• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 18

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
230
43
Salem
"அக்கா என்ன சொல்ற நீ.. யாருக்காக இப்படி பயந்து ஓடப்போற.. இது தான்க்கா உன் குடும்பம்.. நாங்க எல்லாம் இங்கே இருக்கும் போது நீங்க எதுக்காக அக்கா இப்போ யூகே போறேன்னு சொல்ற.. அங்க இருக்கற நம்ம கம்பெனியை நீ ஏன் டேக் ஓவர் பன்றேன்னு சொல்ற.." என்று கத்தினான் தேவநந்தன்.

ஆம் தன் மனதை கொஞ்சம் திசை திருப்பினால் நிச்சயம் அந்த ரிஷியை மறந்து போவோம்.. இங்கே இருந்தால் நிச்சயம் அவனை காண நேரும்.. அவன் மேல் மலையளவு வெறுப்பு கொட்டி கிடந்தது.. ஆனால் இங்கேயிருந்து அவனை நிதமும் காண அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

அது தான் இங்கிருந்து லண்டனில் இருக்கும் தன் கம்பெனியை பார்த்து கொள்ள செல்கிறேன் என்று தேவாவிடம் கேட்டாள்.

ஆனால் அவனோ அவள் எதற்காக யாருக்கு பயந்து இங்கிருந்து போக வேண்டும் என்ற ரீதியில் யோசித்தான்.

அது தான் இப்போது வாக்கு வாதமாய் மாறியிருக்கிறது.

வீட்டில் உள்ள மற்றவர்கள் அக்கா தம்பிக்குள் நடக்கும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி வேடிக்கை பார்த்தனர்.

யாரும் அவளிடம் சென்று அங்கே செல்ல வேண்டாம் என்று சொல்லவும் இல்லை.. போக வேண்டாம் என்று கூறுபவனிடம் மைண்ட் ரிலாக்ஸ் ஆக அவள் போய் வரட்டும் என்றும் யாரும் கூறவில்லை.

"தேவா ப்ளீஸ் என்னை ரொம்ப வற்புறுத்தாத.. என்னோட மைண்ட் முழுசா அவன் மட்டும் தான் இருக்கான்.. அவனை தினமும் பார்த்தா என்னோட அதீதமான வெறுப்புல அவனை ஏதாவது செஞ்சிடுவேன்.. நான் போயிட்டு வர்றேன் தேவா ஒரு ஆறு மாசத்துக்கு.." என்றாள் விசாலி.

" ஆனா அக்கா அங்கே போய் நீ மட்டும் தனியா இருப்பியே கா.." என்றான் பாசமான தம்பியாய்.

" நான் ஏன்டா தனியா போக போறேன்.. மிருதுளாவோட தான் போறேன்.. இத்தனை நாளா நான் அவளை மறந்துட்டு இல்லை வாழ்ந்தேன்.. ஆனா இனி நான் யாருக்காக அவளை பிரிஞ்சி வாழனும்.. நானும் என் பொண்ணும் போறோம் தேவா.. இத்தனை நாளா என் பொண்ணை பிரிஞ்சி இருந்ததே போதும் தேவா.. நானும் அவளும் எங்களுக்குண்டான வாழ்க்கையை வாழ போறோம் தேவா.." என்றாள் கன்யாவின் கையிலிருந்து குழந்தையை பார்த்தபடியே.


அதை கேட்ட கன்யாவின் ஆவி துடித்தது.. இத்தனை நாளாய் தாய்க்கு தாயாய் மிருதுவை வைத்திருந்தது அவள் தானே.

ஆனால் இன்று விசாலி கேட்கவும் குழந்தையை இறுக்கமாய் தன்னை சுற்றி அரவணைத்து கொண்டாள்.

" அக்கா என்ன சொல்ற.. இது உன்னோட குழந்தைன்னு சொல்ல போறியா.. வேணாம் கா உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு.. நாங்க உன் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ வைப்பேன் கா.. மிருது எங்க பொண்ணாவே வளரட்டும் கா.. உண்மையை சொல்ல போனா அவ எங்களோட பொண்ணுனனு தான் இங்கே இருக்க எல்லாருக்கும் தெரியும்.. அது அப்படியே இருக்கட்டும் கா.." என்றவன் அக்காவுக்கு தம்பியாய் யோசித்தவன் தன்னவளின் மனநிலையை யோசிக்க மறந்துவிட்டான்.

இந்த குழந்தைக்காக தானே என்னை தேடி வந்து திருமணம் செய்தாய்.. இப்போதும் நான் உனக்கு இரண்டாம் பட்சமா..? என்றவனை நோக்கி அக்னி பார்வையை வீசினாள்.

ஆனால் அதிலெல்லாம் அவனின் கவனம் செல்லவில்லை.. ஆனால் இப்போது தன் அக்காவை இங்கேயே இருக்கும் வழியை மட்டும் யோசித்தவன் உள்ளம் உடைந்து கூடாய் நிற்கும் ஒருத்தியை கவனிக்கவில்லை.

"இல்லை தேவா எனக்கு இன்னொரு வாழ்க்கை வேணாம்.. போதும் தேவா மிருது மட்டும் என் வாழ்க்கைக்கு போதும்.." என்றவள் கன்யாவின் அருகே சென்று மிருதுவை வாங்கி கொண்டாள்.

அதில் நிலைகுலைந்து போனது என்னவோ கன்யா மட்டுமே.

இவ்வளவு நேரம் இவற்றை வேடிக்கை பார்த்த கஸ்தூரி விசாலியை பார்த்து,

"லட்சுமி என்ன பன்ற நீ முதல்ல மிருதுவை கன்யா கையில குடு.. நீ என்னடி நினைச்சிட்டு இருக்க.. அன்னைக்கு இந்த பிள்ளையை அம்போன்னு தூக்கி போட துணிஞ்சவ தான நீ.. இவ மட்டும் இல்லைன்னா இந்த மிருது இருப்பாளான்னு ஒரு நிமிஷம் யோசிச்சியா டி..

அந்த பொண்ணோட முகத்தை பார்த்தியா.. உனக்கும் உன் தம்பிக்கும் அவளை தேவைக்கு மட்டும் தான் தேடுவீங்க இல்லை.. அவளை என்னான்னு டி நினைச்சீங்க.. உயிரும் உணர்வும் உள்ள பொண்ணு டி..

ஏன் தேவா உன் கூட பிறந்தவளுக்காக இப்படி யோசிச்சி கலங்குறியே.. நீ தாலி கட்டி ஒருத்தியை இங்கே கூட்டிட்டு வந்தியே.. அவளோட மனசை நினைச்சி பாத்தியா டா..

நீங்க ஆட்டுவிக்கற பொம்மையா டா அவ.. உங்களை இப்படியா நான் சுயநலமா வளர்த்தேன்.. ச்சீய் உங்களை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு டா..

இதோ பாரு லட்சுமி நீ எங்கே வேணா போ.. ஆனா மிருதுவை அந்த பொண்ணுகிட்ட இருந்து பிரிச்சிடாத..

எங்களுக்கு உன் வாழ்க்கை இப்படி போனதுல வருத்தம் தான்.. ஆனா அவளும் உன்னை போல ஒரு பொண்ணு..

நீ கர்ப்பமா இருக்கும் போது உன் தம்பி இவளுக்கு தாலி கட்டி கூட்டிட்டு வந்தான்.. என்னன்னு சொல்லி தெரியுமா.. என் அக்கா விதி வசத்தால ஒருத்தன் கிட்ட ஏமாந்துட்டா.. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்.. அதுனால அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சதும் அந்த குழந்தையோட அப்பா அம்மாவா நாம தான் இருக்கனும்..

அதுனால நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு.. எந்த மானமுள்ள பொண்ணுடி இந்த கல்யாணத்தை ஏத்துக்குவா.. ஆனா அப்படியும் இவ ஏத்துகிட்டா.. உன் தம்பி மேல வச்சிருந்த அதிகபடியான காதலால..

ஆனா அப்பவும் நீ போனதுக்கு அப்புறம் இவளை எப்படி பேசினான் தெரியுமா.. என்னவோ நீ போனதுக்கும் அந்த ரிஷி உன்னை அழைச்சிட்டு போனதுக்கும் இவ தான் காரணம்.. இவளால தான் நீ போனேன்னு இவளை வார்த்தையால கொனஅனு வெளியே தூக்கி போட்டான் டி.. ஆனா அதையும் தாண்டி மிருதுவுக்காகவே இவ இங்கே வந்தா.. இப்போ நீ மிருதுவை இவகிட்ட இருந்து பிரிக்க வந்துட்டே.. அப்படித்தானே.." என்று ஆவேசமாக பேசினார் கஸ்தூரி.

அதை கேட்ட தேவா, "அம்மா நீ என்ன பேசிட்டு இருக்க.. இப்போ எதுக்கு பழசு எல்லாம்.." என்றான் கோபமாய்.

"நான் அப்படித்தான் தேவா பேசுவேன்.. உங்க அக்காவுக்கு நீ இருக்க மாறி இவளுக்கும் யாராவது இருந்தா உன்னை தட்டி கேட்க ஆளிருக்கும்.. ஆனா நீ தான் வீட்டுல ஒரு மாறியும் வெளியே சிங்கமாவும் சுத்துறியே.. இவளுக்கும் யாருமில்லை தானே.. அது தான் உன் இஷடத்துக்கு நீ பண்ணிட்டு இருக்க.." என்றார் ஆக்ரோஷமாய்.

அவர் மகளுக்காக பேசவில்லை.. தன் மருமகளுக்காக பேசினார்.. அவளும் பெண்ணென உணர்ந்து ஒரு பெண்ணாய் அவளுக்காக பேசினார்.

அதை கேட்ட விசாலிக்கு தன் தாய் சொன்னது நூறு சதவீதம் உண்மை என்று தெரிந்தும் தன்னை மட்டுமே யோசித்ததை நினைத்து மனம் வருந்தியவள் நிமிர்ந்து கன்யாவின் முகத்தை பார்த்தாள்.

ஆனால் அவளின் கண்களோ கலங்கி தன்னவனை மட்டுமே பார்த்திருந்தாள்.

தன்னை பார்த்தவளை நேருக்கு நேர் பார்த்தவனின் விழிகளில் என்ன இருந்ததோ அதை கண்டு கொண்ட பெண்மனம் ஆயாசமாய் கண்களை மூடிக் கொண்டது.

அதை கண்டவனுக்குள் ஆத்திரம் மூண்டது.. ஆனால் அதை காட்டும் இடமும் நேரமும் இதுவல்ல என்று உணர்ந்தவன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டான்.

அதே நேரம் கன்யாவின் தோளில் மிருதுவின் கரம் அணைக்க அதிர்ச்சியாய் கண்களை திறந்தவளின் முன்னே கண்களில் கண்ணீருடன் மிருதுவை வாங்க சொல்லி கண்ணசைத்தாள் விசாலி.

" அக்கா.." என்று அதிர்ச்சியாய் அழைத்தவள் மிருதுவை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

என்னை மன்னிச்சிடு கன்யா.. என் பத்தி மட்டுமே நான் யோசிச்சிட்டேன்.. என் தம்பியும் எனக்காக மட்டுமே யோசிச்சிட்டான்.. எனக்கு தெரியும் நான் மிருதுவை ஆசையா சுமந்து பெத்து எடுக்கலை.. அப்போ நான் நானாவே இல்லை.. ஒரு பைத்தியம் மாறி தான் இருந்தேன்.. இப்போவும் என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சேன்.. ஆனா உன்னை நான் யோசிக்கவே இல்லை..

ஆனா உன்னை நினைச்சா எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு கன்யா.. நீ என் தம்பியோட சந்தோஷமா வாழனும் கன்யா.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடு மா.." என்று அவளிடம் வேண்டியவள் தன் தம்பியை திரும்பி பார்த்து,

"தேவா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னை தம்பியா அடைஞ்சது நான் செஞ்ச புண்ணியம்.. தேவா என்னை தடுக்காத.. நான் கொஞ்ச நாள் போய் இருந்துட்டு வரேன்.. அதுமட்டும் இல்லை நீ கன்யாவோட சந்தோஷமா வாழனும் தேவா.. உனக்காக தன் ஆசைகளை மறந்து மன்னிச்சி வாழறது ரொம்பவே கொடுமை.. ஆனா அதை உன்மேல வச்ச காதலுக்காக ஏத்துகிட்டா இந்த பொண்ணு.. அவளோட நீ உன் வாழ்க்கையை துவங்கு தேவா..

அப்புறம் மரகதம் அத்தைக்கு இங்கே வேலை இல்லை இனி.. என்னை வச்சி தான அவங்க இங்கே வந்தாங்க.. அவங்களை அவங்களோட இடத்துக்கு அனுப்பிடு தேவா.. அவங்க நமக்கு செஞ்ச உபகாரம் ரொம்பவே அதிகம் தான்.." என்றாள் நக்கலாய்.


அதை கேட்ட மரகத்திற்கு எங்கே தன்னை அனுப்பிவிடுவானோ இந்த சொத்துக்களை ஆள முடியாதோ என்ற பயத்துடன் அவனை பார்த்தார்.

அவனோ அவரை முறைத்தபடியே இருந்தான்.

அய்யய்யோ இவன் என்னடா இப்படி முறைக்கிறான்.. ஒரு வேளை நாம செஞ்சது எல்லாம் தெரிஞ்சிருக்குமோ.. என்று மனதில் நினைத்தபடி உடல் நடுங்கி நின்றாள் மரகதம்.

தன் முடிவு தான் இறுதியானது என்று தன் அறையை நோக்கி விட்டு சென்றாள் விசாலி.

("மக்களே யாருக்காவது குழப்பமா இருக்கா.. விசாலி தான் லட்சுமி.. லட்சுமி தான் விசாலி.. யாரும் குழப்பம் அடைய வேண்டாம் பா..")

பல மாதங்களுக்கு பிறகு அந்த அலுவலகம் பதட்டத்துடன் காணப்பட்டது.

நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு அந்த அலுவலகத்தின் முதலாளி மீண்டும் வரவிருக்கிறான்.. அது தான் இந்த பரபரப்பு.

அந்த அலுவலகத்தின் வாயிலில் கம்பீரமாய் வந்து நின்றது பீ எம் டபிள்யூ கார்.. அதிலிருந்து முகத்தில் தாடியுடன் கண்களில் கூலர்ஸ் மின்ன கம்பீரமாய் இறங்கி வந்தான் ரிஷிவந்த்.

ஒரு முறை தன் கம்பெனியை பார்த்தவன் தன்னை சமாளித்து கொண்டு இறங்கி உள்ளே சென்றான் அதே பழைய கம்பீரத்துடன்.

இங்கே தன் முன்னே நின்றவளை பளீரென கண்ணத்தில் அறைந்தான் தேவநந்தன்.. முன்பே பலவீனமாக இருந்தவள் இப்போது அவன் அறைந்ததில் தலை சுற்றி கீழே விழுந்தாள்.

கீழே விழுந்தவளை முடியை பிடித்து தூக்கியவன், " என்னடி உன்கிட்ட என்ன சொன்னேன்.. ஆனா நீ என்ன பண்ண.. என் கூட நிக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு.. நீ நினைச்சது எல்லாமே நடக்குது இல்லை.." என்றான் வார்த்தைகளில் விஷத்தை தேக்கி.

அதை கேட்டவள் தன் காதுகளை பொத்தி கொண்டாள் அவன் பேச்சு கேட்காதவாறு.

அவளின் மீது அதீதமான காதல் வைத்தவன் அவளை வதைக்கும் காரணம் தான் என்ன..? ரிஷிவந்த் எப்படி மீண்டு வந்தான்..? இதற்கான விடையுடன் அடுத்தடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.




இதயம் நுழையும்...
✍️