ரிஷி தன் வேலையை பார்த்து கொண்டிருந்த நேரம் அவனின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்ததற்குண்டான சத்தம் வந்தது. தன் வேலையை பார்த்து கொண்டே வாட்ஸ் அப் ஓபன் செய்து அதில் வந்த செய்தியை கண்டவனின் இதயம் பாரமாய் போனது.
'என்னை விட்டு போன சரி.. ஆனா இந்த நாட்டை விட்டே போக நீ முடிவு பண்ணிட்டியா சாலா.. உன்னால என்னை விட்டு இருக்க முடியுமா டி.. நான் உன் மேல வச்ச நேசத்தை விட நீ என் மேல வச்ச காதல் ரொம்பவே அதிகம் டி.. நீ எங்கே போனாலும் இந்த ரிஷிக்கு சொந்தமானவ.. அதை உன்னால எந்த ஜென்மத்திலேயும் மாத்த முடியாது.. சீக்கிரமே என்னை தேடி நீ வருவ சாலா.. இல்லை நான் உன்னை வர வைப்பேன்.. பெஸ்ட் ஆப் லக் மை ஸ்வீட் ஹார்ட்..' என்று மனதிற்குள் நினைத்தவன் அந்த செய்தியை பொருட்படுத்தாமல் தன் கம்பெனி வேலையில் கவனம் சிந்தினான்.
அதே நேரம் அவனை பார்த்த வந்தவளை பார்த்தவன்,
"சொல்லு மெர்லின் எதுக்காக இங்கே வந்த.." என்றான் இறுக்கமாய்.
" அண்ணா.." என்று அவள் அழைக்கும் போது அதை கை நீட்டி தடுத்தவன்,
"உண்மையாலுமே என் மேல உனக்கு பாசம் இருந்துச்சின்னா என் கண்ணம்மாவை என்கிட்ட இருந்து பறிச்சி அந்த ராக்கிக்கு கொடுக்கனும்னு நினைச்சிருக்க மாட்டா.. எனக்கு இந்த நியூஸ் வந்தவுடனே உன் மேல அளவில்லாத கோபம் வந்துச்சி.. ஆனா உன் மேல வச்சிருந்த பாசம் அதை தடுத்து நிறுத்திடுச்சி.. அதனால தான் நான் சொல்ற வரைக்கும் நீ என்னை பாக்க கூடாதுன்னு சொன்னேன்.. இப்போ நீ என்னை தேடி வந்த காரணம் என்ன.." என்றான் தன் வேலையே பார்த்து கொண்டே.
" இல்லை அண்ணா நீ இறந்துட்டதா சொன்னாங்க.. உன்னோட சாவுக்கு அந்த குடும்பம் தான் காரணம்னு நினைச்சி அவங்களை பழி வாங்க தான் செஞ்சேன்.. ஆனா நான் நினைச்சி பாக்கலை அண்ணா.. இதுக்கு எல்லாம் பின்னாடி நீங்க இருப்பீங்கன்னு.." என்றான் தன் தமையன் தன் மேல் கோபம் கொண்டதை தாங்க முடியாமல்.
" நான் உயிரா நேசிச்சவளையும் அவ குடும்பத்தையும் நீ கலங்கடிச்சிருக்க.. உனக்கு நான் என்ன தண்டனை தரனும் சொல்லு.. ஆனா நான் உனக்கு தண்டனை தரலையே.. நீ ரொம்ப நல்ல பொண்ணு மெர்லின்.. ஆனா எனக்காகன்னு நீ செஞ்சது எல்லாமே எனக்காகவா மெர்லின்.." என்றவனின் பார்வை அவளை ஊசியாய் துளைத்தது.
" அண்ணா அது வந்து.. வந்து.." என்றவளுக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியாத நிர்பந்தமாய் போனது.
ஆம் அவன் சொல்வது உண்மை தானே..
தன் அண்ணனுக்காக தான் தேவநந்தனின் வீட்டிற்கு பலி வாங்க சென்றாள்.. ஆனால் தேவாவை கண்ட நொடி முதல் அவளுக்கு அவனை மிகவும் பிடித்து போனது.
ஏனோ அவனின் கம்பீரத்திலும் ஆண்மை பொருந்திய அழகிலும் தன்னை தொலைத்தவள் அவன் திருமணமானவன் என்பதை கூட தள்ளி வைத்தவள் அவனை கல்யாணம் செய்து அவனுடன் வாழ்ந்து விட வேண்டும் என்ற வெறியில் தான் மீண்டும் அந்த குடும்பத்தை சிதைத்தாள்.
ஆனால் இத்தனை நாட்கள் கழித்து வந்த தன் தமையனுக்கு எப்படி அது தெரிந்தது என்று புரியாமல் பெண்ணவள் அவனை பார்த்தாள்.
"என்ன யோசனை மெர்லின் இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு யோசிக்குறியா.. உனக்கு நல்லாவே தெரியும் நான் எங்கே இருந்தாலும் என்னோட பார்வை எனக்கு வேண்டியவங்க கிட்ட இருக்கும்னு.. அது மாதிரி தான் என் கண்ணம்மாவை போல அந்த குடும்பமும் எனக்கு முக்கியம்.. நீயும் எனக்கு முக்கியம்.. இனி நீ தேவா இருக்கும் பக்கமே நெருங்க கூடாது.. அவனுக்குன்னு அவனோட மனைவி இருக்கா..
அதுமட்டும் இல்லாம உனக்கு இன்னொரு விஷயம் சொல்லவா.. கன்யாவும் தேவாவும் காதலிச்சி கல்யாணம் செஞ்சுகிட்டவங்க.. அவனோட வாழ்க்கை கன்யா மட்டும் தான்.. தேவையில்லாம நீ இனிமே அவங்களுக்குள்ள போக கூடாது.. இப்போ நீ கிளம்பலாம்.." என்றவன் வேறு எதுவும் பேசாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
ஆம் மெர்லின் ரிஷியின் தங்கை தான்.. இறுக்கமான தன் அண்ணனை ஒரு முறை பார்த்தவள் இனி பேச எதுவும் இல்லையென்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.
போகும் அவளை பெருமூச்சுடன் பார்த்தவன்,
'போதும் மெர்லின் நான் என் சாலாவுக்கும் அந்த குடும்பத்துக்கும் பெரிய பாவம் பண்ணிருக்கேன்.. உன்னால திரும்பவும் அந்த குடும்பம் நிலை குலைய கூடாது.. ஒரு குடும்பத்தோட வேல்யூ என்னன்னு தெரியாம நான் தப்பு பண்ணிட்டேன்.. அதுமட்டும் இல்லாம காதலிச்சி அதை அவளுக்கு உணர்த்த தெரியாம என்னோட ஆத்திரமும் கோபமும் செஞ்ச வேலை இன்னைக்கு அவ தனியா பாரின் போக முடிவு பண்ணிட்டா..
இனி அது என்னோட குடும்பம்.. அது போல நீயும் என்னோட தங்கச்சி.. இனி நாம எந்த பாவமும் செய்யாத வேண்டாம் மெர்லின்.. அது தான் உன்கிட்ட கடுமையா நடக்க வேண்டியதா போயிடுச்சி.. உனக்குன்னு ஒருத்தன் நிச்சயம் வருவான் மெர்லின்..' என்று தனக்குள்ளே பேசியவன் தன்னவள் தனக்கு தந்த தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்டான் ஆடவன்.
அவள் மனம் மாறி வரும் நாளுக்காக காத்திருக்க தொடங்கியவனுக்கு தெரியாதே இன்னும் ஏதும் முழுதாய் முடியவில்லை ஆரம்பமே இப்போது தான் என்று.
தன் முன்னே நின்றவளை கோபத்துடன் பார்த்தவன் மனதின் அழுத்தம் தாளாமல் ஓங்கி பளீரென கண்ணத்தில் அறைந்தான்.
"என்னடி நினைச்சிட்டு இதை பண்ணே.. எனக்கு என்னோட குடும்பம் தான் முதல்.. அது உனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா இப்போ நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு உன்னை என்ன பன்றதுன்னே எனக்கு தெரியலை.." என்றான் தேவா.
ஆனால் அவனின் கோபத்திற்கு பதில் வார்த்தை எதுவும் பேசாமல் அவன் கொடுத்த அடியையும் வசவையும் வாங்கி கொண்டவள் குனிந்த தலை நிமிராமல் மௌனமாய் நின்றாள்.
ஏனோ அவளின் மௌனம் தாங்கிய வதனம் ஆடவனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
"தேவா என்னை பாரு.. இப்போ எதுக்காக இந்த முடிவு எடுத்திருக்க.. உன்னை நான் இங்கே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துருக்கேன்.. நீ என் மனைவி.. என்னை கேட்காத என்ன வேலை பாத்து வச்சிருக்கே நீ.." என்றான் ஆத்திரத்துடன்.
ஆனால் அதற்குமே எதுவுமே பேசாமல் மௌனமாய் தான் நின்றாள்.
"ஏதாவது வாயை திறந்து பேசுடி.. நீ என்ன ஊமையா.. இல்லை தெரியாம தான் கேட்குறேன்.. என்னோட ஸ்டேட்டஸ் என்னன்னு உனக்கு தெரியுமா டி.. ஆனா அதை தாண்டி நான் உன்னை கல்யாணம் செஞ்சுருக்கேன்.. உண்மைய சொல்லப்போனா அதுக்கே நீ எனக்கு நன்றியுள்ளவளா இருக்கனும்.." என்றான் கத்தியபடி.
அவன் பேசிய பேச்சில் அவனை அடிபட்ட பார்வை பார்த்த பெண் மனம் உள்ளுக்குள் உதிரம் வழிந்தோட ஆறுதலான அணைப்பிற்கு ஏங்கியது.
ஆனால் அவளோ தன் உள் மன உணர்வுகளை அப்போதும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் நின்றவளுக்கு அவனின் மேல் இருந்த காதல் அதீதமானது.
அதை ஆடவன் புரிந்து கொண்டாள் அவர்களின் வாழ்க்கை சொர்க்கம் தான்.
ஆனால் இங்கே புரியா சில வார்த்தைகள் சில நேரங்களில் பிரிவை ஏற்படுத்தும்.. இப்போது அது தான் நடக்கின்றது.
"தேவா இப்போ எதுக்காக இந்த முடிவு.. நீ எதுக்காக மிருதுவை அக்காவோட தூக்கிட்டு போக முடிவு பண்ணிருக்க.. எனக்கு புரியலை தேவகன்யா.." என்றான் அவளின் உள்ளுணர்வு புரியாமல்.
ஆம் அவளை அவன் காதலித்தான்.. தன் பெற்றோரிடம் தன் காதலியை மனைவியாய் கொண்டு வர வேண்டி நின்றான் தான்.
ஆனால் அதற்குள்ளாக சூழ்நிலை அவனை நிர்பந்தத்தில் நிக்க வைக்க வேறு வழியில்லாமல் அவளை கட்டாய திருமணம் செய்து கொண்டான்.
ஆனால் அவனின் காதலை முழுதாய் அவளிடம் காட்டவில்லை என்பதை விட அதற்குண்டான சூழ்நிலை அவனுக்கு அமையவில்லை.
அவளும் இவனை கண்டு முகம் திருப்பி போனதில் இருந்து ஆடவனின் ஈகோ தலைதூக்க அதில் சிதைந்து போனது இருவரின் காதலும்.
அதே நேரம் அங்கே கதவை தட்டி விட்டு வந்த கயல் அண்ணனை பாராமல் தன் அண்ணியிடம்,
"அண்ணி நீங்க கேட்டது எல்லாமே இதுல இருக்கு அண்ணி.. அப்புறம் உங்களோட பாஸ்புக் அப்டேட் போட்டு எடுத்துட்டு வர சொன்னீங்க.. அதையும் போட்டுட்டேன்.. இதுல பாப்பாக்கு நீங்க கேட்ட திங்கஸ் இருக்கு அண்ணி.." என்றபடி ஒரு பெரிய கவரை அவளிடம் கொடுத்தாள்.
தன் நாத்தனாரை வா பொங்க பார்த்தவள், "ரொம்பவே தேங்க்ஸ் கயல்.." என்றாள் சிரிப்புடன்.
அதை கண்டதும் ஆடவனுக்கு ஆத்திரம் பொங்க இத்தனை நேரம் நாய் மாதிரி தான் கத்தி கொண்டிருக்க இவளோ அதை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் இப்போ வந்த என் தங்கையிடம் சிரித்து பேசுகிறாளே என்ற ஆத்திரம் வந்தது.
கயலும் சிரித்தபடி அங்கிருந்து செல்ல போக, "நில்லு கயல்.." என்றான் கட்டளையாய்.
அவனின் கட்டளைக்கு கீழ்படிந்து அப்படியே நின்றவள் திரும்பி அவனை பார்க்கவில்லை.
அதில் ஆத்திரம் தெளிக்க, "நானும் இங்கே தான் கயல் இருக்கேன்.. ஆனா உனக்கு என்னை விட இவ பெருசா போயிட்டாளா என்ன..? நீ என்கிட்ட பேசியே எத்தனை நாள் ஆச்சின்னு தெரியுமா.." என்றான் கோபத்துடன்.
அவளோ அதற்கும் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
'சொந்த வீட்டில் என்னை வேத்தாளா பண்ணி வச்சிருக்கா..' என்று அதற்கும் கன்யாவை தான் குற்றம் சொன்னான்.
அதே நேரம் தன் அறையில் இருந்த விசாலியின் கண் முன்னே வந்த ரிஷி அவளை இறுக்கமாய் கட்டியணைத்து முத்த மழை பொழிந்தான்.
அவனின் முத்தத்தில் அவனை தள்ளி விட்டு எழுந்தவள் பயத்துடன் பார்த்த போது அங்கே யாருமில்லை.
பேயறைந்த தினுசில் சுற்றி முற்றிலும் தன் பார்வையை ஓட்டியவளுக்கு அவன் அங்கே இல்லை என்பது தெரிய வர அவளோ பைத்தியம் பிடிக்காத குறையாய் அமர்ந்திருந்தாள்.
கடவுளே என் அவனின் முகம் என் கனவில் வர வேண்டும்.. அவனை மறக்க வேண்டும் என்று தானே இந்த முடிவு எடுத்தேன்.. எப்படி அவன் என் நினைவில் வந்தான் என்று யோசித்தாள்.
ஆனால் அடுத்த நொடியே அவள் புரிந்த கொண்ட விஷயம் அதிகமாய் அவனின் துரோகத்தை நினைத்ததால் தான் அவன் கனவில் வருகிறான்.. இனி அவனை நினைக்கவே கூடாது என்பது தான் அவளின் சிந்தனையாய் இருந்தது.
ஆனால் அவள் அறியாதது அவள் நினைவால் மட்டுமல்ல அவளின் உயிரிலும் உணர்விலும் கலந்திருப்பது அவன் தான் என்று அவளுக்கு யார் தான் சொல்லி புரியவைப்பதோ..? விடை என்னவோ காலத்தின் கையிலே..!
அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.
இதயம் நுழையும்..