விசாலியை வீட்டிற்கு கூட்டி வந்த ரிஷி அவளை படுக்க வைத்து விட்டு அவளுக்கு உணவை சமைக்க சென்றான்.
மனம் ஏனோ மருத்துவர் சொன்ன செய்தியிலேயே இருந்தது.
"அவங்க இப்படி அதிகம் ஆக கூடாது ரிஷி.. அது அவங்க உயிரையே பறிச்சிடும்.. கவனமா இருந்துக்கோ.. அது போல அவங்களை பழைய நிகழ்வுகளை முயற்சி செஞ்சி வரவழைக்க போறாங்க.. அதுவும் ஆபத்து பாத்துக்கோ.." என்று அறிவுறுத்தி தான் அனுப்பி வைத்தார்.
அதே நினைவில் சமைத்து முடித்தவன் அவளை சாப்பிட அழைக்க செல்ல அவளோ அன்றலர்ந்த மலராய் உறங்கி கொண்டிருந்தாள்.
அவளை அப்படி கண்டவனுக்கு முகத்தில் அவனறியாமல் புன்னகை சிந்த மனம் நிறைந்த காதலுடன் அவளருகில் சென்று அமர்ந்து அவளின் தலையை அன்புடன் தடவி கொடுத்தான்.
அவனின் வருடலில் இன்னும் சுகமாய் அவனின் மடியில் தலைவைத்து உறங்கி போனாள்.
"சாலா தூங்கனது போதும் டா.. சாப்பிட வாமா.." என்று பாசமாய் அழைத்தான்.
"போ மாமா எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேனே.." என்று அவனிடம் செல்லம் கொஞ்சியபடி பேசினாள்.
"சாப்பிட்டு வந்து தூங்குடா கண்ணம்மா.. உன் உடம்பு ரொம்பவே வீக்கா இருக்குதுடா.." என்றவனுக்குள் எப்படியேனும் அவளை சாப்பிட வைத்து விட வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
" மாமா நான் இப்படியே படுத்துக்குறேன்.. நீயே சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி விடு மாமா.." என்றாள் கண்களை திறக்காமலே.
"அது சரி தான்.. சரி நான் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்.." என்றபடி அவளின் தலையை மெல்ல தலையனையில் வைத்து விட்டு கிட்சனை நோக்கி சென்றான்.
போகும் அவனை அரைக்கண்ணில் பார்த்தவளுக்கு அவனின் காதல் கர்வமாய் இருந்தது.
எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது.. தன்னை இந்த அளவு நேசிக்கும் தன்னவனை எல்லையில்லாமல் காதலிக்க ஆரம்பித்தது பெண்மனம்.
அவளுக்காக ஆசையாய் சமைத்த உணவை தட்டில் வைத்து எடுத்து வந்தவன் அவளை தன் நெஞ்சில் தாங்கி கொண்டு அவளுக்கு உணவை ஊட்டிவிட்டான்.
அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே உண்டு முடித்தவள் அவனிலே தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
அவளுக்கு முழுவதுமாய் ஊட்டி விட்டவன் தண்ணீர் கொண்டு அவளின் வாயை துடைத்து அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை படுக்க வைத்தவன் தட்டை எடுத்து கிட்சன் சென்றவன் அதை சிங்கில் போட்டு விட்டு லைட்டை அணைத்தவன் அறைக்கு வந்து அவளை கட்டி பிடித்து கொண்டு அவளுடன் சேர்ந்தே உறங்க ஆரம்பித்தான்.
ஆனால் அவனின் நினைவுகள் அவனை நிம்மதியாய் தூங்கவிடாமல் செய்தது.
செய்த பிழையொன்று உயிர் உருக தவிக்க வைத்தது.
ஆனால் அறியாமல் செய்த பிழை என்றாலுமே மன்னிப்பு நிச்சயம் கிட்டாது.. அதுவும் தன்னவளிடமிருந்து என்பதை உணர்ந்தாலும் மீண்டும் மீண்டும் தன்னவளை வதைக்க விரும்பாதவன் வருவதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தவனால் எந்த காரணத்திற்காகவும் தன்னவளை இழக்க மட்டும் முடியாது என்பது புரிந்தது.
மேடம் கொஞ்சம் உட்காருங்க.. உங்களுக்கு ரெப்பிரஷ் பண்ணி டிரஸ் சேன்ஞ் பண்ணிவிடறேன் என்றபடி வந்த சிஸ்டரை பார்த்தவள் மற்வார்த்தை பேசாதவள் அவளின் சேவைக்கு அடங்கி போனாள்.
இங்கே வந்து முழுதாய் ஐந்து நாட்கள் ஆகிபோனது.. அவளுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவம் ஹைடெக் மருத்துவம் தான்.. அதனால் இத்தனை சீக்கிரமாய் எழுந்து அமர்ந்துள்ளாள்.. ஆனால் அவளை காப்பாற்றியவன் மட்டும் இன்னும் அவள் கண் முன்னே வரவில்லை என்பதை உணர்ந்தவள் மருத்துவரிடம் அது யார் என்று கேட்டாள்.
அவனுக்கு தன் நன்றியை தெரிவிக்க வேண்டுமே.. அதுமட்டும் இல்லாமல் மருத்துவத்திற்கு ஆன செலவை அவனுக்கு கொடுக்க வேண்டுமே.. அவன் யார் என்று தெரிந்தாள் தானே அவனுக்கு நன்றி கூறி கடனை திருப்பி செலுத்த முடியும் என்று.
"இல்லை மேடம் அவரே உங்களை வந்து பாக்குறேன்னு சொன்னாரு.. அதுவரைக்கும் உங்களை நல்லபடியா கவனிச்சிக்க சொன்னாரு மேடம்.." என்றனர் அங்கிருந்தவர்கள்.
அதன் பின்பு அவர்களிடம் அவள் எதுவும் கேட்கவில்லை.. ஆனால் இடை இடையே நடந்த நிகழ்வுகளை அசை போட்டவளுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
" ஏய் கனி இங்கே பாருடி எத்தனை முறை தான் உனக்கு சொல்றது.. நீ இங்கே ராணி டி.. இப்போ எதுக்காக இங்கே சமைக்கற வேலையை செஞ்சிட்டு இருக்க.. நான் உன் புருஷன் ஆனா நான் சொல்ற பேச்சை கேட்க கூடாதுன்னு பண்ணிட்டு இருக்க இல்லை.. போடி நான் கோவமா போறேன்.." என்று கைகளை கட்டியபடி முகத்தை திருப்பிக் கொள்ள அந்த நேரம் அவனை கண்டதும் மனதில் கொள்ளை ஆசை எழுந்தது பெண்ணவளுக்கு.
இவன் தான் எத்தனை அழகானவன்.. என்னவன்.. எத்தனை பாசம் என் மேல் வைத்துள்ளான்.. என்று எப்போதும் போல் இப்போதும் அவனின் காதலிலும் பாசத்திலும் தன்னை பறிகொடுத்தவள்,
"பாவா நீங்க என்ன பச்சை பிள்ளையா இப்படி கோவிச்சிக்குறீங்க.. இந்த வேலையை நான் என் குடும்பத்துக்காகவும் என் புருஷனுக்காகவும் ஆசைப்பட்டு செய்யறேன்.. ஆனா நீங்க இப்படி மூஞ்சி தூக்கிட்டு போறீங்க.. அப்போ நான் செய்யறது உங்களுக்கு பிடிக்கலையா பாவா.." என்று மென்மையாய் கேட்பவளிடம் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல்,
"ஆமாடி நான் எது கேட்டாலும் இப்படி அம்மாஞ்சி மாறி பேசியே என்னை கவுத்திடு.. போ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் பசிக்குது.." என்றான் பொய் கோபத்துடன்.
"இல்லை உங்களுக்கு கோபம் போகலை.." என்றாள் கண்களில் இருதுளி கண்ணீருடன்.
"இல்லைடி எனக்கு கோபமே இல்லை மா.. உன் மேல என்னால முழுசா கோபபட முடியுமா டி.. யூ ஆர் மை ஏஞ்சல் டார்லிங்.. போ போய் ரெப்பிரஷ் ஆகி வா சாப்பிடலாம்.." என்றான் அவளின் கண்ணம் பிடித்து கொஞ்சியபடி.
" ம்ம் சரி பாவா.." என்றபடி உள்ளே சென்றாள்.
பழைய நினைவுகளிலிருந்து கதவை திறக்கும் சத்தத்தில் வெளி வந்தவள் அங்கே பார்க்க உள்ளே வந்தவனை கண்டு அதிர்ந்து போய் நின்றாள்.
தன் கையில் இருந்த குழந்தைக்கு கையில் இருந்த புட்டி பாலை கொடுத்தவன் அவனின் இளவரசியும் அதை குடித்து கொண்டே தூங்கி விட அவளை தூக்கி கொண்டு அவளின் தொட்டிலில் இட்டவன் வெளியே வந்தான்.
மெர்லின் வந்த பின்பு அலுவலகத்திலிருக்க பிடிக்காதவன் தன் இளவரசியை தேடி வீட்டிற்கு வந்துவிட்டான்.
அவளும் அவனை எதிர்பார்த்திருப்பாள் போலும் அவனின் வண்டி சத்தம் கேட்டதுமே அவனிடம் தவழ்ந்து தாவ முயன்றாள்.
ஓடி வந்து அள்ளி அணைத்து கொண்டவன் கிட்சன் திரும்பி,
"வரதம்மா.." என்று சத்தமாய் அழைத்தான்.
"அய்யா.." என்றபடி வேகமாய் வந்தார் அந்த முதிய பெண்.
"எங்க வீட்ல யாரும் காணோம்.. பாப்பா மட்டும் இருக்கா.." என்றான் பொதுவாய்.
"அய்யா மரகதம்மா அவங்க சொந்த ஊருக்கு போயிருக்காங்க உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க.." என்றார் பதிலாய்.
அதை கேட்டு தலையசைத்தவன், "வீட்டுக்கு இன்னும் யாரும் வரலையா.." என்றான் தன் விழிகளை நாலாபுறமும் சுழற்றியபடி.
அவனின் விழிகளின் சேதி அந்த முதிய பெண்ணுக்கு புரிந்தாலும் அவனின் மேல் இருந்த தவறை சொல்ல முடியாமல் அவன் முதலாளி எனும் இடத்தில் இருக்க,
"இல்லைங்க ஐயா யாரும் வரலை.." என்றபடி உள்ளே சென்றுவிட்டார்.
வரதம்மாள் நீண்ட காலமாக அந்த வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அதுவும் தேவநந்தனை சிறுவயதில் இருந்து வளர்த்தவர் அவர்.. ஆனாலும் அவனின் முரட்டு குணம் அறிந்து சில இடங்களில் ஒதுங்கி கொள்வார்.
அவர் உள்ளே சென்றதும் குழந்தையை தன் கையில் ஏந்தி கொண்டு அவளுக்கு பாலை காய்ச்சி எடுத்து கொண்டு அறைக்கு சென்றவன் ரெப்பிரஷ் ஆகி குழந்தையை மடியில் படுக்க வைத்து பால் புட்டியை கொடுத்து உறங்க வைத்தான்.
அவளும் உறங்கினாலும் ஏனோ சிணுங்கினாள்.. அதை கண்டவனுக்கு மென்மையாய் சிறு புன்னகை ஒட்டி கொண்டது.
குழந்தைகள் ஆழ்ந்து தூங்க வேண்டும் என்பதால் தன் அலைபேசியை எடுத்து எதையோ ஆன் செய்து வைத்தவன் மென்மையாய் அழகான ஒரு பெண்குரல் தாலாட்டு பாடியது.
தவழ்ந்திடும் தங்க பூவே தலை
அசைக்கும் வெண்ணிலாவே
மந்திர புன்னகைகள் உன்னில்
தாராளம்
கருவறை வாசல் தாண்டி கைகளிலே
வந்து சேர்ந்தாய்
கதைகள் உன்னிடத்தில்
சொல்ல ஏராளம்
மடியினில் என்னை
சாய்ப்பேனே மார்பினில்
உன்னை சுமப்பேனே உனதிரு
விழிகளிலே
எந்தன் கனவுகள் எனதுயிர் நீயின்றி
இல்லை விடியல்கள்
சில நேரம் கோவம்
கொள்வாய் சிரித்தே பின்
மாயம் செய்வாய் சிறு சிறு
குறும்புகளாலே என்னை நீ
வெல்வாயே
சிரித்தே தன்னை மாயம் செய்யும் விழிகளை காண முடியாமல் உள்ளம் உடைந்து போகின்றான் ஆடவன்.
அழகாய் எந்தன் தோளில் தூலிதான்
நெய்வாயே இமை சொல்லும்
மொழியாவும் இனிமை கேட்பேன்
இவள் கரம் பிடித்தே தான் உலகை
ரசிப்பேன்
யாழ் இசைக்கும்
உன் பேச்சு தாலாட்டு
எனக்கு யாழினியே உன்
மடியே அன்னை மடி எனக்கு
அவனுக்கு அன்னை மடியாய் மடி தாங்கியவள் இன்று செய்த துரோகத்தை தாங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் ஆடவன்.
அநியாய சேட்டை
செய்வாய் அயர்ந்தே பின்
தூக்கம் கொள்வாய் வரம்
தரும் தேவதை நீயே
வரமாய் வந்தாயே
நிரமற்ற தூரிகை
நானே வா்ணங்கள் தந்தாயே
எந்தன் மரணத்தின் நேரம்
நெருங்கும்போதும் உந்தன்
மலர் முகம் கண்டால் ஜனனம்
மீண்டும்
விழிகளில் ஈரங்கள்
நீராட்டிப் போகும் இவளன்றி
என் நாட்கள் தனிமையில்
சாகும்
இதோ அவளின்றி தனிமையில் அவனின் நாட்கள் உயிரை வதைத்து அல்லவா செல்கிறது.
தவழ்ந்திடும் தங்க பூவே தலை
அசைக்கும் வெண்ணிலாவே
மந்திர புன்னகைகள் உன்னில்
தாராளம்
கருவறை வாசல்
தாண்டி கைகளிலே
வந்து சேர்ந்தாய்
கதைகள் உன்னிடத்தில்
சொல்ல ஏராளம்
மடியினில் என்னை
சாய்ப்பேனே மார்பினில்
உன்னை சுமப்பேனே
உனதிரு விழிகளிலே
எந்தன் கனவுகள் எனதுயிர்
நீயின்றி இல்லை விடியல்கள்
மழலை பாடலை கேட்டு சுகமாய் தான் உறங்கி போனது.. ஆனால் மன்னவனோ பாடலை தனக்காக பாடியவளை தேடி தவித்து துடிக்கின்றான்.
தன் கைகளில் மெழுகாய் உருகி போன பெண்ணவள் தனக்கு இத்தனை பெரிய அநீதியை இழைத்து சென்றிருக்க கூடாது என்று அதையே அவனின் மனம் அதையே உருப்போட்டு கொண்டிருந்தது.
அவளை கண்மூடித்தனமாய் காதலித்தவன் தான் ஆனால் அத்தனை காதலையும் எட்டி உதைத்து சென்று விட்டாளோ யாரோ ஒருவருக்காக என்று தான் அவனின் ஆழ்மனம் அடிபட்டு போனது.
ஆனால் அவன் அறியாதது யாரோ ஒருவருக்காக அவனவள் செல்லவில்லை.. அவனை உண்மையாய் நேசித்ததால் மட்டுமே அவனுக்காக சென்றாள் என்பதை அவனுக்கு உணர்த்த காலம் காத்திருக்கின்றது என்பதை அவனிடம் சொல்வது யாரோ..?
இன்னும் எத்தனை நாள் இந்த தனிமை வாசமோ..? இல்லை இந்த பிரிவே இருவருக்கும் நிரந்தரமோ..? நினைத்தவனின் மனம் வேதனையை கொண்டாலும் அதற்கு காரணமானவளின் மேல் கோபம் அதீதமாய் இருந்தது.
'கனி நீ இல்லாம நரகமா இருக்குடி.. என்னை விட்டு போறதுக்கு தான் அத்தனை காதலை காட்டினியா டி.. கனி இஇஇ..' என்றவனின் மனம் அவளையே நினைத்து கதறி துடித்தது.
கத்தியினறி ரத்தமின்றி கொலை செய்யும் ஒரே ஆய்தம் காதல் தான்.. அந்த காதல் தான் அவனையும் படுத்தி கொண்டிருந்தது.
"பாவா.." என்ற அலறலுடன் எழுந்தாள் பெண்ணவள்.
இதயம் நுழையும்...