்த்தவனின் உயிர் துடித்தது.. இதற்காகவா இவளை இவ்வளவு நேசித்தேன்.. இவளை இப்படி பார்ப்பதற்கா மனதில் வைத்து தாங்கினேன்.

அவனால் முடியவில்லை.. எந்த காதலுக்காக அவளை அழைத்து வந்தானோ இன்று அவளே இல்லை என்ற போது அந்த காதல் மட்டும் எங்கிருந்து வாழும். உள்ளம் ஒடிந்து போனான் ஆடவன்.. மெல்ல அவளருகில் வந்தவன் அவளின் வதனத்தை தாங்கி பிடித்தவன்,

'ஏண்டி இப்படி ஒரு காரியம் பண்ணே.. கண்ணம்மா என் மேல உனக்கு காதலே இல்லையாடி.. ஆனா எனக்கு நீ இல்லைன்னா முடியாது டி.. நீ என்னை ஏத்துக்கற நாளுக்காக நான் காத்திருந்தேன்.. ஆனா நீ என்னை மொத்தமா தவிக்க வச்சிட்டு போகனும்னு முடிவு பண்ணிட்டாயா சாலா மா..' என்றவனுக்கு அதற்கு மேலும் போராட உடலில் வலு இல்லை.

அவனின் மொத்த சக்தியையும் மொத்தமாய் குடித்துவிட்டாள் பெண்ணவள் ஒரு செயலில்.

ஆம் அவளை இங்கே விட்டு அவளை பார்க்க முடியாமல் வெளியே சென்றிருந்த நேரம் தன் உயிரை மாய்த்து கொல்ல கையில் நரம்பை அறுத்துக் கொண்டாள். அதில் தான் ஆடவன் உள்ளம் உடைந்து போனான்.

எப்பொழுது தான் வேணாம் என்று அவள் உயிரை அவள் துறக்க துணிந்தாளோ அன்றே அவனின் நம்பிக்கை சுத்தமாய் பொய்த்து போனது. இனி அவள் மனதில் தான் இல்லை.. தனக்கு எப்போதும் இடமில்லை என்று நினைத்தவன் இனி அவளை தன்னுடன் வைத்து அவளை இழக்க முடியாது என்று உணர்ந்தவன் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்திட்டு எதுவோ பேசியவன் அப்படியே வைத்து விட்டு கீழேயே அமர்ந்துவிட்டான்.

கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது அவளை பிரிவை நினைத்து. என்னை ஒரு நிமிஷம் கூட நீ நினைக்கலை இல்லை சாலா.. சரி இனி நீ என்னோட இருக்க வேணாம்.. நான் உன்னை உன் வீட்டுக்கே அனுப்புறேன்.. இனி நீயா என்னை தேடி வராத நான் வரமாட்டேன் டி.. இதுக்கு தாண்டி காதலே வேணாம்னு நான் விலகி போனேன்.. ஆனா என்னை கொஞ்சம் கொஞ்சமா உன்னோட அடிமையா ஆக்கிட்ட இல்லை..

சரி உனக்கே என்னை தெரியாத போது நான் என்னடி பண்ணுவேன்.. நிச்சயம் உன்னை மிஸ் பண்ணுவேன் டி.. தனக்குள்ளே ஆயிரம் முறை தனக்கு ஆறுதல் சொல்லி கொண்டான்.

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விடுவாள்.. இனி அவனின் வாழ்க்கையில் அவள் இல்லை.. இல்லை அவளின் வாழ்க்கையில் அவன் தான் இல்லை.

என்றோ செய்த தவறு இன்று தன் வாழ்க்கையை சிதைத்ததை அறிந்தவன் உள்ளம் இறுகி போனான்.

அவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட மெல்ல எழுந்தவன் அதை திறக்க போகும் நேரம் என்ன நினைத்தானோ மீண்டும் தன்னவள் அருகில் வந்தவன் அவளை இறுக்கமாய் அணைத்து பிடித்தபடி அப்படியே படுத்து கொண்டான்.
இந்த நொடி இந்த நிமிடம் இந்த சந்தோஷம் இனி என்றும் அவன் வாழ்க்கையில் இல்லை. இதை இழக்க அவன் விரும்பவில்லை.

ஏனோ அந்த நேரத்தில் அவளின் கதகதப்பு ஆடவனுக்கு மிகவும் அவசியமாய் தேவைப்பட்டது.

மீண்டும் கதவு தட்டப்பட அவளை விட்டு விலகியவன் அவளின் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைத்து விட்டு, "மிஸ் யூ சோ மச் டி.. இனி உன்னை நான் பாக்கமாட்டேன்.. என் தொல்லை உனக்கு இருக்காது.. ஆனா என் நினைவு முழுக்க நீ மட்டும் தாண்டி இருப்பே.." என்று அவளை மீண்டும் ஒரு முறை கட்டி தழுவியவன் கதவை திறக்க சென்றான்.

கதவை திறந்தவனை தள்ளி கொண்டு வந்தவன் அங்கே இருந்தவளை பார்த்து கண்கள் கலங்கி தான் போனான்.
" சாரி.." என்றான் ரிஷி எங்கோ பார்த்து கொண்டு.

மற்றவன் அவனை ஓங்கி பளீரென அறைந்தவன், "நல்லா இருந்த என் குடும்பத்தை சிதைச்சிட்டியே டா.." என்று ஆத்திரம் தாளாமல் மீண்டும் ஆங்காரமாய் அடித்தான்.

அனைத்து அடிகளையும் வாங்கியவனின் பார்வை அங்கே கட்டிலில் எழுந்து அமர்ந்து இதை வேடிக்கை பார்த்த அவனின் சாலாவின் மேல் தான் இருந்தது. அவன் அடிவாங்க அதை ஆத்திரம் பொங்க பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் அடித்தது வலிக்கவில்லை ஆடவனுக்கு.. ஆனால் தான் அடி வாங்குவதை தன்னவள் வேடிக்கை பார்த்த செயல் தான் ஆடவனுக்கு வலித்தது. தான் சிறியதாய் முகம் சுழித்தாலும் கூட கலங்கி போய் நிற்கும் தன் சாலா எங்கே என்று தான் ஆடவனுக்கு விளங்கவில்லை.

இத்தனை வெறுப்பா தன் மீது அவளுக்கு.. என் மேல் துளியும் நேசம் இல்லையா பெண்ணவளுக்கு. அதை நினைக்கும் போதே ஆடவனின் உள்ளம் வெடித்து சிதறியது.

ரிஷியை அடித்தவன் மெல்ல சாலாவின் அருகே சென்று,
"அக்கா.." என்றான் பாசமாய்.

அந்த குரலில் பெண்ணவள் அழுதபடியே, "தம்பி.." என்று அவனின் மார்பில் விழுந்து கதறி அழுதாள்.

"அழாதேக்கா அது தான் நான் வந்துட்டேன் இல்லை.. இந்த நாய் உன்னை மறைச்சி வச்சியே வாழ்ந்துடுச்சி.. இல்லைன்னா எப்பவோ உன்னை காப்பாத்தியிருப்பேன் கா.." என்றான் கலங்கிய போன குரலில் அவன்.

ஆனால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ரிஷிக்கு உள்ளம் வலித்தது தன்னவள் அழுவதை நினைத்து. இந்த அளவுக்கா தன்னை வெறுப்பாள்..? ஒரு நொடி கூட என் காதல் அவளுக்கு புரியவில்லையா..? இல்லை என் காதலை அவளுக்கு என்னால் உணர்த்த தான் முடியவில்லையா..? எந்த இடத்தில் என் நேசம் பொய்த்து போனது..!

அவளுக்காக காத்திருந்த காலங்கள் நேசித்த நொடிகள் அவளையே சுவசமாய் வசித்த வாழ்க்கை என்று எதுவும் அவளுக்கு புரியவில்லையா..?

" அக்கா நான் வந்துட்டேன் வாக்கா இங்கிருந்து போலாம்.." என்று அவன் பாசமாய் அழைத்தான்.

"தம்பி என்னை மன்னிச்சிடு டா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. இவன் இவ்வளவு தூரம் செய்வான்னு எனக்கு தெரியலை டா.. நம்ம குடும்பத்துக்கு நான் தீராத அவமானத்தை தேடி தந்துட்டேன்.. ஆனா சத்தியமா எனக்கு எதுவும் தெரியலை தம்பி.." என்று தன் தம்பியின் மார்பில் கதறி துடித்தாள்.

" வாடா போலாம்.. நீ எங்க வீட்டு மகாலட்சுமி க்கா.. உன்னை எப்படி கா நாங்க தப்பா நினைப்போம்.. நீ வாக்கா முதல்ல நம்ம வீட்டுக்கு போலாம்.." என்று அவனும் கலங்கினான்.

தன் தம்பியின் கையை பிடித்து கொண்டவள் ரிஷியை அசிங்கமான பொருளை பார்ப்பது போல் பார்த்து விட்டு சென்றாள் என்றால் அவளின் தம்பியோ ரிஷியின் மேல் கொலைவெறியில் சென்றான்.

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி


என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும்
சுகதானம்மா இது நீ இருக்கும்


ஆராரோ ஆரிரோ ஏ தங்கமே

தனியா வளந்தா தாயின் அரும
தாகம் எடுத்தா தண்ணி அரும
உலகம் ஒதுங்க உறவின் அரும
உடம்பு சரிஞ்சா உயிரின் அரும
கஷ்டம் நிறைஞ்சா கடவுள் அரும
கன்னி பிரிஞ்சா காதல் அரும


அங்கே ஒடி வரும் என் குரலே
நெஞ்சே கூறி விடும் உன்னிடமே
ஏற்க என் உடம்பை காயம் செய்தாய்
எங்கே கூறிடுவேன் என் உயிரே


நீ எந்தன் பாதி இது தானே மீதி
உனை விட்டு போக முடியாதம்மா
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி

இது நீ இருக்கும் ஹோய்
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி


கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்
இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்
சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்

மேகங்கள் மூடும் கருவானம் கூட
காற்றுகள் வந்தால் தெளிவாகுமே
பதில் தேவையா உயிர் தேவையா
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி
ஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி..


அவளின் வாசம் இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை.. அவளின் புடவையை எடுத்து நெஞ்சுக்குள் இருக்கமாய் அணைத்து கொண்டவனுக்கு வீட்டின் கீழே செக்கியூரிட்டி வைத்திருந்த அலைபேசியில் இந்த பாடல் ஓடி கொண்டிருக்க ஆடவனின் மனம் தன்னவளை நினைத்து வலித்தது.

"என் கூடவே இருந்து தண்டனை கொடுத்திருக்கலாமே கண்ணம்மா.. நீ இல்லாம என்னால இருக்க முடியலை டி.. நீ இல்லாம இந்த வீடு எனக்கு வெறுமையா இருக்குடி.. இந்த அறையில உன் வாசம் எனக்கு மூச்சு முட்ட வைக்குதுடி.. என்னை விட்டு நிம்மதியா இருப்பியா சாலா.. என் நினைப்பே இல்லாம உன்னால வாழ முடியுமா சாலா..
நான் செஞ்சதுக்கு எனக்கு மன்னிப்பே இல்லையா டி.. சாலா சாலா வந்துருடி.." என்று தன்னவளின் நினைவில் பைத்தியம் போல் ஆகிவிட்டான் இரண்டு மணி நேரத்தில்.
இனி அவளில்லாத அவனின் வாழ்வு என்னாகுமோ..?

தேவநந்தனின் வீட்டு போர்டிகோவில் அந்த கார் வேகமாய் வந்து நிற்க டிரைவர் சீட்டில் இருந்து இறங்கியவன் வந்து பின்கதவை திறந்து விட அவள் நடுக்கமாய் கீழே காலை வைத்தாள்.
அவளை சந்தோஷமாய் பார்த்தவன் உள்ளே திரும்பி,
"அப்பா அம்மா கயல் இங்கே வந்து பாருங்க யாரு வந்துருக்காங்கன்னு.." என்று சந்தோஷமாய் குரல் கொடுத்தான் தேவநந்தன்.

அவனின் குரல் கேட்டு அனைவரும் வேகமாய் வெளியே வந்து பார்க்க அங்கே இருந்தவளை பார்த்து கஸ்தூரி வாஞ்சிநாதன் கயல் என அனைவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தார்கள்.

அதே நேரம் அங்கே வந்த கன்யா மட்டும் இதை எதிர்பார்த்ததை போல் அமைதியாய் வேடிக்கை பார்த்தாள்.

"தேவா இது.. இது.." என்ற கஸ்தூரிக்கு பேச்சே வரவில்லை.
அவனோ தன் அருகே நின்றவளின் கரத்தை பிடித்தபடி தன் குடும்பத்தை சந்தோஷமாய் பார்த்தான்.

அவனின் சத்தத்தில் அங்கே வந்த மரகதம் கூட அங்கே நின்றவளை கண்டவளுக்கு பயத்தில் உடல் நடுங்க நின்றாள்.

கஸ்தூரி மெல்ல தேவநந்தனிடம் சென்றவர் அவனின் அருகே இருந்தவளை பார்த்து,
"தேவா இது நம்ம.. நம்ம லட்சுமியா.." என்றாள் அதிர்ச்சியாய்.
அவனோ அவளை பார்த்து கொண்டே,
"ஆமாம் மா இது நம்ம லட்சுமி தான்.. என் லட்சுமி அக்கா மா.." என்றவனின் கண்களும் கலங்கி போய் இருந்தது.

அவன் பக்கத்திலிருந்து அதை சந்தோஷமாய் கேட்டவள் சாட்சாத் நம்ம ரிஷியோட சாலா என்ற விசாலி தான்ப்பா..?

ஹாய் மக்களே இதெல்லாம் எப்படின்னு யோசிச்சி எனக்கு கமெண்ட் பண்ணுங்க.. நான் அடுத்த பாகத்துல இதுக்கான விடையோட வர்றேன் மக்களே.
இதயம் நுழையும்...
✍️